Muslim99Muslim99
← Tafsir library

6. Al-An'aam

The Cattle · Meccan · 165 ayahs

سُورَةُ الأَنۡعَامِ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 141–150 of 165

141

۞ وَهُوَ ٱلَّذِىٓ أَنشَأَ جَنَّٰتٍۢ مَّعْرُوشَٰتٍۢ وَغَيْرَ مَعْرُوشَٰتٍۢ وَٱلنَّخْلَ وَٱلزَّرْعَ مُخْتَلِفًا أُكُلُهُۥ وَٱلزَّيْتُونَ وَٱلرُّمَّانَ مُتَشَٰبِهًۭا وَغَيْرَ مُتَشَٰبِهٍۢ ۚ كُلُوا۟ مِن ثَمَرِهِۦٓ إِذَآ أَثْمَرَ وَءَاتُوا۟ حَقَّهُۥ يَوْمَ حَصَادِهِۦ ۖ وَلَا تُسْرِفُوٓا۟ ۚ إِنَّهُۥ لَا يُحِبُّ ٱلْمُسْرِفِينَ

பந்தல்களில் படரவிடப்பட்ட கொடிகளும், படரவிடப்படாத செடிகளும், பேரீத்த மரங்களும் உள்ள சோலைகளையும், புசிக்கத்தக்க விதவிதமான காய், கறி, தானியங்களையும், ஒன்றுபோலும் வெள; வேறாகவும் தோற்றமளிக்கும் ஜைத்தூன் (ஒலிவம்) மாதுளை ஆகியவற்றையும், அவனே படைத்தான். ஆகவே அவை பலனளித்தால் அவற்றின் பலனிலிருந்து புசியுங்கள். அவற்றை அறுவடை செய்யும் காலத்தில் அதற்குரிய (கடமையான) பாகத்தைக் கொடுத்து விடுங்கள். வீண் விரயம் செய்யாதீர்கள்- நிச்சயமாக அவன் (அல்லாஹ்) வீண் விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.

அல்லாஹ்தான் தண்டுகளுடைய, தண்டுகளற்ற பரந்த தோட்டங்களை பூமியின் மேற்பரப்பில் உருவாக்கினான். அவனே பேரீச்ச மரங்களை முளைக்கச் செய்தான். வடிவத்திலும் சுவையிலும் வேறுபட்ட பழங்களையுடைய பயிர்களையும் அவன் படைத்துள்ளான். அவனே ஆலிவ், மாதுளை ஆகியவற்றை உருவாக்கினான். அவற்றின் இலைகள் ஒன்றுபோல் இருக்கின்றன. சுவையோ வேறுபட்டு இருக்கிறது. மனிதர்களே! அவை விளையும்போது அவற்றின் விளைச்சலை உண்ணுங்கள். அவை அறுவடைசெய்யப்படும்போது அவற்றிற்கு உரிய ஸகாத்தை வழங்கிவிடுங்கள். உண்பதிலும் செலவு செய்வதிலும் மார்க்க வரம்புகளை மீறிவிடாதீர்கள். ஏனெனில் உண்ணவதிலும் செலவளிப்பதிலும் அவயைல்லாத ஏனையவற்றிலும் தன் வரம்புகளை மீறக்கூடியவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை. மாறாக அவர்களை வெறுக்கிறான். இவையனைத்தையும் படைத்தவனே தன் அடியார்களுக்காக இதனை ஆகுமாக்கித் தந்துள்ளான். அதனைத் தடைசெய்யும் அதிகாரம் இணைவைப்பாளர்களுக்குக் கிடையாது.

