Muslim99Muslim99
← Tafsir library

6. Al-An'aam

The Cattle · Meccan · 165 ayahs

سُورَةُ الأَنۡعَامِ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 51–60 of 165

51

وَأَنذِرْ بِهِ ٱلَّذِينَ يَخَافُونَ أَن يُحْشَرُوٓا۟ إِلَىٰ رَبِّهِمْ ۙ لَيْسَ لَهُم مِّن دُونِهِۦ وَلِىٌّۭ وَلَا شَفِيعٌۭ لَّعَلَّهُمْ يَتَّقُونَ

இன்னும் எவர் தங்கள் இறைவன் முன் (மறுமையில்) கொண்டு வரப்படுவது பற்றி பயப்படுகிறார்களோ அவர்களுக்கு (இவ்வேதத்தைக் கொண்டு) எச்சரிக்கை செய்யும் - (பாவத்திலிருந்து நீங்கி) அவர்கள் பயபக்தியுடையோராகும் பொருட்டு; அவனைத் தவிர அவர்களுக்குப் பாதுகாப்பளிப்பவரோ, பரிந்து பேசுபவரோ வேறு யாரும் இல்லை.

தூதரே! மறுமை நாளில் ஒன்று திரட்டப்படுவதை நினைத்து அஞ்சுபவர்களுக்கு இந்த குர்ஆனைக் கொண்டு அச்சமூட்டுவீராக. அந்நாளில் அல்லாஹ்வைத் தவிர நன்மையளிக்கும் எந்த நண்பனோ தீமையைத் தடுக்கும் எந்த சிபாரிசு செய்பவரோ இருக்கமாட்டார். இதனால் அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சலாம். இவர்கள்தாம் குர்ஆனைக் கொண்டு பயனடையக்கூடியவர்கள்.

Al-An'aam 6:51Listen in Qur'an →
52

وَلَا تَطْرُدِ ٱلَّذِينَ يَدْعُونَ رَبَّهُم بِٱلْغَدَوٰةِ وَٱلْعَشِىِّ يُرِيدُونَ وَجْهَهُۥ ۖ مَا عَلَيْكَ مِنْ حِسَابِهِم مِّن شَىْءٍۢ وَمَا مِنْ حِسَابِكَ عَلَيْهِم مِّن شَىْءٍۢ فَتَطْرُدَهُمْ فَتَكُونَ مِنَ ٱلظَّٰلِمِينَ

(நயியே!) தங்கள் இறைவனுடைய திருப் பொருத்தத்தை நாடி, எவர் காலையிலும் மாலையிலும், அவனை(ப் பிரார்த்தித்து) அழைத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்களை நீர் விரட்டி விடாதீர்; அவர்களுடைய கேள்வி கணக்குப் பற்றி உம்மீது பொறுப்பில்லை, உம்முடைய கேள்வி கணக்குப் பற்றி அவர்கள் மீதும் யாதொரு பொறுப்புமில்லை - எனவே நீர் அவர்களை விரட்டி விட்டால், நீரும் அநியாயம் செய்பவர்களில் ஒருவராகி விடுவீர்.

தூதரே! இணைவைப்பாளர்களின் தலைவர்களைக் கவர்வதற்காக காலையிலும் மாலையிலும் உளத்தூய்மையுடன் அல்லாஹ்வை மட்டுமே எப்பொழுதும் வணங்கும் ஏழை முஸ்லிம்களை உம் அவையைவிட்டு விரட்டிவிடாதீர். இந்த ஏழைகளுக்கு நீங்களோ, அவர்களுக்கு நீங்களோ எவ்விதப் பொறுப்பும் இல்லை. அவர்களது பொறுப்பு அவர்களின் இறைவனிடமே உள்ளது. நீர் அவர்களை உம் அவையிலிருந்து விரட்டினால் நீர் அல்லாஹ்வின் வரம்புகளை மீறியவரே.

