Muslim99Muslim99
← Tafsir library

4. An-Nisaa

The Women · Medinan · 176 ayahs

سُورَةُ النِّسَاءِ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 101–110 of 176

101

وَإِذَا ضَرَبْتُمْ فِى ٱلْأَرْضِ فَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَن تَقْصُرُوا۟ مِنَ ٱلصَّلَوٰةِ إِنْ خِفْتُمْ أَن يَفْتِنَكُمُ ٱلَّذِينَ كَفَرُوٓا۟ ۚ إِنَّ ٱلْكَٰفِرِينَ كَانُوا۟ لَكُمْ عَدُوًّۭا مُّبِينًۭا

நீங்கள் பூமியில் பிரயாணம் செய்யும்போது, காஃபிர்கள் உங்களுக்கு விஷமம் செய்வார்கள் என்று நீங்கள் அஞ்சினால், அப்பொழுது நீங்கள் தொழுகையைச் சுருக்கிக் கொள்வது உங்கள் மீது குற்றம் ஆகாது. நிச்சயமாக காஃபிர்கள் உங்களுக்குப் பகிரங்கமான பகைவர்களாக இருக்கின்றனர்.

நீங்கள் பூமியில் பயணம் செய்தால், நிராகரிப்பாளர்களால் ஏதேனும் தீங்கு உங்களுக்கு நேரலாம் என்று நீங்கள் அஞ்சினால் நான்கு ரக்அத் தொழுகைகளை இரண்டு ரக்அத்தாக சுருக்கிக் கொள்வதில் உங்கள்மீது எந்தக் குற்றமும் இல்லை. நிச்சயமாக நிராகரிப்பாளர்களின் உங்கள் மீதான எதிர்ப்பு பகிரங்கமானதாகும். யுத்தமற்ற பாதுகாப்பான நிலையிலும், பிராயணத்தில் கருக்ககுவதும் அனுமதிக்கப்பட்டதே என்ற சட்டம் ஆதாரபூர்வமான நபிவழியில் இடம்பெற்றுள்ளது.

An-Nisaa 4:101Listen in Qur'an →
102

وَإِذَا كُنتَ فِيهِمْ فَأَقَمْتَ لَهُمُ ٱلصَّلَوٰةَ فَلْتَقُمْ طَآئِفَةٌۭ مِّنْهُم مَّعَكَ وَلْيَأْخُذُوٓا۟ أَسْلِحَتَهُمْ فَإِذَا سَجَدُوا۟ فَلْيَكُونُوا۟ مِن وَرَآئِكُمْ وَلْتَأْتِ طَآئِفَةٌ أُخْرَىٰ لَمْ يُصَلُّوا۟ فَلْيُصَلُّوا۟ مَعَكَ وَلْيَأْخُذُوا۟ حِذْرَهُمْ وَأَسْلِحَتَهُمْ ۗ وَدَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ لَوْ تَغْفُلُونَ عَنْ أَسْلِحَتِكُمْ وَأَمْتِعَتِكُمْ فَيَمِيلُونَ عَلَيْكُم مَّيْلَةًۭ وَٰحِدَةًۭ ۚ وَلَا جُنَاحَ عَلَيْكُمْ إِن كَانَ بِكُمْ أَذًۭى مِّن مَّطَرٍ أَوْ كُنتُم مَّرْضَىٰٓ أَن تَضَعُوٓا۟ أَسْلِحَتَكُمْ ۖ وَخُذُوا۟ حِذْرَكُمْ ۗ إِنَّ ٱللَّهَ أَعَدَّ لِلْكَٰفِرِينَ عَذَابًۭا مُّهِينًۭا

