Muslim99Muslim99
← Tafsir library

4. An-Nisaa

The Women · Medinan · 176 ayahs

سُورَةُ النِّسَاءِ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 151–160 of 176

151

أُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْكَٰفِرُونَ حَقًّۭا ۚ وَأَعْتَدْنَا لِلْكَٰفِرِينَ عَذَابًۭا مُّهِينًۭا

இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்;. காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.

இவ்வழியை மேற்கொள்ளும் அவர்கள்தாம் உண்மையில் நிராகரிப்பாளர்கள். இது ஏனெனில், தூதர்கள் அனைவரையும் அல்லது அவர்களில் சிலரை நிராகரித்தவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் நிராகரித்தவர்களாவர். மறுமைநாளில் நிராகரிப்பாளர்களுக்கு இழிவு தரும் வேதனையை நாம் தயார் செய்து வைத்துள்ளோம், அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர்களின்மீதும் நம்பிக்கைகொள்ளாமல் கர்வம் கொண்டதற்குத் தண்டனையாக அமையும் பொருட்டு.

An-Nisaa 4:151Listen in Qur'an →
152

وَٱلَّذِينَ ءَامَنُوا۟ بِٱللَّهِ وَرُسُلِهِۦ وَلَمْ يُفَرِّقُوا۟ بَيْنَ أَحَدٍۢ مِّنْهُمْ أُو۟لَٰٓئِكَ سَوْفَ يُؤْتِيهِمْ أُجُورَهُمْ ۗ وَكَانَ ٱللَّهُ غَفُورًۭا رَّحِيمًۭا

யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்;. அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.

அல்லாஹ்வை ஈமான்கொண்டு அவனை ஒருமைப்படுத்தி அவனுக்கு யாரையும் இணையாக்காமல், அவன் அனுப்பிய தூதர்கள் அனைவரையும் - நிராகரிப்பாளர்கள் செய்வதுபோன்று அவர்களிடையே பாகுபாடு காட்டாமல் - உண்மைப்படுத்தியவர்களுக்கு அவர்களின் நம்பிக்கை மற்றும் அதனூடாக வெளிப்பட்ட நற்செயல்களுக்குக் கூலியாகப் பெரும் நன்மையை அல்லாஹ் வழங்கிடுவான். தன்னிடம் பாவமன்னிப்புக்கோரும் அடியார்களை அல்லாஹ் மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களின் விஷயத்தில் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.

An-Nisaa 4:152Listen in Qur'an →
153

يَسْـَٔلُكَ أَهْلُ ٱلْكِتَٰبِ أَن تُنَزِّلَ عَلَيْهِمْ كِتَٰبًۭا مِّنَ ٱلسَّمَآءِ ۚ فَقَدْ سَأَلُوا۟ مُوسَىٰٓ أَكْبَرَ مِن ذَٰلِكَ فَقَالُوٓا۟ أَرِنَا ٱللَّهَ جَهْرَةًۭ فَأَخَذَتْهُمُ ٱلصَّٰعِقَةُ بِظُلْمِهِمْ ۚ ثُمَّ ٱتَّخَذُوا۟ ٱلْعِجْلَ مِنۢ بَعْدِ مَا جَآءَتْهُمُ ٱلْبَيِّنَٰتُ فَعَفَوْنَا عَن ذَٰلِكَ ۚ وَءَاتَيْنَا مُوسَىٰ سُلْطَٰنًۭا مُّبِينًۭا

(நபியே!) வேதமுடையவர்கள் தங்கள் மீது ஒரு வேதத்தை வானத்திலிருந்து நீர் இறக்கி வைக்க வேண்டுமென்று உம்மிடம் கேட்கின்றனர். அவர்கள் மூஸாவிடம் இதைவிடப் பெரியது ஒன்றைக் கேட்டு "எங்களுக்கு அல்லாஹ்வைப் பகிரங்கமாகக் காட்டுங்கள்" எனக் கூறினர். ஆகவே அவர்களுடைய அக்கிரமத்திற்காக அவர்களை இடி தாக்கியது. அப்பால் அவர்களுக்குத் தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னும் அவர்கள் காளைக் கன்றை வணங்கினார்கள். அதையும் நாம் மன்னித்தோம்;. இன்னும், நாம் மூஸாவுக்குத் தெளிவான ஆதாரத்தையும் கொடுத்தோம்.

