Muslim99Muslim99
← Tafsir library

6. Al-An'aam

The Cattle · Meccan · 165 ayahs

سُورَةُ الأَنۡعَامِ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 121–130 of 165

121

وَلَا تَأْكُلُوا۟ مِمَّا لَمْ يُذْكَرِ ٱسْمُ ٱللَّهِ عَلَيْهِ وَإِنَّهُۥ لَفِسْقٌۭ ۗ وَإِنَّ ٱلشَّيَٰطِينَ لَيُوحُونَ إِلَىٰٓ أَوْلِيَآئِهِمْ لِيُجَٰدِلُوكُمْ ۖ وَإِنْ أَطَعْتُمُوهُمْ إِنَّكُمْ لَمُشْرِكُونَ

எதன்மீது. (அறுக்கும்போது) அல்லாஹ்வின் பெயர் கூறப்படவில்லையோ அதைப் புசியாதீர்கள் - நிச்சயமாக அது பாவமாகும்; நிச்சயமாக ஷைத்தான்கள் தங்கள் நண்பர்களை உங்களோடு (வீண்) தர்க்கம் செய்யுமாறு தூண்டுகிறார்கள் - நீங்கள் அவர்களுக்கு வழிபட்டால், நிச்சயமாக நீங்களும் முஷ்ரிக்குகள் (இணைவைப்போர்) ஆவீர்கள்.

முஸ்லிம்களே! அல்லாஹ் பெயர் கூறி அறுக்கப்படாததை உண்ணாதீர்கள். அவனல்லாதவற்றின் பெயர் கூறப்பட்டாலும் அல்லது யாரினுடைய பெயரும் கூறப்படாவிட்டாலும் சரியே. அதனை உண்பது அல்லாஹ்வுக்கு அடிபணியாது மாறுசெய்வதாகும். இறந்தவற்றை உண்ணும் விடயத்தில் உங்களிடம் தர்க்கம் புரியுமாறு, ஷைத்தான்கள் தங்களின் தோழர்களிடம் சந்தேகங்களை ஏற்படுத்துகிறார்கள். முஸ்லிம்களே! இறந்தவற்றை உண்ணுவதை அனுமதிப்பதற்காக அவர்கள் ஏற்படுத்தும் சந்தேகங்களுக்கு நீங்கள் கட்டுப்பட்டால் நீங்களும் அவர்களும் ஷிர்க்கில் சமமாகி விடுவீர்கள்.

Al-An'aam 6:121Listen in Qur'an →
122

أَوَمَن كَانَ مَيْتًۭا فَأَحْيَيْنَٰهُ وَجَعَلْنَا لَهُۥ نُورًۭا يَمْشِى بِهِۦ فِى ٱلنَّاسِ كَمَن مَّثَلُهُۥ فِى ٱلظُّلُمَٰتِ لَيْسَ بِخَارِجٍۢ مِّنْهَا ۚ كَذَٰلِكَ زُيِّنَ لِلْكَٰفِرِينَ مَا كَانُوا۟ يَعْمَلُونَ

மரணம் அடைந்த ஒருவனை நாம் உயிர்ப்பித்து எழுப்பினோம் - இன்னும் அவனுக்கு ஓர் ஒளியையும் கொடுத்தோம். அதைக்கொண்டு அவன் மனிதர்களிடையே நடமாடுகிறான். மற்றொருவன் இருள்களில் சிக்கிக்கிடக்கிறான்; அதைவிட்டு அவன் வெளியேறவே முடியாது - இவ்விருவரும் சமமாவாரா? இவ்வாறு காஃபிர்களுக்கு அவர்கள் செய்யக்கூடிய (பாவச்)செயல்கள் அழகாக்கப்பட்டுள்ளன.

