Muslim99Muslim99
← Tafsir library

5. Al-Maaida

The Table · Medinan · 120 ayahs

سُورَةُ المَائـِدَةِ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 51–60 of 120

51

۞ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تَتَّخِذُوا۟ ٱلْيَهُودَ وَٱلنَّصَٰرَىٰٓ أَوْلِيَآءَ ۘ بَعْضُهُمْ أَوْلِيَآءُ بَعْضٍۢ ۚ وَمَن يَتَوَلَّهُم مِّنكُمْ فَإِنَّهُۥ مِنْهُمْ ۗ إِنَّ ٱللَّهَ لَا يَهْدِى ٱلْقَوْمَ ٱلظَّٰلِمِينَ

முஃமின்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர். உங்களில் எவரேனும் அவர்களைப் பாதுகாவலர்களாக ஆக்கினால் நிச்சயமாக அவரும் அவர்களைச் சேர்ந்தவர்தான். நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்.

அல்லாஹ்வை உண்மைப்படுத்தி அவனுடைய தூதரைப் பின்பற்றுபவர்களே! யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் உற்ற நண்பர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். யூதர்களும் கிருஸ்தவர்களும் தமது மார்க்கத்தைச் சார்ந்தவர்களைத்தான் உற்ற தோழர்களாக ஆக்கிக் கொள்கிறார்கள். இருபிரிவினரும் உங்களை எதிர்ப்பதற்காக ஒன்று சேர்ந்துள்ளார்கள். உங்களில் அவர்களுடன் நட்புகொள்பவர் அவர்களைச் சார்ந்தவர்தாம். நிராகரிப்பாளர்களுடன் நட்புகொள்ளும் அநியாயக்கார மக்களுக்கு அல்லாஹ் நேர்வழிகாட்ட மாட்டான்.

Al-Maaida 5:51Listen in Qur'an →
52

فَتَرَى ٱلَّذِينَ فِى قُلُوبِهِم مَّرَضٌۭ يُسَٰرِعُونَ فِيهِمْ يَقُولُونَ نَخْشَىٰٓ أَن تُصِيبَنَا دَآئِرَةٌۭ ۚ فَعَسَى ٱللَّهُ أَن يَأْتِىَ بِٱلْفَتْحِ أَوْ أَمْرٍۢ مِّنْ عِندِهِۦ فَيُصْبِحُوا۟ عَلَىٰ مَآ أَسَرُّوا۟ فِىٓ أَنفُسِهِمْ نَٰدِمِينَ

எனவே (நபியே!) எவர் இருதயங்களில் நோய் இருக்கின்றதோ, அத்தகையவர்தாம் அவர்களிடம் விரைந்து செல்வதை நீர் காண்பீர். (அவர்களைப் பகைத்துக் கொண்டால்) "எங்களுக்கு ஏதாவது துன்பச்சுழல் ஏற்படுமோ என்று அஞ்சுகிறோம்" என அவர்கள் கூறுகிறார்கள்; அல்லாஹ் (தான் நாடியபடி) தன்னிடமிருந்து (உங்களுக்கு) ஒரு வெற்றியையோ அல்லது ஏதாவது ஒரு (நற்) காரியத்தையோ கொடுத்து விடலாம்;. அப்பொழுது அவர்கள் தம் உள்ளங்களில் மறைத்து வைத்திருந்ததைப் பற்றி கைசேதமடைந்தோராக ஆகிவிடுவார்கள்.