Al-An'aam 6:52Listen in Qur'an →
53

وَكَذَٰلِكَ فَتَنَّا بَعْضَهُم بِبَعْضٍۢ لِّيَقُولُوٓا۟ أَهَٰٓؤُلَآءِ مَنَّ ٱللَّهُ عَلَيْهِم مِّنۢ بَيْنِنَآ ۗ أَلَيْسَ ٱللَّهُ بِأَعْلَمَ بِٱلشَّٰكِرِينَ

நமக்கிடையில் (ஏழைகளாகிய) இவர்கள் மீதா அல்லாஹ் அருள்புரிந்து விட்டான்? என்று (செல்வந்தர்கள்) கூற வேண்டுமென்பதற்காக அவர்களில் சிலரை சிலரைக்கொண்டு நாம் இவ்வாறு சோதித்தோம். நன்றி செலுத்துபவர்களை அல்லாஹ் மிக அறிந்தவனில்லையா?

இவ்வாறே நாம் சிலரை சிலரைக் கொண்டு சோதித்தோம். உலக பாக்கியங்களில் அவர்களை ஏற்றத்தாழ்வுடையோராக ஆக்கினோம். செல்வம் வழங்கப்பட்ட நிராகரிப்பாளர்கள் ஏழை முஸ்லிம்களைப் பார்த்து, “நமக்கு மத்தியில் இவர்களுக்குத்தான் அல்லாஹ் நேர்வழிகாட்டி அருள்புரிந்துள்ளானா?” இந்த ஈமான் சிறந்ததாக இருந்திருக்குமானால் இவர்கள் நம்மை முந்தியிருக்க மாட்டார்கள், ஏனெனில் நாமே எப்பொழுதும் முந்துபவர்கள்”. தன் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தக்கூடியவர்களையும் நம்பிக்கைகொள்ளாத நிராகரிப்பாளர்களையும் அல்லாஹ் அறிய மாட்டானா என்ன? நிச்சயமாக அல்லாஹ் அவர்களைக் குறித்து நன்கறிந்தவன். இதனால்தான் நன்றி செலுத்துவோருக்கு ஈமான் கொள்ள வாய்ப்பளித்து நிராகரிப்பாளர்களை கைவிட்டுவிடுகிறான். அவர்கள் நம்பிக்கைகொள்ளவே மாட்டார்கள்.

Al-An'aam 6:53Listen in Qur'an →
54

وَإِذَا جَآءَكَ ٱلَّذِينَ يُؤْمِنُونَ بِـَٔايَٰتِنَا فَقُلْ سَلَٰمٌ عَلَيْكُمْ ۖ كَتَبَ رَبُّكُمْ عَلَىٰ نَفْسِهِ ٱلرَّحْمَةَ ۖ أَنَّهُۥ مَنْ عَمِلَ مِنكُمْ سُوٓءًۢا بِجَهَٰلَةٍۢ ثُمَّ تَابَ مِنۢ بَعْدِهِۦ وَأَصْلَحَ فَأَنَّهُۥ غَفُورٌۭ رَّحِيمٌۭ

நம் வசனங்களை நம்பியவர்கள் உம்மிடம் வந்தால், "ஸலாமுன் அலைக்கும் (உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக)" என்று (நபியே!) நீர் கூறும், உங்கள் இறைவன் கிருபை செய்வதைத் தன் மீது கடமையாக்கிக் கொண்டான்; உங்களில் எவரேனும் அறியாமையினால் ஒரு தீமையைச் செய்து விட்டு அதற்குப் பின், பாவத்தை விட்டும் திரும்பி, திருத்திக் கொண்டால், நிச்சயமாக அவன் (அல்லாஹ்) மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றான்.

