Muslim99Muslim99
← Tafsir library

10. Yunus

Jonas · Meccan · 109 ayahs

سُورَةُ يُونُسَ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 1–10 of 109

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

1

الٓر ۚ تِلْكَ ءَايَٰتُ ٱلْكِتَٰبِ ٱلْحَكِيمِ

அலிஃப், லாம், றா. இவை ஞானம் நிறைந்த வேதத்தின் வசனங்களாகும்.

(الٓر) இது, இது போன்ற சொற்களுக்கான விளக்கம் சூரத்துல் பகராவின் ஆரம்ப வசனத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த அத்தியாயத்தில் எடுத்துரைக்கப்படும் வசனங்கள் ஞானத்தையும் சட்டதிட்டங்களையும் உள்ளடக்கிய உறுதியான குர்ஆனின் வசனங்களாகும்.

2

أَكَانَ لِلنَّاسِ عَجَبًا أَنْ أَوْحَيْنَآ إِلَىٰ رَجُلٍۢ مِّنْهُمْ أَنْ أَنذِرِ ٱلنَّاسَ وَبَشِّرِ ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ أَنَّ لَهُمْ قَدَمَ صِدْقٍ عِندَ رَبِّهِمْ ۗ قَالَ ٱلْكَٰفِرُونَ إِنَّ هَٰذَا لَسَٰحِرٌۭ مُّبِينٌ

மனிதர்களை அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும், ஈமான் கொண்டவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடம் நிச்சயமாகப் பெரும் பதவி கிடைக்கும் என்று நன்மாராயம் கூறுவதற்காகவும், அவர்களிலிருந்தே நாம் ஒரு மனிதருக்கு வஹீ அருள்கிறோம் என்பதில் மக்களுக்கு ஆச்சரியம் ஏற்பட்டு விட்டதா? காஃபிர்களோ, "நிச்சயமாக இவர் பகிரங்கமான சூனியக்காரரே" என்று கூறுகின்றனர்.

அல்லாஹ்வின் வேதனையைக் குறித்து மனிதர்களை எச்சரிக்கை செய்யுமாறு கூறி நாம் அவர்களிலிருந்தே ஒரு மனிதர் மீது வஹி இறக்கியது மனிதர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறதா? -தூதரே!- அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு அவர்கள் செய்த நற்செயல்களின் காரணமாக இறைவனிடத்தில் உயர்ந்த அந்தஸ்து உண்டு என்னும் நற்செய்தியைக் கூறுவீராக. நிராகரிப்பாளர்கள் கூறினார்கள்: “இந்த சான்றுகளைக் கொண்டு வந்துள்ள இந்த மனிதர் வெளிப்படையான சூனியக்காரரே.”

3

إِنَّ رَبَّكُمُ ٱللَّهُ ٱلَّذِى خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ فِى سِتَّةِ أَيَّامٍۢ ثُمَّ ٱسْتَوَىٰ عَلَى ٱلْعَرْشِ ۖ يُدَبِّرُ ٱلْأَمْرَ ۖ مَا مِن شَفِيعٍ إِلَّا مِنۢ بَعْدِ إِذْنِهِۦ ۚ ذَٰلِكُمُ ٱللَّهُ رَبُّكُمْ فَٱعْبُدُوهُ ۚ أَفَلَا تَذَكَّرُونَ

நிச்சயமாக உங்கள் இறைவன் அல்லாஹ்வே; அவன் வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான் - பின்னர் தன் ஆட்சியை அர்ஷின் மீது அமைத்தான்; (இவை சம்பந்நப்பட்ட) அனைத்துக் காரியங்களையும் அவனே ஒழுங்குபடுத்துகின்றான். அவனுடைய அனுமதிக்குப் பின்னரேயன்றி (அவனநிடம்) பரிந்து பேசபவர் எவருமில்லை. இத்தகைய (மாட்சிமை மிக்க) அல்லாஹ்வே உங்களைப் படைத்துப் பரிபக்குவப் படுத்துபவன், ஆகவே அவனையே வணங்குங்கள்; (நல்லுணர்ச்சி பெற இவை பற்றி) நீங்கள் சிந்திக்க வேண்டாமா?

