Muslim99Muslim99
← Tafsir library

9. At-Tawba

The Repentance · Medinan · 129 ayahs

سُورَةُ التَّوۡبَةِ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 91–100 of 129

91

لَّيْسَ عَلَى ٱلضُّعَفَآءِ وَلَا عَلَى ٱلْمَرْضَىٰ وَلَا عَلَى ٱلَّذِينَ لَا يَجِدُونَ مَا يُنفِقُونَ حَرَجٌ إِذَا نَصَحُوا۟ لِلَّهِ وَرَسُولِهِۦ ۚ مَا عَلَى ٱلْمُحْسِنِينَ مِن سَبِيلٍۢ ۚ وَٱللَّهُ غَفُورٌۭ رَّحِيمٌۭ

பலஹீனர்களும், நோயாளிகளும், (அல்லாஹ்வின் வழியில்) செலவு செய்ய வசதியில்லாதவர்களும், அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் உண்மையுடன் இருப்பார்களானால், (இத்தகைய) நல்லோர்கள் மீது எந்த குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்; கிருபையுள்ளவன்.

பெண்கள், குழந்தைகள், நோயாளிகள், முதியோர், குருடர்கள், செலவழிப்பதற்கு எதையும் பெறாத ஏழைகள் ஆகியோர் போரை விட்டுப் பின்தங்கியதனால் அவர்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. ஏனெனில் அவர்கள் தக்க காரணங்களைப் பெற்றுள்ளார்கள். ஆனால் அவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் விசுவாசமிக்கவர்களாகவும், அவனுடைய மார்க்கத்தின்படி செயல்படக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். நல்லமுறையில் செயல்படும் உரிய காரணமுடையவர்களான நல்லோர்கள் தண்டனைக்கு உரியோர்களல்ல. நன்மை செய்வோரின் பாவங்களை அல்லாஹ் மன்னிக்கக்கூடியவன். அவர்களின் விஷயத்தில் அவன் மிகுந்த கருணையாளனாக இருக்கின்றான்.

92

وَلَا عَلَى ٱلَّذِينَ إِذَا مَآ أَتَوْكَ لِتَحْمِلَهُمْ قُلْتَ لَآ أَجِدُ مَآ أَحْمِلُكُمْ عَلَيْهِ تَوَلَّوا۟ وَّأَعْيُنُهُمْ تَفِيضُ مِنَ ٱلدَّمْعِ حَزَنًا أَلَّا يَجِدُوا۟ مَا يُنفِقُونَ

போருக்குச் செல்லத் தங்களுக்கு வாகனம் தேவைப்பட்டு உம்மிடம் வந்தவர்களிடம் "உங்களை நான் ஏற்றி விடக்கூடிய வாகனங்கள் என்னிடம் இல்லையே" என்று நீர் கூறிய போது, (போருக்காகத்) தாங்களே செலவு செய்து கொள்ள வசதியில்லையே என்று எண்ணித் துக்கத்தால் தங்களின் கண்களில் கண்ணீர் வடித்தவர்களாகத் திரும்பிச் சென்று விட்டார்களே அவர்கள் மீதும் (போருக்குச் செல்லாதது பற்றி) எவ்வித குற்றமும் இல்லை.

தூதரே!- தம்மை ஏற்றிச் செல்லும் வாகனங்களை வேண்டியவர்களாக உம்மிடம் வந்த போது, நீர், “உங்களுக்குத் தருவதற்கு என்னிடம் எந்த வாகனமும் இல்லையே!” என்று கூறியதனால் போரை விட்டுப் பின்தங்கியவர்கள் மீதும் எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ்வின் பாதையில் செலவழிப்பதற்கு உம்மிடமும் தங்களிடமும் எதுவும் இல்லையே என்ற கவலையில் அழுதவர்களாக அவர்கள் உம்மை விட்டு திரும்பிச் சென்றார்கள்.

93

۞ إِنَّمَا ٱلسَّبِيلُ عَلَى ٱلَّذِينَ يَسْتَـْٔذِنُونَكَ وَهُمْ أَغْنِيَآءُ ۚ رَضُوا۟ بِأَن يَكُونُوا۟ مَعَ ٱلْخَوَالِفِ وَطَبَعَ ٱللَّهُ عَلَىٰ قُلُوبِهِمْ فَهُمْ لَا يَعْلَمُونَ

குற்றம் பிடிக்கப்பட வேண்டியவர்கள் (யாரெனில், தாம்) செல்வந்தர்களாக இருந்தும், (போருக்குச் செல்லாதிருக்க) உம்மிடம் அனுமதிகோரி, பின் தங்கியிருப்பவர்களுடன் தாங்களும் இருந்துவிட விரும்பினார்களே அவர்கள் தாம்; அவர்களுடைய இருதயங்கள் மீது அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான் - ஆகவே அவர்கள் (இதன் இழிவை) அறிய மாட்டார்கள்.

