Muslim99Muslim99
← Tafsir library

5. Al-Maaida

The Table · Medinan · 120 ayahs

سُورَةُ المَائـِدَةِ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 81–90 of 120

81

وَلَوْ كَانُوا۟ يُؤْمِنُونَ بِٱللَّهِ وَٱلنَّبِىِّ وَمَآ أُنزِلَ إِلَيْهِ مَا ٱتَّخَذُوهُمْ أَوْلِيَآءَ وَلَٰكِنَّ كَثِيرًۭا مِّنْهُمْ فَٰسِقُونَ

அவர்கள் அல்லாஹ்வின் மீதும் நபியின் மீதும், அவர் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின் மீதும் நம்பிக்கை கொண்டிருந்தார்களானால், அவர்கள், காஃபிர்களைத் (தங்களின்) உற்ற நண்பர்களாக ஆக்கிக் கொண்டிருக்கமாட்டார்கள். ஆனால் அவர்களில் அநேகர் பாவிகளாகவே இருக்கின்றனர்.

இந்த யூதர்கள் உண்மையாகவே அல்லாஹ்வின் மீதும் அவனது தூதரின் மீதும் நம்பிக்கைகொண்டிருந்தால் நம்பிக்கையாளர்களை விடுத்து இணைவைப்பாளர்களை நேசிப்பவர்களாகவும் அவர்களின் பக்கம் சாய்பவர்களாகவும் இருக்கமாட்டார்கள். ஏனெனில் அவர்கள் நிராகரிப்பாளர்களை நண்பர்களாக ஆக்கிக் கொள்வதை விட்டும் தடுக்கப்பட்டுள்ளார்கள். இந்த யூதர்களில் அதிகமானோர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிவது அவனையும் விசுவாசிகளையும் நேசித்தல் ஆகியவற்றை விட்டும் வெளியேறியவர்களே.

Al-Maaida 5:81Listen in Qur'an →
82

۞ لَتَجِدَنَّ أَشَدَّ ٱلنَّاسِ عَدَٰوَةًۭ لِّلَّذِينَ ءَامَنُوا۟ ٱلْيَهُودَ وَٱلَّذِينَ أَشْرَكُوا۟ ۖ وَلَتَجِدَنَّ أَقْرَبَهُم مَّوَدَّةًۭ لِّلَّذِينَ ءَامَنُوا۟ ٱلَّذِينَ قَالُوٓا۟ إِنَّا نَصَٰرَىٰ ۚ ذَٰلِكَ بِأَنَّ مِنْهُمْ قِسِّيسِينَ وَرُهْبَانًۭا وَأَنَّهُمْ لَا يَسْتَكْبِرُونَ

நிச்சயமாக யூதர்களையும், இணைவைப்பவர்களையும் முஃமின்களுக்குக் கடும் பகைவர்களாகவே (நபியே!) நீர் காண்பீர். "நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்களாக இருக்கின்றோம்" என்று சொல்பவர்களை, முஃமின்களுக்கு நேசத்தால் மிகவும் நெருங்கியவர்களாக (நபியே!) நீர் காண்பீர். ஏனென்றால் அவர்களில் கற்றறிந்த குருமார்களும், துறவிகளும் இருக்கின்றனர். மேலும் அவர்கள் இறுமாப்புக் கொள்வதுமில்லை.

