Muslim99Muslim99
← Tafsir library

5. Al-Maaida

The Table · Medinan · 120 ayahs

سُورَةُ المَائـِدَةِ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 111–120 of 120

111

وَإِذْ أَوْحَيْتُ إِلَى ٱلْحَوَارِيِّۦنَ أَنْ ءَامِنُوا۟ بِى وَبِرَسُولِى قَالُوٓا۟ ءَامَنَّا وَٱشْهَدْ بِأَنَّنَا مُسْلِمُونَ

"என் மீதும் என் தூதர் மீதும் ஈமான் கொள்ளுங்கள்" என்று நான் ஹவாரிய்யூன் (சீடர்)களுக்கு தெரிவித்தபோது, அவர்கள், "நாங்கள் ஈமான் கொண்டோம், நிச்சயமாக நாங்கள் முஸ்லீம்கள் (அல்லாஹ்வுக்கு வழிப்பட்டவர்கள்) என்பதற்கு நீங்களே சாட்சியாக இருங்கள்" என்று கூறினார்கள்.

நாம் உமக்கு அளித்த பின்வரும் அருட்கொடையையும் நினைத்துப் பார்ப்பீராக: நாம் உமக்கு உதவியாளர்களை ஏற்படுத்தினோம். அவர்களின் உள்ளத்தில் என்மீதும் உம்மீதும் நம்பிக்கைகொள்ளுங்கள் என்று உள்ளுதிப்பை ஏற்படுத்தினோம். எனவே அவர்கள் கட்டுப்பட்டார்கள். உம்முடைய அழைப்புக்கு செவிசாய்த்தார்கள். “நாங்கள் நம்பிக்கைகொண்டோம். எங்கள் இறைவா, நாங்கள் உனக்குக் கட்டுப்பட்டவர்கள், அடிபணிந்தவர்கள் என்பதற்கு நீயே சாட்சியாக இருப்பீராக” என்று கூறினார்கள்.

Al-Maaida 5:111Listen in Qur'an →
112

إِذْ قَالَ ٱلْحَوَارِيُّونَ يَٰعِيسَى ٱبْنَ مَرْيَمَ هَلْ يَسْتَطِيعُ رَبُّكَ أَن يُنَزِّلَ عَلَيْنَا مَآئِدَةًۭ مِّنَ ٱلسَّمَآءِ ۖ قَالَ ٱتَّقُوا۟ ٱللَّهَ إِن كُنتُم مُّؤْمِنِينَ

"மர்யமுடைய மகன் ஈஸாவே! உங்கள் இறைவன் வானத்திலிருந்து எங்களுக்காக உணவு மரவையை (ஆகாரத் தட்டை) இறக்கி வைக்க முடியுமா?" என்று ஹவாரிய்யூன் (சீடர்)கள் கேட்டபோது அவர், "நீங்கள் முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்" என்று கூறினார்.

ஹவாரிய்யீன்கள் பின்வருமாறு கூறியதை நினைத்துப் பார்ப்பீராக: “நீர் பிரார்த்தனை செய்தால், உமது இறைவன் வானத்திலிருந்து ஓர் உணவுத்தட்டை இறக்க முடியுமா?” அதற்கு ஈஸா, அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுமாறும் அவர்களுக்கு அது சோதனையாக அமையலாம் என்பதனால் இதுபோன்ற கேள்விகளை விட்டுவிடுமாறும் அவர்களிடம் கூறினார். “நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால் வாழ்வாதாரம் வேண்டுவதில் உங்கள் இறைவனின் மீது முழுமையாக நம்பிக்கை வையுங்கள்” என்றும் அவர் கூறினார்.

Al-Maaida 5:112Listen in Qur'an →
113

قَالُوا۟ نُرِيدُ أَن نَّأْكُلَ مِنْهَا وَتَطْمَئِنَّ قُلُوبُنَا وَنَعْلَمَ أَن قَدْ صَدَقْتَنَا وَنَكُونَ عَلَيْهَا مِنَ ٱلشَّٰهِدِينَ

அதற்கவர்கள், "நாங்கள் அதிலிருந்து புசித்து எங்கள் இதயங்கள் அமைதி பெறவும், நிச்சயமாக நீங்கள் எங்களுக்கு உண்மையையே கூறினீர்கள் என்பதை அறிந்து கொள்ளவும், இன்னும் நாங்கள் அதைப்பற்றி சாட்சி கூறக் கூடியவர்களாகவும் இருக்க விரும்புகின்றோம்" என்று கூறினார்கள்.

