Muslim99Muslim99
← Tafsir library

6. Al-An'aam

The Cattle · Meccan · 165 ayahs

سُورَةُ الأَنۡعَامِ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 161–165 of 165

161

قُلْ إِنَّنِى هَدَىٰنِى رَبِّىٓ إِلَىٰ صِرَٰطٍۢ مُّسْتَقِيمٍۢ دِينًۭا قِيَمًۭا مِّلَّةَ إِبْرَٰهِيمَ حَنِيفًۭا ۚ وَمَا كَانَ مِنَ ٱلْمُشْرِكِينَ

(நபியே!) நீர் கூறும்; "மெய்யாகவே என் இறைவன் எனக்கு நேரான பாதையின் பால் வழி காட்டினான் - அது மிக்க உறுதியான மார்க்கமாகும்; இப்றாஹீமின் நேர்மையான மார்க்கமுமாகும், அவர் இணைவைப்வர்களில் ஒருவராக இருக்கவில்லை.

தூதரே! நிராகரிக்கும் இந்த இணைவைப்பாளர்களிடம் கூறுவீராக: “நிச்சயமாக அல்லாஹ் எனக்கு நேரான வழியைக் காட்டியுள்ளான். அது இவ்வுலக மற்றும் மறுவுலக நன்மைகளைக் கருத்தில் கொண்டு அமைந்த மார்க்கமாகும். அது சத்தியத்தின்பால் முழுமையாகச் சாய்ந்த இப்ராஹீமின் மார்க்கமாகும். அவர் ஒரு போதும் இணைவைப்பாளர்களில் ஒருவராக இருந்ததில்லை.”

Al-An'aam 6:161Listen in Qur'an →
162

قُلْ إِنَّ صَلَاتِى وَنُسُكِى وَمَحْيَاىَ وَمَمَاتِى لِلَّهِ رَبِّ ٱلْعَٰلَمِينَ

நீர் கூறும்; "மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும்.

தூதரே! நீர் கூறுவீராக: “நிச்சயமாக எனது தொழுகையும், ஏனையவர்களின் பெயர் கூறாது அல்லாஹ்வின் பெயர்கூறி அவனுக்காக நான் அறுப்பவையும் எனது வாழ்வும் மரணமும் எல்லாவற்றையும் படைத்துப் பரிபாலிக்கும் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியவையாகும். இவற்றில் மற்றவர்களுக்கு எந்தப் பங்கும் இல்லை.”

Al-An'aam 6:162Listen in Qur'an →
163

لَا شَرِيكَ لَهُۥ ۖ وَبِذَٰلِكَ أُمِرْتُ وَأَنَا۠ أَوَّلُ ٱلْمُسْلِمِينَ

"அவனுக்கு யாதோர் இணையுமில்லை - இதைக் கொண்டே நான் ஏவப்பட்டுள்ளேன் - (அவனுக்கு) வழிப்பட்டவர்களில் - முஸ்லீம்களில் - நான் முதன்மையானவன் (என்றும் கூறும்).

அவனுக்கு யாதொரு இணையுமில்லை. வணக்கத்திற்குத் தகுதியானவன் அவனைத் தவிர வேறு யாரும் கிடையாது. இணைவைப்பை விட்டும் தூய்மையான இந்த ஓரிறைக் கொள்கையைக் கொண்டே அல்லாஹ் எனக்குக் கட்டளையிட்டுள்ளான். இந்த சமூகத்தில் இதனை ஏற்றுக்கொள்பவர்களில் நானே முதலாமவனாவேன்.

