Muslim99Muslim99
← Tafsir library

10. Yunus

Jonas · Meccan · 109 ayahs

سُورَةُ يُونُسَ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 91–100 of 109

91

ءَآلْـَٰٔنَ وَقَدْ عَصَيْتَ قَبْلُ وَكُنتَ مِنَ ٱلْمُفْسِدِينَ

"இந்த நேரத்தில் தானா (நீ நம்புகிறாய்)? சற்று முன் வரையில் திடனாக நீ மாறு செய்து கொண்டிருந்தாய்; இன்னும், குழப்பம் செய்பவர்களில் ஒருவனாகவும் இருந்தாய்.

இப்பொழுது, வாழ்க்கையிலிருந்து விரக்தியடைந்த பிறகுதானா நம்பிக்கைகொள்கிறாய்? -பிர்அவ்னே- வேதனை இறங்குவதற்கு முன்னர் அல்லாஹ்வை நிராகரித்து, அவனது பாதையை விட்டும் தடுத்து; அவனுக்கு மாறாகச் செயல்பட்டாய்; நீயும் வழிகெட்டு மற்றவர்களையும் வழிகெடுத்ததனால் நீ குழப்பவாதிகளில் ஒருவனாக இருந்தாய்.

92

فَٱلْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ ءَايَةًۭ ۚ وَإِنَّ كَثِيرًۭا مِّنَ ٱلنَّاسِ عَنْ ءَايَٰتِنَا لَغَٰفِلُونَ

எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உம் உடலைப் பாதுகாப்போம்; நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்" (என்று அவனிடம் கூறப்பட்டது).

பிர்அவ்னே!- உனக்குப் பின்னர் வரக்கூடியவர்கள் படிப்பினை பெறும் பொருட்டு இன்றைய தினம் கடலிலிருந்து உன்னை வெளிப்படுத்தி பூமியின் உயர்ந்த நிலப்பரப்பு ஒன்றில் உன்னை வைப்போம். மக்களில் பெரும்பாலோர் நம்முடைய சான்றுகளையும் ஆதாரங்களையும் விட்டு அலட்சியமாகவே இருக்கிறார்கள். அவற்றில் அவர்கள் சிந்தனை செலுத்துவதில்லை.

93

وَلَقَدْ بَوَّأْنَا بَنِىٓ إِسْرَٰٓءِيلَ مُبَوَّأَ صِدْقٍۢ وَرَزَقْنَٰهُم مِّنَ ٱلطَّيِّبَٰتِ فَمَا ٱخْتَلَفُوا۟ حَتَّىٰ جَآءَهُمُ ٱلْعِلْمُ ۚ إِنَّ رَبَّكَ يَقْضِى بَيْنَهُمْ يَوْمَ ٱلْقِيَٰمَةِ فِيمَا كَانُوا۟ فِيهِ يَخْتَلِفُونَ

நிச்சயமாக நாம் இஸ்ராயீலின் சந்ததியனரை, தகுந்த இருப்பிடத்தில் இருத்தி, நல்ல உணவுகளையும் கொடுத்து வந்தோம்; எனினும் உண்மையான ஞானம் அவர்களிடம் வரும் வரையில் அவர்கள் மாறுபாடு செய்யவில்லை நிச்சயமாக உம் இறைவன் அவர்கள் எத பற்றி மாறுபாடு செய்து கொண்டிருந்தார்களோ அ(து விஷயத்)தில் இறுதி நாளில் அவர்களிடையே தீர்ப்பளிப்பான்.

நாம் இஸ்ராயீலின் மக்களை அருள்வளம்மிக்க ஷாம் தேசத்திலுள்ள சிறந்த, விரும்பத்தக்க ஓர் இடத்தில், இறங்கச் செய்தோம். அவர்களுக்குத் தூய்மையான, அனுமதிக்கப்பட்ட பொருள்களை வழங்கினோம். தவ்ராத்தில் அவர்கள் படித்த முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வர்ணணையை உண்மைப்படுத்தக்கூடியதாக அல்குர்ஆன் அவர்களிடம் வரும் வரை அவர்கள் தமது மார்க்க விடயத்தில் முரண்படவில்லை. அவர்கள் அதனை நிராகரித்த போது அவர்களின் நாடுகள் கைப்பற்றப்பட்டன. -தூதரே!- நிச்சயமாக உம் இறைவன் அவர்கள் முரண்பட்டுள்ளவற்றில் மறுமை நாளில் அவர்களிடையே தீர்ப்பளிப்பான். அவர்களில் சத்தியத்தில் இருந்தவர்களுக்கும் அசத்தியத்தில் இருந்தவர்களுக்கும் தகுந்த கூலியை அவன் வழங்குவான்.

