Muslim99Muslim99
← Tafsir library

4. An-Nisaa

The Women · Medinan · 176 ayahs

سُورَةُ النِّسَاءِ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 131–140 of 176

131

وَلِلَّهِ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ ۗ وَلَقَدْ وَصَّيْنَا ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَٰبَ مِن قَبْلِكُمْ وَإِيَّاكُمْ أَنِ ٱتَّقُوا۟ ٱللَّهَ ۚ وَإِن تَكْفُرُوا۟ فَإِنَّ لِلَّهِ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ ۚ وَكَانَ ٱللَّهُ غَنِيًّا حَمِيدًۭا

வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் எல்லாம் அல்லாஹ்வுக்கே சொந்தம். உங்களுக்குமுன் வேதம் கொடுக்கப்பட்டவர்களையும், உங்களையும் அல்லாஹ்வுக்கே பயந்து நடக்குமாறு (வஸிய்யத்து) உபதேசம் செய்தோம்;. நீங்கள் அவனுக்கு மாறு செய்தால் (அவனுக்கு நஷ்டம் ஒன்றுமில்லை) - நிச்சயமாக வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் எல்லாம் அல்லாஹ்வுக்கே சொந்தம்;. மேலும் அல்லாஹ் எவர் தேவையும் அற்றவனாகவும், புகழுக்கு உரியவனாகவும் இருக்கின்றான்.

வானங்களிலும் பூமியிலும் உள்ளவை, அவையிரண்டிற்கு இடையிலுள்ளவையின் ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது. வேதம் வழங்கப்பட்ட யூதர்களிடமும் கிருஸ்தவர்களிடமும் உங்களிடமும் நாம் வாக்குறுதி வாங்கினோம். அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகியிருங்கள் என்று. நீங்கள் இந்த வாக்குறுதிக்கு மாறாகச் செயல்பட்டால் உங்களுக்கு நீங்களேதான் தீங்கிழைத்துக் கொள்கிறீர்கள். உங்களின் கீழ்ப்படிதலைவிட்டும் அல்லாஹ் தேவையற்றவன். வானங்களிலும் பூமியிலும் உள்ளவற்றின் ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது. அவன் படைப்புகள் அனைவரையும்விட்டு தேவையற்றவன். தன் அனைத்துப் பண்புகளுக்காகவும் செயல்களுக்காகவும் புகப்படுபவன்.

An-Nisaa 4:131Listen in Qur'an →
132

وَلِلَّهِ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ ۚ وَكَفَىٰ بِٱللَّهِ وَكِيلًا

வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் யாவும் அல்லாஹ்வுக்கே சொந்தம் - இன்னும், (உங்கள் எல்லாக் காரியங்களையும் பொறுப்பேற்றுக் கொள்வதில்) அல்லாஹ்வே போதுமானவன்.

வானங்களிலும் பூமியிலும் உள்ளவற்றின் ஆட்சியதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியது. அவன்தான் வழிபடுவதற்குத் தகுதியானவன். படைப்புகளின் விவகாரங்கள் அனைத்தையும் நிர்வகிப்பதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.

An-Nisaa 4:132Listen in Qur'an →
133

إِن يَشَأْ يُذْهِبْكُمْ أَيُّهَا ٱلنَّاسُ وَيَأْتِ بِـَٔاخَرِينَ ۚ وَكَانَ ٱللَّهُ عَلَىٰ ذَٰلِكَ قَدِيرًۭا

மனிதர்களே! அவன் நாடினால், உங்களை அழித்துவிட்டு (உங்களுடைய இடத்தில்) வேறு மனிதர்களைக் கொண்டு வருவான்; இன்னும், அவ்வாறு செய்ய அல்லாஹ் பேராற்றல் உடையவன்.

மனிதர்களே! அவன் நாடினால் உங்கள் அனைவரையும் அழித்துவிட்டு, அவனுக்குக் கட்டுப்படுகின்ற, அவனுடைய கட்டளைக்கு மாறாகச் செயல்படாத நீங்கள் அல்லாத வேறொரு மக்களைக் கொண்டு வருவான். அல்லாஹ் இதற்கு சக்தியுடையவனாகவே இருக்கிறான்.