Al-An'aam 6:163Listen in Qur'an →
164

قُلْ أَغَيْرَ ٱللَّهِ أَبْغِى رَبًّۭا وَهُوَ رَبُّ كُلِّ شَىْءٍۢ ۚ وَلَا تَكْسِبُ كُلُّ نَفْسٍ إِلَّا عَلَيْهَا ۚ وَلَا تَزِرُ وَازِرَةٌۭ وِزْرَ أُخْرَىٰ ۚ ثُمَّ إِلَىٰ رَبِّكُم مَّرْجِعُكُمْ فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمْ فِيهِ تَخْتَلِفُونَ

"அல்லாஹ்வை அன்றி மற்றெவரையாவது நான் இறைவனாக எடுத்துக் கொள்வேனா? எல்லாப் பொருள்களுக்கும் அவனே இறைவனாக இருக்கின்றான் - பாவம் செய்யும் ஒவ்வோர் ஆத்மாவும் தனக்கே, கேட்டைத் தேடிக்கொள்கிறது ஓர் ஆத்மாவின் (பாவச்)சுமையை மற்றோர் ஆத்மா சுமக்காது. பின்னர், நீங்கள் (அனைவரும்) உங்கள் இறைவன் பக்கமே திரும்பிச் செல்ல வேண்டியதிருக்கிறது அப்போது நீங்கள் பிணங்கி விவாதம் செய்து கொண்டிருந்தவை பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான்" என்று (நபியே!) நீர் கூறும்.

தூதரே! இந்த இணைவைப்பாளர்களிடம் கூறுவீராக: “அல்லாஹ்வே படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் இறைவனாக உள்ள நிலமையில் அவனைத் தவிர மற்றவர்களையா நான் என் இறைவனாக ஏற்றுக் கொள்வது? அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்கும் தெய்வங்களுக்கும் அவனே இறைவன். தவறிழைக்காத எவரும் மற்றவரின் பாவத்தை சுமக்க மாட்டார். பின்னர் மறுமை நாளில் உங்கள் இறைவனிடமே திரும்ப வேண்டும். இவ்வுலகில் கருத்து வேறுபாடு கொண்டிருந்த மார்க்க விஷயங்களை அவன் உங்களுக்கு அறிவிப்பான்.”

Al-An'aam 6:164Listen in Qur'an →
165

وَهُوَ ٱلَّذِى جَعَلَكُمْ خَلَٰٓئِفَ ٱلْأَرْضِ وَرَفَعَ بَعْضَكُمْ فَوْقَ بَعْضٍۢ دَرَجَٰتٍۢ لِّيَبْلُوَكُمْ فِى مَآ ءَاتَىٰكُمْ ۗ إِنَّ رَبَّكَ سَرِيعُ ٱلْعِقَابِ وَإِنَّهُۥ لَغَفُورٌۭ رَّحِيمٌۢ

அவன் தான் உங்களைப் பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கினான்; அவன் உங்களுக்குக் கொடுத்துள்ளவற்றில் உங்களைச் சோதிப்பதற்காக, உங்களில் சிலரைச் சிலரைவிடப் பதவிகளில் உயர்த்தினான் - நிச்சயமாக உம் இறைவன் தண்டிப்பதில் விரைவானவன். மேலும் அவன் நிச்சயமாக மன்னிப்பவன்; மிக்க கருணையுடயவன்.

பூமியை நிர்வகிப்பதற்காக, அதில் உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களுக்குப் பிறகு உங்களை வழித்தோன்றல்களாக அல்லாஹ்வே ஆக்கினான். உங்களுக்கு வழங்கியவற்றில் உங்களைச் சோதிப்பதற்காக படைப்பிலும் வாழ்வாதாரத்திலும் ஏனைய விடயங்களிலும் உங்களில் சிலரை சிலரை விட உயர்த்தியுள்ளான், தூதரே! உம் இறைவன் தண்டனை வழங்குவதில் விரைவானவன். வரக்கூடிய ஒவ்வொன்றும் அண்மையிலேயே உள்ளன. தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களை அவன் மன்னிக்கக்கூடியவன். அவர்களின் விஷயத்தில் அவன் மிகுந்த கருணையாளனாக இருக்கின்றான்.

Al-An'aam 6:165Listen in Qur'an →

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.