Muslim99Muslim99
← Tafsir library

4. An-Nisaa

The Women · Medinan · 176 ayahs

سُورَةُ النِّسَاءِ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 11–20 of 176

11

يُوصِيكُمُ ٱللَّهُ فِىٓ أَوْلَٰدِكُمْ ۖ لِلذَّكَرِ مِثْلُ حَظِّ ٱلْأُنثَيَيْنِ ۚ فَإِن كُنَّ نِسَآءًۭ فَوْقَ ٱثْنَتَيْنِ فَلَهُنَّ ثُلُثَا مَا تَرَكَ ۖ وَإِن كَانَتْ وَٰحِدَةًۭ فَلَهَا ٱلنِّصْفُ ۚ وَلِأَبَوَيْهِ لِكُلِّ وَٰحِدٍۢ مِّنْهُمَا ٱلسُّدُسُ مِمَّا تَرَكَ إِن كَانَ لَهُۥ وَلَدٌۭ ۚ فَإِن لَّمْ يَكُن لَّهُۥ وَلَدٌۭ وَوَرِثَهُۥٓ أَبَوَاهُ فَلِأُمِّهِ ٱلثُّلُثُ ۚ فَإِن كَانَ لَهُۥٓ إِخْوَةٌۭ فَلِأُمِّهِ ٱلسُّدُسُ ۚ مِنۢ بَعْدِ وَصِيَّةٍۢ يُوصِى بِهَآ أَوْ دَيْنٍ ۗ ءَابَآؤُكُمْ وَأَبْنَآؤُكُمْ لَا تَدْرُونَ أَيُّهُمْ أَقْرَبُ لَكُمْ نَفْعًۭا ۚ فَرِيضَةًۭ مِّنَ ٱللَّهِ ۗ إِنَّ ٱللَّهَ كَانَ عَلِيمًا حَكِيمًۭا

உங்கள் மக்களில் ஓர் ஆணுக்கு, இரண்டு பெண்களுக்குக் கிடைக்கும் பங்குபோன்றது கிடைக்கும் என்று அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கின்றான். பெண்கள் மட்டும் இருந்து அவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டிருந்தால் அவர்களுக்கு இறந்து போனவர்விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பாகம் கிடைக்கும். ஆனால் ஒரே பெண்ணாக இருந்தால் அவள் பங்கு பாதியாகும்; இறந்தவருக்கு குழந்தை இருக்குமானால் இறந்தவர் விட்டுச் சென்றதில் ஆறில் ஒரு பாகம் (அவரது) பெற்றோர் ஒவ்வொருவருக்கும் உண்டு. ஆனால் இறந்தவருக்கு குழந்தை இல்லாதிருந்து பெற்றோர் மாத்திரமே வாரிசாக இருந்தால் அவர் தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் (மீதி தந்தைக்கு உரியதாகும்). இறந்தவருக்கு சகோதரர்கள் இருந்தால் அவர் தாய்க்கு ஆறில் ஒரு பாகம் தான் (மீதி தந்தைக்கு சேரும்). இவ்வாறு பிரித்துக் கொடுப்பது அவர் செய்துள்ள மரண சாஸனத்தையும், கடனையும் நிரைவேற்றிய பின்னர்தான்;. உங்கள் பெற்றோர்களும், குழந்தைகளும் - இவர்களில் யார் நன்மை பயப்பதில் உங்களுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் என்று நீங்கள் அறிய மாட்டீர்கள்;. ஆகையினால் (இந்த பாகப்பிரிவினை) அல்லாஹ்விடமிருந்து வந்த கட்டளையாகும்;. நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும் மிக்க ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.

