Muslim99Muslim99
← Tafsir library

3. Aal-i-Imraan

The Family of Imraan · Medinan · 200 ayahs

سُورَةُ آلِ عِمۡرَانَ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 111–120 of 200

111

لَن يَضُرُّوكُمْ إِلَّآ أَذًۭى ۖ وَإِن يُقَٰتِلُوكُمْ يُوَلُّوكُمُ ٱلْأَدْبَارَ ثُمَّ لَا يُنصَرُونَ

இத்தகையோர் உங்களுக்குச் சிறிது தொல்லைகள் உண்டு பண்ணுவதைத் தவிர (பெரும்) தீங்கு எதுவும் செய்துவிட முடியாது. அவர்கள் உங்களிடம் போரிட வந்தாலும், அவர்கள் உங்களுக்குப் புறங்காட்டி (ஓடி) விடுவார்கள்;. இன்னும் அவர்கள் (எவராலும்) உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.

நம்பிக்கையாளர்களே! அவர்கள் உங்களை எவ்வளவுதான் வெறுத்தாலும் உங்களின் மார்க்கத்திலோ உயிர்களுக்கோ அவர்களால் சேதம் விளைவிக்க முடியாது. ஆயினும் மார்க்கத்தைக் குறைகூறுதல், உங்களைப் பரிகசித்தல் போன்ற செயல்களைச் செய்து தம் நாவுகளால் உங்களுக்குத் தொல்லையளிப்பார்கள். அவர்கள் உங்களுடன் போரிட்டால் உங்கள் எதிரில் தோல்வியுற்றோராக ஓடிவிடுவார்கள். உங்களுக்கு எதிராக அவர்கள் உதவிசெய்யப்பட மாட்டார்கள்.

Aal-i-Imraan 3:111Listen in Qur'an →
112

ضُرِبَتْ عَلَيْهِمُ ٱلذِّلَّةُ أَيْنَ مَا ثُقِفُوٓا۟ إِلَّا بِحَبْلٍۢ مِّنَ ٱللَّهِ وَحَبْلٍۢ مِّنَ ٱلنَّاسِ وَبَآءُو بِغَضَبٍۢ مِّنَ ٱللَّهِ وَضُرِبَتْ عَلَيْهِمُ ٱلْمَسْكَنَةُ ۚ ذَٰلِكَ بِأَنَّهُمْ كَانُوا۟ يَكْفُرُونَ بِـَٔايَٰتِ ٱللَّهِ وَيَقْتُلُونَ ٱلْأَنۢبِيَآءَ بِغَيْرِ حَقٍّۢ ۚ ذَٰلِكَ بِمَا عَصَوا۟ وَّكَانُوا۟ يَعْتَدُونَ

அவர்கள், எங்கிருப்பினும் அவர்கள் மீது இழிவு விதிக்கப்பட்டுள்ளது. அல்லாஹ்விடமிருந்தும், மனிதர்களிடமிருந்தும் அவர்களுக்கு(ப் பாதுகாவலான) ஒப்பந்தமின்றி (அவர்கள் தப்ப முடியாது). அல்லாஹ்வின் கோபத்தில் அவர்கள் சிக்கிக் கொண்டார்கள்;. ஏழ்மையும் அவர்கள் மீது விதிக்கப்பட்டு விட்டது. இது ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வின் ஆயத்களை நிராகரித்தார்கள்;. அநியாயமாக நபிமார்களை கொலை செய்தார்கள்;. இன்னும் அவர்கள் பாவம் செய்து கொண்டும் (இறையாணையை) மீறி நடந்து கொண்டும் இருந்தது தான் (காரணமாகும்).

யூதர்கள் எங்கு காணப்படினும் இழிவும் சிறுமையும் அவர்களைச் சூழ்ந்தே இருக்கும். ஆயினும் அவர்கள் அல்லாஹ்விடமோ மக்களிடமோ ஏதேனும் ஒப்பந்தத்தையோ பாதுகாப்பையோ பெற்றாலே தவிர. அவர்கள் அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகிவிட்டார்கள். அல்லாஹ்வின் வசனங்களை மறுத்ததனாலும் அவனுடைய தூதர்களை அநியாயமாக கொலை செய்ததனாலும் அவனுடைய கட்டளைக்கு மாறாகச் செயல்பட்டு அவன் விதித்த வரம்பை மீறியதனாலும் வறுமையும் பஞ்சமும் அவர்களைச் சூழ்ந்துகொண்டன.

