Muslim99Muslim99
← Tafsir library

6. Al-An'aam

The Cattle · Meccan · 165 ayahs

سُورَةُ الأَنۡعَامِ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 41–50 of 165

41

بَلْ إِيَّاهُ تَدْعُونَ فَيَكْشِفُ مَا تَدْعُونَ إِلَيْهِ إِن شَآءَ وَتَنسَوْنَ مَا تُشْرِكُونَ

"அப்படியல்ல! - அவனையே நீங்கள் அழைப்பீர்கள்; அப்போது அவன் எதற்காக அவனை அழைத்தீர்களோ அ(த் துன்பத்)தை தான் நாடினால் நீக்கிவிடுவான், இன்னும் (அவனுடன்) இணை வைத்திருந்தவற்றை நீங்கள் மறந்து விடுவீர்கள்.

உண்மையில் உங்களைப் படைத்த அல்லாஹ்வையே நீங்கள் அழைப்பீர்கள். அப்பொழுது அவன் நாடினால் உங்களது துன்பத்தைப் போக்கி, தீங்கினை அகற்றுவான். அவனே இதற்குப் பொறுப்பாளன், ஆற்றல்மிக்கவன். அல்லாஹ்வுடன் இணையாக்கிய உங்களின் தெய்வங்களை - அவற்றால் உங்களுக்குப் பலனோ, தீங்கோ அளிக்கமுடியாது என்பதை நீங்கள் அறிந்திருப்பதால் - விட்டுவிடுவீர்கள்.

Al-An'aam 6:41Listen in Qur'an →
42

وَلَقَدْ أَرْسَلْنَآ إِلَىٰٓ أُمَمٍۢ مِّن قَبْلِكَ فَأَخَذْنَٰهُم بِٱلْبَأْسَآءِ وَٱلضَّرَّآءِ لَعَلَّهُمْ يَتَضَرَّعُونَ

(நபியே!) உமக்கு முன்னர் இருந்த சமூகத்தாருக்கும் நாம் (நம்) தூதர்களை அனுப்பினோம்; அச்சமூகத்தாரை நோயைக் கொண்டும் வறுமையைக் கொண்டும் பிடித்தோம் - அவர்கள் பணிந்து வரும் பொருட்டு.

தூதரே! உமக்கு முந்தைய சமூகங்களிலும் தூதர்களை அனுப்பினோம். அந்த மக்கள் தூதர்களை நிராகரித்தார்கள். அவர்கள் கொண்டுவந்ததைப் புறக்கணித்தார்கள். அவர்கள் தங்கள் இறைவனுக்குப் பணிய வேண்டும் என்பதற்காக வறுமை, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நோய் போன்ற சோதனைகளைக் கொண்டு நாம் அவர்களைச் தண்டித்தோம்.

Al-An'aam 6:42Listen in Qur'an →
43

فَلَوْلَآ إِذْ جَآءَهُم بَأْسُنَا تَضَرَّعُوا۟ وَلَٰكِن قَسَتْ قُلُوبُهُمْ وَزَيَّنَ لَهُمُ ٱلشَّيْطَٰنُ مَا كَانُوا۟ يَعْمَلُونَ

நம்மிடமிருந்து அவர்களுக்கு வேதனை வந்தபோது அவர்கள் பணிந்திருக்க வேண்டாமா? அதற்கு மாறாக அவர்களுடைய இருதயங்கள் இறுகிவிட்டன அவர்கள் செய்து கொண்டிருந்ததையே, ஷைத்தான் அவர்களுக்கு அழகாகக் காட்டிவிட்டான்.

அவர்களுக்கு நமது சோதனை வந்தபோது, அது நீங்கும் பொருட்டு, அல்லாஹ்வுக்கு அவர்கள் கட்டுப்பட்டு அடிபணிந்திருந்தால் அவர்கள் மீது நாம் கருணை காட்டியிருப்போம். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. மாறாக அறிவுரை பெறாதவாறு அவர்களின் உள்ளங்கள் இறுகிவிட்டன. அவர்கள் செய்த நிராகரிப்பான, பாவமான செயல்களை ஷைத்தான் அவர்களுக்கு அலங்கரித்துக் காட்டினான். அதனால் அவர்கள் தங்களின் பாவங்களில் நிலைத்திருந்தார்கள்.