உங்கள் பிள்ளைகளின் அநந்தர விஷயத்தில் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்: அவர்களிடையே சொத்து பங்கிடப்படும்போது மகனுக்கு இரண்டு மகள்களின் பங்குகள் தரப்பட வேண்டும். இறந்தவருக்கு ஆண்பிள்ளைகள் அல்லாமல் இரண்டிற்கு மேற்பட்ட பெண் பிள்ளைகள் மட்டும் இருந்தால் அவர் விட்டுச்சென்ற சொத்தில் மூன்றில் இரண்டுபங்கு அவர்களுக்குத் தரப்பட வேண்டும். அவருக்கு ஒரு பெண்பிள்ளை மட்டும் இருந்தால் அவர் விட்டுச்சென்றவற்றில் பாதி அவளுக்குத் தரப்பட வேண்டும். இறந்தவருக்கு ஆண்பிள்ளையோ பெண்பிள்ளையோ இருந்தால் தாய், தந்தையர் இருவருக்கும் தனித்தனியாக ஆறில் ஒருபங்கு தரப்பட வேண்டும். இறந்தவருக்குக் குழந்தைகள் இல்லாமல் தாய், தந்தையர் மட்டுமே வாரிசுகளாக இருந்தால் அவரது தாய்க்கு மூன்றில் ஒருபங்கும் மீதமுள்ளதை தந்தைக்கும் அளித்துவிட வேண்டும். இறந்தவருக்கு இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட சகோதரர்களோ சகோதரிகளோ இருந்தால் தாய்க்கு ஆறில் ஒருபங்கை அளித்துவிட்டு மீதமுள்ளதை தந்தைக்கு அளித்துவிட வேண்டும். சகோதரர்களுக்கு எந்தப் பங்கும் இல்லை. இந்தப் பங்கீடு இறந்தவர் செய்த மரண சாசனத்தையும் அவரது கடனையும் நிறைவேற்றிய பிறகுதான் இருக்க வேண்டும். அவர் செய்த மரண சாசனம் அவர் விட்டுச் சென்ற சொத்தில் மூன்றில் ஒரு பங்கைத் தாண்டிவிடக்கூடாது. அல்லாஹ் உங்களுக்குப் பங்கீட்டை இவ்வாறு அமைத்துள்ளான். உங்களின் பிள்ளைகள், தந்தையர் ஆகியோரில் யார் இவ்வுலகிலும் மறுவுலகிலும் அதிகப் பயன்களை அளிக்கக்கூடியவர்கள் என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள். நீங்கள் உங்கள் வாரிசுகளில் சிலரின்மீது நல்லெண்ணம் வைத்து சொத்துகள் அனைத்தையும் அவருக்கு எழுதிவிடலாம். சிலர்மீது தவறான எண்ணத்தால் அவர்களுக்கு எதுவும் தராமல் போகலாம். ஆனால் நிலமை தலைகீழாக இருக்கலாம். இவை அனைத்தையும் சரியாக அறிந்தவன் அல்லாஹ்வே. எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. எனவே தான் மேற்சொன்னவாறு அநந்தரத்தைப் பங்குவைத்துள்ளான். இவ்வாறு செய்வதை அவன் தன் அடியார்கள்மீது கடமையாக்கியுள்ளான். அவன் அனைத்தையும் அறிந்தவன். அடியார்களுக்கு நன்மைதரக்கூடிய எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. தான் வழங்கும் சட்டங்களில், நிர்வகிப்பதில் அவன் ஞானம்மிக்கவன்.