Aal-i-Imraan 3:112Listen in Qur'an →
113

۞ لَيْسُوا۟ سَوَآءًۭ ۗ مِّنْ أَهْلِ ٱلْكِتَٰبِ أُمَّةٌۭ قَآئِمَةٌۭ يَتْلُونَ ءَايَٰتِ ٱللَّهِ ءَانَآءَ ٱلَّيْلِ وَهُمْ يَسْجُدُونَ

(ஏனினும் வேதத்தையுடையோராகிய) அவர்கள் (எல்லோரும்) சமமல்லர்;. வேதத்தையுடையோரில் ஒரு சமுதாயத்தினர் (நேர்மைக்காக) நிற்கிறார்கள்;. இரவு நேரங்களில் அல்லாஹ்வின் வசனங்களை ஓதுகிறார்கள். இன்னும் (இறைவனுக்கு சிரம்பணிந்து) ஸஜ்தா செய்கிறார்கள்.

வேதக்காரர்கள் அனைவரும் சமமானவர்கள் அல்ல. அவர்களில் அல்லாஹ்வின் மார்க்கத்தில் நிலைத்திருக்கக்கூடிய ஒருகூட்டம் இருக்கின்றதனர். அவர்கள் அல்லாஹ்வின் ஏவல் விலக்கல்களைப் பேணுகின்றனர். இரவுநேரங்களில் தொழுதவர்களாக அல்லாஹ்வின் வசனங்களை ஓதுகின்றனர். இந்த கூட்டத்தினர் முஹம்மது நபியின் வருகைக்கு முன்னர் இருந்தவர்களாகும். அவர்களில் நபியவர்களை அடைந்தவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள்.

Aal-i-Imraan 3:113Listen in Qur'an →
114

يُؤْمِنُونَ بِٱللَّهِ وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِ وَيَأْمُرُونَ بِٱلْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ ٱلْمُنكَرِ وَيُسَٰرِعُونَ فِى ٱلْخَيْرَٰتِ وَأُو۟لَٰٓئِكَ مِنَ ٱلصَّٰلِحِينَ

அவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்கிறார்கள்;. நல்லதை(ச் செய்ய) ஏவுகிறார்கள். தீமையை விட்டும் விலக்குகிறார்கள்;. மேலும், நன்மை செய்வதற்கு விரைகின்றனர்;. இவர்களே ஸாலிஹான (நல்லடியார்களில்) நின்றுமுள்ளவர்கள்.

அவர்கள் அல்லாஹ்வின்மீதும் மறுமைநாளின்மீதும் உறுதியான நம்பிக்கைகொள்கிறார்கள்; நன்மையான விஷயங்களைச் செய்யத் தூண்டுகிறார்கள்; தீயவற்றை விட்டும் தடுக்கிறார்கள்; நன்மையான செயல்களின்பால் விரைந்து சிறப்புமிக்க காலங்களை பயன்படுத்திக்கொள்கிறார்கள். இந்த பண்புகளை உடையவர்கள்தாம் சிறந்த எண்ணமும் செயல்களும் உடைய அல்லாஹ்வின் நல்லடியார்களாகும்.

Aal-i-Imraan 3:114Listen in Qur'an →
115

وَمَا يَفْعَلُوا۟ مِنْ خَيْرٍۢ فَلَن يُكْفَرُوهُ ۗ وَٱللَّهُ عَلِيمٌۢ بِٱلْمُتَّقِينَ

இவர்கள் செய்யும் எந்த நன்மையம் (நற்கூலி கொடுக்கப்படாமல்) புறக்கணிக்கப்படாது. அன்றியும், அல்லாஹ் பயபக்தியுடையோரை நன்றாக அறிகிறான்.

இவர்கள் குறைவாகவோ அதிகமாகவோ செய்யும் எந்த நற்காரியத்தின் கூலியும் ஒருபோதும் வீணாகிவிடவோ குறைந்துவிடவோ மாட்டாது. தன் கட்டளைகளைச் செயல்படுத்தி, தான் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி தன்னை அஞ்சக்கூடியவர்களை அல்லாஹ் நன்கறிந்தவன். அவர்கள் செய்யும் எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் அவர்களுக்கு கூலி வழங்குவான்.

