وَإِن كَذَّبُوكَ فَقُل لِّى عَمَلِى وَلَكُمْ عَمَلُكُمْ ۖ أَنتُم بَرِيٓـُٔونَ مِمَّآ أَعْمَلُ وَأَنَا۠ بَرِىٓءٌۭ مِّمَّا تَعْمَلُونَ
உம்மை அவர்கள் பொய்ப்படுத்தினால் எனது செயல் எனக்கு; உங்கள் செயல் உங்களுக்கு. நான் செய்வதை விட்டும் நீங்கள் விலகியவர்கள்; நீங்கள் செய்வதை விட்டும் நான் விலகியவன் என்று கூறுவீராக.
தூதரே!- உம் சமூகத்தினர் உம்மை பொய்யர் என்று கூறினால் அவர்களிடம் நீர் கூறுவீராக: “என் செயலுக்கான கூலியை நான் பெறுவேன். என் செயலுக்கான பொறுப்பை நான் சுமப்பேன். உங்களின் செயலுக்கான கூலியையும் தண்டனையையும் நீங்கள்தாம் பெறுவீர்கள். நான் செய்யும் செயல்களுக்கு நீங்கள் தண்டிக்கப்பட மாட்டீர்கள். நீங்கள் செய்யும் செயல்களுக்கு நான் தண்டிக்கப்படவும் மாட்டேன்.