Muslim99Muslim99
← Tafsir library

3. Aal-i-Imraan

The Family of Imraan · Medinan · 200 ayahs

سُورَةُ آلِ عِمۡرَانَ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 121–130 of 200

121

وَإِذْ غَدَوْتَ مِنْ أَهْلِكَ تُبَوِّئُ ٱلْمُؤْمِنِينَ مَقَٰعِدَ لِلْقِتَالِ ۗ وَٱللَّهُ سَمِيعٌ عَلِيمٌ

(நபியே! நினைவு கூர்வீராக) நீர் விடியற்காலையில் உம் குடும்பத்தாரை விட்டுச் சென்று முஃமின்களைப் போருக்காக (உஹது களத்தில் அவரவர்) இடத்தில் நிறுத்தினீர்;. அல்லாஹ் எல்லாவற்றையும் செவியுறுவோனாகவும் நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.

தூதரே! இணைவைப்பாளர்களுடன் போரிடுவதற்காக நீர் மதீனாவிலிருந்து உஹதை நோக்கி காலைப்பொழுதில் புறப்பட்ட சந்தர்ப்பத்தை நினைவுகூர்வீராக!. போரிடுவதற்காக நம்பிக்கையாளர்களை அவர்களுக்குரிய இடத்தில் நிறுத்தி ஒவ்வொருவருக்கும் அவரவருக்குரிய இடத்தை நீர் தெளிவுபடுத்தினீர். நீங்கள் பேசுவதை அல்லாஹ் செவியேற்பவன்; உங்களின் செயல்களை அவன் நன்கறிந்தவன்.

Aal-i-Imraan 3:121Listen in Qur'an →
122

إِذْ هَمَّت طَّآئِفَتَانِ مِنكُمْ أَن تَفْشَلَا وَٱللَّهُ وَلِيُّهُمَا ۗ وَعَلَى ٱللَّهِ فَلْيَتَوَكَّلِ ٱلْمُؤْمِنُونَ

(அந்தப் போரில்) உங்களில் இரண்டு பிரிவினர் தைரியம் இழந்து (ஓடி விடலாமா) என்று எண்ணியபோது - அல்லாஹ் அவ்விரு பிரிவாருக்கும் (உதவி செய்து) காப்போனாக இருந்தான்;. ஆகவே முஃமின்கள் அல்லாஹ்விடத்திலேயே முழு நம்பிக்கை வைக்கவேண்டும்.

தூதரே! பின்வரும் சம்பவத்தை நினைவுபார்ப்பீராக: “பனூசலமா, பனூ ஹாரிசா என்ற இரு கூட்டத்தினரும் பலவீனமடைந்து நயவஞ்சகர்களோடு திரும்பிச் செல்ல நாடினார்கள். போர்புரிவதற்கு அவர்களை உறுதிப்படுத்தி, அவர்கள் நாடியதை விட்டும் திருப்பி அல்லாஹ்வே அவர்களுக்கு உதவிசெய்தான். நம்பிக்கையாளர்கள் எல்லா சூழ்நிலைகளிலும் அல்லாஹ்வின்மீதே நம்பிக்கைவைக்க வேண்டும்.”

Aal-i-Imraan 3:122Listen in Qur'an →
123

وَلَقَدْ نَصَرَكُمُ ٱللَّهُ بِبَدْرٍۢ وَأَنتُمْ أَذِلَّةٌۭ ۖ فَٱتَّقُوا۟ ٱللَّهَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ

"பத்று" போரில் நீங்கள் மிகவும் சக்தி குறைந்தவர்களாக இருந்த போது, அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தான்;. ஆகவே நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.

பத்ருப்போரில் எண்ணிக்கையிலும் ஆயுதங்களிலும் ஏற்பட்ட பற்றாக்குறையினால் நீங்கள் பலவீனர்களாக இருந்தபோதும் இணைவைப்பாளர்களுக்கு எதிராக அல்லாஹ் உங்களுக்கு உதவிபுரிந்தான். அவன் உங்கள்மீது பொழிந்த அருட்கொடைகளுக்கு நன்றிசெலுத்தும் பொருட்டு அவனையே அஞ்சுங்கள்.

Aal-i-Imraan 3:123Listen in Qur'an →
124

إِذْ تَقُولُ لِلْمُؤْمِنِينَ أَلَن يَكْفِيَكُمْ أَن يُمِدَّكُمْ رَبُّكُم بِثَلَٰثَةِ ءَالَٰفٍۢ مِّنَ ٱلْمَلَٰٓئِكَةِ مُنزَلِينَ

(நபியே!) முஃமின்களிடம் நீர் கூறினீர்; "உங்கள் ரப்பு (வானிலிருந்து) இறக்கப்பட்ட மூவாயிரம் வானவர்களைக் கொண்டு உங்களுக்கு உதவி செய்வது உங்களுக்குப் போதாதா?" என்று.