12

۞ وَلَكُمْ نِصْفُ مَا تَرَكَ أَزْوَٰجُكُمْ إِن لَّمْ يَكُن لَّهُنَّ وَلَدٌۭ ۚ فَإِن كَانَ لَهُنَّ وَلَدٌۭ فَلَكُمُ ٱلرُّبُعُ مِمَّا تَرَكْنَ ۚ مِنۢ بَعْدِ وَصِيَّةٍۢ يُوصِينَ بِهَآ أَوْ دَيْنٍۢ ۚ وَلَهُنَّ ٱلرُّبُعُ مِمَّا تَرَكْتُمْ إِن لَّمْ يَكُن لَّكُمْ وَلَدٌۭ ۚ فَإِن كَانَ لَكُمْ وَلَدٌۭ فَلَهُنَّ ٱلثُّمُنُ مِمَّا تَرَكْتُم ۚ مِّنۢ بَعْدِ وَصِيَّةٍۢ تُوصُونَ بِهَآ أَوْ دَيْنٍۢ ۗ وَإِن كَانَ رَجُلٌۭ يُورَثُ كَلَٰلَةً أَوِ ٱمْرَأَةٌۭ وَلَهُۥٓ أَخٌ أَوْ أُخْتٌۭ فَلِكُلِّ وَٰحِدٍۢ مِّنْهُمَا ٱلسُّدُسُ ۚ فَإِن كَانُوٓا۟ أَكْثَرَ مِن ذَٰلِكَ فَهُمْ شُرَكَآءُ فِى ٱلثُّلُثِ ۚ مِنۢ بَعْدِ وَصِيَّةٍۢ يُوصَىٰ بِهَآ أَوْ دَيْنٍ غَيْرَ مُضَآرٍّۢ ۚ وَصِيَّةًۭ مِّنَ ٱللَّهِ ۗ وَٱللَّهُ عَلِيمٌ حَلِيمٌۭ

இன்னும் உங்கள் மனைவியர் விட்டுச் சென்றதில் - அவர்களுக்குப் பிள்ளை இல்லாதிருந்தால் உங்களுக்குப் பாதி பாகம் உண்டு. அவர்களுக்குப் பிள்ளை இருந்தால் அவர்கள் விட்டுச் சென்றவற்றிலிருந்து. உங்களுக்கு கால் பாகம்தான் - (இதுவும்) அவர்கள் செய்திருக்கிற மரண சாஸனத்தையும், கடனையம் நிறைவேற்றிய பின்னர்தான் - தவிர உங்களுக்குப் பிள்ளையில்லாதிருப்பின் நீங்கள் விட்டுச் சென்றதிலிருந்து அவர்களுக்குக் கால் பாகம்தான்;. உங்களுக்குப் பிள்ளை இருந்தால், அப்போது அவர்களுக்கு நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பாகம்தான்; (இதுவும்) நீங்கள் செய்திருக்கும் மரண சாஸனத்தையும் கடனையும் நிறைவேற்றிய பின்னரேதான்;. தந்தை, பாட்டன் போன்ற முன் வாரிசுகளோ அல்லது பிள்ளை, பேரன் போன்ற பின் வாரிசுகளோ இல்லாத ஓர் ஆணோ அல்லது ஒரு பெண்ணோ - இவர்களுக்கு ஒரு சகோதரனோ அல்லது சகோதரியோ இருந்தால் - அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உண்டு. ஆனால் இதற்கு அதிகமாக இருந்தால் அவர்கள் மூன்றில் ஒரு பாகத்தில் சமமாகப் பங்கிட்டுக் கொள்ளவேண்டும் - (இதுவும்) அவர்களின் மரண சாஸனமும் கடனும் நிறைவேற்றிய பின்னர்தான். ஆனால் (மரண சாஸனத்தைக் கொண்டு வாரிசுகள்) எவருக்கும் நஷ்டம் ஏற்படக் கூடாது. (இது) அல்லாஹ்வினால் விதிக்கப்பட்டதாகும்;. இன்னும் அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும், மிக்க பொறுமையுடையோனுமாகவும் இருக்கின்றான்.