தூதரே! நீர் கொண்டுவந்ததன் நம்பகத் தன்மையை அறிவிக்கக்கூடிய நம் சான்றுகளை உண்மைப்படுத்தக்கூடியவர்கள் உம்மிடம் வந்தால் அவர்களைக் கண்ணியப்படுத்தும் பொருட்டு சலாம் என்னும் முகமன் கூறுவீராக. அல்லாஹ்வின் விசாலமான கருணையைக் கொண்டு அவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக. கருணை புரிவதை அல்லாஹ் தன்மீது உபரியாகக் கடமையாக்கிக் கொண்டான். யாரேனும் அறியாமல் பாவம் செய்து பின்னர் பாவமன்னிப்புக் கோரி தம் செயலைச் சீர்படுத்திக் கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் அவர்களை மன்னிக்கக்கூடியவன். தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களை அவன் மன்னிக்கக்கூடியவன். அவர்களின் விஷயத்தில் அவன் மிகுந்த கருணையாளனாக இருக்கின்றான்.

Al-An'aam 6:54Listen in Qur'an →
55

وَكَذَٰلِكَ نُفَصِّلُ ٱلْءَايَٰتِ وَلِتَسْتَبِينَ سَبِيلُ ٱلْمُجْرِمِينَ

குற்றவாளிகளின் வழி (இன்னதென்று சந்தேகமின்றித்) தெளிவாகுவதற்காக நாம் (நம்) வசனங்களை இவ்வாறு விவரிக்கின்றோம்.

மேற்கூறப்பட்டவற்றை நாம் உமக்குத் தெளிவுபடுத்தியது போல் நமது அத்தாட்சிகளையும், அசத்தியவாதிகளுக்கெதிரான நமது ஆதாரத்தையும் நாம் தெளிவுபடுத்துகிறோம். தவிர்ந்து, எச்சரிக்கையாக இருக்கும் பொருட்டு குற்றவாளிகளின் பாதையையும் வழிமுறையையும் தெளிவுபடுத்தவும் அவ்வாறு செய்கிறோம்.

Al-An'aam 6:55Listen in Qur'an →
56

قُلْ إِنِّى نُهِيتُ أَنْ أَعْبُدَ ٱلَّذِينَ تَدْعُونَ مِن دُونِ ٱللَّهِ ۚ قُل لَّآ أَتَّبِعُ أَهْوَآءَكُمْ ۙ قَدْ ضَلَلْتُ إِذًۭا وَمَآ أَنَا۠ مِنَ ٱلْمُهْتَدِينَ

"நீங்கள் அல்லாஹ்வையன்றி வேறு எவர்களை(க் கடவுளர்களாக) அழைக்கின்றீர்களோ அவர்களை வணங்கக் கூடாதென்று நான் நிச்சயமாக தடுக்கப்பட்டு உள்ளேன்" (என்று நபியே!) நீர் கூறுவீராக "உங்களுடைய மன இச்சைகளை நான் பின்பற்ற மாட்டேன்; (நான் அப்படிச் செய்தால்) நான் நிச்சயமாக வழி தவறி விடுவேன்; மேலும் நான் நேர்வழி பெற்றவர்களிலும் இருக்கமாட்டேன்" என்றும் (நபியே!) நீர் கூறுவீராக.

தூதரே! நீர் கூறுவீராக: “அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வணங்கும் மற்றவற்றை வணங்குவதை அல்லாஹ் எனக்குத் தடைசெய்துள்ளான்.” தூதரே! நீர் கூறுவீராக: “அல்லாஹ் அல்லாதவற்றை வணங்குவதில் உங்களின் மனஇச்சைகளை நான் பின்பற்ற மாட்டேன். நான் உங்களின் மனஇச்சைகளைப் பின்பற்றினால் சத்தியத்தைவிட்டும் நெறிபிறழ்ந்து விடுவேன்.” இதுதான் அல்லாஹ்விடமிருந்து வந்துள்ள ஆதாரம் இன்றி மனஇச்சையைப் பின்பற்றும் ஒவ்வொருவரது நிலை.

