Muslim99Muslim99
← Tafsir library

3. Aal-i-Imraan

The Family of Imraan · Medinan · 200 ayahs

سُورَةُ آلِ عِمۡرَانَ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 131–140 of 200

131

وَٱتَّقُوا۟ ٱلنَّارَ ٱلَّتِىٓ أُعِدَّتْ لِلْكَٰفِرِينَ

தவிர (நரக) நெருப்பிற்கு அஞ்சுங்கள், அது காஃபிர்களுக்காக சித்தம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

நற்காரியங்கள் புரிந்து தடுக்கப்பட்டவற்றைத் தவிர்ந்து உங்களுக்கும் தன்னை நிராகரித்தோர்களுக்கு அல்லாஹ் தயாரித்து வைத்துள்ள நரகிற்கும் இடையில் தடையை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.

Aal-i-Imraan 3:131Listen in Qur'an →
132

وَأَطِيعُوا۟ ٱللَّهَ وَٱلرَّسُولَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ

அல்லாஹ்வுக்கும், (அவன்) தூதருக்கும் கீழ்படியுங்கள்;. நீங்கள் (அதனால் அல்லாஹ்வினால்) கிருபை செய்யப்படுவீர்கள்.

கட்டளைகளைச் செயல்படுத்தி தடுக்கப்பட்டவைகளை தவிர்ந்து அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள். இதனால் நீங்கள் இவ்வுலகிலும் மறுவுலகிலும் அருளைப் பெறலாம்.

Aal-i-Imraan 3:132Listen in Qur'an →
133

۞ وَسَارِعُوٓا۟ إِلَىٰ مَغْفِرَةٍۢ مِّن رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا ٱلسَّمَٰوَٰتُ وَٱلْأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ

இன்னும் நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும், சுவனபதியின் பக்கமும் விரைந்து செல்லுங்கள்;. அதன் (சுவனபதியின்) அகலம் வானங்கள், பூமியைப் போலுள்ளது. அது பயபக்தியுடையோருக்காகவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது.

நற்காரியங்களாற்றுவதன் பக்கமும் பலவித வணக்கங்களின் மூலம் அவனை நெருங்குவதன் பக்கமும் விரையுங்கள். அதனால் அல்லாஹ்வின் பெரும்மன்னிப்பைப் பெற்று வானங்கள் மற்றும் பூமியின் அளவு விசாலமான சுவனத்தில் நுழைவீர்கள். தன்னை அஞ்சும் அடியார்களுக்காகவே அல்லாஹ் அதனைத் தயார்படுத்திவைத்துள்ளான்.

Aal-i-Imraan 3:133Listen in Qur'an →
134

ٱلَّذِينَ يُنفِقُونَ فِى ٱلسَّرَّآءِ وَٱلضَّرَّآءِ وَٱلْكَٰظِمِينَ ٱلْغَيْظَ وَٱلْعَافِينَ عَنِ ٱلنَّاسِ ۗ وَٱللَّهُ يُحِبُّ ٱلْمُحْسِنِينَ

(பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்,) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்;. தவிர கோபத்தை அடக்கிக் கொள்வார்கள். மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள். (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான்.

இறையச்சமுடையவர்களே செல்வ நிலையிலும் வறுமை நிலையிலும் தங்களின் செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்வார்கள். பழிவாங்குவதற்கான வாய்ப்பைப் பெற்றிருந்தும் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வார்கள். தமக்கு அநீதி இழைத்தவர்களை மன்னித்துவிடுவார்கள். இத்தகைய பண்புகளை உடைய நல்லவர்களையே அல்லாஹ் நேசிக்கிறான்.

Aal-i-Imraan 3:134Listen in Qur'an →
135

وَٱلَّذِينَ إِذَا فَعَلُوا۟ فَٰحِشَةً أَوْ ظَلَمُوٓا۟ أَنفُسَهُمْ ذَكَرُوا۟ ٱللَّهَ فَٱسْتَغْفَرُوا۟ لِذُنُوبِهِمْ وَمَن يَغْفِرُ ٱلذُّنُوبَ إِلَّا ٱللَّهُ وَلَمْ يُصِرُّوا۟ عَلَىٰ مَا فَعَلُوا۟ وَهُمْ يَعْلَمُونَ

தவிர, மானக் கேடான ஏதேனும் ஒரு செயலை அவர்கள் செய்துவிட்டாலும், அல்லது (ஏதேனும் பாவத்தினால்) தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டாலும். உடனே அவர்கள் (மனப்பூர்வமாக) அல்லாஹ்வை நினைத்து தங்கள் பாவங்களுக்காக மன்னிப்புத் தேடுவார்கள்;. அல்லாஹ்வைத் தவிர வேறு யார் பாவங்களை மன்னிக்க முடியும்? மேலும், அவர்கள் அறிந்து கொண்டே தங்கள் (பாவ) காரியங்களில் தரிபட்டிருந்து விடமாட்டார்கள்.

