Muslim99Muslim99
← Tafsir library

3. Aal-i-Imraan

The Family of Imraan · Medinan · 200 ayahs

سُورَةُ آلِ عِمۡرَانَ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 141–150 of 200

141

وَلِيُمَحِّصَ ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَيَمْحَقَ ٱلْكَٰفِرِينَ

நம்பிக்கை கொண்டோரை பரிசுத்த மாக்குவதற்கும், காஃபிர்களை அழிப்பதற்கும் அல்லாஹ் இவ்வாறு செய்கின்றான்.

நம்பிக்கையாளர்களை அவர்களின் பாவங்களிலிருந்து தூய்மைப்படுத்துவது, அவர்களின் அணியை நயவஞ்சகர்களை விட்டும் பிரித்தெடுப்பது, நிராகரிப்பாளர்களை வேரோடு அழித்துவிடுவது ஆகியவைகளும் அந்த நோக்கங்களில் சிலவாகும்.

Aal-i-Imraan 3:141Listen in Qur'an →
142

أَمْ حَسِبْتُمْ أَن تَدْخُلُوا۟ ٱلْجَنَّةَ وَلَمَّا يَعْلَمِ ٱللَّهُ ٱلَّذِينَ جَٰهَدُوا۟ مِنكُمْ وَيَعْلَمَ ٱلصَّٰبِرِينَ

உங்களில் (அல்லாஹ்வின் பாதையில் உறுதியாகப்) போர் புரிபவர்கள் யார் என்றும், (அக்காலை) பொறுமையைக் கடைப்பிடிப்பவர்கள் யார் என்றும் அல்லாஹ் (பரிசோதித்து) அறியாமல் நீங்கள் சுவனபதியில் நுழைந்து விடலாம் என்று எண்ணிக் கொண்டு இருக்கின்றீர்களா?

நம்பிக்கையாளர்களே! சோதனை, பொறுமை ஆகியவற்றை அனுபவிக்காமல் நீங்கள் சுவனம் சென்றுவிடலாம் என்று எண்ணிக் கொண்டீர்களா?அவற்றின் மூலமே அல்லாஹ்வின் பாதையில் உண்மையாகவே போர்புரிவோர், தமக்கு நேரும் சோதனையை பொறுமையுடன் எதிர்கொள்வோர் யார் என்பது தெளிவாகும்.

Aal-i-Imraan 3:142Listen in Qur'an →
143

وَلَقَدْ كُنتُمْ تَمَنَّوْنَ ٱلْمَوْتَ مِن قَبْلِ أَن تَلْقَوْهُ فَقَدْ رَأَيْتُمُوهُ وَأَنتُمْ تَنظُرُونَ

நீங்கள் மரணத்தைச் சந்திப்பதற்கு முன்னமே நிச்சயமாக நீங்கள் அதை விரும்பினீர்ளே! இப்போது அது உங்கள் கண்முன் இருப்பதை நீங்கள் திட்டமாகப் பார்த்துக் கொண்டீர்கள். (இப்போது ஏன் தயக்கம்?)

நம்பிக்கையாளர்களே! மரணத்தின் காரணிகளையும் அதன் கடுமையையும் நீங்கள் சந்திக்கும் முன்னரே பத்ருப்போரில் கொல்லப்பட்ட உங்கள் சகோதரர்களைப்போன்று நிராகரிப்பாளர்களை போர்க்களத்தில் சந்தித்து அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட வேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டுக் கொண்டிருந்தீர்கள். இதோ, இந்த உஹதுப்போரிலே நீங்கள் ஆசைப்பட்டதைக் நேரடியாகவே கண்டுகொண்டீர்கள்.

