Muslim99Muslim99
← Tafsir library

8. Al-Anfaal

The Spoils of War · Medinan · 75 ayahs

سُورَةُ الأَنفَالِ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 11–20 of 75

11

إِذْ يُغَشِّيكُمُ ٱلنُّعَاسَ أَمَنَةًۭ مِّنْهُ وَيُنَزِّلُ عَلَيْكُم مِّنَ ٱلسَّمَآءِ مَآءًۭ لِّيُطَهِّرَكُم بِهِۦ وَيُذْهِبَ عَنكُمْ رِجْزَ ٱلشَّيْطَٰنِ وَلِيَرْبِطَ عَلَىٰ قُلُوبِكُمْ وَيُثَبِّتَ بِهِ ٱلْأَقْدَامَ

(நினைவு கூறுங்கள்;) நீங்கள் அமைதியடைவதற்காக அவன் சிறியதொரு நித்திரை உங்களை பொதிந்து கொள்ளுமாறு செய்தான்; இன்னும் உங்களை அதன் மூலம் தூய்மைப்படுத்துவதற்காகவும், ஷைத்தானின் தீய எண்ணங்களை உங்களைவிட்டு நீக்குவதற்காகவும், உங்கள் இருதயங்களைப் பலப்படுத்தி, உங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவதற்காகவும், அவன் உங்கள் மீது வானிலிருந்து மழை பொழியச் செய்தான்.

நம்பிக்கையாளர்களே!- அவன் உங்களுக்கு ஏற்பட்ட எதிரிகளைப் பற்றிய பயத்தைப் போக்க, சிறு தூக்கத்தை அளித்ததை நினைவுகூருங்கள். அழுக்குகளிலிருந்து உங்களைத் தூய்மைப்படுத்துவதற்காகவும் ஷைத்தானின் ஊசலாட்டங்களை உங்களை விட்டு அகற்றுவதற்காகவும் போரின் போது உங்கள் உடல்கள் நிலைத்து நிற்க உங்களின் உள்ளங்களையும் உறுதிப்படுத்துவதற்காகவும் மணல் நிலத்தை ஈரப்படுத்தி உங்கள் பாதங்கள் புதைந்துவிடாதவாறு அதனை உறுதிப்படுத்துவதற்காகவும் அவன் வானத்திலிருந்து உங்கள் மீது மழையை இறக்கினான்.

Al-Anfaal 8:11Listen in Qur'an →
12

إِذْ يُوحِى رَبُّكَ إِلَى ٱلْمَلَٰٓئِكَةِ أَنِّى مَعَكُمْ فَثَبِّتُوا۟ ٱلَّذِينَ ءَامَنُوا۟ ۚ سَأُلْقِى فِى قُلُوبِ ٱلَّذِينَ كَفَرُوا۟ ٱلرُّعْبَ فَٱضْرِبُوا۟ فَوْقَ ٱلْأَعْنَاقِ وَٱضْرِبُوا۟ مِنْهُمْ كُلَّ بَنَانٍۢ

(நபியே!) உம் இறைவன் மலக்குகளை நோக்கி; "நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன்; ஆகவே, நீங்கள் முஃமின்களை உறுதிப்படுத்துஙகள்; நிராகரிப்போரின் இருதயங்களில் நான் திகிலை உண்டாக்கி விடுவேன்; நீங்கள் அவர்கள் பிடரிகளின் மீது வெட்டுங்கள்; அவர்களுடைய விரல் நுனிகளையும் வெட்டி விடுங்கள்" என்று (வஹீ மூலம்) அறிவித்ததை நினைவு கூறும்.

தூதரே!- பத்ரில் நம்பிக்கையாளர்களுக்கு உதவி புரிவதற்காக அனுப்பப்பட்ட வானவர்களுக்கு உம் இறைவன் அறிவிப்பு செய்தான்: -“வானவர்களே!- உதவி மற்றும் ஆதரவின் மூலம் நான் உங்களுடன் இருக்கின்றேன். எதிரிகளுக்கு எதிரான போரில் நம்பிக்கையாளர்களின் உறுதிகளைப் பலப்படுத்துங்கள். நிராகரிப்பாளர்களின் உள்ளங்களில் நான் கடுமையான பயத்தை ஏற்படுத்திவிடுவேன். எனவே -நம்பிக்கையாளர்களே!- நிராகரிப்பாளர்களின் கழுத்துகளை அவர்கள் இறப்பதற்காக வெட்டுங்கள். அவர்கள் போர் செய்ய முடியாதவாறு செயலிழந்து செல்வதற்காக அவர்களின் ஒவ்வொரு மூட்டுக்களையும் உறுப்புக்களையும் தாக்குங்கள்.”

