Muslim99Muslim99
← Tafsir library

6. Al-An'aam

The Cattle · Meccan · 165 ayahs

سُورَةُ الأَنۡعَامِ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 21–30 of 165

21

وَمَنْ أَظْلَمُ مِمَّنِ ٱفْتَرَىٰ عَلَى ٱللَّهِ كَذِبًا أَوْ كَذَّبَ بِـَٔايَٰتِهِۦٓ ۗ إِنَّهُۥ لَا يُفْلِحُ ٱلظَّٰلِمُونَ

அல்லாஹ் மீது பொய்யைக் கற்பனை செய்கிறவனை விட, அல்லது அவனுடைய வசனங்களைப் பொய்யாக்குகிறவனை விட அநியாயக்காரன் யார்? நிச்சயமாக அநியாயக்காரர்கள் வெற்றி பெறவே மாட்டார்கள்.

அல்லாஹ்வுக்கு இணையை ஏற்படுத்தி அவனுடன் சேர்த்து வணங்கியவரைவிட அல்லது அல்லாஹ் தன் தூதர் மீது இறக்கிய வசனங்களை நிராகரித்தவர்களைவிட மிகப் பெரிய அநியாயக்காரன் வேறு யாரும் இல்லை. அல்லாஹ்வுக்கு இணையை ஏற்படுத்தி அவனுடைய வசனங்களை மறுக்கும் அநியாயக்காரர்கள் பாவமன்னிப்புக் கோரவில்லையெனில் ஒருபோதும் வெற்றிபெற மாட்டார்கள்.

Al-An'aam 6:21Listen in Qur'an →
22

وَيَوْمَ نَحْشُرُهُمْ جَمِيعًۭا ثُمَّ نَقُولُ لِلَّذِينَ أَشْرَكُوٓا۟ أَيْنَ شُرَكَآؤُكُمُ ٱلَّذِينَ كُنتُمْ تَزْعُمُونَ

அவர்கள் அனைவரையும் நாம் ஒன்று சேர்க்கும் நாளில் நமக்கு இணைவைத்தவர்களை நோக்கி, "நீங்கள் (அல்லாஹ்வுக்கு இணையாக வைத்த) உங்களுடைய அந்தக் கூட்டாளிகள் எங்கே" என்று கேட்போம்.

நாம் அனைவரையும் ஒன்று திரட்டும் மறுமை நாளை நினைவுகூர்வீராக. யாரையும் விட்டு விட மாட்டோம். பின்னர் அல்லாஹ்வுடன் மற்றவர்களையும் இணைத்து வணங்கியவர்களிடம் அவர்களை பரிகசிக்குமுகமாக, “நீங்கள் அல்லாஹ்வுக்கு இணையானவர்கள் இருக்கிறார்கள் என்று பொய்கூறி அவற்றை அழைத்துக் கொண்டிருந்தீர்களே அவர்கள் எங்கே” என்று கேட்போம்.

Al-An'aam 6:22Listen in Qur'an →
23

ثُمَّ لَمْ تَكُن فِتْنَتُهُمْ إِلَّآ أَن قَالُوا۟ وَٱللَّهِ رَبِّنَا مَا كُنَّا مُشْرِكِينَ

"எங்கள் ரப்பாகிய அல்லாஹ்வின் மீது ஆணையாக, நாங்கள் இணைவைப்பவர்களாக இருந்ததில்லை" என்று கூறுவதைத் தவிர வேறு அவர்களுடைய பதில் எதுவும் இராது.

இப்பரீட்சையின் பின் தாம் வணங்கிவந்த தங்களின் கடவுள்களிடமிருந்து விலகிக் கொள்வதைத் தவிர அவர்களுக்கு வேறு எந்த வழியும் இருக்காது. “எங்கள் இறைவா! நாங்கள் உனக்கு யாரையும் இணையாக்கவில்லை. மாறாக நாங்கள் உன்னை மட்டுமே விசுவாசம் கொண்டு வணங்கிக் கொண்டிருந்தோம்.” என அவர்கள் பொய்யுரைப்பார்கள்.

