Muslim99Muslim99
← Tafsir library

6. Al-An'aam

The Cattle · Meccan · 165 ayahs

سُورَةُ الأَنۡعَامِ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 151–160 of 165

151

۞ قُلْ تَعَالَوْا۟ أَتْلُ مَا حَرَّمَ رَبُّكُمْ عَلَيْكُمْ ۖ أَلَّا تُشْرِكُوا۟ بِهِۦ شَيْـًۭٔا ۖ وَبِٱلْوَٰلِدَيْنِ إِحْسَٰنًۭا ۖ وَلَا تَقْتُلُوٓا۟ أَوْلَٰدَكُم مِّنْ إِمْلَٰقٍۢ ۖ نَّحْنُ نَرْزُقُكُمْ وَإِيَّاهُمْ ۖ وَلَا تَقْرَبُوا۟ ٱلْفَوَٰحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ ۖ وَلَا تَقْتُلُوا۟ ٱلنَّفْسَ ٱلَّتِى حَرَّمَ ٱللَّهُ إِلَّا بِٱلْحَقِّ ۚ ذَٰلِكُمْ وَصَّىٰكُم بِهِۦ لَعَلَّكُمْ تَعْقِلُونَ

"வாருங்கள்! உங்கள் இறைவன் உங்கள் மீது விலக்கியிருப்பவற்றையும் (ஏவியிருப்பவற்றையும்) நாம் ஓதிக் காண்பிக்கிறேன்; எப்பொருளையும் அவனுக்கு இணையாக வைக்காதீர்கள்; பெற்றோர்களுக்கு நன்மை செய்யுங்கள்; வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் - ஏனெனில் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம்; வெளிப்டையான இரகசியமான மானக்கேடான காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள்; அல்லாஹ் தடுத்துள்ள எந்த ஓர் ஆத்மாவையும் நியாயமானதற்கு அல்லாமல் - கொலை செய்யாதீர்கள் - இவற்றை நீங்கள் உணர்ந்து கொள்வதற்காக (இறைவன்) உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கின்றான்.

தூதரே! மக்களிடம் நீர் கூறுவீராக: “வாருங்கள், அல்லாஹ் தடைசெய்ததை நான் உங்களுக்கு படித்துக் காட்டுகிறேன்: தனது படைப்புகளில் எவரையும் அவனுக்கு இணையாக ஆக்குவதையும் தாய் தந்தையருடன் முறையற்று நடந்து கொள்வதையும் அவன் உங்களுக்குத் தடைசெய்துள்ளான். மாறாக அவர்களுடன் நல்ல முறையில் நடந்துகொள்ளுங்கள். அறியாமைக்கால மக்கள் செய்தது போன்று வறுமையின் காரணமாக உங்கள் குழந்தைகளைக் கொன்றுவிடாதீர்கள். உங்களுக்கும் அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம். வெளிப்படையாகவும் இரகசியமாகவும் மானக்கேடான காரியங்களை நெருங்குவதையும், அல்லாஹ் தடைசெய்த ஓர் உயிரை, திருமணத்தின் பின் விபச்சாரத்தில் ஈடுபடல், இஸ்லாத்தை விட்டு மதம் மாறுதல் போன்ற உரிய காரணமின்றி கொல்வதையும் அவன் தடைசெய்துள்ளான். அல்லாஹ்வின் ஏவல்களையும் விலக்கல்களையும் நீங்கள் புரிந்துகொள்ளும் பொருட்டே அவன் மேற்கூறிய அறிவுரையை வழங்கியுள்ளான்.

Al-An'aam 6:151Listen in Qur'an →
152

وَلَا تَقْرَبُوا۟ مَالَ ٱلْيَتِيمِ إِلَّا بِٱلَّتِى هِىَ أَحْسَنُ حَتَّىٰ يَبْلُغَ أَشُدَّهُۥ ۖ وَأَوْفُوا۟ ٱلْكَيْلَ وَٱلْمِيزَانَ بِٱلْقِسْطِ ۖ لَا نُكَلِّفُ نَفْسًا إِلَّا وُسْعَهَا ۖ وَإِذَا قُلْتُمْ فَٱعْدِلُوا۟ وَلَوْ كَانَ ذَا قُرْبَىٰ ۖ وَبِعَهْدِ ٱللَّهِ أَوْفُوا۟ ۚ ذَٰلِكُمْ وَصَّىٰكُم بِهِۦ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ

அநாதையின் பொருளின் பக்கம் அவன் பிராயத்தை அடையும் வரையில் அழகான முறையிலன்றி நீங்கள் நெருங்காதீர்கள்; அளவையும், நிறுவையையும் நீதத்தைக் கொண்டு நிரப்பமாக்குங்கள்; நாம் எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி கஷ்டப்படுத்துவதில்லை. நீங்கள் பேசும்பொழுது அதனால் பாதிக்கப்படுபவர் நெருங்கிய உறவினராக இருந்த போதிலும் - நியாயமே பேசுங்கள்; அல்லாஹ்வுக்கு (நீங்கள் கொடுத்த) உறுதி மொழியை நிறைவேற்றுங்கள். நீங்கள் நினைவு (கூர்ந்து நடந்து) கொள்ளும் பொருட்டே அல்லாஹ் உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கிறான்.