Aal-i-Imraan 3:143Listen in Qur'an →
144

وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٌۭ قَدْ خَلَتْ مِن قَبْلِهِ ٱلرُّسُلُ ۚ أَفَإِي۟ن مَّاتَ أَوْ قُتِلَ ٱنقَلَبْتُمْ عَلَىٰٓ أَعْقَٰبِكُمْ ۚ وَمَن يَنقَلِبْ عَلَىٰ عَقِبَيْهِ فَلَن يَضُرَّ ٱللَّهَ شَيْـًۭٔا ۗ وَسَيَجْزِى ٱللَّهُ ٱلشَّٰكِرِينَ

முஹம்மது(ஸல்) (இறைவனின்) தூதரே அன்றி(வேறு) அல்லர்;. அவருக்கு முன்னரும் (அல்லாஹ்வின்) தூதர்கள் பலர் (காலம்) சென்றுவிட்டார்கள்;. அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டால்; நீங்கள் உங்கள் குதிகால்களின் மேல் (புறங்காட்டித்) திரும்பி விடுவீர்களா? அப்படி எவரேனும் தம் குதிகால்கள்மேல் (புறங்காட்டி) திரும்பி விடுவாரானால் அவர் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும் செய்துவிட முடியாது. அன்றியும், அல்லாஹ் நன்றியுடையோருக்கு அதிசீக்கிரத்தில் நற்கூலியை வழங்குவான்.

இறந்துவிட்ட அல்லது கொல்லப்பட்ட முந்தைய தூதர்களைப்போல முஹம்மதுவும் ஒரு தூதர்தாம். அவர் இறந்துவிட்டாலோ கொல்லப்பட்டுவிட்டாலோ நீங்கள் ஜிஹாதை விட்டுவிட்டு உங்களின் மார்க்கத்தை விட்டு திரும்பி விடுவீர்களா என்ன? உங்களில் அல்லாஹ்வின் மார்க்கத்தை விட்டுத் திரும்பிவிடுபவர் அல்லாஹ்விக்கு எந்தத் தீங்கையும் இழைத்துவிட முடியாது. அவன் யாவற்றையும் மிகைத்தவன், வல்லமைமிக்கவன். மதம்மாறுபவர் இவ்வுலகிலும் மறுவுலகிலும் இழப்பிற்குள்ளாகி தனக்குத் தானே தீங்கைிழைத்துக்கொள்கிறார். தன் மார்க்கத்தில் உறுதியாக நிலைத்திருந்து, ஜிஹாது செய்து தனக்கு நன்றிசெலுத்தும் அடியார்களுக்கு அல்லாஹ் அழகிய கூலியை வழங்குவான்.

Aal-i-Imraan 3:144Listen in Qur'an →
145

وَمَا كَانَ لِنَفْسٍ أَن تَمُوتَ إِلَّا بِإِذْنِ ٱللَّهِ كِتَٰبًۭا مُّؤَجَّلًۭا ۗ وَمَن يُرِدْ ثَوَابَ ٱلدُّنْيَا نُؤْتِهِۦ مِنْهَا وَمَن يُرِدْ ثَوَابَ ٱلْءَاخِرَةِ نُؤْتِهِۦ مِنْهَا ۚ وَسَنَجْزِى ٱلشَّٰكِرِينَ

மேலும், எந்த ஆன்மாவும் (முன்னரே) எழுதப்பட்டிருக்கும் தவணைக்கு இணங்க, அல்லாஹவின் அனுமதியின்றி, மரணிப்பதில்லை. எவரேனும் இந்த உலகத்தின் பலனை (மட்டும்) விரும்பினால், நாம் அவருக்கு அதிலிருந்தே வழங்குவோம்;. இன்னும் எவர், மறுமையின் நன்மையை விரும்புகிறாரோ அவருக்கு அதிலிருந்து வழங்குவோம்;. நன்றியுடையோருக்கு அதி சீக்கரமாக நற்கூலி கொடுக்கிறோம்.