அல்லாஹ் நேர்வழிகாட்டுவதற்கு முன்னர் நிராகரிப்பு, அறியாமை, பாவங்கள் ஆகிவற்றால் உயரற்றவர்களாக இருந்து, நம்பிக்கை, கல்வி, வழிப்படுதல் ஆகியவற்றுக்கு வழிகாட்டியதன் மூலம் நாம் உயிர்த்தெழச் செய்தவர்களும், நிராகரிப்பு, அறியாமை, பாவங்கள் என்னும் இருள்களில் சிக்கி வெளியேற முடியாமல் தவிப்பவர்களும் சமமாக முடியுமா? அவர்கள் இருள் சூழ்ந்த பாதைகளில் சிக்கித் தவிக்கிறார்கள். இந்த இணைவைப்பாளர்களுக்கு இணைவைப்பும், செத்தவற்றை உண்ணுதலும், உங்களுடன் தவறான முறையில் தர்க்கம்புரிவதும் அழகாகக் காட்டப்பட்டுள்ளது போல நிராகரிப்பாளர்களுக்கு அவர்களின் செயல்களும் பாவங்களும் அழகாகக் காட்டப்பட்டுள்ளன. மறுமை நாளில் அல்லாஹ் அவர்களுக்கு வேதனைமிக்க தண்டனையைக் கூலியாக வழங்குவதற்கே அவ்வாறு அழகாக்கப்பட்டுள்ளன.

Al-An'aam 6:122Listen in Qur'an →
123

وَكَذَٰلِكَ جَعَلْنَا فِى كُلِّ قَرْيَةٍ أَكَٰبِرَ مُجْرِمِيهَا لِيَمْكُرُوا۟ فِيهَا ۖ وَمَا يَمْكُرُونَ إِلَّا بِأَنفُسِهِمْ وَمَا يَشْعُرُونَ

மேலும் இவ்வாறே ஒவ்வோர் ஊரிலும் குற்றவாளிகளின் தலைவர்களை நாம் ஏற்படுத்தியிருக்கிறோம். அதில் அவர்கள் சூழ்ச்சி செய்வதற்காக, ஆயினும் அவர்கள் தங்களுக்கே சூழ்ச்சி செய்து கொள்கிறார்கள். (இதை) அவர்கள் உணருவதில்லை.

மக்காவிலுள்ள இணைவைப்பாளர்களின் தலைவர்கள் அல்லாஹ்வின் பாதையை விட்டு மக்களைத் தடுத்ததைப் போல ஒவ்வொரு ஊரிலுள்ள தலைவர்களையும் பெரியவர்களையும் ஷைத்தானின் பாதையை நோக்கி அழைப்பதற்கும் தூதர்களையும் அவர்களைப் பின்போற்றுவோரையும் எதிர்ப்பதற்கும், தந்திரங்கள் செய்வோராகவும் சூழ்ச்சி செய்வோராகவும் நாம் ஆக்கினோம். உண்மையில் அவர்களின் சூழ்ச்சிகளும் திட்டங்களும் அவர்களுக்கு எதிராகவே திரும்பும். ஆயினும் தங்களின் மனஇச்சையைப் பின்பற்றுவதனாலும் அறியாமையினாலும் அவர்களால் இதனை உணர்ந்துகொள்ள முடியாது.

Al-An'aam 6:123Listen in Qur'an →
124

وَإِذَا جَآءَتْهُمْ ءَايَةٌۭ قَالُوا۟ لَن نُّؤْمِنَ حَتَّىٰ نُؤْتَىٰ مِثْلَ مَآ أُوتِىَ رُسُلُ ٱللَّهِ ۘ ٱللَّهُ أَعْلَمُ حَيْثُ يَجْعَلُ رِسَالَتَهُۥ ۗ سَيُصِيبُ ٱلَّذِينَ أَجْرَمُوا۟ صَغَارٌ عِندَ ٱللَّهِ وَعَذَابٌۭ شَدِيدٌۢ بِمَا كَانُوا۟ يَمْكُرُونَ

அவர்களுக்கு ஏதாவது ஓர் அத்தாட்சி வந்தால், அவர்கள், "அல்லாஹ்வின் தூதர்களுக்குக் கொடுக்கப்பட்டது போல் எங்களுக்கும் கொடுக்கப்படாத வரையில் நாங்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டோம்" என்று கூறுகிறார்கள்; அல்லாஹ் தனது தூதை எங்கு, அமைக்க வேண்டுமென்பதை நன்கு அறிவான்; குற்றம் செய்து கொண்டிருப்போருக்கு அவர்கள் செய்யும் சதியின் காரணமாக அல்லாஹ்விடம் சிறுமையும், கொடிய வேதனையும் உண்டு.

