Muslim99Muslim99
← Tafsir library

3. Aal-i-Imraan

The Family of Imraan · Medinan · 200 ayahs

سُورَةُ آلِ عِمۡرَانَ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 71–80 of 200

71

يَٰٓأَهْلَ ٱلْكِتَٰبِ لِمَ تَلْبِسُونَ ٱلْحَقَّ بِٱلْبَٰطِلِ وَتَكْتُمُونَ ٱلْحَقَّ وَأَنتُمْ تَعْلَمُونَ

வேதத்தையுடையோரே! சத்தியத்தை அசத்தியத்துடன் ஏன் நீங்கள் கலக்குகிறீர்கள்? இன்னும் நீங்கள் அறிந்து கொண்டே ஏன் உண்மையை மறைக்கிறீர்கள்?

வேதக்காரர்களே! உங்கள் வேதங்களில் இறக்கப்பட்ட உண்மையை நீங்கள் உருவாக்கிய பொய்யோடு ஏன் கலக்கின்றீர்கள்? அதிலுள்ள சத்தியத்தையும் நேர்வழியையும் ஏன் மறைக்கின்றீர்கள்? அதிலுள்ள சத்தியங்களில் ஒன்றே முஹம்மத் (ஸல்) அவர்களது நபித்துவம் உண்மை என்பதும். அசத்தியத்திலிருந்து சத்தியத்தையும் வழிகேட்டிலிருந்து நேர்வழியையும் நீங்கள் அறிந்தேயுள்ளீர்கள்.

Aal-i-Imraan 3:71Listen in Qur'an →
72

وَقَالَت طَّآئِفَةٌۭ مِّنْ أَهْلِ ٱلْكِتَٰبِ ءَامِنُوا۟ بِٱلَّذِىٓ أُنزِلَ عَلَى ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَجْهَ ٱلنَّهَارِ وَٱكْفُرُوٓا۟ ءَاخِرَهُۥ لَعَلَّهُمْ يَرْجِعُونَ

வேதத்தையுடையோரில் ஒரு சாரார் (தம் இனத்தாரிடம்); "ஈமான் கொண்டோர் மீது இறக்கப்பட்ட (வேதத்)தைக் காலையில் நம்பி, மாலையில் நிராகரித்து விடுங்கள்;. இதனால் (ஈமான் கொண்டுள்ள) அவர்களும் ஒரு வேளை (அதை விட்டுத்) திரும்பி விடக்கூடும்" என்று கூறுகின்றனர்.

யூத அறிஞர்களில் ஒருபிரிவினர் கூறுகிறார்கள், “பகலின் ஆரம்பத்தில் நம்பிக்கையாளர்களுக்கு இறக்கப்பட்ட குர்ஆனின்மீது வெளிப்படையாக நம்பிக்கைகொள்ளுங்கள். பகலின் இறுதிப்பகுதியில் அதனை நிராகரித்துவிடுங்கள். ஈமான்கொண்ட பிறகு அதனை நீங்கள் நிராகரித்து விடுவதனால் அவர்களின் மார்க்கத்தில் அவர்கள் சந்தேகம்கொண்டு, “நம்மைவிட அல்லாஹ்வின் வேதத்தை நன்கறிந்தவர்களே திரும்பி விட்டார்களே” என்று கூறி சந்தேகம் கொண்டு அவர்களும் திரும்பிவிடக்கூடும்.”

Aal-i-Imraan 3:72Listen in Qur'an →
73

وَلَا تُؤْمِنُوٓا۟ إِلَّا لِمَن تَبِعَ دِينَكُمْ قُلْ إِنَّ ٱلْهُدَىٰ هُدَى ٱللَّهِ أَن يُؤْتَىٰٓ أَحَدٌۭ مِّثْلَ مَآ أُوتِيتُمْ أَوْ يُحَآجُّوكُمْ عِندَ رَبِّكُمْ ۗ قُلْ إِنَّ ٱلْفَضْلَ بِيَدِ ٱللَّهِ يُؤْتِيهِ مَن يَشَآءُ ۗ وَٱللَّهُ وَٰسِعٌ عَلِيمٌۭ