ஆச்சரியப்படக்கூடியவர்களே!- அல்லாஹ்வே உங்கள் இறைவன். அவன் பிரமாண்டமான வானங்களையும் பரந்து விரிந்த பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது உயர்ந்துவிட்டான். உங்கள் இனத்திலிருந்தே ஒரு மனிதரை தூதராக அவன் அனுப்பியதையிட்டு எவ்வாறு ஆச்சரியப்படலாம்? பரந்து விரிந்த தன் ஆட்சியில் அவனே விதிகளை நிர்ணயம் செய்கிறான், நிர்வகிக்கிறான். அவனது அனுமதியின்றியும் பரிந்துரை செய்பவரைப் அவன் பொருந்திக் கொள்ளாமலும் யாரும் அவனிடம் பரிந்துரை செய்ய முடியாது. இந்த பண்புகளை உடையவன்தான் உங்கள் இறைவனான அல்லாஹ் ஆவான். எனவே வணக்க வழிபாட்டை அவனுக்கு மட்டுமே உரித்தாக்கிக் கொள்ளுங்கள். அல்லாஹ் ஒருவனே என்பதை அறிவிக்கும் இந்த ஆதாரங்களையும் சான்றுகளையும் கண்ட பின்னரும் நீங்கள் அறிவுரைபெற மாட்டீர்களா? ஏனெனில் சிறிதளவு புரிதல் உள்ளவர் கூட இந்த உண்மையை அறிந்து கொள்வார், அதன் மீது நம்பிக்கை கொள்வார்.

4

إِلَيْهِ مَرْجِعُكُمْ جَمِيعًۭا ۖ وَعْدَ ٱللَّهِ حَقًّا ۚ إِنَّهُۥ يَبْدَؤُا۟ ٱلْخَلْقَ ثُمَّ يُعِيدُهُۥ لِيَجْزِىَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ بِٱلْقِسْطِ ۚ وَٱلَّذِينَ كَفَرُوا۟ لَهُمْ شَرَابٌۭ مِّنْ حَمِيمٍۢ وَعَذَابٌ أَلِيمٌۢ بِمَا كَانُوا۟ يَكْفُرُونَ

நீங்கள் அனைவரும் அவனிடமே மீண்டு செல்ல வேண்டியிருக்கிறது; அல்லாஹ்வின் வாக்குறுதி மெய்யானது - நிச்சயமாக அவன்தான் முதல் முறையாகப் படைத்தவன்; ஈமான் கொண்டு நேர்மையான முறையில் நற்கருமங்கள் செய்தவர்களுக்கு கூலி வழங்குவதற்காக படைப்பினங்களை மீ; ண்டும் உயிர்ப்பிப்பான். யார் நிராகரித்து விட்டார்களோ அவர்களுக்கு அவர்கள் நிராகரித்த காரணத்தினால் கொதிக்கும் நீரும் நோவினைத் தரும் வேதனையும் உண்டு.

அவன் உங்களின் செயல்களுக்குக் கூலி வழங்கும் பொருட்டு மறுமை நாளில் அவன் பக்கமே நீங்கள் திரும்ப வேண்டும். அல்லாஹ் மனிதர்களுக்கு உண்மையான வாக்குறுதி அளிக்கிறான். அதனை அவன் மீறுவதில்லை. நிச்சயமாக அவன் இதற்கு ஆற்றலுடையவன். அவன் படைப்பினங்களை எவ்வித முன்மாதிரியுமின்றி முதன் முதலில் உருவாக்குகிறான். அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு நற்செயல் புரிந்தவர்களுக்கு அவர்களின் நன்மைகளைக் குறைக்காமலும் தீமைகளை அதிகரிக்காமலும் நியாயமாக கூலி வழங்குவதற்காக படைப்பினங்கள் மரணித்த பின்னரும் திரும்பவும் அவற்றை உருவாக்குவான். அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் நிராகரித்தவர்களுக்கு கொதிக்கும் நீர் குடிப்பதற்காகக் கொடுக்கப்படும். அதன் சூட்டினால் அவர்களின் குடல்கள் துண்டுதுண்டாகிவிடும். அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் நிராகரித்ததனால் அவர்களுக்கு வேதனை மிக்க தண்டனையுண்டு.

