Muslim99Muslim99
← Tafsir library

8. Al-Anfaal

The Spoils of War · Medinan · 75 ayahs

سُورَةُ الأَنفَالِ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 61–70 of 75

61

۞ وَإِن جَنَحُوا۟ لِلسَّلْمِ فَٱجْنَحْ لَهَا وَتَوَكَّلْ عَلَى ٱللَّهِ ۚ إِنَّهُۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلْعَلِيمُ

அவர்கள் சமாதானத்தின் பக்கம் சாய்ந்து (இணங்கி) வந்தால், நீங்களும் அதன் பக்கம் சாய்வீராக! அல்லாஹ்வின் மீதே உறுதியான நம்பிக்கை வைப்பீராக - நிச்சயமாக அவன் (எல்லாவற்றையும்) செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.

தூதரே!- அவர்கள் போரை விட்டு விட்டு சமாதானத்தின் பக்கம் சாய்ந்தால் நீரும் சமாதானத்தின் பக்கம் சாய்வீராக. அவர்களுடன் ஒப்பந்தம் செய்வீராக. அல்லாஹ்வின்மீது நம்பிக்கை வைப்பீராக. அவன் உம்மை ஒருபோதும் கைவிட மாட்டான். நிச்சயமாக அவன் அவர்கள் பேசுவதை செவியேற்கக்கூடியவன்; அவர்களின் எண்ணங்களையும் செயல்களையும் நன்கறிந்தவன்.

Al-Anfaal 8:61Listen in Qur'an →
62

وَإِن يُرِيدُوٓا۟ أَن يَخْدَعُوكَ فَإِنَّ حَسْبَكَ ٱللَّهُ ۚ هُوَ ٱلَّذِىٓ أَيَّدَكَ بِنَصْرِهِۦ وَبِٱلْمُؤْمِنِينَ

அவர்கள் உம்மை ஏமாற்ற எண்ணினால் - நிச்சயமாக அல்லாஹ் உமக்குப் போதுமானவன் - அவன் தான் உம்மைத் தன் உதவியைக் கொண்டும், முஃமின்களைக் கொண்டும் பலப்படுத்தினான்.

தூதரே!- போருக்காக தங்களை தயார்படுத்திக் கொள்ளும் எண்ணத்துடன், போரை விட்டு விட்டு சமாதானத்தின் பக்கம் சாய்ந்து அவர்கள் உம்மை ஏமாற்ற நாடினால், அவர்களின் ஏமாற்று சூழ்ச்சியை விட்டும் பாதுகாக்க அல்லாஹ்வே உமக்குப் போதுமானவன். அவன்தான் தன் உதவியால் உம்மை பலப்படுத்தினான். நம்பிக்கைகொண்ட அன்சாரிகள் மற்றும் முஹாஜிர்கள் உதவியாலும் உம்மை பலப்படுத்தினான்.

Al-Anfaal 8:62Listen in Qur'an →
63

وَأَلَّفَ بَيْنَ قُلُوبِهِمْ ۚ لَوْ أَنفَقْتَ مَا فِى ٱلْأَرْضِ جَمِيعًۭا مَّآ أَلَّفْتَ بَيْنَ قُلُوبِهِمْ وَلَٰكِنَّ ٱللَّهَ أَلَّفَ بَيْنَهُمْ ۚ إِنَّهُۥ عَزِيزٌ حَكِيمٌۭ

மேலும், (முஃமின்களாகிய) அவர்கள் உள்ளங்களுக்கிடையில் (அன்பின்) பிணைப்பை உண்டாக்கினான்; பூமியிலுள்ள (செல்வங்கள்) அனைத்தையும் நீர் செலவு செய்த போதிலும், அவர்கள் உள்ளங்களுக்கிடையே அத்தகைய (அன்பின்) பிணைப்பை உண்டாக்கியிருக்க முடியாது - ஆனால் நிச்சயமாக அல்லாஹ் அவர்களிடையே அப்பிணைப்பை ஏற்படுத்தியுள்ளான்; மெய்யாகவே அவன் மிகைத்தவனாகவும், ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான்.