Al-An'aam 6:56Listen in Qur'an →
57

قُلْ إِنِّى عَلَىٰ بَيِّنَةٍۢ مِّن رَّبِّى وَكَذَّبْتُم بِهِۦ ۚ مَا عِندِى مَا تَسْتَعْجِلُونَ بِهِۦٓ ۚ إِنِ ٱلْحُكْمُ إِلَّا لِلَّهِ ۖ يَقُصُّ ٱلْحَقَّ ۖ وَهُوَ خَيْرُ ٱلْفَٰصِلِينَ

பின்னும் நீர் கூறும்; "நான் என்னுடைய ரப்பின் தெளிவான அத்தாட்சியின் மீதே இருக்கின்றேன்; ஆனால் நீங்களோ அதைப் பொய்ப்பிக்கின்றீர்கள். நீங்கள் எதற்கு அவசரப்படுகின்றீர்களோ அ(வ்வேதனையான)து என் அதிகாரத்தில் இல்லை அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்விடமேயன்றி வேறில்லை சத்தியத்தையே அவன் கூறுகின்றான், தீர்ப்பு வழங்குவோரில் அவனே மிகவும் மேலானவனாக இருக்கிறான்.

தூதரே! இந்த இணைவைப்பாளர்களிடம் நீர் கூறுவீராக: “நான் என் இறைவனிடமிருந்துள்ள தெளிவான ஆதாரத்தின் மீது இருக்கின்றேன். வெறும் மனஇச்சையின் மீதல்ல. நீங்கள் இந்த ஆதாரத்தை நிராகரித்துவிட்டீர்கள். நீங்கள் அவசரப்படுத்தும் வேதனையயோ, நீங்கள் கேட்கும் அற்புத சான்றுகளோ என் கைவசம் இல்லை. அவைகள் அல்லாஹ்விடமே உள்ளன. அனைத்து தீர்ப்பும்- நீங்கள் கேட்பது உட்பட- அல்லாஹ்விடமே உள்ளது. அவன் உண்மையைக் கூறுகிறான். அதைக் கொண்டு தீர்ப்பளிக்கிறான். அவனே தெளிவுபடுத்துவதிலும் அசத்தியத்திலிருந்து சத்தியத்தை வேறுபடுத்துவதிலும் மிகச்சிறந்தவன்.

Al-An'aam 6:57Listen in Qur'an →
58

قُل لَّوْ أَنَّ عِندِى مَا تَسْتَعْجِلُونَ بِهِۦ لَقُضِىَ ٱلْأَمْرُ بَيْنِى وَبَيْنَكُمْ ۗ وَٱللَّهُ أَعْلَمُ بِٱلظَّٰلِمِينَ

(நபியே!) நீர் கூறும்; "நீங்கள் எதற்கு அசவரப்படுகின்றீர்களோ அது என் அதிகாரத்தில் இருந்திருக்குமானால், உங்களுக்கும் எனக்குமிடையேயுள்ள விவகாரம் உடனே தீர்க்கப்பட்டேயிருக்கும்; மேலும், அல்லாஹ் அநியாயம் செய்வோரை நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்."

தூதரே! அவர்களிடம் நீர் கூறுவீராக: “நீங்கள் அவசரப்படுத்தும் வேதனை என் கட்டுப்பாட்டில் இருந்தால் நான் அதனை உங்கள் மீது இறக்கியிருப்பேன். எனக்கும் உங்களுக்குமிடைய விவகாரம் தீர்க்கப்பட்டிருக்கும். அநியாயக்காரர்களுக்கு எவ்வளவு அவகாசம் அளிக்க வேண்டும்? எப்போது அவர்களைத் தண்டிக்க வேண்டும் என்பதை அல்லாஹ்வே நன்கறிந்தவன்.

