Muslim99Muslim99
← Tafsir library

4. An-Nisaa

The Women · Medinan · 176 ayahs

سُورَةُ النِّسَاءِ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 111–120 of 176

111

وَمَن يَكْسِبْ إِثْمًۭا فَإِنَّمَا يَكْسِبُهُۥ عَلَىٰ نَفْسِهِۦ ۚ وَكَانَ ٱللَّهُ عَلِيمًا حَكِيمًۭا

எவன் பாவத்தைச் சம்பாதிக்காறானோ அவன் தனக்குக் கேடாகவே அதை நிச்சயமாக சம்பாதிக்கிறான். அல்லாஹ் (யாவற்றையும்) அறிந்தவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.

சிறு பாவத்திலோ பெரும் பாவத்திலோ ஈடுபடுபவர் மட்டுமே அதற்குரிய தண்டனையைப் பெறுவார். அது மற்றவர்களைப் பாதிக்காது. அடியார்களின் செயல்களை அல்லாஹ் நன்கறிந்தவன். தனது நிர்வாகத்திலும் சட்டமியற்றுவதிலும், அவன் ஞானம்மிக்கவன்.

An-Nisaa 4:111Listen in Qur'an →
112

وَمَن يَكْسِبْ خَطِيٓـَٔةً أَوْ إِثْمًۭا ثُمَّ يَرْمِ بِهِۦ بَرِيٓـًۭٔا فَقَدِ ٱحْتَمَلَ بُهْتَٰنًۭا وَإِثْمًۭا مُّبِينًۭا

மேலும், எவன் ஒரு தவறையோ அல்லது பாவத்தையோ சம்பாதித்துவிட்டு அப்பால் அதனை ஒரு நிரபராதி மீது வீசி விடுகிறானோ அவன் நிச்சயமாக அவதூற்றையும், பகிரங்கமான பாவத்தையும் சுமந்து கொள்கின்றான்.

கவனக்குறைவினால் ஒரு தவறையோ வேண்டுமென்று ஒரு பாவத்தையோ செய்துவிட்டு அதன் பழியை குற்றமற்ற அப்பாவியின்மீது சுமத்திவிடுபவர் தனது இந்த செயலால் பெரும் பொய்யையும் தெளிவான பாவத்தையுமே சுமந்துகொண்டார்.

An-Nisaa 4:112Listen in Qur'an →
113

وَلَوْلَا فَضْلُ ٱللَّهِ عَلَيْكَ وَرَحْمَتُهُۥ لَهَمَّت طَّآئِفَةٌۭ مِّنْهُمْ أَن يُضِلُّوكَ وَمَا يُضِلُّونَ إِلَّآ أَنفُسَهُمْ ۖ وَمَا يَضُرُّونَكَ مِن شَىْءٍۢ ۚ وَأَنزَلَ ٱللَّهُ عَلَيْكَ ٱلْكِتَٰبَ وَٱلْحِكْمَةَ وَعَلَّمَكَ مَا لَمْ تَكُن تَعْلَمُ ۚ وَكَانَ فَضْلُ ٱللَّهِ عَلَيْكَ عَظِيمًۭا

(நபியே!) உம் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய கிருபையும் இல்லாதிருந்தால், அவர்களில் ஒரு கூட்டத்தார் உம்மை வழி தவறி நடக்கும்படி செய்ய முயன்றிருப்பார்கள்;. ஆனால் அவர்கள் தங்களையே அன்றி வழி தவறும்படி செய்ய முடியாது. இன்னும் அவர்களால் உமக்கு எந்த விதமான தீங்கும் செய்துவிட முடியாது. மேலும் அல்லாஹ் உம் மீது வேதத்தையும் ஞானத்தையும் இறக்கியுள்ளான்;. நீர் அறியாதிருந்தவற்றையும் அவன் உமக்குக் கற்றுக் கொடுத்தான். உம் மீது அல்லாஹ்வின் அருட்கொடை மகத்தானதாகவே இருக்கின்றது.

