Muslim99Muslim99
← Tafsir library

5. Al-Maaida

The Table · Medinan · 120 ayahs

سُورَةُ المَائـِدَةِ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 91–100 of 120

91

إِنَّمَا يُرِيدُ ٱلشَّيْطَٰنُ أَن يُوقِعَ بَيْنَكُمُ ٱلْعَدَٰوَةَ وَٱلْبَغْضَآءَ فِى ٱلْخَمْرِ وَٱلْمَيْسِرِ وَيَصُدَّكُمْ عَن ذِكْرِ ٱللَّهِ وَعَنِ ٱلصَّلَوٰةِ ۖ فَهَلْ أَنتُم مُّنتَهُونَ

நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான். எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா?

போதை மற்றும் சூதாட்டத்தை ஷைத்தான் அலங்கரித்துக்காட்டுவதன் மூலம் உள்ளங்களிடையே பகைமையையும் வெறுப்பையும் ஏற்படுத்தவும் இறைநினைவிலிருந்தும் தொழுகையிலிருந்தும் திருப்பிவிடுவதையுமே நாடுகின்றான். நம்பிக்கையாளர்களே! இந்த பாவமான காரியங்களை நீங்கள் விட்டு விடுவீர்களா என்ன? அதுவே உங்களுக்கு உகந்ததாகும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. எனவே நீங்கள் விலகிக் கொள்ளுங்கள்.

Al-Maaida 5:91Listen in Qur'an →
92

وَأَطِيعُوا۟ ٱللَّهَ وَأَطِيعُوا۟ ٱلرَّسُولَ وَٱحْذَرُوا۟ ۚ فَإِن تَوَلَّيْتُمْ فَٱعْلَمُوٓا۟ أَنَّمَا عَلَىٰ رَسُولِنَا ٱلْبَلَٰغُ ٱلْمُبِينُ

இன்னும் அல்லாஹ்வுக்கும் வழிபடுங்கள். (அவன்) தூதருக்கும் வழிபடுங்கள். எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள். (இதனை) நீங்கள் புறக்கணித்துவிட்டால், (நம் கட்டளைகளைத்) தெளிவாக எடுத்து விளக்குவது மட்டுமே நம் தூதர்மீது கடமையாகும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.

அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அல்லாஹ்வுக்கும் கட்டுப்படுங்கள். அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுங்கள். மாறுசெய்வதிலிருந்து விலகியிருங்கள். நீங்கள் இதனைப் புறக்கணித்தால் அறிந்துகொள்ளுங்கள், அல்லாஹ்வின் கட்டளைகளை எடுத்துரைப்பதுதான் நம் தூதர் மீதுள்ள கடமையாகும். அவர் எடுத்துரைத்துவிட்டார். நீங்கள் நேர்வழி அடைந்தால் அது உங்களுக்குத்தான் நல்லது. நீங்கள் தீங்கிழைத்தால் அதன் கேடு உங்களையே சாரும்.

Al-Maaida 5:92Listen in Qur'an →
93

لَيْسَ عَلَى ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ جُنَاحٌۭ فِيمَا طَعِمُوٓا۟ إِذَا مَا ٱتَّقَوا۟ وَّءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ ثُمَّ ٱتَّقَوا۟ وَّءَامَنُوا۟ ثُمَّ ٱتَّقَوا۟ وَّأَحْسَنُوا۟ ۗ وَٱللَّهُ يُحِبُّ ٱلْمُحْسِنِينَ

ஈமான் கொண்டு, நற்கருமங்கள் செய்பவர்கள் (எதிர்காலத்தில்) தங்களைப் (பாவத்திலிருந்து) காத்துக் கொண்டும், ஈமான் கொண்டும், மேலும் நற்கருமங்கள் செய்து கொண்டும், (விலக்கப்பட்டவற்றை விட்டுத்) தங்களைப்(பின்னரும்) பாதுகாத்துக் கொண்டும், ஈமானில் உறுதியாக இருந்து கொண்டும், மேலும் (அல்லாஹ்வுக்கு) அஞ்சியவர்களாக அழகிய நன்மைகளைச் செய்து வருவார்களானால், சென்ற காலத்தில் (இவ்விதிமுறைகள் வருமுன்) தடுக்கப்பட்டவற்றை அவர்கள் புசித்து விட்டது குறித்து அவர்கள் மீது குற்றம் ஏற்படாது. நன்மை செய்கிறவர்களையே அல்லாஹ் நேசிக்கிறான்.