தகுந்த காரணமுடையோரைத் தண்டிக்க முடியாது என்பதைத் தெளிவுபடுத்தி விட்டு தண்டனைக்குரியோர் யார் என்பதைக் குறிப்பிடுகிறான். -தூதரே!- போர் புரிவதற்குத் தேவையான வசதிகளைப் பெற்றிருந்தும் போரை விட்டும் பின்தங்குவதற்கு உம்மிடம் அனுமதி கோருபவர்கள்தாம் தண்டனைக்குரியவர்கள். பின்தங்கி வீடுகளில் இருப்போருடன் தங்கியிருப்பதன் மூலம் இழிவையும் அவமானத்தையும் தமக்கு அவர்கள் விரும்பினார்கள். அல்லாஹ் அவர்களுடைய உள்ளங்களின் மீது முத்திரையிட்டுவிட்டான். எனவே அவைகள் அறிவுரையால் பயனடையமாட்டா. இவ்வாறு முத்திரையிடப்பட்டதனால் அவர்களால் தங்களுக்கு நன்மையானதை அறிந்து அதனைத் தேர்ந்தெடுக்கவும் முடியாது; தீமையானதை அறிந்து அதிலிருந்து விலகிக் கொள்ளவும் முடியாது.

94

يَعْتَذِرُونَ إِلَيْكُمْ إِذَا رَجَعْتُمْ إِلَيْهِمْ ۚ قُل لَّا تَعْتَذِرُوا۟ لَن نُّؤْمِنَ لَكُمْ قَدْ نَبَّأَنَا ٱللَّهُ مِنْ أَخْبَارِكُمْ ۚ وَسَيَرَى ٱللَّهُ عَمَلَكُمْ وَرَسُولُهُۥ ثُمَّ تُرَدُّونَ إِلَىٰ عَٰلِمِ ٱلْغَيْبِ وَٱلشَّهَٰدَةِ فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ

(முஃமின்களே! போரிலிருந்து வெற்றியோடு) நீங்கள் அவர்களிடம் திரும்பி போது, (போருக்கு வராமலிருந்தது பற்றி) உங்களிடம் வந்து புகழ் கூறுகின்றனர்; "புகழ் கூறாதீர்கள்; நிச்சயமாக நாங்கள் உங்களை நம்ப மாட்டோம்; நிச்சயமாக உங்களைப் பற்றிய செய்திகளை எங்களுக்கு அல்லாஹ் (முன்னமேயே) அறிவித்து விட்டான்; சீக்கிரமே அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் உங்கள் செயல்களைக் கவனிப்பார்கள்; மறைவானவற்றையும், வெளிப்படையானவற்றையும் நன்கறியும் அவனிடத்தில் பின்னர் நீங்கள் கொண்டுவரப்படுவீர்கள்; அப்போது அவன் நீங்கள் செய்து கொண்டிருந்ததையெல்லாம் உங்களுக்கு அறிவிப்பான்" என்று (நபியே!) நீர் கூறும்.

முஸ்லிம்கள் போர் முடிந்து திரும்பிய பிறகு பின்தங்கிய நயவஞ்சகர்கள் நொண்டிச் சாக்குப்போக்குகளை முன்வைக்கின்றனர். அல்லாஹ் தன் தூதருக்கும் நம்பிக்கையாளர்களுக்கும் பின்வருமாறு மறுப்புக் கூறுமாறு வழிகாட்டுகிறான்: “பொய்யான சாக்குப்போக்குகளைக் கூறாதீர்கள். நீங்கள் கூறும் காரணங்களில் உங்களை நாங்கள் ஒரு போதும் நம்பமாட்டோம். உங்களின் உள்ளங்களில் உள்ள சிலதை அல்லாஹ் நமக்கு அறிவித்துவிட்டான். உங்களை மன்னிப்பதற்கு நீங்கள் பாவமன்னிப்புக் கோருகிறீர்களா அல்லது உங்களின் நயவஞ்சகத்தனத்தில் நிலைத்திருக்கிறீர்களா என்பதை அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் கவனிப்பார்கள். பின்னர் எல்லாவற்றையும் அறிந்த அல்லாஹ்வின் பக்கம் நீங்கள் கொண்டு செல்லப்படுவீர்கள். நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை அவன் உங்களுக்கு அறிவிப்பான். அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான். எனவே பாவமன்னிப்புக் கோருவதன் பக்கம், நற்செயல்களின் பக்கம் விரையுங்கள்.

