Muslim99Muslim99
← Tafsir library

9. At-Tawba

The Repentance · Medinan · 129 ayahs

سُورَةُ التَّوۡبَةِ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 71–80 of 129

71

وَٱلْمُؤْمِنُونَ وَٱلْمُؤْمِنَٰتُ بَعْضُهُمْ أَوْلِيَآءُ بَعْضٍۢ ۚ يَأْمُرُونَ بِٱلْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ ٱلْمُنكَرِ وَيُقِيمُونَ ٱلصَّلَوٰةَ وَيُؤْتُونَ ٱلزَّكَوٰةَ وَيُطِيعُونَ ٱللَّهَ وَرَسُولَهُۥٓ ۚ أُو۟لَٰٓئِكَ سَيَرْحَمُهُمُ ٱللَّهُ ۗ إِنَّ ٱللَّهَ عَزِيزٌ حَكِيمٌۭ

முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களும் ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாக இருக்கின்றனர்; அவர்கள் நல்லதைச் செய்ய துண்டுகிறார்கள்; தீயதை விட்டும் விலக்குகிறார்கள்; தொழுகையைக் கடைப்படிக்கிறார்கள்; (ஏழை வரியாகிய) ஜகாத்தை (முறையாகக்) கொடுத்துவருகிறார்கள்; அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் வழிப் படுகிறார்கள்; அவர்களுக்கு அல்லாஹ் சீக்கிரத்தில் கருணை புரிவான் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.

நம்பிக்கைகொண்ட ஆண்களும் பெண்களும் அவர்களை ஒன்றிணைக்கும் நம்பிக்கையின் காரணமாக ஒருவருக்கொருவர் உதவியாளர்களாக இருக்கின்றார்கள். அல்லாஹ்வுக்கு விருப்பமான ஏகத்துவம் தொழுகை போன்ற பல்வேறு நற்காரியங்களையும் செய்யத் தூண்டுகிறார்கள்; நிராகரிப்பு, வட்டி போன்ற அல்லாஹ் வெறுக்கும் அனைத்துவிதமான தீயகாரியங்களை விட்டும் தடுக்கிறார்கள். தொழுகையை பரிபூரணமான முறையில் நிறைவேற்றுகிறார்கள்; அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுகிறார்கள். சிறப்பிற்குரிய இந்த பண்புகளை உடையவர்களை அல்லாஹ் தன் அருளில் பிரவேசிக்கச் செய்வான். அவன் யாவற்றையும் மிகைத்தவன். யாராலும் அவனை மிகைக்க முடியாது. தன் படைப்பில், தன் திட்டமிடலில், தான் வழங்கும் சட்டங்களில் அவன் ஞானம்மிக்கவன்.

72

وَعَدَ ٱللَّهُ ٱلْمُؤْمِنِينَ وَٱلْمُؤْمِنَٰتِ جَنَّٰتٍۢ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ خَٰلِدِينَ فِيهَا وَمَسَٰكِنَ طَيِّبَةًۭ فِى جَنَّٰتِ عَدْنٍۢ ۚ وَرِضْوَٰنٌۭ مِّنَ ٱللَّهِ أَكْبَرُ ۚ ذَٰلِكَ هُوَ ٱلْفَوْزُ ٱلْعَظِيمُ

முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களுக்கும் அல்லாஹ் சுவனபதிகளை வாக்களித்துள்ளான் - அவற்றின் கழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கின்றன அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள். (அந்த) நித்திய சுவனபதிகளில் அவர்களுக்கு உன்னத மாளிகைகள் உண்டு - அல்லாஹ்வின் திருப்தி தான் மிகப்பெரியது - அதுதான் மகத்தான வெற்றி.

அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்ட ஆண்களையும் பெண்களையும் மறுமை நாளில் சுவனங்களில் பிரவேசிக்கச் செய்வதாக அல்லாஹ் வாக்களிக்கிறான். அவற்றின் மாளிகைகளுக்குக் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். அவர்களுக்கு மரணம் என்பதே கிடையாது. அவர்களது இன்பங்கள் முடிவடையாது. நிலையான சுவனங்களில் உள்ள அழகிய வசிப்பிடங்களில் அவன் அவர்களை பிரவேசிக்கச் செய்வதாக வாக்களித்துவிட்டான். அவைகள் அனைத்தையும் விட சிறந்தது அவர்களுக்கு அல்லாஹ் வழங்கும் இறைதிருப்தியாகும். மேற்கூறப்பட்ட இந்த வெகுமதிதான் மகத்தான வெற்றியாகும். வேறு எந்த வெற்றியும் இதனை நெருங்க முடியாது.