Al-An'aam 6:141Listen in Qur'an →
142

وَمِنَ ٱلْأَنْعَٰمِ حَمُولَةًۭ وَفَرْشًۭا ۚ كُلُوا۟ مِمَّا رَزَقَكُمُ ٱللَّهُ وَلَا تَتَّبِعُوا۟ خُطُوَٰتِ ٱلشَّيْطَٰنِ ۚ إِنَّهُۥ لَكُمْ عَدُوٌّۭ مُّبِينٌۭ

இன்னும் கால்நடைகளில் சில சுமை சுமப்பதற்கும், சில உணவுக்காகவும் உள்ளன. அல்லாஹ் உங்களுக்கு அளித்ததிலிருந்து உண்ணுங்கள் - நீங்கள் ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்- நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான்.

பெரிய ஒட்டகங்கள் போன்ற பொதி சுமப்பதற்குப் பொருத்தமான கால்நடைகளையும் சிறு ஒட்டகங்கள் ஆடுகள் போன்ற பொதி சுமப்பதற்குத் தகுதியற்ற கால்நடைகளையும் அவனே உங்களுக்காகப் படைத்துள்ளான். மனிதர்களே! அவன் உங்களுக்கு அனுமதித்த அல்லாஹ் அருளிய இப்பொருட்களிலிருந்து உண்ணுங்கள். இணைவைப்பாளர்கள் செய்வது போன்று அல்லாஹ் தடைசெய்தவற்றை அனுமதிப்பதிலும் அனுமதித்தவற்றைத் தடைசெய்வதிலும் ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி விடாதீர்கள். மனிதர்களே! நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு வெளிப்படையான விரோதியாவான். நீங்கள் அவ்வாறு செய்து அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறாகச் செயல்பட வேண்டும் என்று அவன் விரும்புகிறான்.

Al-An'aam 6:142Listen in Qur'an →
143

ثَمَٰنِيَةَ أَزْوَٰجٍۢ ۖ مِّنَ ٱلضَّأْنِ ٱثْنَيْنِ وَمِنَ ٱلْمَعْزِ ٱثْنَيْنِ ۗ قُلْ ءَآلذَّكَرَيْنِ حَرَّمَ أَمِ ٱلْأُنثَيَيْنِ أَمَّا ٱشْتَمَلَتْ عَلَيْهِ أَرْحَامُ ٱلْأُنثَيَيْنِ ۖ نَبِّـُٔونِى بِعِلْمٍ إِن كُنتُمْ صَٰدِقِينَ

(நபியே! அம்மக்களிடம்) "கால்நடைகளில் எட்டு வகைகள் உள்ளன - செம்மறி ஆட்டில் (ஆண், பெண்) இரு வகை, வெள்ளாட்டில் (ஆண், பெண்) இரு வகை, அவன் (அல்லாஹ்) ஆண் இரண்டையும் ஹராமாக்கி விட்டானா? அல்லது பெட்டை இரண்டையும் ஹராமாக்கி விட்டானா? அல்லது அவ்விரு வகைகளிலுமுள்ள பெண்களின் கர்ப்பங்களில் உள்ளவற்றையா (அவன் தடுத்திருக்கிறான்?) நீங்கள் உண்மை கூறுபவர்களாக இருந்தால், (இதனை) ஆதாரத்துடன் எனக்கு அறிவியுங்கள்" என்று கேட்பீராக.