ஹவாரிய்யீன்கள் ஈஸாவிடம் கூறினார்கள்: “நாங்கள் அந்த உணவுத்தட்டிலிருந்து உண்ணவும் அல்லாஹ்வின் முழுமையான ஆற்றலையும் நீர் அவனது தூதர் என்பதையும் எங்கள் உள்ளங்கள் உணரவும் விரும்புகின்றோம். நீர் அல்லாஹ்விடமிருந்து கொண்டு வந்ததில் உண்மையாளர் என்பதை உறுதியாக அறிந்து, அதனைக் காணாதவர்களிடம் சாட்சி கூறுபவர்களாகவும் இருக்க விரும்புகின்றோம்.”

Al-Maaida 5:113Listen in Qur'an →
114

قَالَ عِيسَى ٱبْنُ مَرْيَمَ ٱللَّهُمَّ رَبَّنَآ أَنزِلْ عَلَيْنَا مَآئِدَةًۭ مِّنَ ٱلسَّمَآءِ تَكُونُ لَنَا عِيدًۭا لِّأَوَّلِنَا وَءَاخِرِنَا وَءَايَةًۭ مِّنكَ ۖ وَٱرْزُقْنَا وَأَنتَ خَيْرُ ٱلرَّٰزِقِينَ

மர்யமுடைய மகன் ஈஸா, "அல்லாஹ்வே! வானத்திலிருந்து எங்கள் மீது ஓர் உணவு மரவையை இறக்குவாயாக. அது எங்களுக்கு - எங்களில் முன்னவர்களுக்கும், எங்களில் பின் வருபவர்களுக்கும் ஒரு பெருநாளாகவும், உன்னிலிருந்து ஓர் அத்தாட்சியாகவும் இருக்கும். இன்னும் எங்களுக்கு உணவுப் பொருட்களை அளிப்பாயாக. நீயே உணவளிப்பவர்களில் மேலானவனாக இருக்கிறாய்" என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.

ஈஸா(அலை) அவர்களின் வேண்டுதலுக்குப் பதிலளித்தவாறு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்: “எங்கள் இறைவா, எங்கள் மீது உணவுத்தட்டை இறக்குவாயாக. எங்களில் தற்போது வாழ்வோரும் பின்னர் வருவோரும் உனக்கு நன்றி செலுத்தும் விதமாக அதனைப் பெருநாளாக ஆக்கிக் கொள்வோம். அது நீ ஒருவனே என்பதற்கும், எனது தூதுத்துவத்துவம் உண்மை என்பதற்கும் சான்றாக அமையும். உன்னை வழிபடுவதற்கு உதவி செய்யும் வாழ்வாதாரத்தை எங்களுக்கு வழங்குவாயாக. எங்கள் இறைவா, நிச்சயமாக நீ வாழ்வாதாரம் அளிப்பவர்களில் மிகச் சிறந்தவன்.”

Al-Maaida 5:114Listen in Qur'an →
115

قَالَ ٱللَّهُ إِنِّى مُنَزِّلُهَا عَلَيْكُمْ ۖ فَمَن يَكْفُرْ بَعْدُ مِنكُمْ فَإِنِّىٓ أُعَذِّبُهُۥ عَذَابًۭا لَّآ أُعَذِّبُهُۥٓ أَحَدًۭا مِّنَ ٱلْعَٰلَمِينَ

அதற்கு அல்லாஹ், "நிச்சயமாக நான் அதை உங்களுக்கு இறக்கிவைக்கிறேன். ஆனால், அதன்பின் உங்களில் எவரேனும் ஒருவர் நிராகரித்தால், உலகத்தாரில் எந்த ஒருவருக்கும் செய்திராத வேதனையைக் கொண்டு அவரை வேதனைப்படுத்துவேன்" என்று கூறினான்.

ஈஸாவின் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொண்டான். அவன் கூறினான்: “நீங்கள் வேண்டிய உணவுத்தட்டை நான் உங்கள் மீது இறக்குவேன். நான் இறக்கிய பிறகு யாரேனும் நிராகரித்தால் அவர் தன்னைத்தானே பழித்துக் கொள்ளட்டும். உலகில் யாருக்கும் வழங்காத கடும் தண்டனையை நான் அவருக்கு வழங்குவேன். ஏனெனில் அவன் தெளிவான சான்றினைக் கண்ட பின்னரும் பிடிவாதத்தினால் அதனை நிராகரித்தான். அல்லாஹ் தன் வாக்குறுதியை நிரூபித்து அவர்கள் மீது உணவுத்தட்டை இறக்கினான்.