தூதரே! யூதர்கள் உம்மிடம், “நீர் உண்மையாளர் என்பதற்கு அடையாளமாக மூஸாவுக்கு நிகழ்ந்தது போல் வானத்திலிருந்து ஒரேயடியாக ஒரு வேதத்தை அவர்களுக்கு இறக்கிக்காட்டுமாறு வேண்டுகின்றனர். இவ்வாறான அவர்களது வேண்டுதலை நீர் பெரிதாக எண்ண வேண்டாம். ஏனெனில் இவர்களின் முன்னோர்கள் மூஸாவிடம், அல்லாஹ்வைக் கண்ணெதிரில் காட்டுங்கள் என இவர்கள் கேட்டதை விட பெரிய விஷயத்தைக் கேட்டனர். அவர்கள் செய்த இக்காரியத்துக்குத் தண்டனையாக மயக்கமுற்று வீழ்ந்தனர். பின்னர் அல்லாஹ் அவர்களை உயிர்த்தெழச் செய்தான். அல்லாஹ் ஒருவனே வணக்கத்திற்குத் தகுதியானவன், அவனே படைத்துப் பராமரிக்கக்கூடியவன் என்பதை எடுத்துரைக்கக்கூடிய தெளிவான சான்றுகள் அவர்களிடம் வந்த பின்னரும் அவர்கள் அல்லாஹ்வை விடுத்து காளைக் கன்றை வணங்கினர். அதன் பின்னரும் நாம் அவர்களை மன்னித்தோம். தன் சமூகத்தினருக்கு எதிராக தெளிவான ஆதாரத்தை நாம் மூஸாவுக்கு வழங்கினோம்.

An-Nisaa 4:153Listen in Qur'an →
154

وَرَفَعْنَا فَوْقَهُمُ ٱلطُّورَ بِمِيثَٰقِهِمْ وَقُلْنَا لَهُمُ ٱدْخُلُوا۟ ٱلْبَابَ سُجَّدًۭا وَقُلْنَا لَهُمْ لَا تَعْدُوا۟ فِى ٱلسَّبْتِ وَأَخَذْنَا مِنْهُم مِّيثَٰقًا غَلِيظًۭا

மேலும், அவர்களிடம் வாக்குறுதி வாங்கும் பொருட்டு, அவர்கள் மேல் தூர் (ஸினாய் மலையை) உயர்த்தினோம்;. இன்னும் 'இந்த வாசலில் தலை குனிந்து (தாழ்மையாக) நுழையுங்கள்' என்று சொன்னோம்;. மேலும் "(மீன் வேட்டையாடி) சனிக்கிழமையில் வரம்பு மீறாதீர்கள்" என்றும் அவர்களுக்கு கூறினோம்;. இன்னும் அவர்களிடமிருந்து மிக உறுதியான வாக்குறுதியும் வாங்கினோம்.

அவர்களிடம் செய்யப்பட்டிருந்த உறுதியான உடன்படிக்கைப் பிரகாரம் அவர்கள் செயல்பட வேண்டும் என்பதற்காக, அவர்களை அச்சமூட்டும் பொருட்டு மலையை அவர்கள் மீது உயர்த்திவிட்டு, நாம் அவர்களிடம் கூறினோம், “பைத்துல் முகத்தஸின் வாயிலில் தலைகுனிந்து பணிந்தவர்களாக நுழையுங்கள்.” ஆனால் அவர்கள் தங்கள் பிட்டத்தால் தவழ்ந்தவாறு உள்ளே நுழைந்தார்கள். “சனிக்கிழமையில் வரம்புமீறி வேட்டையாடாதீர்கள்.” என்றும் நாம் அவர்களிடம் கூறினோம். ஆனால் அவர்கள் வரம்புமீறி வேட்டையாடினார்கள். அது சம்பந்தமாக நாம் அவர்களிடம் உறுதியான உடன்படிக்கை செய்திருந்தும், அவர்கள் அதனை மீறினார்கள்.