Al-Anfaal 8:12Listen in Qur'an →
13

ذَٰلِكَ بِأَنَّهُمْ شَآقُّوا۟ ٱللَّهَ وَرَسُولَهُۥ ۚ وَمَن يُشَاقِقِ ٱللَّهَ وَرَسُولَهُۥ فَإِنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلْعِقَابِ

இதற்கு காரணம்; நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் விரோதம் செய்தார்கள். எவர் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் விரோதம் செய்வாரோ - நிச்சயமாக அல்லாஹ் கடினமாகத் தண்டனை செய்பவனாக இருக்கிறான்.

நிராரிப்பாளர்கள் இவ்வாறு கொல்லப்படுவது மற்றும் உறுப்புக்கள் தாக்கப்படுவதற்கான காரணம், அவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறாகச் செயல்பட்டார்கள். அவர்களுக்குக் கட்டளையிடப்பதை அவர்கள் செயல்படுத்தவுமில்லை; தடுக்கப்பட்டதை விட்டு தவிர்ந்திருக்கவில்லை. இந்த விஷயத்தில் யார் அல்லாஹ்வுடைய கட்டளைக்கும் தூதரின் கட்டளைக்கும் மாறாகச் செயல்படுகிறாரோ நிச்சயமாக அல்லாஹ் இவ்வுலகில் அவர்களை கைதிகளாகப் பிடித்தும் கொலைசெய்தும் மறுவுலகில் நெருப்பைக்கொண்டும் கடுமையாக தண்டிக்கக்கூடியவன்.

Al-Anfaal 8:13Listen in Qur'an →
14

ذَٰلِكُمْ فَذُوقُوهُ وَأَنَّ لِلْكَٰفِرِينَ عَذَابَ ٱلنَّارِ

"இதை(தண்டனையை)ச் சுவையுங்கள்; நிச்சயமாக காஃபிர்களுக்கு நரக வேதனையுண்டு" என்று (நிராகரிப்போருக்குக்) கூறப்படும்.

அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறுசெய்வோரே!- இந்த உலகில் விரைவான இந்த வேதனையைச் சுவையுங்கள். நீங்கள் நிராகரிப்பிலும் பிடிவாதத்திலும் நிலைத்திருந்து இறந்து விட்டால் மறுவுலகில் நெருப்பினாலான வேதனையும் உள்ளது.

Al-Anfaal 8:14Listen in Qur'an →
15

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِذَا لَقِيتُمُ ٱلَّذِينَ كَفَرُوا۟ زَحْفًۭا فَلَا تُوَلُّوهُمُ ٱلْأَدْبَارَ

நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் நிராகரிப்போரைப் (போரில்) ஒன்று திரண்டவர்களாக சந்தித்தால் அவர்களுக்கு புறமுதுகு காட்டாதீர்கள்.

அல்லாஹ்வை உண்மைப்படுத்தி, அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! போரில் இணைவைப்பாளர்களை அண்மையில் சந்தித்தால் பின்வாங்கி புறங்காட்டி ஓடிவிடாதீர்கள். மாறாக அவர்களுக்கு முன்னிலையில் உறுதியாக நில்லுங்கள். பொறுமையுடன் அவர்களை எதிர்கொள்ளுங்கள். அல்லாஹ் தன் உதவியைக் கொண்டு உங்களுடன் இருக்கின்றான்.

Al-Anfaal 8:15Listen in Qur'an →
16

وَمَن يُوَلِّهِمْ يَوْمَئِذٍۢ دُبُرَهُۥٓ إِلَّا مُتَحَرِّفًۭا لِّقِتَالٍ أَوْ مُتَحَيِّزًا إِلَىٰ فِئَةٍۢ فَقَدْ بَآءَ بِغَضَبٍۢ مِّنَ ٱللَّهِ وَمَأْوَىٰهُ جَهَنَّمُ ۖ وَبِئْسَ ٱلْمَصِيرُ

(எதிரிகளை) வெட்டுவதற்காகவோ அல்லது (தம்) கூட்டத்தாருடன் சேர்ந்து கொள்வதற்காகவோயன்றி, அந்நாளில் எவரேனும் தம் புறமுதுகைக் காட்டித் திரும்புவாரானால், நிச்சயமாக அவர் அல்லாஹ்வின் கோபத்திற்கு உள்ளாகி விடுவார் - அவர் தங்குமிடம் நரகமே இன்னும் அது மிகவும் கெட்ட தங்குமிடம்.

