Muslim99Muslim99
← Tafsir library

6. Al-An'aam

The Cattle · Meccan · 165 ayahs

سُورَةُ الأَنۡعَامِ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 101–110 of 165

101

بَدِيعُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۖ أَنَّىٰ يَكُونُ لَهُۥ وَلَدٌۭ وَلَمْ تَكُن لَّهُۥ صَٰحِبَةٌۭ ۖ وَخَلَقَ كُلَّ شَىْءٍۢ ۖ وَهُوَ بِكُلِّ شَىْءٍ عَلِيمٌۭ

அவன் வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றிப் படைத்தவன். அவனுக்கு மனைவி, எவரும் இல்லாதிருக்க, அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்? அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான். இன்னும் அவன் எல்லாப் பொருட்களையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.

அவன்தான் வானங்களையும் பூமியையும் முன்மாதிரியின்றி படைத்தவன். அவனுக்கு மனைவியே இல்லாதபோது பிள்ளை எங்கிருந்து வர முடியும்? அவன்தான் அனைத்தையும் படைத்தான். அவன் அனைத்தையும் நன்கறிந்தவன். எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.

Al-An'aam 6:101Listen in Qur'an →
102

ذَٰلِكُمُ ٱللَّهُ رَبُّكُمْ ۖ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ ۖ خَٰلِقُ كُلِّ شَىْءٍۢ فَٱعْبُدُوهُ ۚ وَهُوَ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ وَكِيلٌۭ

அவன்தான் அல்லாஹ் - உங்கள் இறைவன்;, அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை எல்லாப் பொருட்களின் படைப்பாளன் அவனே ஆவான்; ஆகவே, அவனையே வழிபடுங்கள் - இன்னும் அவனே எல்லாக் காரியங்களையும் கண்காணிப்பவன்.

மனிதர்களே! இந்த பண்புகளை உடையவன்தான் உங்கள் இறைவன். அவனைத் தவிர உங்களுக்கு வணக்கத்திற்குரிய வேறு இறைவன் இல்லை. அவனை தவிர உண்மையாக வணங்கப்படுவதற்கு வேறு யாரும் கிடையாது. அவன்தான் எல்லாவற்றின் படைப்பாளன். எனவே அவனை மட்டுமே வணங்குங்கள். அவனே வணக்கத்திற்குத் தகுதியானவன். அவன் எல்லாவற்றின் பாதுகாவலனாக இருக்கின்றான்.

Al-An'aam 6:102Listen in Qur'an →
103

لَّا تُدْرِكُهُ ٱلْأَبْصَٰرُ وَهُوَ يُدْرِكُ ٱلْأَبْصَٰرَ ۖ وَهُوَ ٱللَّطِيفُ ٱلْخَبِيرُ

பார்வைகள் அவனை அடைய முடியா ஆனால் அவனே எல்லோருடைய (எல்லாப்) பார்வைகளையும் (சூழ்ந்து) அடைகிறான். அவன் நுட்பமானவன்; தெளிவான ஞானமுடையவன்.

அவனைப் பார்வைகள் சூழ்ந்தறிய முடியாது. ஆனால் அவன் பார்வைகளை சூழ்ந்தறிந்து கொண்டிருக்கிறான். அவன் தன் நல்லடியார்களுடன் மென்மையாளனாகவும் அவர்களைக் குறித்து நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.

Al-An'aam 6:103Listen in Qur'an →
104

قَدْ جَآءَكُم بَصَآئِرُ مِن رَّبِّكُمْ ۖ فَمَنْ أَبْصَرَ فَلِنَفْسِهِۦ ۖ وَمَنْ عَمِىَ فَعَلَيْهَا ۚ وَمَآ أَنَا۠ عَلَيْكُم بِحَفِيظٍۢ

நிச்சயமாக உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஆதாரங்கள் வந்துள்ளன எவர் அவற்றை (கவனித்து)ப் பார்க்கிறாரோ அது அவருக்கே நன்மையாகும், எவர் (அவற்றைப்) பார்க்காது கண்ணை மூடிக்கொள்கிறாரோ அது அவருக்கே கேடாகும் 'நான் உங்களைக் காப்பவன் அல்ல' (என்று நபியே! நீர் கூறும்).

மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான ஆதாரங்களும் சான்றுகளும் உங்களிடம் வந்துவிட்டன. யார் அவற்றைப் புரிந்து கீழ்ப்படிந்தாரோ அதன் பயன் அவருக்கே. யார் அவற்றைக் கண்டுகொள்ளாமலும் புரியாமலும் அவற்றுக்குக் கீழ்ப்படியவில்லையோ அதன் தீங்கு அவருக்கே. உங்களின் செயல்களைக் கணக்கிடுவதற்கு நான் உங்கள் மீது கண்காணிப்பாளன் அல்லன். என் இறைவனிடமிருந்து வந்த தூதராவேன். அவனே உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கின்றான்.

