Muslim99Muslim99
← Tafsir library

3. Aal-i-Imraan

The Family of Imraan · Medinan · 200 ayahs

سُورَةُ آلِ عِمۡرَانَ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 1–10 of 200

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

1

الٓمٓ

அலிஃப், லாம், மீம்.

الم இவை தனித்தனியான எழுத்துகளாகும். அல்பகரா அத்தியாயத்தின் ஆரம்பத்திலும் இதேபோன்று வந்துள்ளது. இந்த அத்தியாயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது போன்ற எழுத்துக்களைக் கொண்டே அல்குர்ஆன் உருவாக்கப்பட்டுள்ளது. இது போன்ற எழுத்துக்களைக் கொண்டுதான் அரபிகளும் தமக்கு மத்தியில் உரையாடுகின்றனர். அப்படியிருந்தும் இந்த குர்ஆனைப் போன்றதைக் கொண்டு வரமுடியாத அரபிகளின் இயலாமையைச் சுட்டிக்காட்டுவதே இதன் நோக்கமாகும்.

Aal-i-Imraan 3:1Listen in Qur'an →
2

ٱللَّهُ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ ٱلْحَىُّ ٱلْقَيُّومُ

அவன் நித்திய ஜீவன்; என்றும் நிலைத்திருப்பவன்.

அல்லாஹ்தான் உண்மையாக வணக்கத்திற்குத் தகுதியானவன். அவனைத்தவிர வணங்குவதற்குத் தகுதியான வேறு யாரும் இல்லை. மரணமோ குறைகளோ அற்ற முழுமையான வாழ்க்கையைப் பெற்ற நித்திய ஜீவன். தனித்து நிற்பவன். படைப்புகள் அனைத்தையும் விட்டும் தேவையற்றவன். படைப்புகள் அனைத்தும் அவன் மூலமே உருவாகின. எல்லா சூழ்நிலைகளிலும் அவனிடம் தேவையுடையவையாக இருக்கின்றன.

Aal-i-Imraan 3:2Listen in Qur'an →
3

نَزَّلَ عَلَيْكَ ٱلْكِتَٰبَ بِٱلْحَقِّ مُصَدِّقًۭا لِّمَا بَيْنَ يَدَيْهِ وَأَنزَلَ ٱلتَّوْرَىٰةَ وَٱلْإِنجِيلَ

(நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இந்த வேதத்தைப் (படிப்படியாக) அவன் தான் உம் மீது இறக்கி வைத்தான்;. இது-இதற்கு முன்னாலுள்ள (வேதங்களை) உறுதிப்படுத்தும் தவ்ராத்தையும் இன்ஜீலையும் அவனே இறக்கி வைத்தான்.

தூதரே! உண்மையான செய்திகளையும் நீதிமிக்க சட்டங்களையும் உள்ளடக்கிய குர்ஆனை உம்மீது அவன் இறக்கியுள்ளான். அது முந்தைய இறைவேதங்களை உண்மைப்படுத்துகிறது. அவற்றிற்கிடையே எந்த முரண்பாடும் இல்லை. அவன் உம்மீது குர்ஆனை இறக்குவதற்கு முன்னால் மூசாவின்மீது தவ்ராத்தையும் ஈசாவின்மீது இன்ஜீலையும் இறக்கினான். இந்த இறைவேதங்கள் அனைத்தும் மக்களின் ஈருலக நலவுகளுக்கும் வழிகாட்டியாகும். சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்து அறிவிக்கக்கூடிய, வழிகேட்டிலிருந்து நேர்வழியைத் தெளிவுபடுத்தக்கூடியவற்றையும் அவன் இறக்கினான். அல்லாஹ் உம்மீது இறக்கிய வசனங்களை நிராகரிப்பவர்களுக்கு கடுமையான வேதனை உண்டு. அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவன். யாராலும் அவனை மிகைக்க முடியாது. தூதர்களை நிராகரித்து அவனுடைய கட்டளைக்கு மாறாகச் செயல்படக்கூடியவர்களை அவன் தண்டிக்கக்கூடியவன்.