தூதரே! பலவீனமான நம்பிக்கையுடைய நயவஞ்சகர்கள் யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் நேசிப்பதற்கு முன்வருவதை நீர் காண்பீர். அவர்கள் கூறுகிறார்கள், “இவர்கள் நம்மை மிகைத்து அதிகாரத்தைக் கைப்பற்றிவிட்டால் நமக்குத் தீங்கிழைக்கலாம் என்று நாங்கள் அஞ்சுகிறோம்.” அல்லாஹ் தன் தூதருக்கும் நம்பிக்கையாளர்களுக்கும் வெற்றியளிக்கக்கூடும் அல்லது யூதர்களின் அதிகாரத்தை இல்லாமலாக்கக்கூடிய ஏதேனும் ஒன்றை கொண்டுவரக்கூடும். அப்போது அவர்களை நேசிப்பதற்கு முந்திக்கொண்டு சென்றோர் தாம் கூறிவந்த பலமற்ற காரணங்கள் பிழைத்துவிட்டதனால் தம் உள்ளங்களில் தாம் மறைத்துவைத்திருந்த நயவஞ்சகத்திற்காக கைசேதப்படுவார்கள்.

Al-Maaida 5:52Listen in Qur'an →
53

وَيَقُولُ ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ أَهَٰٓؤُلَآءِ ٱلَّذِينَ أَقْسَمُوا۟ بِٱللَّهِ جَهْدَ أَيْمَٰنِهِمْ ۙ إِنَّهُمْ لَمَعَكُمْ ۚ حَبِطَتْ أَعْمَٰلُهُمْ فَأَصْبَحُوا۟ خَٰسِرِينَ

(மறுமையில் இவர்களைச் சுட்டிக் காண்பித்து) கூறுவார்கள்; "நிச்சயமாக நாங்களும் உங்களுடன் இருக்கின்றோம் என்று. அல்லாஹ்வின் மீது உறுதியான சத்தியம் செய்து கொண்டிருந்தவர்கள் இவர்கள் தானா?" என்று முஃமின்கள் கூறுவார்கள். இவர்களுடைய செயல்கள் (எல்லாம்) அழிந்துவிட்டன. இன்னும் இவர்கள் நஷ்டவாளிகளாக ஆகிவிட்டனர்.

அப்போது நம்பிக்கையாளர்கள் இந்த நயவஞ்சகர்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டவர்களாகக் கூறுவார்கள், “நம்பிக்கையாளர்களே! நம்பிக்கைகொள்வதிலும் உதவிசெய்வதிலும் தோழமைகொள்வதிலும் உங்களுடன் இருக்கின்றோம்” என்று இவர்கள்தாம் உறுதியான சத்தியம் செய்து கூறினார்களா?” அவர்களின் செயல்கள் அனைத்தும் வீணாகிவிட்டன. தங்களின் குறிக்கோள் தவறியதனாலும், அல்லாஹ் அவர்களுக்கு வேதனையைத் தயார்படுத்தி வைத்திருப்பதனாலும் அவர்கள் நஷ்டமடைந்து விட்டார்கள்.

Al-Maaida 5:53Listen in Qur'an →
54

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ مَن يَرْتَدَّ مِنكُمْ عَن دِينِهِۦ فَسَوْفَ يَأْتِى ٱللَّهُ بِقَوْمٍۢ يُحِبُّهُمْ وَيُحِبُّونَهُۥٓ أَذِلَّةٍ عَلَى ٱلْمُؤْمِنِينَ أَعِزَّةٍ عَلَى ٱلْكَٰفِرِينَ يُجَٰهِدُونَ فِى سَبِيلِ ٱللَّهِ وَلَا يَخَافُونَ لَوْمَةَ لَآئِمٍۢ ۚ ذَٰلِكَ فَضْلُ ٱللَّهِ يُؤْتِيهِ مَن يَشَآءُ ۚ وَٱللَّهُ وَٰسِعٌ عَلِيمٌ

