Muslim99Muslim99
← Tafsir library

3. Aal-i-Imraan

The Family of Imraan · Medinan · 200 ayahs

سُورَةُ آلِ عِمۡرَانَ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 101–110 of 200

101

وَكَيْفَ تَكْفُرُونَ وَأَنتُمْ تُتْلَىٰ عَلَيْكُمْ ءَايَٰتُ ٱللَّهِ وَفِيكُمْ رَسُولُهُۥ ۗ وَمَن يَعْتَصِم بِٱللَّهِ فَقَدْ هُدِىَ إِلَىٰ صِرَٰطٍۢ مُّسْتَقِيمٍۢ

அவனுடைய ரஸூல் உங்களிடையே இருந்து கொண்டு; - அல்லாஹ்வின் ஆயத்கள் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கக்கூடிய (நிலையில்) இருந்து கொண்டு, நீங்கள் எவ்வாறு நிராகரிப்பீர்கள்? மேலும், எவர் அல்லாஹ்வை (அவன் மார்க்கத்தை) வலுவாகப் பற்றிக் கொள்கிறாரோ, அவர் நிச்சயமாக நேர்வழியில் செலுத்தப்பட்டுவிட்டார்.

நம்பிக்கையில் நிலைத்திருப்பதற்கான மிகச் சிறந்த காரணியை நீங்கள் பெற்றிருந்தும் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டபின் எவ்வாறு அவனை நிராகரிக்கிறீர்கள்?! அல்லாஹ்வின் வசனங்கள் உங்களுக்கு ஓதிக் காட்டப்படுகிறதே! அவனுடைய தூதர் முஹம்மது அவற்றை உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறாரே! அல்லாஹ்வின் வேதத்தையும் அவனுடைய தூதரின் வழிமுறையையும் யார் பற்றிப்பிடித்துக் கொண்டாரோ அவருக்கு கோணலற்ற நேரான பாதையின் பக்கம் அல்லாஹ் வழிகாட்டிவிட்டான்.

Aal-i-Imraan 3:101Listen in Qur'an →
102

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ ٱتَّقُوا۟ ٱللَّهَ حَقَّ تُقَاتِهِۦ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنتُم مُّسْلِمُونَ

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்; மேலும், (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரிக்காதீர்கள்.

அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! உங்கள் இறைவனை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள். அது அவனுடைய கட்டளைகளைச் செயல்படுத்தி, அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி, அவனுடைய அருட்கொடைகளுக்கு நன்றிசெலுத்துவதாகும், அவ்வாறே மரணம் வரும் வரை உங்களுடைய மார்க்கத்தைப் பற்றிப்பிடித்துக்கொள்ளுங்கள்.

Aal-i-Imraan 3:102Listen in Qur'an →
103

وَٱعْتَصِمُوا۟ بِحَبْلِ ٱللَّهِ جَمِيعًۭا وَلَا تَفَرَّقُوا۟ ۚ وَٱذْكُرُوا۟ نِعْمَتَ ٱللَّهِ عَلَيْكُمْ إِذْ كُنتُمْ أَعْدَآءًۭ فَأَلَّفَ بَيْنَ قُلُوبِكُمْ فَأَصْبَحْتُم بِنِعْمَتِهِۦٓ إِخْوَٰنًۭا وَكُنتُمْ عَلَىٰ شَفَا حُفْرَةٍۢ مِّنَ ٱلنَّارِ فَأَنقَذَكُم مِّنْهَا ۗ كَذَٰلِكَ يُبَيِّنُ ٱللَّهُ لَكُمْ ءَايَٰتِهِۦ لَعَلَّكُمْ تَهْتَدُونَ

இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்;. நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்;. அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்;. நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து, அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்;. இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை - வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான்.

நம்பிக்கையாளர்களே! குர்ஆனையும் சுன்னாவையும் பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள். பிரிவினையை உண்டாக்கும் செயல்பாடுகளில் ஈடுபடாதீர்கள். அல்லாஹ் உங்கள்மீது பொழிந்த அருட்கொடைகளை நினைத்துப் பாருங்கள், நீங்கள் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்னால் அற்ப காரணங்களுக்காகக்கூட ஒருவருக்கொருவர் போரிட்டுக் கொள்ளும் எதிரிகளாக இருந்தீர்கள். இஸ்லாத்தின்மூலம் அல்லாஹ் உங்கள் உள்ளங்களை ஒன்றுசேர்த்தான். அவனது அருளால் நீங்கள் மார்க்க சகோதரர்களாக, ஒருவருக்கொருவர் நலம்நாடுபவர்களாக, அன்பானவர்களாக ஆகிவிட்டீர்கள். உங்களின் நிராகரிப்பினால் நரக விளிம்பின் ஓரத்தில் இருந்தீர்கள். இஸ்லாத்தின்மூலம் அல்லாஹ் உங்களைக் காப்பாற்றினான். ஈமானின்பால் உங்களுக்கு வழிகாட்டினான். இவ்வாறு நீங்கள் நேரான வழியை அடைந்து அதில் நிலைத்திருப்பதற்காக உலகிலும் மறுமையிலும் உங்களின் நிலமைகளைச் சீர்படுத்தக்கூடியவற்றை தெளிவுபடுத்துகிறான்.