தூதரே! பத்ருப்போரில் இணைவைப்பாளர்களுக்கு உதவிப்படைகள் வந்ததை கேள்விப்பட்ட நம்பிக்கையாளர்களை நீர் உறுதிப்படுத்தி அவர்களிடம், “போரில் உங்களை பலப்படுத்துவதற்காக இறக்கப்பட்ட மூவாயிரம் வானவர்களைக்கொண்டு அல்லாஹ் உங்களுக்கு உதவிசெய்வது போதாதா?” எனக் கூறியதை நினைத்துப் பார்ப்பீராக.

Aal-i-Imraan 3:124Listen in Qur'an →
125

بَلَىٰٓ ۚ إِن تَصْبِرُوا۟ وَتَتَّقُوا۟ وَيَأْتُوكُم مِّن فَوْرِهِمْ هَٰذَا يُمْدِدْكُمْ رَبُّكُم بِخَمْسَةِ ءَالَٰفٍۢ مِّنَ ٱلْمَلَٰٓئِكَةِ مُسَوِّمِينَ

ஆம்! நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து பொறுமையுடனிருந்தால், பகைவர்கள் உங்கள் மேல் வேகமாக வந்து பாய்ந்த போதிலும், உங்கள் இறைவன் போர்க்குறிகள் கொண்ட ஐயாயிரம் வானவர்களைக் கொண்டும் உங்களுக்கு உதவி புரிவான்.

நிச்சயமாக, இது உங்களுக்குப் போதுமானதுதான். உங்களுக்கு அல்லாஹ்விடமிருந்து இன்னொரு உதவியைப் பற்றிய ஒரு நற்செய்தியும் உண்டு, நீங்கள் போர்க்களத்தில் பொறுமையாக இருந்து, அல்லாஹ்வை அஞ்சினால், உங்கள் எதிரிகளுக்கு உதவிப்படைகள் வந்து அவர்கள் உங்களை நோக்கி விரைந்து வந்தால், தமக்கும் தமது குதிரைகளுக்கும் வெளிப்படையான அடையாளமிட்டுக்கொண்ட ஐயாயிரம் வானவர்களைக் கொண்டு அல்லாஹ் உங்களுக்கு உதவிசெய்வான்.

Aal-i-Imraan 3:125Listen in Qur'an →
126

وَمَا جَعَلَهُ ٱللَّهُ إِلَّا بُشْرَىٰ لَكُمْ وَلِتَطْمَئِنَّ قُلُوبُكُم بِهِۦ ۗ وَمَا ٱلنَّصْرُ إِلَّا مِنْ عِندِ ٱللَّهِ ٱلْعَزِيزِ ٱلْحَكِيمِ

உங்கள் இருதயங்கள் (அவ்வுதவியில் நின்றும்) நிம்மதியடையவும், ஒரு நல்ல செய்தியாகவுமே தவிர (வேறெதற்குமாக) அல்லாஹ் அதைச் செய்யவில்லை. அல்லாஹ் விடத்திலல்லாமல் வேறு உதவியில்லை. அவன் மிக்க வல்லமையுடையவன்; மிகுந்த ஞானமுடையவன்.

வானவர்களைக் கொண்டு உதவும் இந்த உதவியை அல்லாஹ் உங்கள் உள்ளங்கள் அமைதியடையக் கூடிய நன்மாராயமாகவே ஆக்கியுள்ளான். இல்லாவிட்டால் உண்மையில் வெற்றி என்பது இது போன்ற வெளிப்படையான காரணிகளை மட்டும் கொண்டு கிடைக்கமாட்டாது. உண்மையான வெற்றி அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கிறது. அவன் யாவற்றையும் மிகைத்தவன். யாராலும் அவனை மிகைக்க முடியாது. தனது நிர்ணயத்திலும் சட்டமியற்றுவதிலும் அவன் ஞானம்மிக்கவன்.

Aal-i-Imraan 3:126Listen in Qur'an →
127

لِيَقْطَعَ طَرَفًۭا مِّنَ ٱلَّذِينَ كَفَرُوٓا۟ أَوْ يَكْبِتَهُمْ فَيَنقَلِبُوا۟ خَآئِبِينَ

(அல்லாஹ்வுடைய உதவியின் நோக்கம்) நிராகரிப்போரில் ஒரு பகுதியினரை அழிப்பதற்கு, அல்லது அவர்கள் சிறுமைப்பட்டுத் தோல்வியடைந்தோராய்த் திரும்பிச் செல்வதற்காகவுமேயாகும்.