உங்களுக்காக அவன் எட்டு வகைகளை படைத்துள்ளான். அவற்றில் செம்மறியாட்டு வகையில் ஆண், பெண் சோடியும் வெள்ளாட்டு வகையில் ஆண், பெண் சோடியும் உள்ளன. தூதரே! நீர் இணைவைப்பாளர்களிடம் கேட்பீராக: “அவன் இரண்டு ஆண் இனங்களை - அவை ஆண் என்பதால் - தடைசெய்தானா?” அவர்கள் ‘ஆம்’ என்று கூறினால், “அவ்வாறெனில் ஏன் நீங்கள் பெண்ணினத்தையும் தடைசெய்கிறீர்கள்? அல்லது பெண் என்பதால் அவற்றைத் தடைசெய்து விட்டானா?” என்று கேட்பீராக. அவர்கள், ‘ஆம்’ என்று கூறினால், ““அவ்வாறெனில் ஏன் நீங்கள் ஆணினத்தையும் தடைசெய்கிறீர்கள்? அல்லது பெண் இனங்களின் கருவில் உள்ளதை அவன் தடைசெய்து விட்டானா?” என்று கேட்பீராக. அவர்கள், ‘ஆம்’ என்று கூறினால், “பெண் இனங்களின் வயிற்றுள்ளதை ஆண் என்றும் பெண் என்றும் வேறுபடுத்தி அவற்றை ஏன் தடைசெய்கிறீர்கள்? இணைவைப்பாளர்களே! அல்லாஹ்வே இத்தடையை விதித்தான் என்ற உங்களின் வாதத்தில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் சரியான ஆதாரத்தை எனக்குக் கூறுங்கள்” என்று கேட்பீராக.

Al-An'aam 6:143Listen in Qur'an →
144

وَمِنَ ٱلْإِبِلِ ٱثْنَيْنِ وَمِنَ ٱلْبَقَرِ ٱثْنَيْنِ ۗ قُلْ ءَآلذَّكَرَيْنِ حَرَّمَ أَمِ ٱلْأُنثَيَيْنِ أَمَّا ٱشْتَمَلَتْ عَلَيْهِ أَرْحَامُ ٱلْأُنثَيَيْنِ ۖ أَمْ كُنتُمْ شُهَدَآءَ إِذْ وَصَّىٰكُمُ ٱللَّهُ بِهَٰذَا ۚ فَمَنْ أَظْلَمُ مِمَّنِ ٱفْتَرَىٰ عَلَى ٱللَّهِ كَذِبًۭا لِّيُضِلَّ ٱلنَّاسَ بِغَيْرِ عِلْمٍ ۗ إِنَّ ٱللَّهَ لَا يَهْدِى ٱلْقَوْمَ ٱلظَّٰلِمِينَ

இன்னும், "ஒட்டகையில் (ஆண், பெண்) இரு வகை, மாட்டிலும் (பசு, காளை) இரு வகையுண்டு - இவ்விரு வகைகளிலுள்ள ஆண்களையா அல்லது பெட்டைகளையா அல்லது இவ்விரு வகையிலுள்ள பெட்டைகளின் கர்ப்பங்களில் உள்ளவற்றையா (இறைவன்) தடுத்திருக்கிறான். இவ்வாறு அல்லாஹ் கட்டளையிட்ட(தாகக் கூறுகிறீர்களே, அச்)சமயம் நீங்கள் சாட்சியாக இருந்தீர்களா?" என்றும் (நபியே!) நீர் கேளும் - மக்களை வழி கெடுப்பதற்காக அறிவில்லாமல் அல்லாஹ்வின் மீது பொய்க் கற்பனை செய்பவனைவிட அதிக அநியாயக்காரன் யார்? நிச்சயமாக அல்லாஹ் இத்தகைய அநியாயக்காரக் கூட்டத்தினருக்கு நேர்வழி காட்டமாட்டான்.

எட்டு வகைகளில் மீதமுள்ளவை, ஒட்டக சோடிகளும், மாட்டில் இருவகைகளுமாகும். தூதரே! நீர் இணைவைப்பாளர்களிடம் கூறுவீராக: “ஆண் என்பதால் அல்லாஹ் அவற்றை தடைசெய்துள்ளானா? அல்லது பெண் என்பதால் தடைசெய்துள்ளானா? அல்லது கருவறையில் இருந்ததனாலா? அல்லது இணைவைப்பாளர்களே! உங்களின் வாதப்படி அல்லாஹ் இந்த கால்நடைகளைத் தடைசெய்யும்போது நீங்கள் அங்கு இருந்தீர்களா? நேரான பாதையைவிட்டும் மக்களை வழிகெடுப்பதற்காக ஆதாரமின்றி, அல்லாஹ் தடைசெய்யாததை அவன் தடைசெய்ததாகக் கூறி, அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுபவனைவிட மிகப் பெரிய அநியாயக்காரன் வேறு யாரும் இல்லை. அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டியதனால் அநியாயக்காரர்களுக்கு அவன் ஒருபோதும் நேர்வழிபெற உதவிபுரியமாட்டான்.