"உங்கள் மார்க்கத்தைப் பின்பற்றுவோரைத் தவிர (வேறு எவரையும்) நம்பாதீர்கள்" (என்றும் கூறுகின்றனர். நபியே!) நீர் கூறும்; நிச்சயமாக நேர்வழியென்பது அல்லாஹ்வின் வழியே ஆகும்;. உங்களுக்கு (வேதம்) கொடுக்கப்பட்டதுபோல் இன்னொருவருக்கும் கொடுக்கப்படுவதா அல்லது அவர்கள் உங்கள் இறைவன் முன் உங்களை மிகைத்து விடுவதா?" (என்று அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள்.) நிச்சயமாக அருட்கொடையெல்லாம் அல்லாஹ்வின் கையிலேயே உள்ளது. அதை அவன் நாடியோருக்கு வழங்குகின்றான்; அல்லாஹ் விசாலமான (கொடையளிப்பவன்; யாவற்றையும்) நன்கறிபவன் என்று கூறுவீராக.

“உங்களின் யூத மதத்தில் இருப்பவர்களை மட்டுமே நம்பிப் பின்பற்றுங்கள்” என்றும் கூறுகிறார்கள். தூதரே! நீர் கூறுவீராக: “அல்லாஹ் காட்டிய வழியே சத்தியத்திற்கான வழியாகும். உங்களுக்குக் கொடுக்கப்பட்ட சிறப்பு போன்று மற்றவர்களுக்கும் கொடுக்கப்பட்டுவிடும் என்ற பயத்தால் அல்லது அவர்கள் மீது இறக்கப்பட்டதை ஏற்றுக்கொண்டால் உங்கள் இறைவனிடம் உங்களுக்கு எதிராக அவர்கள் வாதாடுவார்களே என்ற பயத்தினால் நீங்கள் கொண்டிருக்கும் நிராகரிப்பும் பிடிவாதமும் சத்தியத்திற்கான வழி அல்ல.” தூதரே நீர் கூறுவீராக: “சிறப்புகள் அனைத்தும் அல்லாஹ்வின் கைவசமே உள்ளன. அவன் தான் நாடியவர்களுக்கு அவற்றை வழங்குகிறான். அவன் தன் அருளை ஒரு சமூகத்தோடு மட்டும் சுருக்கிவிட மாட்டான். அல்லாஹ் தாராளமாக வழங்கக்கூடியவன்; அதற்குத் தகுதியானவர்களையும் நன்கறிந்தவன்.

Aal-i-Imraan 3:73Listen in Qur'an →
74

يَخْتَصُّ بِرَحْمَتِهِۦ مَن يَشَآءُ ۗ وَٱللَّهُ ذُو ٱلْفَضْلِ ٱلْعَظِيمِ

அவன் தன் ரஹ்மத்தை(அருளை)க் கொண்டு தான் நாடியோரைச் சொந்தமாக்கிக் கொள்கின்றான்;. இன்னும் அல்லாஹ் மகத்தான கிருபையுடையவன்.

தன் படைப்புகளில் தான் நாடியோருக்கு தன் அருளை பிரத்யேகமாக வழங்குகிறான். அதனால் அவருக்கு நேர்வழியையும் நபித்துவத்தையும் பலவித அருள்களையும் அளித்து அருள்புரிகிறான். அல்லாஹ் மாபெரும் அருளாளன். அவனது அருளுக்கு எல்லையே கிடையாது.

Aal-i-Imraan 3:74Listen in Qur'an →
75

۞ وَمِنْ أَهْلِ ٱلْكِتَٰبِ مَنْ إِن تَأْمَنْهُ بِقِنطَارٍۢ يُؤَدِّهِۦٓ إِلَيْكَ وَمِنْهُم مَّنْ إِن تَأْمَنْهُ بِدِينَارٍۢ لَّا يُؤَدِّهِۦٓ إِلَيْكَ إِلَّا مَا دُمْتَ عَلَيْهِ قَآئِمًۭا ۗ ذَٰلِكَ بِأَنَّهُمْ قَالُوا۟ لَيْسَ عَلَيْنَا فِى ٱلْأُمِّيِّۦنَ سَبِيلٌۭ وَيَقُولُونَ عَلَى ٱللَّهِ ٱلْكَذِبَ وَهُمْ يَعْلَمُونَ