அவர்கள் பெரும் பாவம் செய்தாலோ சிறு பாவத்தில் ஈடுபட்டு தமக்குத் தாமே அநியாயம் இழைத்துக்கொண்டாலோ அல்லாஹ்வை நினைவுகூர்வார்கள். பாவிகளுக்கு அவன் விடுத்த எச்சரிக்கைகளையும் அவனை அஞ்சக்கூடியவர்களுக்கு அவன் அளித்த வாக்குறுதியையும் நினைத்துப் பார்ப்பார்கள். தங்கள் பாவங்களை மறைத்துவிடுமாறும் தண்டிக்காமல் விட்டுவிடுமாறும் கைசேதப்பட்டவர்களாக தங்கள் இறைவனிடம் மன்றாடுவார்கள். ஏனெனில் அல்லாஹ் ஒருவன் மட்டுமே பாவங்களை மன்னிக்கக்கூடியவன். அறிந்துகொண்டே தங்களின் பாவங்களில் நிலைத்திருக்க மாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் அனைத்தையும் மன்னிக்கக்கூடியவன்.

Aal-i-Imraan 3:135Listen in Qur'an →
136

أُو۟لَٰٓئِكَ جَزَآؤُهُم مَّغْفِرَةٌۭ مِّن رَّبِّهِمْ وَجَنَّٰتٌۭ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ خَٰلِدِينَ فِيهَا ۚ وَنِعْمَ أَجْرُ ٱلْعَٰمِلِينَ

அத்தகையோருக்குரிய (நற்) கூலி, அவர்களுடைய இறைவனிடமிருந்து மன்னிப்பும், சுவனபதிகளும் ஆகும்;. அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டே இருக்கும்;. அவர்கள் அங்கே என்றென்றும் இருப்பர்;. இத்தகைய காரியங்கள் செய்வோரின் கூலி நல்லதாக இருக்கிறது.

மிகச் சிறந்த இந்த பண்புகளை உடையவர்களது பாவங்களை அல்லாஹ் மறைத்து, மன்னித்துவிடுவான். மறுமையில் அவர்களுக்குச் சுவனங்கள் இருக்கின்றன. அவற்றின் மாளிகைகளுக்குக் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அங்கு அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு செயல்படக்கூடியவர்களின் கூலி சிறப்பானதாகும்.

Aal-i-Imraan 3:136Listen in Qur'an →
137

قَدْ خَلَتْ مِن قَبْلِكُمْ سُنَنٌۭ فَسِيرُوا۟ فِى ٱلْأَرْضِ فَٱنظُرُوا۟ كَيْفَ كَانَ عَٰقِبَةُ ٱلْمُكَذِّبِينَ

உங்களுக்கு முன் பல வழி முறைகள் சென்றுவிட்டன. ஆகவே, நீங்கள் பூமியில் சுற்றி வந்து (இறை வசனங்களைப்) பொய்யாக்கியோரின் முடிவு என்ன ஆயிற்று என்பதைப் பாருங்கள்.

உஹதுப்போரில் ஏற்பட்ட இழப்புகளால் நம்பிக்கையாளர்கள் சோதனைக்குள்ளாக்கப்பட்டபோது அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக அல்லாஹ் கூறினான்: நிராகரிப்பாளர்களை அழிப்பதிலும், நம்பிக்கையாளர்களைச் சோதித்த பிறகு இறுதி முடிவை அவர்களுக்கு சாதகமாக ஆக்குவதிலும் இறைவனின் நியதிகள் உங்களுக்கு முன்னரும் நிகழ்ந்தே இருக்கின்றன.அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் நிராகரித்தவர்களின் கதி என்னவாயிற்று, என்பதை பூமியில் பயணம் செய்து படிப்பினை பெறும் கண்ணோட்டத்தோடு பாருங்கள். அவர்களின் வசிப்பிடங்கள் வெற்றிடமாகி விட்டன. அவர்களின் ஆட்சி நீங்கிவிட்டது.

Aal-i-Imraan 3:137Listen in Qur'an →
138

هَٰذَا بَيَانٌۭ لِّلنَّاسِ وَهُدًۭى وَمَوْعِظَةٌۭ لِّلْمُتَّقِينَ

இது மனிதர்களுக்கு (சத்தியத்தின்) தெளிவான விளக்கமாகவும், பயபக்தியுடையோருக்கு நேர் வழிகாட்டியாகவும், நற்போதனையாகவும் இருக்கின்றது.