கணவன்மார்களே! உங்கள் மனைவியருக்கு உங்கள் மூலமோ முன்னைய கணவர் மூலமோ குழந்தைகள் இல்லையென்றால் அவர்கள் விட்டுச் சென்றவற்றில் உங்களுக்குப் பாதி உண்டு. அவர்களுக்குக் குழந்தைகள் இருந்தால் அவர்கள் விட்டுச் சென்றவற்றில் நான்கில் ஒருபங்குதான் உங்களுக்கு உண்டு. அவர்கள் செய்த மரண சாசனத்தையும் அவர்களின் கடனையும் நிறைவேற்றிய பிறகே உங்களுக்கான பங்கீடு கிடைக்கும். கணவன்மார்களே! உங்களுக்குப் பிள்ளைகள் இல்லையென்றால் நீங்கள் விட்டுச் சென்ற சொத்தில் உங்கள் மனைவியருக்கு நான்கில் ஒரு பங்கு உண்டு. உங்களுக்குப் பிள்ளைகள் இருந்தால் நீங்கள் விட்டுச் சென்ற சொத்தில் அவர்களுக்கு எட்டில் ஒருபங்குதான் உண்டு. நீங்கள் செய்த மரண சாசனத்தையும் உங்கள் மீதுள்ள கடனையும் நிறைவேற்றிய பிறகே சொத்து பங்கீடு செய்யப்படும். இறந்தவர் ஆணோ பெண்ணோ அவருக்கு தந்தையோ பிள்ளைகளோ இல்லையெனில் ஒரு தாய்வழிச் சகோதரனோ அல்லது சகோதரியோ மட்டும் இருந்தால் அவருக்கோ அவளுக்கோ ஆறில் ஒருபங்கு தரப்பட வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட தாய்வழிச் சகோதரர்களோ சகோதரிகளோ இருந்தால் மூன்றில் ஒருபங்கை அவர்களுக்குச் சமமாக பங்கிட்டுக் கொடுத்துவிட வேண்டும். இதில் ஆண், பெண் இருவருக்கும் சமஅளவு பங்குதான் கிடைக்கும். இறந்தவரின் மரண சாசனத்தையும் அவர்மீதுள்ள கடனையும் நிறைவேற்றியபிறகே இந்தப் பங்கீடு செய்யப்படும். இறந்தவரின் மரண சாசனம் மூன்றில் ஒரு பங்கைவிட அதிகமாக இருந்து வாரிசுதாரர்களுக்கு தீங்கிழைக்கக்கூடியதாக இருந்துவிடக்கூடாது. இவ்வசனம் உள்ளடக்கியுள்ள இச்சட்டம் அல்லாஹ் உங்கள்மீது விதித்த கடமையாகும். இவ்வுலகிலும் மறுவுலகிலும் தன் அடியார்களுக்கு நன்மை தரக்கூடியவற்றை அவன் நன்கறிந்தவன். அவன் சகிப்புத்தன்மைமிக்கவன். குற்றவாளிகளை உடனுக்குடன் தண்டித்துவிட மாட்டான்.

13

تِلْكَ حُدُودُ ٱللَّهِ ۚ وَمَن يُطِعِ ٱللَّهَ وَرَسُولَهُۥ يُدْخِلْهُ جَنَّٰتٍۢ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ خَٰلِدِينَ فِيهَا ۚ وَذَٰلِكَ ٱلْفَوْزُ ٱلْعَظِيمُ

இவை அல்லாஹ்வின் வரையறைகளாகும்;. எவர் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்களை சுவனபதிகளில் பிரவேசிக்கச் செய்வான்;. அதன் கீழே ஆறுகள் சதா ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அங்கே என்றென்றும் இருப்பார்கள் - இது மகத்தான வெற்றியாகும்.

அநாதைகள், ஏனையவர்கள் தொடர்பாக மேற்கூறப்பட்ட சட்டங்கள் அல்லாஹ் தன் அடியார்கள் எடுத்து நடப்பதற்காக அவர்கள் மீது விதித்த சட்டங்களாகும். யார் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்பட்டு அவனுடைய கட்டளைகளை நிறைவேற்றி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி இருக்கின்றார்களோ அவர்களை அல்லாஹ் சுவனங்களில் பிரவேசிக்கச்செய்வான். அவற்றின் மாளிகைகளுக்குக் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அங்கு அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். அவர்களை அழிவு நெருங்கவும்மாட்டாது. இறைவன் அளித்த இந்தக் கூலிதான் மகத்தான வெற்றியாகும். இதற்கு இணையான வெற்றி எதுவும் இல்லை.

