Muslim99Muslim99
← Tafsir library

4. An-Nisaa

The Women · Medinan · 176 ayahs

سُورَةُ النِّسَاءِ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 61–70 of 176

61

وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا۟ إِلَىٰ مَآ أَنزَلَ ٱللَّهُ وَإِلَى ٱلرَّسُولِ رَأَيْتَ ٱلْمُنَٰفِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًۭا

மேலும் அவர்களிடம்; "அல்லாஹ் இறக்கிய (வேதத்)தின் பக்கமும், (அவனுடைய) தூதரின் பக்கமும் (தீர்ப்புப் பெற) வாருங்கள்" என்று கூறப்பட்டால், அந்த முனாஃபிக்குகள் (நயவஞ்சகர்கள்) உம்மிடமிருந்து முற்றிலும் நீங்கிக் கொள்வதையே நீர் பார்ப்பீர்.

தூதரே! இந்த நயவஞ்சகர்களிடம், “உங்களிடையேயுள்ள பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்காக அல்லாஹ் இறக்கிய வேதத்திலுள்ள தீர்ப்பின் பக்கமும், உங்களது பிரச்சினையில் தீர்ப்பு வழங்குவதற்காக தூதரின் பக்கமும் வாருங்கள்” என்று கூறப்பட்டால் உம்மைப் முழுமையாகப் புறக்கணித்துவிட்டு தீர்வுதேடி மற்றவர்களிடம் செல்வதை நீர் காண்பீர்.

62

فَكَيْفَ إِذَآ أَصَٰبَتْهُم مُّصِيبَةٌۢ بِمَا قَدَّمَتْ أَيْدِيهِمْ ثُمَّ جَآءُوكَ يَحْلِفُونَ بِٱللَّهِ إِنْ أَرَدْنَآ إِلَّآ إِحْسَٰنًۭا وَتَوْفِيقًا

அவர்களின் கைகள் முற்படுத்தியனுப்பிய தீவினையின் காரணத்தால், அவர்களுக்குத் துன்பம் ஏற்பட்டால் எப்படியிருக்கும்? அப்பொழுது அவர்கள் உம்மிடம் வந்து அல்லாஹ்வின் மேல் சத்தியம் செய்து "நாங்கள் நன்மையையும் ஒற்றுமையையும் தவிர (வேறெதனையும்) நாடவில்லை" என்று கூறுகின்றனர்.

தூதரே! அவர்கள் செய்த பாவங்களின் காரணமாக அவர்களுக்குத் துன்பம் ஏற்பட்டு, “நாங்கள் உங்களைவிட்டுவிட்டு மற்றவர்களிடம் சென்றது எங்களிடையே நன்மையும் இணக்கமும் ஏற்பட வேண்டும் என்பதற்காகத்தான்” எனஅல்லாஹ்வின் பெயரைக்கொண்டு சத்தியம் செய்து சாக்குப்போக்குக் கூறியவர்களாக உம்மிடம் வரும்போழுது அந்த நயவஞ்சகர்களின் நிலை எவ்வாறிருக்கும்?! அவர்கள் அந்த வாதத்தில் பொய்யர்களே. ஏனெனில் அல்லாஹ்வின் சட்டதிட்டங்களைத் தீர்ப்பாக ஏற்றுக்கொள்வதில்தான் நன்மை அடங்கியுள்ளது.

63

أُو۟لَٰٓئِكَ ٱلَّذِينَ يَعْلَمُ ٱللَّهُ مَا فِى قُلُوبِهِمْ فَأَعْرِضْ عَنْهُمْ وَعِظْهُمْ وَقُل لَّهُمْ فِىٓ أَنفُسِهِمْ قَوْلًۢا بَلِيغًۭا

அத்தகையோரின் உள்ளங்களில் இருப்பவற்றை அல்லாஹ் நன்கு அறிவான் - ஆகவே நீர் அவர்களிடமிருந்து விலகியிரும், அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யும்; மேலும், அவர்களின் மனங்களில் பதியும்படி தெளிவான வார்த்தைகளைக் கூறும்.

