Muslim99Muslim99
← Tafsir library

9. At-Tawba

The Repentance · Medinan · 129 ayahs

سُورَةُ التَّوۡبَةِ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 1–10 of 129

1

بَرَآءَةٌۭ مِّنَ ٱللَّهِ وَرَسُولِهِۦٓ إِلَى ٱلَّذِينَ عَٰهَدتُّم مِّنَ ٱلْمُشْرِكِينَ

(முஃமின்களே!) முஷ்ரிக்குகளில் (இணைவைத்து வணங்குபவர்களில்) எவர்களுடன் நீங்கள் உடன்படிக்கை செய்துள்ளீர்களோ, அவர்களிடமிருந்து அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் விலகிக் கொண்டனர்.

முஸ்லிம்களே! அரேபிய தீபகற்பத்திலே இணைவைப்பாளர்களுடன் நீங்கள் செய்துகொண்ட ஒப்பந்தங்களிலிருந்து இதோ அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் விலகிக்கொள்கின்றனர். அவை முடிவுற்றதாக அறிவிக்கப்படுகிறது.

2

فَسِيحُوا۟ فِى ٱلْأَرْضِ أَرْبَعَةَ أَشْهُرٍۢ وَٱعْلَمُوٓا۟ أَنَّكُمْ غَيْرُ مُعْجِزِى ٱللَّهِ ۙ وَأَنَّ ٱللَّهَ مُخْزِى ٱلْكَٰفِرِينَ

நீங்கள் நான்கு மாதங்கள் (வரையில்) இப் பூமியில் சுற்றித் திரியுங்கள்; நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வைத் தோற்கடிக்க முடியாதவர்கள் என்பதையும், நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை இழிவு படுத்துவான் என்பதையும் நீங்கள் (உறுதியாக) அறிந்து கொள்ளுங்கள்.

எனவே இணைவைப்பாளர்களே! இப்பூமியில் நான்கு மாதங்கள் நீங்கள் பாதுகாப்பாக நடமாடலாம். அதற்குப் பின்னர் உங்களுக்கு எந்த ஒப்பந்தமும் பாதுகாப்பும் இல்லை. நீங்கள் நிராகரிப்பில் நிலைத்திருந்தால் உங்களால் அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். அல்லாஹ் நிராகரிப்பாளர்களை இவ்வுலகில் கொலை, கைது ஆகியவற்றின் மூலமும் மறுமை நாளில் நரகத்தில் நுழைவிப்பதன் மூலமும் இழிவுபடுத்தியே தீருவான் என்பதையும் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். இதில் ஒப்பந்தங்களை முறித்தவர்களும், காலம் நிர்ணயிக்காமல் பொதுவாக ஒப்பந்தம் செய்தவர்களும் அடங்குவர். காலம் நிர்ணயித்து ஒப்பந்தம் செய்தவர்களின் ஒப்பந்த காலம் நான்கு மாதத்திற்கு அதிகமாக இருப்பின் அந்த காலம் முடியும் வரை ஒப்பந்தம் முழுமையாக நிறைவேற்றப்படும்.

3

وَأَذَٰنٌۭ مِّنَ ٱللَّهِ وَرَسُولِهِۦٓ إِلَى ٱلنَّاسِ يَوْمَ ٱلْحَجِّ ٱلْأَكْبَرِ أَنَّ ٱللَّهَ بَرِىٓءٌۭ مِّنَ ٱلْمُشْرِكِينَ ۙ وَرَسُولُهُۥ ۚ فَإِن تُبْتُمْ فَهُوَ خَيْرٌۭ لَّكُمْ ۖ وَإِن تَوَلَّيْتُمْ فَٱعْلَمُوٓا۟ أَنَّكُمْ غَيْرُ مُعْجِزِى ٱللَّهِ ۗ وَبَشِّرِ ٱلَّذِينَ كَفَرُوا۟ بِعَذَابٍ أَلِيمٍ

அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் முஷ்ரிக்குகளுடன் (செய்திருந்த உடன்படிக்கையை) விட்டும் நிச்சயமாக விலகிக் கொண்டார்கள் என்பதை ஹஜ்ஜுல் அக்பர் (மாபெரும் ஹஜ்ஜுடைய) நாளில் மனிதர்களுக்கு அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் வெளிப்படையாக அறிவிக்கின்றனர்; எனவே நீங்கள் (இணைவைப்பதிலிருந்து மனந்திருந்தி) விலகிக் கொண்டால் அது உங்களுக்கே நலமாகும்; நீங்கள் (சத்தியத்தை) புறக்கணித்து விட்டால் நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வைத் தோற்கடிக்க முடியாதவர்கள் என்பதை (உறுதியாக) அறிந்து கொள்ளுங்கள். (நபியே!) நிராகரிப்போருக்கு நோவினை தரும் வேதனை இருக்கிறது என்று நீர் நன்மாராயம் கூறுவீராக.