உமக்கு உதவி செய்த நம்பிக்கையாளர்களின் பிரிந்து கிடந்த உள்ளங்களை அவன் ஒன்றிணைத்தான். அவற்றை ஒன்றிணைப்பதற்கு நீர் பூமியிலுள்ள செல்வங்கள் அனைத்தையும் செலவு செய்திருந்தாலும் உம்மால் அவற்றை ஒன்றிணைத்திருக்க முடியாது. ஆயினும் அல்லாஹ்வே அந்த உள்ளங்களிடையே இணைப்பை ஏற்படுத்தினான். அவன் தன் ஆட்சியதிகாரத்தில் யாவற்றையும் மிகைத்தவன். யாராலும் அவனை மிகைக்க முடியாது. தான் அமைத்த விதிகளில், திட்டமிடுவதில், வழங்கும் சட்டங்களில் அவன் ஞானம்மிக்கவன்.

Al-Anfaal 8:63Listen in Qur'an →
64

يَٰٓأَيُّهَا ٱلنَّبِىُّ حَسْبُكَ ٱللَّهُ وَمَنِ ٱتَّبَعَكَ مِنَ ٱلْمُؤْمِنِينَ

நபியே! உமக்கும், முஃமின்களில் உம்மைப் பின்பற்றுவோருக்கும் அல்லாஹ்வே போதுமானவன்.

நபியே! உம் எதிரிகளின் தீங்குகளிலிருந்து பாதுகாக்கவும் உம்மைப் பின்பற்றும் நம்பிக்கையாளர்களைப் பாதுகாக்கவும் அல்லாஹ்வே உமக்குப் போதுமானவன். எனவே அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைப்பீராக. அவனையே சார்ந்திருப்பீராக.

Al-Anfaal 8:64Listen in Qur'an →
65

يَٰٓأَيُّهَا ٱلنَّبِىُّ حَرِّضِ ٱلْمُؤْمِنِينَ عَلَى ٱلْقِتَالِ ۚ إِن يَكُن مِّنكُمْ عِشْرُونَ صَٰبِرُونَ يَغْلِبُوا۟ مِا۟ئَتَيْنِ ۚ وَإِن يَكُن مِّنكُم مِّا۟ئَةٌۭ يَغْلِبُوٓا۟ أَلْفًۭا مِّنَ ٱلَّذِينَ كَفَرُوا۟ بِأَنَّهُمْ قَوْمٌۭ لَّا يَفْقَهُونَ

நபியே! நீர் முஃமின்களை போருக்கு ஆர்வ மூட்டுவீராக உங்களில் பொறுமையுடையவர்கள் இருபது பேர் இருந்தால், இருநூறு பேர்களை வெற்றி கொள்வார்கள். இன்னும் உங்களில் நூறு பேர் இருந்தால் அவர்கள் காஃபிர்களில் ஆயிரம் பேரை வெற்றி கொள்வார்கள்; ஏனெனில் (முஃமின்களை எதிர்ப்போர்) நிச்சயமாக அறிவில்லாத மக்களாக இருப்பது தான் (காரணம்).

நபியே! நம்பிக்கையாளர்களைப் போர் புரியத் தூண்டுவீராக. அவர்களின் எண்ணங்களை உறுதிப்படுத்தி அதன்பால் ஊக்கமளிப்பீராக. -நம்பிக்கையாளர்களே!- உங்களில் நிராகரிப்பாளர்களுடன் போரிடுவதில் பொறுமையுள்ள இருபது பேர்கள் இருந்தால் அவர்கள் இருநூறு நிராகரிப்பாளர்களை வென்று விடலாம். உங்களில் நூறு பொறுமையாளர்கள் இருந்தால் அவர்கள் ஆயிரம் நிராகரிப்பாளர்களை வென்றுவிடலாம். இது ஏனெனில், நிராகரிப்பாளர்கள் அல்லாஹ் தன் எதிரிகளை அழித்து நேசர்களுக்கு உதவி புரிவான் என்ற அல்லாஹ்வின் நியதியை புரிந்துகொள்ளாதவர்களாக இருக்கிறார்கள். போரின் நோக்கத்தை அவர்கள் உணர்ந்து கொள்வதில்லை. உலகில் ஆதிக்கத்தை நிலைநாட்டவே அவர்கள் போர் புரிகிறார்கள்.

