Muslim99Muslim99
← Tafsir library

3. Aal-i-Imraan

The Family of Imraan · Medinan · 200 ayahs

سُورَةُ آلِ عِمۡرَانَ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 31–40 of 200

31

قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ ٱللَّهَ فَٱتَّبِعُونِى يُحْبِبْكُمُ ٱللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ ۗ وَٱللَّهُ غَفُورٌۭ رَّحِيمٌۭ

(நபியே!) நீர் கூறும்; "நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின் பற்றுங்கள்;. அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான்.

தூதரே! நீர் கூறுவீராக: “நீங்கள் உண்மையாகவே அல்லாஹ்வை நேசித்தால் நான் கொண்டு வந்ததை உள்ளும் புறமும் பின்பற்றுங்கள். நீங்கள் அல்லாஹ்வின் நேசத்தைப் பெறுவீர்கள். அவன் உங்கள் பாவங்களையும் மன்னிப்பான். தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் தன் அடியார்களை அல்லாஹ் மன்னிக்கக்கூடியவன். அவர்கள் விஷயத்தில் அவன் மிகுந்த கருணையாளனாக இருக்கின்றான்.

Aal-i-Imraan 3:31Listen in Qur'an →
32

قُلْ أَطِيعُوا۟ ٱللَّهَ وَٱلرَّسُولَ ۖ فَإِن تَوَلَّوْا۟ فَإِنَّ ٱللَّهَ لَا يُحِبُّ ٱلْكَٰفِرِينَ

(நபியே! இன்னும்) நீர் கூறும்; "அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் வழிப்படுங்கள்." ஆனால் அவர்கள் புறக்கணித்துத் திரும்பி விடுவார்களானால் - நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை நேசிப்பதில்லை.

தூதரே நீர் கூறுவீராக: “அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுங்கள். நீங்கள் இதனைப் புறக்கணித்தால், நிச்சயமாக அல்லாஹ் தன் கட்டளைக்கும், தன் தூதரின் கட்டளைக்கும் மாறாகச் செயல்படும் நிராகரிப்பாளர்களை அவன் விரும்ப மாட்டான்.

Aal-i-Imraan 3:32Listen in Qur'an →
33

۞ إِنَّ ٱللَّهَ ٱصْطَفَىٰٓ ءَادَمَ وَنُوحًۭا وَءَالَ إِبْرَٰهِيمَ وَءَالَ عِمْرَٰنَ عَلَى ٱلْعَٰلَمِينَ

ஆதமையும், நூஹையும், இப்றாஹீமின் சந்ததியரையும், இம்ரானின் சந்ததியரையும் நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தாரை விட மேலாக தேர்ந்தெடுத்தான்.

அல்லாஹ் ஆதமைத் தேர்ந்தெடுத்து, வானவர்களை அவருக்குச் சிரம்பணியுமாறு செய்தான். நூஹைத் தேர்ந்தேடுத்து, பூமியில் அனுப்பப்படும் முதல் தூதராக ஆக்கினான். இப்ராஹீமின் குடும்பத்தினரையும் தேர்ந்தெடுத்தான். அவரது சந்ததிகளில் தூதுத்துவத்தை நிலைக்கச் செய்தான். இம்ரானின் குடும்பத்தினரையும் தேர்ந்தெடுத்தான். அல்லாஹ் இவர்கள் அனைவரையும் தேர்ந்தெடுத்து அவர்கள் வாழ்ந்த காலகட்டத்தின் மேன்மக்களாக ஆக்கினான்.

Aal-i-Imraan 3:33Listen in Qur'an →
34

ذُرِّيَّةًۢ بَعْضُهَا مِنۢ بَعْضٍۢ ۗ وَٱللَّهُ سَمِيعٌ عَلِيمٌ

(அவர்களில்) ஒருவர் மற்றவரின் சந்ததியாவார் - மேலும், அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.