இது அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் இணைவைப்பாளர்களை விட்டும் விலகிக் கொண்டார்கள் என்று அறுக்கப்படும் ஹஜ்ஜுடைய நாளில் மக்கள் அனைவருக்கும் செய்யப்படும் அறிவிப்பாகும். -இணைவைப்பாளர்களே!- நீங்கள் உங்கள் இணைவைப்பிலிருந்து பாவமன்னிப்புக் கோரினால் அது உங்களுக்குத்தான் நல்லது. நீங்கள் பாவமன்னிப்புக் கோராமல் புறக்கணித்தால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தண்டனையிலிருந்தும் உங்களால் ஒருபோதும் தப்பிவிட முடியாது என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். தூதரே! அல்லாஹ்வை நிராகரிப்பவர்களுக்கு வேதனைமிக்க தண்டனை காத்திருக்கின்றது எனவும் அறிவித்து விடுவீராக.

4

إِلَّا ٱلَّذِينَ عَٰهَدتُّم مِّنَ ٱلْمُشْرِكِينَ ثُمَّ لَمْ يَنقُصُوكُمْ شَيْـًۭٔا وَلَمْ يُظَٰهِرُوا۟ عَلَيْكُمْ أَحَدًۭا فَأَتِمُّوٓا۟ إِلَيْهِمْ عَهْدَهُمْ إِلَىٰ مُدَّتِهِمْ ۚ إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلْمُتَّقِينَ

ஆனால், நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்ட இந்த முஷ்ரிக்குகளில், எதையும் குறைத்து விடாமலும், உங்களுக்கு விரோதமாக எவருக்கும் உதவி செய்யாமலும் இருக்கின்றார்களோ அவர்களைத் தவிர அவர்களுக்கு அவர்களின் உடன்படிக்கையை அவர்களின் காலக் கெடுவரையில் பூரணமாக நிறைவேற்றுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோரை நேசிக்கின்றான்.

ஆயினும் உங்களின் ஒப்பந்தங்களை முழுமையாக நிறைவேற்றிய அதில் எந்தக் குறையும் வைக்காத இணைவைப்பாளர்களுடன் நீங்கள் செய்துகொண்ட ஒப்பந்தங்களை முழுமையாக நிறைவேற்றுங்கள். அவர்கள் முந்தைய கட்டளையிலிருந்து விதிவிலக்கானவர்கள். ஒப்பந்த காலம் முடியும் வரை அவர்களின் ஒப்பந்தங்களை முழுமையாக நிறைவேற்றுங்கள். அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்களை அவன் நேசிக்கிறான். ஒப்பந்தங்களை முழுமையாக நிறைவேற்றுவது அவனது கட்டளையைச் செயல்படுத்துவதில் உள்ளதாகும். துரோகமிழைப்பது அவனது தடுத்தவைகளில் உள்ளதாகும்.

5

فَإِذَا ٱنسَلَخَ ٱلْأَشْهُرُ ٱلْحُرُمُ فَٱقْتُلُوا۟ ٱلْمُشْرِكِينَ حَيْثُ وَجَدتُّمُوهُمْ وَخُذُوهُمْ وَٱحْصُرُوهُمْ وَٱقْعُدُوا۟ لَهُمْ كُلَّ مَرْصَدٍۢ ۚ فَإِن تَابُوا۟ وَأَقَامُوا۟ ٱلصَّلَوٰةَ وَءَاتَوُا۟ ٱلزَّكَوٰةَ فَخَلُّوا۟ سَبِيلَهُمْ ۚ إِنَّ ٱللَّهَ غَفُورٌۭ رَّحِيمٌۭ

(போர் விலக்கப்பட்ட துல்கஃதா, துல்ஹஜ்ஜு, முஹர்ரம், ரஜபு ஆகிய நான்கு) சங்ககைமிக்க மாதங்கள் கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள் - ஆனால் அவர்கள் (மனத்திருந்தி தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைப்பிடித்து (ஏழைவரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.

