Muslim99Muslim99
← Tafsir library

3. Aal-i-Imraan

The Family of Imraan · Medinan · 200 ayahs

سُورَةُ آلِ عِمۡرَانَ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 171–180 of 200

171

۞ يَسْتَبْشِرُونَ بِنِعْمَةٍۢ مِّنَ ٱللَّهِ وَفَضْلٍۢ وَأَنَّ ٱللَّهَ لَا يُضِيعُ أَجْرَ ٱلْمُؤْمِنِينَ

அல்லாஹ்விடமிருந்து தாங்கள் பெற்ற நிஃமத்துகள் (நற்பேறுகள்) பற்றியும், மேன்மையைப் பற்றியும் நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களுக்குரிய நற்கூலியை (ஒரு சிறிதும்) வீணாக்கி விடுவதில்லை. என்பதைப் பற்றியும் மகிழ்வடைந்தோராய் இருக்கின்றார்கள்.

இத்துடன்அவர்கள் அல்லாஹ்விடம் காத்திருக்கும் பெரும் கூலி, மேலதிகமான நன்மைகள் ஆகியவற்றைக் கொண்டும் மகிழ்ச்சியடைவார்கள். நம்பிக்கையாளர்களின் கூலியை அல்லாஹ் ஒருபோதும் வீணாக்கிவிட மாட்டான். அவன் அவர்களுக்கான கூலியை முழுமையாகவும் இன்னும் அதிகமாகவும் வழங்கிடுவான்.

Aal-i-Imraan 3:171Listen in Qur'an →
172

ٱلَّذِينَ ٱسْتَجَابُوا۟ لِلَّهِ وَٱلرَّسُولِ مِنۢ بَعْدِ مَآ أَصَابَهُمُ ٱلْقَرْحُ ۚ لِلَّذِينَ أَحْسَنُوا۟ مِنْهُمْ وَٱتَّقَوْا۟ أَجْرٌ عَظِيمٌ

அவர்கள் எத்ததையோரென்றால், தங்களுக்கு(ப் போரில்) காயம்பட்ட பின்னரும் அல்லாஹ்வுடையவும், (அவனுடைய) ரஸூலுடையவும் அழைப்பை ஏற்(று மீண்டும் போருக்குச் சென்)றனர்; அத்தகையோரில் நின்றும் யார் அழகானவற்றைச் செய்து, இன்னும் பாவத்திலிருந்து தங்களைக் காத்துக் கொள்கிறார்களோ அவர்களுக்கு மகத்தான நற்கூலியிருக்கிறது.

அல்லாஹ்வுடைய பாதையில் "ஹம்ராவுல்அஸத்" என்ற போரில் இணைவைப்பாளர்களுடன் போரிடுவதற்காக அவர்கள் அழைக்கப்பட்டபோது உஹதுப்போரில் காயமுற்றிருந்தும் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் இட்ட கட்டளைக்கு அவர்கள் கட்டுப்பட்டார்கள். அல்லாஹ்வும் அவனது தூதரும் அழைத்தபோது தங்களின் காயங்களைக் காட்டி அவர்கள் பின்தங்கிவிடவில்லை. அவர்களில் சிறந்த முறையில் செயல்பட்டு, அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சியவர்களுக்கு அவனிடம் சுவனம் என்னும் மகத்தான கூலி காத்திருக்கின்றது.

Aal-i-Imraan 3:172Listen in Qur'an →
173

ٱلَّذِينَ قَالَ لَهُمُ ٱلنَّاسُ إِنَّ ٱلنَّاسَ قَدْ جَمَعُوا۟ لَكُمْ فَٱخْشَوْهُمْ فَزَادَهُمْ إِيمَٰنًۭا وَقَالُوا۟ حَسْبُنَا ٱللَّهُ وَنِعْمَ ٱلْوَكِيلُ

மக்களில் சிலர் அவர்களிடம்; "திடமாக மக்களில் (பலர் உங்களுடன் போரிடுவதற்காகத்) திரண்டு விட்டார்கள், எனவே அப்படையைப்பற்றி அஞ்சிக் கொள்ளுங்கள்" என்று கூறி(அச்சுறுத்தி)னர்;. ஆனால் (இது) அவர்களின் ஈமானைப் பெருக்கி வலுப்படச் செய்தது. "அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன். அவனே எங்களுக்குச் சிறந்த பாதுகாவலன்" என்று அவர்கள் கூறினார்கள்.