மேலேகூறப்பட்ட தூதர்களும் அவர்களின் வழியைப் பின்பற்றிய அவர்களின் சந்ததிகளும் அல்லாஹ் ஒருவனை வணங்குவதில், நற்செயல்கள் புரிவதில் ஒருவர் மற்றவரைச் சார்ந்தவர்கள்தாம். அவர்கள் நற்குணத்தையும் சிறப்புகளையும் ஒருவர் மற்றவரிடமிருந்து பெற்றார்கள். அல்லாஹ் தன் அடியார்கள் பேசுவதை செவியேற்கக்கூடியவன்; அவர்கள் செய்யக்கூடியவற்றை நன்கறிந்தவன். அதனால் தான் அவர்களில் தான் நாடியோரைத் தேர்ந்தெடுக்கிறான்.

Aal-i-Imraan 3:34Listen in Qur'an →
35

إِذْ قَالَتِ ٱمْرَأَتُ عِمْرَٰنَ رَبِّ إِنِّى نَذَرْتُ لَكَ مَا فِى بَطْنِى مُحَرَّرًۭا فَتَقَبَّلْ مِنِّىٓ ۖ إِنَّكَ أَنتَ ٱلسَّمِيعُ ٱلْعَلِيمُ

இம்ரானின் மனைவி; "என் இரைவனே! என் கர்ப்பத்திலுள்ளதை உனக்கு முற்றிலும் அர்ப்பணிக்க நான் நிச்சயமாக நேர்ந்து கொள்கிறேன்;. எனவே (இதை) என்னிடமிருந்து நீ ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீ யாவற்றையும் செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றாய்" என்று கூறியதையும்.

தூதரே! பின்வரும் சம்பவத்தை நினைவுகூருங்கள்: மர்யமின் தாயாகிய இம்ரானின் மனைவி கூறினார்: “என் இறைவா, வேறு எதுவும் செய்யாது உனக்கும் உன்வீட்டிற்கும் பணிவிடைசெய்வதற்காகவே என் வயிற்றிலுள்ள சிசுவை உனக்காக நான் நேர்ச்சை செய்துள்ளேன். எனவே என்னிடமிருந்து எனது இந்தச் செயலை ஏற்றுக் கொள்வாயாக.” நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவியேற்கக்கூடியவன்; என் எண்ணத்தை நன்கறிந்தவன்.

Aal-i-Imraan 3:35Listen in Qur'an →
36

فَلَمَّا وَضَعَتْهَا قَالَتْ رَبِّ إِنِّى وَضَعْتُهَآ أُنثَىٰ وَٱللَّهُ أَعْلَمُ بِمَا وَضَعَتْ وَلَيْسَ ٱلذَّكَرُ كَٱلْأُنثَىٰ ۖ وَإِنِّى سَمَّيْتُهَا مَرْيَمَ وَإِنِّىٓ أُعِيذُهَا بِكَ وَذُرِّيَّتَهَا مِنَ ٱلشَّيْطَٰنِ ٱلرَّجِيمِ

(பின், தான் எதிர்பார்த்ததற்கு மாறாக) அவள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றதும்; "என் இறைவனே! நான் ஒரு பெண்ணையே பெற்றிருக்கின்றேன்" எனக் கூறியதையும் நினைவு கூறுங்கள்;. அவள் பெற்றெடுத்ததை அல்லாஹ் நன்கறிவான்;. ஆண், பெண்ணைப் போலல்ல. (மேலும் அந்தத்தாய் சொன்னாள்;) "அவளுக்கு மர்யம் என்று பெயரிட்டுள்ளேன்;. இன்னும் அவளையும், அவள் சந்ததியையும் விரட்டப்பட்ட ஷைத்தானி(ன் தீங்குகளி)லிருந்து காப்பாற்றத் திடமாக உன்னிடம் காவல் தேடுகின்றேன்.

கர்ப்ப காலம் நிறைவடைந்தபோது அவள் தன் வயிற்றிலுள்ளதைப் பெற்றெடுத்தாள் - அவள் ஆண்குழந்தையை எதிர்பார்த்திருந்தாள் - அப்போது அவள், “என் இறைவா! நான் பெண்குழந்தையைப் பெற்றெடுத்து விட்டேனே!” என்றாள். அவள் என்ன குழந்தையைப் பெற்றெடுத்தால் என்பதை அல்லாஹ் மிக அறிந்தவன். எதிர்பார்த்த ஆண் ஆற்றலிலும் தோற்றத்திலும் அவர்களுக்குக் கிடைத்த பெண்ணைப் போலல்ல. “நான் அதற்கு மர்யம் என்று பெயர் சூட்டினேன். உன் அருளை விட்டும் விரட்டப்பட்ட ஷைத்தானிடமிருந்து நான் இந்த குழந்தைக்கும் இந்த குழந்தையின் சந்ததிகளுக்கும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்” என்றும் அவள் கூறினாள்.