நீங்கள் உங்கள் எதிரிகளுக்கு பாதுகாப்பு அளித்த புனிதமான மாதங்கள் கடந்து விட்டால் இணைவைப்பாளர்களை எங்கு கண்டாலும் கொல்லுங்கள். அவர்களை அவர்களது கோட்டைகளுக்குள்ளே முற்றுகையிடுங்கள். அவர்களது பாதைகளில் அவர்களைக் குறிவைத்து காத்திருங்கள். அவர்கள் ஷிர்க்கிலிருந்து நீங்கி தொழுகையைக் கடைப்பிடித்து, தங்களின் செல்வங்களிலிருந்து ஸகாத்தையும் வழங்கி விட்டால் அவர்கள் உங்களின் மார்க்க சகோதரர்களாகி விட்டார்கள். எனவே அவர்களுடன் போர் புரிவதை விட்டுவிடுங்கள். தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களை அவன் மன்னிக்கக்கூடியவன். அவர்களின் விஷயத்தில் அவன் மிகுந்த கருணையாளனாக இருக்கின்றான்.

6

وَإِنْ أَحَدٌۭ مِّنَ ٱلْمُشْرِكِينَ ٱسْتَجَارَكَ فَأَجِرْهُ حَتَّىٰ يَسْمَعَ كَلَٰمَ ٱللَّهِ ثُمَّ أَبْلِغْهُ مَأْمَنَهُۥ ۚ ذَٰلِكَ بِأَنَّهُمْ قَوْمٌۭ لَّا يَعْلَمُونَ

(நபியே!) முஷ்ரிக்குகளில் யாரேனும் உம்மிடம் புகலிடம் தேடி வந்தால், அல்லாஹ்வுடைய வசனங்களை அவர் செவியேற்கும் வரையில் அவருக்கு அபயமளிப்பீராக அதன் பின் அவரை அவருக்குப் பாதுகாப்புக் கிடைக்கும் வேறு இடத்திற்கு (பத்திரமாக) அனுப்புவீராக - ஏனென்றால் அவர்கள் நிச்சயமாக அறியாத சமூகத்தினராக இருக்கிறார்கள்.

தூதரே! உயிரும் உடமையும் ஆகுமாக்கப்பட்ட இணைவைப்பாளர்களில் யாரேனும் உம்மிடம் வந்து பாதுகாவல் கோரினால் அவர்கள் குர்ஆனைச் செவியுறும் பொருட்டு அவர்களுக்குப் பாதுகாவல் அளிப்பீராக. பின்னர் பாதுகாப்பான இடத்தில் அவரைச் சேர்த்து விடுவீராக. ஏனெனில் நிராகரிப்பாளர்கள் இந்த மார்க்கத்தின் உண்மை நிலையை அறியாத மக்களாக இருக்கிறார்கள். அவர்கள் குர்ஆனை செவியேற்பதன் மூலம் இதன் உண்மை நிலையை அறிந்து கொண்டால் சில வேளை நேர்வழியடையலாம்.

7

كَيْفَ يَكُونُ لِلْمُشْرِكِينَ عَهْدٌ عِندَ ٱللَّهِ وَعِندَ رَسُولِهِۦٓ إِلَّا ٱلَّذِينَ عَٰهَدتُّمْ عِندَ ٱلْمَسْجِدِ ٱلْحَرَامِ ۖ فَمَا ٱسْتَقَٰمُوا۟ لَكُمْ فَٱسْتَقِيمُوا۟ لَهُمْ ۚ إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلْمُتَّقِينَ

அல்லாஹ்விடத்திலும், அவனுடைய தூதரிடத்திலும் முஷ்ரிக்குகளுக்கு எப்படி உடன்படிக்கை இருக்க முடியும்? ஆனால், நீங்கள் மஸ்ஜிதுல் ஹராம் (கஃபத்துல்லாஹ்) முன் (எவர்களுடன்) உடன்படிக்கை செய்து கொண்டீர்களோ, அவர்களைத் தவிர அவர்கள் (தம் உடன்படிக்கைப்படி) உங்களுடன் நேர்மையாக நடந்து கொள்ளும்வரை நீங்களும் அவர்களுடன் நேர்மையாக நடந்துகொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோரை நேசிக்கின்றான்.

அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் இணைவைப்பாளர்களுக்கு ஒப்பந்தமோ பாதுகாப்போ இருக்க முடியாது. ஆயினும் மஸ்ஜிதுல் ஹராம் எல்லையில் வைத்து - முஸ்லிம்களே! - உங்களுடன் ஹுதைபிய்யா ஒப்பந்தம் செய்து கொண்டவர்களைத் தவிர. உங்களுக்கும் அவர்களுக்குமிடையிலுள்ள ஒப்பந்தத்தை மீறாமல் அவர்கள் நேர்மையாக இருக்கும் வரை நீங்களும் நேர்மையாக இருங்கள். அதனை மீறி விடாதீர்கள். தன் அடியார்களில் தன் கட்டளைகளைச் செயல்படுத்தி தான் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி தன்னை அஞ்சுவோரை அல்லாஹ் நேசிக்கிறான்.