அநாதைகள் - பருவமடைவதற்கு முன்பே தந்தையை இழந்தவர்கள் - பக்குவ வயதை அடையும் வரை அவர்களின் செல்வங்களை நெருங்குவதையும் அல்லாஹ் தடைசெய்துள்ளான். ஆயினும் அவர்களுக்குப் பயனளிக்கும், அவர்களது செல்வத்தை வளர்க்கும் விதத்தில் அவர்களின் செல்வங்களை நீங்கள் நெருங்கலாம். அளவையிலும் நிறுவையிலும் மோசடி செய்வதையும் தடைசெய்துள்ளான். கொடுக்கல் வாங்கலில், விற்றல் வாங்கலில் நீதியாக நடந்து கொள்வதே உங்கள் மீது கடமையாகும். ஒருவர் மீது அவர் தாங்கும் அளவுக்கே நாம் பொறுப்பு சாட்டுவோம். அளவு, நிறுவை மற்றும் ஏனையவைகளில் தவிர்க்க முடியாத கூடுதல் குறைவு ஏற்படுவது குற்றமில்லை. நீங்கள் ஒரு தகவல் அல்லது சாட்சி கூறினால் உண்மைக்குப் புறம்பானதைக் கூறுவதையும் அவன் உங்களுக்குத் தடைசெய்துள்ளான்.எந்தவொரு உறவினருக்கோ, நண்பருக்கோ பாரபட்சம் காட்டக்கூடாது. அல்லாஹ்விடம் செய்த அல்லது அவனது பெயரினால் செய்த ஒப்பந்தங்களை முறித்துவிடுவதையும் அவன் உங்களுக்குத் தடைசெய்துள்ளான். அவற்றை முழுமையாக நிறைவேற்றுவதே உங்கள் மீது கடமையாகும். உங்களது செயலின் விளைவுகளை நீங்கள் நினைவுகூர வேண்டும் என்பதற்காக மேற்கூறப்பட்டவற்றைக் கொண்டு அல்லாஹ் உங்களுக்கு உறுதியான கட்டளையிடுகிறான்.

Al-An'aam 6:152Listen in Qur'an →
153

وَأَنَّ هَٰذَا صِرَٰطِى مُسْتَقِيمًۭا فَٱتَّبِعُوهُ ۖ وَلَا تَتَّبِعُوا۟ ٱلسُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَن سَبِيلِهِۦ ۚ ذَٰلِكُمْ وَصَّىٰكُم بِهِۦ لَعَلَّكُمْ تَتَّقُونَ

நிச்சயமாக இதுவே என்னுடைய நேரான வழியாகும்; ஆகவே இதனையே பின்பற்றுங்கள் - இதர வழிகளை நீங்கள் பின்பற்ற வேண்டாம் - அவை உங்களை அவனுடைய வழியைவிட்டுப் பிரித்துவிடும்; நீங்கள் (நேர் வழியைப் பின்பற்றி) பயபக்தியுடையவர்களாக இருப்பதற்கு இவ்வாறு அவன் உங்களுக்கு போதிக்கிறான்.

வழிகேட்டின் பாதைகளைப் பின்பற்றுவதையும் அவன் உங்களுக்குத் தடைசெய்துள்ளான். மாறாக கோணலற்ற அல்லாஹ்வின் நேரான வழியையே நீங்கள் பின்பற்ற வேண்டும். வழிகேட்டின் பாதைகள் உங்களைப் பிரிவினையின் பக்கமும் சத்தியத்தை விட்டுத் தூரமாகவும் கொண்டு சென்றுவிடும். நீங்கள் அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்ச வேண்டும் என்பதற்காக அவன் தன்னுடைய நேரான வழியைப் பின்பற்றும்படியே உங்களுக்கு அறிவுரை வழங்குகிறான்.