முஃமின்களே! உங்களில் எவரேனும் தன் மார்க்கத்தைவிட்டு மாறிவிட்டால் (அல்லாஹ்வுக்கு அதனால் நஷ்டமில்லை) அப்பொழுது அல்லாஹ் வேறு ஒரு கூட்டத்தாரைக் கொண்டு வருவான்;. அவன் அவர்களை நேசிப்பான்;. அவனை அவர்களும் நேசிப்பார்கள்;. அவர்கள் முஃமின்களிடம் பணிவாக நடந்து கொள்வார்கள்;. காஃபிர்களிடம் கடுமையாக இருப்பார்கள்;. அல்லாஹ்வின் பாதையில் போர் செய்வார்கள்;. நிந்தனை செய்வோரின் நிந்தனைக்கு அஞ்சமாட்டார்கள்;. இது அல்லாஹ்வின் அருட்கொடையாகும்;. இதை அவன் நாடியவருக்குக் கொடுக்கின்றான்;. அல்லாஹ் மிகவும் விசாலமானவனும் (எல்லாம்) நன்கறிந்தவனுமாக இருக்கின்றான்.

நம்பிக்கைக் கொண்டவர்களே! உங்களில் யாரேனும் தம் மார்க்கத்தை விட்டு நிராகரிப்பின் பக்கம் திரும்பிச் சென்றால் - அல்லாஹ் அவர்களுக்குப் பதிலாக ஒரு சமூகத்தைக் கொண்டுவருவான். அவர்களது சிறந்த நடத்தையினால் அவர்கள் அவனை நேசிப்பார்கள், அவனும் அவர்களை நேசிப்பான். அவர்கள் நம்பிக்கையாளர்களுடன் கருணையாளர்களாகவும் நிராகரிப்பாளர்களுடன் கடினமானவர்களாவும் இருப்பார்கள். தங்களின் செல்வங்களாலும் உயிர்களாலும் அல்லாஹ்வின் வார்த்தையை மேலோங்கச் செய்வதற்காக போர் செய்வார்கள். படைப்பினங்களின் திருப்தியை விட அல்லாஹ்வின் திருப்திக்கு முன்னுரிமை வழங்குவதால் அவர்கள் பழிப்பவர்களின் பழிப்புக்கு அஞ்ச மாட்டார்கள். இது அல்லாஹ் தான் நாடிய அடியார்களுக்கு வழங்கும் அருளாகும். அல்லாஹ் அருள்புரிவதில் தாராளமானவன். அதற்குத் தகுதியானவர்களை நன்கறிந்து அவர்களுக்கு வழங்கக்கூடியவன் தகுதியற்றவர்களுக்கு அவன் அதனை வழங்குவதில்லை.

Al-Maaida 5:54Listen in Qur'an →
55

إِنَّمَا وَلِيُّكُمُ ٱللَّهُ وَرَسُولُهُۥ وَٱلَّذِينَ ءَامَنُوا۟ ٱلَّذِينَ يُقِيمُونَ ٱلصَّلَوٰةَ وَيُؤْتُونَ ٱلزَّكَوٰةَ وَهُمْ رَٰكِعُونَ

நிச்சயமாக உங்களுக்கு உற்ற நண்பர்கள்; அல்லாஹ்வும், அவனுடைய தூதரும்;. எவர் ஈமான் கொண்டு, தொழுகையைக் கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து, (அல்லாஹ்வின் கட்டளைக்கு எந்நேரமும்) தலைசாய்த்தும் வருகிறார்களோ அவர்கள்தாம்.

யூதர்களோ கிறிஸ்தவர்களோ ஏனைய நிராகரிப்பாளர்களோ உங்களின் நண்பர்கள் அல்ல. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நம்பிக்கையாளர்களுமே உங்களின் நண்பர்களாவர். அந்த நம்பிக்கையாளர்கள் தொழுகையை முழுமையாக நிறைவேற்றுவார்கள்; அல்லாஹ்வுக்குப் பணிந்தவர்களாக தங்களின் செல்வங்களிலிருந்து ஸகாத்தையும் வழங்குவார்கள்.