(நபியே!) வேதத்தையுடையோரில் சிலர் இருக்கிறார்கள்;. அவர்களிடம் நீர் ஒரு (பொற்) குவியலை ஒப்படைத்தாலும், அவர்கள் அதை (ஒரு குறைவும் இல்லாமல், கேட்கும்போது) உம்மிடம் திருப்பிக் கொடுத்து விடுவார்கள்;. அவர்களில் இன்னும் சிலர் இருக்கிறார்கள். அவர்களிடம் ஒரு (காசை) தீனாரை ஒப்படைத்தாலும், நீர் அவர்களிடம் தொடர்ந்து நின்று கேட்டாலொழிய, அவர்கள் அதை உமக்குத் திருப்பிக் கொடுக்கமாட்டார்கள். அதற்குக் காரணம், 'பாமரர்களிடம் (இருந்து நாம் எதைக் கைப்பற்றிக் கொண்டாலும்) நம்மை குற்றம் பிடிக்க (அவர்களுக்கு) வழியில்லை' என்று அவர்கள் கூறுவதுதான்;. மேலும், அவர்கள் அறிந்து கொண்டே அல்லாஹ்வின் பேரில் பொய் கூறுகிறார்கள்.

வேதக்காரர்களில் சிலர் இருக்கிறார்கள். அவர்களிடம் பெருங்செல்வத்தையே நம்பி ஒப்படைத்தாலும் அதனை முறையாக திருப்பி அளித்துவிடுவார்கள். அவர்களில் சிலர் இருக்கிறார்கள். அவர்களிடம் குறைவான செல்வத்தை நம்பி ஒப்படைத்தாலும் அவர்களிடம் தொடர்ந்து வற்புறுத்திக் கேட்டாலன்றி தங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்டதை திருப்பி அளிக்க மாட்டார்கள். அவர்களின் இந்த நடத்தைக்குக் காரணம், “அரபுக்கள் விஷயத்திலும் அவர்களது செல்வத்தை அனுபவிப்பதிலும் நாம் குற்றம்பிடிக்கப்பட மாட்டோம். ஏனெனில் அல்லாஹ் அவற்றை நமக்கு ஆகுமாக்கித் தந்துள்ளான்” என்ற அவர்களின் தவறான கூற்றும் எண்ணமும்தான். இவர்கள் அல்லாஹ்வின்மீது அபாண்டம் கூறுகிறோம் என அறிந்துகொண்டே இந்தப் பொய்யைக் கூறுகின்றனர்.

Aal-i-Imraan 3:75Listen in Qur'an →
76

بَلَىٰ مَنْ أَوْفَىٰ بِعَهْدِهِۦ وَٱتَّقَىٰ فَإِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلْمُتَّقِينَ

அப்படியல்ல! யார் தம் வாக்குறுதியை நிறைவேற்றுகின்றார்களோ, (அல்லாஹ்வுக்கு) அஞ்சியும் நடக்கின்றார்களோ (அவர்கள் தாம் குற்றம் பிடிக்கப்பட மாட்டார்கள்). நிச்சயமாக அல்லாஹ் (தனக்கு) அஞ்சி நடப்போரை நேசிக்கின்றான்.

அவர்கள் கூறியது போலல்ல. மாறாக அது பாவமாகும். அல்லாஹ்வையும் அவனது தூதர்களையும் நம்பிக்கை கொள்வதன் மூலம் அல்லாஹ்வுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்றியவர்கள், மக்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்றி அமானிதத்தை ஒப்படைத்தவர்கள், அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி, அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சியவர்கள் ஆகியவர்களைத்தான் அல்லாஹ் நேசிக்கிறான். அவன் அவர்களுக்கு கண்ணியமான கூலியை வழங்கிடுவான்.