Al-An'aam 6:43Listen in Qur'an →
44

فَلَمَّا نَسُوا۟ مَا ذُكِّرُوا۟ بِهِۦ فَتَحْنَا عَلَيْهِمْ أَبْوَٰبَ كُلِّ شَىْءٍ حَتَّىٰٓ إِذَا فَرِحُوا۟ بِمَآ أُوتُوٓا۟ أَخَذْنَٰهُم بَغْتَةًۭ فَإِذَا هُم مُّبْلِسُونَ

அவர்களுக்கு நினைவூட்டப்பட்ட நற்போதனைகளை அவர்கள் மறந்துவிட்ட போது, அவர்களுக்கு (முதலில்) எல்லாப் பொருட்களின் வாயில்களையும் நாம் திறந்து விட்டோம் - பின்னர், அவர்களுக்கு கொடுக்கப்பட்டதைக் கொண்டு அவர்கள் மகிழ்ச்சியடைந்து கொண்டிருந்த வேளை (நம் வேதனையைக் கொண்டு) அவர்களை திடீரெனப் பிடித்துக் கொண்டோம்; அப்போது அவர்கள் நம்பிக்கை இழந்தவர்களாக ஆகிவிட்டனர்.

கடுமையான வறுமை மற்றும் நோய் மூலம் அவர்கள் அறுவுறுத்தப்பட்டதை அவர்கள் விட்டு, அல்லாஹ்வின் கட்டளையின்படி செயல்படாமல் இருந்தபோது, கொஞ்சம்கொஞ்சமாக வசதியின் வாயில்களை நாம் அவர்களுக்குத் திறந்துவிட்டோம்; ஏழ்மையின் பின் செல்வத்தையும் நோயின் பின் ஆரோக்கியத்தையும் அவர்களுக்கு வழங்கினோம். இதனால் அவர்களுக்கு கர்வம் ஏற்பட்டபோது, தமக்கு வழங்கப்பட்ட வசதிகளினால் சந்தோசம் அவர்களை ஆட்கொண்ட போது திடீரென நம்முடைய வேதனை அவர்களை அடைந்தது. அதனால் தடுமாற்றத்திலும் விரக்தியிலும் சிக்கிக்கொண்டனர்.

Al-An'aam 6:44Listen in Qur'an →
45

فَقُطِعَ دَابِرُ ٱلْقَوْمِ ٱلَّذِينَ ظَلَمُوا۟ ۚ وَٱلْحَمْدُ لِلَّهِ رَبِّ ٱلْعَٰلَمِينَ

எனவே, அக்கிரமம் செய்து கொண்டிருந்த அக்கூட்டத்தார் வேரறுக்கப்பட்டனர்; "எல்லாப் புகழும் உலகங்கள் யாவற்றுக்கும் இரட்சகனான அல்லாஹ்வுக்கே ஆகும்."

நிராகரிப்பாளர்கள் அடியோடு அழிக்கப்பட்டார்கள். அல்லாஹ் தன் தூதர்களுக்கு உதவிசெய்தான். தனது எதிரிகளை அழித்து தனது நேசர்களுக்கு உதவி புரிந்ததற்காக, நன்றியும் புகழும் அகிலங்களைப் படைத்துப் பராமரிக்கும் அல்லாஹ்வுக்கே உரியதாகும்.

