Muslim99Muslim99
← Tafsir library

3. Aal-i-Imraan

The Family of Imraan · Medinan · 200 ayahs

سُورَةُ آلِ عِمۡرَانَ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 181–190 of 200

181

لَّقَدْ سَمِعَ ٱللَّهُ قَوْلَ ٱلَّذِينَ قَالُوٓا۟ إِنَّ ٱللَّهَ فَقِيرٌۭ وَنَحْنُ أَغْنِيَآءُ ۘ سَنَكْتُبُ مَا قَالُوا۟ وَقَتْلَهُمُ ٱلْأَنۢبِيَآءَ بِغَيْرِ حَقٍّۢ وَنَقُولُ ذُوقُوا۟ عَذَابَ ٱلْحَرِيقِ

"நிச்சயமாக அல்லாஹ் ஏழை, நாங்கள் தாம் சீமான்கள்" என்று கூறியவர்களின் சொல்லை திடமாக அல்லாஹ் கேட்டுக் கொண்டான்;. (இவ்வாறு) அவர்கள் சொன்னதையும், அநியாயமாக நபிமார்களை அவர்கள் கொலை செய்ததையும் நாம் பதிவு செய்து கொள்வோம், "சுட்டுப் பொசுக்கும் நரக நெருப்பின் வேதனையைச் சுவையுங்கள்" என்று (அவர்களிடம் மறுமையில்) நாம் கூறுவோம்.

“அல்லாஹ் எங்களிடம் கடன் கேட்கும் ஏழை. எங்களிடம் சொத்துக்கள் இருப்பதனால் நாங்கள் செல்வந்தர்கள்” என்று கூறிய யூதர்களின் பேச்சை அல்லாஹ் செவியுற்றுவிட்டான். தமது இறைவன் மீது கூறிய இந்த அவதூறையும் இறைத்தூதர்களை அநியாயமாக அவர்கள் கொலைசெய்ததையும் நாம் எழுதிவைப்போம். “நரகத்தில் சுட்டெரிக்கும் வேதனையைச் சுவையுங்கள்” என்றும் நாம் அவர்களிடம் கூறுவோம்.

Aal-i-Imraan 3:181Listen in Qur'an →
182

ذَٰلِكَ بِمَا قَدَّمَتْ أَيْدِيكُمْ وَأَنَّ ٱللَّهَ لَيْسَ بِظَلَّامٍۢ لِّلْعَبِيدِ

இதற்கு காரணம் முன்னமேயே உங்கள் கைகள் செய்து அனுப்பிய கெட்ட செயல்களேயாகும்;. நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களுக்கு எவ்வித அநீதியும் செய்பவனல்லன்.

யூதர்களே! இந்த வேதனை நீங்கள் சேர்த்துவைத்த பாவங்கள், இழிவான செயற்பாடுகளின் விளைவேயாகும். அல்லாஹ் தன் அடியார்களில் எவர்மீதும் அநீதி இழைப்பதில்லை என்பதும் அதற்குக் காரணமாகும்.

Aal-i-Imraan 3:182Listen in Qur'an →
183

ٱلَّذِينَ قَالُوٓا۟ إِنَّ ٱللَّهَ عَهِدَ إِلَيْنَآ أَلَّا نُؤْمِنَ لِرَسُولٍ حَتَّىٰ يَأْتِيَنَا بِقُرْبَانٍۢ تَأْكُلُهُ ٱلنَّارُ ۗ قُلْ قَدْ جَآءَكُمْ رُسُلٌۭ مِّن قَبْلِى بِٱلْبَيِّنَٰتِ وَبِٱلَّذِى قُلْتُمْ فَلِمَ قَتَلْتُمُوهُمْ إِن كُنتُمْ صَٰدِقِينَ

மேலும் அவர்கள், "எந்த ரஸூலாக இருந்தாலும், அவர் கொடுக்கும் குர்பானியை(பலியை) நெருப்பு சாப்பிடு(வதை நமக்கு காண்பிக்கு)ம் வரை அவர் மீது நாங்கள் விசவாசம் கொள்ள வேண்டாம்" என்று அல்லாஹ் எங்களிடம் உறுதிமொழி வாங்கியுள்ளான்" என்று கூறுகிறார்கள். (நபியே!) "எனக்கு முன்னர் உங்களிடம் வந்த தூதர்களில் பலர், தெளிவான ஆதாரங்களையும், இன்னும் நீங்கள் கேட்டுக்கொண்ட (படி பலியை நெருப்பு உண்ப)தையும் திடமாகக் காண்பித்தார்கள். அப்படியிருந்தும் ஏன் அவர்களை நீங்கள் கொன்றீர்கள்? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதற்கு பதில் சொல்லுங்கள்" என்று நீர் கூறும்.

