Muslim99Muslim99
← Tafsir library

5. Al-Maaida

The Table · Medinan · 120 ayahs

سُورَةُ المَائـِدَةِ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 1–10 of 120

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

1

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ أَوْفُوا۟ بِٱلْعُقُودِ ۚ أُحِلَّتْ لَكُم بَهِيمَةُ ٱلْأَنْعَٰمِ إِلَّا مَا يُتْلَىٰ عَلَيْكُمْ غَيْرَ مُحِلِّى ٱلصَّيْدِ وَأَنتُمْ حُرُمٌ ۗ إِنَّ ٱللَّهَ يَحْكُمُ مَا يُرِيدُ

முஃமின்களே! (நீங்கள் செய்து கொண்ட) உடன்படிக்கைகளை (முழுமையாக) நிறைவேற்றுங்கள்;. உங்கள் மீது ஓதிக்காட்டி இருப்பவற்றைத் தவிர மற்றைய நாற்கால் பிராணிகள் உங்களுக்கு(உணவிற்காக)ஆகுமாக்கப்பட்டுள்ளன. ஆனால் நீங்கள் இஹ்ராம் அணிந்திருக்கும் சமயத்தில் (அவற்றை) வேட்டையாடுவது (உங்களுக்குத்) தடுக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியதைக் கட்டளையிடுகிறான்.

நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கும் உங்கள் படைப்பாளனுக்குமிடையே இருக்கும் உறுதியான ஒப்பந்தங்களையும் உங்களுக்கும் ஏனைய அடியார்களுக்குமிடையே செய்துகொண்ட ஒப்பந்தங்களையும் முழுமையாக நிறைவேற்றுங்கள். அல்லாஹ் உங்கள் மீது கருணை செலுத்தும் பொருட்டு ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற கால்நடைகளை உங்களுக்கு ஆகுமாக்கித் தந்துள்ளான். ஆயினும் வசனங்கள் மூலம் குர்ஆனில் உங்களுக்குத் தடைசெய்யப்பட்டவற்றைத் தவிர. ஹஜ் அல்லது உம்ராவுக்காக நீங்கள் இஹ்ராம் அணிந்திருக்கும் போது தரையில் வேட்டையாடுவது உங்களுக்குத் தடைசெய்யப்பட்டுள்ளது. தனது ஞானத்திற்கு ஏற்ப அல்லாஹ் தான் நாடியதை ஹலாலாகவும் ஹராமாகவும் தீர்மானிக்கிறான். அவனை யாரும் நிர்ப்பந்திக்க முடியாது. அவனுடைய தீர்மானத்தை யாரும் ஆட்சேபிக்கவும் முடியாது.

2

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تُحِلُّوا۟ شَعَٰٓئِرَ ٱللَّهِ وَلَا ٱلشَّهْرَ ٱلْحَرَامَ وَلَا ٱلْهَدْىَ وَلَا ٱلْقَلَٰٓئِدَ وَلَآ ءَآمِّينَ ٱلْبَيْتَ ٱلْحَرَامَ يَبْتَغُونَ فَضْلًۭا مِّن رَّبِّهِمْ وَرِضْوَٰنًۭا ۚ وَإِذَا حَلَلْتُمْ فَٱصْطَادُوا۟ ۚ وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَـَٔانُ قَوْمٍ أَن صَدُّوكُمْ عَنِ ٱلْمَسْجِدِ ٱلْحَرَامِ أَن تَعْتَدُوا۟ ۘ وَتَعَاوَنُوا۟ عَلَى ٱلْبِرِّ وَٱلتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا۟ عَلَى ٱلْإِثْمِ وَٱلْعُدْوَٰنِ ۚ وَٱتَّقُوا۟ ٱللَّهَ ۖ إِنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلْعِقَابِ

முஃமின்களே! (நீங்கள் இஹ்ராம் கட்டியிருக்கும் சமயத்தில் உங்களுக்கு ஏற்படுத்தப்பட்ட) அல்லாஹ்வின மார்க்க அடையாளங்களையும், சிறப்பான மாதங்களையும், குர்பானிகளையும், குர்பானிக்காக அடையாளம் கட்டப்பெற்றவையும், தங்களுடைய இறைவனின் அருளையும் திருப்பொருத்தத்தையும் நாடி கண்ணியமான (அவனுடைய) ஆலயத்தை நாடிச் செல்வோரையும் (தாக்குவதையோ, அவமதிப்பதையோ) நீங்கள் ஆகுமாக்கிக் கொள்ளாதீர்கள்;. நீங்கள் இஹ்ராமைக் களைந்து விட்டால் (அனுமதிக்கப்பட்டவற்றை) நீங்கள் வேட்டையாடலாம்;. மேலும் புனித மஸ்ஜிதை (கஃபத்துல்லாஹ்வை) விட்டும் உங்களைத் தடுத்த கூட்டத்தினர் மீதுள்ள வெறுப்பானது, நீங்கள் வரம்பு மீறுமாறு உங்களைத் தூண்டி விட வேண்டாம்;. இன்னும் நன்மையிலும்; பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்;. பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்;. அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன்.

ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ் உங்களுக்கு மதிக்குமாறு கட்டளையிட்ட புனிதங்களை அவமதித்துவிடாதீர்கள். தைத்த ஆடைகளை அணிவது போன்ற இஹ்ராம் அணிந்த நிலையில் தடைசெய்யப்பட்டவற்றை விட்டும் வேட்டையாடுவது போன்ற புனிதப் பிரதேசத்தில் தடைசெய்யப்பட்டவற்றையும் தவிர்ந்துகொள்ளுங்கள். புனிதமான மாதங்களில் போர் புரியாதீர்கள். (துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகியவை புனித மாதங்களாகும்) புனிதப்பிரதேச எல்லையில் அல்லாஹ்வுக்காக பலியிடுவதற்கு வழங்கப்பட்ட கால்நடைகளை அபகரிப்பதன் மூலமோ அது அடையவேண்டிய இடத்தைவிட்டுத் தடுப்பதன் மூலமோ அதனை ஆகுமாக்கிக்கொள்ளாதீர்கள். பலிப்பிராணி என்று உணர்த்தப்படுவதற்காக கழுத்தில் பட்டை கட்டப்பட்ட பிராணியையும், அல்லாஹ்வின் திருப்தியையும் வியாபார நலனையும் கருத்தில்கொண்டு கஃபா என்றும் இறையில்லத்தை நாடி வருவோரையும் ஆகுமாக்கிக்கொள்ளாதீர்கள். இஹ்ராமிலிருந்து நீங்கள் விடுபட்டு, புனிதப் பிரதேச எல்லையிலிருந்து நீங்கள் வெளியேறிவிட்டால் நீங்கள் நாடினால் வேட்டையாடிக் கொள்ளலாம். மஸ்ஜிதுல் ஹராமை விட்டும் உங்களைத் தடுத்த ஒரு சமூகத்தின் மீதுள்ள வெறுப்பு அவர்களுடன் நீதமாக நடந்துகொள்ளாது அநியாயம் இழைப்பதற்கு உங்களைத் தூண்டிவிட வேண்டாம். நம்பிக்கையாளர்களே! நீங்கள் ஏவப்பட்ட நல்லவற்றைச் செய்வதற்கும் தடுக்கப்பட்ட தீயவற்றை விட்டுத் தவிர்ந்திருப்பதற்கும் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளுங்கள். பாவங்களில் ஈடுபடவும் மக்களின் உயிர் உடமை மானம் ஆகியவற்றில் அத்துமீறுவதற்கும் ஒருவருக்கொருவர் ஒத்துழைத்துக்கொள்ளாதீர்கள். அல்லாஹ்வுக்குக் கீழ்படிந்து, அவனுக்கு மாறுசெய்வதிலிருந்து விலகி அவனை அஞ்சிக் கொள்ளுங்கள். தன் கட்டளைக்கு மாறாகச் செயல்படக்கூடியவர்களை அவன் கடுமையாக தண்டிக்கக்கூடியவன். எனவே அவனது தண்டனையிலிருந்து எச்சரிக்கையாக இருங்கள்.