95

سَيَحْلِفُونَ بِٱللَّهِ لَكُمْ إِذَا ٱنقَلَبْتُمْ إِلَيْهِمْ لِتُعْرِضُوا۟ عَنْهُمْ ۖ فَأَعْرِضُوا۟ عَنْهُمْ ۖ إِنَّهُمْ رِجْسٌۭ ۖ وَمَأْوَىٰهُمْ جَهَنَّمُ جَزَآءًۢ بِمَا كَانُوا۟ يَكْسِبُونَ

(போரிலிருந்து வெற்றியுடன்) அவர்களிடம் நீங்கள் திரும்பி வருங்கால், நீங்கள் அவர்களைக்(குற்றம் பிடிக்காது) புறக்கணித்து விட்டுவிட வேண்டுமென்று அல்லாஹ்வின் மீது அவர்கள் சத்தியம் செய்வார்கள்; ஆகவே நீங்களும் அவர்களைப் புறக்கணித்துவிட்டு விடுங்கள் - அவர்கள் நிச்சயமாக அசுத்தமானவர்கள்; அவர்களுக்குப் புகலிடம் நரகமே அதுவே அவர்கள் தீவினைக்குரிய (சரியான) கூலியாகும்.

நம்பிக்கையாளர்களே! நீங்கள் போர் முடிந்து திரும்பி வந்தால் பின்தங்கிய இவர்கள் நீங்கள் அவர்களை பழிக்காமலும் தண்டிக்காமலும் இருப்பதற்காக தமது பொய்யான சாக்குப்போக்குகளை உறுதிப்படுத்தும் வகையில் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்வார்கள். வெறுத்தவர்களாக அவர்களை விட்டு விடுங்கள். அவர்களைப் புறக்கணியுங்கள். அவர்கள் அசுத்தமானவர்கள் அந்தரங்கம் கெட்டவர்கள். அவர்களின் நயவஞ்சகம் மற்றும் பாவங்களுக்குத் தண்டனையாக அவர்களின் தங்குமிடம் நரகமாகும்.

96

يَحْلِفُونَ لَكُمْ لِتَرْضَوْا۟ عَنْهُمْ ۖ فَإِن تَرْضَوْا۟ عَنْهُمْ فَإِنَّ ٱللَّهَ لَا يَرْضَىٰ عَنِ ٱلْقَوْمِ ٱلْفَٰسِقِينَ

அவர்களைப் பற்றி நீங்கள் திருப்தியடையும் பொருட்டு அவர்கள் உங்களிடம் இவ்வாறு சத்தியம் செய்கிறார்கள்; நீங்கள் அவர்களைப் பற்றித் திருப்தியடைந்தாலும் மெய்யாக அல்லாஹ் பாவிகளான (இக்) கூட்டத்தாரைப் பற்றித் திருப்தியடைய மாட்டான்.

நம்பிக்கையாளர்களே!- பின்தங்கிய இவர்களை நீங்கள் பொருந்திக் கொண்டு அவர்களது சாக்குப் போக்குகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக சத்தியம் செய்கின்றனர். அவர்களை நீங்கள் பொருந்திக் கொள்ளாதீர்கள். நீங்கள் அவர்களைப் பொருந்திக் கொண்டால் உங்கள் இறைவனின் கட்டளைக்கு மாறுசெய்து விடுவீர்கள். நிராகரிப்பினாலும் நயவஞ்சகத்தனத்தாலும் தனக்கு அடிபணியாத சமூகத்தைக் கொண்டு அல்லாஹ் திருப்தியடைய மாட்டான். -முஸ்லிம்களே!- அல்லாஹ் யாரைக் குறித்து திருப்தியடையவில்லையோ அவர்களின் விஷயத்தில் நீங்களும் திருப்தியடைவதைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.

