Muslim99Muslim99
← Tafsir library

3. Aal-i-Imraan

The Family of Imraan · Medinan · 200 ayahs

سُورَةُ آلِ عِمۡرَانَ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 11–20 of 200

11

كَدَأْبِ ءَالِ فِرْعَوْنَ وَٱلَّذِينَ مِن قَبْلِهِمْ ۚ كَذَّبُوا۟ بِـَٔايَٰتِنَا فَأَخَذَهُمُ ٱللَّهُ بِذُنُوبِهِمْ ۗ وَٱللَّهُ شَدِيدُ ٱلْعِقَابِ

(இவர்களுடைய நிலை) ஃபிர்அவ்னின் கூட்டத்தாரையும், இன்னும் அவர்களுக்கு முன்னால் இருந்தோரையும் போன்றே இருக்கிறது. அவர்கள் நம் அத்தாட்சிகளைப் பொய்யாக்கினர்;. ஆகவே அவர்களை, அவர்களுடைய பாவங்களின் காரணமாகக் (கடுந்தண்டனையில்) அல்லாஹ் பிடித்துக் கொண்டான் - அல்லாஹ் வேதனை கொடுப்பதில் மிகக் கடுமையானவன்.

இவர்கள், அல்லாஹ்வை நிராகரித்து, அவனுடைய சான்றுகளைப் பொய் எனக்கூறிய ஃபிர்அவ்னின் சமூகம் மற்றும் அவர்களுக்கு முன்னுள்ளவர்களைப் போன்றவர்கள். அவர்களின் பாவங்களின் காரணமாக அல்லாஹ் அவர்களைத் தண்டித்தான். அவர்களின் செல்வங்களோ பிள்ளைகளோ அவர்களுக்கு எந்தப் பயனையும் அளிக்கவில்லை. தன்னை நிராகரித்து, தன் சான்றுகளைப் பொய் எனக் கூறக்கூடியவர்களை அல்லாஹ் கடுமையாகத் தண்டிக்கக்கூடியவன்.

Aal-i-Imraan 3:11Listen in Qur'an →
12

قُل لِّلَّذِينَ كَفَرُوا۟ سَتُغْلَبُونَ وَتُحْشَرُونَ إِلَىٰ جَهَنَّمَ ۚ وَبِئْسَ ٱلْمِهَادُ

நிராகரிப்போரிடம் (நபியே!) நீர் கூறுவீராக: "வெகு விரைவில் நீங்கள் தோல்வியடைவீர்கள். அன்றியும் (மறுமையில்) நரகத்தில் சேர்க்கப்படுவீர்கள். இன்னும், (நரகமான அவ்விரிப்பு) கெட்ட படுக்கையாகும்"

தூதரே! பலதரப்பட்ட மதங்களில் உள்ள நிராகரிப்பாளர்களிடம் கூறுவீராக: “நம்பிக்கையாளர்கள் உங்களை மிகைத்துவிடுவார்கள். நீங்கள் நிராகரித்த நிலையிலேயே இறந்தும் விடுவீர்கள். அல்லாஹ் நரக நெருப்பில் உங்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டுவான். அது உங்களுக்கு மோசமான தங்குமிடமாகும்.”

Aal-i-Imraan 3:12Listen in Qur'an →
13

قَدْ كَانَ لَكُمْ ءَايَةٌۭ فِى فِئَتَيْنِ ٱلْتَقَتَا ۖ فِئَةٌۭ تُقَٰتِلُ فِى سَبِيلِ ٱللَّهِ وَأُخْرَىٰ كَافِرَةٌۭ يَرَوْنَهُم مِّثْلَيْهِمْ رَأْىَ ٱلْعَيْنِ ۚ وَٱللَّهُ يُؤَيِّدُ بِنَصْرِهِۦ مَن يَشَآءُ ۗ إِنَّ فِى ذَٰلِكَ لَعِبْرَةًۭ لِّأُو۟لِى ٱلْأَبْصَٰرِ

(பத்ரு களத்தில்) சந்தித்த இரு சேனைகளிலும் உங்களுக்கு ஓர் அத்தாட்சி நிச்சயமாக உள்ளது. ஒரு சேனை அல்லாஹ்வின் பாதையில் போரிட்டது. பிறிதொன்று காஃபிர்களாக இருந்தது. நிராகரிப்போர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரைத் தங்களைப்போல் இரு மடங்காகத் தம் கண்களால் கண்டனர்;. இன்னும், அல்லாஹ் தான் நாடியவர்களுக்குத் தன் உதவியைக் கொண்டு பலப்படுத்துகிறான்;. நிச்சயமாக, (அகப்) பார்வையுடையோருக்கு இதில் திடனாக ஒரு படிப்பினை இருக்கிறது.