அவர்களிடம் சில இணைவைப்பாளர்கள், “போரிட்டு உங்களை அழித்தொழிப்பதற்கு குறைஷிகள் அபூசுஃப்யானின் தலைமையில் பெரும்படைகளைத் திரட்டியுள்ளார்கள். எனவே எச்சரிக்கையாக இருங்கள், அவர்களை அஞ்சிக் கொள்ளுங்கள்” எனக் கூறியபோது இணைவைப்பாளர்களின் இந்தப் பேச்சு நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின்மீதும் அவனுடைய வாக்குறுதியின்மீதும் கொண்ட நம்பிக்கையை இன்னும் உறுதிப்படுத்தியது. “அல்லாஹ் எங்களுக்குப் போதுமானவன். அவனே எங்களுக்குப் பொறுப்பாளன். எங்களின் விவகாரங்களை அவனிடமே ஒப்படைக்கிறோம் என்று கூறியவர்களாக எதிரிகளைச் சந்திக்கப் புறப்பட்டார்கள்.

Aal-i-Imraan 3:173Listen in Qur'an →
174

فَٱنقَلَبُوا۟ بِنِعْمَةٍۢ مِّنَ ٱللَّهِ وَفَضْلٍۢ لَّمْ يَمْسَسْهُمْ سُوٓءٌۭ وَٱتَّبَعُوا۟ رِضْوَٰنَ ٱللَّهِ ۗ وَٱللَّهُ ذُو فَضْلٍ عَظِيمٍ

இதனால் அவர்கள் அல்லாஹ்விடமிருந்து நிஃமத்தையும் (அருட்கொடையையும்,) மேன்மையையும் பெற்றுத் திரும்பினார்கள். எத்தகைய தீங்கும் அவர்களைத் தீண்டவில்லை. (ஏனெனில்) அவர்கள் அல்லாஹ்வின் விருப்பத்தைப் பின்பற்றினார்கள் - அல்லாஹ் மகத்தான கொடையுடையவனாக இருக்கிறான்.

அவர்கள் ஹம்ராவுல்அஸதிலிருந்து அல்லாஹ்விடம் பெற்ற பெரும் நன்மையோடும் உயர்ந்த அந்தஸ்துகளோடும் திரும்பினார்கள். காயமோ உயிர்ச்சேதமோ அவர்களுக்கு ஏற்படாது எதிரிகளிடமிருந்தும் பாதுகாப்பாக திரும்பினர். அவர்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு அவனுக்கு மாறுசெய்யாது அவனைத் திருப்திபடுத்தும் செயல்களைப் பின்பற்றினார்கள். அல்லாஹ்வை நம்பிக்கைகொண்ட தன் அடியார்கள்மீது பேரருள் புரியக்கூடியவன்.

Aal-i-Imraan 3:174Listen in Qur'an →
175

إِنَّمَا ذَٰلِكُمُ ٱلشَّيْطَٰنُ يُخَوِّفُ أَوْلِيَآءَهُۥ فَلَا تَخَافُوهُمْ وَخَافُونِ إِن كُنتُم مُّؤْمِنِينَ

ஷைத்தான்தான் தன் சகாக்களைக் கொண்டும் இவ்வாறு பயமுறுத்துகிறான். ஆகவே நீங்கள் அவர்களுக்குப் பயப்படாதீர்கள் - நீங்கள் முஃமின்களாகயிருப்பின் எனக்கே பயப்படுங்கள்.

ஷைத்தான்தான் தன் உதவியாளர்களின் மூலம் உங்களை அச்சமூட்டுகிறான். எனவே அவர்களுக்கு நீங்கள் பயப்படாதீர்கள். ஏனெனில், அவர்களால் எதுவும் செய்ய முடியாது. நீங்கள் உண்மையாகவே நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ் ஒருவனுக்கே கீழ்ப்படிந்து அவனை அஞ்சுங்கள்.

Aal-i-Imraan 3:175Listen in Qur'an →
176

وَلَا يَحْزُنكَ ٱلَّذِينَ يُسَٰرِعُونَ فِى ٱلْكُفْرِ ۚ إِنَّهُمْ لَن يَضُرُّوا۟ ٱللَّهَ شَيْـًۭٔا ۗ يُرِيدُ ٱللَّهُ أَلَّا يَجْعَلَ لَهُمْ حَظًّۭا فِى ٱلْءَاخِرَةِ ۖ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ

"குஃப்ரில் அவர்கள் வேகமாகச் சென்று கொண்டிருப்பது உம்மைக்கவலை கொள்ளச் செய்ய வேண்டாம்;. நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கு ஒரு சிறு தீங்கும் செய்துவிட முடியாது. அல்லாஹ் அவர்களுக்கு மறுமையில் நற்பாக்கியம் எதுவும் ஆக்காமல் இருக்கவே நாடுகிறான்;. அவர்களுக்குப் பெரும் வேதனையும் உண்டு.