3

حُرِّمَتْ عَلَيْكُمُ ٱلْمَيْتَةُ وَٱلدَّمُ وَلَحْمُ ٱلْخِنزِيرِ وَمَآ أُهِلَّ لِغَيْرِ ٱللَّهِ بِهِۦ وَٱلْمُنْخَنِقَةُ وَٱلْمَوْقُوذَةُ وَٱلْمُتَرَدِّيَةُ وَٱلنَّطِيحَةُ وَمَآ أَكَلَ ٱلسَّبُعُ إِلَّا مَا ذَكَّيْتُمْ وَمَا ذُبِحَ عَلَى ٱلنُّصُبِ وَأَن تَسْتَقْسِمُوا۟ بِٱلْأَزْلَٰمِ ۚ ذَٰلِكُمْ فِسْقٌ ۗ ٱلْيَوْمَ يَئِسَ ٱلَّذِينَ كَفَرُوا۟ مِن دِينِكُمْ فَلَا تَخْشَوْهُمْ وَٱخْشَوْنِ ۚ ٱلْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِى وَرَضِيتُ لَكُمُ ٱلْإِسْلَٰمَ دِينًۭا ۚ فَمَنِ ٱضْطُرَّ فِى مَخْمَصَةٍ غَيْرَ مُتَجَانِفٍۢ لِّإِثْمٍۢ ۙ فَإِنَّ ٱللَّهَ غَفُورٌۭ رَّحِيمٌۭ

(தானகச்) செத்தது, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாததின் பெயர் அதன் மீது கூறப்பட்ட (அறுக்கப்பட்; ட)தும், கழுத்து நெறித்துச் செத்ததும், அடிபட்டுச் செத்ததும், கீNழு விழுந்து செத்ததும், கொம்பால் முட்டப் பட்டுச் செத்ததும், (கரடி, புலி போன்ற) விலங்குகள் கடித்(துச் செத்)தவையும் உங்கள் மீது ஹராமாக்கப் பட்டிருக்கின்றன. (அனுமதிக்கப்பட்டவற்றில்) எதை நீங்கள் (உயிரோடு பார்த்து, முறைப்படி) அறுத்தீர்களோ அதைத் தவிர (அதை உண்ணலாம். அன்றியும் பிற வணக்கம் செய்வதற்காகச்) சின்னங்கள் வைக்கப் பெற்ற இடங்களில் அறுக்கப்பட்டவையும்;, அம்புகள் மூலம் நீங்கள் குறி கேட்பதும் (உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளன) - இவையாவும் (பெரும்) பாவங்களாகும்;. இன்றைய தினம் காஃபிர்கள் உங்களுடைய மார்க்கத்தை (அழித்து விடலாம் என்பதை)ப் பற்றிய நம்பிக்கையை இழந்து விட்டார்கள்;. எனவே நீங்கள் அவர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சி நடப்பீர்களாக. இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்;. மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்;. இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்;. ஆனால் உங்களில் எவரேனும் பாவம் செய்யும் நாட்டமின்றி, பசிக் கொடுமையினால் நிர்ப்பந்திக்கப்பட்டு (மேலே கூறப்பட்ட விலக்கப்பட்டவற்றைப் புசித்து) விட்டால் (அது குற்றமாகாது). ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், கருணை மிக்கோனாகவும் இருக்கின்றான்.

