Muslim99Muslim99
← Tafsir library

6. Al-An'aam

The Cattle · Meccan · 165 ayahs

سُورَةُ الأَنۡعَامِ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 111–120 of 165

111

۞ وَلَوْ أَنَّنَا نَزَّلْنَآ إِلَيْهِمُ ٱلْمَلَٰٓئِكَةَ وَكَلَّمَهُمُ ٱلْمَوْتَىٰ وَحَشَرْنَا عَلَيْهِمْ كُلَّ شَىْءٍۢ قُبُلًۭا مَّا كَانُوا۟ لِيُؤْمِنُوٓا۟ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ وَلَٰكِنَّ أَكْثَرَهُمْ يَجْهَلُونَ

நிச்சயமாக நாம் அவர்களிடம் மலக்குகளை இறக்கிவைத்தாலும், இறந்தவர்களை அவர்களிடம் பேசும்படிச் செய்தாலும், இன்னும் எல்லாப் பொருட்களையும் அவர்களிடம் நேருக்குநேர் கொண்டுவந்து ஒன்று சேர்த்தாலும் - அல்லாஹ் நாடினாலன்றி அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள் - அவர்களில் பெரும்பாலோர் மூடர்களாகவே இருக்கின்றனர்.

அவர்கள் வேண்டிக்கொண்டதற்கு பதிலளிக்குமுகமாக அவர்களிடம் வானவர்களை இறக்கி, இணைவைப்பாளர்கள் அவர்களைக் கண்ணால் கண்டாலும், இறந்தவர்கள் அவர்களுடன் பேசி, நீர் கொண்டு வந்ததுதான் உண்மை என்பதை அவர்கள் இணைவைப்பாளர்களுக்கு எடுத்துக் கூறினாலும், அவர்கள் விரும்பிய எல்லா சான்றுகளையும் நாம் அவர்களுக்கு வழங்கி கண் முன்னால் அவர்கள் அவற்றைக் கண்டாலும் அவர்களில் அல்லாஹ் நாடியவர்களைத் தவிர எவரும் நீர் கொண்டு வந்ததன் மீது நம்பிக்கைகொள்ள மாட்டார்கள். மாறாக அவர்களின் பெரும்பாலோர் மூடர்களாக இருக்கின்றார்கள். அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழியை வழங்குவதற்கு அவர்கள் அவன் பக்கம் செல்வதில்லை.

Al-An'aam 6:111Listen in Qur'an →
112

وَكَذَٰلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِىٍّ عَدُوًّۭا شَيَٰطِينَ ٱلْإِنسِ وَٱلْجِنِّ يُوحِى بَعْضُهُمْ إِلَىٰ بَعْضٍۢ زُخْرُفَ ٱلْقَوْلِ غُرُورًۭا ۚ وَلَوْ شَآءَ رَبُّكَ مَا فَعَلُوهُ ۖ فَذَرْهُمْ وَمَا يَفْتَرُونَ

இவ்வாறே ஒவ்வொரு நபிக்கும், மனிதரிலும் ஜின்களிலும் உள்ள ஷைத்தான்களை விரோதிகளாக நாம் ஆக்கியிருந்தோம்; அவர்களில் சிலர் மற்றவரை ஏமாற்றும் பொருட்டு, அலங்காரமான வார்த்தைகளை இரகசியமாகச் சொல்லிக்கொண்டிருந்தார்கள்; (நபியே!) உம்முடைய இறைவன் நாடியிருந்தால் இவ்வாறு அவர்கள் செய்திருக்க மாட்டார்கள் - எனவே அவர்களையும் அவர்கள் கூறும் பொய்க்கற்பனைகளையும் விட்டுவிடுவீராக.

இந்த இணைவைப்பாளர்களின் எதிர்ப்பைக் கொண்டு நாம் உம்மை சோதித்தது போலவே உமக்கு முன்னர் எல்லா தூதர்களையும் சோதித்தோம். அவர்களில் ஒவ்வொருவருக்கும் குழப்பக்கார மனிதர்களிலிருந்தும் ஜின்களிலிருந்தும் எதிரிகளை ஏற்படுத்தினோம். அந்த எதிரிகள் ஒருவர் மற்றவருக்கு ஊசலாட்டத்தை ஏற்படுத்தினார்கள். மக்களை ஏமாற்றுவதற்காக அசத்தியத்தை அலங்கரித்துக் காட்டினார்கள். அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் இவ்வாறு செய்திருக்க மாட்டார்கள். ஆயினும் அல்லாஹ் அவர்களை சோதிக்க நாடினான். அவர்களையும் அவர்கள் இட்டுக்கட்டும் அசத்தியத்தையும் நிராகரிப்பையும் விட்டுவிடுவீராக. அவர்களைப் பொருட்படுத்தாதீர்.

