Muslim99Muslim99
← Tafsir library

3. Aal-i-Imraan

The Family of Imraan · Medinan · 200 ayahs

سُورَةُ آلِ عِمۡرَانَ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 81–90 of 200

81

وَإِذْ أَخَذَ ٱللَّهُ مِيثَٰقَ ٱلنَّبِيِّۦنَ لَمَآ ءَاتَيْتُكُم مِّن كِتَٰبٍۢ وَحِكْمَةٍۢ ثُمَّ جَآءَكُمْ رَسُولٌۭ مُّصَدِّقٌۭ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِۦ وَلَتَنصُرُنَّهُۥ ۚ قَالَ ءَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَىٰ ذَٰلِكُمْ إِصْرِى ۖ قَالُوٓا۟ أَقْرَرْنَا ۚ قَالَ فَٱشْهَدُوا۟ وَأَنَا۠ مَعَكُم مِّنَ ٱلشَّٰهِدِينَ

(நினைவு கூருங்கள்;) நபிமார்(கள் மூலமாக அல்லாஹ் உங்கள் முன்னோர்)களிடம் உறுதிமொழி வாங்கியபோது, "நான் உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கொடுத்திருக்கின்றேன். பின்னர் உங்களிடம் இருப்பதை மெய்ப்பிக்கும் ரஸூல் (இறைதூதர்) வருவார். நீங்கள் அவர்மீது திடமாக ஈமான் கொண்டு அவருக்கு உறுதியாக உதவி செய்வீர்களாக" (எனக் கூறினான்). "நீங்கள் (இதை) உறுதிப்படுத்துகிறீர்களா? என்னுடைய இந்த உடன்படிக்கைக்குக் கட்டுப்படுகிறீர்களா?" என்றும் கேட்டான்; "நாங்கள் (அதனை ஏற்று) உறுதிப்படுத்துகிறோம்" என்று கூறினார்கள்; (அதற்கு அல்லாஹ்) "நீங்கள் சாட்சியாக இருங்கள்;. நானும் உங்களுடன் சாட்சியாளர்களில் (ஒருவனாக) இருக்கிறேன்" என்று கூறினான்.

தூதரே! தூதர்களிடம் அல்லாஹ் பின்வருமாறு கூறி உறுதிமொழி வாங்கியதை நினைவுகூர்வீராக: “நான் உங்களுக்கு வேதத்தை வழங்கி ஞானத்தையும் கற்றுக்கொடுத்து நீங்கள் அடைய வேண்டிய நிலையையும் அடைந்துவிட்ட பிறகு உங்களிடமுள்ள வேதத்தையும் ஞானத்தையும் உண்மைப்படுத்தக்கூடிய தூதர்(அவர்தான் முஹம்மத் (ஸல்) அவர்கள்) என்னிடமிருந்து வந்தால் நீங்கள் அவர் கொண்டுவந்ததன்மீது நம்பிக்கைகொண்டு அவரைப் பின்பற்றி அவருக்கு உதவிபுரிய வேண்டும். தூதர்களே! நீங்கள் இதனை ஏற்றுக்கொண்டு அதற்கு எனக்கு உறுதிமொழியும் வழங்குகிறீர்களா?”. அதற்கு, தூதர்கள் “நாங்கள் இதனை ஏற்றுக்கொண்டோம்” என்று கூறினார்கள். அல்லாஹ் கூறினான்: “உங்கள் மீதும் உங்கள் சமூகங்களின்மீதும் நீங்களே சாட்சியாக இருங்கள்.உங்கள்மீதும் அவர்கள்மீதும் உங்களுடன் சேர்ந்து நானும் சாட்சியாக இருக்கிறேன்.

Aal-i-Imraan 3:81Listen in Qur'an →
82

فَمَن تَوَلَّىٰ بَعْدَ ذَٰلِكَ فَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْفَٰسِقُونَ

எனவே, இதன் பின்னரும் எவரேனும் புறக்கணித்து விடுவார்களானால் நிச்சயமாக அவர்கள் தீயவர்கள் தாம்.

அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதர்களின் சாட்சியம் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் பின்னரும் புறக்கணிப்பவர்கள்தாம் அல்லாஹ்வின் மார்க்கத்தை விட்டும் அவனுக்கு அடிபணிவதை விட்டும் வெளியேறியவர்கள்.

Aal-i-Imraan 3:82Listen in Qur'an →
83

أَفَغَيْرَ دِينِ ٱللَّهِ يَبْغُونَ وَلَهُۥٓ أَسْلَمَ مَن فِى ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ طَوْعًۭا وَكَرْهًۭا وَإِلَيْهِ يُرْجَعُونَ

அல்லாஹ்வின் மார்க்கத்தைவிட்டு (வேறு மார்க்கத்தையா) அவர்கள் தேடுகிறார்கள்? வானங்களிலும் பூமியிலும் உள்ள (அனைத்துப் படைப்புகளும்) விரும்பியோ அல்லது வெறுத்தோ அவனுக்கே சரணடைகின்றன. மேலும் (அவை எல்லாம்) அவனிடமே மீண்டும் கொண்டு வரப்படும்.

அல்லாஹ்வின் மார்க்கத்தை விட்டு வெளியேறிய இவர்கள் தனது அடியார்களுக்கு அவன் தெரிவு செய்த இஸ்லாம் அல்லாத வேறு ஒரு மார்க்கத்தையா விரும்புகிறார்கள். நம்பிக்கையாளர்களைப்போன்று விரும்பியோ நிராகரிப்பாளர்களைப்போன்று விரும்பாமலோ வானங்களிலும் பூமியிலும் உள்ள படைப்புகள் அனைத்தும் அவனுக்கே கட்டுப்பட்டுள்ளன. மறுமைநாளில் விசாரித்து, கூலி வழங்கப்படுதற்காக படைப்புகள் அனைத்தும் அல்லாஹ்வின் பக்கமே திரும்புவார்கள்.

Aal-i-Imraan 3:83Listen in Qur'an →
84

قُلْ ءَامَنَّا بِٱللَّهِ وَمَآ أُنزِلَ عَلَيْنَا وَمَآ أُنزِلَ عَلَىٰٓ إِبْرَٰهِيمَ وَإِسْمَٰعِيلَ وَإِسْحَٰقَ وَيَعْقُوبَ وَٱلْأَسْبَاطِ وَمَآ أُوتِىَ مُوسَىٰ وَعِيسَىٰ وَٱلنَّبِيُّونَ مِن رَّبِّهِمْ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍۢ مِّنْهُمْ وَنَحْنُ لَهُۥ مُسْلِمُونَ

"அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும், இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், அவர்களின் சந்ததியர் ஆகியோர் மீது அருள் செய்யப்பட்டவற்றையும், இன்னும் மூஸா, ஈஸா இன்னும் மற்ற நபிமார்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து அருளப்பட்டவற்றையும் நாங்கள் விசவாசங் கொள்கிறோம். அவர்களில் எவரொருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டமாட்டோம்;. நாங்கள் அவனுக்கே (முற்றிலும் சரணடையும்) முஸ்லிம்கள் ஆவோம்" என்று (நபியே!) நீர் கூறுவீராக.

தூதரே! நீர் கூறுவீராக: “நாங்கள் அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு, எங்களுக்கு ஏவப்பட்டவிடயத்தில் அவனுக்குக் கட்டுப்பட்டுள்ளோம். எங்கள்மீது இறக்கப்பட்ட வஹியின் மீதும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூபு மற்றும் யஅகூபின் பிள்ளைகளில் தூதராக அனுப்பப்பட்டவர்கள் ஆகியோருக்கு இறக்கப்பட்டவற்றின்மீதும் நாங்கள் நம்பிக்கைகொண்டுள்ளோம். மூசாவுக்கும் ஈசாவுக்கும் மற்றும் தூதர்கள் அனைவருக்கும் இறைவனிடமிருந்து வழங்கப்பட்ட வேதங்கள், சான்றுகள் ஆகியவற்றின் மீதும் நம்பிக்கைகொண்டுள்ளோம். அவர்களில் சிலர் மீது நம்பிக்கைகொண்டு சிலரை நிராகரித்து அவர்களிடையே நாங்கள் வேற்றுமை பாராட்ட மாட்டோம். நாங்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே அடிபணிந்தவர்கள்.”