ஒரு திட்டத்தின்படி பின்வாங்கி திருப்பித் தாக்குதல் அல்லது உதவி படைகளுடன் சேர்ந்து கொள்ளுதல் ஆகிய காரணங்களின்றி உங்களில் யாரெல்லாம் புறங்காட்டி ஓடிவிடுவார்களோ அவர்கள் அல்லாஹ்வின் கோபத்தோடு திரும்பிவிட்டார்கள். அவனுடைய கோபத்திற்கு ஆளாகிவிட்டார்கள். மறுமையில் அவர்களின் இருப்பிடம் நரகமாகும். அது இருப்பிடங்களில் மோசமான இருப்பிடமாகும்.

Al-Anfaal 8:16Listen in Qur'an →
17

فَلَمْ تَقْتُلُوهُمْ وَلَٰكِنَّ ٱللَّهَ قَتَلَهُمْ ۚ وَمَا رَمَيْتَ إِذْ رَمَيْتَ وَلَٰكِنَّ ٱللَّهَ رَمَىٰ ۚ وَلِيُبْلِىَ ٱلْمُؤْمِنِينَ مِنْهُ بَلَآءً حَسَنًا ۚ إِنَّ ٱللَّهَ سَمِيعٌ عَلِيمٌۭ

(பத்ரு போரில்) எதிரிகளை வெட்டியவகள் நீங்கள் அல்ல - அல்லாஹ் தான் அவர்களை வெட்டினான்; (பகைவர்கள் மீது மண்ணை) நீர் எறிந்தபோது அதனை நீர் எறியவில்லை, அல்லாஹ்தான் எறிந்தான்; முஃமின்களை அழகான முறையில் சோதிப்பதற்காகவே அல்லாஹ் இவ்வாறு செய்தான்; நிச்சயமாக அல்லாஹ் (எல்லாவற்றையும்) செவி ஏற்பவனாகவும், (எல்லாம்) அறிபவனாகவும் இருக்கின்றான்.

நம்பிக்கையாளர்களே!- பத்ருப் போரில் இணைவைப்பாளர்களை உங்களுடைய பலத்தையும் ஆற்றலையும் கொண்டு நீங்கள் கொலை செய்யவில்லை. மாறாக அல்லாஹ்தான் உங்களுக்கு அதற்கு உதவி செய்தான். -தூதரே!- நீர் இணைவைப்பாளர்களை நோக்கி எறிந்த சமயத்தில் நீர் எறியவில்லை. மாறாக அல்லாஹ்தான் நீங்கள் எரிந்ததை அவர்களை அடையச் செய்து எரிந்தான். எண்ணிக்கையிலும் முன்னேற்பாட்டிலும் அவர்கள் குறைவானவர்களாக இருந்தும் அல்லாஹ் எதிரிகளுக்கு எதிராக நம்பிக்கையாளர்களுக்கு உதவி செய்து அருள் புரிந்து அவர்கள் நன்றி செலுத்துகிறார்களா என்பதை சோதிக்க விரும்புகிறான். அல்லாஹ் உங்களின் பிரார்த்தனைகளையும் சொற்களையும் செவியேற்கக்கூடியவன். உங்களின் செயல்களையும், எதில் உங்களுக்கு நன்மை அடங்கியுள்ளது என்பதையும் அவன் நன்கறிந்தவன்.

Al-Anfaal 8:17Listen in Qur'an →
18

ذَٰلِكُمْ وَأَنَّ ٱللَّهَ مُوهِنُ كَيْدِ ٱلْكَٰفِرِينَ

இன்னும், நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்போரின் சூழ்ச்சியை இழிவாக்கி (சக்தியற்றதாய்) ஆக்குவதற்கும் (இவ்வாறு செய்தான்.)

மேற்கூறப்பட்ட இணைவைப்பாளர்கள் தோல்வியுற்று விரண்டோடும் அளவுக்கு அவர்களைக் கொன்றது, அவர்களுக்கு எரிந்தது, அவர்களுக்கு எதிராக நம்பிக்கையாளர்களை மேலோங்கச் செய்து அவர்களுக்கு அருள் புரிந்தது ஆகிய ஆனைத்துமே அல்லாஹ்வின் மூலமே நடந்தன. இஸ்லாத்திற்கு எதிராக நிராகரிப்பாளர்கள் செய்யும் சூழ்ச்சியை அல்லாஹ் பலவீனப்படுத்தக் கூடியவனாவான்.