97

ٱلْأَعْرَابُ أَشَدُّ كُفْرًۭا وَنِفَاقًۭا وَأَجْدَرُ أَلَّا يَعْلَمُوا۟ حُدُودَ مَآ أَنزَلَ ٱللَّهُ عَلَىٰ رَسُولِهِۦ ۗ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٌۭ

காட்டரபிகள் குஃபிரிலும் (நிராகரிப்பிலும்) நயவஞ்சத்திலும் மிகவும் கொடியவர்கள்; அல்லாஹ் தன்னுடைய தூதர் மீது அருளியிருக்கும் வேதத்தின் வரம்புகளை அவர்கள் அறியாதிருக்கவே தகுதியானவர்கள். இன்னும் அல்லாஹ் (எல்லாம்) அறிந்தவனாகவும்; ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.

நாட்டுப்புற அரபிகள் நிராகரித்தால், நயவஞ்சகத்தனம் செய்தால் அவர்களது நிராகரிப்பும் நயவஞ்சகமும் நகரவாசிகளை விட கடுமையாக இருக்கும். வெறுப்பு, கடின மனம் மற்றும் குறைவான தொடர்பு, ஆகிய பண்புகள் அவர்களிடம் உள்ளதால் மார்க்கத்தையும் அல்லாஹ் தன் தூதர் மீது இறக்கிய சட்டங்களையும் கடமைகளையும் உபரியானவற்றையும் அவர்கள் அறியாமல் இருப்பதற்கு வாய்ப்புள்ளது. அவர்களின் நிலைமைகளை அல்லாஹ் நன்கறிந்தவன். எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. தன் நிர்வாகத்தில், தான் வழங்கும் சட்டங்களில் அவன் ஞானம் மிக்கவன்.

98

وَمِنَ ٱلْأَعْرَابِ مَن يَتَّخِذُ مَا يُنفِقُ مَغْرَمًۭا وَيَتَرَبَّصُ بِكُمُ ٱلدَّوَآئِرَ ۚ عَلَيْهِمْ دَآئِرَةُ ٱلسَّوْءِ ۗ وَٱللَّهُ سَمِيعٌ عَلِيمٌۭ

கிராமப்புறத்தவர்களில் சிலர் (தர்மத்திற்காகச்) செலவு செய்வதை நஷ்டமாகக் கருதுபவர்களும் இருக்கிறார்கள்; நீங்கள் (காலச் சுழலில் சிக்கித்) துன்பம் அடைய வேண்டுமென்றும் எதிர்பார்க்றார்கள் ஆனால் அவர்கள் மீதுதான் கெட்டகாலம் சுழன்று கொண்டு இருக்கிறது - இன்னும், அல்லாஹ் (எல்லாவற்றையும்) கேட்பவனாகவும்(யாவற்றையம்) நன்கு அறிபவனாகவும் இருக்கின்றான்.

அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்த செல்வம் நஷ்டமும் அபராதமுமாகும் எனக் கருதுவோரும் நாட்டுப் புறத்தைச் சேர்ந்த நயவஞ்சகர்களில் உள்ளனர். ஏனெனில் செலவளித்தால் கூலி வழங்கப்படாது தடுத்துக் கொண்டால் அல்லாஹ் தண்டிக்கமாட்டான் என அவர்கள் எண்ணுகிறார்கள். ஆனாலும் சில சமயங்களில் முகஸ்துதிக்காகவும் தப்பிப்பதற்காகவும் செலவு செய்கிறார்கள். -நம்பிக்கையாளர்களே!- உங்களுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டு அதன் மூலம் உங்களிடமிருந்து விடுபட்டு விட வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால் அவர்கள் நம்பிக்கையாளர்களுக்கு நிகழ வேண்டும் என விரும்பும் தீங்கு, மோசமான விளைவுகள் ஆகியவற்றை நம்பிக்கையாளர்களுக்கு நிகழாமல் அல்லாஹ் அவர்களுக்கு ஏற்படுத்திவிட்டான். அவர்கள் கூறுவதை அல்லாஹ் செவியேற்கக் கூடியவன்; மறைத்து வைத்திருப்பதை அவன் நன்கறிந்தவன்.

99

وَمِنَ ٱلْأَعْرَابِ مَن يُؤْمِنُ بِٱللَّهِ وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِ وَيَتَّخِذُ مَا يُنفِقُ قُرُبَٰتٍ عِندَ ٱللَّهِ وَصَلَوَٰتِ ٱلرَّسُولِ ۚ أَلَآ إِنَّهَا قُرْبَةٌۭ لَّهُمْ ۚ سَيُدْخِلُهُمُ ٱللَّهُ فِى رَحْمَتِهِۦٓ ۗ إِنَّ ٱللَّهَ غَفُورٌۭ رَّحِيمٌۭ