Al-An'aam 6:58Listen in Qur'an →
59

۞ وَعِندَهُۥ مَفَاتِحُ ٱلْغَيْبِ لَا يَعْلَمُهَآ إِلَّا هُوَ ۚ وَيَعْلَمُ مَا فِى ٱلْبَرِّ وَٱلْبَحْرِ ۚ وَمَا تَسْقُطُ مِن وَرَقَةٍ إِلَّا يَعْلَمُهَا وَلَا حَبَّةٍۢ فِى ظُلُمَٰتِ ٱلْأَرْضِ وَلَا رَطْبٍۢ وَلَا يَابِسٍ إِلَّا فِى كِتَٰبٍۢ مُّبِينٍۢ

அவனிடமே மறைவானவற்றின் திறவுகோல்கள் இருக்கின்றன. அவற்றை அவனன்றி எவரும் அறியார். மேலும் கரையிலும் கடலிலும் உள்ளவற்றையெல்லாம் அவன் அறிவான்; அவன் அறியாமல் ஓர் இலையும் உதிர்வதில்லை. பூமியின் (ஆழத்தில் அடர்ந்த) இருள்களில் கிடக்கும் சிறு வித்தும், பசுமையானதும், உலர்ந்ததும் (எந்தப் பொருளும்) தெளிவான (அவனுடைய) பதிவேட்டில் இல்லாமலில்லை.

மறைவானவற்றின் பொக்கிஷங்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர வேறு யாரும் அவற்றை அறியமாட்டார்கள். கடலிலும் தரையிலுமுள்ள உயிரினங்கள், தாவரங்கள், உயிரற்றவைகள் என ஒவ்வொரு படைப்பையும் அவன் அறிந்தவன். எந்த இடத்தில் ஒரு இலை விழுந்தாலும், பூமியில் மறைந்துள்ள எந்த விதையாக இருந்தாலும், காய்ந்தவை, பசுமையானவை என அனைத்தும் லவ்ஹுல் மஹ்ஃபூல் என்னும் தெளிவான ஏட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Al-An'aam 6:59Listen in Qur'an →
60

وَهُوَ ٱلَّذِى يَتَوَفَّىٰكُم بِٱلَّيْلِ وَيَعْلَمُ مَا جَرَحْتُم بِٱلنَّهَارِ ثُمَّ يَبْعَثُكُمْ فِيهِ لِيُقْضَىٰٓ أَجَلٌۭ مُّسَمًّۭى ۖ ثُمَّ إِلَيْهِ مَرْجِعُكُمْ ثُمَّ يُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ

அவன் தான் இரவில் உங்களை மரிக்கச் செய்கிறான்; இன்னும் நீங்கள் பகலில் செய்தவற்றையெல்லாம் அறிகிறான்; மீண்டும் உங்களைக் குறிப்பிட்டதவணை முடிப்பதற்காக பகலில் எழுப்புகிறான்; பின்னர் உங்களுடைய (இறுதி) மீட்சி அவனிடமே இருக்கிறது அப்பால் நீங்கள் (இவ்வுலகில்) செய்து கொண்டிருந்ததை அவன் உங்களுக்கு அறிவிப்பான்.

நீங்கள் தூங்கும் போது அல்லாஹ்வே உங்களின் ஆன்மாக்களை தற்காலிகமாகக் கைப்பற்றுகிறான். நீங்கள் பகலில் சுறுசுறுப்பாக இருக்கும்போது நீங்கள் சம்பாதிப்பவற்றை அவனே அறிவான். தூக்கத்தில் உங்கள் ஆன்மாக்களைக் கைப்பற்றிய பிறகு பகலில் நீங்கள் வேலை செய்வதற்காக உங்களை எழுப்புகிறான். அல்லாஹ்விடம் உங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தவணை நிறைவடையும் வரை இவ்வாறு நிகழ்ந்துகொண்டே இருக்கும். பின்னர் மறுமைநாளில் அவன் பக்கமே நீங்கள் எழுப்பப்பட்டு திரும்பி வர வேண்டும். அப்போது இவ்வுலக வாழ்வில் நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை அவன் அறிவிப்பான். அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.

Al-An'aam 6:60Listen in Qur'an →

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.