Al-An'aam 6:45Listen in Qur'an →
46

قُلْ أَرَءَيْتُمْ إِنْ أَخَذَ ٱللَّهُ سَمْعَكُمْ وَأَبْصَٰرَكُمْ وَخَتَمَ عَلَىٰ قُلُوبِكُم مَّنْ إِلَٰهٌ غَيْرُ ٱللَّهِ يَأْتِيكُم بِهِ ۗ ٱنظُرْ كَيْفَ نُصَرِّفُ ٱلْءَايَٰتِ ثُمَّ هُمْ يَصْدِفُونَ

"அல்லாஹ் உங்களுடைய செவிப்புலனையும், பார்க்கும் சக்தியையும் எடுத்துவிட்டு, உங்கள் இருதயங்களின் மீது முத்திரையிட்டு விடுவானானால் - அதை உங்களுக்கு அல்லாஹ்வையன்றி வேறு எந்த இறைவன் கொடுப்பான்? என்று நீங்கள் (சிந்தித்துப்) பார்த்தீர்களா?" என்று (நபியே!) நீர் கேட்பீராக, (நம்) அத்தாட்சிகளை எவ்வாறு விவரிக்கின்றோம் என்பதை (நபியே!) நீர் கவனிப்பீர்ராக (இவ்வாறு இருந்தும); பின்னரும் அவர்கள் புறக்கணித்தே வருகின்றனர்.

தூதரே! இந்த இணைவைப்பாளர்களிடம் நீர் கேட்பீராக: “அல்லாஹ் உங்களின் கேட்கும் திறனைப் பறித்து செவிடனாகவும், பார்வையைப் பறித்து குருடனாகவும், எதையும் புரிந்துகொள்ள முடியாதவாறு உங்கள் உள்ளங்களின் மீது முத்திரையிட்டும் விட்டால், அல்லாஹ்வைத் தவிர நீங்கள் இழந்தவற்றைத் திருப்பித் தரும் இறைவன் யார்?” தூதரே! நாம் எவ்வாறு விதவிதமாக அவர்களுக்கு ஆதாரங்களைத் தெளிவுபடுத்துகிறோம் என்பதைக் கவனிப்பீராக! பின்னரும் அவர்கள் அவற்றைப் புறக்கணிக்கிறார்கள்.

Al-An'aam 6:46Listen in Qur'an →
47

قُلْ أَرَءَيْتَكُمْ إِنْ أَتَىٰكُمْ عَذَابُ ٱللَّهِ بَغْتَةً أَوْ جَهْرَةً هَلْ يُهْلَكُ إِلَّا ٱلْقَوْمُ ٱلظَّٰلِمُونَ

"திடீரென்றோ, அல்லது முன் எச்சரிக்கையாகவோ அல்லாஹ்வின் வேதனை உங்களிடம் வந்து விட்டால் (என்ன நிலை ஏற்படும் என்பதை நீங்கள் சிந்தித்தீர்களா?) அச்சமயம் அக்கிரமக்காரர்கள் தவிர வேறு யாரும் அழிக்கப்படுவார்களா? என்று (நபியே!) நீர் கேளும்.

தூதரே! அவர்களிடம் கேட்பீராக: “நீங்கள் உணராமலேயே திடீரென அல்லாஹ்வின் வேதனை உங்களை அடைந்துவிட்டால் அல்லது வெளிப்படையாக அது உங்களிடம் வந்துவிட்டால், அல்லாஹ்வை நிராகரித்து அவனுடைய தூதரைப் பொய்யர் என்று கூறிய அநியாயக்காரக்காரர்களைத் தவிர வேறு யார்தான் அழிவார்கள் என்பதை எனக்கு அறிவியுங்கள்.”

Al-An'aam 6:47Listen in Qur'an →
48

وَمَا نُرْسِلُ ٱلْمُرْسَلِينَ إِلَّا مُبَشِّرِينَ وَمُنذِرِينَ ۖ فَمَنْ ءَامَنَ وَأَصْلَحَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ

(நன்மையைக் கொண்டு) நன்மாராயம் கூறுவோராகவும், (தீமையை விட்டு) எச்சரிக்கை செய்வோராகவுமேயன்றி நாம் தூதர்களை அனுப்பவில்லை எனவே எவர் நம்பி, சீர்திருந்தி நடந்தார்களோ, அவர்களுக்கு அச்சமுமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.

