Muslim99Muslim99
← Tafsir library

5. Al-Maaida

The Table · Medinan · 120 ayahs

سُورَةُ المَائـِدَةِ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 61–70 of 120

61

وَإِذَا جَآءُوكُمْ قَالُوٓا۟ ءَامَنَّا وَقَد دَّخَلُوا۟ بِٱلْكُفْرِ وَهُمْ قَدْ خَرَجُوا۟ بِهِۦ ۚ وَٱللَّهُ أَعْلَمُ بِمَا كَانُوا۟ يَكْتُمُونَ

(முஃமின்களே!) இவர்கள் உங்களிடம் வந்தால் "நாங்கள் ஈமான் கொண்டுள்ளோம்!" என்று கூறுகிறார்கள். ஆனால் உண்மையிலேயே அவர்கள் குஃப்ருடன் (நிராகரிப்புடன்)தான் வந்தார்கள்;. இன்னும் அதனுடனேயே வெளியேறினார்கள், (நிச்சயமாக) அவர்கள் மறைத்து வைத்திருப்பதை அல்லாஹ் மிகவும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.

நம்பிக்கையாளர்களே! அவர்களிலுள்ள நயவஞ்சகர்கள் உங்களிடம் வந்தால் தமது நயவஞ்சகத்தனத்தின் காரணமாக உங்களிடம் நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றனர். உண்மையில் அவர்கள் உங்களிடம் வந்தபோதும் உங்களைவிட்டுச் சென்றபோதும் நிராகரிப்பிலே உள்ளனர். அவர்கள் உங்களிடம் ஈமானை வெளிப்படுத்திய போதும் அவர்கள் மறைத்து வைத்திருந்த நிராகரிப்பை அல்லாஹ் நன்கறிந்தவன். அதற்கேற்ப அவன் அவர்களுக்குத் தண்டனை வழங்குவான்.

Al-Maaida 5:61Listen in Qur'an →
62

وَتَرَىٰ كَثِيرًۭا مِّنْهُمْ يُسَٰرِعُونَ فِى ٱلْإِثْمِ وَٱلْعُدْوَٰنِ وَأَكْلِهِمُ ٱلسُّحْتَ ۚ لَبِئْسَ مَا كَانُوا۟ يَعْمَلُونَ

அவர்களில் பெரும்பாலோர் பாவத்திலும், அக்கிரமத்திலும் விலக்கப்பட்ட பொருள்களை உண்பதிலும் விரைந்து செயல் படுவதை (நபியே!) நீர் காண்பீர். அவர்கள் செய்வதெல்லாம் தீமையேதாம்.

தூதரே! யூதர்களிலும் நயவஞ்சகர்களிலும் பெரும்பாலானோர் பொய் கூறுதல், அநியாயம் இழைத்தல் தடுக்கப்பட்ட விதத்தில் மக்களின் சொத்துக்களை உண்ணுதல் ஆகிய செயல்களினால் மற்றவர்களின் மீது அத்துமீறல் போன்ற பெரும்பாவங்களைச் செய்வதற்கு விரைகிறார்கள். அவர்கள் செய்வது மிகவும் மோசமான செயலாகும்.

Al-Maaida 5:62Listen in Qur'an →
63

لَوْلَا يَنْهَىٰهُمُ ٱلرَّبَّٰنِيُّونَ وَٱلْأَحْبَارُ عَن قَوْلِهِمُ ٱلْإِثْمَ وَأَكْلِهِمُ ٱلسُّحْتَ ۚ لَبِئْسَ مَا كَانُوا۟ يَصْنَعُونَ

அவர்கள் பாவமான வார்த்தைகளைக் கூறுவதிலிருந்தும், விலக்கப்பட்ட பொருள்களை அவர்கள் உண்பதிலிருந்தும், (அவர்களுடைய) மேதைகளும் குருமார்களும் அவர்ளைத் தடுத்திருக்க வேண்டாமா? இவர்கள் செய்வதெல்லாம் தீமையேதாம்.

அவர்களின் தலைவர்களும், அறிஞர்களும், பொய், பொய்சாட்சி, மக்களின் செல்வங்களை தவறான முறையில் உண்ணுதல் ஆகிய அவர்கள் மும்முரமாகச் செய்யும் பாவங்களை விட்டும், அவர்களைத் தடுக்க வேண்டாமா? அவர்களின் தலைவர்களும், அறிஞர்களும் தீமைகளைத் தடுக்காமல் செய்துகொண்டிருப்பது மிகவும் மோசமான காரியமாகும்.