5

هُوَ ٱلَّذِى جَعَلَ ٱلشَّمْسَ ضِيَآءًۭ وَٱلْقَمَرَ نُورًۭا وَقَدَّرَهُۥ مَنَازِلَ لِتَعْلَمُوا۟ عَدَدَ ٱلسِّنِينَ وَٱلْحِسَابَ ۚ مَا خَلَقَ ٱللَّهُ ذَٰلِكَ إِلَّا بِٱلْحَقِّ ۚ يُفَصِّلُ ٱلْءَايَٰتِ لِقَوْمٍۢ يَعْلَمُونَ

அவன்தான் சூரியனைச் (சடர்விடும்) பிரகாசமாகவும், சந்திரணை ஒளிவுள்ளதாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு(ச் சந்திரனாகிய) அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான்; அல்லாஹ் உண்மை(யாக தக்க காரணம்) கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை - அவன் (இவ்வாறு) அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விவிரிக்கின்றான்.

அவனே சூரியனை ஒளி வீசக்கூடியதாகவும் சந்திரனை பிரகாசமளிக்கக் கூடியதாகவும் ஆக்கினான். அதன் ஓட்டத்தை இருபத்து எட்டு நிலைகளாக நிர்ணயித்துள்ளான். ஒரு நிலை என்பது ஒரு நாளில் அது கடக்கும் தொலைவாகும். -மனிதர்களே- சூரியனைக் கொண்டு நீங்கள் நாட்களின் எண்ணிக்கையையும் சந்திரனைக் கொண்டு மாதங்கள் மற்றும் வருடங்களின் எண்ணிக்கையையும் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே அவற்றை இவ்வாறு அமைத்துள்ளான். வானங்களையும் பூமியையும் அவையிரண்டிற்கு இடையிலுள்ளதையும் அவன் ஒரு நோக்கத்திற்காகவே படைத்துள்ளான். இதன் மூலம் தன்னுடைய வல்லமையை, ஆற்றலை அவன் மக்களுக்கு வெளிப்படுத்துகிறான். தான் ஒருவனே என்பதை அறிவிக்கக்கூடிய ஆதாரங்களையும் சான்றுகளையும் அறிந்து கொள்ளும் மக்களுக்காக அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.

6

إِنَّ فِى ٱخْتِلَٰفِ ٱلَّيْلِ وَٱلنَّهَارِ وَمَا خَلَقَ ٱللَّهُ فِى ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ لَءَايَٰتٍۢ لِّقَوْمٍۢ يَتَّقُونَ

நிச்சயமாக இரவும், பகலும் (ஒன்றன் பின் ஒன்றாக) மாறி வருவதிலும், வானங்களிலும், பூமியிலும் அல்லாஹ் படைத்துள்ள (அனைத்)திலும் பயபக்தியுள்ள மக்களுக்கு (நிரம்ப) அத்தாட்சிகள் இருக்கின்றன.

நிச்சயமாக இரவு, பகல் மாறிமாறி வருவதிலும் அதனோடு வரக்கூடிய இருளிலும், ஒளியிலும் ஒன்று குறுகியதாகவும் மற்றொன்று நீளமாகவும் இருப்பதிலும், வானங்கள், பூமி ஆகியவற்றில் உள்ள படைப்பினங்களிலும் அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சும் மக்களுக்கு அவனுடைய வல்லமையை, ஆற்றலை அறிவிக்கக்கூடிய சான்றுகள் இருக்கின்றன.