An-Nisaa 4:133Listen in Qur'an →
134

مَّن كَانَ يُرِيدُ ثَوَابَ ٱلدُّنْيَا فَعِندَ ٱللَّهِ ثَوَابُ ٱلدُّنْيَا وَٱلْءَاخِرَةِ ۚ وَكَانَ ٱللَّهُ سَمِيعًۢا بَصِيرًۭا

எவரேனும் இவ்வுலகின் பலனை(மட்டும்) அடைய விரும்பினால், "அல்லாஹ்விடம் இவ்வுலகப்பலனும், மறுவுலகப்பலனும் உள்ளன. அல்லாஹ் கேட்பவனாகவும் பார்ப்பவனாகவும் இருக்கின்றான்."

மனிதர்களே! உங்களில் தம் செயல்களின்மூலம் இவ்வுலக நன்மையை மட்டும் விரும்புவர், அல்லாஹ்விடம்தான் இவ்வுலக நன்மையும் மறுவுலக நன்மையும் உள்ளது என்பதை அறிந்துகொள்ளட்டும். எனவே அவனிடமே ஈருலக நன்மைகளும் வேண்டப்பட வேண்டும். நீங்கள் பேசுவதை அல்லாஹ் செவியேற்கக்கூடியவனாகவும் உங்களின் செயல்களை பார்க்கக்கூடியவனாகவும் இருக்கின்றான். அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.

An-Nisaa 4:134Listen in Qur'an →
135

۞ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ كُونُوا۟ قَوَّٰمِينَ بِٱلْقِسْطِ شُهَدَآءَ لِلَّهِ وَلَوْ عَلَىٰٓ أَنفُسِكُمْ أَوِ ٱلْوَٰلِدَيْنِ وَٱلْأَقْرَبِينَ ۚ إِن يَكُنْ غَنِيًّا أَوْ فَقِيرًۭا فَٱللَّهُ أَوْلَىٰ بِهِمَا ۖ فَلَا تَتَّبِعُوا۟ ٱلْهَوَىٰٓ أَن تَعْدِلُوا۟ ۚ وَإِن تَلْوُۥٓا۟ أَوْ تُعْرِضُوا۟ فَإِنَّ ٱللَّهَ كَانَ بِمَا تَعْمَلُونَ خَبِيرًۭا

முஃமின்களே! நீங்கள் நீதியின்மீது நிலைத்திருப்பவர்களாகவும், உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள்;. (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வர்களாக இருந்தாலும் ஏழைகளாக இருந்தாலும் (உண்மையான சாட்சியம் கூறுங்கள்). ஏனெனில் அல்லாஹ் அவ்விருவரையும் காப்பதற்கு அருகதையுடையவன்;. எனவே நியாயம் வழங்குவதில் மன இச்சையைப் பின்பற்றி விடாதீர்கள்;. மேலும் நீங்கள் மாற்றிக் கூறினாலும் அல்லது (சாட்சி கூறுவதைப்) புறக்கணித்தாலும், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான்.

அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! எல்லா சூழ்நிலைகளிலும் நீதியை நிலைநாட்டி,அனைவருக்கும் உண்மையான சாட்சி சொல்லக்கூடியவர்களாக இருங்கள். அது உங்களுக்கோ உங்களின் தாய்தந்தையருக்கோ உறவினருக்கோ எதிராக உண்மையை ஏற்றுக்கொள்வதாக இருந்தாலும் சரியே. ஒருவரின் ஏழ்மையோ செல்வமோ சாட்சியளிக்கவோ அதனை விட்டுவிடவோ உங்களைத் தூண்டிவிட வேண்டாம். உங்களை விட அல்லாஹ்வே ஏழைக்கும் செல்வந்தனுக்கும் நெருக்கமானவன். அவர்கள் இருவரின் நலன்களையும் அவனே நன்கறிந்தவன். சாட்சி கூறும்போது உங்களின் மனஇச்சையைப் பின்பற்றாதீர்கள். அவ்வாறு செய்தால் சத்தியத்தைவிட்டும் பிறழ்ந்துவிடுவீர். நீங்கள் உரிய முறைப்படி சாட்சிகூறாது அதனைத் திரிபுபடுத்தினால் அல்லது சாட்சிகூறாமல் நீங்கள் புறக்கணித்துவிட்டால் - நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்யக்கூடியவற்றை நன்கறிந்தவன்.