Aal-i-Imraan 3:84Listen in Qur'an →
85

وَمَن يَبْتَغِ غَيْرَ ٱلْإِسْلَٰمِ دِينًۭا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِى ٱلْءَاخِرَةِ مِنَ ٱلْخَٰسِرِينَ

இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது. மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார்.

யாரேனும் அல்லாஹ் ஏற்றுக்கொண்ட மார்க்கமான இஸ்லாத்தைத்தவிர வேறொரு மார்க்கத்தை விரும்பினால், அல்லாஹ் அவரிடமிருந்து அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டான். மறுமையில் தம்மைத்தாமே இழப்பிற்குள்ளாக்கி நரகில் நுழைவதன் மூலம் தமக்குத்தாமே இழப்பை உண்டாக்கிக்கொண்டவர்களில் ஒருவராக அவர் இருப்பார்.

Aal-i-Imraan 3:85Listen in Qur'an →
86

كَيْفَ يَهْدِى ٱللَّهُ قَوْمًۭا كَفَرُوا۟ بَعْدَ إِيمَٰنِهِمْ وَشَهِدُوٓا۟ أَنَّ ٱلرَّسُولَ حَقٌّۭ وَجَآءَهُمُ ٱلْبَيِّنَٰتُ ۚ وَٱللَّهُ لَا يَهْدِى ٱلْقَوْمَ ٱلظَّٰلِمِينَ

அவர்களிடம் தெளிவான ஆதாரங்கள் வந்து நிச்சயமாக (இந்தத்) தூதர் உண்மையாளர்தான் என்று சாட்சியங் கூறி ஈமான் கொண்ட பிறகு நிராகரித்து விட்டார்களே, அந்தக் கூட்டத்திற்கு அல்லாஹ் எப்படி நேர்வழி காட்டுவான்! அல்லாஹ் அநியாயக் கார கூட்டத்திற்கு நேர்வழி காட்ட மாட்டான்.

’அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு முஹம்மது (ஸல்) அவர்கள் கொண்டுவந்தது உண்மையே’ என்று சாட்சிகூறிய பிறகும் நிராகரித்த கூட்டத்துக்கு தன்னையும் தனது தூதரையும் நம்பிக்கைகொள்வதற்கு அல்லாஹ் எவ்வாறு வழிகாட்டுவான்? அவர் உண்மையான தூதர்தாம் என்பதை அறிவிக்கும் தெளிவான சான்றுகளும் அவர்களிடம் வந்தேயுள்ளன. நேர்வழியை விட்டுவிட்டு வழிகேட்டை தேர்ந்தெடுத்துக்கொண்ட இந்த அநியாயக்காரர்களுக்கு அல்லாஹ் அவனை நம்பிக்கைகொள்ள வழிகாட்ட மாட்டான்.

Aal-i-Imraan 3:86Listen in Qur'an →
87

أُو۟لَٰٓئِكَ جَزَآؤُهُمْ أَنَّ عَلَيْهِمْ لَعْنَةَ ٱللَّهِ وَٱلْمَلَٰٓئِكَةِ وَٱلنَّاسِ أَجْمَعِينَ

நிச்சயமாக அவர்கள் மீது அல்லாஹ், மலக்குகள், மனிதர்கள் அனைவரின் சாபமும் இருக்கின்றது என்பது தான் அவர்களுக்குரிய கூலியாகும்.

