Muslim99Muslim99
← Tafsir library

3. Aal-i-Imraan

The Family of Imraan · Medinan · 200 ayahs

سُورَةُ آلِ عِمۡرَانَ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 51–60 of 200

51

إِنَّ ٱللَّهَ رَبِّى وَرَبُّكُمْ فَٱعْبُدُوهُ ۗ هَٰذَا صِرَٰطٌۭ مُّسْتَقِيمٌۭ

"நிச்சயமாக அல்லாஹ்வே என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனும் ஆவான். ஆகவே அவனையே வணங்குங்கள். இதுவே (ஸிராத்துல் முஸ்தகீம் என்னும்) நேரான விழியாகும்."

இது ஏனெனில் அல்லாஹ்தான் என் இறைவனும் உங்கள் இறைவனுமாவான். அவன்தான் கீழ்ப்படிவதற்கும் அஞ்சுவதற்கும் தகுதியானவன். எனவே அவனை மட்டுமே வணங்குங்கள். அல்லாஹ்வை வணங்குதல்,அவனை அஞ்சுதல் ஆகிய நான் உங்களுக்குக் கட்டளையிட்டவைகளே எவ்வித கோணலுமற்ற நேரான பாதையாகும்.

Aal-i-Imraan 3:51Listen in Qur'an →
52

۞ فَلَمَّآ أَحَسَّ عِيسَىٰ مِنْهُمُ ٱلْكُفْرَ قَالَ مَنْ أَنصَارِىٓ إِلَى ٱللَّهِ ۖ قَالَ ٱلْحَوَارِيُّونَ نَحْنُ أَنصَارُ ٱللَّهِ ءَامَنَّا بِٱللَّهِ وَٱشْهَدْ بِأَنَّا مُسْلِمُونَ

அவர்களில் குஃப்ரு இருப்பதை (அதாவது அவர்களில் ஒரு சாரார் தம்மை நிராகரிப்பதை) ஈஸா உணர்ந்த போது, "அல்லாஹ்வின் பாதையில் எனக்கு உதவி செய்பவர்கள் யார்?" என்று அவர் கேட்டார்; (அதற்கு அவருடைய சிஷ்யர்களான) ஹவாரிய்யூன்; "நாங்கள் அல்லாஹ்வுக்காக (உங்கள்) உதவியாளர்களாக இருக்கிறோம், நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டுள்ளோம்;. திடமாக நாங்கள் (அவனுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லீம்களாக இருக்கின்றோம், என்று நீங்கள் சாட்சி சொல்லுங்கள்" எனக் கூறினர்.

அவர்கள் நிராகரிப்பில் நிலைத்திருப்பதை ஈசா கண்டபோது இஸ்ராயீலின் மக்களிடம் கூறினார்: அல்லாஹ்வின்பால் அழைப்பதற்கு எனக்கு உதவிசெய்பவர் யார்? அவரைப் பின்பற்றியவர்களில் தூய்மையானவர்கள் கூறினார்கள், “நாங்கள் அல்லாஹ்வின் மார்க்கத்திற்கு உதவியாளர்களாக இருக்கின்றோம். நாங்கள் அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு உம்மை நாங்கள் பின்பற்றினோம். எனவே ஈசாவே! நாங்கள் அல்லாஹ்வை ஒருமைப்படுத்தி அவனுக்கு கட்டுப்பட்டவர்கள் என்பதற்கு நீரே சாட்சியாக இருப்பீராக.

Aal-i-Imraan 3:52Listen in Qur'an →
53

رَبَّنَآ ءَامَنَّا بِمَآ أَنزَلْتَ وَٱتَّبَعْنَا ٱلرَّسُولَ فَٱكْتُبْنَا مَعَ ٱلشَّٰهِدِينَ

"எங்கள் இறைவனே! நீ அருளிய (வேதத்)தை நாங்கள் நம்புகிறோம், (உன்னுடைய) இத்தூதரை நாங்கள் பின்பற்றுகிறோம்;. எனவே எங்களை (சத்தியத்திற்கு) சாட்சி சொல்வோருடன் சேர்த்து எழுதுவாயாக!" (என்று சிஷ்யர்களான ஹவாரிய்யூன் பிரார்த்தித்தனர்.)

அதேபோன்று அந்த ஹவாரியீன்கள், “எங்கள் இறைவா! நீ இறக்கிய இன்ஜீலின்மீது நாங்கள் நம்பிக்கைகொண்டு ஈசாவைப் பின்பற்றினோம். உன்மீதும் உன் தூதர்கள்மீதும் நம்பிக்கைகொண்டு சத்தியத்திற்கு சாட்சி கூறுவோருடன் எங்களையும் ஆக்குவாயாக.

