Muslim99Muslim99
← Tafsir library

8. Al-Anfaal

The Spoils of War · Medinan · 75 ayahs

سُورَةُ الأَنفَالِ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 51–60 of 75

51

ذَٰلِكَ بِمَا قَدَّمَتْ أَيْدِيكُمْ وَأَنَّ ٱللَّهَ لَيْسَ بِظَلَّٰمٍۢ لِّلْعَبِيدِ

இதற்கு காரணம், உங்கள் கைகள் முன்னமேயே செய்தனுப்பிய (பாவச்)செயல்களேயாம் - நிச்சயமாக அல்லாஹ்(தன்) அடியார்களுக்கு ஒரு சிறிதும் அநியாயம் செய்யமாட்டான்.

நிராகரிப்பாளர்களே!- உங்களது உயிர்களைக் கைப்பற்றும் போது அளிக்கப்படும் வேதனைமிக்க இந்த தண்டனையும் மண்ணறையிலும் மறுமையிலும் அளிக்கப்படும் பொசுக்கக்கூடிய இந்த வேதனையும் இவ்வுலகில் உங்களின் கைகள் சம்பாதித்த தீவினைகளின் காரணமாக ஏற்படக்கூடியதாகும். அல்லாஹ் மனிதர்கள் மீது அநீதி இழைப்பதில்லை. அவன் அவர்களிடையே நீதியுடன் தீர்ப்பளிக்கிறான். அவனே நீதிமிக்க தீர்ப்பாளன்.

Al-Anfaal 8:51Listen in Qur'an →
52

كَدَأْبِ ءَالِ فِرْعَوْنَ ۙ وَٱلَّذِينَ مِن قَبْلِهِمْ ۚ كَفَرُوا۟ بِـَٔايَٰتِ ٱللَّهِ فَأَخَذَهُمُ ٱللَّهُ بِذُنُوبِهِمْ ۗ إِنَّ ٱللَّهَ قَوِىٌّۭ شَدِيدُ ٱلْعِقَابِ

(இவர்களின் நிலையை) ஃபிர்அவ்னின் கூட்டத்தார்களுடையதாகும், அவர்களுக்கு முன்பு இருந்தவர்களுடையவும் நிலையைப்போன்றதேயாகும்; (இவர்களைப் போலவே) அவர்களும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளை நிராகரித்தனர்; அவாகளுடைய பாவங்களின் காரணமாக அல்லாஹ் அவர்களைப் பிடித்துக் கொண்டான்; நிச்சயமாக அல்லாஹ் பேராற்றலுடையோன், தண்டிப்பதில் கடுமையானவன்.

இந்நிராகரிப்பாளர்களுக்கு இறங்கிய இவ்வேதனை அவர்களுக்கு மட்டும் உரித்தானதல்ல. மாறாக எல்லா காலகட்டங்களிலும் இடங்களிலும் இருந்த நிராகரிப்பாளர்களின் மீதும் நடைமுறைப்படுத்திய வழிமுறையே இதுவாகும். பிர்அவ்னைச் சார்ந்தவர்கள் மற்றும் அவர்களுக்கு முன்னால் வாழ்ந்த சமூகங்கள் அல்லாஹ்வின் சான்றுகளை நிராகரித்தபோது அவர்களையும் அது பீடித்தது. அவர்களின் பாவங்களின் காரணமாக அவன் அவர்களை கண்ணியமான ஆற்றல் உடைய ஒருவனின் பிடியாகப் பிடித்தான். அவர்கள் மீது தன் தண்டனையை இறக்கினான். நிச்சயமாக அல்லாஹ் வல்லமை மிக்கவன். யாராலும் அவனை அடக்கவோ மிகைக்கவோ முடியாது. தன் கட்டளைக்கு மாறாகச் செயல்படக்கூடியவர்களை அவன் கடுமையாக தண்டிக்கக்கூடியவன்.

Al-Anfaal 8:52Listen in Qur'an →
53

ذَٰلِكَ بِأَنَّ ٱللَّهَ لَمْ يَكُ مُغَيِّرًۭا نِّعْمَةً أَنْعَمَهَا عَلَىٰ قَوْمٍ حَتَّىٰ يُغَيِّرُوا۟ مَا بِأَنفُسِهِمْ ۙ وَأَنَّ ٱللَّهَ سَمِيعٌ عَلِيمٌۭ

"ஏனெனில், எந்த ஒரு சமுதாயமும் தன் உள்ளத்திலுள்ள (போக்குகளை) மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய அருட்கொடைகளை மாற்றிவிடுவதில்லை - நிச்சயமாக அல்லாஹ் (எல்லாவற்றையும்) செவியுறுபவனாகவும், (யாவற்றையும்) நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.