அறுக்கப்படாமல் தாமாகச் செத்த பிராணி, வழிந்தோடிய இரத்தம், பன்றி இறைச்சி, அல்லாஹ் அல்லாதவற்றின் பெயரில் அறுக்கப்பட்டது, கழுத்து நெறிபட்டு செத்தது, அடிபட்டு செத்தது, உயரமான இடத்திலிருந்து விழுந்து செத்தது, கொம்பால் முட்டப்பட்டு செத்தது ஆகியவற்றை அல்லாஹ் உங்களுக்குத் தடைசெய்துள்ளான். சிங்கம், புலி, ஓநாய் போன்ற மிருகங்களால் கடித்து குதறப்பட்டு செத்தவையும் உங்களுக்குத் தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால் அவை சாவதற்கு முன்னரே நீங்கள் அவற்றை முறையாக அறுத்துவிட்டால் அவை உங்களுக்கு அனுமதிக்கப்பட்டதாகும். சிலைகளுக்காக பலியிடப்பட்டவற்றையும் உங்களுக்குத் தடைசெய்துள்ளான். ''செய்யவும்'' அல்லது ''செய்ய வேண்டாம்'' என்று எழுதப்பட்ட கற்கள் அல்லது அம்புகளின் அடிப்படையில் செயற்படுவதன் மூலம் உங்களுக்குப் பங்கீடு செய்யப்பட்ட மறைவானவற்றை அறிந்துகொள்ள முயற்சிப்பதையும் உங்களுக்குத் தடைசெய்துள்ளான். தடைசெய்யப்பட்ட இந்த காரியங்களில் ஈடுபடுவது அல்லாஹ்வின் கட்டளையை மீறுவதாகும். இன்று இஸ்லாத்தின் பலத்தைக் கண்ட நிராகரிப்பாளர்கள் உங்களை அதனை விட்டும் திருப்பிவிட முடியும் என்பதில் நம்பிக்கையிழந்து விட்டார்கள். எனவே நீங்கள் அவர்களுக்கு அஞ்சாதீர்கள். எனக்கே அஞ்சுங்கள். இன்றைய தினம் உங்களின் மார்க்கமான இஸ்லாத்தை நான் பரிபூரணப்படுத்திவிட்டேன். உங்கள்மீது பொழிந்த வெளிப்படையான, அந்தரங்கமான அருட்கொடையையும் முழுமைப்படுத்திவிட்டேன். உங்களுக்காக இஸ்லாத்தை மார்க்கமாக தேர்ந்தெடுத்துக் கொண்டேன். எனவே இதைத்தவிர வேறு மார்க்கத்தை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். எவரேனும் பசியின் காரணமாக நிர்ப்பந்திக்கப்பட்டு பாவம்செய்ய விரும்பாமல் இறந்தவற்றை உண்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டால் அவர்மீது எந்தக் குற்றமும் இல்லை. நிச்சயமாக அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.

4

يَسْـَٔلُونَكَ مَاذَآ أُحِلَّ لَهُمْ ۖ قُلْ أُحِلَّ لَكُمُ ٱلطَّيِّبَٰتُ ۙ وَمَا عَلَّمْتُم مِّنَ ٱلْجَوَارِحِ مُكَلِّبِينَ تُعَلِّمُونَهُنَّ مِمَّا عَلَّمَكُمُ ٱللَّهُ ۖ فَكُلُوا۟ مِمَّآ أَمْسَكْنَ عَلَيْكُمْ وَٱذْكُرُوا۟ ٱسْمَ ٱللَّهِ عَلَيْهِ ۖ وَٱتَّقُوا۟ ٱللَّهَ ۚ إِنَّ ٱللَّهَ سَرِيعُ ٱلْحِسَابِ

(நபியே!) அவர்கள் (உண்பதற்குத் ) தங்களுக்கு ஹலாலான (அனுமதிக்கப்பட்ட)வை எவை என்று உம்மிடம் கேட்கிறார்கள்;. நீர் கூறும்; உங்களுக்கு ஹலாலானவை, சுத்தமான நல்ல பொருள்களும், அல்லாஹ் உங்களுக்குக் கற்பித்திருக்கிறபடி வேட்டையாடும் பிராணி, பறவைகளுக்கு நீங்கள் பயிற்சியளித்து அவை வேட்டையாடி நீங்கள் பெற்றவையும் புசியுங்கள்;. எனினும் நீங்கள் (வேட்டைக்கு விடும்போது) அதன்மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறி விடுங்கள்;. அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் கணக்கெடுப்பதில் மிகவும் விரைவானவன்.

