يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ ٱتَّقُوا۟ رَبَّكُمُ ٱلَّذِى خَلَقَكُم مِّن نَّفْسٍۢ وَٰحِدَةٍۢ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًۭا كَثِيرًۭا وَنِسَآءًۭ ۚ وَٱتَّقُوا۟ ٱللَّهَ ٱلَّذِى تَسَآءَلُونَ بِهِۦ وَٱلْأَرْحَامَ ۚ إِنَّ ٱللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًۭا
மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்;. பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்;. ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்;. அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்;. மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்). - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்.
மனிதர்களே! உங்கள் இறைவனை அஞ்சிக்கொள்ளுங்கள். அவன்தான் உங்களை ஒரே ஆன்மாவிலிருந்து படைத்தான். அந்த ஆன்மாதான் உங்களின் தந்தை ஆதமாவார். அவரிலிருந்து அவரது மனைவியும் உங்களின் தாயுமான ஹவ்வாவைப் படைத்தான். அவர்கள் இருவரிலிருந்து பல மனிதர்களை ஆண்களாகவும் பெண்களாகவும் பூமியின் பல பாகங்களிலும் பரவச் செய்தான். "அல்லாஹ்வுக்காக இவ்வாறு செய்யுமாறு உன்னிடம் கேட்டுக்கொள்கிறேன்" என்று எந்த அல்லாஹ்வின் பெயர் கூறி நீங்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொள்கிறீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள். உங்களை இணைக்கும் உறவுகளைத் துண்டிப்பதையும் அஞ்சிக் கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறான். உங்களின் செயல்களில் எதுவும் அவனைவிட்டுத் தப்பமுடியாது. மாறாக அவன் அவற்றை எண்ணி வைத்துள்ளான். அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.