Al-Maaida 5:63Listen in Qur'an →
64

وَقَالَتِ ٱلْيَهُودُ يَدُ ٱللَّهِ مَغْلُولَةٌ ۚ غُلَّتْ أَيْدِيهِمْ وَلُعِنُوا۟ بِمَا قَالُوا۟ ۘ بَلْ يَدَاهُ مَبْسُوطَتَانِ يُنفِقُ كَيْفَ يَشَآءُ ۚ وَلَيَزِيدَنَّ كَثِيرًۭا مِّنْهُم مَّآ أُنزِلَ إِلَيْكَ مِن رَّبِّكَ طُغْيَٰنًۭا وَكُفْرًۭا ۚ وَأَلْقَيْنَا بَيْنَهُمُ ٱلْعَدَٰوَةَ وَٱلْبَغْضَآءَ إِلَىٰ يَوْمِ ٱلْقِيَٰمَةِ ۚ كُلَّمَآ أَوْقَدُوا۟ نَارًۭا لِّلْحَرْبِ أَطْفَأَهَا ٱللَّهُ ۚ وَيَسْعَوْنَ فِى ٱلْأَرْضِ فَسَادًۭا ۚ وَٱللَّهُ لَا يُحِبُّ ٱلْمُفْسِدِينَ

"அல்லாஹ்வின் கை கட்டப்பட்டிருக்கிறது" என்று யூதர்கள் கூறுகிறார்கள்;. அவர்களுடைய கைகள்தாம் கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு கூறியதின் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டார்கள்;. அல்லாஹ்வின் இரு கைகளோ விரிக்கப்பட்டே இருக்கின்றன. தான் நாடியவாறு (தன் அருட்கொடைகளை) கொடுக்கிறான்; உம் மீது உம் இறைவனால் இறக்கப்பட்ட (இவ்வேதம்) அவர்கள் அநேகரில் வரம்பு மீறுதலையும் குஃப்ரை (நிராகரிப்பை)யும் நிச்சயமாக அதிகப் படுத்துகிறது, ஆகவே அவர்களிடையே பகைமையும், வெறுப்புணர்ச்சியையும் இறுதி நாள்வரை நாம் போட்டுவிட்டோம்;. அவர்கள் யுத்த நெருப்பை மூட்டும்போதெல்லாம் அதனை அல்லாஹ் அணைத்து விடுகிறான்;. (ஆயினும்) இன்னும் அவர்கள் பூமியில் குழப்பம் செய்து கொண்டே திரிகின்றனர். அல்லாஹ் குழப்பம் செய்பவர்களை நேசிக்க மாட்டான்.

யூதர்கள் தங்களுக்கு பஞ்சமும் கஷ்டமும் ஏற்பட்டபோது, “நலவு மற்றும் நன்கொடையை விட்டும் அல்லாஹ்வின் கை தடுக்கப்பட்டுள்ளது. தன்னிடத்தில் இருப்பதை எம்மை விட்டும் அவன் தடுத்துக்கொண்டான்.” எனக் கூறினார்கள். அறிந்துகொள்ளுங்கள், அவர்களின் கைகள்தான் நற்காரியத்தையும், நன்கொடையையும் விட்டுத் தடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறியதனால் அல்லாஹ்வின் அருளிலிருந்து விரட்டப்பட்டுவிட்டார்கள். அல்லாஹ்வின் கரங்கள் நலவையும் நன்கொடையையும் அள்ளிவழங்குபவை. அவன் தான் நாடியவாறு செலவு செய்கிறான். அவன் அள்ளியும் கொடுக்கிறான் குறைத்தும் கொடுக்கிறான். அவனைத் தடுப்பவரோ நிர்ப்பந்திப்பவரோ யாரும் இல்லை. தூதரே! அல்லாஹ் உம்மீது இறக்கியது யூதர்களுக்கு - அவர்களின் பொறாமையினால் - வரம்புமீறலையும் நிராகரிப்பையுமே அதிகப்படுத்தும். நாம் அவர்களிடையே பகைமையையும் குரோதத்தையும் ஏற்படுத்திவிட்டோம். அவர்கள் ஒன்றிணைந்து போருக்கான முன்னேற்பாடுகளை செய்யும் போதெல்லாம் அல்லது போர்மூட்டுவதற்கான சூழ்ச்சிகளில் ஈடுபடும் போதெல்லாம் நாம் அவர்களின் ஒன்றிணைவை சிதைத்து பலத்தைப் போக்கிவிடுகின்றோம். அவர்கள் இஸ்லாத்தை அழிப்பதற்கான பணிகளிலும் சூழ்ச்சிகளிலும் ஈடுபட்டு பூமியில் குழப்பம் விளைக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டேயிருப்பார்கள். குழப்பக்காரர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை.