Al-An'aam 6:144Listen in Qur'an →
145

قُل لَّآ أَجِدُ فِى مَآ أُوحِىَ إِلَىَّ مُحَرَّمًا عَلَىٰ طَاعِمٍۢ يَطْعَمُهُۥٓ إِلَّآ أَن يَكُونَ مَيْتَةً أَوْ دَمًۭا مَّسْفُوحًا أَوْ لَحْمَ خِنزِيرٍۢ فَإِنَّهُۥ رِجْسٌ أَوْ فِسْقًا أُهِلَّ لِغَيْرِ ٱللَّهِ بِهِۦ ۚ فَمَنِ ٱضْطُرَّ غَيْرَ بَاغٍۢ وَلَا عَادٍۢ فَإِنَّ رَبَّكَ غَفُورٌۭ رَّحِيمٌۭ

(நபியே!) நீர் கூறும்; "தானாக இறந்தவைகளையும் வடியும் இரத்தத்தையும் பன்றியின் மாமிசத்தையும் தவிர உண்பவர்கள் புசிக்கக் கூடியவற்றில் எதுவும் தடுக்கப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்டதில் நான் காணவில்லை" - ஏனெனில் இவை நிச்சயமாக அசுத்தமாக இருக்கின்றன. அல்லது அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் சொல்லி அறுக்கப்பட்டது பாவமாயிருப்பதனால் - (அதுவும் தடுக்கப்பட்டுள்ளது) - ஆனால் எவரேனும் நிர்ப்பந்திக்கபட்டு, வரம்பை மீறாமலும் பாவம் செய்ய நினைக்காமலும் புசித்துவிட்டால் - (அவர்மீது குற்றமாகாது ஏனெனில்) நிச்சயமாக உங்கள் இறைவன் மிக்க மன்னிப்போனாகவும், பெருங் கருணையுடையோனுமாகவும் இருக்கின்றான்.

தூதரே! நீர் கூறுவீராக: “அறுக்கப்படாமல் செத்தது, வழியும் இரத்தம், பன்றியின் இறைச்சி -ஏனெனில் அது அசுத்தமாகும் - சிலைகளுக்காகப் பலியிடப்பட்ட அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்படாதது ஆகியவற்றைத் தவிர வேறு எதனையும் இறைவன் எனக்கு வஹி அறிவித்தவற்றில் தடைசெய்யப்பட்டதாகக் காணவில்லை. யாரேனும் கடுமையான பசியினால் நிர்ப்பந்திக்கப்பட்டு - சுவையை நாடாமலும் அவசியமானதை விட அதிகமாகாமலும் - அவற்றை உண்டுவிட்டால் அவர் மீது எந்தக் குற்றமும் இல்லை. தூதரே! உம் இறைவன் நிர்ப்பந்தத்தால் உண்டவர்களை மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களின் விஷயத்தில் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.

Al-An'aam 6:145Listen in Qur'an →
146

وَعَلَى ٱلَّذِينَ هَادُوا۟ حَرَّمْنَا كُلَّ ذِى ظُفُرٍۢ ۖ وَمِنَ ٱلْبَقَرِ وَٱلْغَنَمِ حَرَّمْنَا عَلَيْهِمْ شُحُومَهُمَآ إِلَّا مَا حَمَلَتْ ظُهُورُهُمَآ أَوِ ٱلْحَوَايَآ أَوْ مَا ٱخْتَلَطَ بِعَظْمٍۢ ۚ ذَٰلِكَ جَزَيْنَٰهُم بِبَغْيِهِمْ ۖ وَإِنَّا لَصَٰدِقُونَ