73

يَٰٓأَيُّهَا ٱلنَّبِىُّ جَٰهِدِ ٱلْكُفَّارَ وَٱلْمُنَٰفِقِينَ وَٱغْلُظْ عَلَيْهِمْ ۚ وَمَأْوَىٰهُمْ جَهَنَّمُ ۖ وَبِئْسَ ٱلْمَصِيرُ

நபியே! காஃபிர்களுடனும், முனாஃபிக்குகளுடனும் நீர் அறப்போர் செய்வீராக மேலும் அவர்களை கண்டிப்பாக நடத்துவீராக (மறுமையில்) அவர்களுடைய புகலிடம் நரகமே - தங்குமிடங்களிலெல்லாம் அது மிகவும் கெட்டது.

தூதரே! நிராகரிப்பாளர்களுடன் ஆயுதங்களைக் கொண்டும் நயவஞ்சகர்களுடன் நாவைக் கொண்டும் ஆதாரங்களைக் கொண்டும் ஜிஹாது செய்வீராக. இரு பிரிவினரிடமும் கடுமையாக நடந்து கொள்வீராக. ஏனெனில் அவர்கள் அதற்குத் தகுதியானவர்கள். மறுமை நாளில் அவர்களிடம் இருப்பிடம் நரகமாகும். அது அவர்களின் இருப்பிடங்களில் மிகவும் மோசமான இருப்பிடமாகும்.

74

يَحْلِفُونَ بِٱللَّهِ مَا قَالُوا۟ وَلَقَدْ قَالُوا۟ كَلِمَةَ ٱلْكُفْرِ وَكَفَرُوا۟ بَعْدَ إِسْلَٰمِهِمْ وَهَمُّوا۟ بِمَا لَمْ يَنَالُوا۟ ۚ وَمَا نَقَمُوٓا۟ إِلَّآ أَنْ أَغْنَىٰهُمُ ٱللَّهُ وَرَسُولُهُۥ مِن فَضْلِهِۦ ۚ فَإِن يَتُوبُوا۟ يَكُ خَيْرًۭا لَّهُمْ ۖ وَإِن يَتَوَلَّوْا۟ يُعَذِّبْهُمُ ٱللَّهُ عَذَابًا أَلِيمًۭا فِى ٱلدُّنْيَا وَٱلْءَاخِرَةِ ۚ وَمَا لَهُمْ فِى ٱلْأَرْضِ مِن وَلِىٍّۢ وَلَا نَصِيرٍۢ

இவர்கள் நிச்சமயாக 'குஃப்ருடைய' சொல்லைச் சொல்லிவிட்டு அதைச் சொல்லவே இல்லை என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கிறார்கள்; அவர்கள் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக்கொண்டபின் நிராகரித்தும் இருக்கின்றனர், (அவர்கள் உங்களுக்குத் தீங்கிழைக்கக் கருதித்) தங்களால் அடைய முடியாததையும் (அடைந்துவிட) முயன்றனர்; அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அவனுடைய அருட்கொடையினால் அவர்களைச் சீமான்களாக்கியதற்காகவா (இவ்வாறு) பழிவாங்க முற்பட்டனர்? எனவே அவர்கள் (தம் தவறிலிருந்து) மீள்வார்களானால், அவர்களுக்கு நன்மையாக இருக்கும்; ஆனால் அவர்கள் புறக்கணித்தால், அல்லாஹ் அவர்களை நோவினை மிக்க வேதனை கொண்டு இம்மையிலும், மறுமையிலும் வேதனை செய்வான்; அவர்களுக்குப் பாதுகாவலனோ, உதவியாளனோ இவ்வுலகில் எவரும் இல்லை.