கடுமையான இந்த வேதனைக்குக் காரணம் இதுதான்: இறைநம்பிக்கை, நேர்வழியில் நடத்தல், அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றிசெலுத்தல் என்ற நல்ல நிலையிலிருந்து, நிராகரிப்பு, பாவங்கள் மற்றும் நன்றி மறத்தல் என்ற தீய நிலைக்கு தம்மைத் தாமே மாற்றும் வரை அல்லாஹ் ஒரு சமூகத்திற்கு அளித்த அருட்கொடைகளை அவர்களிடமிருந்து பிடுங்க மாட்டான். தன் அடியார்கள் பேசுவதை அவன் செவியேற்கக்கூடியவன். அவர்களின் செயல்களைக் குறித்து அவன் நன்கறிந்தவன். எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை.

Al-Anfaal 8:53Listen in Qur'an →
54

كَدَأْبِ ءَالِ فِرْعَوْنَ ۙ وَٱلَّذِينَ مِن قَبْلِهِمْ ۚ كَذَّبُوا۟ بِـَٔايَٰتِ رَبِّهِمْ فَأَهْلَكْنَٰهُم بِذُنُوبِهِمْ وَأَغْرَقْنَآ ءَالَ فِرْعَوْنَ ۚ وَكُلٌّۭ كَانُوا۟ ظَٰلِمِينَ

ஃபிர்அவ்னின் கூட்டத்தார்களுடையவும், அவர்களுக்கு முன்பு இருந்தவர்களுடையவும் நிலைமையைப் போன்றதேயாகும்; அவர்களும் (இவர்களைப் போலவே தம்) இறைவனின் வசனங்களைப் பொய்ப்பித்தார்கள் - ஆகவே நாம் அவர்களை அவர்களுடைய பாவங்களின் காரணமாக அழித்தோம்; இன்னும் ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை மூழ்கடித்தோம் - அவர்கள் அனைவரும் அநியாயக்காரர்களாக இருந்தார்கள்.

இந்த நிராகரிப்பாளர்களின் நிலைமை இவர்களுக்கு முன்னர் நிராகரித்த பிர்அவ்னின் சமூகம் மற்றும் அவர்களுக்கு முந்தைய நிராகரித்த சமூகங்களை ஒத்திருக்கின்றது. அவர்கள் தங்கள் இறைவனின் சான்றுகளை நிராகரித்தார்கள். அவர்கள் செய்த பாவங்களினால் அல்லாஹ் அவர்களை அழித்துவிட்டான். பிர்அவ்னின் சமூகத்தை அவன் கடலில் மூழ்கடித்து அழித்தான். பிர்அவ்னின் சமூகமும் அவர்களுக்கு முந்தைய சமூகங்களும் அல்லாஹ்வை நிராகரிக்கக்கூடியவர்களாக, அவனுக்கு மற்றவர்களை இணையாக்கக்கூடியவர்களாக இருந்ததனால் அவர்கள் அநியாயக்காரர்களாக இருந்தார்கள். இதன் மூலம் அவர்கள் தங்களை அவனுடைய வேதனைக்குத் தகுதியாக்கிக் கொண்டார்கள். எனவேதான் அவர்கள் மீது தண்டனையை இறக்கினான்.

Al-Anfaal 8:54Listen in Qur'an →
55

إِنَّ شَرَّ ٱلدَّوَآبِّ عِندَ ٱللَّهِ ٱلَّذِينَ كَفَرُوا۟ فَهُمْ لَا يُؤْمِنُونَ

நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உயிரினங்களில் மிகவும் கெட்டவர்கள், நிராகரிப்பவர்கள் தாம் - அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.

பூமியின் மேற்பரப்பில் ஊர்ந்து செல்லக் கூடியவைகளில் மிகவும் கெட்டவை அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்தவர்களாவர். சான்றுகள் அனைத்தும் அவர்களிடம் வந்தாலும் நிராகரிப்பில் நிலைத்திருப்பதனால் அவர்கள் நம்பிக்கைகொள்ள மாட்டார்கள். அவர்களிடமுள்ள பகுத்தறிவு, செவிப்புலன், பார்வை ஆகிய நேர்வழிக்கான சாதனங்கள் செயலிழந்துவிட்டன.