14

وَمَن يَعْصِ ٱللَّهَ وَرَسُولَهُۥ وَيَتَعَدَّ حُدُودَهُۥ يُدْخِلْهُ نَارًا خَٰلِدًۭا فِيهَا وَلَهُۥ عَذَابٌۭ مُّهِينٌۭ

எவன் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் மாறு செய்கிறானோ, இன்னும் அவன் விதித்துள்ள வரம்புகளை மீறுகிறானோ அவனை நரகில் புகுத்துவான்;. அவன் அங்கு (என்றென்றும்) தங்கி விடுவான்;. மேலும் அவனுக்கு இழிவான வேதனையுண்டு.

அல்லாஹ் வழங்கிய சட்டங்களை வீணாக்கி அதன் அடிப்படையில் செயல்படாமல் அவற்றில் சந்தேகம் கொண்டு அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறாகச் செயல்பட்டவர்கள், அவன் விதித்த வரம்புகளை மீறியவர்கள் நரகத்தில் நுழைவார்கள். அங்கு நிரந்தரமாக வீழ்ந்துகிடப்பார்கள். அவர்களுக்கு இழிவுதரும் வேதனையுண்டு.

15

وَٱلَّٰتِى يَأْتِينَ ٱلْفَٰحِشَةَ مِن نِّسَآئِكُمْ فَٱسْتَشْهِدُوا۟ عَلَيْهِنَّ أَرْبَعَةًۭ مِّنكُمْ ۖ فَإِن شَهِدُوا۟ فَأَمْسِكُوهُنَّ فِى ٱلْبُيُوتِ حَتَّىٰ يَتَوَفَّىٰهُنَّ ٱلْمَوْتُ أَوْ يَجْعَلَ ٱللَّهُ لَهُنَّ سَبِيلًۭا

உங்கள் பெண்களில் எவளேனும் மானக்கேடான செயல் செய்துவிட்(டதாகக் குற்றம் சுமத்தப்பட்)டால், அதை நிரூபிக்க உங்களிலிருந்து நான்கு பேர்களை அழையுங்கள்;. அவர்கள் அதை (மெய்ப்படுத்தி) சாட்சி கூறிவிட்டால், (அப்பெண்களை) மரணம் கைப்பற்றும் வரையில் அல்லது அவர்களுக்கு அல்லாஹ் ஒரு வழியை உண்டாக்கும் வரையில் அவர்களை வீடுகளில் தடுத்து வையுங்கள்.

உங்கள் பெண்களில் திருமணம் முடித்த முடிக்காத யாரேனும் விபச்சாரம் செய்தால் அவர்களுக்கு எதிராக நீதியுடன் சாட்சிசொல்லக்கூடிய முஸ்லிமான நான்கு ஆண் சாட்சிகளைத் தேடுங்கள். அவர்கள் ‘அந்தப் பெண்கள் விபச்சாரம் புரிந்தார்கள்’ என்று சாட்சிகூறினால் அந்தப் பெண்களுக்குத் தண்டனையாக அவர்கள் மரணிக்கும்வரை அல்லது அல்லாஹ் அவர்களுக்கு வேறொரு வழியை ஏற்படுத்தும்வரை அவர்களை வீடுகளில் அடைத்து வைத்துக்கொள்ளுங்கள். (பின்னர் அல்லாஹ் அவர்களுக்கான வழியைத் தெளிவுபடுத்தினான், அவர்கள் திருமணமாகதவர்களாக இருந்தால் அவர்கள்மீது நூறு கசையடிகள் அடிக்கப்பட்டு ஒரு வருடம் நாடுகடத்தப்பட வேண்டும். அவர்கள் திருமணமானவர்களாக இருந்தால் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும்).

