Muslim99Muslim99
← Tafsir library

3. Aal-i-Imraan

The Family of Imraan · Medinan · 200 ayahs

سُورَةُ آلِ عِمۡرَانَ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 191–200 of 200

191

ٱلَّذِينَ يَذْكُرُونَ ٱللَّهَ قِيَٰمًۭا وَقُعُودًۭا وَعَلَىٰ جُنُوبِهِمْ وَيَتَفَكَّرُونَ فِى خَلْقِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ رَبَّنَا مَا خَلَقْتَ هَٰذَا بَٰطِلًۭا سُبْحَٰنَكَ فَقِنَا عَذَابَ ٱلنَّارِ

அத்தகையோர் நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும் தங்கள் விலாப் புறங்களில் (சாய்ந்து) இருக்கும் போதும் அல்லாஹ்வை (நினைவு கூர்ந்து) துதிக்கிறார்கள்;. வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பைப் பற்றியும் சிந்தித்து, "எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை, நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!" (என்றும்;).

அவர்கள் நின்றவாறும், அமர்ந்தவாறும், படுத்தவாறும் என எல்லா சூழ்நிலைகளிலும் அல்லாஹ்வை நினைவுகூருகிறார்கள். வானங்கள் மற்றும் பூமியின் படைப்பில் சிந்தனை செலுத்தி பின்வருமாறு கூறுவார்கள்: “அல்லாஹ்வே! நீ இந்தப் பெரும் படைப்புகளையெல்லாம் வீணாகப் படைக்கவில்லை. வீணாகப் படைப்பதை விட்டும் நீ தூய்மையானவன். நற்செயல்கள் செய்வதற்கு பாக்கியம் அளித்து தீய செயல்களிலிருந்து எங்களைப் பாதுகாத்து நரக வேதனையை விட்டும் எங்களைக் காத்தருள்வாயாக”.

Aal-i-Imraan 3:191Listen in Qur'an →
192

رَبَّنَآ إِنَّكَ مَن تُدْخِلِ ٱلنَّارَ فَقَدْ أَخْزَيْتَهُۥ ۖ وَمَا لِلظَّٰلِمِينَ مِنْ أَنصَارٍۢ

"எங்கள் இறைவனே! நீ எவரை நரக நெருப்பில் புகுத்துகின்றாயோ அவரை நிச்சயமாக நீ இழிவாக்கிவிட்டாய்;. மேலும் அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவருமிலர்!" (என்றும்;).

எங்கள் இறைவா! உன் படைப்புகளில் யாரை நீ நரகத்தில் நுழைவித்தாயோ அவரை நீ இழிவுபடுத்தி அம்பலப்படுத்திவிட்டாய். மறுமைநாளில் அநியாயக்காரர்களுக்கு அல்லாஹ்வின் வேதனையை விட்டும் தடுக்கக்கூடிய உதவியாளர்கள் இருக்க மாட்டார்கள்.

Aal-i-Imraan 3:192Listen in Qur'an →
193

رَّبَّنَآ إِنَّنَا سَمِعْنَا مُنَادِيًۭا يُنَادِى لِلْإِيمَٰنِ أَنْ ءَامِنُوا۟ بِرَبِّكُمْ فَـَٔامَنَّا ۚ رَبَّنَا فَٱغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّـَٔاتِنَا وَتَوَفَّنَا مَعَ ٱلْأَبْرَارِ

"எங்கள் இறைவனே! உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்று ஈமானின் பக்கம் அழைத்தவரின் அழைப்பைச் செவிமடுத்து நாங்கள் திடமாக ஈமான் கொண்டோம்; "எங்கள் இறைவனே! எங்களுக்கு, எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக! இன்னும், எங்க(ளுடைய ஆன்மாக்க)ளைச் சான்றோர்களு(டைய ஆன்மாக்களு)டன் கைப்பற்றுவாயாக!" (என்றும்;).