(நபியே! போர் முனையில்) அவர்களுடன் நீர் இருந்து, அவர்களுக்கு தொழவைக்க நீர்(இமாமாக) நின்றால் அவர்களில் ஒரு பிரிவினர் தம் ஆயுதங்களைத் தாங்கிக் கொண்டு உம்முடன் தொழட்டும்;. அவர்கள் உம்முடன் ஸஜ்தா செய்து (தொழுகையை முடித்ததும்) அவர்கள் (விலகிச் சென்று) உங்கள் பின்புறம் (உங்களைக் காத்து நிற்கட்டும்); அப்பொழுது, தொழாமலிருந்த மற்றொரு பிரிவினர் வந்து உம்முடன் தொழட்டும். ஆயினும் அவர்களும் தங்கள் ஆயுதங்களைத் தாங்கிய வண்ணம், தங்களைப் பற்றி எச்சரிக்கையாக இருக்கட்டும் - ஏனெனில் நீங்கள் உங்கள் ஆயுதங்களைப்பற்றியும், உங்கள் சாமான்களைப் பற்றியும் கவனனக் குறைவாக இருந்தால், அப்பொழுது உங்கள் மீது ஒரேயடியாகச் சாய்ந்து (தாக்கி) விடலாமென்று காஃபிர்கள் விரும்புகின்றனர்;. ஆனால் மழையினால் உங்களுக்கு இடைஞ்சல் இருந்தாலோ, அல்லது நீங்கள் நோயாளிகளாக இருப்பதினாலோ, உங்களுடைய ஆயுதங்களைக் (கையில் பிடிக்க இயலாது) கீழே வைத்து விடுவது உங்கள் மீது குற்றம் ஆகாது. எனினும் நீங்கள் எச்சரிக்கையாகவே இருந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்திருக்கின்றான்.

தூதரே! போர்ச்சமயத்தில் நீர் படையில் இருந்து அவர்களுக்குத் தொழுகை நடத்த விரும்பினால் அவர்களை இரண்டு அணியினராக பிரித்துக் கொள்வீராக. ஒரு அணியினர் உம்முடன் தொழுவதற்காக நிற்கட்டும். தங்களுடைய ஆயுதங்களையும் அவர்கள் எடுத்துக் கொள்ளட்டும். மற்றொரு அணியினர் உங்களைப் பாதுகாக்கட்டும். முதல் அணியினர் இமாமுடன் ஒரு ரக்அத் தொழுதபிறகு இரண்டாவது ரக்அத்தை தாமாகவே நிறைவேற்றிக் கொள்ளட்டும். அவர்கள் தொழுதவுடன் உங்களுக்குப் பின்னாலிருந்து எதிரிகளின் திசையை நோக்கி நிற்கட்டும். உங்களைப் பாதுகாத்துக் கொண்டிருந்த இரண்டாவது அணியினர் வந்து இரண்டாவது ரக்அத்தில் இமாமுடன் இணைந்துகொள்ளட்டும். இமாம் சலாம் கொடுத்தபிறகு அவர்கள் மீதமுள்ள ஒரு ரக்அத்தை நிறைவேற்றிக் கொள்ளட்டும். அவர்கள் தங்களின் ஆயுதங்களை வைத்துக் கொண்டு எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருக்கட்டும். நிராகரிப்பாளர்கள் நீங்கள் உங்களின் ஆயுதங்களையும் தளபாடங்களையும் விட்டு கவனக்குறைவாக இருக்கும் சமயத்தில் உங்களைத் திடீரெனத் தாக்கிவிடலாம் என்று ஆசைகொள்கிறார்கள். மழையினாலோ உங்களுக்கு ஏற்பட்ட நோயினாலோ நீங்கள் உங்கள் ஆயுதங்களைக் கீழே வைத்தால் உங்கள்மீது எவ்விதக் குற்றமுமில்லை. உங்களால் இயன்றவற்றின் மூலம் உங்கள் எதிரிகளிடமிருந்து பாதுகாப்பாக இருங்கள். நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பாளர்களுக்கு இழிவுதரும் வேதனையைத் தயார்செய்து வைத்துள்ளான்.