தூதரே! உம்மீதும் நீர் கொண்டுவந்ததன் மீதும் நம்பிக்கைகொண்ட நம்பிக்கையாளர்களுக்கு மற்ற மக்களைவிட யூதர்களும், சிலை வணங்கிகளும் ஏனைய இணைவைப்பாளர்களுமே கடும் பகைவர்களாக இருப்பதை நீர் காண்பீர். காரணம், அந்த யூதர்களிடம் காணப்படும் கர்வமும் பொறாமையும் குரோதமுமேயாகும். உம்மீது நம்பிக்கைகொண்ட நம்பிக்கையாளர்களுக்கு மிக நெருக்கமானவர்களாகத் தம்மை கிறிஸ்தவர்கள் என்று கூறிக் கொள்பவர்களை நீர் காண்பீர். நம்பிக்கையாளர்களுடன் அவர்கள் நெருக்கமாயிருப்பதற்குக் காரணம் அவர்களில் அறிஞர்களும் வணக்கசாலிகளும் இருக்கிறார்கள். அவர்கள் பணிவானவர்கள். கர்வம் கொள்வதில்லை. ஏனெனில் கர்வம்கொள்பவனின் உள்ளத்தை சத்தியம் சென்றடையாது.

Al-Maaida 5:82Listen in Qur'an →
83

وَإِذَا سَمِعُوا۟ مَآ أُنزِلَ إِلَى ٱلرَّسُولِ تَرَىٰٓ أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ ٱلدَّمْعِ مِمَّا عَرَفُوا۟ مِنَ ٱلْحَقِّ ۖ يَقُولُونَ رَبَّنَآ ءَامَنَّا فَٱكْتُبْنَا مَعَ ٱلشَّٰهِدِينَ

இன்னும் (இத்தகையோர்) இத்தூதர் மீது இறக்கப்பட்டதை செவியேற்றால், உண்மையை அவர்கள் உணர்ந்துகொண்ட காரணத்தால் அவர்கள் கண்கள் கண்ணீர் வடிப்பதை நீர் காண்பீர். "எங்கள் இறைவனே! நாங்கள் (இவ் வேதத்தின் மீது) நம்பிக்கை கொண்டோம். எனவே, (இவ்வேதம் சத்தியமானது என்று,) சாட்சி சொல்வோருடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக! என்றும் அவர்கள் கூறுவார்கள்.

நஜாசியையும் அவரது தோழர்களையும் போன்ற இவர்கள் இளகியமனம் கொண்டவர்கள். ஈஸா (அலை) அவர்கள் கொண்டுவந்ததை அவர்கள் அறிந்து வைத்திருந்ததனால் குர்ஆனிலிருந்து இறக்கப்பட்டதைச் செவியுற்று அது சத்தியமே என அறிந்துகொண்டபோது உள்ளச்சத்தால் அழுகிறார்கள். “எங்கள் இறைவா! உன் தூதர் முஹம்மது மீது நீ இறக்கியதை நாங்கள் நம்பிவிட்டோம். எனவே மறுமைநாளில் சாட்சிகூறும் இந்த சமூகமான முஹம்மது (ஸல்) அவர்களது சமுதாயத்துடன் எங்களையும் பதிவுசெய்வாயாக” என்று கூறுகிறார்கள்.

Al-Maaida 5:83Listen in Qur'an →
84

وَمَا لَنَا لَا نُؤْمِنُ بِٱللَّهِ وَمَا جَآءَنَا مِنَ ٱلْحَقِّ وَنَطْمَعُ أَن يُدْخِلَنَا رَبُّنَا مَعَ ٱلْقَوْمِ ٱلصَّٰلِحِينَ

மேலும், "அல்லாஹ்வின் மீதும், எங்களிடம் வந்துள்ள சத்திய (வேத)த்தின் மீதும், நாங்கள் நம்பிக்கை கொள்ளாதிருக்க எங்களுக்கு என்ன (தடை) இருக்கின்றது? எங்களுடைய இறைவன் எங்ளை நல்லோர் கூட்டத்துடன் சேர்த்து வைக்கவே நாங்கள் ஆசை வைக்கிறோம்" (என்றும் அவர்கள் கூறுவர்).

அல்லாஹ்வையும், அவன் இறக்கிய, முஹம்மது (ஸல்) அவர்கள் கொண்டு வந்த சத்தியத்தையும் நம்பிக்கைகொள்வதற்கும் நமக்குமிடையில் தடையாக என்ன இருக்க முடியும்? நாங்கள் தூதர்களுடனும் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு அவனது தண்டனையை அஞ்சிய அவர்களைப் பின்பற்றுபவர்களுடனும் சேர்ந்து சுவனம் செல்லவே விரும்புகிறோம்.