Aal-i-Imraan 3:115Listen in Qur'an →
116

إِنَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ لَن تُغْنِىَ عَنْهُمْ أَمْوَٰلُهُمْ وَلَآ أَوْلَٰدُهُم مِّنَ ٱللَّهِ شَيْـًۭٔا ۖ وَأُو۟لَٰٓئِكَ أَصْحَٰبُ ٱلنَّارِ ۚ هُمْ فِيهَا خَٰلِدُونَ

நிச்சயமாக எவர் நிராகரிக்கின்றார்களோ, அவர்களைவிட்டு அவர்களுடைய செல்வமும், அவர்களுடைய சந்ததியும், அல்லாஹ்விடமிருந்து எந்த ஒரு பொருளையும் காப்பாற்ற முடியாது - அவர்கள் நரக நெருப்பிற்குரியவர்கள்; அவர்கள் அதில் என்றென்றும் இருப்பார்கள்.

அல்லாஹ்வையும் அவனது தூதர்களையும் நிராகரித்தவர்களின் செல்வங்களோ பிள்ளைகளோ அல்லாஹ்வின் வேதனையிலிருந்து அவர்களை சிறிதும் காப்பாற்றிவிடாது. அவனது அருளையும் வரவழைக்காது. மாறாக அவை அவர்களின் வேதனையையும் வருத்தத்தையுமே அதிகப்படுத்தும். இவர்கள்தாம் நரகவாசிகள். என்றென்றும் அங்கு வீழ்ந்துகிடப்பார்கள்.

Aal-i-Imraan 3:116Listen in Qur'an →
117

مَثَلُ مَا يُنفِقُونَ فِى هَٰذِهِ ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا كَمَثَلِ رِيحٍۢ فِيهَا صِرٌّ أَصَابَتْ حَرْثَ قَوْمٍۢ ظَلَمُوٓا۟ أَنفُسَهُمْ فَأَهْلَكَتْهُ ۚ وَمَا ظَلَمَهُمُ ٱللَّهُ وَلَٰكِنْ أَنفُسَهُمْ يَظْلِمُونَ

இவ்வுலக வாழ்வில் அவர்கள் செலவழிப்பது ஒரு காற்றுக்கு ஒப்பாகும்;. அது (மிகவும்) குளிர்ந்து (பனிப்புயலாக மாறி) தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்ட அக்கூட்டத்தாரின் (வயல்களிலுள்ள) விளைச்சலில்பட்டு அதை அழித்துவிடுகிறது - அவர்களுக்கு அல்லாஹ் கொடுமை செய்யவில்லை. அவர்கள் தமக்குத் தாமே கொடுமையிழைத்துக் கொள்கிறார்கள்.

இந்த நிராகரிப்பாளர்கள் நன்மையான விஷயங்களில் செலவு செய்து அதன் பிரதிபலனை எதிர்பார்ப்பதற்கு உதாரணம் கடுங்குளிர் அடங்கிய காற்றைப் போன்றதாகும். அது பாவங்கள் செய்து தமக்குத்தாமே அநீதி இழைத்துக் கொண்டவர்களின் வயல்களில் வீசி அதனை நாசப்படுத்திவிட்டது. அவர்கள் அதிலிருந்து அதிகமான நன்மைகளை எதிர்பார்த்தார்கள். அவர்கள் பயன்பெறமுடியாதவாறு அந்தக் காற்று பயிர்களை அழித்துவிட்டது போன்றே நிராகரிப்பு அவர்கள் ஆதரவு வைத்திருக்கும் செயல்களின் கூலியையும் வீணாக்கிவிடும். அல்லாஹ் அவர்கள்மீது அநீதி இழைக்கவில்லை. அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் நிராகரித்ததன் காரணமாக அவர்கள்தான் தமக்குத்தாமே அநீதி இழைத்துக் கொண்டார்கள்.

