Muslim99Muslim99
← Tafsir library

6. Al-An'aam

The Cattle · Meccan · 165 ayahs

سُورَةُ الأَنۡعَامِ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 1–10 of 165

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

1

ٱلْحَمْدُ لِلَّهِ ٱلَّذِى خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ وَجَعَلَ ٱلظُّلُمَٰتِ وَٱلنُّورَ ۖ ثُمَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ بِرَبِّهِمْ يَعْدِلُونَ

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. அவனே வானங்களையும், பூமியையும் படைத்தான்;, இருள்களையும், ஒளியையும் அவனே உண்டாக்கினான்;, அப்படியிருந்தும் நிராகரிப்பவர்கள் தம் இறைவனுக்கு(ப் பிற பொருட்களைச்) சமமாக்குகின்றனர்.

முழுமையான பரிபூரணத்தைக் கொண்டு வர்ணிப்பதும், உயர் சிறப்புக்களைக் கொண்டு அன்புடன் கலந்த புகழ்ச்சியும் அல்லாஹ்வுக்கே உரித்தானது. அவன்தான் வானங்களையும் பூமியையும் முன்மாதிரியின்றி படைத்தான். இரவையும் பகலையும் அடுத்தடுத்து வரக்கூடியதாக படைத்துள்ளான். இரவை இருள் மிக்கதாகவும் பகலை வெளிச்சம்மிக்தாகவும் அவன் ஆக்கியுள்ளான். அவ்வாறிருந்தும் அல்லாஹ்வை நிராகரிப்போர், மற்றவர்களை அவனுக்கு நிகராகவும் இணையாகவும் ஆக்குகிறார்கள்.

2

هُوَ ٱلَّذِى خَلَقَكُم مِّن طِينٍۢ ثُمَّ قَضَىٰٓ أَجَلًۭا ۖ وَأَجَلٌۭ مُّسَمًّى عِندَهُۥ ۖ ثُمَّ أَنتُمْ تَمْتَرُونَ

அவன்தான், உங்களைக் களிமண்ணிலிருந்து படைத்துப் பின்னர் (உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட) தவணையையும் ஏற்படுத்தியுள்ளான்;, இன்னும், (உங்களைக் கேள்விகணக்கிற்கு எழுப்புவதற்காகக்) குறிக்கப்பட்ட தவணையும் அவனிடமே உள்ளது. அப்படியிருந்தும் நீங்கள் சந்தேகப்படுகிறீர்கள்.

மனிதர்களே! அவன்தான் - உங்களின் தந்தை ஆதமைப் களி மண்ணிலிருந்து படைத்தபோது - உங்களை மண்ணிலிருந்து படைத்தான். பின்னர் நீங்கள் இவ்வுலகில் வாழ்வதற்கான தவணையை நிர்ணயித்தான். மறுமைநாளில் உங்களை மீண்டும் எழுப்புவதற்காக -அவன் மாத்திரம் அறிந்த- வேறொரு தவணையையும் நிர்ணயித்துள்ளான். பின்னரும் நீங்கள், மறுமை நாளில் மீட்டி எழுப்பும் அவனது வல்லமையைக் குறித்து சந்தேகம் கொள்கிறீர்கள்.

3

وَهُوَ ٱللَّهُ فِى ٱلسَّمَٰوَٰتِ وَفِى ٱلْأَرْضِ ۖ يَعْلَمُ سِرَّكُمْ وَجَهْرَكُمْ وَيَعْلَمُ مَا تَكْسِبُونَ

இன்னும் வானங்களிலும் பூமியிலும் அவனே (ஏக நாயனாகிய) அல்லாஹ்; உங்கள் இரகசியத்தையும், உங்கள் பரகசியத்தையும் அவன் அறிவான்; இன்னும் நீங்கள் (நன்மையோ தீமையோ) சம்பாதிப்பதை எல்லாம் அவன் அறிவான்.

வானங்களிலும் பூமியிலும் அவன் மட்டுமே வணக்கத்திற்குத் தகுதியான இறைவன். எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. நீங்கள் மறைத்து வைத்திருக்கும், வெளிப்படுத்தும் எண்ணங்களையும் சொல்களையும் செயல்களையும் அவன் அறிவான். அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.

4

وَمَا تَأْتِيهِم مِّنْ ءَايَةٍۢ مِّنْ ءَايَٰتِ رَبِّهِمْ إِلَّا كَانُوا۟ عَنْهَا مُعْرِضِينَ

(அவ்வாறு இருந்தும்,) தங்கள் இறைவனுடைய திருவசனங்களிலிருந்து எந்த வசனம் அவர்களிடம் வந்தபோதிலும் அதை அவர்கள் புறக்கணிக்கவே செய்கின்றனர்.