Aal-i-Imraan 3:3Listen in Qur'an →
4

مِن قَبْلُ هُدًۭى لِّلنَّاسِ وَأَنزَلَ ٱلْفُرْقَانَ ۗ إِنَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ بِـَٔايَٰتِ ٱللَّهِ لَهُمْ عَذَابٌۭ شَدِيدٌۭ ۗ وَٱللَّهُ عَزِيزٌۭ ذُو ٱنتِقَامٍ

இதற்கு முன்னால் மனிதர்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக (நன்மை, தீமை இவற்றைப் பிரித்தறிவிக்கும் ஃபுர்க்கா(ன் என்னும் குர்ஆ)னையும் இறக்கி வைத்தான். ஆகவே, எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரிக்கின்றார்களோ, அவர்களுக்கு நிச்சயமாகக் கடும் தண்டனையுண்டு. அல்லாஹ் யாவரையும் மிகைத்தோனாகவும், (தீயோரைப்) பழி வாங்குபவனாகவும் இருக்கின்றான்.

தூதரே! உண்மையான செய்திகளையும் நீதிமிக்க சட்டங்களையும் உள்ளடக்கிய குர்ஆனை உம்மீது அவன் இறக்கியுள்ளான். அது முந்தைய இறைவேதங்களை உண்மைப்படுத்துகிறது. அவற்றிற்கிடையே எந்த முரண்பாடும் இல்லை. அவன் உம்மீது குர்ஆனை இறக்குவதற்கு முன்னால் மூசாவின்மீது தவ்ராத்தையும் ஈசாவின்மீது இன்ஜீலையும் இறக்கினான். இந்த இறைவேதங்கள் அனைத்தும் மக்களின் ஈருலக நலவுகளுக்கும் வழிகாட்டியாகும். சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்து அறிவிக்கக்கூடிய, வழிகேட்டிலிருந்து நேர்வழியைத் தெளிவுபடுத்தக்கூடியவற்றையும் அவன் இறக்கினான். அல்லாஹ் உம்மீது இறக்கிய வசனங்களை நிராகரிப்பவர்களுக்கு கடுமையான வேதனை உண்டு. அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவன். யாராலும் அவனை மிகைக்க முடியாது. தூதர்களை நிராகரித்து அவனுடைய கட்டளைக்கு மாறாகச் செயல்படக்கூடியவர்களை அவன் தண்டிக்கக்கூடியவன்.

Aal-i-Imraan 3:4Listen in Qur'an →
5

إِنَّ ٱللَّهَ لَا يَخْفَىٰ عَلَيْهِ شَىْءٌۭ فِى ٱلْأَرْضِ وَلَا فِى ٱلسَّمَآءِ

வானத்திலோ, பூமியிலோ உள்ள எப்பொருளும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கு மறைந்திருக்கவில்லை.

வானத்திலோ பூமியிலோ அல்லாஹ்வுக்கு எதுவும் மறைவாக இல்லை. அவன் ஒவ்வொரு பொருளினதும் உள்ரங்கம் வெளிரங்கம் அனைத்தையும் முழுமையாக அறிந்துள்ளான்.

Aal-i-Imraan 3:5Listen in Qur'an →
6

هُوَ ٱلَّذِى يُصَوِّرُكُمْ فِى ٱلْأَرْحَامِ كَيْفَ يَشَآءُ ۚ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ

அவன் தான் கர்ப்பக் கோளறைகளில் தான் நாடியபடி உங்களை உருவாக்குகின்றான்;. அவனைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறில்லை. அவன் யாவரையும் மிகைத்தோனாகவும், விவேகம் மிக்கோனாகவும் இருக்கின்றான்.

அவனே உங்கள் அன்னையரின் வயிற்றில் தான் நாடியவாறு ஆணாகவோ பெண்ணாகவோ, அழகாகவோ அசிங்கமாகவோ, வெள்ளையாகவோ கருப்பாகவோ பல தோற்றங்களிலும் உங்களை வடிவமைக்கிறான். அவனைத்தவிர உண்மையாக வணக்கத்திற்குரிய வேறு இறைவன் இல்லை. அவன் யாவற்றையும் மிகைத்தவன். எதுவும் அவனை மிகைத்துவிட முடியாது. படைப்புகள் விஷயத்தில் தான் வழங்கும் சட்டங்களில், கட்டளைகளில் அவன் ஞானம்மிக்கவன்.