இவர்கள் தங்கள் உள்ளங்களில் மறைத்துவைத்திருக்கும் நயவஞ்சகத்தையும் கெட்ட எண்ணத்தையும் அல்லாஹ் நன்கறிவான். தூதரே! அவர்களைப் புறக்கணித்து விட்டு விடுவீராக. அவர்களுக்கு ஆர்வமூட்டியவாறும் எச்சரிக்கை செய்தவாறும் அல்லாஹ்வின் கட்டளைகளைத் தெளிவுபடுத்துவீராக. அவர்களின் உள்ளங்களில் ஆணித்தரமாகப் பதிந்து உணர்வூட்டும் வார்த்தையைக் கூறுவீராக.

64

وَمَآ أَرْسَلْنَا مِن رَّسُولٍ إِلَّا لِيُطَاعَ بِإِذْنِ ٱللَّهِ ۚ وَلَوْ أَنَّهُمْ إِذ ظَّلَمُوٓا۟ أَنفُسَهُمْ جَآءُوكَ فَٱسْتَغْفَرُوا۟ ٱللَّهَ وَٱسْتَغْفَرَ لَهُمُ ٱلرَّسُولُ لَوَجَدُوا۟ ٱللَّهَ تَوَّابًۭا رَّحِيمًۭا

அல்லாஹ்வின் கட்டளைக்கு கீழ்படிவதற்காகவேயன்றி (மனிதர்களிடம்) நாம் தூதர்களில் எவரையும் அனுப்பவில்லை. ஆகவே அவர்கள் எவரும் தங்களுக்குத் தாங்களே அநியாயம் செய்து கொண்டு, உம்மிடம் வந்து அல்லாஹ்வின் மன்னிப்பைக்கோரி அவர்களுக்காக (அல்லாஹ்வின்) தூதராகிய (நீரும்) மன்னிப்புக் கேட்டிருந்தால் அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் அவர்கள் கண்டிருப்பார்கள்.

நாம் தூதர்களை அனுப்பியதெல்லாம் அல்லாஹ்வின் நாட்டத்தையும், அவனின் ஏற்பாட்டையும் கொண்டு அவர் கட்டளையிடும் விஷயங்களில் மக்கள் அவருக்குக் கட்டுப்பட வேண்டும் என்பதற்காகத்தான். அவர்கள் பாவங்கள் செய்து தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்த சமயத்தில் - நீர் உயிரோடு இருக்கும்போது - உம்மிடம் வந்து தாங்கள் செய்த பாவங்களை ஒத்துக் கொண்டு கைசேதப்பட்டு திருந்தியவர்களாக அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரினால், நீரும் அவர்களுக்காக மன்னிப்புக் கோரினால் அவர்கள் அல்லாஹ்வை பெரும் மன்னிப்பாளனாகவும் மிகுந்த கருணையாளனாகவும் கண்டிருப்பார்கள்.

65

فَلَا وَرَبِّكَ لَا يُؤْمِنُونَ حَتَّىٰ يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ ثُمَّ لَا يَجِدُوا۟ فِىٓ أَنفُسِهِمْ حَرَجًۭا مِّمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوا۟ تَسْلِيمًۭا

உம் இறைவன் மேல் சத்தியமாக, அவர்கள் தங்களிடையே எழுந்த சச்சரவுகளில் உம்மை நீதிபதியாக, ஏற்றுப் பின்னர் நீர் தீர்ப்பு செய்தது பற்றி எத்தகைய அதிருப்தியையும் தம் மனங்களில் கொள்ளாது (அத்தீர்ப்பை) முற்றிலும் ஏற்றுக் கொள்ளாத வரையில், அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் ஆகமாட்டார்கள்.