An-Nisaa 4:102Listen in Qur'an →
103

فَإِذَا قَضَيْتُمُ ٱلصَّلَوٰةَ فَٱذْكُرُوا۟ ٱللَّهَ قِيَٰمًۭا وَقُعُودًۭا وَعَلَىٰ جُنُوبِكُمْ ۚ فَإِذَا ٱطْمَأْنَنتُمْ فَأَقِيمُوا۟ ٱلصَّلَوٰةَ ۚ إِنَّ ٱلصَّلَوٰةَ كَانَتْ عَلَى ٱلْمُؤْمِنِينَ كِتَٰبًۭا مَّوْقُوتًۭا

நீங்கள் தொழுகையை முடித்துக் கொண்டால், நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும், விலாப்புறங்களின் மீது (படுத்திருக்கும்) நிலையிலும் அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள்;. பின்னர் நீங்கள் (ஆபத்தினின்று விடுபட்டு) அமைதியான நிலைக்கு வந்ததும், முறைப்படி தொழுது கொள்ளுங்கள் - ஏனெனில், நிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை நிறைவேற்றுவது முஃமின்களுக்கு விதியாக்கப் பெற்றுள்ளது.

நம்பிக்கையாளர்களே! நீங்கள் தொழுகையிலிருந்து நிறைவேற்றிவிட்டால் நின்றநிலையிலும் அமர்ந்தநிலையிலும் ஒருக்களித்துப் படுத்தநிலையிலும் - என எல்லா நிலைகளிலும் துதித்துப் புகழ்வதன் மூலம் அல்லாஹ்வை நினைவுகூருங்கள். பயம் உங்களைவிட்டு நீங்கி அமைதிநிலை ஏற்பட்டுவிட்டால் தொழுகையை அதன் நிபந்தனைகளோடும் கடமைகளோடும் சுன்னத்துக்களோடும் உங்களுக்குக் கட்டளையிட்டபடி முழுமையாக நிறைவேற்றுங்கள். நிச்சயமாக தொழுகை நம்பிக்கையாளர்கள்மீது நேரங்குறிக்கப்பட்ட கடமையாகும். எனவே காரணமின்றி அதனைத் தாமதப்படுத்திவிடாதீர்கள். இது ஊரில் உள்ள சமயத்திற்குரிய சட்டமாகும். ஆனால் பயண சமயத்தில் நீங்கள் சேர்த்தும் சுருக்கியும் தொழுதுகொள்ளலாம்.

An-Nisaa 4:103Listen in Qur'an →
104

وَلَا تَهِنُوا۟ فِى ٱبْتِغَآءِ ٱلْقَوْمِ ۖ إِن تَكُونُوا۟ تَأْلَمُونَ فَإِنَّهُمْ يَأْلَمُونَ كَمَا تَأْلَمُونَ ۖ وَتَرْجُونَ مِنَ ٱللَّهِ مَا لَا يَرْجُونَ ۗ وَكَانَ ٱللَّهُ عَلِيمًا حَكِيمًا

மேலும், (பகைக்) கூட்டத்தைத் தேடிச் செல்வதில் ஊக்கம் குன்றாதீர்கள்;. நீங்கள் (போரில்) துன்பப்படுவீர்களானால், நிச்சயமாக அவர்களும் உங்களைப் போன்றே துன்பப்படுகிறார்கள் - அல்லாஹ்விடமிருந்து அவர்கள் எதிர்பார்க்காத (நற்கூலியும் வெற்றியும்) நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள். அல்லாஹ் மிக அறிந்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.

நம்பிக்கையாளர்களே! நிராகரிப்பாளர்களான உங்களது எதிரிகளைத் தேடுவதில் பலவீனமடைந்து விடாதீர்கள். உங்களுக்கு ஏற்பட்ட உயிர்ச் சேதங்களினாலும் காயங்களினாலும் நீங்கள் வலியை உணர்ந்தால் உங்களைப்போல நிராகரிப்பாளர்களும் வலியை உணரத்தான் செய்கிறார்கள். உங்களுக்கு ஏற்பட்டதுபோன்று அவர்களுக்கும் ஏற்பட்டே உள்ளது. அவர்களின் பொறுமை உங்களின் பொறுமையைவிட அதிகமாகிவிடக்கூடாது. ஏனெனில் அவர்கள் அல்லாஹ்விடம் எதிர்பார்க்காத உதவியையும் நன்மையையும் நீங்கள் அவனிடம் எதிர்பார்க்கிறீர்கள். அல்லாஹ் தன் அடியார்களின் நிலமைகளை நன்கறிந்தவன். தனது நிர்வாகத்திலும் சட்டமியற்றுவதிலும் அவன் ஞானம்மிக்கவன்.