Al-Anfaal 8:55Listen in Qur'an →
56

ٱلَّذِينَ عَٰهَدتَّ مِنْهُمْ ثُمَّ يَنقُضُونَ عَهْدَهُمْ فِى كُلِّ مَرَّةٍۢ وَهُمْ لَا يَتَّقُونَ

(நபியே!) இவர்களில் நீர் எவருடன் உடன்படிக்கை செய்து கொண்டாலும், ஒவ்வொரு தடவையும் அவர்கள் தம் உடன்படிக்கையை முறித்தே வருகின்றனர்; அவர்கள் (அல்லாஹ்வுக்கு) அஞ்சுவதேயில்லை.

தூதரே! -பனூ குரைழா போன்ற- நீர் அவர்களுடன் ஒப்பந்தம் செய்த பின்னர் அல்லாஹ்வை அஞ்சாது ஒவ்வொரு முறையும் அதனை முறித்துவிடுவோர் தங்களின் ஒப்பந்தங்களை நிறைவேற்றுவதுமில்லை. தம்மீது எடுக்கப்பட்ட உறுதிமொழிகளைக் கடைபிடிப்பதும் இல்லை.

Al-Anfaal 8:56Listen in Qur'an →
57

فَإِمَّا تَثْقَفَنَّهُمْ فِى ٱلْحَرْبِ فَشَرِّدْ بِهِم مَّنْ خَلْفَهُمْ لَعَلَّهُمْ يَذَّكَّرُونَ

எனவே போரில் நீர் அவர்கள்மீது வாய்ப்பைப் பெற்று விட்டால், அவர்களுக்குப் பின்னால் உள்ளவர்களும் பயந்தோடும்படி சிதறடித்து விடுவீராக - இதனால் அவர்கள் நல்லறிவு பெறட்டும்.

தூதரே!- ஒப்பந்தங்களை முறிக்கும் இவர்களை போரில் நீர் சந்தித்தால் மற்றவர்களுக்கும் பாடமாக அமையும் பொருட்டு அவர்களுக்குப் பாடம் கற்பிக்கும் கடும் தண்டனையை அளிப்பீராக. இதனால் அவர்கள் உம்முடன் போர் புரிவதற்கும் உமக்கெதிராக உமது எதிரிகளுக்கு உதவி புரிவதற்கும் அஞ்சுவார்கள்.

Al-Anfaal 8:57Listen in Qur'an →
58

وَإِمَّا تَخَافَنَّ مِن قَوْمٍ خِيَانَةًۭ فَٱنۢبِذْ إِلَيْهِمْ عَلَىٰ سَوَآءٍ ۚ إِنَّ ٱللَّهَ لَا يُحِبُّ ٱلْخَآئِنِينَ

(உம்முடன் உடன்படிக்கை செய்திருக்கும்) எந்தக் கூட்டத்தாரும் மோசம் செய்வார்கள் என நீர் பயந்தால். (அதற்குச்) சமமாகவே (அவ்வுடன்படிக்கையை) அவர்களிடம் எறிந்துவிடும்; நிச்சயமாக அல்லாஹ் மோசம் செய்பவர்களை நேசிப்பதில்லை.

தூதரே!- உமக்கு விளங்கும் ஏதாவது அடையாளத்தினால் நீர் ஒப்பந்தம் செய்த ஒரு சமூகம் மோசடியில் ஈடுபட்டு ஒப்பந்தத்தை முறித்துவிடும் என்று நீர் அஞ்சினால் அவர்களின் ஒப்பந்தத்தை ரத்துசெய்து அவர்களுக்கு அறிவித்துவிடுவீராக. அப்போதுதான் ஒப்பந்தம் முறிந்த தகவல் இருசாராரிடமும் சமமாகச் சென்றடையும். அவர்களிடம் அறிவிப்பதற்கு முன்பே அவர்களைத் தாக்கிவிடாதீர். ஏனெனில் அவர்களிடம் தெரிவிப்பதற்கு முன்பே அவர்களைத் தாக்குவது துரோகமாகும். துரோகமிழைப்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை. மாறாக அவர்களை அவன் வெறுக்கிறான். எனவே துரோகமிழைப்பதை விட்டும் நீரும் எச்சரிக்கையாக இருப்பீராக.