இணைவைப்பாளர்களிடம் - அவர்களின் இறைவனிடமிருந்து - எந்தவொரு சான்றையும், அற்புதத்தையும் நீர் கொண்டுவந்தாலும் அவர்கள் அதனைப் பொருட்படுத்தாதவர்களாக புறக்கணித்து விடுகிறார்கள். அல்லாஹ் ஒருவனே என்பதை அறிவிக்கக்கூடிய, தூதர்களை உண்மைப்படுத்தக்கூடிய தெளிவான சான்றுகளும் ஆதாரங்களும் அவர்களிடம் வந்தே இருக்கின்றன. இருந்தும் அவர்கள் அலட்சியமாக அதனைப் புறக்கணித்து விட்டனர்.

5

فَقَدْ كَذَّبُوا۟ بِٱلْحَقِّ لَمَّا جَآءَهُمْ ۖ فَسَوْفَ يَأْتِيهِمْ أَنۢبَٰٓؤُا۟ مَا كَانُوا۟ بِهِۦ يَسْتَهْزِءُونَ

எனவே, சத்திய (வேத)ம் அவர்களிடம் வந்திருக்கும் போதும் அதனைப் பொய்ப்பிக்கின்றனர்; ஆனால், எந்த விஷயங்களைப் (பொய்யென்று) பரிகசித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவை அவர்களுக்கு வந்தே தீரும்.

அவர்கள் இந்த தெளிவான சான்றுகளையும் ஆதாரங்களையும் புறக்கணித்தால் - ஏன் இவற்றை விட தெளிவான ஆதாரத்தையே அவர்கள் புறக்கணித்துவிட்டார்களே! முஹம்மது கொண்டுவந்த குர்ஆனை பொய்பித்தார்கள். மறுமைநாளில் வேதனையை அவர்கள் காணும் போது அவர்கள் பரிகாசம் செய்த அவர் கொண்டுவந்ததுதான் சத்தியம் என்பதைக் கண்டுகொள்வார்கள்.

6

أَلَمْ يَرَوْا۟ كَمْ أَهْلَكْنَا مِن قَبْلِهِم مِّن قَرْنٍۢ مَّكَّنَّٰهُمْ فِى ٱلْأَرْضِ مَا لَمْ نُمَكِّن لَّكُمْ وَأَرْسَلْنَا ٱلسَّمَآءَ عَلَيْهِم مِّدْرَارًۭا وَجَعَلْنَا ٱلْأَنْهَٰرَ تَجْرِى مِن تَحْتِهِمْ فَأَهْلَكْنَٰهُم بِذُنُوبِهِمْ وَأَنشَأْنَا مِنۢ بَعْدِهِمْ قَرْنًا ءَاخَرِينَ

அவர்களுக்கு முன்னர் நாம் எத்தனையோ தலைமுறையினரை அழித்திருக்கிறோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? பூமியில் நாம் உங்களுக்கு செய்து தராத வசதிகளையெல்லாம் அவர்களுக்குச் செய்து கொடுத்திருந்தோம்; அவர்கள் மீது நாம் வானம் தாரை தரையாக மழை பெய்யுமாறு செய்து, அவர்களுக்குக் கீழே ஆறுகள் செழித்தோடும்படிச் செய்தோம்; பிறகு அவர்களின் பாவங்களின் காரணத்தால் அவர்களை அழித்து விட்டோம்; அவர்களுக்குப் பின் வேறு தலைமுறைகளை உண்டாக்கினோம்.

இந்த நிராகரிப்பாளர்கள் அநியாயக்கார சமூகங்களை அழிப்பதில் அல்லாஹ்வின் வழிமுறையை அறிந்துகொள்ளவில்லையா என்ன? அவர்களுக்கு முன்னர் அவன் பூமியில் எத்தனையோ சமூகங்களை அவன் அழித்துள்ளான். இந்த நிராகரிப்பாளர்களுக்கு வழங்காத பூமியில் நிலைப்பதற்கான ஆற்றல்களை அவர்களுக்கு அவன் வழங்கியிருந்தான். அவர்கள்மீது தொடர் மழையைப் பொழியச் செய்தான். அவர்களின் வசிப்பிடங்களுக்குக் கீழே ஆறுகளை ஓடச் செய்தான். ஆயினும் அவர்கள் அல்லாஹ்வுக்கு மாறுசெய்தார்கள். அவர்கள் செய்த பாவங்களின் காரணமாக அவன் அவர்களை அழித்துவிட்டான். அவர்களுக்குப் பின் வேறு சமூகங்களை உருவாக்கினான்.

7

وَلَوْ نَزَّلْنَا عَلَيْكَ كِتَٰبًۭا فِى قِرْطَاسٍۢ فَلَمَسُوهُ بِأَيْدِيهِمْ لَقَالَ ٱلَّذِينَ كَفَرُوٓا۟ إِنْ هَٰذَآ إِلَّا سِحْرٌۭ مُّبِينٌۭ

காகிதத்தில் (எழுதப்பட்ட) ஒரு வேதத்தையே நாம் உம் மீது இறக்கி வைத்து, அதனை அவர்கள் தம் கைகளால் தொட்டுப் பார்த்தபோதிலும், "இது பகிரங்கமான சூனியத்தைத்தவிர வேறில்லை என்று அந்நிராகரிப்போர் நிச்சயமாக சொல்வார்கள்.