அல்லாஹ்வை நம்பிக்கைகொண்டு, அவனை நெருங்குவதற்காக நற்செயல்கள் புரிந்தவர்கள் அல்லாஹ்வின் கோபத்தை அஞ்சியோராகவும் அவன் மீது நம்பிக்கைகொண்டு நற்செயல்களில் ஈடுபட்டவர்களாகவும் இருந்துகொண்டு தடைசெய்யப்பட்டவற்றைத் தவிர்ந்துகொண்டால் மது அருந்துவது தடைசெய்யப்படுவதற்கு முன் அருந்தியதற்கு அவர்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. அதன் பின் ‘அல்லாஹ் நம்மைக் கண்காணிக்கிறான்’ என்ற உணர்வு அவர்களிடம் மேலோங்கி அவனைப் பார்ப்பது போன்றே அவனை வணங்க ஆரம்பித்தார்கள். தன்னைப் பார்ப்பது போன்றே தன்னை வணங்கக்கூடியவர்கள், எப்பொழுதுமே அல்லாஹ் தம்மைக் கண்காணிக்கின்றான் என்ற உணர்வுடன் இருப்பதனால் அவர்களை அல்லாஹ் நேசிக்கிறான். இதுதான் ஒரு நம்பிக்கையாளனை தனது செயற்பாடுகளை அழகிய முறையிலும் திறமையாகவும் செய்வதற்குத் தூண்டுகிறது.

Al-Maaida 5:93Listen in Qur'an →
94

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَيَبْلُوَنَّكُمُ ٱللَّهُ بِشَىْءٍۢ مِّنَ ٱلصَّيْدِ تَنَالُهُۥٓ أَيْدِيكُمْ وَرِمَاحُكُمْ لِيَعْلَمَ ٱللَّهُ مَن يَخَافُهُۥ بِٱلْغَيْبِ ۚ فَمَنِ ٱعْتَدَىٰ بَعْدَ ذَٰلِكَ فَلَهُۥ عَذَابٌ أَلِيمٌۭ

ஈமான் கொண்டவர்களே! (நீங்கள் இஹ்ராம் உடை அணிந்திருக்கும் நிலையில்) உங்கள் கைகளும், உங்கள் ஈட்டிகளும் சுலபமாக வேட்டையில் அடையக்கூடிய பொருளைக்கொண்டு நிச்சயமாக அல்லாஹ் உங்களை சோதிப்பான். ஏனென்றால் மறைவில் அவனை யார் அஞ்சுகிறார்கள் என்பதை அல்லாஹ் அறி(விப்ப)தற்காகத்தான். இதன் பின்னரும் எவர் வரம்பு மீறுகிறாரோ அவருக்கு நோவினை தரும் வேதனையுண்டு.

அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் இஹ்ராம் அணிந்த நிலையில் இருக்கும் போது ஏதாவது தரை வேட்டைப் பிராணியை அனுப்பி வைத்து அவன் உங்களைச் சோதிப்பான். அவற்றில் சிறியதை உங்களின் கைகளால் பிடித்துவிடலாம், பெரியதை உங்களின் ஈட்டியால் வேட்டையாடிவிடலாம். அல்லாஹ்வின் அறிவைப் பரிபூரணமாக நம்பிக்கைகொண்டதனால், மறைவில் தன்னை அஞ்சுவோர் யார் என்பதை அடையாளப்படுத்தி விசாரணை செய்வதற்காகவே அல்லாஹ் இவ்வாறான விஷயங்களை ஏற்படுத்துகிறான். தனது செயல்கள் மறைய முடியாத தன்னைப் படைத்தவனுக்கு அஞ்சியதனால் வேட்டையாடாமல் தவிர்ந்து கொள்கிறான். யார் வரம்புமீறி இஹ்ராம் அணிந்த நிலையில் வேட்டையாடி விடுவாரோ - அல்லாஹ் தடுத்த செயல்களைச் செய்ததனால் - அவருக்கு மறுமைநாளில் வேதனைமிக்க தண்டனை உண்டு.