8

كَيْفَ وَإِن يَظْهَرُوا۟ عَلَيْكُمْ لَا يَرْقُبُوا۟ فِيكُمْ إِلًّۭا وَلَا ذِمَّةًۭ ۚ يُرْضُونَكُم بِأَفْوَٰهِهِمْ وَتَأْبَىٰ قُلُوبُهُمْ وَأَكْثَرُهُمْ فَٰسِقُونَ

(எனினும் அவர்களுடன்) எப்படி (உடன்படிக்கை இருக்க முடியும்?) உங்கள் மேல் அவர்கள் வெற்றி கொண்டால் உங்களிடையே உள்ள உறவின் முறையையும், (உங்களிடையே இருக்கும்) உடன்படிக்கையையும் அவர்கள் பொருட்படுத்துவதேயில்லை அவர்கள் தம் வாய்(மொழி)களைக் கொண்டு(தான்) உங்களைத் திருப்திபடுத்துகிறார்கள்; ஆனால் அவர்களின் உள்ளங்கள் (அதனை) மறுக்கின்றன - அவர்களில் பெரும்பாலோர் பாவிகளாக இருக்கின்றனர்.

உங்களின் எதிரிகளான அவர்களுக்கு எவ்வாறு ஒப்பந்தமும் பாதுகாப்பும் இருக்க முடியும்? அவர்கள் உங்களை வென்று விட்டால் உங்கள் விஷயத்தில் அல்லாஹ்வையோ ஒப்பந்தத்தையோ உறவையோ பொருட்படுத்த மாட்டார்கள். மாறாக உங்களைக் கொடிய வேதனையில் ஆழ்த்திவிடுவார்கள். அவர்களின் நாவுகள் உச்சரிக்கும் அழகிய வார்த்தைகளால் உங்களைத் திருப்திப்படுத்த முயற்சிக்கிறார்கள். ஆனால் அவர்களின் உள்ளங்களோ நாவுகள் கூறுவதற்கு இணங்கவில்லை. அவர்கள் கூறுவதை நிறைவேற்ற மாட்டார்கள். அவர்களில் பெரும்பாலோர் ஒப்பந்தத்தை முறித்ததனால் அல்லாஹ்வுக்கு அடிபணியாதவர்களே.

9

ٱشْتَرَوْا۟ بِـَٔايَٰتِ ٱللَّهِ ثَمَنًۭا قَلِيلًۭا فَصَدُّوا۟ عَن سَبِيلِهِۦٓ ۚ إِنَّهُمْ سَآءَ مَا كَانُوا۟ يَعْمَلُونَ

அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களைச் சொற்பவிலைக்கு விற்கின்றனர். இன்னும் அவனுடைய பாதையிலிருந்து (மக்களைத்) தடுக்கிறார்கள் - நிச்சயமாக அவர்கள் செய்து கொண்டிருந்த காரியங்கள் மிகவும் கெட்டவை.

அல்லாஹ்வின் வசனங்களைப் பின்பற்றுவதற்குப் பகரமாக, அவற்றில் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதும் உள்ளடங்கும், தங்களின் மனஇச்சையைத் தீர்த்துக்கொள்ளும் இவ்வுலகின் அற்ப ஆதாயத்தைப் பெற்றுக் கொண்டார்கள். எனவேதான் அவர்கள் சத்தியத்தைப் பின்பற்றுவதை விட்டு தம்மையும் தடுத்து அதனைப் புறக்கணித்து மற்றவர்களையும் அதனை விட்டுத் தடுத்தார்கள். அவர்கள் செய்து கொண்டிருந்தது மிகவும் மோசமான காரியமாகும்.

10

لَا يَرْقُبُونَ فِى مُؤْمِنٍ إِلًّۭا وَلَا ذِمَّةًۭ ۚ وَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْمُعْتَدُونَ

அவர்கள் எந்த முஃமினின் விஷயத்திலும் உறவையும் உடன்படிக்கையையும் பொருட்படுத்த மாட்டார்கள்; மேலும் அவர்களே வரம்பு மீறியவர்கள் ஆவார்கள்."

அவர்கள் தம்மிடமுள்ள பகைமையால் எந்த நம்பிக்கையாளனின் விஷயத்திலும் அல்லாஹ்வையோ உறவுமுறையையோ ஒப்பந்தத்தையோ பொருட்படுத்தப்போவதில்லை. மேலும் அவர்கள் அல்லாஹ்வின் வரம்புகளை மீறியவர்களாவர். ஏனெனில் அவர்கள் அநியாயம், வரம்பு மீறல் ஆகிய பண்புகளைப் பெற்றுள்ளார்கள்.

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.