Aal-i-Imraan 3:6Listen in Qur'an →
7

هُوَ ٱلَّذِىٓ أَنزَلَ عَلَيْكَ ٱلْكِتَٰبَ مِنْهُ ءَايَٰتٌۭ مُّحْكَمَٰتٌ هُنَّ أُمُّ ٱلْكِتَٰبِ وَأُخَرُ مُتَشَٰبِهَٰتٌۭ ۖ فَأَمَّا ٱلَّذِينَ فِى قُلُوبِهِمْ زَيْغٌۭ فَيَتَّبِعُونَ مَا تَشَٰبَهَ مِنْهُ ٱبْتِغَآءَ ٱلْفِتْنَةِ وَٱبْتِغَآءَ تَأْوِيلِهِۦ ۗ وَمَا يَعْلَمُ تَأْوِيلَهُۥٓ إِلَّا ٱللَّهُ ۗ وَٱلرَّٰسِخُونَ فِى ٱلْعِلْمِ يَقُولُونَ ءَامَنَّا بِهِۦ كُلٌّۭ مِّنْ عِندِ رَبِّنَا ۗ وَمَا يَذَّكَّرُ إِلَّآ أُو۟لُوا۟ ٱلْأَلْبَٰبِ

அவன்தான் (இவ்) வேதத்தை உம்மீது இறக்கினான். இதில் விளக்கமான வசனங்களும் இருக்கின்றன. இவைதான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மற்றவை (பல அந்தரங்கங்களைக் கொண்ட) முதஷாபிஹாத் (என்னும் ஆயத்துகள்) ஆகும். எனினும் எவர்களுடைய உள்ளங்களில் வழிகேடு இருக்கிறதோ அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக முதஷாபிஹ் வசனங்களின் விளக்கத்தைத் தேடி அதனைப் பின்பற்றுகின்றனர். அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அதன் உண்மையான விளக்கத்தை அறியமாட்டார்கள். கல்வியில் உறுதிப்பாடு உடையவர்கள் அவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைதான். நாங்கள் அதை நம்பிக்கை கொள்கிறோம், என்று அவர்கள் கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர மற்றவர்கள் இதைக்கொண்டு நல்லுபதேசம் பெறமாட்டார்கள்.

தூதரே! அவன்தான் குர்ஆனை உம்மீது இறக்கினான். அதில் சந்தேகமற்ற தெளிவான வசனங்களும் இருக்கின்றன. அவைதான் வேதத்தின் அடிப்படையும் பெரும்பான்மையுமாகும்; கருத்துவேறுபாட்டைத் தீர்க்கும் அளவுகோளாகும். அதில் பலபொருள்தரக்கூடிய வசனங்களும் இருக்கின்றன. மக்களில் பெரும்பாலோர் அவற்றின் பொருள் மயக்கமாகக் காணப்படும். சத்தியத்தை விட்டுவிலகுபவர்கள் தெளிவான வசனங்களை விட்டுவிட்டு இவ்வகையான வசனங்களைப் பற்றிப் பிடித்துக் கொள்கிறார்கள். இதன்மூலம் அவர்கள் மக்களிடம் சந்தேகத்தை உண்டுபண்ணி அவர்களை வழிகெடுக்க நாடுகிறார்கள். இதன்மூலம் தங்களின் மனஇச்சைக்கேற்ப, தங்களின் வழிகெட்ட சிந்தனைப் பள்ளிக்கேற்ப விளக்கமளிக்க விரும்புகிறார்கள். இந்த வசனங்களின் உண்மையான பொருளை, விளக்கத்தை அல்லாஹ்வைத்தவிர யாரும் அறிய மாட்டார்கள். உறுதியான கல்வியைப் பெற்றவர்கள் கூறுவார்கள்: “நாங்கள் குர்ஆனிலுள்ள அனைத்தின்மீதும் நம்பிக்கைகொண்டோம். ஏனெனில் அது முழுக்க முழுக்க எங்கள் இறைவனிடமிருந்து வந்ததாகும்.” மேலும் அவர்கள் தெளிவான வசனங்களைக் கொண்டு கருத்து மயக்குமள்ள வசனங்களுக்கு விளக்கமளிப்பார்கள். அறிவுடையோர்தாம் அறிவுரையை ஏற்றுக்கொள்வர்.