Al-An'aam 6:112Listen in Qur'an →
113

وَلِتَصْغَىٰٓ إِلَيْهِ أَفْـِٔدَةُ ٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ بِٱلْءَاخِرَةِ وَلِيَرْضَوْهُ وَلِيَقْتَرِفُوا۟ مَا هُم مُّقْتَرِفُونَ

(ஷைத்தான்களின் அலங்காரமான பேச்சை) மறுமையை நம்பாதவர்களின் உள்ளங்கள் செவிமடுப்பதற்காகவும் அதை திருப்தி கொள்வதற்காகவும் அவர்கள் செய்து வந்ததையே தொடர்ந்து செய்வதற்காகவும் (இவ்வாறு ஷைத்தான்கள் மயக்கினர்).

மறுமையை நம்பிக்கை கொள்ளாதவர்களின் உள்ளங்கள் ஒருவர் மற்றவரின் மீது ஏற்படுத்தும் ஊசலாட்டங்களின் பக்கம் சாய வேண்டும் என்பதற்காகவும், அவற்றை ஏற்றுக் கொண்டு திருப்தியுறுவதற்கும், பாவங்களை சம்பாதிப்பதற்கும் (நபிமாரின் எதிரிகள் தமக்கு மத்தியில் அலங்காரமான வார்த்தைகளைப் பகிர்ந்துகொள்கின்றனர்).

Al-An'aam 6:113Listen in Qur'an →
114

أَفَغَيْرَ ٱللَّهِ أَبْتَغِى حَكَمًۭا وَهُوَ ٱلَّذِىٓ أَنزَلَ إِلَيْكُمُ ٱلْكِتَٰبَ مُفَصَّلًۭا ۚ وَٱلَّذِينَ ءَاتَيْنَٰهُمُ ٱلْكِتَٰبَ يَعْلَمُونَ أَنَّهُۥ مُنَزَّلٌۭ مِّن رَّبِّكَ بِٱلْحَقِّ ۖ فَلَا تَكُونَنَّ مِنَ ٱلْمُمْتَرِينَ

(நபியே! கூறும்;) "அல்லாஹ் அல்லாதவனையா (தீர்ப்பளிக்கும்) நீதிபதியாக நான் தேடுவேன்? அவன்தான் உங்களுக்கு (விரிவான) விளக்கமான வேதத்தை இறக்கியுள்ளான்; எவர்களுக்கு நாம் வேதத்தைக் கொடுத்திருக்கின்றோமோ அவர்கள் நிச்சயமாக இது (குர்ஆன்) உம்முடைய இறைவனிடமிருந்து உண்மையாக இறக்கப்பட்டுள்ளது என்பதை நன்கு அறிவார்கள். எனவே நீர் சந்தேகம் கொள்பவர்களில் ஒருவராகி விடாதீர்.

தூதரே! அல்லாஹ்வுடன் மற்றவர்களையும் சேர்த்து வணங்கும் இந்த இணைவைப்பாளர்களிடம் கூறுவீராக: “நான் அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களை எனக்கும் உங்களுக்குமிடைய தீர்ப்பாளனாக ஏற்றுக்கொள்வது எவ்வாறு சாத்தியம்? அவன்தான் உங்கள் மீது எல்லா விஷயங்களையும் உள்ளடக்கி தெளிவுபடுத்தக்கூடிய குர்ஆனை இறக்கியுள்ளான். தவ்ராத் என்னும் வேதம் வழங்கப்பட்ட யூதர்களும் இன்ஜீல் என்னும் வேதம் வழங்கப்பட்ட கிறிஸ்தவர்களும் அவர்களின் வேதங்களில் காணப்படும் ஆதாரங்களினால் குர்ஆன் சத்தியத்தைப் பொதிந்ததாக உமக்கு அல்லாஹ்விடமிருந்து இறக்கப்படுகிறது என்பதை அறிவார்கள். நாம் உமக்கு அறிவித்தவற்றில் சந்தேகம் கொள்வோரில் ஆகிவிடாதீர்.