Aal-i-Imraan 3:36Listen in Qur'an →
37

فَتَقَبَّلَهَا رَبُّهَا بِقَبُولٍ حَسَنٍۢ وَأَنۢبَتَهَا نَبَاتًا حَسَنًۭا وَكَفَّلَهَا زَكَرِيَّا ۖ كُلَّمَا دَخَلَ عَلَيْهَا زَكَرِيَّا ٱلْمِحْرَابَ وَجَدَ عِندَهَا رِزْقًۭا ۖ قَالَ يَٰمَرْيَمُ أَنَّىٰ لَكِ هَٰذَا ۖ قَالَتْ هُوَ مِنْ عِندِ ٱللَّهِ ۖ إِنَّ ٱللَّهَ يَرْزُقُ مَن يَشَآءُ بِغَيْرِ حِسَابٍ

அவளுடைய இறைவன் அவள் பிரார்த்தனையை அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான்;. அக்குழந்தையை அழகாக வளர்த்திடச் செய்தான்;. அதனை வளர்க்கும் பொறுப்பை ஜகரிய்யா ஏற்றுக்கொள்ளும்படி செய்தான். ஜகரிய்யா அவள் இருந்த மிஹ்ராபுக்குள் (தொழும் அறைக்குப்) போகும் போதெல்லாம், அவளிடம் உணவு இருப்பதைக் கண்டார், "மர்யமே! இ(வ்வுணவான)து உனக்கு எங்கிருந்து வந்தது?" என்று அவர் கேட்டார்; "இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது - நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றி உணவளிக்கின்றான்" என்று அவள்(பதில்) கூறினாள்.

அவளது நேர்ச்சையை அல்லாஹ் அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான். அந்தக் குழந்தையை நல்லமுறையில் வளரச் செய்தான். அவனது நல்லடியார்களின் உள்ளங்களை அந்தக் குழந்தை மீது அன்புகொள்ளச்செய்தான். மர்யமுக்கு ஸகரிய்யாவை பொறுப்பாளராக்கினான். ஸகரிய்யா மர்யமின் தொழுமிடத்திற்குச் செல்லும்போதெல்லாம் அங்கு தூய்மையான உணவைக் காண்பார். அவளிடம் கேட்பார், “மர்யமே இந்த உணவு உனக்கு எங்கிருந்து கிடைத்தது?” அதற்கு மர்யம் கூறுவாள், “இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்த உணவாகும். அவன் தான் நாடியவர்களுக்கு கணக்கின்றி தாராளமாக வழங்குகிறான்.

Aal-i-Imraan 3:37Listen in Qur'an →
38

هُنَالِكَ دَعَا زَكَرِيَّا رَبَّهُۥ ۖ قَالَ رَبِّ هَبْ لِى مِن لَّدُنكَ ذُرِّيَّةًۭ طَيِّبَةً ۖ إِنَّكَ سَمِيعُ ٱلدُّعَآءِ

அந்த இடத்திலேயே ஜகரிய்யா தம் இறைவனிடம் பிரார்த்தனை செய்தவராகக் கூறினார்; "இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய்."

வழக்கத்திற்கு மாறாக அல்லாஹ் மர்யமுக்கு உணவளித்ததைக் கண்ட ஸகரிய்யா அவன் தனக்கும் - இந்த தள்ளாத வயதிலும், மனைவி மலடியாக இருந்தபோதும் - ஒரு குழந்தையை வழங்குவான் என்று நம்பிக்கை வைத்தார். “என் இறைவனே! தூய்மையான ஒரு ஆண்மகனை எனக்குத் தந்தருள்வாயாக. நிச்சயமாக நீ உன்னிடம் பிரார்த்திப்பவர்களின் பிரார்த்தனையை செவியேற்கக்கூடியவன்; அவர்களின் நிலையை நன்கறிந்தவன்” என்று பிரார்த்தனை செய்தார்.