கண்ணியமிக்க இந்த குர்ஆன் சத்தியத்தைத் தெளிவுபடுத்தக்கூடியதாகவும் அசத்தியத்திலிருந்து மனிதர்கள் அனைவரையும் எச்சரிக்கக்கூடியதாகவும் நேர்வழிகாட்டக்கூடியதாகவும் அல்லாஹ்வை அஞ்சக்கூடியவர்களுக்கு அறிவுரையாகவும் இருக்கின்றது. ஏனெனில் அவர்கள்தாம் இதிலுள்ள வழிகாட்டுதலைக் கொண்டு பயனடையக்கூடியவர்கள்.

Aal-i-Imraan 3:138Listen in Qur'an →
139

وَلَا تَهِنُوا۟ وَلَا تَحْزَنُوا۟ وَأَنتُمُ ٱلْأَعْلَوْنَ إِن كُنتُم مُّؤْمِنِينَ

எனவே நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள்;. கவலையும் கொல்லாதீர்கள்; நீங்கள் முஃமின்களாக இருந்தால் நீங்கள் தாம் உன்னதமானவர்களாக இருப்பீர்கள்.

நம்பிக்கையாளர்களே! உஹதுப்போரில் உங்களுக்கு ஏற்பட்ட துன்பங்களால் பலவீனமடைந்து விடாதீர்கள், கவலைப்படாதீர்கள். அது உங்களுக்கு உகந்ததும் அல்ல. நீங்கள் அல்லாஹ்வின்மீதும் அவன் தன்னை அஞ்சும் அடியார்களுக்கு அளித்த வாக்குறுதியின்மீதும் நம்பிக்கைகொண்டவர்களாக இருந்தால் உங்களின் நம்பிக்கையினால், அல்லாஹ்வின் உதவியினால், அவனது உதவியில் கொண்டிருக்கும் ஆதரவினால் நீங்கள்தாம் உயர்ந்தவர்கள்.

Aal-i-Imraan 3:139Listen in Qur'an →
140

إِن يَمْسَسْكُمْ قَرْحٌۭ فَقَدْ مَسَّ ٱلْقَوْمَ قَرْحٌۭ مِّثْلُهُۥ ۚ وَتِلْكَ ٱلْأَيَّامُ نُدَاوِلُهَا بَيْنَ ٱلنَّاسِ وَلِيَعْلَمَ ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَيَتَّخِذَ مِنكُمْ شُهَدَآءَ ۗ وَٱللَّهُ لَا يُحِبُّ ٱلظَّٰلِمِينَ

உங்களுக்கு ஒரு காயம் ஏற்பட்டது என்றால், அதே போன்று மற்றவர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இத்தகைய (சோதனைக்) காலங்களை மனிதர்களிடையே நாமே மாறி மாறி வரச் செய்கின்றோம்;. இதற்குக் காரணம், ஈமான் கொணடடோரை அல்லாஹ் அறிவதற்கும், உங்களில் உயிர்த் தியாகம் செய்வோரை தேர்ந்தெடுத்துக் கொள்வதற்குமே ஆகும்;. இன்னும், அல்லாஹ் அநியாயம் செய்வோரை நேசிப்பதில்லை.

நம்பிக்கையாளர்களே! உஹதுப்போரில் உங்களுக்கு உயிர்ச் சேதங்களும் காயங்களும் ஏற்பட்டிருந்தால் உங்களைப்போன்றே நிராகரிப்பாளர்களுக்கும் உயிர்ச் சேதங்களும் காயங்களும் ஏற்பட்டிருக்கின்றன. நம்பிக்கைகொண்ட, நிராகரித்த மக்களிடையே உயர்ந்த நோக்கங்களுக்காக அல்லாஹ் தான் நாடியவாறு வெற்றியையும் தோல்வியையும் காலத்துக்குக் காலம் மாறிமாறி வரச் செய்கின்றான். உண்மையான நம்பிக்கையாளர்களை நயவஞ்சகர்களிடமிருந்து வேறுபடுத்துதல்; தான் விரும்பும் அடியார்களுக்கு தன் பாதையில் மரணிக்கச் செய்வதன் மூலம் கவுரவித்தல் ஆகியன அந்த நோக்கங்களில் சிலவாகும். அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாது செய்வதை விட்டுவிட்டு தமக்குத் தாமே அநீதியிழைத்துக் கொண்ட அநியாயக்காரர்களை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.

Aal-i-Imraan 3:140Listen in Qur'an →

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.