Al-Maaida 5:84Listen in Qur'an →
85

فَأَثَٰبَهُمُ ٱللَّهُ بِمَا قَالُوا۟ جَنَّٰتٍۢ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ خَٰلِدِينَ فِيهَا ۚ وَذَٰلِكَ جَزَآءُ ٱلْمُحْسِنِينَ

அவர்கள் இவ்வாறு கூறுவதன் காரணமாக, கீழே சதா நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கும் சுவனபதிகளை அல்லாஹ் அவர்களுக்குப் பரிசாகக் கொடுக்கின்றான், அவர்கள் அவற்றில் என்றென்றும் இருப்பார்கள் - இன்னும், இதுவே நன்மை செய்பவருக்குரிய நற்கூலியாகும்.

அவர்கள் நம்பிக்கை கொண்டு சத்தியத்தையும் ஏற்றுக் கொண்டதனால் அல்லாஹ் அவர்களுக்குச் சுவனங்களைக் கூலியாகக் கொடுத்தான். அவற்றின் மாளிகைகளுக்கும் மரங்களுக்கும் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அங்கு அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். இதுதான் சத்தியத்தைப் பின்பற்றுவதிலும் எவ்வித கட்டுப்பாடும் நிபந்தனையுமின்றி சத்தியத்திற்கு சிறந்த முறையில் கட்டுப்படுபவர்களுக்கான கூலியாகும்.

Al-Maaida 5:85Listen in Qur'an →
86

وَٱلَّذِينَ كَفَرُوا۟ وَكَذَّبُوا۟ بِـَٔايَٰتِنَآ أُو۟لَٰٓئِكَ أَصْحَٰبُ ٱلْجَحِيمِ

ஆனால், எவர் நிராகரித்து, நம் வசனங்களைப் பொய்ப்பிக்கின்றார்களோ, அ(த்தகைய)வர்கள் நரகவாசிகளேயாவர்கள்.

அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்து அவன் தன் தூதர்மீது இறக்கிய வசனங்களை பொய்யெனக் கூறியவர்கள்தாம் நரகவாசிகள். அவர்களே எரியும் நெருப்பிற்கு உரியவர்கள். அங்கிருந்து ஒருபோதும் அவர்களால் வெளியேறவே முடியாது.

Al-Maaida 5:86Listen in Qur'an →
87

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تُحَرِّمُوا۟ طَيِّبَٰتِ مَآ أَحَلَّ ٱللَّهُ لَكُمْ وَلَا تَعْتَدُوٓا۟ ۚ إِنَّ ٱللَّهَ لَا يُحِبُّ ٱلْمُعْتَدِينَ

முஃமின்களே! அல்லாஹ் உங்களுக்கு ஹலாலாக்கி (ஆகுமாக்கி)யுள்ள, பரிசுத்தமான பொருட்களை ஹராமானவையாக (விலக்கப்பட்டவையாக) ஆக்கிக் கொள்ளாதீர்கள்;. இன்னும் வரம்பு மீறியும் செல்லாதீர்கள்;. நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.

அல்லாஹ்வை நம்பியவர்களே! உங்களுக்கு அனுமதிக்கப்பட்ட உணவுகள், குடிபானங்கள், திருமணம் ஆகிய இன்பங்களை தடைசெய்துவிடாதீர்கள். துறவரம், வழிபாடு எனக் கருதி அவற்றைத் தடைசெய்துவிடாதீர்கள். அல்லாஹ் தடைசெய்தவற்றின் வரம்புகளை மீறிவிடாதீர்கள். தான் விதித்த வரம்புகளை மீறக்கூடியவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை. மாறாக அவர்களை வெறுக்கிறான்.

