Muslim99Muslim99
← Tafsir library

4. An-Nisaa

The Women · Medinan · 176 ayahs

سُورَةُ النِّسَاءِ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 161–170 of 176

161

وَأَخْذِهِمُ ٱلرِّبَوٰا۟ وَقَدْ نُهُوا۟ عَنْهُ وَأَكْلِهِمْ أَمْوَٰلَ ٱلنَّاسِ بِٱلْبَٰطِلِ ۚ وَأَعْتَدْنَا لِلْكَٰفِرِينَ مِنْهُمْ عَذَابًا أَلِيمًۭا

வட்டி வாங்குவது அவர்களுக்குத் தடை செய்யப்பட்டிருந்தும், அவர்கள் அதை வாங்கி வந்ததன் (காரணமாகவும்,) தவறான முறையில் அவர்கள் மக்களின் சொத்துகளை விழுங்கிக் கொண்டிருந்ததன் (காரணமாகவும், இவ்வாறு தண்டனை வழங்கினோம்), இவர்களில் காஃபிரானோருக்கு (மறுமையில்) நோவினை செய்யும் வேதனையையும் நாம் சித்தப்படுத்தியுள்ளோம்.

வட்டி வாங்குவது அவர்களுக்குத் தடைசெய்யப்பட்டிருந்தும் அவர்கள் அதனை வாங்கியதாலும் மக்களின் செல்வங்களை உரிமையின்றி பெற்றதனாலும் நாம் அவ்வாறு செய்தோம். அவர்களிலுள்ள நிராகரிப்பாளர்களுக்கு வேதனைமிக்க தண்டனையைத் தயார்படுத்தி வைத்துள்ளோம்.

An-Nisaa 4:161Listen in Qur'an →
162

لَّٰكِنِ ٱلرَّٰسِخُونَ فِى ٱلْعِلْمِ مِنْهُمْ وَٱلْمُؤْمِنُونَ يُؤْمِنُونَ بِمَآ أُنزِلَ إِلَيْكَ وَمَآ أُنزِلَ مِن قَبْلِكَ ۚ وَٱلْمُقِيمِينَ ٱلصَّلَوٰةَ ۚ وَٱلْمُؤْتُونَ ٱلزَّكَوٰةَ وَٱلْمُؤْمِنُونَ بِٱللَّهِ وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِ أُو۟لَٰٓئِكَ سَنُؤْتِيهِمْ أَجْرًا عَظِيمًا

எனினும், (நபியே!) அவர்களில் கல்வியில் உறுதியுடையோரும், நம்பிக்கை கொண்டோரும், உமக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தின் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்ட (வேதங்கள்) மீதும் ஈமான் கொள்கிறார்கள்;. இன்னும், தொழுகையை நிலைநிறுத்துவோராகவும், ஜக்காத் முறையாகக் கொடுப்போராகவும்; அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டோராக (இவர்கள்) இருக்கிறார்கள் - அத்தகையோருக்கு நாம் மகத்தான நற்கூலியைக் கொடுப்போம்.

ஆனால் யூதர்களில் நன்கு கற்றோரும் நம்பிக்கையாளர்களும் அல்லாஹ் உம்மீது இறக்கிய குர்ஆனையும் உமக்கு முன்னால் ஏனைய தூதர்களுக்கு இறக்கப்பட்ட தவ்ராத், இன்ஜீல் போன்ற வேதங்களையும் உண்மைப்படுத்துகிறார்கள்; தொழுகையைக் கடைப்பிடிக்கிறார்கள்; தங்கள் செல்வங்களிலிருந்து ஸகாத்தையும் வழங்குகிறார்கள். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனே, அவனுக்கு யாதொரு இணையுமில்லை என்பதையும் மறுமை நாளையும் உண்மைப்படுத்துகிறார்கள். இந்த பண்புகளை உடையவர்களுக்கு நாம் பெரும் நன்மைகளை வழங்குவோம்.