நாம் தூதர்களை அனுப்பவதெல்லாம் நம்பிக்கைகொண்டு கீழ்ப்படிந்தவர்களுக்கு என்றும் முடிவுறாத நிலையான அருட்கொடைகள் உண்டு என்று நற்செய்தி கூறுவதற்காகவும் நிராகரிப்பாளர்களுக்கும் பாவிகளுக்கும் நம்முடைய கடுமையான வேதனையைக் கொண்டு எச்சரிக்கை செய்வதற்காகவும்தான். தூதர்கள் மீது நம்பிக்கைகொண்டு தம் செயலைச் சீர்படுத்திக் கொண்டவர்கள் மறுமைநாளில் நிகழக்கூடியதை எண்ணி அச்சம் கொள்ள மாட்டார்கள். அவர்கள் இழந்த உலக பாக்கியங்களை எண்ணி கவலைகொள்ளவோ கைசேப்படவோ மாட்டார்கள்.

Al-An'aam 6:48Listen in Qur'an →
49

وَٱلَّذِينَ كَذَّبُوا۟ بِـَٔايَٰتِنَا يَمَسُّهُمُ ٱلْعَذَابُ بِمَا كَانُوا۟ يَفْسُقُونَ

ஆனால் எவர் நம் திருவசனங்களைப் பொய்ப்பிக்கிறார்களோ அவர்களை அவர்கள் செய்து வரும் பாவங்களின் காரணமாக வேதனைப் பிடித்துக் கொள்ளும்.

நம்முடைய சான்றுகளை பொய்யெனக் கூறி அவர்கள் அல்லாஹ்வுக்குக் கீழ்படிய மறுத்ததனால் அவர்களை வேதனை பிடித்துக் கொள்ளும்.

Al-An'aam 6:49Listen in Qur'an →
50

قُل لَّآ أَقُولُ لَكُمْ عِندِى خَزَآئِنُ ٱللَّهِ وَلَآ أَعْلَمُ ٱلْغَيْبَ وَلَآ أَقُولُ لَكُمْ إِنِّى مَلَكٌ ۖ إِنْ أَتَّبِعُ إِلَّا مَا يُوحَىٰٓ إِلَىَّ ۚ قُلْ هَلْ يَسْتَوِى ٱلْأَعْمَىٰ وَٱلْبَصِيرُ ۚ أَفَلَا تَتَفَكَّرُونَ

(நபியே!) நீர் கூறும்; "என்னிடத்தில் அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் இருக்கின்றன என்று நான் உங்களிடம் கூறவில்லை. மறைவானவற்றை நான் அறியமாட்டேன்; நிச்சயமாக நான் ஒரு மலக்காக இருக்கின்றேன் என்றும் நான் உங்களிடம் சொல்லவில்லை எனக்கு (வஹீயாக) அறிவிக்கப்பட்டதைத் தவிர (வேறு எதையும்) நான் பின்பற்றவில்லை." இன்னும் நீர் கூறும்; "குருடனும் பார்வையுடைவனும் சமமாவாரா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா?"

தூதரே! இந்த இணைவைப்பாளர்களிடம் கூறுவீராக: “நான் விரும்பியபடி செலவு செய்யும் விதத்தில் வாழ்வாதாரத்தின் அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் என்னிடம் இருப்பதாக நான் உங்களிடம் கூற மாட்டேன். அல்லாஹ் எனக்கு அறிவித்த வஹியைத் தவிர மறைவானவற்றை நான் அறிவேன் என்றோ நான் வானவர் என்றோ கூறமாட்டேன். நான் அல்லாஹ்வின் தூதராவேன். அவன் எனக்கு வஹியாக அறிவிப்பதையே பின்பற்றுகிறேன். என்னிடம் இல்லாதவற்றை இருப்பதாக வாதிடமாட்டேன்.” தூதரே! நீர் அவர்களிடம் கேட்பீராக: “சத்தியத்தைக் கண்டுகொள்ளாத நிராகரிப்பாளனும் சத்தியத்தைக் கண்டுகொண்ட நம்பிக்கையாளனும் சமமாவார்களா? இணைவைப்பாளர்களே! உங்களைச் சுற்றியிருக்கும் சான்றுகளை சிந்தித்துப் பார்க்க மாட்டீர்களா?

Al-An'aam 6:50Listen in Qur'an →

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.