Al-An'aam 6:23Listen in Qur'an →
24

ٱنظُرْ كَيْفَ كَذَبُوا۟ عَلَىٰٓ أَنفُسِهِمْ ۚ وَضَلَّ عَنْهُم مَّا كَانُوا۟ يَفْتَرُونَ

(நபியே!) அவர்கள் தங்களுக்கு எதிராக எவ்வாறு பொய் கூறிக் கொண்டார்கள் என்பதைப் பாரும்; ஆனால் (இறைவனுக்கு இணையானவை என்று அவர்கள் பொய்யாகக்) கற்பனை செய்ததெல்லாம் (அவர்களுக்கு உதவிடாது) மறைந்துவிடும்.

முஹம்மதே! தாம் இணைவைக்கவில்லையென்று அவர்கள் எவ்வாறு தங்கள் மீதே பொய்யுரைக்கிறார்கள் என்று பாரும். இவ்வுலக வாழ்வில் அவர்கள் பொய்யாக இறைவனோடு புனைந்த இணைத் தெய்வங்கள் அவர்களை விட்டும் மறைந்து அவர்களைக் கைவிட்டுவிட்டன.

Al-An'aam 6:24Listen in Qur'an →
25

وَمِنْهُم مَّن يَسْتَمِعُ إِلَيْكَ ۖ وَجَعَلْنَا عَلَىٰ قُلُوبِهِمْ أَكِنَّةً أَن يَفْقَهُوهُ وَفِىٓ ءَاذَانِهِمْ وَقْرًۭا ۚ وَإِن يَرَوْا۟ كُلَّ ءَايَةٍۢ لَّا يُؤْمِنُوا۟ بِهَا ۚ حَتَّىٰٓ إِذَا جَآءُوكَ يُجَٰدِلُونَكَ يَقُولُ ٱلَّذِينَ كَفَرُوٓا۟ إِنْ هَٰذَآ إِلَّآ أَسَٰطِيرُ ٱلْأَوَّلِينَ

அவர்களில் சிலர் உம் பேச்சைக் கேட்(பது போல் பாவனை செய்)கின்றனர்; நாம் அவர்களுடைய உள்ளங்களில் அதை விளங்கிக் கொள்ளாது இருக்குமாறு திரைகளையும் இன்னும் அவர்கள் காதுகளில் செவிட்டுத் தன்மையும் ஏற்படுத்தினோம்; இன்னும் அவர்கள் எல்லா அத்தாட்சிகளையும் பார்த்தாலும் அவற்றை நம்பமாட்டார்கள்; இன்னும் இவர்கள் உம்மிடம் வந்தால் உம்மோடு வாதாடுவார்கள்; "இவையெல்லாம் முன்னோர்களுடைய கட்டுக் கதைகளேயன்றி வேறில்லை" என்று இந்நிராகரிப்போர் கூறுவார்கள்.

தூதரே! நீர் குர்ஆன் ஓதினால் இணைவைப்பாளர்களில் சிலர் உம் பக்கம் காதுகொடுத்துக் கேட்கிறார்கள். ஆயினும் அவர்கள் கேட்பவை அவர்களுக்கு பயனடைவதில்லை. அவர்களின் பிடிவாதம் மற்றும் புறக்கணிப்பினால் குர்ஆனை புரிந்துகொள்ள முடியாதவாறு அவர்களின் உள்ளங்களில் திரையை ஏற்படுத்தியுள்ளோம். அவர்களின் காதுகளில் அடைப்பை ஏற்படுத்தியுள்ளோம். அவர்களால் பயனுள்ள விஷயங்களைச் செவியுற முடியாது. எவ்வளவுதான் அவர்கள் தெளிவான ஆதாரங்களையும் சான்றுகளையும் கண்டாலும் அவர்கள் நம்பிக்கைகொள்ள மாட்டார்கள். எந்தளவுக்கென்றால் அவர்கள் உம்மிடம் அசத்தியத்தைக்கொண்டு வாதிட வரும்போது, “முந்தைய வேதங்களிலிருந்தே நீர் இந்த விஷயங்களையெல்லாம் கொண்டுவந்தீர்” என்று அவர்கள் கூறுவார்கள்.