தூதரே! நயவஞ்சகர்கள் மதம்மாறி நிராகரிப்பில் விரைந்துசெல்வது உம்மைக் கவலைக்குள்ளாக்க வேண்டாம். அவர்களால் அல்லாஹ்வுக்கு எந்தத் தீங்கும் இழைத்துவிட முடியாது. அவர்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு, அவனுக்குக் கட்டுப்படுவதை விட்டும் தூரமாகி தங்களுக்குத் தாங்களே தீங்கிழைத்துக் கொள்கிறார்கள். இவ்வாறு அவர்களைக் கைவிடுவதனூடாக மறுமையின் இன்பங்களில் அவர்களுக்கு எந்தப் பங்கும் இருக்கக் கூடாது என்று அல்லாஹ் விரும்புகிறான். அங்கு நரகத்தில் அவர்களுக்கு கடுமையான வேதனையும் உண்டு.

Aal-i-Imraan 3:176Listen in Qur'an →
177

إِنَّ ٱلَّذِينَ ٱشْتَرَوُا۟ ٱلْكُفْرَ بِٱلْإِيمَٰنِ لَن يَضُرُّوا۟ ٱللَّهَ شَيْـًۭٔا وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌۭ

யார் (தங்கள்) ஈமானை விற்று (பதிலாக) குஃப்ரை விலைக்கு வாங்கிக் கொண்டார்களோ, அவர்கள் அல்லாஹ்வுக்கு ஒரு தீங்கும் செய்துவிடமுடியாது - மேலும் அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையும் உண்டு.

ஈமானுக்குப் பதிலாக நிராகரிப்பை வாங்கிக் கொண்டவர்கள் அல்லாஹ்வுக்கு எந்தத் தீங்கும் இழைத்துவிட முடியாது. அவர்கள் தங்களுக்குத் தாங்களே தீங்கிழைத்துக் கொள்கிறார்கள். மறுமையில் அவர்களுக்கு வேதனைமிக்க தண்டனை உண்டு.

Aal-i-Imraan 3:177Listen in Qur'an →
178

وَلَا يَحْسَبَنَّ ٱلَّذِينَ كَفَرُوٓا۟ أَنَّمَا نُمْلِى لَهُمْ خَيْرٌۭ لِّأَنفُسِهِمْ ۚ إِنَّمَا نُمْلِى لَهُمْ لِيَزْدَادُوٓا۟ إِثْمًۭا ۚ وَلَهُمْ عَذَابٌۭ مُّهِينٌۭ

இன்னும், அவர்களை (உடனுக்குடன் தண்டிக்காமல்) நாம் தாமதிப்பது (அந்த) காஃபிர்களுக்கு - நிராகரிப்பவர்களுக்கு - நல்லது என்று அவர்கள் கருத வேண்டாம்; (தண்டனையை) நாம் அவர்களுக்குத் தாமதப் படுத்துவதெல்லாம் அவர்கள் பாவத்தை அதிகமாக்குவதற்கே தான் - அவர்களுக்கு இழிவு தரும் வேதனையும் உண்டு.

தங்கள் இறைவனை நிராகரித்து அவனுடைய சட்டங்களுக்கு மாறாகச் செயல்படுபவர்கள், தமது இறைநிராகரிப்பில் தமக்கு வழங்கப்பட்ட அவகாசத்தையும் நீண்ட ஆயுளையும் தமக்கு நன்மையென எண்ணிவிட வேண்டாம். அவர்கள் எண்ணுவது போலல்ல. நாம் அவர்களுக்கு அவகாசம் அளிப்பதெல்லாம் அவர்களின் பாவச்சுமைகளை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகத்தான். அவர்களுக்கு இழிவுதரும் வேதனை உண்டு.

Aal-i-Imraan 3:178Listen in Qur'an →
179

مَّا كَانَ ٱللَّهُ لِيَذَرَ ٱلْمُؤْمِنِينَ عَلَىٰ مَآ أَنتُمْ عَلَيْهِ حَتَّىٰ يَمِيزَ ٱلْخَبِيثَ مِنَ ٱلطَّيِّبِ ۗ وَمَا كَانَ ٱللَّهُ لِيُطْلِعَكُمْ عَلَى ٱلْغَيْبِ وَلَٰكِنَّ ٱللَّهَ يَجْتَبِى مِن رُّسُلِهِۦ مَن يَشَآءُ ۖ فَـَٔامِنُوا۟ بِٱللَّهِ وَرُسُلِهِۦ ۚ وَإِن تُؤْمِنُوا۟ وَتَتَّقُوا۟ فَلَكُمْ أَجْرٌ عَظِيمٌۭ

(காஃபிர்களே!) தீயவர்களை நல்லவர்களைவிட்டும் பிரித்தறிவிக்கும் வரையில் முஃமின்களை நீங்கள் இருக்கும் நிலையில் அல்லாஹ் விட்டு வைக்க (நாட)வில்லை. இன்னும், அல்லாஹ் உங்களுக்கு மறைவானவற்றை அறிவித்து வைப்பவனாகவும் இல்லை. ஏனெனில் (இவ்வாறு அறிவிப்பதற்கு) அல்லாஹ் தான் நாடியவரைத் தன் தூதர்களிலிருந்து தேர்ந்தெடுக்கிறான். ஆகவே அல்லாஹ்வின் மீதும், அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்;. நீங்கள் நம்பிக்கை கெண்டு பயபக்தியுடன் நடப்பீர்களாயின் உங்களுக்கு மகத்தான நற்கூலியுண்டு.