நிராகரிப்பாளர்களின் தலைவர்களிடம் அல்லாஹ் தன் தூதருக்கு இறக்கிய வசனங்களில் ஏதேனும் ஒரு வசனம் வந்தால், “தூதர்களுக்கு அல்லாஹ் அளித்த தூதுத்துவத்தைப் போல் எங்களுக்கும் அளிக்காத வரை நாங்கள் இதனை உண்மைப்படுத்த மாட்டோம்” என்று கூறுகிறார்கள். தூதுத்துவத்திற்கும் அதன் சுமைகளைத் தாங்குவதற்கும் தகுதியானவர்களை அல்லாஹ் அறிவான். இந்த அக்கிரமக்காரர்கள் சத்தியத்தைவிட்டும் கர்வம் கொண்டதனால் இழிவுக்கும் சூழ்ச்சி செய்ததனால் கடுமையான வேதனைக்கும் ஆளாவார்கள்.

Al-An'aam 6:124Listen in Qur'an →
125

فَمَن يُرِدِ ٱللَّهُ أَن يَهْدِيَهُۥ يَشْرَحْ صَدْرَهُۥ لِلْإِسْلَٰمِ ۖ وَمَن يُرِدْ أَن يُضِلَّهُۥ يَجْعَلْ صَدْرَهُۥ ضَيِّقًا حَرَجًۭا كَأَنَّمَا يَصَّعَّدُ فِى ٱلسَّمَآءِ ۚ كَذَٰلِكَ يَجْعَلُ ٱللَّهُ ٱلرِّجْسَ عَلَى ٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ

அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகிறானோ அவருடைய நெஞ்சை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக விசாலமாக்குகிறான் - யாரை அவன் வழி கெடுக்க நாடுகிறானோ, அவருடைய நெஞ்சை, வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்கிறான் - இவ்வாறே ஈமான் கொள்ளாதவர்களுக்கு அல்லாஹ் தண்டனையை ஏற்படுத்துகிறான்.

யாருக்கு அல்லாஹ் நேர்வழிகாட்ட நாடுகிறானோ இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக அவரது நெஞ்சை விரிவாக்குகிறான். யாரை அவன் கைவிட்டு நேர்வழிகாட்ட விரும்பவில்லையோ. சத்தியத்தை ஏற்றுக்கொள்வதை விட்டும் அவரது நெஞ்சை மிகவும் இறுக்கமானதாக ஆக்கிவிடுகிறான். அவன் தானாக வானத்துக்கு ஏறுவது எப்படி முடியாதோ அது போன்றே சத்தியம் அவனது உள்ளத்தை அடைய முடியாது. இந்த வழிகெட்டவனின் நிலையை எவ்வாறு கடும் நெருக்கடியுள்ளதாக அல்லாஹ் ஆக்கினானோ அது போன்றே தன்னை நம்பிக்கைகொள்ளாதவர்களுக்கு தண்டனையும் வழங்குகிறான்.

Al-An'aam 6:125Listen in Qur'an →
126

وَهَٰذَا صِرَٰطُ رَبِّكَ مُسْتَقِيمًۭا ۗ قَدْ فَصَّلْنَا ٱلْءَايَٰتِ لِقَوْمٍۢ يَذَّكَّرُونَ

(நபியே!) இதுவே உம் இறைவனின் நேரான வழியாகும் - சிந்தனையுள்ள மக்களுக்கு (நம்) வசனங்களை நிச்சயமாக விவரித்திருக்கின்றோம்.

தூதரே! நாம் உமக்கு வழங்கிய இந்த மார்க்கம்தான் கோணலற்ற நேரான வழியாகும். அல்லாஹ் கூறுவதைப் புரிந்து கொள்வோருக்கு நாம் சான்றுகளைத் தெளிவுபடுத்தி விட்டோம்.

Al-An'aam 6:126Listen in Qur'an →
127

۞ لَهُمْ دَارُ ٱلسَّلَٰمِ عِندَ رَبِّهِمْ ۖ وَهُوَ وَلِيُّهُم بِمَا كَانُوا۟ يَعْمَلُونَ

அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடம் (சாந்தியும்) சமாதானமுமுள்ள வீடு(சுவர்க்கம்) உண்டு - அவர்கள் செய்த (நன்மைகளின்) காரணமாக அவன் அவர்களுடைய உற்ற நேசனாகவும் இருக்கிறான்.

அனைத்துத் தீங்குகளில் இருந்தும் பாதுகாப்புக் கிடைக்கும் சுவன இல்லம் அவர்களுக்கு உண்டு. அவர்கள் செய்த நற்செயல்களுக்குக் கூலியாக அல்லாஹ்தான் அவர்களுக்கு உதவியாளன்; அவர்களை வலுப்படுத்தக்கூடியவன்.