Al-Maaida 5:94Listen in Qur'an →
95

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تَقْتُلُوا۟ ٱلصَّيْدَ وَأَنتُمْ حُرُمٌۭ ۚ وَمَن قَتَلَهُۥ مِنكُم مُّتَعَمِّدًۭا فَجَزَآءٌۭ مِّثْلُ مَا قَتَلَ مِنَ ٱلنَّعَمِ يَحْكُمُ بِهِۦ ذَوَا عَدْلٍۢ مِّنكُمْ هَدْيًۢا بَٰلِغَ ٱلْكَعْبَةِ أَوْ كَفَّٰرَةٌۭ طَعَامُ مَسَٰكِينَ أَوْ عَدْلُ ذَٰلِكَ صِيَامًۭا لِّيَذُوقَ وَبَالَ أَمْرِهِۦ ۗ عَفَا ٱللَّهُ عَمَّا سَلَفَ ۚ وَمَنْ عَادَ فَيَنتَقِمُ ٱللَّهُ مِنْهُ ۗ وَٱللَّهُ عَزِيزٌۭ ذُو ٱنتِقَامٍ

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் இஹ்ராம் உடை உடுத்தியவர்களாக இருக்கும் நிலையில் வேட்டை(யாடி)ப் பிராணிகளைக் கொல்லாதீர்கள்;. உங்களில் யாராவது ஒருவர் வேண்டுமென்றே அதைக் கொன்றால், (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகளிலிருந்து அவர் கொன்றதற்கு சமமான ஒன்றை(ப் பரிகாரமாக) ஈடாகக் கொடுக்க வேண்டியது. அதற்கு உங்களில் நீதமுடைய இருவர் தீர்ப்பளிக்க வேண்டும். அது கஃபாவை அடைய வேண்டிய குர்பானியாகும். அல்லது பரிகாரமாக ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும், அல்லது (பரிகாரமளிக்க ஏதும் இல்லையாயின்) தனதுவினையின் பலனை அனுபவிப்பதற்காக அதற்குச் சமமான நோன்புகள் நோற்பது (அதற்கு ஈடாகும்;). முன்னால் நடந்ததை அல்லாஹ் மன்னித்து விட்டான், எவர் மீண்டும் (இதைச்) செய்வாரோ அல்லாஹ் அவரை வேதனை செய்வான், அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவனாகவும், (குற்றம் செய்வோருக்குத் தக்க) தண்டனை கொடுக்க உரியோனாகவும் இருக்கின்றான்.

நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் ஹஜ்ஜுக்காகவோ உம்ராவுக்காகவோ இஹ்ராம் அணிந்த நிலையில் இருக்கும் போது தரை மிருகங்களை வேட்டையாடாதீர்கள். யார் வேண்டுமென்றே வேட்டையாடிக் கொன்றுவிடுவாரோ அவர் அதுபோன்ற ஒட்டகத்தையோ ஆட்டையோ மாட்டையோ பரிகாரமாகக் கொடுக்க வேண்டும். முஸ்லிம்களிடையே நீதிமிக்க இரு மனிதர்கள் இதை முடிவுசெய்ய வேண்டும். அவர்கள் இருவரின் தீர்ப்பில் முடிவாவதை மக்காவிற்கு அனுப்பப்பட்டு ஹரமில் பலியிடப்படும் அல்லது ஹரமிலுள்ள சில ஏழைகளுக்கு உணவளிப்பதற்காக அதற்கான தொகையைக் கொடுத்துவிட வேண்டும் (ஒவ்வொரு ஏழைக்கும் அரை ஸாவு அளவு உணவு அளிக்கப்பட வேண்டும்) அல்லது அதற்குப் பரிகாரமாக நோன்பு நோற்க வேண்டும். இவையனைத்தும் வேட்டையாடியவர் தாம் செய்த செயலின் விளைவை அனுபவிக்க வேண்டும் என்பதற்காகத்தான். தடைஉத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்னால், புனித எல்லையில் வேட்டையாடியது இஹ்ராம் அணிந்த நிலையில் தரைவாழ் மிருகங்களை வேட்டையாடியது ஆகியவற்றை அல்லாஹ் மன்னித்துவிட்டான். தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னரும் அவ்வாறு செய்பவரை அல்லாஹ் தண்டித்துப் பழிவாங்குவான். அவன் வல்லமைமிக்கவன். தான் நாடினால் தன் கட்டளைக்கு மாறாகச் செயல்படுபவர்களை தண்டிப்பதும் அவனது வல்லமையில் உள்ளவைதான். அதிலிருந்து அவனை யாராலும் தடுக்கமுடியாது.