An-Nisaa 4:154Listen in Qur'an →
155

فَبِمَا نَقْضِهِم مِّيثَٰقَهُمْ وَكُفْرِهِم بِـَٔايَٰتِ ٱللَّهِ وَقَتْلِهِمُ ٱلْأَنۢبِيَآءَ بِغَيْرِ حَقٍّۢ وَقَوْلِهِمْ قُلُوبُنَا غُلْفٌۢ ۚ بَلْ طَبَعَ ٱللَّهُ عَلَيْهَا بِكُفْرِهِمْ فَلَا يُؤْمِنُونَ إِلَّا قَلِيلًۭا

அவர்களுடைய வாக்குறுதியை அவர்கள் மீறியதாலும்; அல்லாஹ்வின் வசனங்களை அவர்கள் நிராகரித்து விட்டதாலும், அநியாயமாக அவர்கள் நபிமார்களைக் கொலை செய்ததாலும், "எங்கள் இதயங்கள் திரையிடப்பட்டுள்ளன." (எனவே எந்த உபதேசமும் அங்கே செல்லாது) என்று அவர்கள் கூறியதாலும், (அல்லாஹ் அவர்களைச் சபித்து விட்டான்;) அவர்களுடைய நிராகரிப்பின் காரணத்தால் அல்லாஹ் (அவர்களுடைய இருதயங்களின் மீது) முத்திரையிட்டுவிட்டான். ஆகவே அவர்களில் சிலரைத் தவிர (மற்றவர்கள்) ஈமான் கொள்ள மாட்டார்கள்.

அவர்கள் உறுதியான உடன்படிக்கையை முறித்ததனாலும் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்ததனாலும் இறைத்தூதர்களை துணிந்து கொலை செய்ததனாலும் முஹம்மதிடம், ‘எங்களின் உள்ளங்கள் மூடப்பட்டுள்ளன. எனவே நீர் கூறும் எதுவும் அதனை அடையப்போவதில்லை’ என்று கூறியதனாலும் நாம் அவர்களை நம் கருணையிலிருந்து தூரமாக்கிவிட்டோம். விஷயம் அவர்கள் கூறுவது போலல்ல. மாறாக அல்லாஹ் அவர்கள் நிராகரித்தனால் அவர்களது உள்ளங்களின் மீது முத்திரையிட்டுவிட்டான். எனவே எந்த நன்மையும் அவற்றை அடைந்துவிட முடியாது. அவர்களுக்குப் பயனளிக்காத அளவு குறைவாகவே அவர்கள் நம்பிக்கைகொள்வார்கள்.

An-Nisaa 4:155Listen in Qur'an →
156

وَبِكُفْرِهِمْ وَقَوْلِهِمْ عَلَىٰ مَرْيَمَ بُهْتَٰنًا عَظِيمًۭا

இன்னும் அவர்களின் நிராகரிப்பின் காரணமாகவும், மர்யமின் மீது மாபெரும் அவதூறு கூறியதின் காரணமாகவும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்).

அவர்கள் நிராகரித்ததனாலும் மர்யமின் மீது அபாண்டமாக விபச்சாரக் குற்றச்சாட்டை சுமத்தியதனாலும் நாம் நம் கருணையிலிருந்து அவர்களைத் தூரமாக்கினோம்.

An-Nisaa 4:156Listen in Qur'an →
157

وَقَوْلِهِمْ إِنَّا قَتَلْنَا ٱلْمَسِيحَ عِيسَى ٱبْنَ مَرْيَمَ رَسُولَ ٱللَّهِ وَمَا قَتَلُوهُ وَمَا صَلَبُوهُ وَلَٰكِن شُبِّهَ لَهُمْ ۚ وَإِنَّ ٱلَّذِينَ ٱخْتَلَفُوا۟ فِيهِ لَفِى شَكٍّۢ مِّنْهُ ۚ مَا لَهُم بِهِۦ مِنْ عِلْمٍ إِلَّا ٱتِّبَاعَ ٱلظَّنِّ ۚ وَمَا قَتَلُوهُ يَقِينًۢا

இன்னும், "நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்" என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்). அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்;. மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்ராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது. நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை.

நாங்கள்தாம் அல்லாஹ்வின் தூதரான மர்யமின் மகன் ஈஸாவைக் கொலைசெய்தோம் என்று பெருமையாகக் கூறியதனாலும் நாம் அவர்களைச் சபித்துவிட்டோம். அவர்கள் கூறுவதுபோல, அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை; சிலுவையில் அறையவுமில்லை. ஈஸாவின் தோற்றத்தை அல்லாஹ் வழங்கிய வேறொரு மனிதரையே அவர்கள் கொன்று சிலுவையில் அறைந்தார்கள். ஈஸாதான் கொல்லப்பட்டவர் என்று எண்ணிக்கொண்டார்கள். அவரை நாங்கள்தாம் கொன்றோம் என்று கூறிய யூதர்களும் ஈஸாவை அவர்களிடம் ஒப்படைத்த கிருஸ்தவர்களும் ஈஸாவின் விஷயத்தில் கடுமையான சந்தேகத்திலும் தடுமாற்றத்திலும் இருக்கிறார்கள். அவர்களுக்கு இது குறித்து எந்த அறிவும் இல்லை. அவர்கள் வெற்று யூகங்களையே பின்பற்றுகிறார்கள். சத்திய விஷயத்தில் யூகம் எந்தப் பயனையும் அளிக்காது. உறுதியாக அவர்கள் ஈஸாவைக் கொல்லவுமில்லை; சிலுவையில் அறையவுமில்லை.