Al-An'aam 6:25Listen in Qur'an →
26

وَهُمْ يَنْهَوْنَ عَنْهُ وَيَنْـَٔوْنَ عَنْهُ ۖ وَإِن يُهْلِكُونَ إِلَّآ أَنفُسَهُمْ وَمَا يَشْعُرُونَ

மேலும் அவர்கள் (பிறரையும்) அதை (கேட்கவிடாது) தடுக்கிறார்கள்; இவர்களும் அதைவிட்டு ஒதுங்கிக் கொள்கிறார்கள்; அவர்கள் தங்களைத் தாங்களே நாசமாக்கிக் கொள்கிறார்கள்; ஆனால் அவர்கள் (இதைப்) புரிந்து கொள்வதில்லை.

அவர்கள் தூதர் மீது நம்பிக்கைகொள்வதை விட்டு மக்களைத் தடுக்கிறார்கள். தாமும் அதிலிருந்து தூரமாகிறார்கள். மக்களைப் பயனடைய விடுவதுமில்லை. அவர்கள் அதிலிருந்து பயனடைவதுமில்லை. இதன்மூலம் அவர்கள் தங்களுக்குத் தாங்களே அழிவை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். அவர்கள் செய்துகொண்டிருப்பது தம்மைத் தாமே அழிக்கும் வேலை என்பதை அவர்கள் அறிந்துகொள்வதில்லை.

Al-An'aam 6:26Listen in Qur'an →
27

وَلَوْ تَرَىٰٓ إِذْ وُقِفُوا۟ عَلَى ٱلنَّارِ فَقَالُوا۟ يَٰلَيْتَنَا نُرَدُّ وَلَا نُكَذِّبَ بِـَٔايَٰتِ رَبِّنَا وَنَكُونَ مِنَ ٱلْمُؤْمِنِينَ

நரக நெருப்பின்முன் அவர்கள் நிறுத்தப்படும்போது (நபியே!) நீர் அவர்களைப் பார்ப்பீராயின், "எங்கள் கேடே! நாங்கள் திரும்ப (உலகத்திற்கு) அனுப்பப்பட்டால் (நலமாக இருக்குமே) அப்பொழுது நாங்கள் எங்களின் இறைவனின் அத்தாட்சிகளைப் பொய்ப்பிக்க மாட்டோம்; நாங்கள் முஃமின்களாக இருப்போம்" எனக் கூறுவதைக் காண்பீர்.

தூதரே! மறுமை நாளில் அவர்கள் நெருப்பில் முன்னிறுத்தப்பட்டு, “அந்தோ, அல்லாஹ்வின் வசனங்களை மறுக்காமல் அவனை நம்பிக்கைகொண்டவர்களாக ஆகுவதற்கு, நாங்கள் மீண்டும் உலக வாழ்க்கையின்பால் திருப்பி அனுப்பப்பட மாட்டோமா!” என அவர்கள் கைசேதப்பட்டு கூறும் போது, அவர்களது அவலமான நிலை கண்டு நீர் ஆச்சரியப்படுவீர்.

Al-An'aam 6:27Listen in Qur'an →
28

بَلْ بَدَا لَهُم مَّا كَانُوا۟ يُخْفُونَ مِن قَبْلُ ۖ وَلَوْ رُدُّوا۟ لَعَادُوا۟ لِمَا نُهُوا۟ عَنْهُ وَإِنَّهُمْ لَكَٰذِبُونَ

எனினும், எதை இவர்கள் முன்பு மறைத்திருந்தார்களோ அது இவர்களுக்கு வெளிப்பட்டு விட்டது இவர்கள் (உலகத்திற்குத்) திருப்பி அனுப்பப்பட்டாலும் எதை விட்டு அவர்கள் தடுக்கப்பட்டார்களோ அதற்கே மீளுவார்கள்; நிச்சயமாக அவர்கள் பொய்யர்களே.