Aal-i-Imraan 3:38Listen in Qur'an →
39

فَنَادَتْهُ ٱلْمَلَٰٓئِكَةُ وَهُوَ قَآئِمٌۭ يُصَلِّى فِى ٱلْمِحْرَابِ أَنَّ ٱللَّهَ يُبَشِّرُكَ بِيَحْيَىٰ مُصَدِّقًۢا بِكَلِمَةٍۢ مِّنَ ٱللَّهِ وَسَيِّدًۭا وَحَصُورًۭا وَنَبِيًّۭا مِّنَ ٱلصَّٰلِحِينَ

அவர் தம் அறையில் நின்று தொழுது கொண்டிருந்தபோது, மலக்குகள் அவரை சப்தமாக அழைத்து "நிச்சயமாக அல்லாஹ் யஹ்யா (எனும் பெயருள்ள மகவு குறித்து) நன்மாராயங் கூறுகின்றான்;. அவர் அல்லாஹ்விடமிருந்து ஒரு வார்த்தையை மெய்ப்பிப்பவராகவும், கண்ணியமுடையவராகவும், ஒழுக்க நெறி பேணிய (தூய)வராகவும், நல்லோர்களிலிருந்தே நபியாகவும் இருப்பார்" எனக் கூறினர்.

அவர் தமது தொழுகைமாடத்திலே நின்று வணங்கிக் கொண்டிருந்தபோது வானவர்கள் அவரை அழைத்து, “அல்லாஹ் உமக்கு ஒரு ஆண்குழந்தையைக் கொண்டு நற்செய்தி கூறுகிறான். அவரது பெயர் ‘யஹ்யா’வாகும். அவர் அல்லாஹ்வின் வார்த்தையை உண்மைப்படுத்தக்கூடியவராக இருப்பார். (அல்லாஹ்வின் வார்த்தையால் பிரத்யேகமான முறையில் படைக்கப்பட்ட ஈஸா அலை அவர்களையே இது குறிக்கின்றது) யஹ்யா கல்வியிலும் வணக்க வழிபாட்டிலும் தம் சமூக மக்களுக்குத் தலைவராக இருப்பார்; பெண்களை விட்டும் விலகியவராக, தம் இச்சைகளைக் கட்டுப்படுத்திக் கொண்டவராக, இறைவழிபாட்டில் தம்மை முழுமையாக அர்ப்பணித்தவராக இருப்பார். நல்லோர்களில் உள்ள தூதராகவும் இருப்பார்.

Aal-i-Imraan 3:39Listen in Qur'an →
40

قَالَ رَبِّ أَنَّىٰ يَكُونُ لِى غُلَٰمٌۭ وَقَدْ بَلَغَنِىَ ٱلْكِبَرُ وَٱمْرَأَتِى عَاقِرٌۭ ۖ قَالَ كَذَٰلِكَ ٱللَّهُ يَفْعَلُ مَا يَشَآءُ

அவர் கூறினார்; "என் இறைவனே! எனக்கு எப்படி மகன் ஒருவன் உண்டாக முடியும்? எனக்கு வயது அதிகமாகி (முதுமை வந்து) விட்டது. என் மனைவியும் மலடாக இருக்கின்றாள்;" அதற்கு (இறைவன்), "அவ்வாறே நடக்கும்;, அல்லாஹ் தான் நாடியதைச் செய்து முடிக்கின்றான்" என்று கூறினான்.

வானவர்களின் நற்செய்தியைக் கேட்ட ஸகரிய்யா, “என் இறைவா! எனக்கு எவ்வாறு குழந்தை பிறக்கும்? நானோ தள்ளாத வயதை அடைந்துவிட்டேன். என் மனைவியே பிள்ளைபெறாத மலடியாக இருக்கிறாளே!? என்று ஆச்சரியமாகக் கேட்டார். அதற்கு அல்லாஹ் கூறினான்: உங்களது தள்ளாத வயதிலும், மலடியான மனைவிலும் யஹ்யாவை பிறக்கச்செய்வதற்கு உதாரணம் வழக்கத்திற்கு மாறாக தான் நாடியவற்றைப் படைப்பதாகும். ஏனெனில் அவன் ஒவ்வொரு பொருளின்மீதும் பேராற்றலுடையவன். தனது ஞானத்திற்கும் அறிவுக்கும் ஏற்றவாறு நாடியதைச் செய்கிறான்.

Aal-i-Imraan 3:40Listen in Qur'an →

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.