Al-Maaida 5:115Listen in Qur'an →
116

وَإِذْ قَالَ ٱللَّهُ يَٰعِيسَى ٱبْنَ مَرْيَمَ ءَأَنتَ قُلْتَ لِلنَّاسِ ٱتَّخِذُونِى وَأُمِّىَ إِلَٰهَيْنِ مِن دُونِ ٱللَّهِ ۖ قَالَ سُبْحَٰنَكَ مَا يَكُونُ لِىٓ أَنْ أَقُولَ مَا لَيْسَ لِى بِحَقٍّ ۚ إِن كُنتُ قُلْتُهُۥ فَقَدْ عَلِمْتَهُۥ ۚ تَعْلَمُ مَا فِى نَفْسِى وَلَآ أَعْلَمُ مَا فِى نَفْسِكَ ۚ إِنَّكَ أَنتَ عَلَّٰمُ ٱلْغُيُوبِ

இன்னும், "மர்யமுடைய மகன் ஈஸாவே, 'அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள்' என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா?" என்று அல்லாஹ் கேட்கும் போது அவர், "நீ மிகவும் தூய்மையானவன்; எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான் சொல்வதற்கில்லை. அவ்வாறு நான் கூறியிருந்தால், நீ அதை நிச்சயமாக அறிந்திருப்பாய். என் மனதிலுள்ளதை நீ அறிகிறாய், உன் உள்ளத்திலிருப்பதை நான் அறிய மாட்டேன்;. நிச்சயமாக நீயே மறைவானவற்றையெல்லாம் நன்கு அறிபவன்" என்று அவர் கூறுவார்.

மறுமை நாளில் மர்யமின் மகன் ஈஸாவிடம், “மர்யமின் மகன் ஈஸாவே, “என்னையையும் என் தாயையும் அல்லாஹ்வை விடுத்து வணக்கத்திற்குரியவர்களாக ஆக்கிக் கொள்ளுங்கள்” என்று நீர் கூறினீரா?” என அல்லாஹ் கூறுவதை நினைத்துப் பார்ப்பீராக: அதற்கு ஈஸா தம் இறைவனின் தூய்மையை உறுதிப்படுத்தியவராகக் கூறுவார், “சத்தியத்தைத் தவிர வேறு எதைக்கூறுவதற்கும் எனக்கு உரிமை இல்லை. நான் அவ்வாறு கூறியிருந்தால் நீ அதனை அறிந்திருப்பாய். ஏனெனில் எதுவும் உன்னை விட்டு மறைவாக இல்லை. நான் என் மனதில் மறைத்துவைப்பதையும் நீ அறிவாய். உன் மனதில் உள்ளவற்றை நான் அறியமாட்டேன். நீ மட்டுமே வெளிப்படையானதையும் மறைவானதையும் நன்கறிந்தவன்.

Al-Maaida 5:116Listen in Qur'an →
117

مَا قُلْتُ لَهُمْ إِلَّا مَآ أَمَرْتَنِى بِهِۦٓ أَنِ ٱعْبُدُوا۟ ٱللَّهَ رَبِّى وَرَبَّكُمْ ۚ وَكُنتُ عَلَيْهِمْ شَهِيدًۭا مَّا دُمْتُ فِيهِمْ ۖ فَلَمَّا تَوَفَّيْتَنِى كُنتَ أَنتَ ٱلرَّقِيبَ عَلَيْهِمْ ۚ وَأَنتَ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ شَهِيدٌ

"நீ எனக்குக் கட்டளையிட்டபடி (மனிதர்களை நோக்கி), "என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்" என்பதைத் தவிர வேறு எதையும் அவர்களுக்கு நான் கூறவில்லை. மேலும், நான் அவர்களுடன் (உலகில்) இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன்;. அப்பால் நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் நீயே அவர்கள் மீது கண்காணிப்பவனாக இருந்தாய். நீயே எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாக இருக்கிறாய்" (என்றும்);

ஈஸா தம் இறைவனிடம் கூறுவார்: “உன்னை மட்டுமே வணங்க வேண்டும் என்று கட்டளையிடுமாறு நீ எனக்கு கட்டளையிட்டதைத்தான் நான் அவர்களிடம் கூறினேன். நான் அவர்களிடையே இருந்த வரை அவர்கள் கூறுவதை கண்காணிப்பவனாக இருந்தேன். நீ என் தவணையை நிறைவுசெய்து என்னை உயிரோடு வானத்தின்பால் உயர்த்திய பின்னர் நீயே அவர்களின் செயல்களை கண்காணிப்பவனாக இருக்கின்றாய். நீ அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறாய். எதுவும் உன்னை விட்டு மறைய முடியாது. நான் அவர்களிடம் கூறியது, எனக்குப் பிறகு அவர்கள் கூறியது எதுவும் உன்னைவிட்டு மறைவாக இல்லை.