94

فَإِن كُنتَ فِى شَكٍّۢ مِّمَّآ أَنزَلْنَآ إِلَيْكَ فَسْـَٔلِ ٱلَّذِينَ يَقْرَءُونَ ٱلْكِتَٰبَ مِن قَبْلِكَ ۚ لَقَدْ جَآءَكَ ٱلْحَقُّ مِن رَّبِّكَ فَلَا تَكُونَنَّ مِنَ ٱلْمُمْتَرِينَ

(நபியே!) நாம் உம் மீது இறக்கியுள்ள இ(வ்வேதத்)தில் சந்தேகம் கொளிவீராயின், உமக்கு முன்னர் உள்ள வேதத்தை ஓதுகிறார்களே அவர்களிடம் கேட்டுப் பார்ப்பீராக் நிச்சயமாக உம் இறைவனிடமிருந்து உமக்குச் சத்திய (வேத)ம் வந்துள்ளது - எனவே சந்தேகம் கொள்பவர்களில் நீரும் ஒருவராகி விட வேண்டாம்.

தூதரே!- நாம் உம்மீது இறக்கிய குர்ஆனின் உண்மை நிலையைக் குறித்து நீர் சந்தேகத்தில் இருந்தீரானால் தவ்ராத்தையும் இன்ஜீலையும் படித்துக் கொண்டிருந்த யூதர்கள் மற்றும் கிருஸ்தவர்களில் நம்பிக்கை கொண்டவர்களிடம் கேட்டுப்பாருங்கள். அவர்கள் தங்களின் வேதங்களில் உம்மீது இறக்கப்பட்டதைக் குறித்து கூறப்பட்டுள்ளதைக் கண்டதனால் உம்மீது இறக்கப்பட்டது சத்தியமே என்பதை அவர்கள் உமக்கு கூறுவார்கள். சந்தேகமற்ற சத்தியம் உம் இறைவனிடமிருந்து உமக்கு வந்துள்ளது. எனவே சந்தேகம் கொள்வோரில் ஒருவராகிவிடாதீர்.

95

وَلَا تَكُونَنَّ مِنَ ٱلَّذِينَ كَذَّبُوا۟ بِـَٔايَٰتِ ٱللَّهِ فَتَكُونَ مِنَ ٱلْخَٰسِرِينَ

அன்றியும் அல்லாஹ்வின் வசனங்களை பொய்ப்பிப்போர்களில் ஒருவராக நீரும் ஆகிவிட வேண்டாம்; அவ்வாறாயின் நஷ்டமடைவோரில் நீரும் ஒருவராவீர்.

அல்லாஹ்வின் சான்றுகளையும் ஆதாரங்களையும் பொய் எனக்கூறி மறுத்தவர்களில் ஒருவராகிவிடாதீர். அவ்வாறு செய்தால் நிராகரித்து தங்களைத் தாங்களே அழிவில் ஆழ்த்தியவர்களில் ஒருவராகி விடுவீர். இவையனைத்தும் பொய்பித்தல், சந்தேகம் என்னும் ஆபத்தைக் குறித்து எச்சரிப்பதற்காகத்தான். மற்றபடி இது போன்ற சந்தேகம் ஏற்படுவதை விட்டும் நிச்சயமாக நபியவர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளார்கள்.

96

إِنَّ ٱلَّذِينَ حَقَّتْ عَلَيْهِمْ كَلِمَتُ رَبِّكَ لَا يُؤْمِنُونَ

நிச்சயமாக எவர்கள் மீது (பாவிகள் என்று) உம் இறைவனுடைய வாக்கு மெய்யாகிவிட்டதோ, அவர்கள் ஈமான் கொள்ளவே மாட்டார்கள்.

நிச்சயமாக, நிராகரிப்பில் நிலைத்திருந்ததனால் நிராகரித்த நிலையிலேயே மரணிப்பார்கள் என்று அல்லாஹ்வின் விதி யார் மீது தீர்மானமாகி விட்டதோ அவர்கள் ஒருபோதும் நம்பிக்கைகொள்ள மாட்டார்கள்.

97

وَلَوْ جَآءَتْهُمْ كُلُّ ءَايَةٍ حَتَّىٰ يَرَوُا۟ ٱلْعَذَابَ ٱلْأَلِيمَ

நோவினை தரும் வேதனையை அவர்கள் காணும் வரையில் அவர்களிடம் எல்லா அத்தாட்சிளும் வந்தாலும் (அவர்கள் ஈமான் கெள; ள மாட்டார்கள்.).

அவர்களிடம் மார்க்க ரீதியான அல்லது பிரபஞ்ச ரீதியான சான்றுகள் அனைத்தும் வந்தாலும் வேதனை மிக்க தண்டனையைக் காணும் வரை நம்பிக்கைகொள்ள மாட்டார்கள். அப்போது அவர்கள் கொள்ளும் நம்பிக்கையினால் எந்தப் பயனும் இல்லை என்ற நிலை வரும் போது ஈமான் கொள்வார்கள்.