நாம் உம்மைத் திட்டி, உமது மார்க்கத்தைக் குறை கூறியதாக உமக்குக் கிடைத்த தகவல் தவறானது அவ்வாறு தாம் எதுவும் கூறவில்லை என்று நயவஞ்சகர்கள் அல்லாஹ்வின் மீது பொய்யாக சத்தியமிட்டுக் கூறுகிறார்கள். உண்மையில் அவர்கள் நிராகரிப்புக்குரிய அவற்றைக் கூறியே உள்ளனர். அவர்கள் ஈமானை வெளிப்படுத்திய பிறகு நிராகரிக்கும் வார்த்தையைக் கூறிவிட்டார்கள். நபியவர்களை படுகொலை செய்வதற்குக் கூட முயற்சித்தனர். ஆனால் அவர்களுக்குச் சாத்தியப்படவில்லை. யாரும் மறுக்காத ஒன்றை அவர்கள் மறுத்துள்ளனர். அதுதான் தன் தூதருக்கு அளித்த போர்ச் செல்வங்களைக் கொண்டு அல்லாஹ் அவர்களை செல்வந்தர்களாக ஆக்கியதாகும். தங்களின் நயவஞ்சகத்தனத்திலிருந்து அவர்கள் அல்லாஹ்வின் பக்கம் மீண்டால் அதிலே தொடர்ந்திருப்பதை விட அது அவர்களுக்கு சிறந்ததாகும். அல்லாஹ்விடம் மீளாமல் அவர்கள் புறக்கணித்து விட்டால் இவ்வுலகில் கொன்றும் கைதிகளாகப் பிடித்தும் மறுமையில் நெருப்பினால் வேதனை செய்தும் அல்லாஹ் அவர்களைத் தண்டிப்பான். வேதனையிலிருந்து அவர்களைக் காப்பாற்றும் பாதுகாவலர்களோ அதனைத் தடுக்கும் உதவியாளர்களோ அவர்களுக்கு இருக்க மாட்டார்கள்.

75

۞ وَمِنْهُم مَّنْ عَٰهَدَ ٱللَّهَ لَئِنْ ءَاتَىٰنَا مِن فَضْلِهِۦ لَنَصَّدَّقَنَّ وَلَنَكُونَنَّ مِنَ ٱلصَّٰلِحِينَ

அவர்களில் சிலர், "அல்லாஹ் தன் அருட்கொடையிலிருந்து நமக்கு(ச் செல்வத்தை) அளித்ததால் மெய்யாகவே நாம் (தாராளமான தான) தர்மங்கள் செய்து, நல்லடியார்களாகவும் ஆகிவிடுவோம்" என்று அல்லாஹ்விடம் வாக்குறுதி செய்தார்கள்.

நயவஞ்சகர்களில் சிலர் அல்லாஹ்விடம் பின்வருமாறு வாக்குறுதியளித்தார்கள்: “அல்லாஹ் எங்களுக்குத் தன் அருளிலிருந்து வழங்கினால் நாங்கள் தேவையுடையவர்களுக்குத் தர்மம் செய்து நற்செயல்களைச் செய்யும் நல்லவர்களாக ஆகிவிடுவோம்.”

76

فَلَمَّآ ءَاتَىٰهُم مِّن فَضْلِهِۦ بَخِلُوا۟ بِهِۦ وَتَوَلَّوا۟ وَّهُم مُّعْرِضُونَ

(அவ்வாறே) அவன் அவர்களுக்குத் தன் அருட்கொடையிலிருந்து வழங்கியபோது, அதில் அவர்கள் உலோபித்தனம் செய்து, அவர்கள் புறக்கணித்தவர்களாக பின் வாங்கிவிட்டனர்.

அல்லாஹ் அவர்களுக்குத் தன் அருளிலிருந்து வழங்கிய போது, அவர்கள் அல்லாஹ்வுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. மாறாக தர்மம் செய்யாமல் தமது சொத்துக்களை தடுத்துக் கொண்டனர். ஈமான் கொள்வதை விட்டும் புறக்கணித்தவர்களாக திரும்பிச் சென்றனர்.

77

فَأَعْقَبَهُمْ نِفَاقًۭا فِى قُلُوبِهِمْ إِلَىٰ يَوْمِ يَلْقَوْنَهُۥ بِمَآ أَخْلَفُوا۟ ٱللَّهَ مَا وَعَدُوهُ وَبِمَا كَانُوا۟ يَكْذِبُونَ

எனவே, அவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதிக்கு மாறு செய்ததாலும்; அவர்கள் பொய் சொல்லிக் கொண்டே இருந்ததினாலும் அல்லாஹ், அவர்களுடைய உள்ளங்களில் தன்னைச் சந்திக்கும் (இறுதி) நாள் வரையில் நயவஞ்சகத்தைப் போட்டுவிட்டான்.

