Muslim99Muslim99
← Tafsir library

10. Yunus

Jonas · Meccan · 109 ayahs

سُورَةُ يُونُسَ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 51–60 of 109

51

أَثُمَّ إِذَا مَا وَقَعَ ءَامَنتُم بِهِۦٓ ۚ ءَآلْـَٰٔنَ وَقَدْ كُنتُم بِهِۦ تَسْتَعْجِلُونَ

"அது வந்ததன் பின்னரா அதை நீங்கள் நம்புவீர்கள்? (அவ்வேதனை வந்ததும்) இதோ! நீங்கள் எது (வர வேண்டும் என்று அவசரப்பட்டுக் கொண்டிருந்தீர்களோ அது வந்து விட்டது" (என்று தான் கூறப்படும்).

உங்களுக்கு எச்சரிக்கப்பட்ட வேதனை உங்களிடம் வந்த பிறகு இதற்கு முன்பு நம்பிக்கை கொள்ளாமல், நம்பிக்கை பயனளிக்காத சமயத்தில்தான் நீங்கள் நம்பிக்கை கொள்கிறீர்களா? இப்பொழுதுதான் நீங்கள் நம்பிக்கைகொள்கிறீர்களா? வேதனையை நிராகரிக்கும் வண்ணம் இதற்கு முன்னர் அதற்காக அவசரப்பட்டுக் கொண்டிருந்தீர்களே!

52

ثُمَّ قِيلَ لِلَّذِينَ ظَلَمُوا۟ ذُوقُوا۟ عَذَابَ ٱلْخُلْدِ هَلْ تُجْزَوْنَ إِلَّا بِمَا كُنتُمْ تَكْسِبُونَ

அன்றியும், அந்த அநியாயக்காரர்களை நோக்கி; "என்றென்றும் நிலைத்திருக்கக் கூடிய இவ்வேதனையைச் சவைத்துக் கொண்டிருங்கள் - நீங்கள் சம்பாதித்ததைத் தவிர (வேறு) கூலி கொடுக்கப்படுவீர்களா?" என்று கூறப்படும்.

பின்னர் அவர்களை வேதனையில் ஆழ்த்திய பிறகு அதிலிருந்து வெளியேற விரும்பும் அவர்களிடம் கூறப்படும்: “மறுமையில் நிரந்தரமான வேதனையைச் சுவையுங்கள். நீங்கள் செய்த நிராகரிப்பு மற்றும் பாவங்களுக்கே தவிர கூலி கொடுக்கப்படவில்லை.

53

۞ وَيَسْتَنۢبِـُٔونَكَ أَحَقٌّ هُوَ ۖ قُلْ إِى وَرَبِّىٓ إِنَّهُۥ لَحَقٌّۭ ۖ وَمَآ أَنتُم بِمُعْجِزِينَ

மேலும் "அது உண்மை தானா?" என்று (நபியே! அவர்கள்) உம்மிடம் வினவுகிறார்கள்; "ஆம்! என் இறைவன் மீது சத்தியமாய் நிச்சயமாக அது உண்மையே. (அதை) நீங்கள் தடுத்துவிட முடியாது" என்று கூறுவீராக.

தூதரே!- இணைவைப்பாளர்கள், “எங்களுக்கு வாக்களிப்படும் வேதனை உண்மையானதா?” என்று உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறுவீராக: “ஆம். அல்லாஹ்வின் மீது சத்தியமாக அது உண்மையாகும். நீங்கள் அதிலிருந்து தப்பமுடியாது.”

54

وَلَوْ أَنَّ لِكُلِّ نَفْسٍۢ ظَلَمَتْ مَا فِى ٱلْأَرْضِ لَٱفْتَدَتْ بِهِۦ ۗ وَأَسَرُّوا۟ ٱلنَّدَامَةَ لَمَّا رَأَوُا۟ ٱلْعَذَابَ ۖ وَقُضِىَ بَيْنَهُم بِٱلْقِسْطِ ۚ وَهُمْ لَا يُظْلَمُونَ

(அந்த நாளின்) வேதனையைக் காணும்போதுகள்ர்ர்கள்ற அநியாயம் செய்த ஒவ்வோர் ஆத்மாவும், அதனிடம் உலகத்திலுள்ள பொருட்கள் எல்லாமே இருந்திருந்தாலும் அவை அனைத்தையுமே (தனக்குப்) பரிகாரமாகக் கொடுத்துவிட நாடும்; தன் கைசேதத்தையும், கழிவிரக்கத்தையும் வெளிப்படுத்தும்; ஆனால் (அந்நாளில்) அவையிடையே நியாயமாகவே தீர்ப்பளிக்கப்படும் - (ஒரு சிறிதும்) அவற்றுக்கு அநியாயம் செய்யப்பட மாட்டாது.

அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் ஒவ்வொருவருக்கும் பூமி நிறைய பெறுமதியான செல்வங்கள் இருந்தாலும், ஈட்டுத் தொகை கொடுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டால் அல்லாஹ்வின் வேதனையிலிருந்து தப்பிப்பதற்காக அனைத்தையும் ஈடாக அளித்துவிடுவார். மறுமை நாளில் தங்களின் நிராகரிப்பினால் இணைவைப்பாளர்கள் வேதனையைக் காணும் போது கைசேதத்தை மறைத்துக் கொள்வார்கள். அவர்களிடையே அல்லாஹ் நியாயமாகத் தீர்ப்பளிப்பான். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள். தங்களின் செயல்களுக்குத்தான் அவர்கள் கூலி கொடுக்கப்படுவார்கள்.

55

أَلَآ إِنَّ لِلَّهِ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۗ أَلَآ إِنَّ وَعْدَ ٱللَّهِ حَقٌّۭ وَلَٰكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ

வானங்களிலும், பூமியிலும் இருப்பவை அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தமானவை என்பதைத் திடமாக அறிந்து கொள்ளுங்கள்; அல்லாஹ்வின் வாக்குறுதியும் நிச்சயமாகவே உண்மையானது என்பதையும் அறிந்து கொள்ளுங்கள் - எனினும் அவர்களில் பெரும்பாரோர் (இதை) அறிந்து கொள்வதில்லை.

அறிந்து கொள்ளுங்கள், வானங்கள் மற்றும் பூமியில் உள்ளவற்றின் உரிமை அல்லாஹ்வுக்கே உரியது. அறிந்து கொள்ளுங்கள், நிராகரிப்பாளர்களுக்கு வேதனை அளிப்பேன் என்று அல்லாஹ் அளித்த வாக்குறுதி நிச்சயம் நிறைவேறியே தீரும். ஆயினும் அவர்களில் பெரும்பாலோர் அறிந்துகொள்ள மாட்டார்கள். எனவே சந்தேகம் கொள்கிறார்கள்.

56

هُوَ يُحْىِۦ وَيُمِيتُ وَإِلَيْهِ تُرْجَعُونَ

அவனே உயிர் கொடுக்கின்றான்; இன்னும், (அவனே) மரிக்கச் செய்கின்றான் - பின்னர் அவனிடமே (மறுமையில்) திரும்பக் கொண்டு செல்லப்படவீர்கள்.

அவனே இறந்தவர்களை உயிர்த்தெழச் செய்கிறான். உயிருள்ளவர்களை மரணிக்கச் செய்கிறான். மறுமை நாளில் அவன் பக்கமே நீங்கள் திரும்ப வேண்டும். அவன் உங்களின் செயல்களுக்கேற்ப உங்களுக்குக் கூலி அளிப்பான்.

57

يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ قَدْ جَآءَتْكُم مَّوْعِظَةٌۭ مِّن رَّبِّكُمْ وَشِفَآءٌۭ لِّمَا فِى ٱلصُّدُورِ وَهُدًۭى وَرَحْمَةٌۭ لِّلْمُؤْمِنِينَ

மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக ஒரு நல்லுபதேசமும் வந்துள்ளது. (உங்கள்) இதயங்களிலுள்ள நோய்களுக்கு அருமருந்தும் (வந்திருக்கிறது;) மேலும் (அது) முஃமின்களுக்கு நேர்வழிகாட்டியாகவும், நல்லருளாகவும் உள்ளது.

மனிதர்களே! உங்களிடம் குர்ஆன் வந்துள்ளது. அதில் அறிவுரையும் ஆர்வமூட்டலும் அச்சமூட்டலும் அடங்கியுள்ளது. அது உள்ளங்களிலுள்ள சந்தேகம் போன்ற நோய்களுக்கு நிவாரணியாக இருக்கின்றது; சத்தியப் பாதையின் பக்கம் வழிகாட்டுகிறது. அது நம்பிக்கையாளர்களுக்கு அருளாகவும் இருக்கின்றது. அவர்கள்தாம் இதைக் கொண்டு பயனடையக்கூடியவர்கள்.

