Muslim99Muslim99
← Tafsir library

6. Al-An'aam

The Cattle · Meccan · 165 ayahs

سُورَةُ الأَنۡعَامِ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 11–20 of 165

11

قُلْ سِيرُوا۟ فِى ٱلْأَرْضِ ثُمَّ ٱنظُرُوا۟ كَيْفَ كَانَ عَٰقِبَةُ ٱلْمُكَذِّبِينَ

"பூமியில் நீங்கள் சுற்றி வந்து, (அல்லாஹ்வின் வசனங்களைப்) பொய்ப்பித்தவர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை நீங்கள் கவனித்துப் பாருங்கள்" என்று (நபியே!) நீர் கூறுவீராக.

தூதரே! பரிகாசம் செய்யும் இந்த நிராகரிப்பாளர்களிடம் கூறுவீராக: “பூமியில் பயணம் செய்யுங்கள். அல்லாஹ்வின் தூதர்களை மறுத்தவர்களின் கதி என்னவாயிற்று என்பதை சிந்தித்துப் பாருங்கள். அவர்கள் பலத்தையும் பாதுகாப்பையும் பெற்றிருந்தும் அல்லாஹ்வின் வேதனையில் சிக்கிக் கொண்டார்கள்.

Al-An'aam 6:11Listen in Qur'an →
12

قُل لِّمَن مَّا فِى ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۖ قُل لِّلَّهِ ۚ كَتَبَ عَلَىٰ نَفْسِهِ ٱلرَّحْمَةَ ۚ لَيَجْمَعَنَّكُمْ إِلَىٰ يَوْمِ ٱلْقِيَٰمَةِ لَا رَيْبَ فِيهِ ۚ ٱلَّذِينَ خَسِرُوٓا۟ أَنفُسَهُمْ فَهُمْ لَا يُؤْمِنُونَ

"வானங்களிலும், பூமியிலுமுள்ளவை யாருக்குச் சொந்தம்" என்று (நபியே!) நீர் (அவர்களைக்) கேளும்; (அவர்கள் என்ன பதில் கூறமுடியும்? எனவே) "எல்லாம் அல்லாஹ்வுக்கே சொந்தம்" என்று கூறுவீராக அவன் தன் மீது கருணையை கடமையாக்கிக் கொண்டான்; நிச்சயமாக இறுதி நாளில் உங்களையெல்லாம் அவன் ஒன்று சேர்ப்பான்; இதில் எவ்வித சந்தேகமும் இல்லை எவர்கள் தமக்குத் தாமே நஷ்டத்தை உண்டுபண்ணிக் கொண்டார்களோ, அவர்கள் ஈமான் கொள்ளமாட்டார்கள்.

தூதரே! அவர்களிடம் கேட்பீராக: “வானங்கள், பூமி, அவையிரண்டிற்கு இடையில் உள்ளவை ஆகியவற்றின் உரிமை யாருக்குரியது? நீர் கூறுவீராக: அனைத்தின் உரிமையும் அல்லாஹ்வுக்கே உரியது. அடியார்கள் மீது அருள் புரிவதற்காக கருணையை தன்மீது விதித்துக் கொண்டான். எனவேதான் அவர்களை உடனுக்குடன் தண்டித்துவிட மாட்டான். அவர்கள் பாவமன்னிப்புக் கோரவில்லையெனில் அவர்கள் அனைவரையும் மறுமைநாளில் ஒன்றுதிரட்டுவான். அந்த நாள் வருவதில் எந்த சந்தேகமும் இல்லை. அல்லாஹ்வை நிராகரித்து அழிவுக்கான காரணிகளைத்தேடி தங்களுக்குத் தாங்களே இழப்பை ஏற்படுத்திக் கொண்டவர்கள் நம்பிக்கைகொள்ள மாட்டார்கள்.

Al-An'aam 6:12Listen in Qur'an →
13

۞ وَلَهُۥ مَا سَكَنَ فِى ٱلَّيْلِ وَٱلنَّهَارِ ۚ وَهُوَ ٱلسَّمِيعُ ٱلْعَلِيمُ

இரவிலும் பகலிலும் வசித்திருப்பவை எல்லாம் அவனுக்கே சொந்தம்; அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.