Aal-i-Imraan 3:117Listen in Qur'an →
118

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تَتَّخِذُوا۟ بِطَانَةًۭ مِّن دُونِكُمْ لَا يَأْلُونَكُمْ خَبَالًۭا وَدُّوا۟ مَا عَنِتُّمْ قَدْ بَدَتِ ٱلْبَغْضَآءُ مِنْ أَفْوَٰهِهِمْ وَمَا تُخْفِى صُدُورُهُمْ أَكْبَرُ ۚ قَدْ بَيَّنَّا لَكُمُ ٱلْءَايَٰتِ ۖ إِن كُنتُمْ تَعْقِلُونَ

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் உங்(கள் மார்க்கத்தைச் சார்ந்தோர்)களைத் தவிர (வேறெவரையும்) உங்களின் அந்தரங்கக் கூட்டாளிகளாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்;. ஏனெனில் (பிறர்) உங்களுக்குத் தீமை செய்வதில் சிறிதும் குறைவு செய்ய மாட்டார்கள்;. நீங்கள் வருந்துவதை அவர்கள் விரும்புவார்கள்;. அவர்கள் உங்கள் மேல் கொண்டுள்ள கடுமையான வெறுப்பு அவர்கள் வாய்களிலிருந்தே வெளியாகிவிட்டது. அவர்கள் நெஞ்சங்கள் மறைத்து வைத்திருப்பதோ இன்னும் அதிகமாகும்;. நிச்சயமாக நாம் (இது பற்றிய) ஆயத்களைத் தெளிவு படுத்திவிட்டோம்;. நீங்கள் உணர்வுடையோரானால் (இதை அறிந்து கொள்வீர்கள்).

அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! நம்பிக்கையாளர்களை விடுத்து மற்றவர்களை உங்கள் இரகசியங்களையும் பிரத்யேக நிலமைகளையும் நீங்கள் தெரிவிக்கும் உற்ற நண்பர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். அவர்கள் உங்களுக்குத் தீங்குவிளைவிப்பதில் சோர்ந்துவிட மாட்டார்கள். உங்களுக்கு சிரமம்,தீங்கு ஏற்படுவதையே அவர்கள் விரும்புகிறார்கள். உங்கள்மீதான பகைமையும் வெறுப்பும் அவர்களின் நாவுகளில் வெளிப்பட்டுவிட்டது. அவர்கள் உங்கள் மார்க்கத்தைக் குறைகூறுகிறார்கள்; உங்களிடையே சண்டை மூட்டுகிறார்கள்; உங்களின் இரகசியங்களை வெளிப்படுத்துகிறார்கள். அவர்களின் உள்ளங்களில் மறைத்துவைத்திருக்கும் வெறுப்போ மிகக் கடுமையானது. நம்பிக்கையாளர்களே! உங்கள் இரட்சகனிடத்திலிருந்து இறக்கப்பட்டதை நீங்கள் விளங்கிக் கொள்பவர்களாக இருந்தால் இவ்வுலக மறுவுலக நலவுகளுக்கான தெளிவான ஆதாரங்களை நாம் தெளிவுபடுத்திவிட்டோம்.

Aal-i-Imraan 3:118Listen in Qur'an →
119

هَٰٓأَنتُمْ أُو۟لَآءِ تُحِبُّونَهُمْ وَلَا يُحِبُّونَكُمْ وَتُؤْمِنُونَ بِٱلْكِتَٰبِ كُلِّهِۦ وَإِذَا لَقُوكُمْ قَالُوٓا۟ ءَامَنَّا وَإِذَا خَلَوْا۟ عَضُّوا۟ عَلَيْكُمُ ٱلْأَنَامِلَ مِنَ ٱلْغَيْظِ ۚ قُلْ مُوتُوا۟ بِغَيْظِكُمْ ۗ إِنَّ ٱللَّهَ عَلِيمٌۢ بِذَاتِ ٱلصُّدُورِ

(முஃமின்களே!) அறிற்து கொள்ளுங்கள்;. நீங்கள் அவர்களை நேசிப்போராய் இருக்கின்றீர்கள் - ஆனால் அவர்கள் உங்களை நேசிக்கவில்லை. நீங்கள் வேதத்தை முழுமையாக நம்புகிறீர்கள்;. ஆனால் அவர்களோ உங்களைச் சந்திக்கும் போது "நாங்களும் நம்புகிறோம்" என்று கூறுகிறார்கள்;. எனினும் அவர்கள் (உங்களை விட்டு விலகித்) தனியாக இருக்கும் போது, அவர்கள் உங்கள் மேலுள்ள ஆத்திரத்தினால் (தம்) விரல் நுனிகளைக் கடித்துக்கொள்கிறார்கள். (நபியே!) நீர் கூறும்; "நீங்கள் உங்கள் ஆத்திரத்தில் இறந்து விடுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) உள்ளங்களில் உள்ளவற்றை அறிந்தவன்".