தூதரே! உம் தோழர்கள் உம்மிடம், ‘உண்பதற்குத் தமக்கு அனுமதிக்கப்பட்டவை எவை?’ என்று கேட்கிறார்கள். தூதரே! நீர் கூறுவீராக: “தூய்மையான அனைத்து உணவுகளும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. பயிற்றுவிக்கப்பட்ட கூரிய பற்களையுடைய நாய், சிறுத்தை, கூரிய நகங்களுடைய கழுகு போன்றவை வேட்டையாடியவற்றையும் நீங்கள் உண்ணலாம். நீங்கள்தாம் அவற்றிற்கு வேட்டையாடக் கற்றுக் கொடுக்கிறீர்கள். வேட்டையாடும் ஒழுங்குகளைப் பற்றிய அறிவை அல்லாஹ்தான் உங்களுக்கு வழங்கினான். அவ்வேட்டைப் பிராணிகள், சொல்வதைச் செயற்படுத்தி தடுப்பதைத் தவிர்க்குமளவு பயிற்சி பெற்றுவிட்டால் அவை வேட்டையாடுபவை இறந்து விட்டாலும் அதனை நீங்கள் உண்ணுங்கள். அவற்றை வேட்டைக்கு அனுப்பும்போது அல்லாஹ்வின் பெயர் கூறி அனுப்புங்கள். அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் செயல்களுக்கு விரைவாக கணக்கு தீர்ப்பவன்.

5

ٱلْيَوْمَ أُحِلَّ لَكُمُ ٱلطَّيِّبَٰتُ ۖ وَطَعَامُ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَٰبَ حِلٌّۭ لَّكُمْ وَطَعَامُكُمْ حِلٌّۭ لَّهُمْ ۖ وَٱلْمُحْصَنَٰتُ مِنَ ٱلْمُؤْمِنَٰتِ وَٱلْمُحْصَنَٰتُ مِنَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَٰبَ مِن قَبْلِكُمْ إِذَآ ءَاتَيْتُمُوهُنَّ أُجُورَهُنَّ مُحْصِنِينَ غَيْرَ مُسَٰفِحِينَ وَلَا مُتَّخِذِىٓ أَخْدَانٍۢ ۗ وَمَن يَكْفُرْ بِٱلْإِيمَٰنِ فَقَدْ حَبِطَ عَمَلُهُۥ وَهُوَ فِى ٱلْءَاخِرَةِ مِنَ ٱلْخَٰسِرِينَ

இன்றைய தினம் உங்களுக்கு (உண்ண) எல்லா நல்ல தூய பொருட்களும் ஹலாலாக்கப் பட்டுள்ளன. வேதம் கொடுக்கப்பட்டோரின் உணவும் உங்களுக்கு ஹலாலானதே. உங்களுடைய உணவும் அவர்களுக்கு (சாப்பிட) ஆகுமானதே, முஃமின்களான கற்புடைய பெண்களும், உங்களுக்கு முன்னர் வேதம் அளிக்கப்பட்டவர்களிலுள்ள கற்புடைய பெண்களும் விலைப் பெண்டிராகவோ, ஆசை நாயகிகளாகவோ வைத்துக் கொள்ளாது, அவர்களுக்குரிய மஹரை அவர்களுக்கு அளித்து, மண முடித்துக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது. மேலும், எவர் ஈமானை நிராகரிக்கிறாரோ, அவருடைய அமல் (செயல்) அழிந்து போகும் - மேலும் அவர் மறுமையில நஷ்டமடைந்தோரில் ஒருவராகவே இருப்பார்.