Al-Maaida 5:64Listen in Qur'an →
65

وَلَوْ أَنَّ أَهْلَ ٱلْكِتَٰبِ ءَامَنُوا۟ وَٱتَّقَوْا۟ لَكَفَّرْنَا عَنْهُمْ سَيِّـَٔاتِهِمْ وَلَأَدْخَلْنَٰهُمْ جَنَّٰتِ ٱلنَّعِيمِ

வேதமுடையவர்கள் மெய்யாகவே ஈமான் கொண்டு, (அல்லாஹ்வுக்கு) அஞ்சி, நடந்தார்களானால், நிச்சயமாக நாம் அவர்களுடைய பாவங்களை அவர்களை விட்டும் மன்னித்து, அவர்களை (நிலையான) இன்பங்கள் மிகுந்த சுவனபதிகளில் நுழைய வைப்போம்.

யூதர்களும் கிறிஸ்தவர்களும் முஹம்மது கொண்டு வந்ததை உண்மைப்படுத்தி பாவங்களை விட்டும் தவிர்ந்து அல்லாஹ்வை அஞ்சினால் அவர்கள் செய்த பாவங்கள் அனைத்தையும் - அவை அதிகமாக இருந்தாலும் - நாம் போக்கிவிடுவோம். மறுமைநாளில் அருட்கொடைகள் நிறைந்த சுவனங்களில் அவர்களைப் பிரவேசிக்கச் செய்வோம். அங்கு என்றும் முடிவடையாத நிலையான அருட்கொடைகளை அவர்கள் அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்.

Al-Maaida 5:65Listen in Qur'an →
66

وَلَوْ أَنَّهُمْ أَقَامُوا۟ ٱلتَّوْرَىٰةَ وَٱلْإِنجِيلَ وَمَآ أُنزِلَ إِلَيْهِم مِّن رَّبِّهِمْ لَأَكَلُوا۟ مِن فَوْقِهِمْ وَمِن تَحْتِ أَرْجُلِهِم ۚ مِّنْهُمْ أُمَّةٌۭ مُّقْتَصِدَةٌۭ ۖ وَكَثِيرٌۭ مِّنْهُمْ سَآءَ مَا يَعْمَلُونَ

இன்னும்; அவர்கள் தவ்ராத்தையும், இன்ஜீலையும், இன்னும் தம் இறைவனிடத்திலிருந்து தங்களுக்கு இறக்கப்பட்டதையும், நிலைநாட்டியிருந்தால் அவர்கள் மேலே - (வானத்தில்) இருந்தும், தம் பாதங்களுக்கு அடியில் (பூமியில்) இருந்தும் (இன்பத்தைப்) புசித்திருப்பார்கள்; அவர்களில் சிலர்(தாம்) நேர்வழியுள்ள சமுதாயத்தினராய் இருக்கின்றனர், அவர்களில் பெரும்பாலோர் செய்யும் காரியங்கள் மிகக் கெட்டவையேயாகும்.

யூதர்கள் தவ்ராத்தில் உள்ளதன்படியும் கிறிஸ்தவர்கள் இன்ஜீலில் உள்ளதன்படியும் செயல்பட்டு, அனைவரும் குர்ஆனில் உள்ளதன்படியும் செயல்பட்டிருந்தால் நாம் மேலிருந்து மழையைப் பொழியவைத்து பூமியிலிருந்து தாவரங்களை முளைக்கச் செய்து வாழ்வாதாரத்துக்கான வழிகளை நான் அவர்களுக்கு இலகுபடுத்தியிருப்பேன். வேதக்காரர்களில் சத்தியத்தின் மீது நிலைத்திருப்பவர்களும் இருக்கிறார்கள். அவர்களின் பெரும்பாலானோரது செயல்கள் நம்பிக்கைகொள்ளாததால் மேசாமாகவே உள்ளது.