Al-Maaida 5:55Listen in Qur'an →
56

وَمَن يَتَوَلَّ ٱللَّهَ وَرَسُولَهُۥ وَٱلَّذِينَ ءَامَنُوا۟ فَإِنَّ حِزْبَ ٱللَّهِ هُمُ ٱلْغَٰلِبُونَ

அல்லஹ்வையும் அவனது தூதரையும் முஃமின்களையும் யார் நேசர்களாக ஆக்குகிறார்களோ, அவர்கள்தாம் ஹிஸ்புல்லாஹ் (அல்லாஹ்வின் கூட்டத்தினர்) ஆவார்கள்;. நிச்சயமாக இவர்களே மிகைத்து வெற்றியுடையோராவார்கள்.

அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனும் நம்பிக்கையாளர்களுடன் உதவியின் மூலமும் நட்புக்கொள்பவர்கள்தாம் அல்லாஹ்வின் அணியினராவர். அல்லாஹ்வின் அணியினர்தாம் வெற்றி பெறக்கூடியவர்கள். ஏனெனில் அல்லாஹ்வே அவர்களது உதவியாளனாக உள்ளான்.

Al-Maaida 5:56Listen in Qur'an →
57

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تَتَّخِذُوا۟ ٱلَّذِينَ ٱتَّخَذُوا۟ دِينَكُمْ هُزُوًۭا وَلَعِبًۭا مِّنَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَٰبَ مِن قَبْلِكُمْ وَٱلْكُفَّارَ أَوْلِيَآءَ ۚ وَٱتَّقُوا۟ ٱللَّهَ إِن كُنتُم مُّؤْمِنِينَ

முஃமின்களே! உங்களுக்குமுன் வேதம் வழங்கப்பட்டவர்களிலிருந்தும், காஃபிர்களிலிருந்தும், யார் உங்கள் மார்க்கத்தைப் பரிகாசமாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொள்கிறார்களோ அவர்களை நீங்கள் பாதுபாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்;. நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கே அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.

நம்பிக்கையாளர்களே! உங்களின் மார்க்கத்தை பரிகாசமாகவும் விளையாட்டாகவும் எடுத்துக்கொள்ளும் வேதம் வழங்கப்பட்ட யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இணைவைப்பாளர்களை நேசர்களாகவும் கூட்டாளிகளாகவும் ஆக்கிக்கொள்ளாதீர்கள். நீங்கள் அல்லாஹ்வைவும் அவன் உங்கள் மீது இறக்கியதையும் நம்பியவர்களாக இருந்தால் அவன் தடுத்துள்ள அவர்களின் நட்பைத் தவிர்த்து அவனை அஞ்சிக் கொள்ளுங்கள்.

Al-Maaida 5:57Listen in Qur'an →
58

وَإِذَا نَادَيْتُمْ إِلَى ٱلصَّلَوٰةِ ٱتَّخَذُوهَا هُزُوًۭا وَلَعِبًۭا ۚ ذَٰلِكَ بِأَنَّهُمْ قَوْمٌۭ لَّا يَعْقِلُونَ

இன்னும் நீங்கள் தொழுகைக்கு அழைத்தால், - அதனை அவர்கள் பரிகாசமாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொள்கிறார்கள்;. இதற்கு காரணம் அவர்கள் அறிவில்லாத மக்களாக இருப்பதேயாம்.

இவ்வாறே, மிக முக்கியத்துவமிக்க வணக்கமான தொழுகைக்கு நீங்கள் பாங்கு சொன்னால் அவர்கள் பரிகாசம் செய்கிறார்கள். விளையாட்டில் ஈடுபடுகின்றனர். அல்லாஹ் தன்னை வணங்குவதிலும், அவன் மக்களுக்கு விதியாக்கிய சட்டதிட்டங்களின் தாப்பரியத்தையும் புரியாத கூட்டமாக அவர்கள் இருப்பதே இதற்கான காரணமாகும்.