தூதரே! அல்லாஹ் உம்மைப் பாதுகாத்து அருள் புரியவில்லையென்றால் தமக்குத் தாமே துரோகமிழைக்கும் இவர்களில் ஒரு கூட்டத்தினர் சரியான தீர்ப்பை விட்டும் உம்மை வழிகெடுக்க முடிவுசெய்து, நீரும் நியாயமின்றி தீர்ப்பளித்திருப்பீர். உண்மையில் அவர்கள் தங்களைத் தாங்களே வழிகெடுத்துக் கொள்கிறார்கள். ஏனெனில் வழிகெடுப்பதற்காக அவர்கள் செய்யும் செயல்களின் விளைவு அவர்களின் பக்கமே திரும்பும். உமக்கு அல்லாஹ்வின் பாதுகாப்பிருப்பதால் அவர்களால் உமக்கு எந்தத்தீங்கையும் இழைக்க முடியாது. அல்லாஹ் உம்மீது குர்ஆனையும், சுன்னாவையும் இறக்கியுள்ளான். இதற்கு முன்னர் நீர் அறியாத ஒளியையும் நேர்வழியையும் கற்றுத் தந்துள்ளான். நபித்துவம் மற்றும் தவறிலிருந்து பாதுகாப்பு என்பவற்றின் மூலம் அல்லாஹ் உம்மீது பொழிந்த அருட்கொடை மகத்தானது.

An-Nisaa 4:113Listen in Qur'an →
114

۞ لَّا خَيْرَ فِى كَثِيرٍۢ مِّن نَّجْوَىٰهُمْ إِلَّا مَنْ أَمَرَ بِصَدَقَةٍ أَوْ مَعْرُوفٍ أَوْ إِصْلَٰحٍۭ بَيْنَ ٱلنَّاسِ ۚ وَمَن يَفْعَلْ ذَٰلِكَ ٱبْتِغَآءَ مَرْضَاتِ ٱللَّهِ فَسَوْفَ نُؤْتِيهِ أَجْرًا عَظِيمًۭا

(நபியே!) தர்மத்தையும், நன்மையானவற்றையும், மனிதர்களிடையே சமாதானம் செய்து வைப்பதையும் தவிர, அவர்களின் இரகசியப் பேச்சில் பெரும்பாலானவற்றில் எந்த விதமான நலமும் இல்லை. ஆகவே எவர் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி இதைச் செய்கின்றாரோ, அவருக்கு நாம் மகத்தான நற்கூலியை வழங்குவோம்.

அவர்கள் இரகசியமாகப் பேசும் பெரும்பாலான விஷயங்களில் எந்த நன்மையும் பயனும் இல்லை. ஆயினும் அவர்களின் பேச்சுகள் தர்மம் செய்யத் தூண்டுதல் அல்லது மார்க்கமும் அறிவும் கூறும் நல்ல விஷயங்களைச் செய்யத் தூண்டுதல் அல்லது முரண்பட்டவர்களிடையே சமாதானத்திற்கான அழைப்பு விடுத்தல் ஆகியவற்றிற்காக இருந்தாலே தவிர. அல்லாஹ்வின் திருப்தியை நாடி இவ்வாறு செய்பவர்களுக்கு விரைவில் நாம் பெரும் நன்மைகளை வழங்கிடுவோம்.

An-Nisaa 4:114Listen in Qur'an →
115

وَمَن يُشَاقِقِ ٱلرَّسُولَ مِنۢ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ ٱلْهُدَىٰ وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ ٱلْمُؤْمِنِينَ نُوَلِّهِۦ مَا تَوَلَّىٰ وَنُصْلِهِۦ جَهَنَّمَ ۖ وَسَآءَتْ مَصِيرًا

எவனொருவன் நேர்வழி இன்னது என்று தனக்குத் தெளிவான பின்னரும், (அல்லாஹ்வின்) இத்தூதரை விட்டுப் பிரிந்து, முஃமின்கள் செல்லாத வழியில் செல்கின்றானோ, அவனை அவன் செல்லும்; (தவறான) வழியிலேயே செல்லவிட்டு நரகத்திலும் அவனை நுழையச் செய்வோம்;. அதுவோ, சென்றடையும் இடங்களில் மிகக் கெட்டதாகும்.