An-Nisaa 4:162Listen in Qur'an →
163

۞ إِنَّآ أَوْحَيْنَآ إِلَيْكَ كَمَآ أَوْحَيْنَآ إِلَىٰ نُوحٍۢ وَٱلنَّبِيِّۦنَ مِنۢ بَعْدِهِۦ ۚ وَأَوْحَيْنَآ إِلَىٰٓ إِبْرَٰهِيمَ وَإِسْمَٰعِيلَ وَإِسْحَٰقَ وَيَعْقُوبَ وَٱلْأَسْبَاطِ وَعِيسَىٰ وَأَيُّوبَ وَيُونُسَ وَهَٰرُونَ وَسُلَيْمَٰنَ ۚ وَءَاتَيْنَا دَاوُۥدَ زَبُورًۭا

(நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீ அறிவித்தோம். மேலும், இப்றாஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும், இஸ்ஹாக்குக்கும், யஃகூபுக்கும் (அவர்களுடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய்யூபுக்கும், யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வஹீ அறிவித்தோம்;. இன்னும் தாவூதுக்கு ஜபூர் (என்னும் வேதத்தைக்) கொடுத்தோம்.

தூதரே! உமக்கு முந்தைய தூதர்களுக்கு வஹி அறிவித்தவாறே உமக்கும் வஹி அறிவித்தோம். நீர் தூதர்களில் புதுமையானவர் அல்ல. நூஹுக்கும் அவருக்குப் பின்னால் வந்த தூதர்களுக்கும் வஹி அறிவித்தோம். இப்ராஹீமுக்கும் அவரது மகன்களான இஸ்மாயீல் மற்றும் இஸ்ஹாக்கிற்கும், இஸ்ஹாக்கின் மகன் யஅகூபிற்கும், அஸ்பாத் (இஸ்ராயீலின் மக்களின் பன்னிரண்டு கோத்திரங்களுக்கும் தூதர்களாக அனுப்பப்பட்ட யஅகூபின் மகன்கள்) ஆகியோருக்கும் நாம் வஹி அறிவித்தோம். மேலும் ஈஸா, அய்யூப், யூனுஸ், ஹாரூன், ஸுலைமான் ஆகியோருக்கும் வஹீ அறிவித்தோம். தாவூதுக்கு சபூர் என்னும் வேதத்தை வழங்கினோம்.

An-Nisaa 4:163Listen in Qur'an →
164

وَرُسُلًۭا قَدْ قَصَصْنَٰهُمْ عَلَيْكَ مِن قَبْلُ وَرُسُلًۭا لَّمْ نَقْصُصْهُمْ عَلَيْكَ ۚ وَكَلَّمَ ٱللَّهُ مُوسَىٰ تَكْلِيمًۭا

(இவர்களைப் போன்றே வேறு) தூதர்கள் சிலரையும் (நாம் அனுப்பி) அவர்களுடைய சரித்திரங்களையும் உமக்கு நாம் முன்னர் கூறியுள்ளோம்;. இன்னும் (வேறு) தூதர்கள் (பலரையும் நாம் அனுப்பினோம்;. ஆனால்) அவர்களின் சரித்திரங்களை உமக்குக் கூறவில்லை. இன்னும் மூஸாவுடன் அல்லாஹ் பேசியும் இருக்கின்றான்.

நாம் அனுப்பிய சில தூதர்களைக் குறித்து குர்ஆனில் உமக்கு எடுத்துரைத்துள்ளோம். சில தூதர்களைக் குறித்து நாம் உமக்கு எடுத்துரைக்கவில்லை. நாம் எடுத்துரைக்காமல் விட்டுவிட்டதிலும் ஒரு நோக்கம் இருக்கிறது. மூஸாவை கௌரவப்படுத்துவதற்காக அல்லாஹ் அவருடன் நேரடியாக பேசியும் இருக்கின்றான்.