இன்றைய தினம் சுவையானவற்றை உண்பது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுவிட்டது. வேதம் வழங்கப்பட்ட யூதர்கள் மற்றும் கிருஸ்தவர்களால் அறுக்கப்பட்டவற்றை நீங்களும் நீங்கள் அறுத்தவற்றை அவர்களும் உண்ணலாம். நீங்கள் மணக்கொடை அளித்து விபச்சாரத்தில் ஈடுபடாமலும் வைப்பாட்டிகள் வைத்துக்கொள்ளாமலும் இருந்தால் சுதந்திரமான கற்பொழுக்கமுள்ள, முஃமினான பெண்களையும் உங்களுக்கு முன்னால் வேதம் வழங்கப்பட்ட யூத மற்றும் கிருஸ்தவப் பெண்களில் சுதந்திரமான, கற்பொழுக்கமுள்ளவர்களையும் மணமுடித்துக்கொள்ளலாம். அல்லாஹ் தன் அடியார்களுக்கு வழங்கிய சட்டங்களை நிராகரிப்பவரின் அமல்கள் யாவும், அவை ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான நிபந்தனையான ஈமானை இழந்ததனால் வீணாகிவிடும். அவர் நரகத்தில் நிரந்தரமாக வீழ்ந்துகிடக்க வேண்டும் என்பதனால் மறுமை நாளில் நஷ்டமடைந்தவராவார்.

6

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِذَا قُمْتُمْ إِلَى ٱلصَّلَوٰةِ فَٱغْسِلُوا۟ وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى ٱلْمَرَافِقِ وَٱمْسَحُوا۟ بِرُءُوسِكُمْ وَأَرْجُلَكُمْ إِلَى ٱلْكَعْبَيْنِ ۚ وَإِن كُنتُمْ جُنُبًۭا فَٱطَّهَّرُوا۟ ۚ وَإِن كُنتُم مَّرْضَىٰٓ أَوْ عَلَىٰ سَفَرٍ أَوْ جَآءَ أَحَدٌۭ مِّنكُم مِّنَ ٱلْغَآئِطِ أَوْ لَٰمَسْتُمُ ٱلنِّسَآءَ فَلَمْ تَجِدُوا۟ مَآءًۭ فَتَيَمَّمُوا۟ صَعِيدًۭا طَيِّبًۭا فَٱمْسَحُوا۟ بِوُجُوهِكُمْ وَأَيْدِيكُم مِّنْهُ ۚ مَا يُرِيدُ ٱللَّهُ لِيَجْعَلَ عَلَيْكُم مِّنْ حَرَجٍۢ وَلَٰكِن يُرِيدُ لِيُطَهِّرَكُمْ وَلِيُتِمَّ نِعْمَتَهُۥ عَلَيْكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُونَ

முஃமின்களே! நீங்கள் தொழுகைக்குத் தயாராகும்போது, (முன்னதாக) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் இரு கைகளையும், கழுவிக் கொள்ளுங்கள்;. உங்களுடைய தலைகளை (ஈரக்கையால்) தடவி (மஸஹு செய்து) கொள்ளுங்கள்;. உங்கள் கால்களை இரு கணுக்கால் வரை(க் கழுவிக் கொள்ளுங்கள்) - நீங்கள் பெருந்தொடக்குடையோராக (குளிக்கக் கடமைப் பட்டோராக) இருந்தால் குளித்து(த் தேகம் முழுவதையும் சுத்தம் செய்து)க் கொள்ளுங்கள்;. தவிர நீங்கள நோயாளிகளாகவோ, அல்லது பிரயாணத்திலோ இருந்தால், அல்லது உங்களில் எவரும் மல ஜலம் கழித்து வந்தாலும், அல்லது நீங்கள் பெண்களைத் தீண்டி (உடல் உறவு கொண்டி)ருந்தாலும் (உங்களைச் சுத்தப்படுத்திக் கொள்ள) உங்களுக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் (தயம்மும் செய்து கொள்ளுங்கள்;. அதாவது) சுத்தமான மண்ணைக் (கையினால் தடவிக்) கொண்டு அவைகளால் உங்கள் முகங்களையும், உங்களுடைய கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்;. அல்லாஹ் உங்களை வருத்தக் கூடிய எந்த சிரமத்தையும் கொடுக்க விரும்பவில்லை - ஆனால் அவன் உங்களைத் தூய்மைப் படுத்தவும்; இன்னும் நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு, தனது அருட்கொடையை உங்கள் மீது முழுமையாக்கவும் விரும்புகிறான்.