Al-Anfaal 8:65Listen in Qur'an →
66

ٱلْـَٰٔنَ خَفَّفَ ٱللَّهُ عَنكُمْ وَعَلِمَ أَنَّ فِيكُمْ ضَعْفًۭا ۚ فَإِن يَكُن مِّنكُم مِّا۟ئَةٌۭ صَابِرَةٌۭ يَغْلِبُوا۟ مِا۟ئَتَيْنِ ۚ وَإِن يَكُن مِّنكُمْ أَلْفٌۭ يَغْلِبُوٓا۟ أَلْفَيْنِ بِإِذْنِ ٱللَّهِ ۗ وَٱللَّهُ مَعَ ٱلصَّٰبِرِينَ

நிச்சயமாக உங்களில் பலவீனம் இருக்கின்றது என்பதை அறிந்து, தற்சமயம் அல்லாஹ் (அதனை) உங்களுக்கு இலகுவாக்கி விட்டான் - எனவே உங்களில் பொறுமையும் (சகிப்புத் தன்மையும்) உடைய நூறு பேர் இருந்தால் அவர்கள் இருநூறு பேர் மீது வெற்றிக் கொள்வார்கள்; உங்களில் (இத்ததையோர்) ஆயிரம் பேர் இருந்தால் அல்லாஹ்வின் உத்திரவு கொண்டு அவர்களில் இரண்டாயிரம் பேர் மீது வெற்றிக் கொள்வார்கள் - (ஏனெனில்) அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்.

நம்பிக்கையாளர்களே!- உங்களது பலவீனத்தை அல்லாஹ் அறிந்ததனால் அவன் உங்கள் மீது கருணை காட்டும் முகமாக உங்கள் மீதுள்ள சுமையைக் குறைத்துவிட்டான். உங்களில் ஒருவர் பத்து நிராகரிப்பாளர்களை எதிர்ப்பதற்குப் பதிலாக இரு நிராகரிப்பாளர்களை எதிர்ப்பதை அவன் உங்கள் மீது கடமையாக்கிவிட்டான். உங்களில் நூறு பொறுமையாளர்கள் இருந்தால் அவர்கள் இருநூறு நிராகரிப்பாளர்களை போரில் வெல்லலாம். உங்களில் ஆயிரம் பொறுமையாளர்கள் இருந்தால் அவர்கள் அல்லாஹ்வின் அனுமதி கொண்டு இரண்டாயிரம் நிராகரிப்பாளர்களை வெல்லலாம். அல்லாஹ் நம்பிக்கை கொண்ட பொறுமையாளர்களுக்கு உதவி செய்வதன் மூலம் அவர்களுடன் இருக்கின்றான்.

Al-Anfaal 8:66Listen in Qur'an →
67

مَا كَانَ لِنَبِىٍّ أَن يَكُونَ لَهُۥٓ أَسْرَىٰ حَتَّىٰ يُثْخِنَ فِى ٱلْأَرْضِ ۚ تُرِيدُونَ عَرَضَ ٱلدُّنْيَا وَٱللَّهُ يُرِيدُ ٱلْءَاخِرَةَ ۗ وَٱللَّهُ عَزِيزٌ حَكِيمٌۭ

(விஷமங்கள் அடங்க) பூமியில் இரத்தத்தை ஓட்டாத வரையில் (விரோதிகளை உயிருடன்) சிறைபிடிப்பது எந்த நபிக்கும் தகுதியில்லை நீங்கள் இவ்வுலகத்தின் (நிலையில்லா) பொருள்களை விரும்புகிறீர்கள். அல்லாஹ்வோ மறுமையில் (உங்கள் நலத்தை) நாடுகிறான். அல்லாஹ் (ஆற்றலில்) மிகைத்தோனும், ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.

நிராகரிப்பாளர்களை கொன்று குவிக்கும் வரை அவர்களைக் கைதிகளாகப் பிடிப்பது தூதருக்கு உகந்ததல்ல. அப்போதுதான் அவர்களின் உள்ளங்களில் பயம் புகுந்து கொள்ளும். அவர்கள் மீண்டும் போரிட மாட்டார்கள். -நம்பிக்கையாளர்களே!- பத்ரில் கைதிகளாகப் பிடிக்கப்பட்டர்களிடம் பிணைத் தொகை பெற்றுக் கொள்ள விரும்புகிறீர்களா? அல்லாஹ்வோ மார்க்கத்திற்கு உதவி செய்து கிடைக்கும் மறுமையை விரும்புகிறான். தன் உள்ளமையில் பண்புகளில் அடக்கியாள்வதில் அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவன். யாரும் அவனை மிகைத்துவிட முடியாது. தான் அமைத்த விதிகளில், தான் வழங்கும் சட்டங்களில் அவன் ஞானம்மிக்கவன்.

Al-Anfaal 8:67Listen in Qur'an →
68

لَّوْلَا كِتَٰبٌۭ مِّنَ ٱللَّهِ سَبَقَ لَمَسَّكُمْ فِيمَآ أَخَذْتُمْ عَذَابٌ عَظِيمٌۭ

அல்லாஹ்விடம் (உங்களுடைய மன்னிப்பு) ஏற்கனவே எழுதப்படாமலிருந்தால் நீங்கள் (போர்க் கைதிகளிடம் பத்ரில் ஈட்டுப் பணத்தை) எடுத்துக் கொண்டதன் காரணமாக உங்களை ஒரு பெரிய வேதனை பிடித்திருக்கும்.