An-Nisaa 4:135Listen in Qur'an →
136

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ ءَامِنُوا۟ بِٱللَّهِ وَرَسُولِهِۦ وَٱلْكِتَٰبِ ٱلَّذِى نَزَّلَ عَلَىٰ رَسُولِهِۦ وَٱلْكِتَٰبِ ٱلَّذِىٓ أَنزَلَ مِن قَبْلُ ۚ وَمَن يَكْفُرْ بِٱللَّهِ وَمَلَٰٓئِكَتِهِۦ وَكُتُبِهِۦ وَرُسُلِهِۦ وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِ فَقَدْ ضَلَّ ضَلَٰلًۢا بَعِيدًا

முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும், அவன் தூதர் மீது அவன் இறக்கிய (இவ்) வேதத்தின் மீதும் இதற்கு முன்னர் இறக்கிய வேதங்களின் மீதும் ஈமான் கொள்ளுங்கள்;. எவர் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும் அவனுடைய தூதர்களையும்; இறுதி நாளையும் (நம்பாமல்) நிராகரிக்கிறாரோ, அவர் வழிகேட்டில் வெது தூரம் சென்றுவிட்டார்.

நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வின்மீதும் அவனுடைய தூதரின்மீதும் தன் தூதரின்மீது அவன் இறக்கிய குர்ஆனின்மீதும் முந்தைய தூதர்களின்மீது அவன் இறக்கிய வேதங்களின்மீதும் கொண்ட நம்பிக்கையில் உறுதியாக நிலைத்திருங்கள். அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் வேதங்களையும் தூதர்களையும் மறுமைநாளையும் நிராகரிப்பவர் நேரான பாதையைவிட்டும் வெகுதூரமாகிவிட்டார்.

An-Nisaa 4:136Listen in Qur'an →
137

إِنَّ ٱلَّذِينَ ءَامَنُوا۟ ثُمَّ كَفَرُوا۟ ثُمَّ ءَامَنُوا۟ ثُمَّ كَفَرُوا۟ ثُمَّ ٱزْدَادُوا۟ كُفْرًۭا لَّمْ يَكُنِ ٱللَّهُ لِيَغْفِرَ لَهُمْ وَلَا لِيَهْدِيَهُمْ سَبِيلًۢا

நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு, பின்னர் நிராகரித்து, பின்னர் ஈமான் கொண்டு, பின்னர் நிராகரித்து, பின்னர் நிராகரிப்பை அதிகரித்துக் கொண்டனரோ, அவர்களை அல்லாஹ் மன்னிப்பவனாகவும் இல்லை. மேலும் அவர்களுக்கு (நேர்) வழியைக் காட்டுகிறவனாகவும் இல்லை.

திரும்பத் திரும்ப இஸ்லாத்தை ஏற்ற பின் அதனை நிராகரித்தவர்கள்- இஸ்லாத்தை ஏற்று பின்னர் நிராகரித்து பின்னர் இஸ்லாத்தை ஏற்று பின்னர் நிராகரித்து-அந்நிராகரிப்பிலேயே நிலைத்திருந்து மரணித்தும் விட்டவர்களின் பாவங்களை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அவர்களுக்கு தன்பக்கம் வரக்கூடிய நேரான வழியையும் காட்ட மாட்டான்.

An-Nisaa 4:137Listen in Qur'an →
138

بَشِّرِ ٱلْمُنَٰفِقِينَ بِأَنَّ لَهُمْ عَذَابًا أَلِيمًا

(நபியே! இத்தகைய) நயவஞ்சகர்களுக்கு 'நிச்சயமாக நோவினை தரும் வேதனை உண்டு' என்று நன்மாராயங் கூறுவீராக!

தூதரே! ஈமானை வெளிப்படுத்தி நிராகரிப்பை மறைக்கும் நயவஞ்சகர்களுக்கு மறுமைநாளில் அல்லாஹ்விடத்தில் வேதனைமிக்க தண்டனை காத்திருக்கின்றது என்ற நற்செய்தியைக் கூறிவிடுவீராக.