Al-An'aam 6:153Listen in Qur'an →
154

ثُمَّ ءَاتَيْنَا مُوسَى ٱلْكِتَٰبَ تَمَامًا عَلَى ٱلَّذِىٓ أَحْسَنَ وَتَفْصِيلًۭا لِّكُلِّ شَىْءٍۢ وَهُدًۭى وَرَحْمَةًۭ لَّعَلَّهُم بِلِقَآءِ رَبِّهِمْ يُؤْمِنُونَ

நன்மை செய்பவர்களின் மீது (நமது அருளைப்) பூர்த்தியாக்கும் பொருட்டு பின்னர் மூஸாவுக்கு நாம் ஒரு வேதத்தைக் கொடுத்தோம் - அதில் ஒவ்வொரு விஷயமும் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது அது நேர் வழியாகவும் அருளாகவும் இருக்கிறது. அவர்கள் தங்கள் இறைவனை சந்திப்போம் என்று உறுதி கொள்ளும் பொருட்டே (அதைக் கொடுத்தோம்).

மேற்கூறப்பட்டவற்றை அறிவித்த பின்னர் நாம் மூஸாவுக்கு வழங்கிய அருட்கொடைகளை நிறைவு செய்வதற்காகவும் அவர் செய்த நற்செயல்களுக்குக் கூலி கொடுப்பதற்காகவும் மார்க்க விஷயங்கள் அனைத்தையும் தெளிவுபடுத்துவதற்காகவும் சத்தியத்தை அறிவிப்பதற்காகவும் அருளாகவும் அவர்கள் மறுமை நாளின்மீது நம்பிக்கைகொண்டு அதற்காக நற்செயல்களில் ஈடுபடுவதற்காகவும் தவ்ராத்தை வழங்கினோம்.

Al-An'aam 6:154Listen in Qur'an →
155

وَهَٰذَا كِتَٰبٌ أَنزَلْنَٰهُ مُبَارَكٌۭ فَٱتَّبِعُوهُ وَٱتَّقُوا۟ لَعَلَّكُمْ تُرْحَمُونَ

(மனிதர்களே!) இதுவும் வேதமாகும்; இதனை நாமே இறக்கிவைத்துள்ளோம் - (இது) மிக்க பாக்கியம் வாய்ந்தது ஆகவே இதனைப் பின்பற்றுங்கள் - இன்னும் (அவனை) அஞ்சி (பாவத்தை விட்டு விலகி)க் கொள்ளுங்கள். நீங்கள் (இறைவனால்) கிருபை செய்யப்படுவீர்கள்.

இந்த குர்ஆன் அருள் வளமிக்க நாம் இறக்கிய வேதமாகும். உலக மற்றும் மார்க்க ரீதியான நன்மைகளை இது உள்ளடக்கியுள்ளது. எனவே அதில் இறக்கப்பட்டவற்றைப் பின்பற்றுங்கள். அவனுடைய கட்டளைகளுக்கு மாறாகச் செயல்படுவதிலிருந்து விலகியிருங்கள். அருளைப்பெறுவீர்கள்.

Al-An'aam 6:155Listen in Qur'an →
156

أَن تَقُولُوٓا۟ إِنَّمَآ أُنزِلَ ٱلْكِتَٰبُ عَلَىٰ طَآئِفَتَيْنِ مِن قَبْلِنَا وَإِن كُنَّا عَن دِرَاسَتِهِمْ لَغَٰفِلِينَ

நமக்கு முன் இரு கூட்டத்தினர் மீது மட்டுமே வேதம் இறக்கப்பட்டது - ஆகவே நாங்கள் அதனைப் படிக்கவும் கேட்கவும் முடியாமல் பராமுகமாகி விட்டோம் என்று நீங்கள் கூறாதிருக்கவும்;

அரபு நாட்டின் இணைவைப்பாளர்களே!- “தவ்ராத்தையும் இன்ஜீலையும் அல்லாஹ் எங்களுக்கு முன்னிருந்த யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும்தான் இறக்கினான். எங்களுக்கு எந்த வேதத்தையும் இறக்கவில்லை. எங்களது மொழியிலன்றி அவர்களது மொழியில் இருந்ததனால் அவர்களது வேதங்களை எங்களுக்குப் படிக்கத் தெரியவில்லை” என்று நீங்கள் கூறிவிடக்கூடாது என்பதற்காகவே. (இக்குர்ஆனை உங்கள் மீது இறக்கினோம்).