Al-An'aam 6:114Listen in Qur'an →
115

وَتَمَّتْ كَلِمَتُ رَبِّكَ صِدْقًۭا وَعَدْلًۭا ۚ لَّا مُبَدِّلَ لِكَلِمَٰتِهِۦ ۚ وَهُوَ ٱلسَّمِيعُ ٱلْعَلِيمُ

மேலும் உம்முடைய இறைவனின் வார்த்தை உண்மையாலும் நியாயத்தாலும் முழுமையாகிவிட்டது - அவனுடைய வார்த்தைகளை மாற்றுவோர் எவரும் இல்லை - அவன் (எல்லாவற்றையும்) கேட்பவனாகவும், (யாவற்றையும்) அறிபவனாகவும் இருக்கின்றான்.

உம் இறைவனின் வாக்கான குர்ஆன் உண்மையிலும் நீதியிலும் முழுமையடைந்துவிட்டது. அவனுடைய வார்த்தைகளை மாற்றக்கூடியவர் யாரும் இல்லை. அவன் தன் அடியார்கள் பேசுவதை செவியேற்கக்கூடியவன். அவர்களைக் குறித்து நன்கறிந்தவன். எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான்.

Al-An'aam 6:115Listen in Qur'an →
116

وَإِن تُطِعْ أَكْثَرَ مَن فِى ٱلْأَرْضِ يُضِلُّوكَ عَن سَبِيلِ ٱللَّهِ ۚ إِن يَتَّبِعُونَ إِلَّا ٱلظَّنَّ وَإِنْ هُمْ إِلَّا يَخْرُصُونَ

பூமியில் உள்ளவர்களில் பெரும் பாலோரை நீர் பின்பற்றுவீரானால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுத்து விடுவார்கள். (ஆதாரமற்ற) வெறும் யூகங்களைத்தான் அவர்கள் பின்பற்றுகிறார்கள் - இன்னும் அவர்கள் (பொய்யான) கற்பனையிலேயே மூழ்கிக்கிடக்கிறார்கள்.

தூதரே! பூமியில் உள்ள பெரும்பான்மையினரை நீர் பின்பற்றினால் அவர்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தை விட்டு உம்மை வழிகெடுத்து விடுவார்கள். சத்தியம் குறைவானர்களுடன்தான் இருக்கும் என்பதே அவன் அமைத்த நியதியாகும். மக்களில் பெரும்பாலோர் ஆதாரமற்ற யூகங்களையே பின்பற்றுகிறார்கள். எனவேதான் தங்களின் தெய்வங்கள் தங்களை அல்லாஹ்விடம் நெருக்கி வைக்கும் என்று எண்ணுகிறார்கள். இந்த விடயத்தில் அவர்கள் பொய்யையே கூறுகிறார்கள்.

Al-An'aam 6:116Listen in Qur'an →
117

إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ مَن يَضِلُّ عَن سَبِيلِهِۦ ۖ وَهُوَ أَعْلَمُ بِٱلْمُهْتَدِينَ

நிச்சயமாக தன்னுடைய நல்வழியை விட்டுத்தவறியவன் யார் என்பதை உம் இறைவன் நன்கு அறிவான் - அவ்வாறே நல்வழியில் செல்பவர்கள் யார் என்பதையும் அவன் நன்கு அறிவான்.

தூதரே! மக்களில் தன் பாதையை விட்டும் வழிதவறியவர்களையும் தன் பாதையில் இருப்பவர்களையும் அல்லாஹ் நன்கறிவான். எந்த ஒன்றும் அவனை விட்டு மறைவாக இல்லை.

Al-An'aam 6:117Listen in Qur'an →
118

فَكُلُوا۟ مِمَّا ذُكِرَ ٱسْمُ ٱللَّهِ عَلَيْهِ إِن كُنتُم بِـَٔايَٰتِهِۦ مُؤْمِنِينَ

(முஃமின்களே!) நீங்கள் அல்லாஹ்வின் வசனங்களை நம்புவோராக இருப்பின் அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டு (அறுக்கப்பட்டவற்றின் மாமிசத்தையே) புசியுங்கள்.