Aal-i-Imraan 3:53Listen in Qur'an →
54

وَمَكَرُوا۟ وَمَكَرَ ٱللَّهُ ۖ وَٱللَّهُ خَيْرُ ٱلْمَٰكِرِينَ

(ஈஸாவை நிராகரித்தோர் அவரைக் கொல்லத்) திட்டமிட்டுச் சதி செய்தார்கள். அல்லாஹ்வும் சதி செய்தான்;. தவிர அல்லாஹ் சதி செய்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான்.

இஸ்ராயீலின் மக்களில் நிராகரித்தவர்கள் ஈசாவைக் கொலை செய்வதற்கு சூழ்ச்சி செய்தார்கள். அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்து அவர்களைத் தம் வழிகேட்டிலேயே விட்டுவிட்டான். அவன் வேறு ஒரு மனிதனை தோற்றத்தில் ஈசாவைப்போல் ஆக்கினான். அல்லாஹ் மிகச் சிறந்த சூழ்ச்சியாளன். எதிரிகளுக்கு சூழ்ச்சி செய்வதில் அவனை மிகைத்த யாரும் கிடையாது.

Aal-i-Imraan 3:54Listen in Qur'an →
55

إِذْ قَالَ ٱللَّهُ يَٰعِيسَىٰٓ إِنِّى مُتَوَفِّيكَ وَرَافِعُكَ إِلَىَّ وَمُطَهِّرُكَ مِنَ ٱلَّذِينَ كَفَرُوا۟ وَجَاعِلُ ٱلَّذِينَ ٱتَّبَعُوكَ فَوْقَ ٱلَّذِينَ كَفَرُوٓا۟ إِلَىٰ يَوْمِ ٱلْقِيَٰمَةِ ۖ ثُمَّ إِلَىَّ مَرْجِعُكُمْ فَأَحْكُمُ بَيْنَكُمْ فِيمَا كُنتُمْ فِيهِ تَخْتَلِفُونَ

"ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுவேன்;. இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக் கொள்வேன்;. நிராகரித்துக் கொண்டிருப்போருடைய (பொய்களில் நின்றும்) உம்மைத் தூய்மைப்படுத்துவேன்;. மேலும் உம்மைப் பின்பற்றுவோரை கியாம நாள் வரை நிராகரிப்போருக்கு மேலாகவும் வைப்பேன்;. பின்னர் உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது. (அப்போது) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தது பற்றி நான் உங்களிடையே தீர்ப்பளிப்பேன்" என்று அல்லாஹ் கூறியதை (நபியே! நினைவு கூர்வீராக)!

அல்லாஹ் அவர்களின் விஷயத்தில் சூழ்ச்சி செய்தான். அவன் ஈசாவிடம் கூறினான்: “ஈசாவே! மரணிக்கச் செய்யாமல் உம்மை நான் கைப்பற்றுவேன். உம் உடலையும் ஆன்மாவையும் என் பக்கம் உயர்த்துவேன். உம்மை நிராகரித்தவர்களின் அழுக்குகளிலிருந்து உம்மைத் தூய்மைப்படுத்துவேன். அவர்களை விட்டும் உம்மை தூரமாக்குவேன். முஹம்மதின்மீது நம்பிக்கை கொள்வது உட்பட சத்திய மார்க்கத்தில் உம்மைப் பின்பற்றியவர்களை உம்மை நிராகரித்தவர்களைவிட ஆதாரத்தைக் கொண்டும் கண்ணியத்தைக் கொண்டும் மறுமை நாள்வரை மேலோங்கச் செய்வேன். பின்பு மறுமையில் நீங்கள் என்னிடத்தில்தான் வரவேண்டும். அப்போது நீங்கள் கருத்துவேறுபாடுகொண்ட விஷயங்களில் உங்களிடையே சத்தியத்தைக் கொண்டு தீர்ப்பளிப்பேன்.

Aal-i-Imraan 3:55Listen in Qur'an →
56

فَأَمَّا ٱلَّذِينَ كَفَرُوا۟ فَأُعَذِّبُهُمْ عَذَابًۭا شَدِيدًۭا فِى ٱلدُّنْيَا وَٱلْءَاخِرَةِ وَمَا لَهُم مِّن نَّٰصِرِينَ

எனவே, நிராகரிப்போரை இவ்வுலகிலும், மறுமையிலும் கடினமான வேதனையைக்கொண்டு வேதனை செய்வேன்;. அவர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இருக்க மாட்டார்கள்.

உம்மையும் நீர் கொண்டுவந்த சத்தியத்தையும் நிராகரித்தவர்களை இவ்வுலகில் கொலை செய்யப்படுதல், கைதிகளாகப் பிடிக்கப்படுதல், இழிவுபடுத்தப்படுதல் போன்ற வேதனைகளைக் கொண்டும் மறுவுலகில் நரக வேதனையைக் கொண்டும் வேதனை செய்வேன். வேதனையிருந்து அவர்களைப் பாதுகாக்கக்கூடிய உதவியாளர்கள் யாரும் அவர்களுக்கு இருக்க மாட்டார்கள்.