அல்லாஹ் எழுதிவைத்த தவணை நிறைவடையும் முன்னர் எந்த உயிரும் மரணிக்காது. அந்தத் தவணைக் காலம் கூடவோ குறையவோமாட்டாது. எவர் தம்முடைய செயல்களின்மூலம் இவ்வுலக நன்மையை விரும்புகிறாரோ நாம் அவருக்கு விதித்த அளவு வழங்குவோம். மறுமையில் அவருக்கு எந்தப் பங்கும் இல்லை. எவர் தம்முடைய செயல்களின்மூலம் மறுமையை விரும்புவாரோ நாம் அவருக்கு அதற்குரிய கூலியை வழங்குவோம். தங்கள் இறைவனுக்கு நன்றிசெலுத்தும் அடியார்களுக்கு நாம் மிகப்பெரும் கூலியை வழங்கிடுவோம்.

Aal-i-Imraan 3:145Listen in Qur'an →
146

وَكَأَيِّن مِّن نَّبِىٍّۢ قَٰتَلَ مَعَهُۥ رِبِّيُّونَ كَثِيرٌۭ فَمَا وَهَنُوا۟ لِمَآ أَصَابَهُمْ فِى سَبِيلِ ٱللَّهِ وَمَا ضَعُفُوا۟ وَمَا ٱسْتَكَانُوا۟ ۗ وَٱللَّهُ يُحِبُّ ٱلصَّٰبِرِينَ

மேலும் எத்தனையோ நபிமார்கள், அவர்களுடன் ரிப்பிய்யூன்கள் (என்னும் இறையடியார்களும்) பெருமளவில் சேர்ந்து (அல்லாஹ்வின் பாதையில்) போர் செய்தனர்;. எனினும், அல்லாஹ்வின் பாதையில் அவர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களால் அவர்கள் தைரியம் இழந்து விடவில்லை, பலஹீனம் அடைந்து விடவுமில்லை. (எதிரிகளுக்குப்) பணிந்து விடவுமில்லை - அல்லாஹ் (இத்தகைய) பொறுமையாளர்களையே நேசிக்கின்றான்.

எத்தனையோ இறைத்தூதர்களுடன் சேர்ந்து அவர்களைப் பின்பற்றிய ஏராளமானவர்கள் போரிட்டுள்ளார்கள். அல்லாஹ்வின் பாதையில் தங்களுக்கு ஏற்பட்ட உயிர்ச்சேதத்தாலும் காயங்களாலும் அவர்கள் ஜிஹாதைக் கைவிட்டு பலவீனமடைந்துவிடவுமில்லை. எதிரிகளுக்குப் பணிந்துவிடவுமில்லை. பொறுமையாகவும் உறுதியாகவும் நின்றார்கள். தன் பாதையில் ஏற்படும் துன்பங்களைச் சகித்துக்கொண்டு பொறுமையாக இருப்பவர்களையே அல்லாஹ் நேசிக்கிறான்.

Aal-i-Imraan 3:146Listen in Qur'an →
147

وَمَا كَانَ قَوْلَهُمْ إِلَّآ أَن قَالُوا۟ رَبَّنَا ٱغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِىٓ أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا وَٱنصُرْنَا عَلَى ٱلْقَوْمِ ٱلْكَٰفِرِينَ

மேலும், "எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களையும் எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறிச் செய்தவற்றையும் மன்னித் தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாய் இருக்கச் செய்வாயாக! காஃபிர்களின் கூட்டத்தாருக்கு எதிராக எங்களுக்கு நீ உதவி புரிவாயாக" என்பதைத் தவிர (இம்மாதிரி சந்தர்ப்பங்களில்) அவர்கள் கூறியது வேறெதும் இல்லை.

இந்தப் பொறுமையாளர்கள் துன்பங்களால் பாதிக்கப்பட்டபோது, “எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களையும் எங்களின் விஷயத்தில் நாங்கள் வரம்புமீறியதையும் மன்னித்துவிடுவாயாக. எதிரிகளை சந்திக்கும்போது எங்களை உறுதிப்படுத்துவாயாக. உன்னை நிராகரித்த மக்களுக்கு எதிராக எங்களுக்கு உதவிபுரிவாயாக என்ற பிரார்த்தனையைத் தவிர வேறு எதனையும் கூறவில்லை.