Aal-i-Imraan 3:76Listen in Qur'an →
77

إِنَّ ٱلَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ ٱللَّهِ وَأَيْمَٰنِهِمْ ثَمَنًۭا قَلِيلًا أُو۟لَٰٓئِكَ لَا خَلَٰقَ لَهُمْ فِى ٱلْءَاخِرَةِ وَلَا يُكَلِّمُهُمُ ٱللَّهُ وَلَا يَنظُرُ إِلَيْهِمْ يَوْمَ ٱلْقِيَٰمَةِ وَلَا يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌۭ

யார் அல்லாஹ்விடத்தில் செய்த வாக்குறுதியையும் தம் சத்தியப்பிரமாணங்களையும் அற்ப விலைக்கு விற்கிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக மறுமையில் யாதொரு நற்பாக்கியமும் இல்லை. அன்றியும், அல்லாஹ் அவர்களுடன் பேச மாட்டான்;. இன்னும் இறுதி நாளில் அவன் அவர்களை (கருணையுடன்) பார்க்கவும் மாட்டான். அவர்களைப்(பாவத்தைவிட்டுப்) பரிசுத்தமாக்கவும் மாட்டான்;. மேலும் அவர்களுக்கு நோவினைமிக்க வேதனையும் உண்டு.

தன் வேதத்தில் இறக்கியதையும், தான் அனுப்பிய தூதர்களையும் பின்பற்றுமாறு அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய அறிவுரையையும் ,அவனிடம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதாகச் செய்த சத்தியங்களையும் இவ்வுலகின் அற்ப ஆதாயத்திற்குப் பகரமாக மாற்றிவிடுபவர்களுக்கு மறுமையின் நன்மையில் எந்தப் பங்கும் இல்லை. மறுமை நாளில் அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விஷயங்களைக் கொண்டு அல்லாஹ் அவர்களிடம் பேசமாட்டான். அவர்களைக் கருணையோடு பார்க்க மாட்டான். அவர்களின் பாவம் மற்றும் நிராகரிப்பு ஆகிய அழுக்குகளிலிருந்து பரிசுத்தப்படுத்தவும் மாட்டான். அவர்களுக்கு வேதனைமிக்க தண்டனை இருக்கின்றது.

Aal-i-Imraan 3:77Listen in Qur'an →
78

وَإِنَّ مِنْهُمْ لَفَرِيقًۭا يَلْوُۥنَ أَلْسِنَتَهُم بِٱلْكِتَٰبِ لِتَحْسَبُوهُ مِنَ ٱلْكِتَٰبِ وَمَا هُوَ مِنَ ٱلْكِتَٰبِ وَيَقُولُونَ هُوَ مِنْ عِندِ ٱللَّهِ وَمَا هُوَ مِنْ عِندِ ٱللَّهِ وَيَقُولُونَ عَلَى ٱللَّهِ ٱلْكَذِبَ وَهُمْ يَعْلَمُونَ

நிச்சயமாக அவர்களில் ஒரு பிரிவார் இருக்கின்றார்கள் - அவர்கள் வேதத்தை ஓதும்போதுத் தங்கள் நாவுகளைச் சாய்த்து ஓதுகிறார்கள் - (அதனால் உண்டாகும் மாற்றங்களையும்) வேதத்தின் ஒரு பகுதிதானென்று நீங்கள் எண்ணிக் கொள்வதற்காக. ஆனால் அது வேதத்தில் உள்ளதல்ல "அது அல்லாஹ்விடம் இருந்து (வந்தது)" என்றும் அவர்கள் கூறுகிறார்கள்; ஆனால் அது அல்லாஹ்விடமிருந்து (வந்ததும்) அல்ல. இன்னும் அறிந்து கொண்டே அவர்கள் அல்லாஹ்வின் மீது பொய் கூறுகின்றார்கள்.

யூதர்களில் சிலர் தவ்ராத்தில் உள்ளதைப் படிப்பதைப் போன்று அதில் இல்லாததையும் தமது நாவுகளை வளைத்து படிக்கிறார்கள், அவர்கள் தவ்ராத்திலிருந்துதான் படிக்கிறார்கள் என்று நீங்கள் எண்ணுவதற்காக அவ்வாறு செய்கிறார்கள். ஆனால் உண்மையில் அவை தவ்ராத்தில் இல்லை. மாறாக தாங்கள் இட்டுக்கட்டிய பொய்களைத்தான் படிக்கிறார்கள். அல்லாஹ்விடமிருந்து வராததைப் படித்துவிட்டு, நாங்கள் படிப்பது அல்லாஹ் இறக்கிய வேதத்தைத்தான் என்று அவர்கள் கூறுகிறார்கள். அல்லாஹ்வின்மீதும் அவன் தூதர்கள்மீதும் பொய்யுரைக்கிறோம் என அறிந்துகொண்டே அவன் மீது பொய்கூறுகிறார்கள்.