An-Nisaa 4:164Listen in Qur'an →
165

رُّسُلًۭا مُّبَشِّرِينَ وَمُنذِرِينَ لِئَلَّا يَكُونَ لِلنَّاسِ عَلَى ٱللَّهِ حُجَّةٌۢ بَعْدَ ٱلرُّسُلِ ۚ وَكَانَ ٱللَّهُ عَزِيزًا حَكِيمًۭا

தூதர்கள் வந்தபின் அல்லாஹ்வுக்கு எதிராக மக்களுக்கு (சாதகமாக) ஆதாரம் எதுவும் ஏற்படாமல் இருக்கும் பொருட்டு, தூதர்கள் (பலரையும்) நன்மாராயங் கூறுபவர்களாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவும் (அல்லாஹ் அனுப்பினான்). மேலும் அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவனாகவும், பேரறிவாளனாகவும் இருக்கின்றான்.

அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டவர்களுக்கு நன்மை உண்டு என்று நற்செய்தி கூறுவோராகவும் அவனை நிராகரித்தவர்களுக்கு வேதனைமிக்க தண்டனை உண்டு என்று எச்சரிக்கை செய்வோராகவுமே நாம் தூதர்களை அனுப்பினோம். அவர்கள் அனுப்பப்பட்டபிறகு மக்கள் சாக்குப்போக்குக் கூறுவதற்கு எந்த ஆதாரமும் எஞ்சியிருக்கக்கூடாது என்பதற்காகத்தான் அனுப்பினோம். அல்லாஹ் தன் ஆட்சியதிகாரத்தில் யாவற்றையும் மிகைத்தவன்; தனது தீர்ப்பில் ஞானமிக்கவன்.

An-Nisaa 4:165Listen in Qur'an →
166

لَّٰكِنِ ٱللَّهُ يَشْهَدُ بِمَآ أَنزَلَ إِلَيْكَ ۖ أَنزَلَهُۥ بِعِلْمِهِۦ ۖ وَٱلْمَلَٰٓئِكَةُ يَشْهَدُونَ ۚ وَكَفَىٰ بِٱللَّهِ شَهِيدًا

(நபியே!) உமக்குத் (தான்) அருளிய (வேதத்)தைக் குறித்து, அல்லாஹ்வே சாட்சி சொல்கிறான்;. அதைத் தன் பேரருள் ஞானத்தைக் கொண்டு அவன் இறக்கி வைத்தான்; மலக்குகளும் (இதற்கு) சாட்சி சொல்கிறார்கள்;. மேலும் சாட்சியங் கூறுவதற்கு அல்லாஹ் போதுமானவன்.

தூதரே! யூதர்கள் உம்மை நிராகரித்தால் உம்மீது இறக்கப்பட்ட குர்ஆனின் நம்பகத்தன்மைக்கு அல்லாஹ்வே சாட்சி கூறுகிறான். அதில் அவன் அடியார்களுக்குத் தெரிவிக்க வேண்டிய தனது விருப்பு வெறுப்புக்களை உள்ளடக்கிய கல்வியை அதிலே இறக்கியுள்ளான். நீர் கொண்டுவந்தது உண்மையே என அல்லாஹ்வின் சாட்சியோடு வானவர்களும் சாட்சி கூறுகிறார்கள். சாட்சி கூறுவதற்கு அல்லாஹ்வே போதுமானவன். அவனுடைய சாட்சியம் மற்ற அனைவரின் சாட்சியத்தைக் காட்டிலும் போதுமானது.

An-Nisaa 4:166Listen in Qur'an →
167

إِنَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ وَصَدُّوا۟ عَن سَبِيلِ ٱللَّهِ قَدْ ضَلُّوا۟ ضَلَٰلًۢا بَعِيدًا

நிராகரித்து அல்லாஹ்வின் பாதையிலிருந்து (மனிதர்களை) தடுத்து கொண்டு இருக்கிறார்களே நிச்சயமாக அவர்கள் வழி கேட்டில் வெகு தூரம் வழி கெட்டுச் சென்று விட்டார்கள்.

உமது தூதை நிராகரித்து மக்களை இஸ்லாத்தைவிட்டும் தடுத்தவர்கள் சத்தியத்தைவிட்டும் வெகுதூரமாகிவிட்டார்கள்.