An-Nisaa 4:104Listen in Qur'an →
105

إِنَّآ أَنزَلْنَآ إِلَيْكَ ٱلْكِتَٰبَ بِٱلْحَقِّ لِتَحْكُمَ بَيْنَ ٱلنَّاسِ بِمَآ أَرَىٰكَ ٱللَّهُ ۚ وَلَا تَكُن لِّلْخَآئِنِينَ خَصِيمًۭا

(நபியே!) அல்லாஹ் உமக்கு அறிவித்ததைக் கொண்டு, நீர் மனிதர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக, முற்றிலும் உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நிச்சயமாக நாம் உம்மீது இறக்கியுள்ளோம்;. எனவே சதி மோசக்காரர்கள் சார்பில் வாதாடுபவராகி விடாதீர்.

தூதரே! சத்தியத்தை உள்ளடக்கியுள்ள குர்ஆனை உம்மீது இறக்கியுள்ளோம், மக்களின் ஒவ்வொரு விவகாரங்களிலும் அல்லாஹ் உமக்குக் கற்றுத்தந்தபடி - உம் மனஇச்சைப்படியோ சுயஅறிவின்படியோ அல்ல - நீர் அவர்களிடையே தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக. தமக்குத் தாமே துரோகம் செய்து, நம்பி ஒப்படைக்கப்பட்டவற்றில் மோசடி செய்பவர்களிடத்தில் தமது உரிமையைக் கேட்போரைத் தடுத்து வாதாடுபவராக ஆகிவிடாதீர்.

An-Nisaa 4:105Listen in Qur'an →
106

وَٱسْتَغْفِرِ ٱللَّهَ ۖ إِنَّ ٱللَّهَ كَانَ غَفُورًۭا رَّحِيمًۭا

(தவறுகளுக்காக) நீர் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரும், நிச்சமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான்.

அல்லாஹ்விடம் மன்னிப்பைக் கோருவீராக. தன்னிடம் மன்னிப்புக்கோரும் அடியார்களை அவன் மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களின் விஷயத்தில் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.

An-Nisaa 4:106Listen in Qur'an →
107

وَلَا تُجَٰدِلْ عَنِ ٱلَّذِينَ يَخْتَانُونَ أَنفُسَهُمْ ۚ إِنَّ ٱللَّهَ لَا يُحِبُّ مَن كَانَ خَوَّانًا أَثِيمًۭا

ஏனென்றால் கொடிய பாவியான சதி செய்து கொண்டிருப்பவரை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை.

தனது மோசடியை மறைப்பதற்காக கடும் பிரயத்தனம் மேற்கொள்ளும் எந்த ஒருவருக்காகவும் நீர் வாதிடவேண்டாம். பாவிகளான பெரும் மோசடிக்காரர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை.

An-Nisaa 4:107Listen in Qur'an →
108

يَسْتَخْفُونَ مِنَ ٱلنَّاسِ وَلَا يَسْتَخْفُونَ مِنَ ٱللَّهِ وَهُوَ مَعَهُمْ إِذْ يُبَيِّتُونَ مَا لَا يَرْضَىٰ مِنَ ٱلْقَوْلِ ۚ وَكَانَ ٱللَّهُ بِمَا يَعْمَلُونَ مُحِيطًا

இவர்கள் (தங்கள் சதிகளை) மனிதர்களிடமிருந்து மறைத்து விடுகின்றனர்;. ஆனால் (அவற்றை) அல்லாஹ்விடமிருந்து மறைக்க முடியாது. ஏனெனில் அவன் பொருந்திக் கொள்ளாத சொற்களில் அவர்கள் இரவில் (சதி) ஆலோசனை செய்யும் போது அவன் அவர்களுடன் இருக்கின்றான். மேலும் அவர்கள் செய்பவற்றையெல்லாம் அல்லாஹ் சூழ்ந்து அறிந்தவனாக இருக்கின்றான்.