Al-Maaida 5:66Listen in Qur'an →
67

۞ يَٰٓأَيُّهَا ٱلرَّسُولُ بَلِّغْ مَآ أُنزِلَ إِلَيْكَ مِن رَّبِّكَ ۖ وَإِن لَّمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رِسَالَتَهُۥ ۚ وَٱللَّهُ يَعْصِمُكَ مِنَ ٱلنَّاسِ ۗ إِنَّ ٱللَّهَ لَا يَهْدِى ٱلْقَوْمَ ٱلْكَٰفِرِينَ

தூதரே! உம் இறைவனிடமிருந்து உம்மீது இறக்கப்பட்டதை (மக்களுக்கு) எடுத்துக் கூறிவிடும்; (இவ்வாறு) நீர் செய்யாவிட்டால், அவனுடைய தூதை நீர் நிறைவேற்றியவராகமாட்டீர். அல்லாஹ் உம்மை மனிதர்களி(ன் தீங்கி)லிருந்து காப்பாற்றுவான்;. நிச்சயமாக அல்லாஹ் நிராகரிக்கும் கூட்டத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான்.

தூதரே! உமது இறைவனிடமிருந்து உமக்கு இறக்கப்பட்டதை முழுமையாக எடுத்துரைத்துவிடுவீராக. எதையும் மறைத்துவிடாதீர். நீர் எதையேனும் மறைத்தால் உமது இறைவனின் தூதுச் செய்தியை முழுமையாக எடுத்தரைத்தவராக ஆகமாட்டீர். (நபியவர்கள் தமக்கு வழங்கப்பட்ட தூதுச் செய்தியை முழுமையாக எடுத்துரைத்து விட்டார்கள். யாரேனும் இதற்கு எதிராகக் கூறினால் அவர் அல்லாஹ்வின் மீது பெரும் அபாண்டத்தைக் கூறியவராவார்). இன்றைய தினத்திற்குப் பிறகு அல்லாஹ்வே உம்மைப் பாதுகாப்பான். எவரும் தீய நோக்கோடு உம்மை நெருங்கிவிட முடியாது. எடுத்துரைப்பது மட்டுமே உம்மீதுள்ள பணியாகும். நேர்வழியை விரும்பாத நிராகரிப்பாளர்களுக்கு அல்லாஹ் நேர்வழிகாட்டமாட்டான்.

Al-Maaida 5:67Listen in Qur'an →
68

قُلْ يَٰٓأَهْلَ ٱلْكِتَٰبِ لَسْتُمْ عَلَىٰ شَىْءٍ حَتَّىٰ تُقِيمُوا۟ ٱلتَّوْرَىٰةَ وَٱلْإِنجِيلَ وَمَآ أُنزِلَ إِلَيْكُم مِّن رَّبِّكُمْ ۗ وَلَيَزِيدَنَّ كَثِيرًۭا مِّنْهُم مَّآ أُنزِلَ إِلَيْكَ مِن رَّبِّكَ طُغْيَٰنًۭا وَكُفْرًۭا ۖ فَلَا تَأْسَ عَلَى ٱلْقَوْمِ ٱلْكَٰفِرِينَ

"வேதமுடையவர்களே! நீங்கள் தவ்ராத்தையும், இன்; ஜீலையும், இன்னும் உங்கள் இறைவனிடமிருந்து உங்கள் மீது இறக்கப்பட்டவற்றையும் நீங்கள் கடைப்பிடித்து நடக்கும் வரையிலும் நீங்கள் எதிலும் சேர்ந்தவர்களாக இல்லை" என்று கூறும்;. மேலும் உம் இறைவனால் உம்மீது இறக்கப்பட்ட (வேதமான)து அவர்களில் பெரும்பாலோருக்கு குஃப்ரை (நிராகரித்தலை)யும் வரம்பு மீறுதலையும் நிச்சயமாக அதிகப்படுத்துகிறது. ஆகவே நிராகரித்துக் கொண்டிருக்கும் கூட்டத்தாருக்காக நீர் கவலைப்பட வேண்டாம்.