பத்ருப்போரில் மோதிக்கொண்ட இரு பிரிவினரிடமும் உங்களுக்கு படிப்பினைகளும் சான்றுகளும் இருக்கின்றன. ஒரு பிரிவினர் அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்ட அவனுடைய தூதரும் அவருடைய தோழர்களுமாவார். அவர்கள் அல்லாஹ்வின் வாக்கை மேலோங்கச் செய்வதற்காகவும் நிராகரித்தோரின் வாக்கை தாழ்த்துவதற்காகவும் அவனுடைய பாதையில் போரிட்டார்கள். மற்றொரு பிரிவினர் அவனை நிராகரித்த மக்காவாசிகளாவர். கர்வத்திற்காகவும் வெளிப்பகட்டிற்காகவும் குலப்பெருமைக்காகவும் அவர்கள் புறப்பட்டுவந்தார்கள். அவர்களை நம்பிக்கையாளர்கள் தம்மைவிட இருமடங்காகக் கண்டார்கள். அல்லாஹ் தன் நேசர்களுக்கு உதவிசெய்தான். அவன் தான் நாடியோரை தன் உதவியால் வலுப்படுத்துகிறான். அகப்பார்வையுடையவர்களுக்கு இதில் படிப்பினைகளும் அறிவுரைகளும் இருக்கின்றன. நம்பிக்கையாளர்கள் குறைவாக இருந்தாலும் அவர்கள்தாம் அல்லாஹ்வின் உதவியைப் பெறுவார்கள். அசத்தியவாதிகள் அதிகமாக இருந்தாலும் அவர்கள் தோல்வியையே பெறுவார்கள். என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள்.

Aal-i-Imraan 3:13Listen in Qur'an →
14

زُيِّنَ لِلنَّاسِ حُبُّ ٱلشَّهَوَٰتِ مِنَ ٱلنِّسَآءِ وَٱلْبَنِينَ وَٱلْقَنَٰطِيرِ ٱلْمُقَنطَرَةِ مِنَ ٱلذَّهَبِ وَٱلْفِضَّةِ وَٱلْخَيْلِ ٱلْمُسَوَّمَةِ وَٱلْأَنْعَٰمِ وَٱلْحَرْثِ ۗ ذَٰلِكَ مَتَٰعُ ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا ۖ وَٱللَّهُ عِندَهُۥ حُسْنُ ٱلْمَـَٔابِ

பெண்கள், ஆண் மக்கள்; பொன்னிலும், வெள்ளியிலுமான பெருங்குவியல்கள்; அடையாளமிடப்பட்; ட (உயர்ந்த) குதிரைகள்; (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால் நடைகள், சாகுபடி நிலங்கள் ஆகியவற்றின் மீதுள்ள இச்சை மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டிருக்கிறது. இவை(யெல்லாம் நிலையற்ற) உலக வாழ்வின் சுகப்பொருள்களாகும்;. அல்லாஹ்விடத்திலோ அழகான தங்குமிடம் உண்டு.

மக்களை சோதிக்கும்பொருட்டு இவ்வுலக இன்பங்களை விரும்புவதை அவர்களுக்கு அழகாகக் காட்டியுள்ளதாக அல்லாஹ் கூறுகிறான். உதாரணமாக, பெண்கள், ஆண்பிள்ளைகள், தங்கம் மற்றும் வெள்ளியின் குவியல்கள், அழகிய அடையாளமிடப்பட்ட குதிரைகள், ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற கால்நடைகள், விளைநிலங்கள். ஆயினும் இவையனைத்தும் சில காலம் அனுபவித்த பின் அழியக்கூடிய இவ்வுலக இன்பங்கள்தாம். இவற்றின்மீது மோகம்கொள்வது நம்பிக்கையாளனுக்கு உகந்ததல்ல. அல்லாஹ்விடமே சுவனம் என்னும் அழகிய திரும்புமிடம் இருக்கின்றது. அது வானங்கள் பூமியளவு விசாலமானது.