நம்பிக்கை கொண்டவர்களே! சிறுதொடக்கு உள்ள நிலையில் நீங்கள் தொழுகையை நிறைவேற்ற எழுந்தால் உங்கள் முகங்களையும் முழங்கைகள் வரை கைகளையும் கழுவி, தலைகளை தடவி இரு கால்களையும் கணுக்கால்கள் வரை கழுவி வுழூ செய்துகொள்ளுங்கள். உங்கள் மீது குளிப்பு அவசியமாகிவிட்டால் குளித்துக் கொள்ளுங்கள். நீங்கள் நோயாளிகளாக இருந்து நோய் அதிகமாகிவிடும் என்றோ அல்லது நிவாரணம் தாமதமடையும் என்றோ அஞ்சினால் அல்லது ஆரோக்கியமாக நீங்கள் பயணத்தில் இருந்தால் அல்லது நீங்கள் இயற்கைத் தேவையை நிறைவேற்றுவது போன்றவற்றின் மூலம் சிறுதொடக்கு உள்ள நிலமையில் இருந்து அல்லது உங்கள் மனைவியருடன் உடலுறவு கொண்டு பெருந்தொடக்கு உடையவராக இருந்து சுத்தம் செய்வதற்காக தண்ணீரைத் தேடியும் கிடைக்காத பட்சத்தில், பூமியின் மேல் உங்கள் இருகைகளால் அடித்து உங்கள் முகங்களையும் கைகளையும் தடவிக் கொள்ளுங்கள். பாதிப்பு ஏற்பட்டாலும் தண்ணீரை கண்டிப்பாக பயன்படுத்தியே தீர வேண்டும் என்று அல்லாஹ் தன் சட்டங்களில் சிரமத்தை ஏற்படுத்த விரும்பவில்லை. தண்ணீர் இல்லாத அல்லது பயன்படுத்த முடியாத சமயத்தில் அல்லாஹ் அதற்கான பதிலீட்டை அனுமதித்துள்ளான். இது அல்லாஹ் உங்கள்மீது பொழிந்த அருட்கொடைகளை முழுமைப்படுத்துவதற்காகவும் அவன் உங்கள்மீது பொழிந்த அருட்கொடைகளை மறுக்காது நன்றிசெலுத்த வேண்டும் என்பதற்காகவும்தான்.

7

وَٱذْكُرُوا۟ نِعْمَةَ ٱللَّهِ عَلَيْكُمْ وَمِيثَٰقَهُ ٱلَّذِى وَاثَقَكُم بِهِۦٓ إِذْ قُلْتُمْ سَمِعْنَا وَأَطَعْنَا ۖ وَٱتَّقُوا۟ ٱللَّهَ ۚ إِنَّ ٱللَّهَ عَلِيمٌۢ بِذَاتِ ٱلصُّدُورِ

மேலும், உங்கள் மீதுள்ள அல்லாஹ்வின் அருளையும், அவன் உங்களிடம் வாக்குறுதி வாங்கிய பொழுது நீங்கள் அதை உறுதிப்படுத்தி, "நாங்கள் செவி மடுத்தோம், நாங்கள் (உனக்கு) வழிப்பட்டோம்" என்று நீங்கள் கூறியதையும் நினைவு கூறுங்கள்;. அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) இருதயங்களிலுள்ள (இரகசியங்களை) யெல்லாம் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.