தூதரே! நீர் கூறுவீராக: “யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களே! தவ்ராத்தின்படியும் இன்ஜீலின்படியும் அல்லாஹ் உங்களுக்கு இறக்கிய குர்ஆனின்படியும் நீங்கள் செயல்படும் வரை நீங்கள் ஏற்றுக்கொள்ளத்தக்க எந்த மார்க்கத்திலும் இல்லை. அல்குர்ஆனை நம்பிக்கைக் கொண்டு அதன்படி செயற்படாவிட்டால் உங்களது நம்பிக்கை செல்லுபடியாகாது. உம் இறைவனிடமிருந்து உமக்கு இறக்கப்பட்டவை வேதக்காரர்களில் பெரும்பாலானோருக்கு - அவர்களின் பொறாமையினால்- வரம்பு மீறலையும் நிராகரிப்பையுமே அதிகப்படுத்துகிறது. இந்த நிராகரிப்பாளர்களுக்காக நீர் கவலை கொள்ளாதீர். உம்மைப் பின்பற்றிய நம்பிக்கையாளர்களே உமக்குப் போதுமானவர்கள்.

Al-Maaida 5:68Listen in Qur'an →
69

إِنَّ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَٱلَّذِينَ هَادُوا۟ وَٱلصَّٰبِـُٔونَ وَٱلنَّصَٰرَىٰ مَنْ ءَامَنَ بِٱللَّهِ وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِ وَعَمِلَ صَٰلِحًۭا فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ

முஃமின்களிலும், யூதர்களிலும், ஸாபிவூன்களிலும், கிறிஸ்தவர்களிலும் எவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு நிச்சயமாக எந்தவிதமான பயமுமில்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.

நிச்சயமாக நம்பிக்கையாளர்கள், யூதர்கள், சாபியீன்கள்-அவர்கள்தான் சில நபிமார்களின் விசுவாசிகள்- கிறிஸ்தவர்கள் ஆகியோரில் யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் உண்மைப்படுத்தி நற்செயல்கள் செய்தார்களோ அவர்கள் எதிர்காலத்தை எண்ணி அச்சம்கொள்ளமாட்டார்கள். உலகில் இழந்துவிட்டவற்றை எண்ணியும் அவர்கள் கவலை கொள்ளமாட்டார்கள்.

Al-Maaida 5:69Listen in Qur'an →
70

لَقَدْ أَخَذْنَا مِيثَٰقَ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ وَأَرْسَلْنَآ إِلَيْهِمْ رُسُلًۭا ۖ كُلَّمَا جَآءَهُمْ رَسُولٌۢ بِمَا لَا تَهْوَىٰٓ أَنفُسُهُمْ فَرِيقًۭا كَذَّبُوا۟ وَفَرِيقًۭا يَقْتُلُونَ

நாம் இஸ்ராயீலின் சந்ததியினரிடம் உறுதிமொழி வாங்கினோம், அவர்களிடம் தூதர்களையும் அனுப்பி வைத்தோம்;. எனினும் அவர்கள் மனம் விரும்பாதவற்றை (கட்டளைகளை நம்) தூதர் அவர்களிடம் கொண்டு வந்த போதெல்லாம், (தூதர்களில்) ஒரு பிரிவாரைப் பொய்ப்பித்தும்; இன்னும் ஒரு பிரிவாரைக் கொலை செய்தும் வந்தார்கள்.

நாம் இஸ்ராயீலின் மக்களிடம் அவர்கள் கீழ்ப்படிய வேண்டும் என்பதற்காக உறுதியான வாக்குறுதிகளை வாங்கினோம். அல்லாஹ்வின் மார்க்கத்தை எடுத்துரைப்பதற்காக அவர்களிடம் பல தூதர்களை அனுப்பியும் வைத்தோம். ஆயினும் அவர்கள் அந்த வாக்குறுதிகளை மீறி தங்களின் தூதர்கள் கொண்டுவந்ததைப் புறக்கணித்தல், சிலரை மறுத்தல், சிலரை கொலை செய்தல் என தங்களின் மனோஇச்சைக் கூறுபவற்றையே அவர்கள் பின்பற்றினார்கள்.

Al-Maaida 5:70Listen in Qur'an →

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.