பத்ருப்போரில் உங்களுக்குக் கிடைத்த இந்த வெற்றியின் மூலம், நிராகரிப்பாளர்களில் ஒருபிரிவினரை அழிக்க வேண்டும் எனவும், ஒரு பிரிவினரை இழிவுபடுத்தி தோல்வியுறச் செய்து கோபமூட்டி தோல்வியுடனும் இழிவோடும் அவர்கள் திரும்பிச்செல்ல வேண்டும் என்பதையுமே அல்லாஹ் நாடினான்.

Aal-i-Imraan 3:127Listen in Qur'an →
128

لَيْسَ لَكَ مِنَ ٱلْأَمْرِ شَىْءٌ أَوْ يَتُوبَ عَلَيْهِمْ أَوْ يُعَذِّبَهُمْ فَإِنَّهُمْ ظَٰلِمُونَ

(நபியே!) உமக்கு இவ்விஷயத்தில் ஒரு சம்பந்தமும் இல்லை. அவன் அவர்களை மன்னித்து விடலாம்;. அல்லது அவர்களை வேதனைப்படுத்தலாம் - நிச்சயமாக அவர்கள் கொடியோராக இருப்பதின் காரணமாக.

உஹதுப்போரில் இணைவைப்பாளர்களின் தலைவர்களினால் ஏற்பட்ட சம்பவங்களுக்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் அவர்களை அழித்துவிடும்படி பிரார்த்தனை செய்தபோது அல்லாஹ் அவரிடம் கூறினான்: “உமக்கு எந்த அதிகாரமும் இல்லை. அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ் உங்களிடையே தீர்ப்பளிக்கும்வரை அல்லது அவர்களுக்குப் பாவமன்னிப்புக்கான வாய்ப்பு கொடுக்கப்பட்டு அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும்வரை அல்லது அவர்கள் நிராகரிப்பில் நிலைத்திருந்து அவன் அவர்களுக்குத் தண்டனையளிக்கும்வரை பொறுமையாக இருப்பீராக. நிச்சயமாக அவர்கள் தண்டனைக்குரிய அநியாயக்காரர்களாவர்.

Aal-i-Imraan 3:128Listen in Qur'an →
129

وَلِلَّهِ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ ۚ يَغْفِرُ لِمَن يَشَآءُ وَيُعَذِّبُ مَن يَشَآءُ ۚ وَٱللَّهُ غَفُورٌۭ رَّحِيمٌۭ

வானங்களிலும், பூமியிலும் உள்ளவையெல்லாம் அல்லாஹ்வுக்கே உரியவை. தான் நாடியவர்களை அவன் மன்னிக்கின்றான்;. இன்னும் தான் நாடியவர்களை வேதனைப்படுத்தவும் செய்கின்றான் - அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன், பெருங்கருணையாளன்.

வானங்களிலும் பூமியிலும் நிர்வகிக்கும் அதிகாரமும் படைக்கும் அதிகாரமும் அல்லாஹ்வுக்கே உரியது. தான் நாடிய அடியார்களின் பாவங்களை தன் கருணையால் அவன் மன்னித்துவிடுகிறான். தான் நாடியவர்களை தன் நீதியால் தண்டிக்கிறான். தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களின் பாவங்களை அவன் மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களின் விஷயத்தில் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.

Aal-i-Imraan 3:129Listen in Qur'an →
130

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تَأْكُلُوا۟ ٱلرِّبَوٰٓا۟ أَضْعَٰفًۭا مُّضَٰعَفَةًۭ ۖ وَٱتَّقُوا۟ ٱللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ

ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்;. இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி (இதைத் தவிர்த்துக் கொண்டால்) வெற்றியடைவீர்கள்.

அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! அறியாமைக்கால மக்கள் செய்துகொண்டிருந்ததுபோல நீங்கள் அளித்த கடனுக்கு பன்மடங்காக வட்டி வாங்குவதை தவிர்ந்துகொள்ளுங்கள். அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்தவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சிக் கொள்ளுங்கள். இதனால் நீங்கள் இவ்வுலகிலும் மறுவுலகிலும் நீங்கள் விரும்பும் நன்மைகளைப் பெறலாம்.

Aal-i-Imraan 3:130Listen in Qur'an →

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.