நம்பிக்கையாளர்களே! அல்லாஹ், நயவஞ்சகர்களையும் உண்மையான நம்பிக்கையாளர்களையும் வேறுபடுத்தாமல் நீங்கள் இருக்கும் நிலையிலேயே அப்படியே உங்களை விட்டுவிடுவது அல்லாஹ்வின் ஞானத்திற்கு ஏற்புடையதல்ல. பொறுப்புகளையும் சோதனைகளையும் அளித்து உங்களில் நம்பிக்கையாளர்களையும் நயவஞ்சகர்களையும் அவன் வேறுபடுத்துவான். நம்பிக்கையாளர்களையும் நயவஞ்சகர்களையும் நீங்களே வேறுபடுத்திக்கொள்ளும் வகையில் உங்களுக்கு அவன் மறைவான விஷயங்களை அறிவிப்பதும் அவனது ஞானத்திற்கு ஏற்புடையதல்ல. ஆயினும் அல்லாஹ் தூதர்களில் தான் நாடியவர்களைத் தேர்ந்தெடுத்து அவருக்கு மறைவான விஷயங்களில் சிலவற்றை அறிவித்தும் கொடுக்கிறான். முஹம்மது நபிக்கு நயவஞ்சகர்களைக் குறித்து அறிவித்தது போன்று. எனவே அல்லாஹ்வின்மீதும் அவனுடைய தூதரின்மீதும் கொண்ட நம்பிக்கையை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் அல்லாஹ்வின்மீது உண்மையாகவே நம்பிக்கைகொண்டு, அவனுடைய கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சினால் உங்களுக்கு அல்லாஹ்விடம் மகத்தான கூலி இருக்கின்றது.

Aal-i-Imraan 3:179Listen in Qur'an →
180

وَلَا يَحْسَبَنَّ ٱلَّذِينَ يَبْخَلُونَ بِمَآ ءَاتَىٰهُمُ ٱللَّهُ مِن فَضْلِهِۦ هُوَ خَيْرًۭا لَّهُم ۖ بَلْ هُوَ شَرٌّۭ لَّهُمْ ۖ سَيُطَوَّقُونَ مَا بَخِلُوا۟ بِهِۦ يَوْمَ ٱلْقِيَٰمَةِ ۗ وَلِلَّهِ مِيرَٰثُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۗ وَٱللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌۭ

அல்லாஹ் தன் அருளினால் தங்களுக்குக் கொடுத்திருக்கும் பொருட்களில் யார் உலோபத்தனம் செய்கிறார்களோ அது தமக்கு நல்லது என்று (அவர்கள்) நிச்சயமாக எண்ண வேண்டாம் - அவ்வாறன்று! அது அவர்களுக்குத் தீங்குதான்;. அவர்கள் உலோபத்தனத்தால் சேர்த்து வைத்த (பொருட்கள்) எல்லாம் மறுமையில் அவர்கள் கழுத்தில் அரிகண்டமாக போடப்படும்;. வானங்கள், பூமி ஆகியவற்றில் (இருக்கும் அனைத்துக்கும்) அனந்தர பாத்தியதை அல்லாஹ்வுக்கே உரியதாகும். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் அறிகிறான்.

அல்லாஹ் தங்களுக்கு வழங்கிய அருட்கொடைகளில் அல்லாஹ்வுக்கு செய்ய வேண்டிய கடமையைத் தடுத்து, கஞ்சத்தனம் செய்பவர்கள், அதனைத் தங்களுக்கு நல்லதென எண்ண வேண்டாம். மாறாக அது அவர்களுக்குத் தீங்காகும். மறுமைநாளில் அவர்கள் கஞ்சத்தனம் செய்த பொருட்கள் அவர்களின் கழுத்துகளில் மாட்டப்பட்டு வேதனைப்படுத்தப்படுவார்கள். வானங்களிலும் பூமியிலும் ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது. படைப்புகள் அனைத்தும் அழிந்த பிறகும் அவன் என்றென்றும் நிலைத்திருப்பான். நீங்கள் செய்யும் நுனுக்கமானவற்றையும் அல்லாஹ் நன்கறிந்தவன். அவற்றிற்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான்.

Aal-i-Imraan 3:180Listen in Qur'an →

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.