Aal-i-Imraan 3:78Listen in Qur'an →
79

مَا كَانَ لِبَشَرٍ أَن يُؤْتِيَهُ ٱللَّهُ ٱلْكِتَٰبَ وَٱلْحُكْمَ وَٱلنُّبُوَّةَ ثُمَّ يَقُولَ لِلنَّاسِ كُونُوا۟ عِبَادًۭا لِّى مِن دُونِ ٱللَّهِ وَلَٰكِن كُونُوا۟ رَبَّٰنِيِّۦنَ بِمَا كُنتُمْ تُعَلِّمُونَ ٱلْكِتَٰبَ وَبِمَا كُنتُمْ تَدْرُسُونَ

ஒரு மனிதருக்கு அல்லாஹ் வேதத்தையும், ஞானத்தையும், நபிப் பட்டத்தையும் கொடுக்க, பின்னர் அவர் "அல்லாஹ்வை விட்டு எனக்கு அடியார்களாகி விடுங்கள்" என்று (பிற) மனிதர்களிடம் கூற இயலாது. ஆனால் அவர் (பிற மனிதரிடம்) "நீங்கள் வேதத்தைக் கற்றுக் கொடுத்துக் கொண்டும், அ(வ்வேதத்)தை நீங்கள் ஓதிக் கொண்டும் இருப்பதனால் ரப்பானீ (இறைவனை வணங்கி அவனையே சார்ந்திருப்போர்)களாகி விடுங்கள்" (என்று தான் சொல்லுவார்).

ஒரு மனிதருக்கு அல்லாஹ் வேதத்தையும், ஞானத்தையும் சரியான புரிதலையும் அளித்து அவரைத் தூதராகவும் தேர்ந்தெடுத்தபின் அவர் மக்களிடம், “நீங்கள் அல்லாஹ்வை விடுத்து எனக்கு அடிமைகளாக ஆகிவிடுங்கள்” என்று கூறமாட்டார். மாறாக அவர், “நீங்கள் மக்களுக்கு வேதத்தை கற்றுக் கொடுப்பதனாலும் அதனைக் கற்பதனாலும் அதன்படி செயல்படக்கூடிய அறிஞர்களாகவும் மக்களுக்கு வழிகாட்டிகளாகவும் சீர்திருத்தவாதிகளாகவும் ஆகிவிடுங்கள்” என்றே கூறுவார்.

Aal-i-Imraan 3:79Listen in Qur'an →
80

وَلَا يَأْمُرَكُمْ أَن تَتَّخِذُوا۟ ٱلْمَلَٰٓئِكَةَ وَٱلنَّبِيِّۦنَ أَرْبَابًا ۗ أَيَأْمُرُكُم بِٱلْكُفْرِ بَعْدَ إِذْ أَنتُم مُّسْلِمُونَ

மேலும் அவர், "மலக்குகளையும், நபிமார்களையும் (வணக்கத்திற்குரிய இரட்சகர்களாக) ரப்புகளாக எடுத்துக் கொள்ளுங்கள்" என்றும் உங்களுக்குக் கட்டளையிடமாட்டார் - நீங்கள் முஸ்லிம்களாக (அல்லாஹ்விடமே முற்றிலும் சரணடைந்தவர்கள்) ஆகிவிட்ட பின்னர் (நீங்கள் அவனை) நிராகரிப்போராகி விடுங்கள் என்று அவர் உங்களுக்குக் கட்டளையிடுவாரா?.

அதேபோன்று “அல்லாஹ்வை விடுத்து வானவர்களையும் தூதர்களையும் வணங்கப்படும் கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள்” என்றும் அவர் உங்களை ஏவுவது அவருக்குத் தகுந்ததல்ல. நீங்கள் அல்லாஹ்வுக்கு முழுமையாகக் கட்டுப்பட்ட பிறகு அவனை நிராகரிக்கும்படி உங்களை ஏவுவது ஆகுமாகுமா?

Aal-i-Imraan 3:80Listen in Qur'an →

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.