நம்பிக்கையாளர்களே! நீங்கள் அந்தக் கூட்டத்தை விரும்புகிறீர்கள். அவர்களுக்கு நன்மையை நாடுகிறீர்கள். ஆனால் அவர்களோ உங்களை விரும்புவதில்லை; உங்களுக்கு நன்மையையும் நாடுவதில்லை. மாறாக உங்களை வெறுக்கிறார்கள். நீங்கள் அவர்களது வேதங்கள் உட்பட அனைத்து வேதங்களையும் நம்புகிறீர்கள். ஆனால் அவர்கள் உங்களின் தூதரான முஹம்மதுமீது அல்லாஹ் இறக்கியதை நம்ப மறுக்கிறார்கள். அவர்கள் உங்களை சந்தித்தால், ‘நாங்கள் நம்புகிறோம்’ என்று கூறுகிறார்கள். ஆனால் அவர்களில் சிலர் சிலருடன் தனித்துவிட்டால் உங்களின் ஒற்றுமையையும் இஸ்லாத்தின் கண்ணியத்தையும் அவர்களது இழிவையும் கண்டு கோபத்தாலும் கவலையாலும் தங்களின் விரல்களின் நுனிகளை கடித்துக் கொள்கிறார்கள். உள்ளங்களிலுள்ள ஈமானையும் நிராகரிப்பையும், நன்மையையும் தீமையையும் அல்லாஹ் நன்கறிந்தவன்.

Aal-i-Imraan 3:119Listen in Qur'an →
120

إِن تَمْسَسْكُمْ حَسَنَةٌۭ تَسُؤْهُمْ وَإِن تُصِبْكُمْ سَيِّئَةٌۭ يَفْرَحُوا۟ بِهَا ۖ وَإِن تَصْبِرُوا۟ وَتَتَّقُوا۟ لَا يَضُرُّكُمْ كَيْدُهُمْ شَيْـًٔا ۗ إِنَّ ٱللَّهَ بِمَا يَعْمَلُونَ مُحِيطٌۭ

ஏதாவது ஒரு நன்மை உங்களுக்கு ஏற்பட்டால், அது அவர்களுக்கு வருத்தத்தை கொடுக்கிறது. உங்களுக்கு ஏதாவது தீமை ஏற்பட்டால், அதற்காக அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். நீங்கள் பொறுமையுடனும், பயபக்தியுடனுமிருந்தால் அவர்களுடைய சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீமையும் செய்யாது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை (எல்லாம்) சூழ்ந்து அறிகிறவன்.

நம்பிக்கையாளர்களே! எதிரிகளுக்கு எதிரான வெற்றி, செல்வ வளம், குழந்தைகள் என்று ஏதேனும் அருட்கொடைகளை அவர்கள் உங்களிடம் கண்டால் கவலையடைந்து விடுகிறார்கள். எதிரிகளின் ஆதிக்கம், செல்வங்களிலும் குழந்தைகளிலும் ஏற்படும் இழப்பு போன்ற துன்பங்கள் உங்களுக்கு ஏற்படுவதைக் கண்டால் அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். நீங்கள் அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவனுடைய விதியை பொறுமையை ஏற்றுக்கொண்டு அவனுடைய கோபத்திலிருந்து தவிர்ந்திருந்தால் அவர்களின் சூழ்ச்சியும் நோவினையும் உங்களுக்கு எந்தத் தீங்கும் அளிக்காது. அவர்கள் செய்யும் சூழ்ச்சிகளை அல்லாஹ் சூழ்ந்துள்ளான். அவன் அவர்களை தோல்வியடைந்தோராக திருப்பிவிடுவான்.

Aal-i-Imraan 3:120Listen in Qur'an →

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.