கிராமப்புறத்தவர்களில் அல்லாஹ்வின் மீதும், இறுதிநாள் நம்பிக்கை கொள்பவர்களும் இருக்கின்றார்கள்; தாம் (தர்மத்திற்காகச்) செலவு செய்வது தங்களுக்கு அல்லாஹ்வின் நெருக்கத்தையும், இறை தூதரின் பிரார்த்தனையும் (தங்களுக்குப்) பெற்றுத்தரும் என நம்புகிறார்கள்; நிச்சயமாக அது அவர்களை (அல்லாஹ்வின்) அண்மையில் கொண்டு சேர்ப்பதுதான்; அதி சீக்கிரத்தில் அல்லாஹ் அவர்களைத் தன் ரஹ்மத்தில் (பேரருளில்) புகுத்துவான் - நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும் பெருங் கிருபையாளனாகவும் இருக்கின்றான்.

நாட்டுப்புற வாசிகளில் அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கைகொண்டவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்வதை அவன் நெருக்கத்தைப் பெறும் வழியாகவும் தூதரின் பிரார்த்தனையையும் பாவமன்னிப்பையும் பெறுவதற்கான சாதனமாகவும் ஆக்கிக் கொள்கிறார்கள். அறிந்துகொள்ளுங்கள், அல்லாஹ்வின் பாதையில் அவர்கள் செலவு செய்வதும் தூதரின் பிரார்த்தனையும் அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெற்றுத்தருவதாகும். இதற்கான கூலியை அவர்கள் அல்லாஹ்விடம் பெறுவார்கள். அவன் மன்னிப்பையும் சுவனத்தையும் உள்ளடக்கிய தன் விசாலமான அருளில் அவர்களை பிரவேசிக்கச் செய்வான். நிச்சயமாக அவன் தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களின் பாவங்களை மன்னிக்கக்கூடியவன். அவர்களின் விஷயத்தில் அவன் மிகுந்த கருணையாளனாக இருக்கின்றான்.

100

وَٱلسَّٰبِقُونَ ٱلْأَوَّلُونَ مِنَ ٱلْمُهَٰجِرِينَ وَٱلْأَنصَارِ وَٱلَّذِينَ ٱتَّبَعُوهُم بِإِحْسَٰنٍۢ رَّضِىَ ٱللَّهُ عَنْهُمْ وَرَضُوا۟ عَنْهُ وَأَعَدَّ لَهُمْ جَنَّٰتٍۢ تَجْرِى تَحْتَهَا ٱلْأَنْهَٰرُ خَٰلِدِينَ فِيهَآ أَبَدًۭا ۚ ذَٰلِكَ ٱلْفَوْزُ ٱلْعَظِيمُ

இன்னும் முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும், முதலாவதாக (ஈமான் கொள்வதில்) முந்திக்கொண்டவர்களிலும் பின் தொடர்ந்தவர்களும் இருக்கின்றார்களே அவர்கள் மீது அல்லாஹ் திருப்தி அடைகிறான்; அவர்களும் அவனிடம் திருப்தியடைகின்றார்கள்; அன்றியும் அவர்களுக்காக, சுவனபதிகளைச் சித்தப்படுத்தியிருக்கின்றான், அவற்றின் கீNழு ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அங்கே என்றென்றும் தங்கியிருப்பார்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும்.

தங்களின் நாட்டையும் வீடுகளையும் விட்டு விட்டு அல்லாஹ்வின்பால் புலம்பெயர்ந்தவர்களிலும் தூதருக்கு உதவி செய்த அன்சாரிகளிலும் நம்பிக்கைகொள்வதில் முந்திக்கொண்டவர்கள், மற்றும் முஹாஜிரீன்கள், அன்சாரிகள் என இரு சாராரையும் கொள்கையிலும் சொல்லிலும் செயலிலும் அழகிய முறையில் பின்பற்றியவர்கள் ஆகியோரின் விஷயத்தில் அல்லாஹ் திருப்தியடைந்துவிட்டான். அவர்களின் கீழ்ப்படிதலை ஏற்றுக் கொண்டான். அவர்களுக்கு அவன் வழங்கிய மகத்தான வெகுமதியின் காரணமாக அவர்கள் அவனைப் பொருந்திக் கொண்டனர். அவர்களுக்காக அவன் சுவனங்களை தயார்படுத்தி வைத்துள்ளான். அதன் மாளிகைகளுக்குக் கீழ் ஆறுகள் ஓடும். அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். இந்த வெகுமதியே மகத்தான வெற்றியாகும்.

At-Tawba 9:100Listen in Qur'an →

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.