Al-An'aam 6:127Listen in Qur'an →
128

وَيَوْمَ يَحْشُرُهُمْ جَمِيعًۭا يَٰمَعْشَرَ ٱلْجِنِّ قَدِ ٱسْتَكْثَرْتُم مِّنَ ٱلْإِنسِ ۖ وَقَالَ أَوْلِيَآؤُهُم مِّنَ ٱلْإِنسِ رَبَّنَا ٱسْتَمْتَعَ بَعْضُنَا بِبَعْضٍۢ وَبَلَغْنَآ أَجَلَنَا ٱلَّذِىٓ أَجَّلْتَ لَنَا ۚ قَالَ ٱلنَّارُ مَثْوَىٰكُمْ خَٰلِدِينَ فِيهَآ إِلَّا مَا شَآءَ ٱللَّهُ ۗ إِنَّ رَبَّكَ حَكِيمٌ عَلِيمٌۭ

அவர்கள் யாவரையும் ஒன்று சேர்க்கும் (மறுமை) நாளில், அவன் (ஜின்களை நோக்கி) "ஓ! ஜின்களின் கூட்டத்தாரே! நீங்கள் மனிதர்களில் அநேகரை (வழிகெடுத்து) உங்களுடன் சேர்த்துக் கொண்டீர்களல்லவா?" என்று கேட்பான். அதற்கு மனிதர்களிலிருந்து அவர்களுடைய நண்பர்கள்; "எங்கள் இறைவா! எங்களில் சிலர் சிலரைக்கொண்டு பலன் அடைந்திருக்கின்றோம். நீ எங்களுக்கு நிர்ணயித்த தவனையை நாங்கள் அடைந்து விட்டோம்" என்று கூறுவார்கள்; அதற்கு அவன், "நரகம் தான் நீங்கள் தங்குமிடமாகும் - அல்லாஹ் நாடினாலன்றி நீங்கள் அதில் என்றென்றும் இருப்பீர்கள் - நிச்சயமாக உமது இறைவன் மிக்க ஞானமுடையோனாகவும், (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.

தூதரே! அல்லாஹ் மனித, ஜின் இனங்கள் அனைவரையும் ஒன்று சேர்க்கும் நாளை நினைவுகூர்வீராக. பின்னர் அல்லாஹ் அவர்களிடம் கூறுவான்: “ஜின் சமூகமே! நீங்கள் ஏராளமான மனிதர்களை வழிகெடுத்து அல்லாஹ்வின் பாதையைவிட்டும் அவர்களைத் தடுத்துவிட்டீர்கள்” அவர்களைப் பின்பற்றிய மனிதர்கள் தங்கள் இறைவனிடம் பதிலளித்தவாறு கூறுவார்கள், “எங்கள் இறைவா! எங்களில் சிலர் சிலரைக் கொண்டு பயனடைந்தோம் (மனிதனின் கீழ்ப்படிதலைக் கொண்டு ஜின்கள் பயனடைந்தன. தங்களின் மனஇச்சையை நிறைவேற்றியதைக் கொண்டு மனிதர்கள் பயனடைந்தனர்) நீ எங்களுக்கு நிர்ணயித்த தவணையையும் நாங்கள் அடைந்துவிட்டோம். இது மறுமை நாளாகும்.” அல்லாஹ் கூறுவான்: “நரகம்தான் உங்களின் தங்குமிடமாகும். அல்லாஹ் நாடிய காலத்தைத் தவிர இங்கு நீங்கள் நிரந்தரமாக வீழ்ந்து கிடப்பீர்கள்,” நரகத்தில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள் என்பதிலிருந்து அளிக்கப்பட்ட விதிவிலக்கு, தமது அடக்கஸ்தலத்திலிருந்து நரகம் செல்லும் வரைக்கும் உள்ள காலமாகும். தூதரே! உம் இறைவன் தான் நிர்ணயித்த விதிகளில், தன் நிர்வாகத்தில் ஞானம்மிக்கவன். தன் அடியார்களையும் அவர்களில் யார் வேதனைக்குத் தகுதியானவர்கள் என்பதையும் அவன் நன்கறிந்தவன்.