7

إِنَّ ٱلَّذِينَ لَا يَرْجُونَ لِقَآءَنَا وَرَضُوا۟ بِٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا وَٱطْمَأَنُّوا۟ بِهَا وَٱلَّذِينَ هُمْ عَنْ ءَايَٰتِنَا غَٰفِلُونَ

நிச்சயமாக எவர்கள் நம்மைச் சந்திப்பதை(ச் சிறிதும்) நம்பாது, இவ்வுலக வாழ்க்கையை (மிகவும்) விரும்பி, அதில் திருப்தியடைந்து கொண்டும் இன்னும் எவர்கள் நம் வசனங்களைப் புறக்கணித்துக் கொண்டும் இருக்கிறார்களோ -

அல்லாஹ்வை அஞ்சவோ ஆசை வைக்கவோ அவனது சந்திப்பை எதிர்பார்க்காத, நிரந்தரமான மறுமை வாழ்க்கைக்குப் பகரமாக அழியக் கூடிய இவ்வுலக இன்பங்களை விரும்பி அவற்றின் மூலம் மகிழ்வடைந்து உள்ளங்கள் அதன்பக்கம் சாய்ந்துவிட்ட நிராகரிப்பாளர்களும், அல்லாஹ்வின் அத்தாட்சிகளையும் சான்றுகளையும் புறக்கணித்தவர்களும்

8

أُو۟لَٰٓئِكَ مَأْوَىٰهُمُ ٱلنَّارُ بِمَا كَانُوا۟ يَكْسِبُونَ

அவர்கள் சம்பாதித்த (தீமைகளின்) காரணமாக அவர்கள் தங்குமிடம் நரகம் தான்.

மறுமையை பொய்பித்து, மறுத்ததன் காரணமாக இப்பண்புகளை உடையவர்களின் தங்குமிடம் நரகமாகும்.

9

إِنَّ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ يَهْدِيهِمْ رَبُّهُم بِإِيمَٰنِهِمْ ۖ تَجْرِى مِن تَحْتِهِمُ ٱلْأَنْهَٰرُ فِى جَنَّٰتِ ٱلنَّعِيمِ

நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு அவர்களுடைய இறைவன் அவர்கள் ஈமான் கொண்ட காரணத்தினால் நேர் வழிகாட்டுவான்; இன்பமயமான சவனபதிகளில் அவர்களுக்குக் கீழ் நதிகள் ஓடிக் கொண்டிருக்கும்.

அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு நற்செயல்புரிந்தவர்களுக்கு அவர்களின் நம்பிக்கையினால் தன் திருப்தியைப் பெற்றுத்தரக்கூடிய செயல்களின்பால் வழிகாட்டுவான். பின்னர் மறுமை நாளில் நிரந்தரமான இன்பங்களுடைய சுவனங்களில் அவர்களை பிரவேசிக்கச் செய்வான். அவர்களுக்குக் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும்.

10

دَعْوَىٰهُمْ فِيهَا سُبْحَٰنَكَ ٱللَّهُمَّ وَتَحِيَّتُهُمْ فِيهَا سَلَٰمٌۭ ۚ وَءَاخِرُ دَعْوَىٰهُمْ أَنِ ٱلْحَمْدُ لِلَّهِ رَبِّ ٱلْعَٰلَمِينَ

அதில் அவர்கள்; "(எங்கள்) அல்லாஹ்வே! நீ மகா பரிசத்தமானவன்" என்று கூறுவார்கள்; அதில் (தம் தோழர்களைச் சந்திக்கும் போது) அவர்களின் முகமன் ஸலாமுன் என்பதாகும். "எல்லாப் புகழும் அகிலங்கள் அனைத்துக்கும் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே" என்பது அவர்களது பிரார்த்தனையின் முடிவாகும் இருக்கும்.

சுவனத்தில் அவர்களின் பிரார்த்தனை, அல்லாஹ்வைத் துதிப்பதும் புனிதப்படுத்துவதுமேயாகும். அல்லாஹ், வானவர்கள் ஆகியோரின் முகமனும் அவர்கள் தமக்கு மத்தியில் பரிமாறிக் கொள்ளும் முகமனும் சலாம் (சாந்தி) என்பதாகும். படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என்பதே அவர்களின் பிரார்த்தனையின் முடிவாக இருக்கும்.

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.