98

فَلَوْلَا كَانَتْ قَرْيَةٌ ءَامَنَتْ فَنَفَعَهَآ إِيمَٰنُهَآ إِلَّا قَوْمَ يُونُسَ لَمَّآ ءَامَنُوا۟ كَشَفْنَا عَنْهُمْ عَذَابَ ٱلْخِزْىِ فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا وَمَتَّعْنَٰهُمْ إِلَىٰ حِينٍۢ

தங்களுடைய ஈமான் பலனளிக்கு மாறு (நம்பிக்கை கொண்டு வேதனையிலிருந்து தப்பித்துக் கொண்ட) யூனுஸுடைய சமூகத்தாரைப்போல், மற்றோர் ஊரார் ஏன் ஈமான் கொள்ளாமல் இருக்கவில்லை? அவர்கள் (யூனுஸுடைய சமூகத்தார்) ஈமான் கொண்டதும் இம்மையில் இழிவுபடுத்தும் வேதனையை அவர்களை விட்டும் நாம் அகற்றினோம்; அன்றி, சிறிது காலம் சகம் அனுபவிக்கும் படியும் வைத்தோம்.

யூனுஸ் உடைய சமூகத்தாரைத் தவிர நாம் தூதர்களை அனுப்பிய எந்த ஊர்வாசிகளும் வேதனையைக் காண்பதற்கு முன்னால் தங்களுக்குப் பயனளிக்கக்கூடிய வகையில் உண்மையாகவே நம்பிக்கை கொள்ளவில்லை. யூனுஸின் சமூகத்தார் உண்மையாகவே நம்பிக்கை கொண்டதனால் நாம் இவ்வுலக வாழ்வில் அவர்களை விட்டு இழிவு, அவமானம் ஆகிய வேதனையை அகற்றினோம். அவர்களின் தவணை முடியும் வரை அவர்களை அனுபவிக்கச் செய்தோம்.

99

وَلَوْ شَآءَ رَبُّكَ لَءَامَنَ مَن فِى ٱلْأَرْضِ كُلُّهُمْ جَمِيعًا ۚ أَفَأَنتَ تُكْرِهُ ٱلنَّاسَ حَتَّىٰ يَكُونُوا۟ مُؤْمِنِينَ

மேலும், உம் இறைவன் நாடியிருந்தால், பூமியிலுள்ள யாவருமே ஈமான் கொண்டிருப்பார்கள்; எனவே, மனிதர்கள் யாவரும் முஃமின்களாக (நம்பிக்கை கொண்டோராக) ஆகிவிடவேண்டுமென்று அவர்களை நீர் கட்டாயப்படுத்த முடியுமா?

தூதரே!- உம் இறைவன் பூமியிலுள்ள அனைவரும் நம்பிக்கை கொள்வதை நாடியிருந்தால் அவர்கள் நம்பிக்கை கொண்டிருப்பார்கள். ஆயினும் அவன் ஒரு நோக்கத்திற்காக அவ்வாறு நாடவில்லை. தான் நாடியவர்களை தன் நீதியால் அவன் வழிதவறச் செய்கிறான். தான் நாடியவர்களுக்குத் தன் அருளால் அவன் நேர்வழி காட்டுகிறான். உம்மால் மக்களை நம்பிக்கை கொள்ளும்படி நிர்ப்பந்திக்க முடியாது. ஈமான் கொள்வதற்கு பாக்கியமளிக்கும் அதிகாரம் அல்லாஹ்விடம் மட்டுமே உள்ளது.

100

وَمَا كَانَ لِنَفْسٍ أَن تُؤْمِنَ إِلَّا بِإِذْنِ ٱللَّهِ ۚ وَيَجْعَلُ ٱلرِّجْسَ عَلَى ٱلَّذِينَ لَا يَعْقِلُونَ

எந்த ஓர் ஆத்மாவும், அல்லாஹ்வின் கட்டளையின்றி ஈமான் கொள்ள முடியாது - மேலும் (இதனை) விளங்காதவர்கள் மீது வேதனையை அல்லாஹ் ஏற்படுத்துகிறான்.

அல்லாஹ்வின் அனுமதியின்றி எவராலும் நம்பிக்கை கொண்டுவிட முடியாது. அவனது நாட்டமின்றி நம்பிக்கை ஏற்படாது. எனவே நீர் அவர்களுக்காக வருத்தப்படாதீர். அல்லாஹ்வின் ஆதாரங்களையும், ஏவல்களையும், விலக்கல்களையும் விளங்கிக் கொள்ளாதவர்கள் மீது அல்லாஹ் வேதனையையும் இழிவையும் சாட்டிவிடுகிறான்.

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.