16

وَٱلَّذَانِ يَأْتِيَٰنِهَا مِنكُمْ فَـَٔاذُوهُمَا ۖ فَإِن تَابَا وَأَصْلَحَا فَأَعْرِضُوا۟ عَنْهُمَآ ۗ إِنَّ ٱللَّهَ كَانَ تَوَّابًۭا رَّحِيمًا

உங்களில் அதை (விபச்சாரத்தை) செய்துவிடக்கூடிய இருவருக்கும் தண்டனை கொடுங்கள்;. அவ்விருவரும் (தாம் செய்த குற்றத்தை நினைத்து வருந்தி) தவ்பா செய்து தங்களை திருத்திக் கொண்டால், அவர்களை விட்டு விடுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனும் கிருபையுடையோனுமாக இருக்கின்றான்.

திருமணம் முடித்த முடிக்காத ஆண்களில் விபச்சாரம் புரிபவர்களையும் அவர்களை இழிவுபடுத்தும் வகையில் நாவால், கரங்களால் தண்டியுங்கள். அவர்கள் திருந்தி தங்களின் செயல்களை சீர்படுத்திக் கொண்டால் அவர்களைத் துன்புறுத்த வேண்டாம். ஏனெனில் பாவமன்னிப்புக் கோரியவர் பாவம் செய்யாதவரைப் போலாவார். தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களை அல்லாஹ் மன்னிக்கக்கூடியவன். அவர்களின் விஷயத்தில் அவன் மிகுந்த கருணையாளனாக இருக்கின்றான்.இது விபச்சாரம் புரிந்தவர்கள் விஷயத்தில் ஆரம்பத்தில் இறக்கப்பட்ட கட்டளையாகும். பின்னர் அல்லாஹ் இதனை ரத்துசெய்து திருமணமாகாதவனுக்கு கசையடியும் நாடுகடத்தலும் திருமணமானவனுக்கு கல்லெறிவதும் விதிக்கப்பட்டது.

17

إِنَّمَا ٱلتَّوْبَةُ عَلَى ٱللَّهِ لِلَّذِينَ يَعْمَلُونَ ٱلسُّوٓءَ بِجَهَٰلَةٍۢ ثُمَّ يَتُوبُونَ مِن قَرِيبٍۢ فَأُو۟لَٰٓئِكَ يَتُوبُ ٱللَّهُ عَلَيْهِمْ ۗ وَكَانَ ٱللَّهُ عَلِيمًا حَكِيمًۭا

எவர்கள் அறியாமையினால் தீமை செய்துவிட்டு, பின்னர் விரைவில் மன்னிப்புத் தேடி கொள்கிறார்களோ அவர்களுக்குத்தான் அல்லாஹ்விடத்தில் மன்னிப்பு. உண்டு. அல்லாஹ் அவர்களின் மன்னிப்பை ஏற்றுக்கொள்கிறான். இன்னும் அல்லாஹ் நன்கறிந்தோனும். ஞானம் உடையோனுமாக இருக்கின்றான்.

பாவங்கள் ஏற்படுத்தும் விளைவுகளை அறியாமல் பாவங்களில் ஈடுபட்டு - மனிதன் அறிந்தோ அறியாமலோ செய்யும் பாவங்கள் அனைத்தும் இந்த வகையைச் சார்ந்ததுதான் - பின்னர் தங்கள் இறைவனிடம் மரணவேளை வருவதற்கு முன்னரே திரும்பிவிடுபவர்களது பாவமன்னிப்புக் கோரிக்கையைத்தான் அல்லாஹ் ஏற்றுக் கொள்வான். இவர்களின் குற்றங்குறைகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவான். அல்லாஹ் தன் படைப்பினங்களின் நிலைகளைக் குறித்து நன்கறிந்தவன். தனது நிர்ணயத்தில், சட்டங்களில் ஞானம்மிக்கவன்.