Al-An'aam 6:128Listen in Qur'an →
129

وَكَذَٰلِكَ نُوَلِّى بَعْضَ ٱلظَّٰلِمِينَ بَعْضًۢا بِمَا كَانُوا۟ يَكْسِبُونَ

இவ்வாறே அநியாயக்காரர்களில் சிலரை மற்றும் சிலருடன் - அவர்கள் செய்து கொண்டிருக்கும் (பாவச்) செயல்களின் காரணத்தால் - நெருங்கியவர்களாக ஆக்குகிறோம்.

மனிதர்களில் சிலரை வழிகெடுப்பதற்காக வரம்புமீறிய ஜின்களை நாம் அவர்கள் மீது சாட்டியது போன்று ஒவ்வொரு அநியாயக்காரனையும் அவர்கள் சம்பாதித்த பாவங்களின் காரணமாக மற்றொரு அநியாயக்காரனுடன் இணைத்துள்ளோம். அவர்கள் இவர்களை தீமைகள் செய்யத் தூண்டுகிறார்கள்; நன்மைகளை விட்டும் தூரமாக்கி அதில் வெறுப்பையும் ஏற்படுத்துகின்றனர்.

Al-An'aam 6:129Listen in Qur'an →
130

يَٰمَعْشَرَ ٱلْجِنِّ وَٱلْإِنسِ أَلَمْ يَأْتِكُمْ رُسُلٌۭ مِّنكُمْ يَقُصُّونَ عَلَيْكُمْ ءَايَٰتِى وَيُنذِرُونَكُمْ لِقَآءَ يَوْمِكُمْ هَٰذَا ۚ قَالُوا۟ شَهِدْنَا عَلَىٰٓ أَنفُسِنَا ۖ وَغَرَّتْهُمُ ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَا وَشَهِدُوا۟ عَلَىٰٓ أَنفُسِهِمْ أَنَّهُمْ كَانُوا۟ كَٰفِرِينَ

(மறுமை நாளில் இறைவன் ஜின்களையும் மனிதர்களையும் நோக்கி) "ஜின்கள், மனிதர்கள் கூட்டத்தாரே! உங்களுக்கு என் வசனங்களை (அறிவித்து) ஓதிக்காட்டவும், இந்த நாளில் (ஏற்படப்போகும்) சந்திப்பைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்யவும் உங்களிலிருந்தே உங்களிடம் தூதர்கள் வரவில்லையா?" (என்று கேட்பான்), அதற்கு அவர்கள், "நாங்களே எங்கள் (பாவத்தின்) மீது சாட்சி கூறுகிறோம்" என்று கூறுவார்கள்; இதற்குக்காரணம் உலக வாழ்க்கை அவர்களை மயக்கிவிட்டது - அவர்கள் காஃபிர்களாக இருந்ததாக அவர்கள் தங்களுக்கு எதிராகவே சாட்சி கூறுவார்கள்.

மறுமை நாளில் நாம் அவர்களிடம் கூறுவோம்: “மனித, ஜின் சமூகமே! தம் மீது அல்லாஹ் இறக்கியதை உங்களிடம் எடுத்துரைக்கும், மறுமை நாளாகிய இந்த நாளின் சந்திப்பைக் குறித்து எச்சரிக்கை செய்யும் தூதர்கள், உங்கள் இனமான மனிதர்களிலிருந்தே, உங்களிடம் வரவில்லையா? ” அதற்கு அவர்கள், “ஆம். உன் தூதர்கள் எங்களிடம் எடுத்துரைத்தார்கள் என்பதை நிச்சயமாக நாங்கள் ஒத்துக் கொள்கிறோம். இந்நாளின் சந்திப்பையும் ஒத்துக் கொள்கிறோம். ஆயினும் உன் தூதர்களையும் இந்த நாளின் சந்திப்பையும் பொய்யெனக்கூறி நாங்கள் நிராகரித்துவிட்டோம். இவ்வுலகிலுள்ள அழியக்கூடிய அற்ப இன்பங்களும் அலங்காரங்களும் அவர்களை ஏமாற்றிவிட்டன” நாங்கள் உலகிலே அல்லாஹ்வையும் அவனது தூதர்களையும் நிராகரித்து வாழ்ந்தோம் என்று தங்களுக்கு எதிராகவே அவர்கள் சாட்சி கூறுவார்கள். நேரம் முடிவுற்று விட்டதால் அவர்களின் இந்த சாட்சியமும் நம்பிக்கையும் அவர்களுக்கு எந்தப் பயனையும் அளிக்காது.

Al-An'aam 6:130Listen in Qur'an →

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.