Aal-i-Imraan 3:14Listen in Qur'an →
15

۞ قُلْ أَؤُنَبِّئُكُم بِخَيْرٍۢ مِّن ذَٰلِكُمْ ۚ لِلَّذِينَ ٱتَّقَوْا۟ عِندَ رَبِّهِمْ جَنَّٰتٌۭ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ خَٰلِدِينَ فِيهَا وَأَزْوَٰجٌۭ مُّطَهَّرَةٌۭ وَرِضْوَٰنٌۭ مِّنَ ٱللَّهِ ۗ وَٱللَّهُ بَصِيرٌۢ بِٱلْعِبَادِ

(நபியே!) நீர் கூறும்; "அவற்றை விட மேலானவை பற்றிய செய்தியை நான் உங்களுக்குச் சொல்லட்டுமா? தக்வா - பயபக்தி - உடையவர்களுக்கு, அவர்களுடைய இறைவனிடத்தில் சுவனபதிகள் உண்டு. அவற்றின் கீழ் நீரோடைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அவர்கள் அங்கு என்றென்றும் தங்குவார்கள்; (அங்கு அவர்களுக்குத்) தூய துணைகள் உண்டு. இன்னும் அல்லாஹ்வின் திருப் பொருத்தமும் உண்டு. அல்லாஹ் தன் அடியார்களை உற்று நோக்குகிறவனாக இருக்கின்றான்.

தூதரே! நீர் கூறுவீராக, “இந்த இன்பங்களைவிட சிறந்தவற்றை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சியவர்களுக்கு சொர்க்கச் சோலைகள் இருக்கின்றன. அவற்றின் மாளிகைகளுக்கும் மரங்களுக்கும் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். மரணமோ அழிவோ இன்றி அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். அவர்களுக்கு குணத்திலும் தோற்றத்திலும் அனைத்துக் குறைகளையும் விட்டும் பரிசுத்தமான துணைவியரும் உண்டு. இத்தனைக்கும் மேல் அல்லாஹ் அவர்கள் விஷயத்தில் திருப்தியடைவான். அவன் ஒருபோதும் அவர்கள்மீது கோபம்கொள்ள மாட்டான். அல்லாஹ் தன் அடியார்களின் நிலைகளை நன்கறிந்தவன். எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் அவர்களுக்கு கூலி வழங்குவான்.

Aal-i-Imraan 3:15Listen in Qur'an →
16

ٱلَّذِينَ يَقُولُونَ رَبَّنَآ إِنَّنَآ ءَامَنَّا فَٱغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَقِنَا عَذَابَ ٱلنَّارِ

இத்தகையோர் (தம் இறைவனிடம்)

இந்த சுவனவாசிகள் தங்கள் இறைவனிடம் பின்வருமாறு பிரார்த்தனை செய்வார்கள்: “எங்கள் இறைவா! நாங்கள் உன்மீதும் உன் தூதர்கள்மீது நீ இறக்கியவற்றின்மீதும் நம்பிக்கைகொண்டோம். உன் மார்க்கத்தைப் பின்பற்றினோம். எனவே நாங்கள் செய்த பாவங்களை மன்னிப்பாயாக. நரக வேதனையை விட்டும் எங்களைக் காப்பாயாக.”

Aal-i-Imraan 3:16Listen in Qur'an →
17

ٱلصَّٰبِرِينَ وَٱلصَّٰدِقِينَ وَٱلْقَٰنِتِينَ وَٱلْمُنفِقِينَ وَٱلْمُسْتَغْفِرِينَ بِٱلْأَسْحَارِ

(இன்னும் அவர்கள்) பொறுமையுடையோராகவும், உண்மையாளராகவும், அல்லாஹவுக்கு முற்றிலும் வழிப்படுவோராகவும், (இறைவன் பாதையில்) தான தர்மங்கள் செய்வோராகவும், (இரவின் கடைசி) ஸஹர் நேரத்தில் (வணங்கி, நாயனிடம்) மன்னிப்புக் கோருவோராகவும் இருப்பர்.