Aal-i-Imraan 3:103Listen in Qur'an →
104

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌۭ يَدْعُونَ إِلَى ٱلْخَيْرِ وَيَأْمُرُونَ بِٱلْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ ٱلْمُنكَرِ ۚ وَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْمُفْلِحُونَ

மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.

நம்பிக்கையாளர்களே! அல்லாஹ் விரும்பும் நன்மைகளின்பால் அழைக்கக்கூடிய, மார்க்கம் கூறும் அறிவு ஏற்றுக்கொள்ளும் நன்மைகளைக் கொண்டு ஏவக்கூடிய, மார்க்கம் தடுத்த அறிவு வெறுக்கும் தீமைகளை விட்டும் தடுக்கக்கூடிய ஒரு கூட்டம் உங்களில் இருக்கட்டும். இந்த பண்புகளை உடையவர்கள்தாம் இவ்வுலகிலும் மறுவுலகிலும் முழுமையான வெற்றியைப் பெறக்கூடியவர்கள்.

Aal-i-Imraan 3:104Listen in Qur'an →
105

وَلَا تَكُونُوا۟ كَٱلَّذِينَ تَفَرَّقُوا۟ وَٱخْتَلَفُوا۟ مِنۢ بَعْدِ مَا جَآءَهُمُ ٱلْبَيِّنَٰتُ ۚ وَأُو۟لَٰٓئِكَ لَهُمْ عَذَابٌ عَظِيمٌۭ

(இறைவனின்) தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் வந்த பின்னரும், யார் தங்களுக்குள் பிரிவையுண்டுபண்ணிக் கொண்டு, மாறுபாடாகி விட்டார்களோ, அவர்கள் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள்;. அத்ததையோருக்குக் கடுமையான வேதனை உண்டு.

நம்பிக்கையாளர்களே! முரண்பட்டுப் பல பிரிவினர்களாக பிரிந்துவிட்ட வேதக்காரர்களைப் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள். அல்லாஹ்விடமிருந்து தெளிவான சான்றுகள் வந்தபின்னரும் அவர்கள் தங்கள் மார்க்கத்தில் முரண்பட்டார்கள். அவர்களுக்கு அல்லாஹ்விடம் கடும் வேதனை இருக்கின்றது.

Aal-i-Imraan 3:105Listen in Qur'an →
106

يَوْمَ تَبْيَضُّ وُجُوهٌۭ وَتَسْوَدُّ وُجُوهٌۭ ۚ فَأَمَّا ٱلَّذِينَ ٱسْوَدَّتْ وُجُوهُهُمْ أَكَفَرْتُم بَعْدَ إِيمَٰنِكُمْ فَذُوقُوا۟ ٱلْعَذَابَ بِمَا كُنتُمْ تَكْفُرُونَ

அந்த (மறுமை) நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியினால் பிரகாசமாய்) வெண்மையாகவும், சில முகங்கள் (துக்கத்தால்) கருத்தும் இருக்கும்; கருத்த முகங்களுடையோரைப் பார்த்து, நீங்கள் ஈமான் கொண்டபின் (நிராகரித்து) காஃபிர்களாகி விட்டீர்களா? (அப்படியானால்,) நீங்கள் நிராகரித்ததற்காக வேதனையைச் சுவையுங்கள்" (என்று கூறப்படும்).

மறுமைநாளில் இந்தக் கடும் வேதனையை அவர்கள் சந்திப்பார்கள். அப்போது நம்பிக்கையாளர்களின் முகங்கள் மகிழ்ச்சியால், நிம்மதியால் பொலிவாக இருக்கும். நிராகரிப்பாளர்களின் முகங்கள் துக்கத்தால், கவலையால் கருமையாக இருக்கும். அந்த நாளில் எவர்களது முகங்கள் கருத்துவிடுகிறதோ அவர்களிடம் கூறப்படும்: அல்லாஹ் ஒருவனே என்பதையும் அவனுக்கு யாரையும் இணையாக்கக்கூடாது என்று அவன் உங்களிடம் பெற்ற வாக்குறுதியையும் நம்பி எற்றுக்கொண்ட பிறகு நிராகரித்தீர்கள் அல்லவா? உங்களின் நிராகரிப்பின் காரணமாக அவன் உங்களுக்குத் தயார்படுத்தி வைத்துள்ள வேதனையைச் சுவையுங்கள்.

Aal-i-Imraan 3:106Listen in Qur'an →
107

وَأَمَّا ٱلَّذِينَ ٱبْيَضَّتْ وُجُوهُهُمْ فَفِى رَحْمَةِ ٱللَّهِ هُمْ فِيهَا خَٰلِدُونَ

எவருடைய முகங்கள் (மகிழ்ச்சியினால் பிரகாசமாய்) வெண்மையாக இருக்கின்றனவோ அவர்கள் அல்லாஹ்வின் ரஹ்மத்தில் இருப்பார்கள்; அவர்கள் என்றென்றும் அ(ந்த ரஹ்மத்)திலேயே தங்கி விடுவார்கள்.