இரவிலும் பகலிலும் இருக்கும் எல்லாவற்றின் உரிமையும் அல்லாஹ்வுக்கே உரியதாகும். அவர்களது பேச்சுக்களை அவன் செவியேற்கக்கூடியவன். செயல்களை அவன் நன்கறிந்தவன். அவற்றிற்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான்.

Al-An'aam 6:13Listen in Qur'an →
14

قُلْ أَغَيْرَ ٱللَّهِ أَتَّخِذُ وَلِيًّۭا فَاطِرِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَهُوَ يُطْعِمُ وَلَا يُطْعَمُ ۗ قُلْ إِنِّىٓ أُمِرْتُ أَنْ أَكُونَ أَوَّلَ مَنْ أَسْلَمَ ۖ وَلَا تَكُونَنَّ مِنَ ٱلْمُشْرِكِينَ

"வானங்களையும் பூமியையும் படைத்த அல்லாஹ்வையன்றி வேறு எவரையும் என் பாதுகாவலனாக எடுத்துக் கொள்வேனா? அவனே (யாவருக்கும்) உணவளிக்கிறான்; அவனுக்கு எவராலும் உணவளிக்கப் படுவதில்லை" என்று (நபியே!) நீர் கூறுவீராக இன்னும் (அல்லாஹ்வுக்கு வழிபடுபவர்களில் முதன்மையானவனாக, இருக்கும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்) என்று கூறுவீராக. இன்னும் நீர் ஒருக்காலும் இணைவைப்போரில் ஒருவராகிவிட வேண்டாம்.

தூதரே! அல்லாஹ்வுடன் சிலைகளையும் மற்றவைகளையும் வணங்கும் இணைவைப்பாளர்களிடம் கூறுவீராக: “நான் அல்லாஹ் அல்லாதவர்களை நேசம் பாராட்டும், உதவி பெறும் உதவியாளர்களாக ஆக்கிக் கொள்வதை கற்பனையாவது செய்யலாமா? அவன்தான் வானங்களையும் பூமியையும் முன்மாதிரியின்றி படைத்தான். அவன் தன் அடியார்களில் தான் நாடியோருக்கு உணவளிக்கிறான். அவனது அடியார்களில் யாரும் அவனுக்கு உணவளிப்பதில்லை. அவன் தன் அடியார்களை விட்டும் தேவையற்றவன். அடியார்கள் அவன்பால் தேவையுடையவர்கள்.” தூதரே! நீர் கூறுவீராக: “இந்த சமூகத்தில் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டவர்களில் முதலாமவனாக இருக்க வேண்டும் என்று என் இறைவன் எனக்குக் கட்டளையிட்டுள்ளான். அவனுடன் மற்றவர்களை இணையாக்குபவர்களுடன் நான் சேர்ந்துவிடுவதை விட்டும் என்னைத் தடுத்துள்ளான்.

Al-An'aam 6:14Listen in Qur'an →
15

قُلْ إِنِّىٓ أَخَافُ إِنْ عَصَيْتُ رَبِّى عَذَابَ يَوْمٍ عَظِيمٍۢ

"நான் என் இறைவனுக்கு மாறு செய்தால், மகத்தான நாளில் (ஏற்படும்) வேதனையை நான் நிச்சயமாக பயப்படுகிறேன்" என்று கூறுவீராக.

தூதரே! நீர் கூறுவீராக: “நான் என் இறைவனின் கட்டளைக்கு மாறாகச் செயல்பட்டு அவன் தடைசெய்த ஷிர்க் போன்ற பாவங்களில் ஈடுபட்டால் அல்லது அவன் கட்டளையிட்ட நம்பிக்கை மற்றும் ஏனைய வணக்கவழிபாடுகளை விட்டுவிட்டால் மறுமை நாளில் அவன் என்னைக் கடுமையாக வேதனை செய்வான் என்பதை அஞ்சுகிறேன்.

Al-An'aam 6:15Listen in Qur'an →
16

مَّن يُصْرَفْ عَنْهُ يَوْمَئِذٍۢ فَقَدْ رَحِمَهُۥ ۚ وَذَٰلِكَ ٱلْفَوْزُ ٱلْمُبِينُ

"அந்தாளில் எவரொருவர் அந்த வேதனையை விட்டும் விலக்கப்படுவாரோ, நிச்சயமாக (அல்லாஹ்) அவர்மீது கிருபை புரிந்துவிட்டான். இது மிகத் தெளிவான வெற்றியாகும்" (என்று கூறுவீராக).

