قَدْ خَسِرَ ٱلَّذِينَ كَذَّبُوا۟ بِلِقَآءِ ٱللَّهِ ۖ حَتَّىٰٓ إِذَا جَآءَتْهُمُ ٱلسَّاعَةُ بَغْتَةًۭ قَالُوا۟ يَٰحَسْرَتَنَا عَلَىٰ مَا فَرَّطْنَا فِيهَا وَهُمْ يَحْمِلُونَ أَوْزَارَهُمْ عَلَىٰ ظُهُورِهِمْ ۚ أَلَا سَآءَ مَا يَزِرُونَ
ஆகவே, (மறுமை நாளில்) அல்லாஹ்வைச் சந்திப்பதைப் பொய் என்று கூறியவர்கள் நிச்சயமாக நஷ்டம் அடைந்தவர்களாகி விட்டனர்; அவர்களிடம் மறுமை நாள் திடீரென வரும்பொழுது உலகில் நாங்கள் அலட்சியமாய் இருந்ததற்காக எங்களுக்கு ஏற்பட்ட கை சேதமே என்று கூறுவார்கள். மேலும் அவர்கள் தங்கள் (பாவச்) சுமைகளை தங்கள் முதுகுகளின் மேல் சுமப்பார்கள்; அவர்கள் சுமப்பது மிகவும் கெட்டது என்பதை அறிந்துக் கொள்ளுங்கள்.
மறுமை நாளில் மீண்டும் எழுப்பப்படுவதை மறுத்து, அல்லாஹ்வுக்கு முன்னால் நிற்பதை சாத்தியமற்றது எனக் கருதியவர்கள் இழப்படைந்துவிட்டார்கள். முன்னறிவித்தலின்றி திடீரென்று மறுமைநாள் அவர்களிடம் வந்துவிடும் போது பெரும் கைசேதப்பட்டுக் கூறுவார்கள், “எங்களுக்கு ஏற்பட்ட நஷ்டமே, நாங்கள் அல்லாஹ்வை நிராகரித்து, மறுமை நாளுக்காக எந்த முன்னேற்பாடும் செய்யாது அல்லாஹ்வின் விடயத்தில் பொடுபோக்காக இருந்துவிட்டோமே!.” அவர்கள் தங்களின் பாவங்களை முதுகுகளில் சுமப்பார்கள். அவர்கள் சுமக்கும் பாவங்கள் எவ்வளவு மோசமானது! என்பதை அறிந்து கொள்ளுங்கள்.