Al-Maaida 5:87Listen in Qur'an →
88

وَكُلُوا۟ مِمَّا رَزَقَكُمُ ٱللَّهُ حَلَٰلًۭا طَيِّبًۭا ۚ وَٱتَّقُوا۟ ٱللَّهَ ٱلَّذِىٓ أَنتُم بِهِۦ مُؤْمِنُونَ

அல்லாஹ் உங்களுக்கு அனுமதியளித்துள்ள (ஹலாலான) நல்ல பொருட்களையே புசியுங்கள்;. நீங்கள் ஈமான் கொண்டிருக்கும் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.

அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய அனுமதிக்கப்பட்ட தூய்மையான உணவுகளை உண்ணுங்கள். அபகரிக்கப்பட்ட அல்லது அறுவறுக்கத்தக்கது போன்ற தடைசெய்யப்பட்டவற்றை உண்ணாதீர்கள். அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சிக் கொள்ளுங்கள். அவன் மீதுதான் நீங்கள் நம்பிக்கைகொண்டுள்ளீர்கள். அவன் மீதான உங்களின் நம்பிக்கை அவனை அஞ்சுவதைக் கட்டாயமாக்கிவிடுகிறது.

Al-Maaida 5:88Listen in Qur'an →
89

لَا يُؤَاخِذُكُمُ ٱللَّهُ بِٱللَّغْوِ فِىٓ أَيْمَٰنِكُمْ وَلَٰكِن يُؤَاخِذُكُم بِمَا عَقَّدتُّمُ ٱلْأَيْمَٰنَ ۖ فَكَفَّٰرَتُهُۥٓ إِطْعَامُ عَشَرَةِ مَسَٰكِينَ مِنْ أَوْسَطِ مَا تُطْعِمُونَ أَهْلِيكُمْ أَوْ كِسْوَتُهُمْ أَوْ تَحْرِيرُ رَقَبَةٍۢ ۖ فَمَن لَّمْ يَجِدْ فَصِيَامُ ثَلَٰثَةِ أَيَّامٍۢ ۚ ذَٰلِكَ كَفَّٰرَةُ أَيْمَٰنِكُمْ إِذَا حَلَفْتُمْ ۚ وَٱحْفَظُوٓا۟ أَيْمَٰنَكُمْ ۚ كَذَٰلِكَ يُبَيِّنُ ٱللَّهُ لَكُمْ ءَايَٰتِهِۦ لَعَلَّكُمْ تَشْكُرُونَ

உங்கள் சத்தியங்களில் வீணானவற்றிற்காக அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிக்க மாட்டான்;. எனினும் (ஏதாவது ஒன்றை) உறுதிப்படுத்தச் செய்யும் சத்தியங்களுக்காக (அவற்றில் தவறினால்) உங்களைப் பிடிப்பான்;. (எனவே சத்தியத்தை முறித்தால்) அதற்குரிய பரிகாரமாவது, உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் கொடுக்கும் ஆகாரத்தில் நடுத்தரமானதைக் கொண்டு பத்து ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும், அல்லது அவர்களுக்கு ஆடை அணிவிக்க வேண்டும், அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். ஆனால் (இம் மூன்றில் எதனையும்) ஒருவர் பெற்றிராவிட்டால் (அவர்) மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும்;. நீங்கள் சத்தியம் செய்யும் பொழுது இதுவே உங்கள் சத்தியங்களின் பரிகாரமாகும். உங்கள் சத்தியங்களை (முறித்து விடாமல்) பேணிக் காத்துக் கொள்ளுங்கள்;. நீங்கள் அல்லாஹ்வுக்கு நள்றி செலுத்தும் பொருட்டு அவன் தன் அத்தாட்சிகளை - ஆயத்களை - உங்களுக்கு இவ்வாறு விளக்குகிறான்.