மறுமை நாளில் அல்லாஹ் யாரைவிட்டும் இந்த வேதனையை அகற்றிவிடுவானோ அவனுடைய அருளால் அவர் வெற்றி பெற்றுவிட்டார். வேதனையிலிருந்து கிடைக்கும் இந்த விடுதலையே ஈடிணையற்ற மிகப் பெரிய வெற்றியாகும்.

Al-An'aam 6:16Listen in Qur'an →
17

وَإِن يَمْسَسْكَ ٱللَّهُ بِضُرٍّۢ فَلَا كَاشِفَ لَهُۥٓ إِلَّا هُوَ ۖ وَإِن يَمْسَسْكَ بِخَيْرٍۢ فَهُوَ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ قَدِيرٌۭ

"(நபியே!) அல்லாஹ் உமக்கு ஏதாவதொரு துன்பத்தை ஏற்படுத்திவிட்டால் அவனைத் தவிர (வேறு யாரும்) அதை நீக்க முடியாது. இன்னும் அவன் ஒரு நன்மையை உண்டாக்கிவிட்டால், (அதை எவரும் தடுக்க முடியாது.) அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றான்.

ஆதமின் மகனே! அல்லாஹ்வின் புறத்திலிருந்து உனக்கு ஏதேனும் துன்பம் நேர்ந்தால் அவனைத் தவிர யாராலும் அதனைப் போக்க முடியாது. அவன் புறத்திலிருந்து உனக்கு ஏதேனும் நன்மை நேர்ந்தால் யாராலும் அதனைத் தடுக்க முடியாது. அவனது அருளைத் தடுப்பவர் யாருமில்லை. அவன் எல்லாவற்றின்மீதும் பேராற்றலுடையவன். எதுவும் அவனை இயலாமையில் ஆழ்த்திவிட முடியாது.

Al-An'aam 6:17Listen in Qur'an →
18

وَهُوَ ٱلْقَاهِرُ فَوْقَ عِبَادِهِۦ ۚ وَهُوَ ٱلْحَكِيمُ ٱلْخَبِيرُ

அவனே தன் அடியார்களை அடக்கியாள்பவன், இன்னும் அவனே பூரன ஞானமுள்ளவன்; (யாவற்றையும்) நன்கறிந்தவன்.

அவன் தனது அடியார்களை விட மிகைத்தவன். அனைவரையும் அடிபணிய வைப்பவன், அனைத்து வகையிலும் அவர்களை விட உயர்ந்தவன். அவனுக்கு இயலாதது எதுவுமில்லை. அவனை யாராலும் மிகைக்க முடியாது. அனைவரும் அவனுக்குக் கட்டுப்படுபவர்கள்தாம். தன் கண்ணியத்திற்கேற்ப தனது அடியார்களுக்க மேலால் இருக்கிறான். தன் படைப்பிலும் நிர்வாகத்திலும் தான் வழங்கிய சட்டங்களிலும் அவன் ஞானம்மிக்கவன்; அனைத்தையும் அறிந்தவன். எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.

Al-An'aam 6:18Listen in Qur'an →
19

قُلْ أَىُّ شَىْءٍ أَكْبَرُ شَهَٰدَةًۭ ۖ قُلِ ٱللَّهُ ۖ شَهِيدٌۢ بَيْنِى وَبَيْنَكُمْ ۚ وَأُوحِىَ إِلَىَّ هَٰذَا ٱلْقُرْءَانُ لِأُنذِرَكُم بِهِۦ وَمَنۢ بَلَغَ ۚ أَئِنَّكُمْ لَتَشْهَدُونَ أَنَّ مَعَ ٱللَّهِ ءَالِهَةً أُخْرَىٰ ۚ قُل لَّآ أَشْهَدُ ۚ قُلْ إِنَّمَا هُوَ إِلَٰهٌۭ وَٰحِدٌۭ وَإِنَّنِى بَرِىٓءٌۭ مِّمَّا تُشْرِكُونَ