எங்கள் இறைவா! "ஒரே இறைவனான அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொள்ளுங்கள்" என்று ஈமானின் பக்கம் அழைக்கக்கூடிய அழைப்பாளரான முஹம்மத் (ஸல்) அவர்களது அழைப்பைச் செவியுற்று நாங்கள் அவர் அழைக்கும் விஷயத்தின்மீது நம்பிக்கைகொண்டோம். அவருடைய மார்க்கத்தைப் பின்பற்றினோம். எனவே எங்கள் பாவங்களை மறைத்துவிடுவாயாக. எமது குறைகளை அம்பலப்படுத்திவிடாதே. எங்களின் குறைகளை கண்டும்காணாமல் விட்டுவிடுவாயாக. அதற்காக எங்களைத் தண்டித்துவிடாதே. நற்செயல்கள் செய்வதற்கும் தீமைகளை விடுவதற்கும் வாய்ப்பை வழங்கி நல்லவர்களுடன் எங்களை மரணிக்கச் செய்வாயாக.

Aal-i-Imraan 3:193Listen in Qur'an →
194

رَبَّنَا وَءَاتِنَا مَا وَعَدتَّنَا عَلَىٰ رُسُلِكَ وَلَا تُخْزِنَا يَوْمَ ٱلْقِيَٰمَةِ ۗ إِنَّكَ لَا تُخْلِفُ ٱلْمِيعَادَ

"எங்கள் இறைவனே! இன்னும் உன் தூதர்கள் மூலமாக எங்களுக்கு நீ வாக்களித்தை எங்களுக்குத் தந்தருள்வாயாக! கியாம நாளில் எங்களை இழிவுபடுத்தாது இருப்பாயாக! நிச்சயமாக நீ வாக்குறுதிகளில் மாறுபவன் அல்ல (என்றும் பிரார்த்தித்துக் கொண்டிருப்பார்கள்).

எங்கள் இறைவா! உன் தூதர்கள் மூலமாக வாக்களித்த, வழிகாட்டலையும் இவ்வுலகில் உதவியையும் எங்களுக்கு வழங்குவாயாக. மறுமைநாளில் நரகத்தில் நுழைத்து எங்களை அவமானப்படுத்திவிடாதே. எங்கள் இறைவா!நீ ஒருபோதும் வாக்குறுதிக்கு மாறாகச் செயல்படாத கொடையாளன்.

Aal-i-Imraan 3:194Listen in Qur'an →
195

فَٱسْتَجَابَ لَهُمْ رَبُّهُمْ أَنِّى لَآ أُضِيعُ عَمَلَ عَٰمِلٍۢ مِّنكُم مِّن ذَكَرٍ أَوْ أُنثَىٰ ۖ بَعْضُكُم مِّنۢ بَعْضٍۢ ۖ فَٱلَّذِينَ هَاجَرُوا۟ وَأُخْرِجُوا۟ مِن دِيَٰرِهِمْ وَأُوذُوا۟ فِى سَبِيلِى وَقَٰتَلُوا۟ وَقُتِلُوا۟ لَأُكَفِّرَنَّ عَنْهُمْ سَيِّـَٔاتِهِمْ وَلَأُدْخِلَنَّهُمْ جَنَّٰتٍۢ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ ثَوَابًۭا مِّنْ عِندِ ٱللَّهِ ۗ وَٱللَّهُ عِندَهُۥ حُسْنُ ٱلثَّوَابِ

ஆதலால், அவர்களுடைய இறைவன் அவர்களுடைய இப்பிரார்த்னையை ஏற்றுக் கொண்டான்; "உங்களில் ஆணோ, பெண்ணோ எவர் (நற்செயல் செய்தாலும்) அவர் செய்த செயலை நிச்சயமாக வீணாக்க மாட்டேன், (ஏனெனில் ஆனாகவோ, பெண்ணாகவோ இருப்பினும்) நீங்கள் ஒருவர் மற்றொருவரில் உள்ளவர் தாம்;. எனவே யார் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறினார்களோ மேலும் வெளியேற்றப்பட்டார்களோ, மேலும் என் பாதையில் துன்பப்பட்டார்களோ, மேலும் போரிட்டார்களோ, மேலும் (போரில்) கொல்லப்பட்டார்களோ, அவர்களுடைய தீமைகளை அவர்களை விட்டும் நிச்சயமாக அகற்றி விடுவேன்;. இன்னும் அவர்களை எவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கின்றனவோ அந்தச் சுவனபதிகளில் நிச்சயமாக நான் புகுத்துவேன்" (என்று கூறுவான்); இது அல்லாஹ்விடமிருந்து (அவர்களுக்குக்) கிட்டும் சன்மானமாகும்;. இன்னும் அல்லாஹ்வாகிய அவனிடத்தில் அழகிய சன்மானங்கள் உண்டு.