“அல்லாஹ் எங்கள் வேதங்களில் எங்களின் தூதர்களின்மூலம் எங்களிடம் ஒரு கட்டளையிட்டுள்ளான். அது எங்களிடம் வருகின்ற எந்த தூதரானாலும் அவர் அல்லாஹ்வுக்காக வழங்கும் தர்மத்தை வானத்திலிருந்து வரும் நெருப்பு பொசுக்காத வரை நாம் அவரை நம்பிக்கை கொள்ளக்கூடாது என்பதாகும்” என்று அவர்கள் அல்லாஹ்வின்மீது அபாண்டமாகவும் பொய்யாகவும் கூறுகிறார்கள். இக்கட்டளை அல்லாஹ் கூறியது, தூதர்களின் உண்மைக்கு ஆதாரம் நெருப்பு எரிக்கும் தர்மம் என்பவைகள் அனைத்துமே அல்லாஹ்வின் மீது அவர்கள் கூறிய பொய்களாகும். எனவேதான் அல்லாஹ் தன் தூதர் முஹம்மதிடம் பின்வருமாறு அவர்களிடம் கேட்குமாறு கட்டளையிடுகிறான்: “எனக்கு முன்னால் வந்த பல தூதர்கள் அவர்களின் தூதுத்துவத்தை உண்மைப்படுத்தக்கூடிய தெளிவான ஆதாரங்களையும் நீங்கள் கூறும், வானத்திலிருந்து நெருப்பு பொசுக்கக்கூடிய ஒரு பலிப்பிராணியையும் கொண்டு வந்தார்களே! நீங்கள் கூறும் விஷயத்தில் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை ஏன் பொய்ப்பித்தீர்கள்? ஏன் கொலை செய்தீர்கள்?

Aal-i-Imraan 3:183Listen in Qur'an →
184

فَإِن كَذَّبُوكَ فَقَدْ كُذِّبَ رُسُلٌۭ مِّن قَبْلِكَ جَآءُو بِٱلْبَيِّنَٰتِ وَٱلزُّبُرِ وَٱلْكِتَٰبِ ٱلْمُنِيرِ

எனவே. உம்மை அவர்கள் பொய்ப்பித்தால் (நீர் கவலையுற வேண்டாம், ஏனெனில்) உமக்கு முன்னர் தெளிவான ஆதாரங்களையும், ஆகமங்களையும், பிரகாசமான வேதத்தையும் கொண்டு வந்த நபிமார்களும் (அக்கால மக்களால்) பொய்ப்பிக்க பட்டிருக்கின்றனர்.

தூதரே! அவர்கள் உம்மைப் பொய்யர் என்று கூறினால் அதற்காக நீர் கவலைப்பட வேண்டாம். இது நிராகரிப்பாளர்களின் வழக்கம்தான். உமக்கு முன்னால் ஏராளமான தூதர்கள் இவ்வாறே பொய்யர் என்று தூற்றப்பட்டுள்ளார்கள். அவர்கள் தெளிவான ஆதாரங்களையும், அறிவுரைகளையும் உபதேசங்களையும் உள்ளடக்கிய வேதங்களையும் சட்ட திட்டங்களை உள்ளடக்கிய நேர்வழிகாட்டக்கூடிய வேதத்தையும் கொண்டு வந்தார்கள்.

Aal-i-Imraan 3:184Listen in Qur'an →
185

كُلُّ نَفْسٍۢ ذَآئِقَةُ ٱلْمَوْتِ ۗ وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ ٱلْقِيَٰمَةِ ۖ فَمَن زُحْزِحَ عَنِ ٱلنَّارِ وَأُدْخِلَ ٱلْجَنَّةَ فَقَدْ فَازَ ۗ وَمَا ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَآ إِلَّا مَتَٰعُ ٱلْغُرُورِ

ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;. இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.