எவர்களது முகங்கள் பொலிவாகிவிடுமோ அவர்கள் அழியாத மாறாத இன்பம் நிறைந்த சுவனங்களில் என்றென்றும் தங்கியிருப்பார்கள்.

Aal-i-Imraan 3:107Listen in Qur'an →
108

تِلْكَ ءَايَٰتُ ٱللَّهِ نَتْلُوهَا عَلَيْكَ بِٱلْحَقِّ ۗ وَمَا ٱللَّهُ يُرِيدُ ظُلْمًۭا لِّلْعَٰلَمِينَ

(நபியே!) இவை(யெல்லாம்) அல்லாஹ்வின் வசனங்கள் - இவற்றை உண்மையாகவே உமக்கு நாம் ஓதிக்காண்பிக்கின்றோம்;. மேலும் அல்லாஹ் உலகத்தோருக்கு அநீதி இழைக்க நாட மாட்டான்.

தூதரே! அல்லாஹ்வின் வாக்குறுதிகளும் எச்சரிக்கைகளும் அடங்கிய வசனங்களை உண்மையான செய்திகளாவும் நீதிமிக்க சட்டங்களாகவும் நாம் உமக்கு எடுத்துரைக்கின்றோம். தன் படைப்புகளில் யாருக்கும் அல்லாஹ் அநீதியை விரும்பமாட்டான்.அவரவர் செய்த பாவத்திற்காகவே தவிர எவரையும் அவன் தண்டித்துவிட மாட்டான்.

Aal-i-Imraan 3:108Listen in Qur'an →
109

وَلِلَّهِ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ ۚ وَإِلَى ٱللَّهِ تُرْجَعُ ٱلْأُمُورُ

வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் - அனைத்தும் - அல்லாஹ்வுக்கே உரியவை. எல்லாக் காரியங்களும் அல்லாஹ்விடமே மீட்டுக் கொண்டு வரப்படும்.

வானங்களிலும் பூமியிலும் உள்ளவைகள் அல்லாஹ்வுக்கு மாத்திரமே சொந்தமாகும். அவற்றை அவனே படைத்து கட்டளை பிறப்பிக்கின்றான். மறுமைநாளில் அவன் பக்கமே அனைவரும் திரும்ப வேண்டும். அவன் அவர்களின் செயல்களுக்கேற்ப அவர்களுக்குக் கூலி வழங்குவான்.

Aal-i-Imraan 3:109Listen in Qur'an →
110

كُنتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ تَأْمُرُونَ بِٱلْمَعْرُوفِ وَتَنْهَوْنَ عَنِ ٱلْمُنكَرِ وَتُؤْمِنُونَ بِٱللَّهِ ۗ وَلَوْ ءَامَنَ أَهْلُ ٱلْكِتَٰبِ لَكَانَ خَيْرًۭا لَّهُم ۚ مِّنْهُمُ ٱلْمُؤْمِنُونَ وَأَكْثَرُهُمُ ٱلْفَٰسِقُونَ

மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்;. இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்;. வேதத்தையுடையோரும் (உங்களைப் போன்றே) நம்பிக்கை கொண்டிருப்பின், (அது) அவர்களுக்கு நன்மையாகும் - அவர்களில் (சிலர்) நம்பிக்கை கொண்டோராயும் இருக்கின்றனர்;. எனினும் அவர்களில் பலர் (இறை கட்டளையை மீறும்) பாவிகளாகவே இருக்கின்றனர்.

முஹம்மதுடைய சமூகமே! மக்களுக்காக அல்லாஹ் தோற்றுவித்த சமூகங்களிலே ஈமான் மற்றும் செயல்களின் அடிப்படையில் நீங்கள்தாம் சிறந்த சமூகமாகவும் அவர்களுக்கு அதிகம் பயனளிக்கக்கூடிய சமூகமாகவும் இருக்கின்றீர்கள். மார்க்கம் காட்டிய அறிவுக்குப் பொருந்தும் நன்மையான செயல்களைச் செய்யுமாறு அவர்களைத் தூண்டுகிறீர்கள்; மார்க்கம் தடுத்த அறிவு ஏற்காத தீய செயல்களைவிட்டும் அவர்களைத் தடுக்கிறீர்கள்; அல்லாஹ்வின்மீது உறுதியான நம்பிக்கை கொண்டு அந்த நம்பிக்கையை உங்களின் செயல்களால் உண்மைப்படுத்துகிறீர்கள். வேதம் வழங்கப்பட்ட யூதர்களும் கிருஸ்தவர்களும் முஹம்மதின்மீது நம்பிக்கைகொண்டால் அது இவ்வுலகிலும் மறுவுலகிலும் அவர்களுக்குச் சிறந்ததாக அமைந்திருக்கும். அவர்களில் குறைவானவர்களே முஹம்மது கொண்டுவந்தவற்றை உண்மைப்படுத்துகிறார்கள். அவர்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வின் மார்க்கத்தை விட்டு வெளியேறியவர்களாவர்.

Aal-i-Imraan 3:110Listen in Qur'an →

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.