இறைவன் அவர்களின் பிரார்த்தனைக்குப் பதிலளித்தான்: ஆணாயினும் பெண்ணாயினும் உங்களின் செயல்கள் சிறியதோ பெரியதோ அவற்றின் நன்மைகளை நான் வீணாக்கிவிட மாட்டேன். மார்க்க விடயத்தில் நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் சமமானவரே. ஆண்கள் என்பதற்காக அதிகரிக்கப்படவும்மாட்டாது. பெண்கள்என்பதற்காக குறைக்கப்படவும்மாட்டாது. அல்லாஹ்வின் பாதையில் புலம்பெயர்ந்தவர்கள், நிராகரிப்பாளர்களால் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள், தங்கள் இறைவனுக்குக் கட்டுப்பட்டதால் துன்பங்களை அடைந்தவர்கள், அல்லாஹ்வின் பாதையில் போரிட்டவர்கள், அவனுடைய வார்த்தையை மேலோங்கச் செய்வதற்காக அதில் கொல்லப்பட்டவர்கள் ஆகியோர் செய்த பாவங்களை மறுமைநாளில் நான் மன்னிப்பேன். அவற்றைக் கண்டுகொள்ளமாட்டேன். அவர்களை சுவனங்களில் பிரவேசிக்கச் செய்வேன். அவற்றின் மாளிகைகளுக்குக் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். இது அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்குக் கிடைக்கும் நன்மையாகும். அவனிடமே ஈடிணையற்ற அழகிய கூலி இருக்கின்றது.

Aal-i-Imraan 3:195Listen in Qur'an →
196

لَا يَغُرَّنَّكَ تَقَلُّبُ ٱلَّذِينَ كَفَرُوا۟ فِى ٱلْبِلَٰدِ

காஃபிர்கள் நகரங்களில் உல்லாசமாகத் திரிந்து கொண்டிருப்பது (நபியே!) உம்மை மயக்கி விடவேண்டாம்.

தூதரே! நிராகரிப்பாளர்கள் பல இடங்களிலும் சுற்றித்திரிந்து ஆதிக்கம் செய்து பரந்த வியாபாரம் மற்றும் செல்வத்தைத் திரட்டுவது உம்மை ஏமாற்றிவிட வேண்டாம். இல்லையெனில் அவர்களது நிலமையைப் பார்த்து நீர் கவலைப்பட நேரிடும்.

Aal-i-Imraan 3:196Listen in Qur'an →
197

مَتَٰعٌۭ قَلِيلٌۭ ثُمَّ مَأْوَىٰهُمْ جَهَنَّمُ ۚ وَبِئْسَ ٱلْمِهَادُ

(அது) மிகவும் அற்ப சுகம். பிறகு அவர்கள் தங்குமிடம் நரகமே யாகும்; (இது) மிகவும் கெட்ட தங்குமிடமும் ஆகும்.

இந்த உலகம் நிலையற்ற ஒரு அற்ப இன்பமாகும். அதன் பிறகு நரகமே அவர்கள் திரும்பிச் செல்லவேண்டிய இடமாகும். அவர்களுக்குரிய விரிப்பாகிய நரகம் மோசமானதாகும்.

Aal-i-Imraan 3:197Listen in Qur'an →
198

لَٰكِنِ ٱلَّذِينَ ٱتَّقَوْا۟ رَبَّهُمْ لَهُمْ جَنَّٰتٌۭ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ خَٰلِدِينَ فِيهَا نُزُلًۭا مِّنْ عِندِ ٱللَّهِ ۗ وَمَا عِندَ ٱللَّهِ خَيْرٌۭ لِّلْأَبْرَارِ

ஆனால், எவர் தங்கள் இறைவனுக்கு பயபக்தியுடன் இருக்கிறார்களோ அவர்களுக்கு ஆறுகள் கீழே ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதிகள் உண்டு. அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பர்;. (இது) அல்லாஹ்விடமிருந்து (நல்லோருக்குக் கிடைக்கும்) விருந்தாகும்;. மேலும் சான்றோருக்கு அல்லாஹ்விடம் இருப்பதே மேன்னையுடையதாகும்.