தூதரே! காகிதங்களில் எழுதப்பட்ட புத்தகத்தை நாம் உம்மீது இறக்கி அதனை அவர்கள் கண்ணால் பார்த்து கைகளால் தொட்டு உறுதிப்படுத்திக் கொண்டாலும் கூட, பிடிவாதத்தினாலும் கர்வத்தினாலும் அவர்கள் அதனை நம்பிக்கைக் கொள்ளமாட்டார்கள். மாறாக “நீர் கொண்டுவந்தது தெளிவான சூனியமே. எனவே நாங்கள் உம்மீது நம்பிக்கை கொள்ளமாட்டோம்” என்றுதான் அவர்கள் கூறுவார்கள்.

8

وَقَالُوا۟ لَوْلَآ أُنزِلَ عَلَيْهِ مَلَكٌۭ ۖ وَلَوْ أَنزَلْنَا مَلَكًۭا لَّقُضِىَ ٱلْأَمْرُ ثُمَّ لَا يُنظَرُونَ

(இவர் உண்மையான தூதர் என்று சாட்சி கூற) இவர் மீது ஒரு மலக்கு இறக்கப்பட வேண்டாமா? என அவர்கள் கூறுகின்றனர்; (அவ்வாறு) நாம் ஒரு மலக்கை இறக்கி வைப்போமானால் (அவர்களுடைய) காரியம் முடிக்கப்பட்டிருக்கும்; பிறகு அவர்களுக்குச் சிறிதும் அவகாசம் கொடுக்கப்படமாட்டாது.

இந்த நிராகரிப்பாளர்கள் கூறுகிறார்கள்: “அல்லாஹ் முஹம்மதுடன் ஒரு வானவரை அனுப்பி அவர், இவர் தூதர்தான் என்று எங்களிடம் கூறினால் நாங்கள் நம்பிக்கைகொள்வோம்”. அவர்கள் கூறியவாறு நாம் ஒரு வானவரை அனுப்பி, அவர்கள் நம்பிக்கைகொள்ளவில்லையெனில் அவர்களை அழித்துவிடுவோம். வானவர் வந்துவிட்டால் பாவமன்னிப்புக்கான அவகாசம் தரப்படாது.

9

وَلَوْ جَعَلْنَٰهُ مَلَكًۭا لَّجَعَلْنَٰهُ رَجُلًۭا وَلَلَبَسْنَا عَلَيْهِم مَّا يَلْبِسُونَ

நம் தூதரை ஒரு மலக்காகவே அனுப்புவதாயினும் (அவர்கள் மலக்கை காணுஞ் சக்தியில்லாதவர்கள்; ஆதலால்) அவரையும் நாம் மனித உருவத்திலேயே ஆக்கி(அனுப்பி)யிருப்போம், (அப்பொழுதும்,) அந்த இடத்தில் அவர்கள் (இப்பொழுது) குழம்பிக் கொள்வது போல் (அப்பொழுதும்) நாம் குழப்பத்தை ஏற்படுத்தியிருப்போம்.

நாம் வானவரை அவர்களுக்குத் தூதராக அனுப்பியிருந்தாலும் அவரையும் மனித உருவில்தான் ஆக்கியிருப்போம். ஏனெனில் அப்பொழுதுதான் அவர் கூறுவதைச் செவிமடுத்து அவரிடமிருந்து கற்றுக்கொள்ள முடியும். அல்லாஹ் வானவரைப் படைத்த இயல்பான தோற்றத்தில் இருக்கும் போது அதற்கு அவர்கள் சக்திபெறமாட்டார்கள். நாம் அவரை மனித உருவில் அனுப்பியிருந்தால் அவர்கள் சந்தேகத்தில் வீழ்ந்திருப்பார்கள்.

10

وَلَقَدِ ٱسْتُهْزِئَ بِرُسُلٍۢ مِّن قَبْلِكَ فَحَاقَ بِٱلَّذِينَ سَخِرُوا۟ مِنْهُم مَّا كَانُوا۟ بِهِۦ يَسْتَهْزِءُونَ

(நபியே!) உமக்கு முன்னர் வந்த தூதர்களும் நிச்சயமாக (இவ்வாறே) பரிகசிக்கப்பட்டனர்; முடிவில் அவர்கள் எதைப் பரிகசித்துக் கொண்டிருந்தனரோ அதுவே பரிகசித்தவர்களை வந்து சூழ்ந்துகொண்டது.

உம்முடன் ஒரு வானவரை இறக்குமாறு கூறி அவர்கள் உம்மை பரிகாசம் செய்தால் - உமக்கு முன்னரும் பல சமூகங்கள் தமது தூதர்களைப் பரிகசித்துள்ளனர். அவர்கள் எச்சரிக்கை செய்யப்படும் வேளை அவர்கள் மறுத்துப் பரிகாசம் செய்துகொண்டிருந்த வேதனை அவர்களைச் சூழ்ந்துகொண்டது.

Al-An'aam 6:10Listen in Qur'an →

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.