(நபியே!) "சாட்சியத்தில் மிகவும் பெரியது எது?" எனக் கேளும்; "அல்லாஹ்வே எனக்கும் உங்களுக்குமிடையே சாட்சியாக இருக்கின்றான்; இந்த குர்ஆன் எனக்கு வஹீயாக அருளப்பட்டுள்ளது. இதைக் கொண்டு உங்களையும், (இதை அடைந்தவர்களையும் நான் அச்சமூட்டி எச்சரிப்பதற்காக நிச்சயமாக வணக்கத்திற்குரிய வேறு தெய்வங்களும் அல்லாஹ்வுடன் இருப்பதாக நீங்கள் சாட்சி கூறமுடியுமா? (என்று அவரிடம் கேட்பீராக) "இல்லை! நான் (அவ்வாறு) சாட்சி சொல்ல முடியாது என்றும் கூறுவீராக வணக்கத்திற்குரியவன் நிச்சயமாக அவன் ஒருவன் தான்; அவனுக்கு நீங்கள் இணைவைப்பதிலிருந்து நான் நிச்சயமாக விலகிக் கொண்டவனே" என்று கூறிவிடும்.

தூதரே! உம்மை நிராகரித்த இணைவைப்பாளர்களிடம் கேட்பீராக: “நான் உண்மையாளன் என்பதற்கு யாருடைய சாட்சி மிகப் பெரியதாக இருக்கும்?” நீர் கூறுவீராக: “நான் உண்மையாளன் என்பதற்கு அல்லாஹ்வின் சாட்சியமே பெரியதாக இருக்கும். எனக்கும் உங்களுக்குமிடையே அவனே சாட்சியாளனாக இருக்கின்றான். நான் உங்களிடம் கொண்டுவந்ததையும் நீங்கள் அதற்கு என்ன பதிலளிப்பீர்கள் என்பதையும் அவன் அறிவான். நான் உங்களை அச்சமூட்டுவதற்காக, மனிதர்கள், ஜின்கள் அனைவரையும் அச்சமூட்டுவதற்காக அல்லாஹ் எனக்கு இந்த குர்ஆனை வஹியாக அறிவித்துள்ளான். இணைவைப்பாளர்களே! அல்லாஹ்வுடன் வேறு கடவுள்களும் இருக்கின்றார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்கள்” தூதரே! நீர் கூறுவீராக: “நீங்கள் ஏற்றுக் கொண்டது அசத்தியம் என்பதனால் அதற்கு நான் சாட்சி கூறமாட்டேன். அல்லாஹ் ஒருவனே. அவனுக்கு யாதொரு இணையுமில்லை. நீங்கள் அல்லாஹ்வுக்கு இணையாக்கும் அனைத்தையும் விட்டும் நான் விலகிவிட்டேன்.”

Al-An'aam 6:19Listen in Qur'an →
20

ٱلَّذِينَ ءَاتَيْنَٰهُمُ ٱلْكِتَٰبَ يَعْرِفُونَهُۥ كَمَا يَعْرِفُونَ أَبْنَآءَهُمُ ۘ ٱلَّذِينَ خَسِرُوٓا۟ أَنفُسَهُمْ فَهُمْ لَا يُؤْمِنُونَ

எவரும் தம் குழந்தைகளை (சந்தேகமில்லாமல் அறிவதைப் போல், வேதங் கொடுக்கப் பெற்றவர்கள், (நம் தூதராகிய இவரை, இறைவனுடைய தூதர் தாம்) என்று நன்கறிவார்கள். எவர்கள் தமக்குத் தாமே நஷ்டமிழைத்துக் கொண்டார்களோ அவர்கள் தாம் இவரை நம்பமாட்டார்கள்.

தவ்ராத் வழங்கப்பட்ட யூதர்களும் இன்ஜீல் வழங்கப்பட்ட கிருஸ்தவர்களும் தங்களின் பிள்ளைகளை மற்றவர்களின் பிள்ளையிலிருந்து பிறித்தறிவைதைப் போன்று முஹம்மது நபியை முழுமையாக அறிவார்கள். அவர்கள்தான் தங்களைத் தாங்களே நரகத்தில் நுழைத்து இழப்பை ஏற்படுத்திக் கொண்டவர்கள். அவர்கள் நம்பிக்கைகொள்ள மாட்டார்கள்.

Al-An'aam 6:20Listen in Qur'an →

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.