அவர்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதிலும் தீமைகளை விடுவதிலும் துன்பங்களை எதிர்கொள்வதிலும் பொறுமையாளர்கள்; தங்களின் சொல்லிலும் செயலிலும் உண்மையாளர்கள்; அல்லாஹ்வுக்கு முழுமையாக கீழ்ப்படிபவர்கள்; அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வங்களைச் செலவுசெய்பவர்கள்; இரவின் இறுதிப் பகுதியில் பாவமன்னிப்புக் கோருபவர்கள். ஏனெனில் அந்நேரத்தில் செய்யப்படும் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு மிக நெருக்கமானது. மேலும் உள்ளம் அனைத்துவகையான விஷயங்களை விட்டும் காலியானதாக இருக்கும்.

Aal-i-Imraan 3:17Listen in Qur'an →
18

شَهِدَ ٱللَّهُ أَنَّهُۥ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ وَٱلْمَلَٰٓئِكَةُ وَأُو۟لُوا۟ ٱلْعِلْمِ قَآئِمًۢا بِٱلْقِسْطِ ۚ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ

அல்லாஹ் நீதியை நிலைநாட்டக்கூடியவனாக உள்ள நிலையில் அவனைத்தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை என்று சாட்சி கூறுகிறான். மேலும் மலக்குகளும் அறிவுடையோரும் (இவ்வாறே சாட்சி கூறுகின்றனர்.) அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை அவன் மிகைத்தவன், ஞானமிக்கவன்.

உண்மையாக வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாரும் இல்லை என்று அல்லாஹ்வே சாட்சி கூறுகிறான். அவனுடைய சாட்சி என்பது குர்ஆனிலும் பிரபஞ்சத்திலும் அவன் ஏற்படுத்திய சான்றுகளாகும். அதற்கு வானவர்களும் சாட்சி கூறுகிறார்கள். கல்வியாளர்களும் ஓரிறைக்கொள்கையை விளக்குவதன் மூலமும் அதன்பால் அழைப்புவிடுப்பதன் மூலமும் சாட்சி கூறுகிறார்கள். அவர்கள் அல்லாஹ் ஒருவனே என்றும் அவன் தன் படைப்புகளில், சட்டங்களில் நீதியை நிலைநிறுத்தக்கூடியவன் என்ற மிகப் பெரும் ஒரு விடயத்திற்கு சாட்சி கூறியுள்ளார்கள். வணக்கத்திற்குத் தகுதியானவன் அவனைத்தவிர வேறு யாரும் இல்லை. அவன் யாவற்றையும் மிகைத்தவன். எதுவும் அவனை மிகைக்க முடியாது. அவன் தன் படைப்பிலும், நிர்வகிப்பதிலும், சட்டமியற்றுவதிலும் ஞானம்மிக்கவன்.

Aal-i-Imraan 3:18Listen in Qur'an →
19

إِنَّ ٱلدِّينَ عِندَ ٱللَّهِ ٱلْإِسْلَٰمُ ۗ وَمَا ٱخْتَلَفَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَٰبَ إِلَّا مِنۢ بَعْدِ مَا جَآءَهُمُ ٱلْعِلْمُ بَغْيًۢا بَيْنَهُمْ ۗ وَمَن يَكْفُرْ بِـَٔايَٰتِ ٱللَّهِ فَإِنَّ ٱللَّهَ سَرِيعُ ٱلْحِسَابِ

நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்;. வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதுதான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக (இதற்கு) மாறுபட்டனர்;. எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தார்களோ, நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய) கணக்கைத் துரிதமாக முடிப்பான்.