Aal-i-Imraan 3:56Listen in Qur'an →
57

وَأَمَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ فَيُوَفِّيهِمْ أُجُورَهُمْ ۗ وَٱللَّهُ لَا يُحِبُّ ٱلظَّٰلِمِينَ

ஆனால், எவர் ஈமான் கொண்டு நற்கருமங்களும் செய்கிறார்களோ, அவர்களுக்கு நற்கூலிகளை (அல்லாஹ்) முழுமையாகக் கொடுப்பான்; அல்லாஹ் அக்கிரமம் செய்வோரை நேசிக்கமாட்டான்.

உம்மீதும் நீர் கொண்டுவந்த சத்தியத்தின்மீதும் நம்பிக்கைகொண்டு, தொழுகை, ஸகாத், நோன்பு போன்ற நற்செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு அல்லாஹ் அவர்கள் சம்பாதித்தவற்றுக்கான முழுமையான கூலியை குறைவின்றி வழங்கிடுவான். (இது முஹம்மது நபியின் தூதுத்துவத்திற்கு முன்னால் ஈசாவைப் பின்பற்றியவர்கள் தொடர்பான செய்தியாகும். அந்த ஈசாதான் முஹம்மது நபியைக் குறித்து நற்செய்தி கூறினார்) அல்லாஹ் அநியாயக்காரர்களை விரும்ப மாட்டான். மிகப் பெரிய அநியாயம், அல்லாஹ்வுக்கு இணையாக மற்றவர்களை ஆக்குவது மற்றும் அவனுடைய தூதர்களை நிராகரிப்பதாகும்.

Aal-i-Imraan 3:57Listen in Qur'an →
58

ذَٰلِكَ نَتْلُوهُ عَلَيْكَ مِنَ ٱلْءَايَٰتِ وَٱلذِّكْرِ ٱلْحَكِيمِ

(நபியே!) நாம் உம் மீது ஓதிக்காட்டிய இவை (நற்சான்றுகளைக் கொண்ட) இறை வசனங்களாகவும்;, ஞானம் நிரம்பிய நற்செய்தியாகவும் இருக்கின்றன.

நாம் உமக்கு எடுத்துரைக்கும் ஈசாவைக் குறித்த செய்திகள் உம்மீது இறக்கப்பட்ட வேதம் உண்மையென நிரூபிக்கும் தெளிவான சான்றுகளாகும். அது இறையச்சமுடையோருக்கு நினைவூட்டலாகும்; அசத்தியம் அண்டமுடியாத அளவு உறுதியானதாகும்.

Aal-i-Imraan 3:58Listen in Qur'an →
59

إِنَّ مَثَلَ عِيسَىٰ عِندَ ٱللَّهِ كَمَثَلِ ءَادَمَ ۖ خَلَقَهُۥ مِن تُرَابٍۢ ثُمَّ قَالَ لَهُۥ كُن فَيَكُونُ

அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக ஈஸாவின் உதாரணம் ஆதமின் உதாரணம் போன்றதே. அவன் அவரை மண்ணிலிருந்து படைத்துப்பின் "குன்" (ஆகுக) எனக் கூறினான்;. அவர் (மனிதர்) ஆகிவிட்டார்.

தாய்தந்தையின்றி மண்ணிலிருந்து அல்லாஹ் ஆதமைப் படைத்ததுபோன்றே ஈசாவையும் படைத்துள்ளான். அவன் அவரிடம், ‘நீ மனிதனாக ஆகிவிடு’ என்று கூறினான். அவன் நாடியது போல் ஆகிவிட்டார். ஆதம் தாயும் தந்தையுமின்றி படைக்கப்பட்டுள்ள ஆதம் மனிதரே என ஏற்றுக்கொண்டோர், தந்தையின்றி மாத்திரம் படைக்கப்பட்டதை வைத்து ‘ஈசா இறைவன்’ என்பதை எவ்வாறு வாதிட முடியும்?

Aal-i-Imraan 3:59Listen in Qur'an →
60

ٱلْحَقُّ مِن رَّبِّكَ فَلَا تَكُن مِّنَ ٱلْمُمْتَرِينَ

(நபியே! ஈஸாவைப் பற்றி) உம் இறைவனிடமிருந்து வந்ததே உண்மையாகும்;. எனவே (இதைக் குறித்து) ஐயப்படுவோரில் நீரும் ஒருவராகிடாதீர்.

ஈசாவைக்குறித்து உம் இறைவனிடமிருந்து உமக்கு இறக்கப்பட்டதே சந்தேகமற்ற உண்மையாகும். எனவே நீர் சந்தேகம் கொள்வோரில் ஒருவராகி விடாதீர். நீர் கூறுகின்ற சத்தியத்தில் உறுதியாக நிலைத்திருப்பீராக.

Aal-i-Imraan 3:60Listen in Qur'an →

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.