Al-Maaida 5:58Listen in Qur'an →
59

قُلْ يَٰٓأَهْلَ ٱلْكِتَٰبِ هَلْ تَنقِمُونَ مِنَّآ إِلَّآ أَنْ ءَامَنَّا بِٱللَّهِ وَمَآ أُنزِلَ إِلَيْنَا وَمَآ أُنزِلَ مِن قَبْلُ وَأَنَّ أَكْثَرَكُمْ فَٰسِقُونَ

"வேதம் உடையவர்களே! அல்லாஹ்வின் மீதும், எங்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின்மீதும், எங்களுக்கு முன்னர் இறக்கப்பட்டவை மீதும் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்பதைத் தவிர, வேறு எதற்காகவும் நீங்கள் எங்களைப் பழிக்கவில்லை. நிச்சயமாக, உங்களில் பெரும்பாலோர் ஃபாஸிக்கு (பாவி)களாக இருக்கின்றீர்கள்" என்று (நபியே!) நீர் கூறுவீராக.

தூதரே! பரிகாசம் செய்யும் வேதக்காரர்களிடம் கூறுவீராக, “நாங்கள் அல்லாஹ்வின் மீதும் அவன் எங்களுக்கு இறக்கியதன் மீதும் எங்களுக்கு முன்னுள்ளவர்கள் மீது இறக்கப்பட்டதன் மீதும், உங்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்ளாமலும் கட்டளைகளைச் செயற்படுத்தாமலும் அல்லாஹ்வின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய மறுப்பவர்கள் என்பதன் மீதும் நம்பிக்கை கொண்டதற்காகவா எங்களைக் குறைகூறுகிறீர்கள்? நீங்கள் எந்த காரணத்திற்காக எங்களைக் குறைகூறுகிறீர்களோ அது எங்களுக்குப் புகழேயன்றி இகழல்ல.”

Al-Maaida 5:59Listen in Qur'an →
60

قُلْ هَلْ أُنَبِّئُكُم بِشَرٍّۢ مِّن ذَٰلِكَ مَثُوبَةً عِندَ ٱللَّهِ ۚ مَن لَّعَنَهُ ٱللَّهُ وَغَضِبَ عَلَيْهِ وَجَعَلَ مِنْهُمُ ٱلْقِرَدَةَ وَٱلْخَنَازِيرَ وَعَبَدَ ٱلطَّٰغُوتَ ۚ أُو۟لَٰٓئِكَ شَرٌّۭ مَّكَانًۭا وَأَضَلُّ عَن سَوَآءِ ٱلسَّبِيلِ

"அல்; லாஹ்விடமிருந்து இதைவிடக் கெட்ட பிரதிபலனை அடைந்தவர்களைப் பற்றி உங்களுக்கு அறிவிக்கட்டுமா? (அவர்கள் யாரெனில்) எவரை அல்லாஹ் சபித்து, இன்னும் அவர்கள் மீது கோபமுங்கொண்டு, அவர்களில் சிலரைக் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் ஆக்கினானோ அவர்களும், ஷைத்தானை வழிப்பட்டவர்களும் தான் - அவர்கள்தாம் மிகவும் தாழ்ந்த நிலையினர். நேரான வழியிலிருந்தும் தவறியவர்கள்" என்று (நபியே!) நீர் கூறுவீராக.

தூதரே! நீர் கூறுவீராக: “இவர்களை விட குறை கூறுவதற்கு தகுதியானவர்களையும் கடுமையான வேதனைக்கு உரியவர்களையும் நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? அல்லாஹ் தனது அருளிலிருந்து தூரமாக்கி, குரங்குகளாவும் பன்றிகளாகவும் உருமாற்றிய உங்களின் முன்னோர்கள்தாம். அவர்களில் சிலரை அல்லாஹ் தாகூத்தை வணங்குபவர்களாகவும் மாற்றினான். அல்லாஹ்வைத் தவிர மனமுவந்து வணங்கப்படக்கூடியவை அனைத்தும் தாகூத்களே. இவர்கள்தாம் மறுமைநாளில் மோசமான இடத்தைப் பெற்றவர்களும் நேரான பாதையை விட்டும் மிகவும் வழிகெட்டவர்களும் ஆவார்கள்.

Al-Maaida 5:60Listen in Qur'an →

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.