நகத்தையுடைய அனைத்தையும் யூதர்களுக்கு நாம் ஹராமாக்கியிருந்தோம்; ஆடு, மாடு ஆகியவற்றில் - அவற்றின் முதுகுகளிலோ அல்லது வயிறுகளிலோ அல்லது எலும்புகளுடன் கலந்தோ இருக்கும் கொழுப்பைத் தவிர மற்ற அவற்றின் கொழுப்பையும் ஹராமாக்கினோம் - அவர்கள் அக்கிரமம் செய்த காரணத்தினால் அவர்களுக்கு இதனை நாம் கூலியாக கொடுத்தோம் - நிச்சயமாக நாம் உண்மையே கூறுகிறோம்.

யூதர்களுக்கு ஒட்டகம், தீக்கோழி போன்ற நகங்களுடைய பிராணிகள் அனைத்தையும் ஆடு, மாடு ஆகியவற்றின் கொழுப்புகளையும் அவற்றின் முதுகுகளிலோ குடல்களிலோ பித்தட்டு, விலா எழும்பு போன்ற எலும்புகளிலோ ஒட்டியுள்ள கொழுப்புகளைத் தவிர நாம் தடைசெய்தோம். அவர்கள் செய்த அக்கிரமத்தினால் நாம் இவற்றை அவர்கள் மீது தடைசெய்தோம். நாம் தெரிவிக்கும் ஒவ்வொன்றிலும் நிச்சயமாக நாம் உண்மையாளர்களே.

Al-An'aam 6:146Listen in Qur'an →
147

فَإِن كَذَّبُوكَ فَقُل رَّبُّكُمْ ذُو رَحْمَةٍۢ وَٰسِعَةٍۢ وَلَا يُرَدُّ بَأْسُهُۥ عَنِ ٱلْقَوْمِ ٱلْمُجْرِمِينَ

நபியே!) இவர்கள் உம்மைப் பொய்ப்பிப்பார்களானால், "உங்களுடைய இறைவன் விசாலமான கருணையுடையவன்தான்; (எனினும்) குற்றம் செய்த கூட்டத்தாரைவிட்டு அவன் தண்டனை தடுக்கப்படமாட்டாது.

தூதரே! உம் இறைவனிடமிருந்து நீர் கொண்டு வந்ததை அவர்கள் உண்மைப்படுத்தாமல் உம்மைப் பொய்யர் என்று கூறினால் ஆர்வமூட்டும் விதமாக அவர்களிடம்: “உங்களின் இறைவன் கருணை காட்டுவதில் தாராளமானவன். உங்களை அவன் உடனுக்குடன் தண்டிக்காமல் அவகாசம் அளிப்பதும் அவனது கருணையின் வெளிப்பாடுதான், எனவும், எச்சரிக்கும் விதமாக அவர்களிடம்: பாவங்களிலும் குற்றங்களிலும் ஈடுபட்டவர்களை விட்டும் அவனுடைய தண்டனை திருப்பப்படாது.” எனவும் கூறுவீராக.

Al-An'aam 6:147Listen in Qur'an →
148

سَيَقُولُ ٱلَّذِينَ أَشْرَكُوا۟ لَوْ شَآءَ ٱللَّهُ مَآ أَشْرَكْنَا وَلَآ ءَابَآؤُنَا وَلَا حَرَّمْنَا مِن شَىْءٍۢ ۚ كَذَٰلِكَ كَذَّبَ ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ حَتَّىٰ ذَاقُوا۟ بَأْسَنَا ۗ قُلْ هَلْ عِندَكُم مِّنْ عِلْمٍۢ فَتُخْرِجُوهُ لَنَآ ۖ إِن تَتَّبِعُونَ إِلَّا ٱلظَّنَّ وَإِنْ أَنتُمْ إِلَّا تَخْرُصُونَ