எல்லா உயிரும் மரணத்தை சுவைத்தே தீர வேண்டும். எனவே இவ்வுலக வாழ்வைக்கொண்டு எவரும் ஏமாந்துவிட வேண்டாம். மறுமைநாளில்தான் குறைவின்றி முழுமையாக நீங்கள் கூலிவழங்கப்படுவீர்கள். யாரை அல்லாஹ் நரகத்திலிருந்து தூரமாக்கி சுவனத்தில் நுழைவித்தானோ அவர் தாம் விரும்பும் நன்மைகளைப் பெற்றுவிட்டார்; தாம் அஞ்சும் தீங்குகளிலிருந்து பாதுகாப்புபெற்றுவிட்டார். இவ்வுலக வாழ்க்கை அழியக்கூடிய இன்பங்கள்தாம். ஏமாறுபவனே இதன்மீது மோகம்கொள்வான்.

Aal-i-Imraan 3:185Listen in Qur'an →
186

۞ لَتُبْلَوُنَّ فِىٓ أَمْوَٰلِكُمْ وَأَنفُسِكُمْ وَلَتَسْمَعُنَّ مِنَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَٰبَ مِن قَبْلِكُمْ وَمِنَ ٱلَّذِينَ أَشْرَكُوٓا۟ أَذًۭى كَثِيرًۭا ۚ وَإِن تَصْبِرُوا۟ وَتَتَّقُوا۟ فَإِنَّ ذَٰلِكَ مِنْ عَزْمِ ٱلْأُمُورِ

(முஃமின்களே!) உங்கள் பொருள்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் திடமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள்;. உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்து, இணை வைத்து வணங்குவோரிடமிருந்தும் நிந்தனைகள் பலவற்றையும் செவிமடுப்பீர்கள்;. ஆனால் நீங்கள் பொறுமையை மேற்கொண்டு, (இறைவனிடம்) பயபக்தியோடு இருந்தீர்களானால் நிச்சயமாக அதுவே எல்லாக் காரியங்களிலும் (நன்மையைத் தேடி தரும்) தீர்மானத்துக்குரிய செயலாகும்.

நம்பிக்கையாளர்களே! உங்களின் செல்வங்களில் கட்டாயக் கடமைகளை நிறைவேற்றுவதைக்கொண்டோ அதில் ஏற்படும் ஆபத்துகளைக்கொண்டோ நிச்சயம் நீங்கள் சோதிக்கப்படுவீர்கள். மார்க்கத்தின் கடமைகளை நிறைவேற்றுவதைக்கொண்டோ பலவிதமான சோதனைகளைக்கொண்டோ உங்கள் உயிர்களிலும் சோதிக்கப்படுவீர்கள். உங்களுக்குமுன் வேதம் வழங்கப்பட்டவர்களிடமிருந்தும் இணைவைப்பாளர்களிடமிருந்தும் உங்களின் மார்க்கத்தைக் குறித்தோ உங்களைக் குறித்தோ நோவினைதரும் ஏராளமான விஷயங்களைச் செவியுறுவீர்கள். உங்களுக்கு ஏற்படும் துன்பங்களிலும் சோதனைகளிலும் நீங்கள் பொறுமையைக் கடைப்பிடித்து, அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சினால் நிச்சயமாக அதுதான் உறுதிமிக்க காரியமும் போட்டியிடுபவர்கள் போட்டியிடும் விடயமுமாகும்.

Aal-i-Imraan 3:186Listen in Qur'an →
187

وَإِذْ أَخَذَ ٱللَّهُ مِيثَٰقَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَٰبَ لَتُبَيِّنُنَّهُۥ لِلنَّاسِ وَلَا تَكْتُمُونَهُۥ فَنَبَذُوهُ وَرَآءَ ظُهُورِهِمْ وَٱشْتَرَوْا۟ بِهِۦ ثَمَنًۭا قَلِيلًۭا ۖ فَبِئْسَ مَا يَشْتَرُونَ

தவிர வேதம் கொடுக்கப்பட்டோரிடம் அவர்கள் அதை மக்களுக்குத் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும், அதை மறைக்கக் கூடாது என்று அல்லாஹ் உறுதி மொழி வாங்கியதை (அம்மக்களுக்கு நபியே! நீர் நினைவுபடுத்துவீராக). அப்பால், அவர்கள் அதைத் தங்கள் முதுகுகளுக்குப் பின்னால் எறிந்து விட்டு; அதற்குப் (பதிலாகச்) சொற்ப கிரயத்தைப் பெற்றுக் கொண்டார்கள் - அவர்கள் (இவ்வாறு) வாங்கிக் கொண்டது மிகக் கெட்டதாகும்.