அல்லாஹ்வுக்கு அளித்த வாக்குறுதிக்கு மாறாகச் செயல்பட்டு பொய்யுரைத்ததனால் அவர்களின் உள்ளங்களில் மறுமை நாள் வரை நிலையான நயவஞ்சகத்தை அவர்களுக்குரிய தண்டனையாக ஆக்கிவிட்டான்.

78

أَلَمْ يَعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ يَعْلَمُ سِرَّهُمْ وَنَجْوَىٰهُمْ وَأَنَّ ٱللَّهَ عَلَّٰمُ ٱلْغُيُوبِ

அவர்களுடைய இரகசிய எண்ணங்களையும், அவர்களுடைய அந்தரங்க ஆலோசனைகளையும் அல்லாஹ் அறிவான் என்பதையும்; இன்னும், மறைவானவற்றை எல்லாம் நிச்சயமாக அல்லாஹ் நன்கு அறிபவனாக இருக்கின்றான் என்பதையும் அவர்கள் அறியவில்லையா,

இந்த நயவஞ்சகர்கள் தமது அவைகளில் இரகசியமாகத் தீட்டும் திட்டங்களையும் சூழ்ச்சிகளையும் அல்லாஹ் அறிவான் என்பதையும் அவன் மறைவானவற்றை நன்கறிந்தவன் என்பதையும் அவர்கள் அறியவில்லையா? அவர்கள் செய்யக்கூடிய எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான்.

79

ٱلَّذِينَ يَلْمِزُونَ ٱلْمُطَّوِّعِينَ مِنَ ٱلْمُؤْمِنِينَ فِى ٱلصَّدَقَٰتِ وَٱلَّذِينَ لَا يَجِدُونَ إِلَّا جُهْدَهُمْ فَيَسْخَرُونَ مِنْهُمْ ۙ سَخِرَ ٱللَّهُ مِنْهُمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ

இ(ம் முனாஃபிக்கான)வர்கள் முஃமின்களில் தாராளமாக தர்மம் செய்பவர்களையும் (வேறு பொருள் எதுவுமில்லாததால்) தங்கள் உழைப்பை தானமாகக் கொடுப்பவர்களையும் குறை கூறி, ஏளனமும் செய்கிறார்கள். இவர்களை அல்லாஹ் ஏளனம் செய்கிறான். இவர்களுக்கு நோவினை தரும் வேதனையும் உண்டு.

சாதாரணமான தர்மப் பொருள்களை தன்னார்வமாக வழங்கும் சிறிது பொருள்களேயுடைய நம்பிக்கையாளர்களை அவர்கள் குறை கூறுகிறார்கள். அதுவே அவர்களது ஆற்றலுக்குட்பட்டது. “இவர்களின் தர்மங்களால் என்ன பயன்?” என்று அவர்களைக் கேலி செய்கிறார்கள். நம்பிக்கையாளர்களைப் பரிகாசம் செய்யும் இவர்களை அல்லாஹ் பரிகாசம் செய்கிறான். அவர்களுக்கு வேதனைமிக்க தண்டனை உண்டு.

80

ٱسْتَغْفِرْ لَهُمْ أَوْ لَا تَسْتَغْفِرْ لَهُمْ إِن تَسْتَغْفِرْ لَهُمْ سَبْعِينَ مَرَّةًۭ فَلَن يَغْفِرَ ٱللَّهُ لَهُمْ ۚ ذَٰلِكَ بِأَنَّهُمْ كَفَرُوا۟ بِٱللَّهِ وَرَسُولِهِۦ ۗ وَٱللَّهُ لَا يَهْدِى ٱلْقَوْمَ ٱلْفَٰسِقِينَ

ஏனென்றால் இவர்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும் நிராகரித்தார்கள் - இத்தகைய பாவிகளின் கூட்டத்தை அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான்.

தூதரே!- அவர்களுக்காக நீர் பாவமன்னிப்புக் கேளுங்கள். அல்லது கேட்காதீர்கள். நீர் எழுபது தடவைகள் கேட்டாலும் அல்லாஹ் அவர்களை மன்னிப்பதற்கு அது வழிவகுக்காது. ஏனெனில் அவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்தவர்கள். அறிந்து கொண்டே அவனுடைய சட்டத்திற்கு அடிபணிய மறுத்தவர்களுக்கு அல்லாஹ் உண்மையின் பக்கம் வழிகாட்டமாட்டான்.

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.