யார் தூதருடன் முரண்பட்டு, அவர் கொண்டு வந்தது சத்தியம்தான் என்பதைத் தெளிவாக அறிந்தபின்னரும் அதற்கு மாறாகச் செயல்படுவாரோ, நம்பிக்கைகொண்டவர்களின் பாதையை விடுத்து வேறு பாதையைப் பின்பற்றிச் செல்வாரோ - அவர் தமக்காக தேர்ந்தெடுத்தவற்றிலேயே அவரை நாம் விட்டுவிடுவோம். வேண்டுமென்றே அவர் சத்தியத்தை மறுத்ததனால் நாம் அவருக்கு வழிகாட்ட மாட்டோம். அவரை நரகத்தில் பிரவேசிக்கச் செய்வோம். அதன் வெப்பத்தை அவர் அனுபவிப்பார். நரகவாதிகளுக்கு அது மோசமான திரும்புமிடமாகும்.

An-Nisaa 4:115Listen in Qur'an →
116

إِنَّ ٱللَّهَ لَا يَغْفِرُ أَن يُشْرَكَ بِهِۦ وَيَغْفِرُ مَا دُونَ ذَٰلِكَ لِمَن يَشَآءُ ۚ وَمَن يُشْرِكْ بِٱللَّهِ فَقَدْ ضَلَّ ضَلَٰلًۢا بَعِيدًا

நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைப்பதை மன்னிக்கவே மாட்டான்;. இது அல்லாத (பாவத்)தைத் தான் நாடியவருக்கு மன்னிப்பான்;. எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்.

நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணையாக மற்றவர்கள் ஆக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான். மாறாக இணைவைப்பவர் நரகத்தில் நிரந்தரமாக வீழ்ந்துகிடப்பார். இந்த இணைவைப்பைத்தவிர மற்ற பாவங்களை தான் நாடியவர்களுக்கு தன் அருளால் அவன் மன்னித்துவிடுகிறான். அல்லாஹ்வுக்கு இணையாக வேறு ஒருவரை ஆக்கிக்கொண்டவர் சத்தியத்தைவிட்டும் தூரமான வழிகேட்டில் விழுந்துவிட்டார். ஏனெனில் அவர் படைப்பாளனையும் படைப்புகளையும் சரிசமமாக்கிவிட்டார்.

An-Nisaa 4:116Listen in Qur'an →
117

إِن يَدْعُونَ مِن دُونِهِۦٓ إِلَّآ إِنَٰثًۭا وَإِن يَدْعُونَ إِلَّا شَيْطَٰنًۭا مَّرِيدًۭا

அவனை (அல்லாஹ்வை) விட்டு அவர்கள் அழைப்பவை எல்லாம் பெண் தெய்வங்களேயன்றி வேறில்; லை. இன்னும் துஷ்ட ஷைத்தானையும் தவிர, வேறு யாரையும் அவர்கள் அழைக்கவில்லை.

இந்த இணைவைப்பாளர்கள் அல்லாஹ்வுடன் தாங்களே ஏற்படுத்திக்கொண்ட - லாத், உஸ்ஸா - போன்ற பெண்களின் பெயர்களைத் தாங்கிய சிலைகளையே வணங்குகிறார்கள். அவற்றால் அவர்களுக்குத் தீங்கிழைக்கவோ பலனளிக்கவோ முடியாது. உண்மையில் அவர்கள் தன் இறைவனின் கட்டளைக்கு மாறாகச் செயல்பட்ட விரட்டப்பட்ட எவ்வித நலவுமற்ற ஷைத்தானையே வணங்குகிறார்கள். ஏனெனில் அவன்தான் சிலைகளை வணங்குமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டான்.