Al-Maaida 5:117Listen in Qur'an →
118

إِن تُعَذِّبْهُمْ فَإِنَّهُمْ عِبَادُكَ ۖ وَإِن تَغْفِرْ لَهُمْ فَإِنَّكَ أَنتَ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ

(இறைவா!) நீ அவர்களை வேதனை செய்தால் (தண்டிப்பதற்கு முற்றிலும் உரிமையுள்ள) உன்னுடைய அடியார்களாகவே நிச்சயமாக அவர்கள் இருக்கின்றனர். அன்றி, நீ அவர்களை மன்னித்து விடுவாயானால், நிச்சயமாக நீ தான்(யாவரையும்) மிகைத்தோனாகவும் ஞானமிக்கோனாகவும் இருக்கின்றாய்" (என்றும் கூறுவார்).

இறைவா, நீ அவர்களை தண்டித்தால் அவர்கள் உன் அடியார்கள்தாம் அவர்களின் விஷயத்தில் நீ நாடியதைச் செய்கின்றாய். நீ அவர்களில் நம்பிக்கைகொண்டவர்கள் மீது அருள்புரிந்தால் யாராலும் அதனைத் தடுக்க முடியாது. நீ யாவற்றையும் மிகைத்தவன். யாராலும் உன்னை மிகைக்க முடியாது. உன்னுடைய திட்டங்களில் நீ ஞானம்மிக்கவன்.

Al-Maaida 5:118Listen in Qur'an →
119

قَالَ ٱللَّهُ هَٰذَا يَوْمُ يَنفَعُ ٱلصَّٰدِقِينَ صِدْقُهُمْ ۚ لَهُمْ جَنَّٰتٌۭ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ خَٰلِدِينَ فِيهَآ أَبَدًۭا ۚ رَّضِىَ ٱللَّهُ عَنْهُمْ وَرَضُوا۟ عَنْهُ ۚ ذَٰلِكَ ٱلْفَوْزُ ٱلْعَظِيمُ

அப்போது அல்லாஹ், "இது உண்மை பேசுபவர்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கும் நாளாகும். கீழே சதா நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கும் சுவனபதிகள் அவர்களுக்குண்டு, அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள்; அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான். அல்லாஹ்வை அவர்களும் பொருந்திக் கொண்டார்கள் - இது மகத்தான பெரும் வெற்றியாகும்.

அல்லாஹ் ஈஸாவிடம் கூறினான்: “இந்த நாள் எண்ணங்களிலும் செயல்களிலும் வார்த்தைகளிலும் உண்மையானவர்களுக்கு அவர்களது வாய்மை பயனளிக்கக்கூடிய நாளாகும். அவர்களுக்குச் சுவனங்கள் உண்டு. அவற்றின் மரங்களுக்கும் மாளிகைகளுக்கும் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அங்கு அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். மரணம் அவர்களுக்கு ஏற்படாது. அல்லாஹ் அவர்களைப் பொருந்திக்கொண்டான். இனி அவன் ஒருபோதும் அவர்கள் மீது கோபம் கொள்ள மாட்டான். அவர்களும் தங்களுக்குக் கிடைத்த நிலையான அருட்கொடைகளின் காரணமாக அவனைப் பொருந்திக்கொண்டனர். இந்தக் கூலியும் இறை திருப்தியுமே மிகப் பெரிய வெற்றியாகும். இதற்கு இணையான வேறு எதுவும் இல்லை.

Al-Maaida 5:119Listen in Qur'an →
120

لِلَّهِ مُلْكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا فِيهِنَّ ۚ وَهُوَ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ قَدِيرٌۢ

வானங்களுடையவும், பூமியினுடையவும், அவற்றில் இருப்பவற்றின் ஆட்சியும் அல்லாஹ்வுக்கே சொந்தம்;. அவனே எல்லாப் பொருட்கள் மீது பேராற்றலுடையோன் ஆவான்.

வானங்களிலும் பூமியிலும் ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது. அவன்தான் அவையிரண்டையும் படைத்து நிர்வகித்து வருகிறான். அவையிரண்டிலுமுள்ள படைப்புகள் அனைத்தும் அவனது அதிகாரத்திற்கே உட்பட்டவையாக இருக்கின்றன. அவன் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன். எதுவும் அவனிடமிருந்து தப்பிவிட முடியாது.

Al-Maaida 5:120Listen in Qur'an →

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.