தூதரே! வேதம்வழங்கப்பட்ட யூத மற்றும் கிருஸ்தவ அறிஞர்களிடம், “அல்லாஹ்வின் வேதத்தை நீங்கள் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்; அதிலுள்ள நேர்வழியையும் முஹம்மதின் தூதுத்துவத்தை அறிவிக்கக்கூடியதையும் மறைத்துவிடக்கூடாது” என்று அல்லாஹ் உறுதியான ஒப்பந்தம் வாங்கியதை நினைவுகூர்வீராக. அவர்கள் அந்த ஒப்பந்தத்தைப் பொருட்படுத்தாமல் புறக்கணித்துவிட்டார்கள். சத்தியத்தை மறைத்து அசத்தியத்தை வெளிப்படுத்தினார்கள். அல்லாஹ்விடம் செய்த ஒப்பந்தத்தை அவர்களுக்கு சில வேளை கிடைக்கும் பணம், பதவி போன்ற அற்ப கிரயத்திற்காக விற்றுவிட்டார்கள். அல்லாஹ்வின் ஒப்பந்ததிற்குப் பகரமாக இவர்கள் பெற்றுக்கொண்ட இந்தக் கிரயம் மோசமானதாகும்.

Aal-i-Imraan 3:187Listen in Qur'an →
188

لَا تَحْسَبَنَّ ٱلَّذِينَ يَفْرَحُونَ بِمَآ أَتَوا۟ وَّيُحِبُّونَ أَن يُحْمَدُوا۟ بِمَا لَمْ يَفْعَلُوا۟ فَلَا تَحْسَبَنَّهُم بِمَفَازَةٍۢ مِّنَ ٱلْعَذَابِ ۖ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌۭ

எவர் தாம் செய்த (சொற்பமான)தைப்பற்றி மகிழ்ச்சி கொண்டும்; தாம் செய்யாததை (செய்ததாகக் காட்டிக்) கொண்டு புகழ்படவேண்டும் என்று விருப்புகிறார்களோ, அவர்கள் வேதனையிலிருந்து வெற்றியடைந்து விட்டார்கள் என்று (நபியே!) நீர் ஒரு போதும் எண்ணாதீர் - அவர்களுக்கு நோவினை தரும் வேதனையுண்டு.

தூதரே! அருவருப்பான காரியங்களைச் செய்துவிட்டு சந்தோஷப்பட்டு தாங்கள் செய்யாத நற்செயல்களுக்காக மக்கள் தங்களைப் புகழ வேண்டும் என்று விரும்புபவர்கள் அல்லாஹ்வின் வேதனையை விட்டும் தப்பி விடுவார்கள் என்று நீர் எண்ண வேண்டாம். அவர்களின் இருப்பிடம் நரகமாகும். அங்கு அவர்களுக்கு வேதனைமிக்க தண்டனை உண்டு.

Aal-i-Imraan 3:188Listen in Qur'an →
189

وَلِلَّهِ مُلْكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۗ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ قَدِيرٌ

வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. இன்னும் அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.

வானங்களையும், பூமியையும், அவ்விரண்டிலும் உள்ளவற்றையும் படைத்து நிர்வகிக்கும் உரிமை அல்லாஹ்வுக்கே உரியது. அவன் ஒவ்வொரு பொருளின்மீதும் பேராற்றலுடையவன்.

Aal-i-Imraan 3:189Listen in Qur'an →
190

إِنَّ فِى خَلْقِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَٱخْتِلَٰفِ ٱلَّيْلِ وَٱلنَّهَارِ لَءَايَٰتٍۢ لِّأُو۟لِى ٱلْأَلْبَٰبِ

நிச்சயமாக, வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பிலும்; இரவும், பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு திடமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன.

வானங்களும் பூமியும் முன்மாதிரியின்றி இல்லாமையிலிருந்து படைக்கப்பட்டிருப்பதிலும் இரவும் பகலும் மாறிமாறி வருவதிலும், அவ்விரண்டின் நீண்ட, குறுகிய நேர ஏற்றத்தாழ்விலும் அறிவுடைய மக்களுக்கு தெளிவான அத்தாட்சிகள் இருக்கின்றன. அவை, அல்லாஹ் ஒருவன்தான் பிரபஞ்சத்தைப் படைத்தவன். அவன் மட்டுமே வணக்கத்திற்குத் தகுதியானவன் என்பதை தெளிவாக எடுத்துரைக்கின்றன.

Aal-i-Imraan 3:190Listen in Qur'an →

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.