மனிதர்களே! நீங்கள் அல்லாஹ்வின் தெளிவான ஆதாரங்களை உண்மையில் நம்பக்கூடியவர்களாக இருந்தால் அறுக்கும் போது அவன் பெயர் கூறப்பட்டு அறுக்கப்பட்டதை உண்ணுங்கள்.

Al-An'aam 6:118Listen in Qur'an →
119

وَمَا لَكُمْ أَلَّا تَأْكُلُوا۟ مِمَّا ذُكِرَ ٱسْمُ ٱللَّهِ عَلَيْهِ وَقَدْ فَصَّلَ لَكُم مَّا حَرَّمَ عَلَيْكُمْ إِلَّا مَا ٱضْطُرِرْتُمْ إِلَيْهِ ۗ وَإِنَّ كَثِيرًۭا لَّيُضِلُّونَ بِأَهْوَآئِهِم بِغَيْرِ عِلْمٍ ۗ إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِٱلْمُعْتَدِينَ

அல்லாஹ்வின் பெயர் கூறி (உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவற்றில்) அறுக்கப்பட்டதை நீங்கள் சாப்பிடாமலிருக்க என்ன (தடை) இருக்கிறது? நீங்கள் நிர்ப்பந்திக்கப்பட்டாலன்றி சாப்பிட உங்களுக்கு விலக்கப்பட்டவை எவை என்பதை அல்லாஹ் விவரித்துக் கூறியுள்ளான் - ஆனால் பெரும்பாலோர், அறியாமையின் காரணமாகத் தங்களுடைய மன இச்சைகளின் பிரகாரம் (மனிதர்களை) வழி கெடுக்கிறார்கள்; வரம்பு மீறிச்செல்பவர்களை நிச்சயமாக உம் இறைவன் நன்கு அறிகிறான்.

நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்பட்டதை உண்பதை விட்டும் எது உங்களைத் தடுக்கிறது. உங்களுக்குத் தடை செய்யப்பட்டவற்றை அல்லாஹ் உங்களுக்குத் தெளிவாக்கிவிட்டான். நிர்ப்பந்திக்கப்பட்டாலே தவிர அவற்றை விட்டு விடுவது உங்கள் மீது கடமையாகும். ஏனெனில் நிர்ப்பந்தம் தடை செய்யப்பட்டதை அனுமதிக்கும். இணைவைப்பாளர்களில் பெரும்பாலோர், அறியாமையினால் தங்களின் தவறான கருத்துக்களால் தம்மைப் பின்பற்றுவோரை வழிகெடுக்கிறார்கள். அவர்கள் அல்லாஹ் தடை செய்த இறந்தவை போன்றவற்றை அனுமதிக்கிறார்கள். அவன் அனுமதித்த பஹீரா வஸீலா ஹாமீ போன்றவற்றைத் தடைசெய்கிறார்கள். தூதரே! தன் வரம்புகளை மீறக்கூடியவர்களை அல்லாஹ் நன்கறிந்தவன். அதற்காக அவன் அவர்களுக்குத் தண்டனை வழங்குவான்.

Al-An'aam 6:119Listen in Qur'an →
120

وَذَرُوا۟ ظَٰهِرَ ٱلْإِثْمِ وَبَاطِنَهُۥٓ ۚ إِنَّ ٱلَّذِينَ يَكْسِبُونَ ٱلْإِثْمَ سَيُجْزَوْنَ بِمَا كَانُوا۟ يَقْتَرِفُونَ

(முஃமின்களே!) "வெளிப்படையான பாவத்தையும், அந்தரங்கமான பாவத்தையும் விட்டுவிடுங்கள். நிச்சயமாக எவர்கள் பாவத்தைச் சம்பாதிக்கின்றனரோ, அவர்கள் சம்பாதித்தவற்றுக்குக் கூலி கொடுக்கப்படுவார்கள்.

மனிதர்களே! வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் பாவம்செய்வதை விட்டுவிடுங்கள். வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் பாவங்களில் ஈடுபடுவோருக்கு அவர்கள் சம்பாதித்தவற்றுக்கு அல்லாஹ் கூலி வழங்குவான்.

Al-An'aam 6:120Listen in Qur'an →

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.