Al-Anfaal 8:58Listen in Qur'an →
59

وَلَا يَحْسَبَنَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ سَبَقُوٓا۟ ۚ إِنَّهُمْ لَا يُعْجِزُونَ

நிராகரிப்பவர்கள் தாங்கள் (தண்டனையிலிருந்து) தப்பித்துக் கொண்டதாக எண்ணவேண்டாம்; நிச்சயமாக அவர்கள் (இறையச்சமுடையோரைத்) தோற்கடிக்கவே முடியாது.

நிராகரிப்பாளர்கள் அல்லாஹ்வின் வேதனையிலிருந்து தப்பிவிட்டதாக எண்ண வேண்டாம். அவர்கள் அல்லாஹ்வின் வேதனையிலிருந்து ஒருபோதும் தப்ப முடியாது. மாறாக அது அவர்களை அடைந்தே தீரும்.

Al-Anfaal 8:59Listen in Qur'an →
60

وَأَعِدُّوا۟ لَهُم مَّا ٱسْتَطَعْتُم مِّن قُوَّةٍۢ وَمِن رِّبَاطِ ٱلْخَيْلِ تُرْهِبُونَ بِهِۦ عَدُوَّ ٱللَّهِ وَعَدُوَّكُمْ وَءَاخَرِينَ مِن دُونِهِمْ لَا تَعْلَمُونَهُمُ ٱللَّهُ يَعْلَمُهُمْ ۚ وَمَا تُنفِقُوا۟ مِن شَىْءٍۢ فِى سَبِيلِ ٱللَّهِ يُوَفَّ إِلَيْكُمْ وَأَنتُمْ لَا تُظْلَمُونَ

அவர் (நிராகரிப்பவர்)களை எதிர்ப்பதற்காக உங்களால் இயன்ற அளவு பலத்தையும், திறமையான போர்க் குதிரைகளையும் ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள்; இதனால் நீங்கள் அல்லாஹ்வின் எதிரியையும், உங்களுடைய எதிரியையும் அச்சமடையச் செய்யலாம்; அவர்கள் அல்லாத வேறு சிலரையும் (நீங்கள் அச்சமடையச் செய்யலாம்); அவர்களை நீங்கள் அறிய மாட்டீர்கள் - அல்லாஹ் அவர்களை அறிவான்; அல்லாஹ்வுடைய வழியில் நீங்கள் எதைச் செலவு செய்தாலும், (அதற்கான நற்கூலி) உங்களுக்கு பூரணமாகவே வழங்கப்படும்; (அதில்) உங்களுக்கு ஒரு சிறிதும் அநீதம் செய்யப்பட மாட்டாது.

நம்பிக்கையாளர்களே!- ஈட்டி எறிதல் போன்ற உங்களால் ஆள் மற்றும் ஆயுத பலத்தைத் தயார் செய்துகொள்ளுங்கள். அல்லாஹ்வின் பாதையில் தடுத்துவைக்கப்பட்ட குதிரைகளை தயாராக வைத்திருங்கள். இதன் மூலம் அல்லாஹ்வின் எதிரிகளையும் நீங்கள் காலச்சக்கரத்தின் கேட்டில் சிக்கிக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கும் நிராகரிப்பாளர்களான உங்களின் எதிரிகளையும் இவர்கள் அல்லாத வேறு மக்களையும் நீங்கள் அச்சமுறச் செய்யலாம். நீங்கள் அவர்களையும் அவர்கள் மறைத்து வைத்திருக்கும் பகைமையையும் அறிய மாட்டீர்கள். அல்லாஹ்வே அவர்களையும் அவர்கள் உள்ளத்தில் மறைத்துவைத்திருக்கும் பகைமையையும் அறிவான். நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் குறைவாகவோ அதிகமாகவோ எதைச் செலவு செய்தாலும் இவ்வுலகில் அல்லாஹ் அதனை உங்களுக்கு வழங்குவான். மறுமையில் அதற்கான வெகுமதியை குறைவின்றி நிறைவாக வழங்குவான். அவனுடைய பாதையில் செலவு செய்வதன் பக்கம் விரையுங்கள்.

Al-Anfaal 8:60Listen in Qur'an →

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.