Aal-i-Imraan 3:7Listen in Qur'an →
8

رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً ۚ إِنَّكَ أَنتَ ٱلْوَهَّابُ

"எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்!" (என்று அவர்கள் பிரார்த்தனை செய்வார்கள்.)

உறுதியான கல்வியைப் பெற்ற அவர்கள் கூறுவார்கள்: “எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர்வழிகாட்டிய பிறகு எங்கள் உள்ளங்களை சத்தியத்தை விட்டும் தடுமாறச் செய்துவிடாதே. சத்தியத்தை விட்டும் பிறழ்ந்த வழிகேடர்களுக்கு ஏற்பட்டதிலிருந்து எங்களைப் பாதுகாப்பாயாக! எங்கள் உள்ளத்திற்கு நேரான வழியைக்காட்டக்கூடிய, வழிகேட்டிலிருந்து எங்களைப் பாதுகாக்கக்கூடிய உன் அருளை எங்களுக்குத் தந்தருள்வாயாக. எங்கள் இறைவா! நிச்சயமாக நீ தாராளமாக வழங்கக்கூடியவன்.”

Aal-i-Imraan 3:8Listen in Qur'an →
9

رَبَّنَآ إِنَّكَ جَامِعُ ٱلنَّاسِ لِيَوْمٍۢ لَّا رَيْبَ فِيهِ ۚ إِنَّ ٱللَّهَ لَا يُخْلِفُ ٱلْمِيعَادَ

"எங்கள் இறைவா! நிச்சயமாக நீ மனிதர்களையெல்லாம் எந்த சந்தேகமுமில்லாத ஒரு நாளில் ஒன்று சேர்ப்பவனாக இருக்கின்றாய். நிச்சயமாக அல்லாஹ் வாக்குறுதி மீற மாட்டான்" (என்றும் அவர்கள் பிரார்த்திப்பார்கள்).

“எங்கள் இறைவா! நீ மக்கள் அனைவரையும் சந்தேகமற்ற ஒருநாளில் விசாரணை செய்வதற்காக ஒன்றுதிரட்டக்கூடியவனாக இருக்கின்றாய். அந்த நாள் நிச்சயமாக வரக்கூடியது. எங்கள் இறைவா! நீ ஒருபோதும் வாக்குறுதி மீறமாட்டாய்.”

Aal-i-Imraan 3:9Listen in Qur'an →
10

إِنَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ لَن تُغْنِىَ عَنْهُمْ أَمْوَٰلُهُمْ وَلَآ أَوْلَٰدُهُم مِّنَ ٱللَّهِ شَيْـًۭٔا ۖ وَأُو۟لَٰٓئِكَ هُمْ وَقُودُ ٱلنَّارِ

நிராகரிப்போர்களுக்கு அவர்களுடைய செல்வங்களும், குழந்தைகளும் அல்லாஹ்வி(ன் தண்டனையி)லிருந்து எதையும் நிச்சயமாக தடுக்கமாட்டாது. இன்னும் அவர்கள்தாம் (நரக) நெருப்பின் எரிபொருள்களாக இருக்கின்றனர்.

அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் நிராகரித்தவர்களை இவ்வுலகத்திலும் மறுவுலகத்திலும் அவர்களின் செல்வங்களோ பிள்ளைகளோ அல்லாஹ்வின் வேதனையை விட்டும் காப்பாற்றிவிடாது. இந்தப் பண்புகளை உடையவர்கள்தாம் மறுமைநாளில் எரிக்கப்படும் நரகத்தின் எரிபொருள்களாவர்.

Aal-i-Imraan 3:10Listen in Qur'an →

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.