Al-An'aam 6:104Listen in Qur'an →
105

وَكَذَٰلِكَ نُصَرِّفُ ٱلْءَايَٰتِ وَلِيَقُولُوا۟ دَرَسْتَ وَلِنُبَيِّنَهُۥ لِقَوْمٍۢ يَعْلَمُونَ

நீர் (பல வேதங்களிலிருந்து) காப்பி அடித்து இருக்கிறீர் என்று அவர்கள் கூறுவதற்காகவும் அறியக்கூடிய மக்களுக்கு அதனை நாம் தெளிவு படுத்துவதற்காகவும் (நமது) வசனங்களை இவ்வாறே விளக்குகிறோம்.

அல்லாஹ்வின் வல்லமையை அறிவிக்கக்கூடிய ஆதாரங்களையும் சான்றுகளையும் நாம் விதம் விதமாக தெளிவுபடுத்தியது போன்று, வாக்குறுதிகள், எச்சரிக்கைகள், அறிவுரைகள் அடங்கிய வசனங்களையும் நாம் விதம் விதமாக எடுத்துரைக்கிறோம். ஆனாலும் “இது வஹியே அல்ல. உமக்கு முந்தைய வேதக்காரர்களிடமிருந்தே நீர் இதை கற்றுக் கொண்டீர்” என்று இணைவைப்பாளர்கள் கூறுவார்கள். நம்பிக்கைகொண்ட முஹம்மதுடைய சமூகத்தினருக்கு விதம் விதமான அத்தாட்சிகளை தெளிவுபடுத்துவதன் மூலம் நாம் மக்களுக்கு சத்தியத்தை விதம் விதமாகத் தெளிவுபடுத்துகிறோம். அவர்களே சத்தியத்தை ஏற்றுக் கொண்டு அதனைப் பின்பற்றுகிறார்கள்.

Al-An'aam 6:105Listen in Qur'an →
106

ٱتَّبِعْ مَآ أُوحِىَ إِلَيْكَ مِن رَّبِّكَ ۖ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ ۖ وَأَعْرِضْ عَنِ ٱلْمُشْرِكِينَ

(நபியே!) உம்முடைய இறைவனிடமிருந்து உமக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதையே நீர் பின்பற்றுவீராக - அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) இறைவன் வேறில்லை, இணை வைப்போரை நீர் புறக்கணித்துவிடும்.

தூதரே! உம் இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படும் சத்தியத்தைப் பின்பற்றுவீராக. அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை. நிராகரிப்பாளர்களையும் அவர்களின் பிடிவாதத்தையும் எண்ணி கவலையுறாதீர். அவர்களின் விடயம் அல்லாஹ்விடமே.

Al-An'aam 6:106Listen in Qur'an →
107

وَلَوْ شَآءَ ٱللَّهُ مَآ أَشْرَكُوا۟ ۗ وَمَا جَعَلْنَٰكَ عَلَيْهِمْ حَفِيظًۭا ۖ وَمَآ أَنتَ عَلَيْهِم بِوَكِيلٍۢ

அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் இணை வைத்திருக்கவே மாட்டார்கள்; நாம் உம்மை அவர்கள் மீது காப்பாளராக ஏற்படுத்தவில்லை - இன்னும் நீர் அவர்கள் (காரியங்களை நிர்வகிக்கும்) பொறுப்பாளரும் அல்லர்.

அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களில் யாரும் இணைவைத்திருக்க மாட்டார்கள். தூதரே! அவர்களின் செயல்களைக் கணக்கிடும் கண்காணிப்பாளராக நாம் உம்மை அனுப்பவில்லை. நீர் அவர்களைக் கவனிப்பவருமல்ல. நீர் தூதர் மாத்திரமே. எடுத்துரைப்பதே உம்மீதுள்ள பொறுப்பாகும்.

Al-An'aam 6:107Listen in Qur'an →
108

وَلَا تَسُبُّوا۟ ٱلَّذِينَ يَدْعُونَ مِن دُونِ ٱللَّهِ فَيَسُبُّوا۟ ٱللَّهَ عَدْوًۢا بِغَيْرِ عِلْمٍۢ ۗ كَذَٰلِكَ زَيَّنَّا لِكُلِّ أُمَّةٍ عَمَلَهُمْ ثُمَّ إِلَىٰ رَبِّهِم مَّرْجِعُهُمْ فَيُنَبِّئُهُم بِمَا كَانُوا۟ يَعْمَلُونَ

அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள்; (அப்படித் திட்டினால்) அவர்கள் அறிவில்லாமல், வரம்பை மீறி அல்லாஹ்வைத் திட்டுவார்கள் - இவ்வாறே ஒவ்வொரு சமூகத்தாருக்கும் அவர்களுடைய செயலை நாம் அழகாக ஆக்கியுள்ளோம் - பின்பு அவர்களுடைய மீட்சி அவர்களின் இறைவனிடமே இருக்கிறது. அப்போது அவர்கள் செய்ததை அவர்களுக்கு அவன் அறிவிப்பான்.

நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுடன் இணைவைப்பாளர்கள் வணங்கும் தெய்வங்கள் அற்பமானவையாக, திட்டுவதற்கு உரியவையாக இருந்தாலும் அவற்றைத் திட்டாதீர்கள். இதனால் இணைவைப்பாளர்கள் வரம்புமீறி அறியாமையால் அல்லாஹ்வைத் திட்டுவார்கள். இவர்களுக்கு அவர்களின் வழிகேடுகள் அலங்கரிக்கப்பட்டுள்ளது போல ஒவ்வொரு சமூகத்தினருக்கும் அவர்களின் செயல்களை நலவோ தீமையோ நாம் அலங்கரித்தோம். நாம் அவர்களுக்கு அலங்கரித்துக் காட்டியதையே அவர்கள் செய்வார்கள். பின்னர் அவர்கள் அனைவரும் மறுமை நாளில் தங்கள் இறைவனிடமே திரும்ப வேண்டும். இவ்வுலகில் அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றை அவன் அவர்களுக்கு அறிவிப்பான். அவற்றிற்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான்.

Al-An'aam 6:108Listen in Qur'an →
109

وَأَقْسَمُوا۟ بِٱللَّهِ جَهْدَ أَيْمَٰنِهِمْ لَئِن جَآءَتْهُمْ ءَايَةٌۭ لَّيُؤْمِنُنَّ بِهَا ۚ قُلْ إِنَّمَا ٱلْءَايَٰتُ عِندَ ٱللَّهِ ۖ وَمَا يُشْعِرُكُمْ أَنَّهَآ إِذَا جَآءَتْ لَا يُؤْمِنُونَ

(நிராகரித்துக் கொண்டிருக்கும்) அவர்கள், அல்லாஹ்வின் மீது உறுதியான சத்தியம் செய்து, தங்களுக்கு ஓர் அத்தாட்சி வந்துவிடுமானால் தாம் நிச்சயமாக அதைக் கொண்டு ஈமான் கொள்வதாக கூறுகிறார்கள். (நபியே!) அவர்களிடம்) நீர் கூறும்; அத்தாட்சிகள் யாவும் அல்லாஹ்விடமே இருக்கின்றன. அந்த அத்தாட்சிகள் வரும்பொழுது நிச்சயமாக அவர்கள் ஈமான் கொள்ளமாட்டார்கள் என்பதை உங்களுக்கு எது அறிவித்தது?

“முஹம்மது நாங்கள் கூறும் சான்றுகளில் ஏதேனும் ஒன்றை எங்களிடம் கொண்டு வந்தால் நாங்கள் அவரை நிச்சயம் உண்மைப்படுத்துவோம்” என்று இணைவைப்பாளர்கள் கடுமையான சத்தியம் செய்து கூறுகிறார்கள். தூதரே! அவர்களிடம் நீர் கூறுவீராக: “சான்றுகளை நான் இறக்குவதற்கு அவை என்னிடம் இல்லை. அவை அல்லாஹ்விடமே இருக்கின்றன. அவன் தான் நாடிய போது அவற்றை இறக்குகிறான். நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு என்ன தெரியும்? அவர்கள் கூறுவது போன்று சான்றுகள் இறக்கப்பட்டாலும் அவர்கள் நம்பிக்கைகொள்ள மாட்டார்கள். தங்களின் நிராகரிப்பிலும் பிடிவாத்திலுமே நிலைத்திருப்பார்கள். ஏனெனில் அவர்கள் நேர்வழியை விரும்பவில்லை.

Al-An'aam 6:109Listen in Qur'an →
110

وَنُقَلِّبُ أَفْـِٔدَتَهُمْ وَأَبْصَٰرَهُمْ كَمَا لَمْ يُؤْمِنُوا۟ بِهِۦٓ أَوَّلَ مَرَّةٍۢ وَنَذَرُهُمْ فِى طُغْيَٰنِهِمْ يَعْمَهُونَ

மேலும், நாம் அவர்களுடைய உள்ளங்களையும் அவர்களுடைய பார்வைகளையும் திருப்பிவிடுவோம் - அவர்கள் முதலில் இதை நம்பாமல் இருந்தது போலவே இன்னும் அவர்கள் தங்களுடைய வழி கேட்டிலேயே தட்டழிந்து திரியுமாறு அவர்களை நாம் விட்டுவிடுவோம்.

இதற்கு முன்னர் அவர்களின் பிடிவாதத்தினால் அவர்களுக்கும் குர்ஆனுக்குமிடையே நாம் தடுப்பை ஏற்படுத்தியது போன்று சத்தியத்தை அடைய முடியாதவாறு அவர்களின் உள்ளங்களையும் கண்களையும் நாம் திருப்பிவிடுவோம். அவர்களின் வழிகேட்டிலும் அவர்களது இறைவனுக்கு முரண்படுவதிலும் தடுமாறித் திரியுமாறு அவர்களை விட்டுவிடுவோம்.

Al-An'aam 6:110Listen in Qur'an →

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.