Al-An'aam 6:156Listen in Qur'an →
157

أَوْ تَقُولُوا۟ لَوْ أَنَّآ أُنزِلَ عَلَيْنَا ٱلْكِتَٰبُ لَكُنَّآ أَهْدَىٰ مِنْهُمْ ۚ فَقَدْ جَآءَكُم بَيِّنَةٌۭ مِّن رَّبِّكُمْ وَهُدًۭى وَرَحْمَةٌۭ ۚ فَمَنْ أَظْلَمُ مِمَّن كَذَّبَ بِـَٔايَٰتِ ٱللَّهِ وَصَدَفَ عَنْهَا ۗ سَنَجْزِى ٱلَّذِينَ يَصْدِفُونَ عَنْ ءَايَٰتِنَا سُوٓءَ ٱلْعَذَابِ بِمَا كَانُوا۟ يَصْدِفُونَ

அல்லது மெய்யாகவே எங்கள் மீது ஒரு வேதம் அருளப்பட்டிருந்தால், நிச்சயமாக நாங்கள் அவர்களைவிட மிக்க நேர்மையாக நடந்திருப்போம் என்று நீங்கள் கூறாதிருக்கும் பொருட்டும் (இவ்வேதத்தை அருளினோம்); ஆகவே உங்களுடைய இறைவனிடமிருந்தும் மிகத்தெளிவான வேதமும், நேர்வழியும், அருளும் வந்துவிட்டது - எவனொருவன் அல்லாஹ்வின் வசனங்களைப் புறக்கணித்து, அவற்றைவிட்டு விலகிவிடுகின்றானோ அவனைவிட அதிக அநியாயக்காரன் யார்? நம்முடைய வசனங்களை விட்டுவிலகிக் கொள்கிறவர்களுக்கு, அவர்கள் விலகிக் கொண்ட காரணத்தால் கொடிய வேதனையைக் கூலியாகக் கொடுப்போம்.

யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மீது ஒரு வேதம் இறக்கப்பட்டது போன்று எங்கள் மீதும் ஒரு வேதம் இறக்கப்பட்டிருந்தால் நாங்களும் அவர்களை விட உறுதியாக இருந்திருப்போம் என்று நீங்கள் கூறாமல் இருப்பதற்காகவும்தான். உங்களின் தூதர் முஹம்மது மீது உங்களின் மொழியிலேயே ஒரு வேதத்தை அல்லாஹ் இறக்கிவிட்டான். அது தெளிவான ஆதாரமாகவும் சத்தியத்தின்பால் வழிகாட்டக்கூடியதாகவும் இந்த சமூகத்திற்கு அருளாகவும் இருக்கின்றது. எனவே பலவீனமான சாக்குப் போக்குகளையும் தவறான காரணங்களையும் கூறாதீர்கள். அல்லாஹ்வின் வசனங்களைப் புறக்கணித்து பொய்யெனக் கூறுபவனைவிட மிகப் பெரிய அநியாயக்காரன் வேறு யாருமில்லை. நம்முடைய வசனங்களைப் புறக்கணித்ததற்குக் கூலியாக அவர்களை நரக நெருப்பில் நுழைத்து கடுமையாகத் தண்டிப்போம்.

Al-An'aam 6:157Listen in Qur'an →
158

هَلْ يَنظُرُونَ إِلَّآ أَن تَأْتِيَهُمُ ٱلْمَلَٰٓئِكَةُ أَوْ يَأْتِىَ رَبُّكَ أَوْ يَأْتِىَ بَعْضُ ءَايَٰتِ رَبِّكَ ۗ يَوْمَ يَأْتِى بَعْضُ ءَايَٰتِ رَبِّكَ لَا يَنفَعُ نَفْسًا إِيمَٰنُهَا لَمْ تَكُنْ ءَامَنَتْ مِن قَبْلُ أَوْ كَسَبَتْ فِىٓ إِيمَٰنِهَا خَيْرًۭا ۗ قُلِ ٱنتَظِرُوٓا۟ إِنَّا مُنتَظِرُونَ

மலக்குகள் அவர்களிடம் (நேரில்) வருவதையோ அல்லது உம் இறைவனே (அவர்களிடம்) வருவதையோ அல்லது உம் இறைவனின் அத்தாட்சிகளில் சில வருவதையோ அன்றி (வேறெதனையும்) அவர்கள் எதிர்பார்க்கின்றனரா? உம்முடைய இறைவனின் அத்தாட்சிகளில் சில வரும் அந்நாளில், இதற்கு முன்னால் நம்பிக்கை கொள்ளாமலும், அல்லது நம்பிக்கைக் கொண்டிருந்தும் யாதொரு நன்மையையும் சம்பாதிக்காமலுமிருந்து விட்டு, அந்நாளில் அவர்கள் கொள்ளும் நம்பிக்கை எவ்வித பலனையும் அவர்களுக்கு அளிக்காது - ஆகவே அவர்களை நோக்கி "(அந்த அத்தாட்சிகளை) நீங்களும் எதிர்பாருங்கள்; நாமும் எதிர்ப் பார்க்கின்றோம்" என்று (நபியே!) நீர் கூறும்.