அவர்கள் பாவமான காரியங்களில் ஈடுபடும்போது மக்களுக்குப் பயந்து, வெட்கத்தால் மறைந்துகொள்கிறார்கள். ஆனால் அல்லாஹ்வை விட்டும் மறைந்துகொள்வதில்லை. அவன் அவர்களைச் சூழ்ந்து கொண்டுள்ளான். தவறிழைத்தவனைக் காப்பாற்றி நிரபாராதியை சந்தேகிப்பது போன்ற அவனுக்கு விருப்பமில்லாததை அவர்கள் மறைவாகத் திட்டமிட்டுச் செய்யும் எதுவும் அவனைவிட்டு மறைவாக இருப்பதில்லை. அவர்கள் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் செய்யும் அனைத்தையும் அல்லாஹ் சூழ்ந்தறிந்தவனாகவே இருக்கிறான். எதுவும் அவனுக்கு மறைவாக இல்லை. அவர்களின் செயல்களுக்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான்.

An-Nisaa 4:108Listen in Qur'an →
109

هَٰٓأَنتُمْ هَٰٓؤُلَآءِ جَٰدَلْتُمْ عَنْهُمْ فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا فَمَن يُجَٰدِلُ ٱللَّهَ عَنْهُمْ يَوْمَ ٱلْقِيَٰمَةِ أَم مَّن يَكُونُ عَلَيْهِمْ وَكِيلًۭا

(முஃமின்களே!) என்னே! இத்தகைய மனிதர்களுக்காகவா இவ்வுலகில் நீங்கள் வாதாடுகிறீர்கள் - நியாயத் தீர்ப்பு நாளில் அவர்களுக்காக அல்லாஹ்விடம் யார் வாதாடுவார்கள்? அல்லது (அந்நாளில்) அவர்களுக்காக பொறுப்பாளியாக ஆகுபவன் யார்?

பாவங்களில் ஈடுபடுவோரான இவர்களது விடயத்தில் கரிசனை செலுத்துவோரே! இவர்களைக் குற்றமற்றவர்கள் என்று உலகவாழ்க்கையில் நிரூபித்து தண்டனையிலிருந்து காப்பதற்காக நீங்கள் வாதாடுகிறீர்கள். மறுமைநாளில் இவர்களின் உண்மைநிலை வெளிப்பட்டுவிடும்போது இவர்களுக்காக யார் வாதாடுவார்கள்? அந்த நாளில் இவர்களுக்குப் பொறுப்பாளன் யார்? சந்தேகமின்றி எவரும் இதற்குச் சக்திபெற மாட்டார்கள்.

An-Nisaa 4:109Listen in Qur'an →
110

وَمَن يَعْمَلْ سُوٓءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُۥ ثُمَّ يَسْتَغْفِرِ ٱللَّهَ يَجِدِ ٱللَّهَ غَفُورًۭا رَّحِيمًۭا

எவரேனும் ஒரு தீமையைச் செய்துவிட்டு, அல்லது தமக்குத் தாமே அநியாயம் செய்து பின்னர் அவர் (மனப்பூர்வமாக) அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்பாரானால் - அவர் அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும் மிக்க கருணை உடையவனாகவும் காண்பார்.

யார் தீய செயல் செய்கிறாரோ அல்லது பாவங்களைச் சம்பாதித்து தமக்குத்தாமே அநீதி இழைத்துக் கொள்கிறாரோ பின்னர் அவர் அல்லாஹ்விடம் தம் பாவங்களை ஒத்துக்கொண்டு அதற்காக கைசேதப்பட்டு, அவற்றை அடியோடு விட்டுவிட்டு அவனிடம் மன்னிப்புக் கோரினால் அவர் எப்பொழுதுமே அல்லாஹ்வை பெரும் மன்னிப்பாளனாகவும் அவரது விஷயத்தில் மிகுந்த கருணையாளனாகவும் காண்பார்.

An-Nisaa 4:110Listen in Qur'an →

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.