Al-Maaida 5:95Listen in Qur'an →
96

أُحِلَّ لَكُمْ صَيْدُ ٱلْبَحْرِ وَطَعَامُهُۥ مَتَٰعًۭا لَّكُمْ وَلِلسَّيَّارَةِ ۖ وَحُرِّمَ عَلَيْكُمْ صَيْدُ ٱلْبَرِّ مَا دُمْتُمْ حُرُمًۭا ۗ وَٱتَّقُوا۟ ٱللَّهَ ٱلَّذِىٓ إِلَيْهِ تُحْشَرُونَ

உங்களுக்கும் (இதர) பிரயாணிகளுக்கும் பலன் கிடைக்கும் பொருட்டு (நீங்கள் இஹ்ராம் கட்டியிருந்தாலும்) கடலில் வேட்டையாடுவதும், அதைப் புசிப்பதும் உங்களுக்கு ஹலாலாக - ஆகுமானதாக ஆக்கப்பட்டுள்ளது. ஆனால் நீங்கள் இஹ்ராம் கட்டியிருக்கும் காலமெல்லம் தரையில் வேட்டையாடுவது உங்கள் மீது ஹராமாக்கப்பட்டுள்ளது. எனவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள், அவனிடத்திலேயே நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்கள்.

நீரிலுள்ள பிராணிகளை வேட்டையாடுவதும் கடல் உங்களுக்காக கரை ஒதுக்கிவிடும் - உயிருள்ள அல்லது இறந்த - பிராணிகளும் உங்களில் ஊரில் இருப்பவர்களுக்கும் பயணிகளாக இருப்பவர்களுக்கும் பயன்பெறும் பொருட்டு அனுமதிக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஹஜ் அல்லது உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்த நிலையில் இருக்கும் வரை நிலத்தில் வேட்டையாடுவது உங்களுக்குத் தடைசெய்யப்பட்டுள்ளது. அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சிக் கொள்ளுங்கள். மறுமைநாளில் நீங்கள் அவன் பக்கமே திரும்ப வேண்டும். உங்களின் செயல்களுக்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.

Al-Maaida 5:96Listen in Qur'an →
97

۞ جَعَلَ ٱللَّهُ ٱلْكَعْبَةَ ٱلْبَيْتَ ٱلْحَرَامَ قِيَٰمًۭا لِّلنَّاسِ وَٱلشَّهْرَ ٱلْحَرَامَ وَٱلْهَدْىَ وَٱلْقَلَٰٓئِدَ ۚ ذَٰلِكَ لِتَعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ يَعْلَمُ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ وَأَنَّ ٱللَّهَ بِكُلِّ شَىْءٍ عَلِيمٌ

அல்லாஹ், சங்கை பொருந்திய வீடாகிய கஃபாவை மனிதர்களுக்கு (நன்மைகள் அருளும்) நிலையான தலமாக்கியிருக்கிறான். இன்னும் சங்கையான மாதங்களையும், (குர்பானி கொடுக்கும்) பிராணிகளையும், (குர்பானிக்காக) அடையாளம் பெற்ற பிராணிகளையும் (அபயம் பெற்றவையாக ஆக்கியிருக்கிறான்). அல்லாஹ் இவ்வாறு செய்தது, நிச்சயமாக அல்லாஹ் வானங்களிலும், பூமியிலும் இருப்பவற்றையெல்லாம் நன்கறிவான் என்பதை நீங்கள் அறிந்து கொள்வதற்காகவேயாம். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் நன்கறிபவன்.

கஃபா என்னும் ஆலயத்தை அல்லாஹ் மக்களின் மார்க்கத்தை சீர்ப்படுத்துவதாகவும் வாழ்விற்குப் பாதுகாப்பாகவும் அமைத்துள்ளான். இதனை மையப்படுத்தியே அவர்களின் மார்க்க நலன்களான தொழுகை, ஹஜ், உம்ரா ஆகியவையும் புனித பூமியில் அமைதி, அனைத்து வகையான கனிகளும் கிடைத்தல் போன்ற உலக நலன்களும் நிகழ்கின்றன. (துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப்) ஆகிய புனித மாதங்களில் மற்றவர்கள் அவர்களுடன் போரிடுவதிலிருந்து அபயமளிக்கக்கூடியதாக ஆக்கியுள்ளான். பலிப்பிராணியையும் ஹரமை நோக்கி கொண்டு செல்லப்படுகிறது என்பதற்கு அடையாளமாக கழுத்தில் பட்டைகட்டப்பட்ட பிராணியையும் அதைக்கொண்டு செல்லக்கூடியவர்களுக்கு எந்தத் தீங்கிழைப்பதிலிருந்து அபயமளிக்கக்கூடியதாக ஆக்கியுள்ளான். அவ்வாறான அருளை அல்லாஹ் உங்கள் மீது சொரிந்திருப்பது, வானங்களிலும் பூமியிலும் உள்ளவற்றை அல்லாஹ் அறிவான், அவன் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். உங்களுக்கு நலன்கள் ஏற்படுவதற்கும் தீங்குகள் நிகழ முன் அவற்றைத் தடுத்து நிறுத்துவதற்குமுரிய அச்சட்டங்களை அவன் விதியாக்கியமை தனது அடியார்களுக்குப் பொருத்தமானவற்றை அவன் அறிந்துள்ளான் என்பதற்குரிய சான்றாகும்.