Aal-i-Imraan 3:147Listen in Qur'an →
148

فَـَٔاتَىٰهُمُ ٱللَّهُ ثَوَابَ ٱلدُّنْيَا وَحُسْنَ ثَوَابِ ٱلْءَاخِرَةِ ۗ وَٱللَّهُ يُحِبُّ ٱلْمُحْسِنِينَ

ஆகவே, அல்லாஹ் அவர்களுக்கு இவ்வுலகத்தில் நன்மையையும், மறுமையின் அழகிய நன்மையையும் கொடுத்தான்;. இன்னும், அல்லாஹ் நன்மை செய்யும் இத்தகையோரையே நேசிக்கின்றான்.

எனவே அல்லாஹ் அவர்களுக்கு உதவிசெய்தும் அதிகாரத்தை வழங்கியும் இவ்வுலகில் வெகுமதியை வழங்கினான். அவர்களைப் பொருந்திக் கொண்டு அருட்கொடைகள் அடங்கிய சுவனங்களில் நிரந்தரமான இன்பத்தை அளிப்பதன் மூலம் மறுமையிலும் அவர்களுக்கு நற்கூலியை அவன் வழங்குவான். வணக்க வழிபாட்டிலும் அன்றாட நடவடிக்கைகளிலும் சிறந்த முறையில் செயல்படுபவர்களையே அல்லாஹ் நேசிக்கிறான்.

Aal-i-Imraan 3:148Listen in Qur'an →
149

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِن تُطِيعُوا۟ ٱلَّذِينَ كَفَرُوا۟ يَرُدُّوكُمْ عَلَىٰٓ أَعْقَٰبِكُمْ فَتَنقَلِبُوا۟ خَٰسِرِينَ

நம்பிக்கை கொண்டோரே! காஃபிர்களுக்கு நீங்கள் வழிபட்டு நடந்தால், அவர்கள் உங்களை உங்கள் குதி கால்களின் மீது திருப்பி விடுவார்கள்;. அப்போது, நீங்கள் நஷ்டமடைந்தவர்களாக (நம்பிக்கையினின்றும்) திரும்பி விடுவீர்கள்.

அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! நிராகரித்த யூதர்கள், கிருஸ்தவர்கள் மற்றும் இணைவைப்பாளர்களுக்கு அவர்கள் ஏவும் வழிகேடான விஷயங்களில் நீங்கள் கட்டுப்பட்டால் உங்களின் நம்பிக்கைக்குப் பிறகு உங்களை நிராகரிப்பாளர்களாக்கிவிடுவார்கள். அதனால் இவ்வுலகிலும் மறுவுலகிலும் நீங்கள் நஷ்டமடைந்தவர்களாக ஆகிவிடுவீர்கள்.

Aal-i-Imraan 3:149Listen in Qur'an →
150

بَلِ ٱللَّهُ مَوْلَىٰكُمْ ۖ وَهُوَ خَيْرُ ٱلنَّٰصِرِينَ

(இவர்களல்ல.) அல்லாஹ்தான் உங்களை இரட்சித்துப் பரிபாலிப்பவன். இன்னும் அவனே உதவியாளர்கள் அனைவரிலும் மிகவும் நல்லவன்.

இந்த நிராகரிப்பாளர்களுக்கு நீங்கள் கீழ்ப்படிந்தால் அவர்களால் ஒருபோதும் உங்களுக்கு உதவ முடியாது. மாறாக அல்லாஹ்தான் உங்களின் எதிரிகளுக்கு எதிராக உங்களுக்கு உதவக்கூடியவன். எனவே அவனுக்கே கீழ்ப்படியுங்கள். அவனே மிகச் சிறந்த உதவியாளன். அவனைத்தவிர உங்களுக்கு யாருடைய உதவியும் தேவையில்லை.

Aal-i-Imraan 3:150Listen in Qur'an →

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.