18

وَلَيْسَتِ ٱلتَّوْبَةُ لِلَّذِينَ يَعْمَلُونَ ٱلسَّيِّـَٔاتِ حَتَّىٰٓ إِذَا حَضَرَ أَحَدَهُمُ ٱلْمَوْتُ قَالَ إِنِّى تُبْتُ ٱلْـَٰٔنَ وَلَا ٱلَّذِينَ يَمُوتُونَ وَهُمْ كُفَّارٌ ۚ أُو۟لَٰٓئِكَ أَعْتَدْنَا لَهُمْ عَذَابًا أَلِيمًۭا

இன்னும் எவர்கள் தீவினைகளைத் (தொடர்ந்து) செய்து கொண்டேயிருந்து, முடிவில் அவர்களை மரணம் நெருங்கிய போது, "நிச்சயமாக இப்பொழுது நான் (பாவங்களுக்காக வருந்தி) மன்னிப்புத் தேடுகிறேன்" என்று கூறுகின்றார்களோ, அவர்களுக்கும், எவர் காஃபிர்களாகவே மரிக்கிறார்களோ அவர்களுக்கும் பாவமன்னிப்பு இல்லை, இத்தகையோருக்குத் துன்பம் கொடுக்கும் வேதனையையே நாம் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.

பாவமன்னிப்புக் கோராமல் மரணவேளை நெருங்கும்வரை பாவங்களில் நிலைத்திருந்து இறுதியில், “நான் செய்த பாவங்களுக்காக மன்னிப்புக் கோருகிறேன்” என்று கூறுபவர்களை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். நிராகரிப்பில் நிலைத்திருந்து இறந்துவிடுபவரின் பாவமன்னிப்புக் கோரிக்கையையும் அவன் ஏற்றுக்கொள்ளமாட்டான். மரணம்வரும்வரை பாவங்களில் நிலைத்திருப்பவர்கள், நிராகரித்த நிலையில் மரணிப்பவர்கள் ஆகியோருக்காக நாம் வேதனைமிக்க தண்டனையை தயார்படுத்தி வைத்துள்ளோம்.

19

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا يَحِلُّ لَكُمْ أَن تَرِثُوا۟ ٱلنِّسَآءَ كَرْهًۭا ۖ وَلَا تَعْضُلُوهُنَّ لِتَذْهَبُوا۟ بِبَعْضِ مَآ ءَاتَيْتُمُوهُنَّ إِلَّآ أَن يَأْتِينَ بِفَٰحِشَةٍۢ مُّبَيِّنَةٍۢ ۚ وَعَاشِرُوهُنَّ بِٱلْمَعْرُوفِ ۚ فَإِن كَرِهْتُمُوهُنَّ فَعَسَىٰٓ أَن تَكْرَهُوا۟ شَيْـًۭٔا وَيَجْعَلَ ٱللَّهُ فِيهِ خَيْرًۭا كَثِيرًۭا

நம்பிக்கை கொண்டவர்களே! பெண்களை (அவர்கள் மனப் பொருத்தம் இல்லாத நிலையில்) நீங்கள் பலவந்தப்படுத்தி அனந்தரமாகக் கொள்வது உங்களுக்கு கூடாது. பகிரங்கமான கெட்ட செயலை அவர்கள் செய்தாலொழிய, பெண்களுக்கு நீங்கள் கொடுத்ததிலிருந்து சிலவற்றை எடுத்துக் கொள்ளும் பொருட்டு அவர்களுக்குத் (துன்பம் கொடுத்து) தடுத்து வைக்காதீர்கள்;. இன்னும், அவர்களுடன் கனிவோடு நடந்து கொள்ளுங்கள் - நீங்கள் அவர்களை வெறுத்தால் (அது சரியில்லை ஏனெனில்) நீங்கள் ஒன்றை வெறுக்கக் கூடும் அதில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை ஏற்படுத்தி விடலாம்.

அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! உங்களின் தந்தையரிடமிருந்து சொத்தை வாரிசாகப் பெறுவதுபோல் அவர்களின் மனைவியரை வாரிசாகப் பெறுவது உங்களுக்கு ஆகுமானதல்ல. அவர்களை நீங்கள் மணமுடித்துக் கொள்வதோ, நீங்கள் விரும்புபவர்களுக்கு மணமுடித்துக் கொடுப்பதோ, அவர்கள் திருமணம் செய்துகொள்வதைத் தடுப்பதோ கூடாது. நீங்கள் வெறுக்கும் உங்கள் மனைவியரை அவர்களுக்கு அளித்த மணக்கொடை மற்றும் ஏனையவற்றை திரும்பப் பெறும் எண்ணத்தில் அவர்களைத் துன்புறுத்துவதற்காகத் தடுத்துவைத்துக் கொள்வதும் உங்களுக்கு ஆகுமானதல்ல. ஆயினும் அவர்கள் பகிரங்கமான விபச்சாரத்தில் ஈடுபட்டாலே தவிர. அவர்கள் அவ்வாறு செய்தால் அவர்களுக்கு நீங்கள் அளித்த மணக்கொடையை திரும்பப் பெறுவதற்காக நெருக்கடியளிப்பதற்காக தடுத்து வைத்துக்கொள்வது உங்கள் மீது குற்றமாகாது. உங்கள் பெண்களுக்கு நோவினை கொடுக்காமலும் உபகாரம் புரிந்தும் நல்லமுறையில் வாழ்க்கை நடத்துங்கள். உலக காரியம் ஒன்றுக்காக நீங்கள் அவர்களை வெறுத்தால் அவர்களைச் சகித்துக்கொள்ளுங்கள். ஏனெனில் நீங்கள் வெறுக்கும் விஷயத்தில் ஏராளமான நன்மைகளை இவ்வுலகிலும் மறுமையிலும் அல்லாஹ் வைத்திருக்கலாம்.

20

وَإِنْ أَرَدتُّمُ ٱسْتِبْدَالَ زَوْجٍۢ مَّكَانَ زَوْجٍۢ وَءَاتَيْتُمْ إِحْدَىٰهُنَّ قِنطَارًۭا فَلَا تَأْخُذُوا۟ مِنْهُ شَيْـًٔا ۚ أَتَأْخُذُونَهُۥ بُهْتَٰنًۭا وَإِثْمًۭا مُّبِينًۭا

நீங்கள் ஒரு மனைவி(யை விலக்கி விட்டு அவளு)க்கு பதிலாக மற்றொரு மனைவியை (மணந்து கொள்ள) நாடினால், முந்தைய மனைவிக்கு ஒரு பொருட்குவியலையே கொடுத்திருந்த போதிலும், அதிலிருந்து எதையும் (திரும்ப) எடுத்துக் கொள்ளாதீர்கள் - அபாண்டமாகவும், பகிரங்கமாகப் பாவகரமாகவும், அதனை நீங்கள் (திரும்பி) எடுக்கிறீர்களா?

நீங்கள் உங்கள் மனைவியை விவாகரத்து செய்து வேறொரு பெண்ணை மணக்க விரும்புவது உங்கள்மீது குற்றமாகாது. ஆனால் நீங்கள் அவர்களுக்கு மணக்கொடையாக பெருஞ்செல்வத்தைக் கொடுத்திருந்தாலும் எதையும் அவர்களிடமிருந்து திரும்பப் பெறக்கூடாது. நீங்கள் கொடுத்ததை வாங்குவது பகிரங்கமான இட்டுக்கட்டாகவும் தெளிவான பாவமாகவும் கருதப்படுகிறது.

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.