An-Nisaa 4:138Listen in Qur'an →
139

ٱلَّذِينَ يَتَّخِذُونَ ٱلْكَٰفِرِينَ أَوْلِيَآءَ مِن دُونِ ٱلْمُؤْمِنِينَ ۚ أَيَبْتَغُونَ عِندَهُمُ ٱلْعِزَّةَ فَإِنَّ ٱلْعِزَّةَ لِلَّهِ جَمِيعًۭا

இவர்கள் முஃமின்களை விட்டும் காஃபிர்களை (தங்களுக்குரிய) உற்ற நண்பர்களாக எடுத்துக்கொள்கிறார்கள். என்ன! அவர்களிடையே இவர்கள் கண்ணியத்தை தேடுகிறார்களா? நிச்சயமாக கண்ணியமெல்லாம் அல்லாஹ்வுக்கே உரியது.

இந்த வேதனை ஏனெனில், அவர்கள் நம்பிக்கையாளர்களை விடுத்து நிராகரிப்பாளர்களை உதவியாளர்களாக ஆக்கிக் கொண்டார்கள். அந்த நிராகரிப்பாளர்களை தமது உதவியாளர்களாக ஆக்கிக்கொள்வதற்கு இவர்களைத் தூண்டிய காரணம்தான் ஆச்சரியமானது. தாம் உயர்வதற்காக அவர்களிடமே பலத்தையும் பாதுகாப்பையும் வேண்டுகிறார்கள்? உதவியும் பாதுகாப்பும் முழுமையாக அல்லாஹ்விடமல்லவா உள்ளது.

An-Nisaa 4:139Listen in Qur'an →
140

وَقَدْ نَزَّلَ عَلَيْكُمْ فِى ٱلْكِتَٰبِ أَنْ إِذَا سَمِعْتُمْ ءَايَٰتِ ٱللَّهِ يُكْفَرُ بِهَا وَيُسْتَهْزَأُ بِهَا فَلَا تَقْعُدُوا۟ مَعَهُمْ حَتَّىٰ يَخُوضُوا۟ فِى حَدِيثٍ غَيْرِهِۦٓ ۚ إِنَّكُمْ إِذًۭا مِّثْلُهُمْ ۗ إِنَّ ٱللَّهَ جَامِعُ ٱلْمُنَٰفِقِينَ وَٱلْكَٰفِرِينَ فِى جَهَنَّمَ جَمِيعًا

(முஃமின்களே!) 'அல்லாஹ்வின் வசனங்கள் (சிலரால்)நிராகரிக்கப்படுவதையும், பரிகசிக்கப்படுவதையும் நீங்கள் கேட்டால், அவர்கள் இதைவிட்டு வேறு விஷயத்தில் ஈடுபடும் வரையில் அவர்களோடு நீங்கள் உட்கார வேண்டாம்' என்று வேதத்தின் மூலம் அவன் உங்கள் மீது (கட்டளை) இறக்கியுள்ளான். அவ்வாறு உட்கார்ந்தால் நீங்களும் அவர்களைப் போன்றவர்களே. நிச்சயமாக அல்லாஹ் நயவஞ்சகர்களையும், காஃபிர்களையும் எல்லாம் நரகத்தில் ஒன்றாகச் சேர்த்துவிடுவான்.

நம்பிக்கையாளர்களே! அல்லாஹ் குர்ஆனில் உங்களுக்குப் பின்வரும் விஷயத்தை இறக்கியுள்ளான்: நீங்கள் ஒரு அவையில் இருக்கும்போது அல்லாஹ்வின் வசனங்கள் நிராகரிக்கப்படுவதையும் கேலி செய்யப்படுவதையும் செவியுற்றால் அந்த அவையைவிட்டு வெளியேறிவிடுங்கள். அவர்கள் வேறு பேச்சில் ஈடுபடும்வரை அங்கு அமர்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டதல்ல. அதனைச் செவியுற்ற பிறகும் நீங்கள் அங்கு அமர்ந்திருந்தால் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறாகச் செயல்படுவதில் நீங்களும் அவர்களைப் போன்றவர்கள்தாம். ஏனெனில் அவர்கள் தமது நிராகரிப்பின் மூலம் மாறுசெய்ததைப்போன்று அவர்களுடன் சேர்ந்து அமர்ந்ததின் மூலம் நீங்கள் மாற்றம்செய்துவிடுகிறீர்கள். இஸ்லாத்தை வெளிப்படுத்தி நயவஞ்சகத்தை மறைத்திருக்கும் நயவஞ்சகர்களையும் நிராகரிப்பாளர்களையும் மறுமைநாளில் நரக நெருப்பில் ஒன்றுசேர்த்திடுவான்.

An-Nisaa 4:140Listen in Qur'an →

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.