ஆனால் உண்மையில் விடயம் நயவஞ்சகர்கள் கூறுவது போலல்ல. பின்னர் அல்லாஹ் தன்மீதே சத்தியமிட்டுக் கூறுகிறான், “அவர்கள் தங்களிடையே ஏற்படும் பிரச்சனைகளுக்கு தூதர் உயிரோடு இருக்கும்போது அவரிடமும் அவர் இறந்தபிறகு மார்க்க சட்டங்களிடமும் தீர்வு தேடி, அந்த தீர்வில் சந்தேகம்கொள்ளாமல் அதனை முழுமனதாக ஏற்றுக்கொண்டு அதற்குக் கட்டுப்படும்வரை உண்மையான நம்பிக்கையாளர்களாக ஆக மாட்டார்கள்.”

66

وَلَوْ أَنَّا كَتَبْنَا عَلَيْهِمْ أَنِ ٱقْتُلُوٓا۟ أَنفُسَكُمْ أَوِ ٱخْرُجُوا۟ مِن دِيَٰرِكُم مَّا فَعَلُوهُ إِلَّا قَلِيلٌۭ مِّنْهُمْ ۖ وَلَوْ أَنَّهُمْ فَعَلُوا۟ مَا يُوعَظُونَ بِهِۦ لَكَانَ خَيْرًۭا لَّهُمْ وَأَشَدَّ تَثْبِيتًۭا

மேலும், நாம் (அவர்களைப் பார்த்து) "நீங்கள் உங்களை வெட்டி மாய்த்துக் கொள்ளுங்கள், அல்லது உங்களுடைய வீடுகளிலிருந்து வெளியேறிவிடுங்கள்" என்று கட்டளையிட்டிருப்போமானால், அவர்களில் சிலரைத் தவிர மற்றவர்கள் அவ்வாறு செய்திருக்க மாட்டார்கள் - அவர்கள் தங்களுக்கு உபதேசம் செய்யப்பட்டபடி நடந்திருப்பார்களானால், அது அவர்களுக்கு நன்மையாகவும், (அவர்கள் நம்பிக்கையை) மிகவும் உறுதிப்படுத்துவதாகவும் இருந்திருக்கும்.

“நீங்கள் ஒருவரையொருவர் கொன்றுவிடுங்கள் அல்லது உங்களின் வீடுகளிலிருந்து வெளியேறிவிடுங்கள்” என்று நாம் அவர்கள்மீது விதித்திருந்தால் சிலரைத் தவிர மற்றவர்கள் அதனைச் செயல்படுத்தியிருக்க மாட்டார்கள். அவர்களுக்குச் சிரமமானதை அவன் அவர்கள்மீது விதிக்கவில்லை என்பதற்காக அவர்கள் அவனைப் புகழட்டும். அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுமாறு அவர்களுக்குக் கூறப்பட்டதை செயல்படுத்தி இருந்தால் அது மாறுசெய்வதை விட சிறந்ததாகவும் அவர்களது நம்பிக்கையை இன்னும் உறுதிப்படுத்துவதாகவும் இருந்திருக்கும்; நாம் அவர்களுக்கு பெரும் நன்மைகளை வழங்கியிருப்போம்; அல்லாஹ்வின் பக்கமும் அவனது சுவனத்தின் பக்கமும் செல்லக்கூடிய நேரான வழியையும் காட்டியிருப்போம்.

67

وَإِذًۭا لَّءَاتَيْنَٰهُم مِّن لَّدُنَّآ أَجْرًا عَظِيمًۭا

அப்போது, நாம் அவர்களுக்கு நம்மிடத்திலிருந்து மகத்தான நற்கூலியைக் கொடுத்திருப்போம்.

“நீங்கள் ஒருவரையொருவர் கொன்றுவிடுங்கள் அல்லது உங்களின் வீடுகளிலிருந்து வெளியேறிவிடுங்கள்” என்று நாம் அவர்கள்மீது விதித்திருந்தால் சிலரைத் தவிர மற்றவர்கள் அதனைச் செயல்படுத்தியிருக்க மாட்டார்கள். அவர்களுக்குச் சிரமமானதை அவன் அவர்கள்மீது விதிக்கவில்லை என்பதற்காக அவர்கள் அவனைப் புகழட்டும். அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுமாறு அவர்களுக்குக் கூறப்பட்டதை செயல்படுத்தி இருந்தால் அது மாறுசெய்வதை விட சிறந்ததாகவும் அவர்களது நம்பிக்கையை இன்னும் உறுதிப்படுத்துவதாகவும் இருந்திருக்கும்; நாம் அவர்களுக்கு பெரும் நன்மைகளை வழங்கியிருப்போம்; அல்லாஹ்வின் பக்கமும் அவனது சுவனத்தின் பக்கமும் செல்லக்கூடிய நேரான வழியையும் காட்டியிருப்போம்.