Al-Anfaal 8:18Listen in Qur'an →
19

إِن تَسْتَفْتِحُوا۟ فَقَدْ جَآءَكُمُ ٱلْفَتْحُ ۖ وَإِن تَنتَهُوا۟ فَهُوَ خَيْرٌۭ لَّكُمْ ۖ وَإِن تَعُودُوا۟ نَعُدْ وَلَن تُغْنِىَ عَنكُمْ فِئَتُكُمْ شَيْـًۭٔا وَلَوْ كَثُرَتْ وَأَنَّ ٱللَّهَ مَعَ ٱلْمُؤْمِنِينَ

(நிராகரிப்பவர்களே!) நீங்கள் வெற்றி(யின் மூலம் தீர்ப்பைத்) தேடிக் கொண்டிருந்தால், நிச்சயமாக அவ்வெற்றி (முஃமின்களுக்கு) வந்து விட்டது இனியேனும் நீங்கள் (தவறை விட்டு) விலகிக் கொண்டால் அது உங்களுக்கு நலமாக இருக்கும்; நீங்கள் மீண்டும் (போருக்கு) வந்தால் நாங்களும் வருவோம்; உங்களுடைய படை எவ்வளவு அதிகமாக இருந்தாலும், அது உங்களுக்கு எத்தகைய பலனையும் அளிக்காது. மெய்யாகவே அல்லாஹ் முஃமின்களோடு தான் இருக்கின்றான் (என்று முஃமின்களே கூறி விடுங்கள்).

இணைவைப்பாளர்களே!- அல்லாஹ் வரம்புமீறிய அநியாயக்காரர்கள் மீது தன் வேதனையை இறக்கட்டும் என்று நீங்கள் பிரார்த்தனை செய்தால், நீங்கள் பிரார்த்தித்தவாறே அல்லாஹ் உங்கள்மீது வேதனையை இறக்கிவிட்டான். உங்களுக்குப் பாடமாகவும், இறையச்சமுடையோருக்கு படிப்பினையாகவும் அமையத்தக்க வேதனையை உங்கள் மீது இறக்கியுள்ளான். இவ்வாறு வேண்டுவதை விட்டும் நீங்கள் விலகிக்கொண்டால், அது உங்களுக்குத்தான் நல்லது. ஏனெனில் சிலவேளை உங்களுக்கு அவகாசம் அளித்து உடனுக்குடன் உங்களை பழிவாங்காமல் விட்டுவிடுவான். நீங்கள் மீண்டும் இவ்வாறு வேண்டினால், நம்பிக்கையாளர்களுடன் போரிட்டால் நாமும் அவர்களுக்கு மீண்டும் உதவி செய்து உங்களை வேதனைக்குட்படுத்துவோம். உங்களின் கூட்டத்தினர்களோ உதவியாளர்களோ உங்களுக்கு எந்தப் பயனையும் அளிக்க முடியாது. அவர்கள் ஆள்பலம் ஆயுத பலம் ஆகியவற்றில் அதிகமாகவும் நம்பிக்கையாளர்கள் குறைவாகவும் இருந்தாலும் சரியே. நம்பிக்கையாளர்களுக்கு உதவி செய்வதன் மூலம் அல்லாஹ் அவர்களுடன் இருக்கின்றான். அல்லாஹ் யாருடன் இருக்கின்றானோ அவர்களை யாராலும் மிகைக்க முடியாது.

Al-Anfaal 8:19Listen in Qur'an →
20

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ أَطِيعُوا۟ ٱللَّهَ وَرَسُولَهُۥ وَلَا تَوَلَّوْا۟ عَنْهُ وَأَنتُمْ تَسْمَعُونَ

முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் நிலையிலேயே அவரை புறக்கணிக்காதீர்கள்.

அல்லாஹ்வை உண்மைப்படுத்தி அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுங்கள். அவனுடைய வசனங்கள் உங்களிடம் எடுத்துரைக்கப்படுவதை செவியேற்றுக் கொண்டே அவன் கட்டளைக்கு மாறாகச் செயல்பட்டு, அவன் தடுத்துள்ளவற்றைச் செய்து அவனைப் புறக்கணித்துவிடாதீர்கள்.

Al-Anfaal 8:20Listen in Qur'an →

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.