திருப்பி அனுப்பப்பட்டால் நம்பிக்கைகொள்வோம் என அவர்கள் கூறுவது உண்மையல்ல. மாறாக தங்களின் வார்த்தையால் தாங்கள் மறைத்துக் கொண்டிருந்ததை வெளிப்படுத்தி விட்டார்கள். அவர்களது உடலறப்புக்கள் அவர்களுக்கெதிராக சாட்சி கூறும் போது, (நாங்கள் இணைவைப்பாளர்களாக இருக்கவில்லை) என்ற அவர்களின் கூற்றின் மூலம், அவர்கள் மறைத்துக் கொண்டிருந்தவை வெளிவந்துவிட்டன. அவர்கள் உலகிற்கு திருப்பி அனுப்பப்பட்டாலும் தடுக்கப்பட்ட ஷிர்க்கான, நிராகரிப்பான செயல்களில்தான் ஈடுபடுவார்கள். நாங்கள் திரும்பினால் நம்பிக்கைகொள்வோம் என்ற தங்களின் வாக்குறுதியில் அவர்கள் நிச்சயமாக பொய்யர்களே.

Al-An'aam 6:28Listen in Qur'an →
29

وَقَالُوٓا۟ إِنْ هِىَ إِلَّا حَيَاتُنَا ٱلدُّنْيَا وَمَا نَحْنُ بِمَبْعُوثِينَ

அன்றியும், "இவ்வுலகத்தில் நாம் வாழ்ந்திருப்பதைத் தவிர (அப்பால் மறுமை வாழ்வு என்று) ஒன்றும் இல்லை நாம் (மரணத்திற்குப் பின் மறுபடியும்) எழுப்பப் பட மாட்டோம்" என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

இந்த இணைவைப்பாளர்கள் கூறுகிறார்கள், “நாங்கள் இருக்கும் இந்த வாழ்க்கையைத் தவிர வேறு வாழ்க்கை இல்லை. நாங்கள் விசாரணைக்காக எழுப்பப்பட மாட்டோம்.”

Al-An'aam 6:29Listen in Qur'an →
30

وَلَوْ تَرَىٰٓ إِذْ وُقِفُوا۟ عَلَىٰ رَبِّهِمْ ۚ قَالَ أَلَيْسَ هَٰذَا بِٱلْحَقِّ ۚ قَالُوا۟ بَلَىٰ وَرَبِّنَا ۚ قَالَ فَذُوقُوا۟ ٱلْعَذَابَ بِمَا كُنتُمْ تَكْفُرُونَ

இவர்கள் (உயிர்ப்பிக்கப்பட்டு) இவர்களுடைய இறைவனின் முன் நிறுத்தப்படும்போது இவர்களை நீர் காண்பீராயின் (அது சமயம் இறைவன் கேட்பான்) இது உண்மையல்லவா? என்று "ஆம்! எங்களுடைய ரப்பின் மீது ஆணையாக (மெய்தான்)" என்று இவர்கள் கூறுவார்கள்; அப்போது, "நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்த காரணத்தால் வேதனையை அனுபவியுங்கள்" என்று அல்லாஹ் கூறுவான்.

தூதரே! எழுப்பப்படும் நாளை மறுக்கக்கூடியவர்கள் தங்கள் இறைவனுக்கு முன்னால் நிற்பதை நீர் கண்டால் அவர்களின் மோசமான நிலையைக் கண்டு நீர் ஆச்சரியப்படுவீர். அப்போது அல்லாஹ் அவர்களிடம் கேட்பான், “நீங்கள் பொய்யெனக் கூறிக் கொண்டிருந்த இந்த நாள் உண்மையானதாகவும் சந்தேகமற்றதாகவும் இல்லையா?” அவர்கள் கூறுவார்கள், “எங்களைப் படைத்த எங்கள் இறைவனின் மீது ஆணையாக, நிச்சயமாக அது சந்தேகமற்ற உண்மையாகும். அப்போது அல்லாஹ் , “நீங்கள் உலக வாழ்வில் இந்த நாளை நிராகரித்துக் கொண்டிருந்ததனால் வேதனையைச் சுவையுங்கள்.” என்று அவர்களிடம் கூறுவான்.

Al-An'aam 6:30Listen in Qur'an →

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.