(அல்லாஹ்வுக்கு இணை வைக்கும்) முஷ்ரிக்குகள் "அல்லாஹ் நாடியிருந்தால், நாங்களும் எங்கள் மூதாதையர்களும் இணை வைத்திருக்க மாட்டோம்; நாங்கள் எந்தப் பொருளையும் (எங்கள் விருப்பப்படி) ஹராமாக்கியிருக்கவும் மாட்டோம்" என்று கூறுவார்கள் - இப்படித்தான் இவர்களுக்கு முன் இருந்தவர்களும் நமது தண்டனையை அனுபவிக்கும் வரை பொய்ப்பித்துக் கொண்டிருந்தார்கள்; (ஆகவே அவர்களை நோக்கி,) இதற்கு உங்களிடம் ஏதாவது ஆதாரம் உண்டா? இருந்தால் அதை எமக்கு வெளிப்படுத்துங்கள்; (உங்களுடைய வீணான) எண்ணங்களைத் தவிர வேறெதையும் நீங்கள் பின்பற்றவில்லை நீங்கள் பொய் வாதமே புரிகின்றீர்கள்" என்று (நபியே!) நீர் கூறும்.

அல்லாஹ்வின் நாட்டத்தையும் விதியையும் தங்களின் இணைவைப்பு சரி என்பதற்கு ஆதாரமாக்கி இணைவைப்பாளர்கள் கூறுவார்கள்: “அல்லாஹ் நாடியிருந்தால் நாங்களும் எங்கள் முன்னோர்களும் அல்லாஹ்வுக்கு இணைவைத்திருக்கமாட்டோம். நாம் எம்மீது தடைசெய்துகொண்டவற்றை நாம் தடைசெய்யக்கூடாது என அல்லாஹ் நாடியிருந்தால் அதனை நாம் தடைசெய்திருக்கமாட்டோம்.” இவர்களது தவறான வாதம் போன்றவற்றைக் கொண்டே இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் தங்களின் தூதர்களை நிராகரித்தார்கள். “நாம் அவர்களை நிராகரிக்கக் கூடாது என அல்லாஹ் நாடியிருந்தால் நாங்கள் அவர்களை நிராகரித்திருக்க மாட்டோம்” என்று கூறினார்கள். நாம் அவர்கள் மீது இறக்கிய வேதனையைச் சுவைக்கும் வரை இந்த நிராகரிப்பில் அவர்கள் நிலைத்திருந்தார்கள். தூதரே! இந்த இணைவைப்பாளர்களிடம் நீர் கூறுவீராக: “அல்லாஹ் தனக்கு இணைவைக்கப்படுவதை விரும்புகிறான் அல்லது அவன் தடைசெய்தவற்றை அனுமதிப்பதையும், அனுமதித்ததை தடைசெய்வதையும் அவன் விரும்புகிறான் என்பதற்கு ஏதேனும் ஆதாரம் உங்களிடம் இருக்கின்றதா? நீங்கள் இவ்வாறு செய்வது மாத்திரம் அல்லாஹ் திருப்தியடைந்தான் என்பதற்கான ஆதாரமல்ல. நிச்சயமாக நீங்கள் யூகங்களையே பின்பற்றுகிறீர்கள். சத்தியத்திற்கு முன்னால் யூகம் எப்பயனையும் அளிக்காது. நீங்கள் பொய்தான் கூறுகிறீர்கள்.

Al-An'aam 6:148Listen in Qur'an →
149

قُلْ فَلِلَّهِ ٱلْحُجَّةُ ٱلْبَٰلِغَةُ ۖ فَلَوْ شَآءَ لَهَدَىٰكُمْ أَجْمَعِينَ

"நிரப்பமான அத்தாட்சி அல்லாஹ் விடமேயுள்ளது, அவன் நாடியிருந்தால் உங்கள் யாவரையும் அவன் நல்வழியில் செலுத்தியிருப்பான்" என்று நீர் கூறும்.