An-Nisaa 4:157Listen in Qur'an →
158

بَل رَّفَعَهُ ٱللَّهُ إِلَيْهِ ۚ وَكَانَ ٱللَّهُ عَزِيزًا حَكِيمًۭا

ஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான் - இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.

மாறாக அல்லாஹ் அவர்களின் சூழ்ச்சியிலிருந்து அவரைக் காப்பாற்றினான். அவரது உடலோடும் உயிரோடும் அல்லாஹ் அவரை உயர்த்திக் கொண்டான். அல்லாஹ் தன் ஆட்சியதிகாரத்தில் யாவற்றையும் மிகைத்தவன். அவனை யாராலும் மிகைக்க முடியாது. தன் நிர்வகித்தல், விதிகள், சட்டங்கள் என்பவற்றில் அவன் ஞானமிக்கவன்.

An-Nisaa 4:158Listen in Qur'an →
159

وَإِن مِّنْ أَهْلِ ٱلْكِتَٰبِ إِلَّا لَيُؤْمِنَنَّ بِهِۦ قَبْلَ مَوْتِهِۦ ۖ وَيَوْمَ ٱلْقِيَٰمَةِ يَكُونُ عَلَيْهِمْ شَهِيدًۭا

வேதமுடையவர்களில் எவரும் தாம் இறப்பதற்கு முன் அவர் (ஈஸா) மீது ஈமான் கொள்ளாமல் இருப்பதில்லை. ஆனால் மறுமை நாளில் அவர் அவர்களுக்கு எதிராக சாட்சி சொல்பவராக இருப்பார்.

ஈஸா மீண்டும் பூமிக்கு வருகை தந்த பிறகு வேதக்காரர்களிலுள்ள அனைவரும் அவரது மரணத்திற்கு முன்பே அவர் மீது நம்பிக்கைகொண்டு விடுவார்கள். மறுமைநாளில் அவர்களின் செயல்களில் எது மார்க்கத்திற்கு உட்பட்டது எது மார்க்கத்திற்கு முரணானது என்பதற்கு ஈஸா சாட்சியாக இருப்பார்.

An-Nisaa 4:159Listen in Qur'an →
160

فَبِظُلْمٍۢ مِّنَ ٱلَّذِينَ هَادُوا۟ حَرَّمْنَا عَلَيْهِمْ طَيِّبَٰتٍ أُحِلَّتْ لَهُمْ وَبِصَدِّهِمْ عَن سَبِيلِ ٱللَّهِ كَثِيرًۭا

எனவே யூதர்களாக இருந்த அவர்களுடைய அக்கிரமத்தின் காரணமாக அவர்களுக்கு (முன்னர்) ஆகுமாக்கப்பட்டிருந்த நல்ல (ஆகார) வகைகளை அவர்களுக்கு ஹராமாக்கி (விலக்கி) விட்டோம்;. இன்னும் அவர்கள் அநேகரை அல்லாஹ்வின் பாதையில் செல்லவிடாது தடுத்துக் கொண்டிருந்ததனாலும் (அவர்களுக்கு இவ்வாறு தடை செய்தோம்.)

யூதர்களின் அக்கிரமத்தினால் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த சில தூய்மையான உணவுகளையும் நாம் அவர்கள்மீது தடைசெய்தோம். நகங்களுடைய அனைத்தையும் ஒட்டிக்கொண்டிருக்கும் கொழுப்பைத் தவிர்ந்த ஆடு, மாடு ஆகியவற்றின் ஏனைய கொழுப்புகளையும் நாம் அவர்கள் மீது தடைசெய்தோம். ஏனெனில் நல்ல விஷயங்களை விட்டுத் தடுப்பதே தமது இயல்பான குணமாகிவிடும் அளவிற்கு தங்களையும் மற்றவர்களையும் அல்லாஹ்வின் பாதையைவிட்டு அவர்கள் தடுத்ததனர்.

An-Nisaa 4:160Listen in Qur'an →

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.