An-Nisaa 4:117Listen in Qur'an →
118

لَّعَنَهُ ٱللَّهُ ۘ وَقَالَ لَأَتَّخِذَنَّ مِنْ عِبَادِكَ نَصِيبًۭا مَّفْرُوضًۭا

அல்லாஹ் அவனை (ஷைத்தானை) சபித்தான். "உன் அடியார்களில் ஒரு குறிப்பிட்ட தொகையினரை நான் நிச்சயமாக எடுத்துக் கொள்வேன்" என்றும்,

எனவேதான் அல்லாஹ் தன் அருளைவிட்டும் அவனைத் துரத்திவிட்டான். இந்த ஷைத்தான் தன் இறைவனிடம் சத்தியம் செய்தவனாகக் கூறினான், “உன் அடியார்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையினரை நான் சத்தியத்தைவிட்டு பிறழச்செய்தே தீருவேன்.

An-Nisaa 4:118Listen in Qur'an →
119

وَلَأُضِلَّنَّهُمْ وَلَأُمَنِّيَنَّهُمْ وَلَءَامُرَنَّهُمْ فَلَيُبَتِّكُنَّ ءَاذَانَ ٱلْأَنْعَٰمِ وَلَءَامُرَنَّهُمْ فَلَيُغَيِّرُنَّ خَلْقَ ٱللَّهِ ۚ وَمَن يَتَّخِذِ ٱلشَّيْطَٰنَ وَلِيًّۭا مِّن دُونِ ٱللَّهِ فَقَدْ خَسِرَ خُسْرَانًۭا مُّبِينًۭا

"இன்னும் நிச்சயமாக நான் அவர்களை வழி கெடுப்பேன்;. அவர்களிடம் வீணான எண்ணங்களையும் உண்டாக்குவேன்;. (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகளின் காதுகளை அறுத்து விடும்படியும் அவர்களை ஏவுவேன். இன்னும் அல்லாஹ்வின் படைப்புகளையுடைய கோலங்களை மாற்றும்படியும் ஏவுவேன்" என்றும் ஷைத்தான் கூறினான்;. எனவே எவன் அல்லாஹ்வை விட்டு ஷைத்தானை உற்ற நண்பனாக ஆக்கிக் கொள்கிறானோ, அவன் நிச்சயமாக பகிரங்கமான பெரு நஷ்டத்தை அடைந்தவன் ஆவான்.

உன் நேரான வழியைவிட்டும் அவர்களைத் தடுத்திடுவேன். அவர்களின் வழிகேடுகளை அவர்களுக்கு அலங்கரித்துக் காட்டும் பொய்யான வாக்குறுதிகளின் மூலம் அவர்களுக்கு ஆசைவார்த்தைகளை கூறுவேன். அல்லாஹ் அனுமதித்ததை தடைசெய்வதற்காக அவர்களுடைய கால்நடைகளின் காதுகளை அறுக்குமாறு கட்டளையிடுவேன். அல்லாஹ்வின் படைப்பையும் அதன் இயல்பையும் மாற்றுமாறு அவர்களுக்குக் கட்டளையிடுவேன்.” விரட்டப்பட்ட ஷைத்தானை தான் கட்டுப்படும் நேசிக்கும் தோழனாக ஆக்கிக்கொண்டவர் தெளிவான இழப்பிற்கு உள்ளாகிவிட்டார்.

An-Nisaa 4:119Listen in Qur'an →
120

يَعِدُهُمْ وَيُمَنِّيهِمْ ۖ وَمَا يَعِدُهُمُ ٱلشَّيْطَٰنُ إِلَّا غُرُورًا

ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிக்கிறான்;. அவர்களுக்கு வீணான எண்ணங்களையும் உண்டாக்குகிறான்;. மேலும் அந்த ஷைத்தான் ஏமாற்றுவதைத் தவிர வேறு (எதனையும்) அவர்களுக்கு வாக்களிக்கவில்லை.

ஷைத்தான் பொய்யான வாக்குறுதிகளை வழங்குகிறான். தவறான ஆசைகளை ஊட்டுகிறான். உண்மையில் ஷைத்தான் அடிப்படையற்ற தவறான வாக்குறுதிகளையே அளிக்கிறான்.

An-Nisaa 4:120Listen in Qur'an →

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.