வழிகேட்டைத் தேர்ந்தெடுத்துக்கொண்ட இந்த அநியாயக்காரர்களுக்கான தண்டனை, அல்லாஹ்வும் வானவர்களும் மனிதர்கள் அனைவரும் இடுகின்ற சாபமேயாகும். அவர்கள் அல்லாஹ்வின் அருளை விட்டும் விரட்டப்பட்டுவிட்டார்கள்.

Aal-i-Imraan 3:87Listen in Qur'an →
88

خَٰلِدِينَ فِيهَا لَا يُخَفَّفُ عَنْهُمُ ٱلْعَذَابُ وَلَا هُمْ يُنظَرُونَ

இ(ந்த சாபத்)திலேயே அவர்கள் என்றென்றும் இருப்பார்கள்;. அவர்களுடைய வேதனை இலேசாக்கப்பட மாட்டாது. அவர்களுக்கு (வேதனை) தாமதப்படுத்தப் படவும் மாட்டாது.

அவர்கள் நரகத்தில் நிரந்தரமாக வீழ்ந்துகிடப்பார்கள். அதிலிருந்து அவர்களால் வெளியேற முடியாது. அவர்களின் தண்டனை குறைக்கப்பட மாட்டாது. பாவமன்னிப்புக்கோரவோ, சாக்குப்போக்குக் கூறவோ அவர்களுக்கு அவகாசமும் அளிக்கப்படாது.

Aal-i-Imraan 3:88Listen in Qur'an →
89

إِلَّا ٱلَّذِينَ تَابُوا۟ مِنۢ بَعْدِ ذَٰلِكَ وَأَصْلَحُوا۟ فَإِنَّ ٱللَّهَ غَفُورٌۭ رَّحِيمٌ

எனினும், இதன்பிறகு (இவர்களில்) எவரேனும் (தம் பாவங்களை உணர்ந்து) மன்னிப்புக் கோரித் தங்களைச் சீர்திருத்திக் கொள்வார்களானால், (மன்னிப்புக் கிடைக்கக் கூடும்;) நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்போனாகவும், அளப்பருங் கருணையுள்ளவனாகவும் இருக்கின்றான்.

ஆயினும் தங்களின் நிராகரிப்பிற்கும் அக்கிரமத்திற்கும் பிறகு அல்லாஹ்வின்பால் மீண்டு தங்கள் செயல்களை சீர்படுத்திக் கொண்டவர்களைத்தவிர. தன்னிடம் பாவமன்னிப்புக்கோரும் அடியார்களை அல்லாஹ் மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களின் விஷயத்தில் அவன் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.

Aal-i-Imraan 3:89Listen in Qur'an →
90

إِنَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ بَعْدَ إِيمَٰنِهِمْ ثُمَّ ٱزْدَادُوا۟ كُفْرًۭا لَّن تُقْبَلَ تَوْبَتُهُمْ وَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلضَّآلُّونَ

எவர் ஈமான் கொண்ட பின் நிராகரித்து மேலும் (அந்த) குஃப்ரை அதிகமாக்கிக் கொண்டார்களோ, நிச்சயமாக அவர்களுடைய தவ்பா - மன்னிப்புக்கோரல் - ஒப்புக்கொள்ளப்பட மாட்டாது. அவர்கள் தாம் முற்றிலும் வழி கெட்டவர்கள்.

நம்பிக்கைகொண்ட பிறகு நிராகரித்து, மரணம் வரை அந்த நிராகரிப்பிலேயே நிலைத்திருப்பவர்கள் மரணவேளையில் செய்கின்ற பாவமன்னிப்புக் கோரிக்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படாது. ஏனெனில் பாவமன்னிப்பை ஏற்பதற்கான அவகாசம் முடிந்துவிட்டது. அவர்கள்தாம் அல்லாஹ்வின் பக்கம் செல்லக்கூடிய நேரான பாதையை விட்டும் வழிதவறியவர்களாவர்.

Aal-i-Imraan 3:90Listen in Qur'an →

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.