இவ்வுலகில் மரணத்தின் வானவரும் அவரது உதவியாளர்களும் தங்களின் உயிர்களைக் கைப்பற்ற வருவதைத்தான் இந்த நிராகரிப்பாளர்கள் எதிர்பார்க்கிறார்களா? அல்லது மறுமை நாளில் அவர்களிடையே தீர்ப்பு கூறுவதற்காக உம் இறைவனின் வருகையை எதிர்பார்க்கிறார்களா? அல்லது மறுமையை அறிவிக்கக்கூடிய உம் இறைவனின் சில அத்தாட்சிகளையா? சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது போன்ற உம் இறைவனின் சில அத்தாட்சிகள் வெளிப்பட்டுவிடும் நாளில் நிராகரிப்பாளர்களுக்கு அவர்களின் நம்பிக்கையோ இதுவரை நற்செயல் புரியாத நம்பிக்கையாளனுக்கு அவன் அப்போது செய்யும் செயல்களோ எந்தப் பயனையும் அளிக்காது. தூதரே! நிராகரிக்கும் இந்த இணைவைப்பாளர்களிடம் கூறுவீராக: “இந்த விஷயங்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் எதிர்பாருங்கள். நாங்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.”

Al-An'aam 6:158Listen in Qur'an →
159

إِنَّ ٱلَّذِينَ فَرَّقُوا۟ دِينَهُمْ وَكَانُوا۟ شِيَعًۭا لَّسْتَ مِنْهُمْ فِى شَىْءٍ ۚ إِنَّمَآ أَمْرُهُمْ إِلَى ٱللَّهِ ثُمَّ يُنَبِّئُهُم بِمَا كَانُوا۟ يَفْعَلُونَ

நிச்சயமாக எவர்கள் தங்களுடைய மார்க்கத்தை (தம் விருப்பப்படி பலவாறாகப்) பிரித்து, பல பிரிவினர்களாகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் (நபியே!) உமக்கு எவ்வித சம்பந்தமுமில்லை அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது - அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி முடிவில் அவனே அவர்களுக்கு அறிவிப்பான்.

மார்க்கத்தில் சிலவற்றை எடுத்துக் கொண்டு சிலவற்றை விட்டு, தங்களின் மார்க்கத்தைப் பல பிரிவுகளாக ஆக்கிக் கொண்ட யூதர்களும் கிறிஸ்தவர்களுடன், தூதரே! உமக்கு எந்தத் தொடர்பும் இல்லை. அவர்கள் இருக்கும் வழிகேட்டை விட்டும் நீர் நீங்கியவராவீர். அவர்களை எச்சரிப்பதே உம்மீதுள்ள கடமையாகும். அவர்களின் விவகாரம் அல்லாஹ்விடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் இவ்வுலகில் செய்துகொண்டிருந்தவற்றை மறுமை நாளில் அவன் அவர்களுக்கு அறிவிப்பான். அவற்றிற்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான்.

Al-An'aam 6:159Listen in Qur'an →
160

مَن جَآءَ بِٱلْحَسَنَةِ فَلَهُۥ عَشْرُ أَمْثَالِهَا ۖ وَمَن جَآءَ بِٱلسَّيِّئَةِ فَلَا يُجْزَىٰٓ إِلَّا مِثْلَهَا وَهُمْ لَا يُظْلَمُونَ

வர் ஒருவர் (ஒரு) நன்மையைச் செய்கிறாரோ அவருக்கு அதுபோல் பத்துப் பங்கு (நன்மை) உண்டு; எவர் ஒருவர் (ஒரு) தீமையைச் செய்கிறாரோ அதைப்போன்ற அளவுடைய கூலியே கொடுக்கப்படுவார் - அவர்கள் அநியாயம் செய்யப்படவும் மாட்டார்கள்.

மறுமைநாளில் ஒரு நன்மையோடு வரும் நம்பிக்கையாளனின் நன்மையை அல்லாஹ் பத்து மடங்காக்குவான். ஒரு தீமையோடு வருபவர் கூடுதல், குறைத்தல் என்பவற்றில் அதற்கேற்பவே தண்டிக்கப்படுவார். துிமையை விட அதிக தண்டனை வழங்கப்படமாட்டாது. மறுமை நாளில் நன்மைகளின் கூலி குறைக்கப்பட்டோ தீமைகளுக்கான தண்டனை அதிகரிக்கப்பட்டோ அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.

Al-An'aam 6:160Listen in Qur'an →

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.