போர்ச் செல்வங்களைப் பெறுவதும், கைதிகளுக்காக பிணைத்தொகை பெறுவதும் ஆகுமானதே என தனது விதியில் ஏற்கனவே அல்லாஹ் தீர்மானித்திருக்காவிட்டால், வஹி இறங்கி அவை அனுமதிக்கப்பட முன்னரே, போர்ச் செல்வங்களையும், கைதிகளிடம் பிணைத் தொகையும் பெற்றுக் கொண்டதற்காக அல்லாஹ்விடமிருந்து கடுமையான வேதனை உங்களை அடைந்திருக்கும்.

Al-Anfaal 8:68Listen in Qur'an →
69

فَكُلُوا۟ مِمَّا غَنِمْتُمْ حَلَٰلًۭا طَيِّبًۭا ۚ وَٱتَّقُوا۟ ٱللَّهَ ۚ إِنَّ ٱللَّهَ غَفُورٌۭ رَّحِيمٌۭ

ஆகவே, எதிரிகளிடமிருந்து உங்களுக்குப் போரில் கிடைத்த பொருள்களை தூய்மையான - ஹலாலான-வையாகக் கருதி புசியுங்கள்; அல்லாஹ்வுக்கே அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையோனாகவும் இருக்கின்றான்.

நம்பிக்கையாளர்களே! நிராகரிப்பாளர்களிடமிருந்து நீங்கள் கைப்பற்றிய போர்ச் செல்வங்களிலிருந்து உண்ணுங்கள். அவை உங்களுக்கு அனுமதிக்கப்பட்டதாகும். அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்கைகொண்ட தன் அடியார்களை மன்னிக்கக்கூடியவன்; அவர்களின் விஷயத்தில் அவன் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.

Al-Anfaal 8:69Listen in Qur'an →
70

يَٰٓأَيُّهَا ٱلنَّبِىُّ قُل لِّمَن فِىٓ أَيْدِيكُم مِّنَ ٱلْأَسْرَىٰٓ إِن يَعْلَمِ ٱللَّهُ فِى قُلُوبِكُمْ خَيْرًۭا يُؤْتِكُمْ خَيْرًۭا مِّمَّآ أُخِذَ مِنكُمْ وَيَغْفِرْ لَكُمْ ۗ وَٱللَّهُ غَفُورٌۭ رَّحِيمٌۭ

நபியே! உங்கள் வசத்தில் இருக்கும் கைதிகளை நோக்கிக் கூறுவீராக "உங்களுடைய உள்ளங்களில் ஏதாவது ஒரு நன்மை இருப்பதாக அல்லாஹ் அறிந்தால், உங்களிடமிருந்து (ஈட்டுத்தொகையாக) எடுத்துக் கொள்ளப்பட்டதைவிட (இவ்வுலகில்) மேலானதை உங்களுக்கு அவன் கொடுப்பான்; (மறுமையில்) உங்கள் பாவங்களையும் மன்னிப்பான் - அல்லாஹ் மன்னிப்போனாகவும், கிருபை உடையோனாகவும் இருக்கின்றான்.

நபியே! பத்ருப் போரில் உம்மிடம் அகப்பட்ட கைதிகளிடம் கூறுவீராக: “உங்கள் உள்ளங்களில் நல்லெண்ணம் இருப்பதை அல்லாஹ் அறிந்தால் உங்களிடமிருந்து பெறப்பட்ட பிணைத் தொகையைவிட சிறந்த நன்மைகளை உங்களுக்கு அளிப்பான். எனவே உங்களிடமிருந்து பெறப்பட்ட பிணைத் தொகைக்காக கவலைப்படாதீர்கள். அல்லாஹ் உங்கள் பாவங்களை மன்னிப்பான். அவன் தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களை மன்னிக்கக்கூடியவன். அவர்களின் விஷயத்தில் அவன் மிகுந்த கருணையாளனாக இருக்கின்றான். அல்லாஹ்வின் இந்த வாக்குறுதி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட நபியவர்களின் சிறிய தந்தை அப்பாஸ் மற்றும் ஏனையவர்கள் விஷயத்திலும் நிறைவேறியது.

Al-Anfaal 8:70Listen in Qur'an →

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.