நம்பிக்கையாளர்களே! சத்தியம் செய்வதை நாடாது உங்களின் நாவில் வெளிப்பட்டுவிடும் சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களிடம் கணக்குக் கேட்க மாட்டான். நீங்கள் உறுதியான நோக்கத்துடன் செய்யும் சத்தியங்களை முறித்து விட்டால்தான் அவன் உங்களிடம் கணக்குக் கேட்பான். நீங்கள் உள்ளத்தில் உறுதிகொண்டு நாவினால் மொழிந்த சத்தியங்களை முறித்துவிட்டால் பின்வரும் மூன்றில் நீங்கள் விரும்பும் ஒன்றைச் செய்தால் சத்தியத்தை முறித்த பாவத்தை அல்லாஹ் அழித்துவிடுவான். உங்களின் ஊரிலுள்ள நடுநிலையான உணவிலிருந்து பத்து ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் (ஒவ்வொரு ஏழைக்கும் அரை ஸாவு அளவு உணவுப்பொருள் கொடுக்கப்பட வேண்டும்) அல்லது அவர்களுக்கு தகுந்த ஆடை வழங்க வேண்டும் அல்லது நம்பிக்கைகொண்ட ஒரு அடிமையை விடுதலை செய்ய வேண்டும். தனது சத்தியத்திற்குப் பரிகாரம் செய்வதற்கு மேற்குறிப்பிட்ட மூன்று விஷயங்களில் எதையும் பெறாதவர் மூன்று நாட்கள் நோன்பு நோற்று பரிகாரம் செய்யட்டும். இதுதான் நீங்கள் முறித்துவிட்ட சத்தியங்களுக்கான பரிகாரமாகும். அல்லாஹ்வின் மீது பொய்ச்சத்தியம் செய்வது, அதிகமாக சத்தியம் செய்வது, சத்தியத்தின் படி செயற்படாமை ஆகியவற்றை விட்டும் உங்களது சத்தியங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள். சத்தியத்தின் படி செயற்படாமை சிறந்ததாக இருந்தால் அதனை முறித்துவிடுங்கள். சிறந்ததைச் செய்து உங்களது சத்தியங்களுக்குப் பரிகாரம் செய்து விடுங்கள். நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத்தந்ததற்காக நீங்கள் அவனுக்கு நன்றிசெலுத்தும்பொருட்டு சத்தியங்களுக்குப் பரிகாரத்தைத் தெளிவுபடுத்தியது போன்று ஹலால், ஹராம் பற்றிய தெளிவான தன் சட்டங்களை அவன் உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறான்.

Al-Maaida 5:89Listen in Qur'an →
90

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِنَّمَا ٱلْخَمْرُ وَٱلْمَيْسِرُ وَٱلْأَنصَابُ وَٱلْأَزْلَٰمُ رِجْسٌۭ مِّنْ عَمَلِ ٱلشَّيْطَٰنِ فَٱجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ

ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும். ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.

அல்லாஹ்வை நம்பியவர்களே! அறிவை மழுங்கடிக்கும் மதுவும் இருதரப்பும் பணயம் வைத்து ஆடுகின்ற சூதாட்டமும் இணைவைப்பாளர்கள் புனிதமாகக் கருதி பலிபீடத்திற்காக அல்லது வணங்குவதற்காக நட்டுவைத்திருக்கும் கல்லும் அவர்களுக்காக மறைவில் பங்குவைக்கப்பட்டிருப்பதை அறிவதற்காக பயன்படுத்தப்படும் அம்பும் ஷைத்தான் அழகுபடுத்தியுள்ள பாவமான செயல்களாகும். எனவே அவற்றிலிருந்து விலகிக் கொள்ளுங்கள். இவ்வுலகில் கண்ணியமான வாழ்வையும் மறுமையில் சுவன இன்பத்தையும் அடைவீர்கள்.

Al-Maaida 5:90Listen in Qur'an →

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.