58

قُلْ بِفَضْلِ ٱللَّهِ وَبِرَحْمَتِهِۦ فَبِذَٰلِكَ فَلْيَفْرَحُوا۟ هُوَ خَيْرٌۭ مِّمَّا يَجْمَعُونَ

"அல்லாஹ்வின் அருட்கொடையினாலும், அவனுடைய பெருங்கிருபையினாலுமே (இது வந்துள்ளது, எனவே) - இதில் அவர்கள் மகிழ்ச்சிடையட்டும், அவர்கள் திரட்டி வைத்திருக்கும் (செல்வங்களை) விட இது மிக்க மேலானது" என்று (நபியே!) நீர் கூறும்.

தூதரே! நீர் மக்களிடம் கூறுவீராக: “நான் உங்களிடம் கொண்டுவந்துள்ள குர்ஆன், அல்லாஹ் உங்கள் மீது பொழிந்த அருளாகவும் கருணையாகவும் இருக்கின்றது. குர்ஆனை உங்களுக்கு இறக்கி அல்லாஹ் உங்கள் மீது புரியும் அருளையும் கருணையையும் கொண்டே நீங்கள் மகிழ்ச்சியடையுங்கள். வேறொன்றைக் கொண்டுமல்ல. முஹம்மது தம் இறைவனிடமிருந்து அவர்களிடம் கொண்டு வந்தது, அழிந்து விடும் உலகில் அவர்கள் சேர்த்துவைப்பவற்றை விட சிறந்தது.

59

قُلْ أَرَءَيْتُم مَّآ أَنزَلَ ٱللَّهُ لَكُم مِّن رِّزْقٍۢ فَجَعَلْتُم مِّنْهُ حَرَامًۭا وَحَلَٰلًۭا قُلْ ءَآللَّهُ أَذِنَ لَكُمْ ۖ أَمْ عَلَى ٱللَّهِ تَفْتَرُونَ

(நபியே!) நீர் கூறும்; "அல்லாஹ் உங்களுக்கு இறக்கிவைத்த ஆகாரங்களை நீங்கள் கவனித்தீர்களா? அவற்றில் சிலவற்றை ஹராமாகவும், சிலவற்றை ஹலாலாகவும் நீங்களே ஆக்கிக் கொள்கறீர்கள்; (இப்படித் தீர்மானித்துக் கொள்ள) அல்லாஹ் உங்களுக்கு அனுமதி அளித்துள்ளானா? அல்லது அல்லாஹ்வின் மீது நீங்கள் பொய்க்கற்பனை செய்கின்றீர்களா?"

தூதரே!- இந்த இணைவைப்பாளர்களிடம் நீர் கூறுவீராக: “அல்லாஹ் வாழ்வாதாரங்களை இறக்கி உங்கள் மீது அருள் புரிந்ததைப் பற்றி எனக்குக் கூறுங்கள். அவற்றில் உங்களுடைய மனஇச்சைகளைக் கொண்டு சிலவற்றை தடைசெய்யப்பட்டதாகவும் சிலவற்றை அனுமதிக்கப்பட்டதாகவும் ஆக்கிவிட்டீர்கள்.” நீர் அவர்களிடம் கேட்பீராக: நீங்கள் நினைத்ததைத் தடைசெய்யும் அதிகாரத்தையும் அனுமதியளிக்கும் அதிகாரத்தையும் அல்லாஹ்தான் உங்களுக்கு அளித்தானா? அல்லது நீங்களாகவே அவன் மீது பொய்யாக புனைந்து கொண்டீர்களா?

60

وَمَا ظَنُّ ٱلَّذِينَ يَفْتَرُونَ عَلَى ٱللَّهِ ٱلْكَذِبَ يَوْمَ ٱلْقِيَٰمَةِ ۗ إِنَّ ٱللَّهَ لَذُو فَضْلٍ عَلَى ٱلنَّاسِ وَلَٰكِنَّ أَكْثَرَهُمْ لَا يَشْكُرُونَ

அல்லாஹ்வின் மீது பொய்யான கற்பனை செய்பவர்கள், மறுமை றாளைப்பற்றி என்ன நினைக்கிறார்கள்? நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது பெருங்கிருபையுடையவனாக இருக்கின்றான். எனினும் அவர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை.

பொய்யை புனைபவர்கள் மறுமை நாளில் தங்களுக்கு என்ன நிகழும் என்று எண்ணுகிறார்கள்? அவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படும் என்று எண்ணுகிறார்களா? சாத்தியமேயில்லை. நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களை உடனுக்குடன் தண்டிக்காமல் அவர்களுக்கு அவகாசம் அளித்து அவர்கள் மீது அருள்புரியக் கூடியவனாவான். ஆயினும் அவர்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தாமல் நன்றி கெட்டத்தனமாக நடந்துகொள்கிறார்கள்.

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.