Al-Maaida 5:97Listen in Qur'an →
98

ٱعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلْعِقَابِ وَأَنَّ ٱللَّهَ غَفُورٌۭ رَّحِيمٌۭ

அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் தண்டனை கொடுப்பதில் கடுமையானவன். மேலும். நிச்சயமாக அல்லாஹ் (மிகவும்) மன்னிப்போனும், பெருங்கருணையாளனுமாவான்,

மனிதர்களே! தன் கட்டளைக்கு மாறாகச் செயல்படக்கூடியவர்களை அல்லாஹ் கடுமையாகத் தண்டிக்கக்கூடியவன் என்பதையும் தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களை அவன் மிகவும் மன்னிக்கக்கூடியவன், அவர்களின் விஷயத்தில் அவன் மிகுந்த கருணையாளனாக இருக்கின்றான் என்பதையும் அறிந்துகொள்ளுங்கள்.

Al-Maaida 5:98Listen in Qur'an →
99

مَّا عَلَى ٱلرَّسُولِ إِلَّا ٱلْبَلَٰغُ ۗ وَٱللَّهُ يَعْلَمُ مَا تُبْدُونَ وَمَا تَكْتُمُونَ

(இறைவன் கட்டளைகளை) எடுத்துக் கூறுவதே அன்றி இத்தூதர் மீது (வேறு கடமை) இல்லை. இன்னும் நீங்கள் வெளிப்படுத்துவதையும், நீங்கள் மறைத்து வைத்திருப்பதையும் அல்லாஹ் நன்கறிவான்.

அல்லாஹ் கட்டளையிட்டதை எடுத்துரைப்பதைத் தவிர தூதர் மீது எந்தக் கடமையும் இல்லை. மக்களுக்கு நேர்வழி அளிக்கும் அதிகாரம் அவரிடம் இல்லை. அது அல்லாஹ்வின் கையில்தான் உள்ளது. நீங்கள் வெளிப்படுத்தும், மறைத்துவைக்கும் நேர்வழியையும் வழிகேட்டையும் அவன் அறிவான். அதற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.

Al-Maaida 5:99Listen in Qur'an →
100

قُل لَّا يَسْتَوِى ٱلْخَبِيثُ وَٱلطَّيِّبُ وَلَوْ أَعْجَبَكَ كَثْرَةُ ٱلْخَبِيثِ ۚ فَٱتَّقُوا۟ ٱللَّهَ يَٰٓأُو۟لِى ٱلْأَلْبَٰبِ لَعَلَّكُمْ تُفْلِحُونَ

(நபியே!) தீயவை அதிகமாக இருப்பது உம்மை ஆச்சரியப்படுத்திய போதிலும், "தீயதும், நல்லதும் சமமாகா". எனவே, அறிவாளிகளே! அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள். அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்" என்று நீர் கூறுவீராக.

தூதரே! நீர் கூறுவீராக: “ஒவ்வொரு பொருளிலும் நல்லவையும் தீயவையும் சமமாக முடியாது” தீயவற்றின் பெருக்கம் உம்மை வியப்பில் ஆழ்த்தினாலும் சரியே. பெருக்கம் சிறப்பிற்கான அடையாளம் அல்ல. அறிவுடையோரே! தீயவற்றை விட்டு விட்டு நல்லவற்றில் ஈடுபட்டு அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். இதனால் நீங்கள் நரகத்திலிருந்து தப்பித்து சுவனத்தைப் பெறுவீர்கள்.

Al-Maaida 5:100Listen in Qur'an →

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.