அல்லாஹ்விடத்தில் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கம் இஸ்லாம் மட்டுமே. இஸ்லாம் என்பது முழுக்க முழுக்க அல்லாஹ்வுக்கு மாத்திரம் கட்டுப்படுவதும் அடிமைத்துவத்தின் மூலம் அவனிடம் சரணடைவதும் முஹம்மது வரை அவன் அனுப்பிய தூதர்கள் அனைவரின்மீதும் நம்பிக்கைகொள்வதும் ஆகும். முஹம்மதோடு அல்லாஹ் தூதுத்துவத்தை முடித்துவிட்டான். இனி அவர் கொண்டுவந்த மார்க்கம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். யூதர்களும் கிறிஸ்தவர்களும் தங்களிடம் தெளிவான ஆதாரம் வந்தபின்னரே பொறாமையினாலும் உலகத்தின்மீது கொண்ட மோகத்தினாலும் தங்கள் மார்க்கத்தில் கருத்துவேறுபாடு கொண்டு பல்வேறு கூட்டங்களாகப் பிரிந்தனர். அல்லாஹ் தன் தூதருக்கு இறக்கிய வசனங்களை நிராகரிப்பவர்கள் அறிந்துகொள்ளட்டும், “தன்னையும் தன் தூதர்களையும் நிராகரித்தவர்களை விசாரணை செய்வதில் அல்லாஹ் விரைவானவன்.”

Aal-i-Imraan 3:19Listen in Qur'an →
20

فَإِنْ حَآجُّوكَ فَقُلْ أَسْلَمْتُ وَجْهِىَ لِلَّهِ وَمَنِ ٱتَّبَعَنِ ۗ وَقُل لِّلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَٰبَ وَٱلْأُمِّيِّۦنَ ءَأَسْلَمْتُمْ ۚ فَإِنْ أَسْلَمُوا۟ فَقَدِ ٱهْتَدَوا۟ ۖ وَّإِن تَوَلَّوْا۟ فَإِنَّمَا عَلَيْكَ ٱلْبَلَٰغُ ۗ وَٱللَّهُ بَصِيرٌۢ بِٱلْعِبَادِ

(இதற்கு பின்னும்) அவர்கள் உம்மிடம் தர்க்கம் செய்தால் (நபியே!) நீர் கூறுவீராக "நான் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்டிருக்கின்றேன்; என்னைப் பின்பற்றியோரும் (அவ்வாறே வழிப்பட்டிருக்கின்றனர்.)" தவிர, வேதம் கொடுக்கப்பட்டோரிடமும், பாமர மக்களிடமும்; "நீங்களும் (அவ்வாறே) வழிப்பட்டீர்களா?" என்று கேளும்;. அவர்களும் (அவ்வாறே) முற்றிலும் வழிப்பட்டால் நிச்சயமாக அவர்கள் நேரான பாதையை அடைந்து விட்டார்கள்;. ஆனால் அவர்கள் புறக்கணித்து விடுவார்களாயின் (நீர் கவலைப்பட வேண்டாம்,) அறிவிப்பதுதான் உம் மீது கடமையாகும்; மேலும், அல்லாஹ் தன் அடியார்களை உற்றுக்கவனிப்பவனாகவே இருக்கின்றான்.

தூதரே! உம்மீது இறக்கப்பட்ட சத்தியம் குறித்து அவர்கள் உம்மிடம் விவாதம் செய்தால் அவர்களிடம் கூறிவிடும், “நானும் என்னைப் பின்பற்றிய நம்பிக்கையாளர்களும் அல்லாஹ்வுக்கு அடிபணிந்து விட்டோம் என்று.” தூதரே! வேதக்காரர்களிடமும் இணைவைப்பாளர்களிடமும் நீர் கூறுவீராக, “உளத்தூய்மையுடன் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நான் கொண்டு வந்ததை நீங்கள் பின்பற்றுகிறீர்களா?” அவர்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு உம்முடைய மார்க்கத்தைப் பின்பற்றினால் நேரான வழியை அடைந்துவிட்டார்கள். அவர்கள்

இஸ்லாத்தைப் புறக்கணித்தால், உமக்கு கட்டளையிடப்பட்டதை எடுத்துரைப்பதைத்தவிர உம்மீது வேறு எந்த கடமையும் இல்லை. அவர்களின் விவகாரம் அல்லாஹ்விடமே உள்ளது. அவன் தன் அடியார்களை பார்க்கக்கூடியவன்; அவர்களின் செயல்களுக்கேற்ப அவர்களுக்கு கூலி வழங்கக்கூடியவன்.

Aal-i-Imraan 3:20Listen in Qur'an →

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.