தூதரே! இணைவைப்பாளர்களிடம் நீர் கூறுவீராக: “இந்த பலவீனமான ஆதாரங்களைத் தவிர உங்களிடம் வேறு ஆதாரம் இல்லையெனில் நீங்கள் கூறும் சாக்குப் போக்குகள் அனைத்தையும் இல்லாமலாக்கும், உங்களின் ஆட்சேபனைகள் அனைத்தையும் தவறு என்பதை நிரூபிக்கும் உறுதியான ஆதாரம் அல்லாஹ்விடம் உள்ளது. இணைவைப்பாளர்களே! அவன் உங்கள் அனைவருக்கும் நேர்வழிகாட்ட நாடியிருந்தால் நேர்வழிகாட்டியிருப்பான்.”

Al-An'aam 6:149Listen in Qur'an →
150

قُلْ هَلُمَّ شُهَدَآءَكُمُ ٱلَّذِينَ يَشْهَدُونَ أَنَّ ٱللَّهَ حَرَّمَ هَٰذَا ۖ فَإِن شَهِدُوا۟ فَلَا تَشْهَدْ مَعَهُمْ ۚ وَلَا تَتَّبِعْ أَهْوَآءَ ٱلَّذِينَ كَذَّبُوا۟ بِـَٔايَٰتِنَا وَٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ بِٱلْءَاخِرَةِ وَهُم بِرَبِّهِمْ يَعْدِلُونَ

"நிச்சயமாக அல்லாஹ் தான் இதனை ஹராமாக்கினான் என சாட்சி சொல்லக்கூடிய உங்கள் சாட்சிகளைக் கொண்டு வாருங்கள்" என்று கூறும்; அவர்கள் சாட்சி கூறினால், (அவர்கள் பொய்யராகவேயிருப்பர்) அவர்களுடன் சேர்ந்து நீர் சாட்சி சொல்ல வேண்டாம் - நம் வசனங்களைப் பொய்ப்பிக்கின்றவர்கள், மறுமையை நம்பாதவர்கள் ஆகியோரின் வீணான மன இச்சைகளை நீர் பின்பற்ற வேண்டாம் - ஏனெனில் அவர்கள் தாம் தங்கள் இறைவனுக்குப் பல தெய்வங்களை இணையாக்குகின்றனர்.

அல்லாஹ் அனுமதித்ததை தடைசெய்து ‘அல்லாஹ்தான் தடைசெய்தான்’ என்று வாதிடும் இந்த இணைவைப்பாளர்களிடம் நீர் கூறுவீராக: “அல்லாஹ்தான் இவற்றை தடைசெய்தான் என்பதற்கான சாட்சிகளைக் கொண்டு வாருங்கள்.” அல்லாஹ்தான் தடைசெய்தான் என்று அறிவில்லாமல் அவர்கள் சாட்சிகூறினால் அவர்களின் சாட்சியத்தை நீர் உண்மைப்படுத்தாதீர். ஏனெனில் அது பொய்சாட்சியாகும். தங்களின் மனஇச்சையின்படி செயல்படுபவர்களின் மனஇச்சையை நீர் பின்பற்றாதீர். அல்லாஹ் அனுமதித்ததை அவர்கள் தடைசெய்த போது நம்முடைய வசனங்களை மறுத்துவிட்டனர். மறுமை நாளின் மீது நம்பிக்கைகொள்ளாதவர்களை நீர் பின்பற்றாதீர். அவர்கள் தங்கள் இறைவனுக்கு இணைவைத்து மற்றவர்களை அவனுடன் சமமாக்குகின்றனர். தங்கள் இறைவனுடன் இவ்வாறு நடந்துகொள்ளும் இவர்களை எவ்வாறு பின்பற்றுவது?

Al-An'aam 6:150Listen in Qur'an →

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.