An-Nisaa 4:167Listen in Qur'an →
168

إِنَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ وَظَلَمُوا۟ لَمْ يَكُنِ ٱللَّهُ لِيَغْفِرَ لَهُمْ وَلَا لِيَهْدِيَهُمْ طَرِيقًا

நிச்சயமாக (இவ்வாறு) நிராகரித்து, அக்கிரமம் செய்பவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பளிக்க மாட்டான்;. அன்றி அவர்களை நேர் வழியிலும் செலுத்த மாட்டான்.

அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் நிராகரித்து, அதே நிராகரிப்பில் நிலைத்திருந்து தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொண்டவர்களை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான்; அவனுடைய வேதனையிலிருந்து பாதுகாக்கக்கூடிய எந்தவொரு வழியையும் அவர்களுக்குக் காட்டவும் மாட்டான்.

An-Nisaa 4:168Listen in Qur'an →
169

إِلَّا طَرِيقَ جَهَنَّمَ خَٰلِدِينَ فِيهَآ أَبَدًۭا ۚ وَكَانَ ذَٰلِكَ عَلَى ٱللَّهِ يَسِيرًۭا

நரகத்தின் வழியைத் தவிர - அதில் அவர்கள் என்றென்றும் தங்கி விடுவார்கள்;. இது அல்லாஹ்வுக்கு சுலபமாக இருக்கிறது.

நரகத்தின்பால் கொண்டு சேர்க்கும் வழியைத் தவிர. அங்கு அவர்கள் நிரந்தரமாக வீழ்ந்துகிடப்பார்கள். இது அல்லாஹ்வுக்கு மிக எளிதானது. எதுவும் அவனைத் தடுக்க முடியாது.

An-Nisaa 4:169Listen in Qur'an →
170

يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ قَدْ جَآءَكُمُ ٱلرَّسُولُ بِٱلْحَقِّ مِن رَّبِّكُمْ فَـَٔامِنُوا۟ خَيْرًۭا لَّكُمْ ۚ وَإِن تَكْفُرُوا۟ فَإِنَّ لِلَّهِ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۚ وَكَانَ ٱللَّهُ عَلِيمًا حَكِيمًۭا

மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து சத்தியத்துடன் (அனுப்பப்பட்ட இத்)தூதர் உங்களிடம் வந்துள்ளார். அவர் மீது ஈமான் கொள்ளுங்கள்; (இது) உங்களுக்கு நன்மையாகும்;. ஆனால் நீங்கள் நிராகரிப்பீர்களானால், (இறைவனுக்கும் எதுவும் குறைந்து விடாது, ஏனெனில்) நிச்சயமாக வானங்களிலும் பூமியிலும் இருப்பவை அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியவை. அல்லாஹ்வே (யாவற்றையும்) நன்கறிந்தோனும், ஞானம் மிக்கோனும் ஆவான்.

மனிதர்களே! தூதர் முஹம்மது உங்களிடம் அல்லாஹ்விடமிருந்து நேர்வழியையும் சத்திய மார்க்கத்தையும் கொண்டு வந்துள்ளார். அவர் கொண்டுவந்ததின் மீது நம்பிக்கைகொள்ளுங்கள். அது உங்களுக்கு இவ்வுலகிலும் மறுவுலகிலும் நலவாக அமையும். நீங்கள் அல்லாஹ்வை நிராகரித்தால், உங்களின் நிராகரிப்பு அவனுக்கு எந்தத் தீங்கையும் ஏற்படுத்திவிடாது. அவன் உங்களின் ஈமானைவிட்டும் தேவையற்றவன். வானங்களிலும் பூமியிலும் அவை இரண்டிற்கிடையிலும் உள்ளவற்றின் ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது. நேர்வழிக்குத் தகுதியானவர்களை அவன் அறிந்து அதனை அவர்களுக்கு இலகுபடுத்துபனாகவும். அதற்குத் தகுதியற்றவர்களை அறிந்து அதனை விட்டும் அவர்களைத் திருப்பிவிடுபவனாகவும் இருக்கிறான். சொல்லிலும் செயலிலும் தான் அமைத்த சட்டங்களிலும் நிர்ணயத்திலும் அவன் ஞானமிக்கவன்.

An-Nisaa 4:170Listen in Qur'an →

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.