இஸ்லாத்தின் பக்கம் நேர்வழி காட்டி அல்லாஹ் உங்கள் மீது பொழிந்த அருட்கொடையை நினைத்துப் பாருங்கள். “மகிழ்ச்சியிலும் துன்பத்திலும் நாங்கள் நீர் கூறும் விஷயத்தை செவியுறுவோம், உம் கட்டளைக்குக் கீழ்ப்படிவோம்” என்று நீங்கள் தூதரிடம் உடன்படிக்கை செய்து கூறிய சமயத்தில் அவன் உங்களிடம் பெற்ற வாக்குறுதியை நினைத்துப் பாருங்கள். அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் உள்ளங்களில் உள்ளவற்றையும் நன்கறிந்தவன். எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை.

8

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ كُونُوا۟ قَوَّٰمِينَ لِلَّهِ شُهَدَآءَ بِٱلْقِسْطِ ۖ وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَـَٔانُ قَوْمٍ عَلَىٰٓ أَلَّا تَعْدِلُوا۟ ۚ ٱعْدِلُوا۟ هُوَ أَقْرَبُ لِلتَّقْوَىٰ ۖ وَٱتَّقُوا۟ ٱللَّهَ ۚ إِنَّ ٱللَّهَ خَبِيرٌۢ بِمَا تَعْمَلُونَ

முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்;. இதுவே (தக்வாவுக்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும்;. அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்.

அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் உண்மைப்படுத்தியவர்களே! அல்லாஹ்வின் திருப்தியை நாடியவர்களாக அவன் உங்கள் மீது விதித்த கடமைகளை நிறைவேற்றுபவர்களாகவும், அநீதியின்றி நீதமாகவே சாட்சி கூறக்கூடியவர்களாகவும் ஆகிவிடுங்கள். ஒரு சமூகத்தின் மீதுள்ள பகைமை அவர்கள் மீது நீதி தவற வைத்துவிட வேண்டாம். நண்பர்கள், எதிரிகள் என அனைவருடனும் நீதி கடைபிடிக்கப்படுவது அவசியமாகும். எனவே இரு சாராருடனும் நீதமாக நடந்துகொள்ளுங்கள். நீதி செலுத்துதல் இறையச்சத்திற்கு மிக நெருக்கமானது. அநீதி இழைத்தல் இறைவனுக்கு எதிரான செயல்பாடாகும். அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி, அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவன். நீங்கள் செய்யும் எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.

9

وَعَدَ ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ ۙ لَهُم مَّغْفِرَةٌۭ وَأَجْرٌ عَظِيمٌۭ

ஈமான் கொண்டு. நல்ல அமல்கள் செய்வோருக்கு, மன்னிப்பையும், மகத்தான (நற்)கூலியையும் அல்லாஹ் வாக்களித்துள்ளான்.

தான் அளித்த வாக்குறுதிக்கு மாறுசெய்யாத அல்லாஹ் தன் மீதும் தன் தூதர்கள் மீதும் நம்பிக்கைகொண்டு நற்காரியம் புரிந்தவர்களின் பாவங்களை மன்னித்துவிடுவதாகவும் அவர்களுக்கு சுவனம் என்னும் மகத்தான கூலியைத் தருவதாகவும் வாக்களிக்கிறான்.

10

وَٱلَّذِينَ كَفَرُوا۟ وَكَذَّبُوا۟ بِـَٔايَٰتِنَآ أُو۟لَٰٓئِكَ أَصْحَٰبُ ٱلْجَحِيمِ

எவர் நிராகரித்து, நம் திருவசனங்களையும் மறுக்கிறார்களோ, அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்.

அல்லாஹ்வை நிராகரித்து அவனுடைய சான்றுகளை பொய்யெனக் கூறியவர்கள்தாம் நரகவாசிகளாவர். தங்களின் நிராகரிப்பிற்குத் தண்டனையாக நரகத்திற்குரிவர்களாக

ஆகிவிடுவர்.

Al-Maaida 5:10Listen in Qur'an →

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.