தங்கள் இறைவனின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்களுக்குச் சுவனங்கள் இருக்கின்றன. அவற்றின் மாளிகைகளுக்குக் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அங்கு அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். இது அல்லாஹ் அவர்களுக்கென ஏற்பாடு செய்திருக்கும் கூலியாகும். அல்லாஹ் தன் நல்லடியார்களுக்கு தயார்படுத்தி வைத்துள்ளவைகள் நிராகரிப்பாளர்கள் அனுபவிக்கும் இவ்வுலக இன்பங்களை விடச் சிறந்ததாகும்.

Aal-i-Imraan 3:198Listen in Qur'an →
199

وَإِنَّ مِنْ أَهْلِ ٱلْكِتَٰبِ لَمَن يُؤْمِنُ بِٱللَّهِ وَمَآ أُنزِلَ إِلَيْكُمْ وَمَآ أُنزِلَ إِلَيْهِمْ خَٰشِعِينَ لِلَّهِ لَا يَشْتَرُونَ بِـَٔايَٰتِ ٱللَّهِ ثَمَنًۭا قَلِيلًا ۗ أُو۟لَٰٓئِكَ لَهُمْ أَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ ۗ إِنَّ ٱللَّهَ سَرِيعُ ٱلْحِسَابِ

மேலும் நிச்சயமாக வேதமுடையோரில் சிலர் இருக்கிறார்கள்; அவர்கள் அல்லாஹ்வின் மீதும் உங்களுக்கு இறக்கப்பட்ட (வேதத்)திலும், அவர்களுக்கு இறக்கப்பட்ட (மற்ற)வற்றிலும் நம்பிக்கை வைக்கிறார்கள்;. அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறார்கள்;. அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை அற்ப விலைக்கு விற்கமாட்டார்கள்;. இத்தகையோருக்கு நற்கூலி அவர்களுடைய இறைவனிடம் இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் கணக்கு வாங்குவதில் மிகவும் தீவிரமானவன்.

வேதக்காரர்கள் அனைவரும் சமமானவர்கள் அல்ல. அவர்களில் அல்லாஹ்வின்மீதும் அவன் உங்களுக்கு இறக்கிய சத்தியத்தின்மீதும் நேர்வழியின் மீதும் நம்பிக்கைகொள்பவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் வேதங்களில் தங்களுக்கு இறக்கப்பட்டதையும் நம்புகிறார்கள். அல்லாஹ்வின் தூதர்களிடையே அவர்கள் பாகுபாடு காட்டுவதில்லை. அவனிடம் உள்ளவற்றின்மீது ஆசைகொண்டவர்களாக அவனுக்கே முற்றிலும் அடிபணிகிறார்கள். அல்லாஹ்வின் வசனங்களை அற்ப ஆதாயத்திற்காக அவர்கள் விற்றுவிடுவதில்லை. இந்த பண்புகளை உடையவர்கள் தங்கள் இறைவனிடம் மகத்தான கூலியைப் பெறுவார்கள். அல்லாஹ் அடியார்களின் செயல்களுக்கு விரைவாக கணக்குத் தீர்க்கக்கூடியவன். அவைகளுக்கு விரைவாக கூலியும் வழங்குபவன்.

Aal-i-Imraan 3:199Listen in Qur'an →
200

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ ٱصْبِرُوا۟ وَصَابِرُوا۟ وَرَابِطُوا۟ وَٱتَّقُوا۟ ٱللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ

முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள் (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; (இம்மையிலும், மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள்!

அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! மார்க்கக் கடமைகளிலும் உங்களுக்கு உலகில் நிகழும் துன்பங்களிலும் பொறுமையாக இருங்கள். பொறுமையில் நிராகரிப்பாளர்களை மிகைத்துவிடுங்கள். அவர்கள் உங்களைவிட பொறுமைமிக்கவர்களாக ஆகிவிடக்கூடாது. அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாது செய்யுங்கள். அவனுடைய கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சுங்கள். இதனால் நீங்கள் நரகத்திலிருந்து தப்பித்து சுவனத்தில் நுழைந்து உங்கள் குறிக்கோளை அடைவீர்கள்.

Aal-i-Imraan 3:200Listen in Qur'an →

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.