68

وَلَهَدَيْنَٰهُمْ صِرَٰطًۭا مُّسْتَقِيمًۭا

மேலும், அவர்களுக்கு நேரான வழியையும் காட்டியிருப்போம்.

“நீங்கள் ஒருவரையொருவர் கொன்றுவிடுங்கள் அல்லது உங்களின் வீடுகளிலிருந்து வெளியேறிவிடுங்கள்” என்று நாம் அவர்கள்மீது விதித்திருந்தால் சிலரைத் தவிர மற்றவர்கள் அதனைச் செயல்படுத்தியிருக்க மாட்டார்கள். அவர்களுக்குச் சிரமமானதை அவன் அவர்கள்மீது விதிக்கவில்லை என்பதற்காக அவர்கள் அவனைப் புகழட்டும். அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுமாறு அவர்களுக்குக் கூறப்பட்டதை செயல்படுத்தி இருந்தால் அது மாறுசெய்வதை விட சிறந்ததாகவும் அவர்களது நம்பிக்கையை இன்னும் உறுதிப்படுத்துவதாகவும் இருந்திருக்கும்; நாம் அவர்களுக்கு பெரும் நன்மைகளை வழங்கியிருப்போம்; அல்லாஹ்வின் பக்கமும் அவனது சுவனத்தின் பக்கமும் செல்லக்கூடிய நேரான வழியையும் காட்டியிருப்போம்.

69

وَمَن يُطِعِ ٱللَّهَ وَٱلرَّسُولَ فَأُو۟لَٰٓئِكَ مَعَ ٱلَّذِينَ أَنْعَمَ ٱللَّهُ عَلَيْهِم مِّنَ ٱلنَّبِيِّۦنَ وَٱلصِّدِّيقِينَ وَٱلشُّهَدَآءِ وَٱلصَّٰلِحِينَ ۚ وَحَسُنَ أُو۟لَٰٓئِكَ رَفِيقًۭا

யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள்.

அல்லாஹ்வுக்கும் தூதருக்கும் கட்டுப்பட்டவர், இறைதூதர்கள், தூதர்கள் கொண்டுவந்ததை முழுமையாக உண்மைப்படுத்தி, அதன்படி செயல்பட்ட உண்மையாளர்கள், அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்ட உயிர்த்தியாகிகள், வெளிரங்கமும் அந்தரங்கமும் சீர்பெற்று நல்லமல்களுடைய நல்லவர்கள் ஆகிய அல்லாஹ்வின் அருளைப்பெற்றோருடன் சுவனத்தில் இருப்பார். சுவனத்தில் உள்ள இந்தத் தோழர்கள் எத்துணை சிறப்பானவர்கள்!.

70

ذَٰلِكَ ٱلْفَضْلُ مِنَ ٱللَّهِ ۚ وَكَفَىٰ بِٱللَّهِ عَلِيمًۭا

இந்த அருட்கொடை அல்லாஹ்விடமிருந்து கிடைத்ததாகும்; (எல்லாவற்றையும்) அறிந்து கொள்வதில் அல்லாஹ் போதுமானவனாக இருக்கின்றான்.

மேற்கூறப்பட்ட இந்த நன்மைகள் அல்லாஹ் தன் அடியார்களுக்கு வழங்கும் கிருபையாகும். அவர்களின் நிலைமைகளை அறிவதற்கு அல்லாஹ் போதுமானவன். ஒவ்வொருவருக்கும் அவர்களின் செயல்களுக்கேற்ப கூலி வழங்குவான்.

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.